ஆமா ஜி தலை தெறிக்க ஓடி வருகிறார். மாமா ஜி. மாமா ஜி. சீக்கிரம் கௌம்புங்க. இடத்தை காலி பண்ணுவோம்.
மாமா ஜி : என்ன ஜி. என்ன ஆச்சு. ஏன் இவ்வளவு பதட்டப் படுறீங்க ?
ஆமா ஜி : காவிரி விவகாரம் பெருசானதுல இருந்து, பிஜேபின்னு சொன்னாலே அடிக்க வர்றானுங்க. நானும் தப்பிச்சோம் பொழச்சோம்னு ஓடி வர்றேன் ஜி.
மாமா ஜி : வழக்கமா பண்றதை பண்ண வேண்டியதுதானே. இதுக்குப் போயி பயந்துக்கிட்டு ஓடுனா என்ன அர்த்தம் ?
ஆமா ஜி : வழக்கம் போலன்னா ?
மாமா ஜி : என்ன பிரச்சினையா இருந்தாலும் யார் மேல பழி போடுவோம் ?
ஆமா ஜி : காங்கிரஸ் மேல ஜி. ஆனா இந்த விவகாரத்துல எப்படி காங்கிரஸ் கட்சி மேல பழி போட்றது ஜீ ?
மாமா ஜி : காவிரி எங்க இருந்து வருது ?
ஆமா ஜி : கர்நாடகாவுல இருந்து ஜி.
மாமா ஜி : அங்க யாரு ஆட்சியில இருக்கறது ?
ஆமா ஜி : காங்கிரஸ் ஜி.
மாமா ஜி : அவ்வளவுதான். ஆட்சியில் இருந்து கொண்டு காவிரியை தர மறுக்கும் கர்நாடகான்னு ஒரு பிட்டை போட வேண்டியதுதான்.
ஆமா ஜி : ஆனா ஜி. மேலாண்மை வாரியம் அமைக்கிறது மத்திய அரசோட வேலை இல்லையா ஜி ?
மாமா ஜி : ஆமா. ஆனால் பிஜேபி அரசு, மாநிலங்களின் உரிமையில தலையிடாது. கர்நாடக காங்கிரஸ் அரசு எதிர்ப்பு தெரிவிக்காததால, காங்கிரஸ்தான் காரணம்னு சொல்லிட்டு, ஸ்டாலின் ஏன், சோனியா காந்திக்கு அழுத்தம் தரலன்னு கேள்வி கேக்க வேண்டியதுதான்.
ஆமா ஜி :பிரமாதம் ஜி. கலக்கிட்டீங்க. சரி. ஆனா நம்ப தமிழிசை மேடமும், மத்த பிஜேபி தலைவர்களும், பிரதமர் காவிரிக்காக நிச்சயம் ஏதாவது செய்வாருன்னு சொல்லிட்டு இருக்காங்களே ஜி.
மாமா ஜி : 2013ல இருந்து சொல்லிக்கிட்டு இருக்கற எதையாவது பிரதமர் செஞ்சாரா ?
ஆமா ஜி : ஒன்னு கூட செய்யல ஜி. வெறும் வாய் உதார்தான்.
மாமா ஜி : அதேதான் காவிரிக்கும்.
ஆமா ஜி : ஜி, இந்த கர்நாடகாவில் தேர்தல் நேரத்தை, தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்னாடியே நம் ஆளுக ட்விட்டர்ல லீக் பன்னிட்டாங்களே ஜி பாத்தீங்களா.
மாமா ஜி : மோடிக்கு 11.05 நல்ல நேரம், அப்போ முதலில் தேர்தல் ஆணையர் அறிவிக்கட்டும் அதுக்கப்பறம் டைம்ஸ் நவ் 11.06 நியூஸ் போடுவான் நாம 11.07க்கு ட்வீட் பண்ணனும்னு தான் ஜி பேசி பக்காவா பிளான் பண்ணினோம்.
ஆமா ஜி : அப்பறம் என்ன ஆச்சு ஜி
மாமா ஜி : இந்த வீணா போன தேர்தல் ஆணையர் கடைசி நேரத்துல வயிறு கலக்குதுனு கக்கூஸ்ல உக்காந்துட்டார், இது தெரியாம பிளான் படி டைம்ஸ் நவ் , அமித் மால்வியானு வரிசையா அறிவிச்சுட்டானுக. அப்பறம் அவசர அவசரமா பாத்ரூம் கதவை தட்டி, இழுத்துட்டு வந்து தேர்தல் தேதியை சொல்ல வைக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு ஜி.
ஆமா ஜி : இதுக்கே இப்படி ஆச்சர்யப்படுறானுங்களே. தேர்தல் முடிவுகளையே நம்பளால அறிவிக்க முடியும். ஆனா ஒரு தேசிய கட்சின்ற முறையில மத்தவங்களுக்கு வாய்ப்பு தரணும்னு பொறுமையா நடந்துக்கிட்டா நம்பளையே சோதிக்கிறானுங்க ஜி.
மாமா ஜி : என்ன ஜி பண்றது. நம்பளோட பவர்ஸ் என்னன்றதை இவனுங்க யாருமே சரியா புரிஞ்சுக்கல.
ஆமா ஜி : இந்த தேர்தல் ஆணையரையும் மாத்தணும் ஜி. சொல்ற வேலையை சரியா செய்யாத தேர்தல் ஆணையர்கள் நமக்கு எதுக்கு ? இதுக்கா பக்தா ஒருத்தரை தலைமைத் தேர்தல் ஆணையராக அறிவிக்கிறது. ரொம்ப வேதனையா இருக்கு ஜி.
மாமா ஜி : தன்னிச்சையான அமைப்புகள்ல தலையிட்டு அந்த அமைப்புகளோட சுதந்திரத்தை பறிக்கிறது மோடி ஜிக்கு புடிக்காத விஷயம் ஜி.
ஆமா ஜி : ஆனா நாம நீதித் துறை நியமனங்கள்ல தலையிடுறதாவும், தலைமை நீதிபதியே நம்ப கைப்பாவைன்னும் பரவலா பேசப்படுதே ஜி. இது தப்பில்லையா ஜி ?
மாமா ஜி : என்ன ஜி பேசறீங்க ? எல்லா அமைப்புகளும் கட்சிகளும் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி போகறது இயல்புதானே ஜி ?
ஆமா ஜி : அதுல என்ன ஜி சந்தேகம் ? வளர்ச்சிதானே ஒவ்வொரு அமைப்போட நோக்கமே.
மாமா ஜி : அந்த வகையில நம்ப கட்சி வளர்ந்து, இன்னைக்கு நமக்குன்னு ஒரு நீதித்துறை பிரிவை உருவாக்கியிருக்கோம். அந்த நீதித்துறை பிரிவோட தலைவர்தான் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா.
ஆமா ஜி : என்ன ஜி சொல்றீங்க ? அவுரு நம்ப ஆளா ?
மாமா ஜி : ஏன்ன ஜி நீங்க. தியேட்டர்ல தேசிய கீதம் பாடுனா தேசபக்தி வளரும்னு ஒரு ஆளு தீர்ப்பு குடுக்கும்போதே அவரு நம்ப ஆளுன்னு தெரிய வேணாமா ?
ஆமா ஜி : நானும் சந்தேகப்பட்டேன் ஜி. ஒதிஷாவுல, நில பேர ஊழல்ல சம்பந்தப்பட்டிருக்காரு. ஒதிஷா மருத்துவக் கல்லூரி அனுமதி வழங்குனதுல லஞ்சம் வாங்குன வழக்குல இவுரு பேரு அடிபட்டதும் நானு நம்ப ஆளாத்தான் இருப்பாருன்னு நெனைச்சேன். நீங்க கரெக்டா சொல்லிட்டீங்க.
மாமா ஜி : நம்ப கட்சியோட வளர்ச்சியை அடிப்படையா வைச்சி, தீபக் மிஸ்ரா தலைமையில, நீதித்துறை பிரிவை உருவாக்கியிருக்கோம். ஆனா இரண்டாவது நீதிபதியா இருக்குற செல்லமேஸ்வர்தான் நம்ப பிரிவுல சேந்து, முன்னேறாம, ரொம்ப தொல்லை பண்ணிக்கிட்டு இருக்காரு. பத்திரிக்கையில பேட்டியெல்லாம் குடுக்குறாரு. நீதித்துறை சுதந்திரமா செயல்படணும்னு அதிகப்பிரசங்கித்தனமா பேசறாரு. நீதித்துறை சுதந்திரமா செயல்படுறதுக்கா, ஒரு மசூதியை இடிச்சி, நூத்துக்கணக்கான கலவரத்தை பண்ணி, கூசாம பொய்யை சொல்லி ஆட்சிக்கு வந்துருக்கோம் ? ஒரு பொறுப்பு வேணாம் ?
ஆமா ஜி : கரெக்டு ஜி. இந்த செல்லமேஸ்வர் ரொம்ப பேசறாரு. அந்த ஆளை டிஸ்மிஸ் பண்ண முடியாதா ஜி ?
மாமா ஜி : ச்சே. ச்சே. நீதித்துறையில தலையிட்டு நீதிபதியை டிஸ்மிஸ் பண்றதெல்லாம் மோடிக்கு பிடிக்காது ஜி.
ஆமா ஜி : ஜி… உண்மையை சொல்லுங்க. அவரை டிஸ்மிஸ் பண்ண முடியாதுன்னுதானே அவரை இன்னும் பதவியில விட்டு வைச்சிருக்கோம் ?
மாமா ஜி : அட அப்படியெல்லாம் இல்ல ஜி. மோடி ஜி ஒரே நாள்ல பண்ணிடுவாரு. அவருக்கு அதெல்லாம் புடிக்காது.
ஆமா ஜி : அது சரி, இந்த அமித் ஷா வேற, உலகத்துலயே அதிகமா ஊழல் பண்ணின ஆளு எடியூரப்பான்னு சொல்லிட்டாரே ஜி.
மாமா ஜி : நம்பளைப் போல சங் பரிவார்ல இருக்கற ஆளுங்களுக்கு அடிப்படை பாடமே, தப்பித் தவறிக் கூட உண்மையை பேசவே கூடாது. என்ன ஆனாலும் சரி. அடிச்சிக் கேட்டாலும் சரி. உண்மையை பேசக் கூடாது. ஆனா தவறு செய்யறது மனித இயல்புதானே ஜி. அமித் ஷா ஜி திடீர்னு கன்பீஸ் ஆகி உண்மையை சொல்லிட்டாரு. என்ன பண்றது. இதை கேட்டுட்டு இந்த ராகுல் பய என்னான்னா, எங்களுக்காக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய பிஜேபிக்கு நன்றின்னு ட்வீட் போட்றான் ஜி.
ஆமா ஜி : நானும் பாத்தேன் ஜி. செம்ம கோவமா வந்துச்சு. ஏதாவது பண்ணணும் ஜி. இப்படியே விடக் கூடாது.
மாமா ஜி : இந்த மேட்டர் ரெண்டு நாளு ட்ரெண்டிங் ஆச்சாமே ?
ஆமா ஜி : அமித்ஷா_உளறல்கள் இந்தியா முழுக்க 2 நாளைக்கு ட்ரெண்ட் ஆச்சு ஜி
மாமா ஜி : ஆமாம், இதுல பாருங்க ஜி வேடிக்கையை . தேர்தல் நடக்கறது கர்நாடகாவில், அமித் ஷா பேசினது ஹிந்தில. இதுல கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாம இந்த தமிழ்நாடு பயலுவ ட்ரெண்ட் ஆகிட்டானுக, அத்தனையும் நம்ம ராஜா மேல உள்ள காண்டு ஜி.
எச்.ராஜா ஜி: என்ன ஜி, என் பேரு அடிபடறாப்ல இருக்கு
மாமா ஜி : வாங்க ஜி வாங்க ஜி , உங்கள பத்தி தான் பெருமையா பேசிட்டு இருந்தோம். என்ன ஜி போன வாரம் உங்கள கோர்ட் பைத்தியமானு செக் பண்ண சொன்னாங்க, இந்த வாரம் ஜோசப் கருணை இல்லம் ஒரு தப்பும் பண்ணலேனு சொல்லிட்டாங்களே ஜி
ராஜா ஜி: கிறிஸ்துவ கை பாவைகளா கோர்ட் மாறிட்டு வருது, இதை ஒவ்வொரு இந்துவும் வன்மையா கண்டிக்கணும்ன்றென். ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி கோவில்ல பூ போட்டு பாத்து தீர்ப்பு சொல்லுவாங்க, இந்த வெள்ளை காரன் வந்து கோர்ட் கட்டினத்துக்கு அப்பறம் தான் இந்த பிரச்னை எல்லாம்
ஆமா ஜி : என்ன ஜி சொல்லறீங்க? அப்போ உண்மையாவே தப்பான தீர்ப்பா ஜி
ராஜா ஜி: 1590 பேரோட எலும்பை கடத்தறாங்கனு சொன்னா உடனே எலும்பை போய் தேடினா எப்படி கிடைக்கும்? நாம வருவோம்னு தெரிஞ்சு அவனுக எழும்ப பொடியாக்கி விபூதி பொட்டலத்தில் போட்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பன்னிட்டாங்க
ஆமா ஜி : ஜி, வெளிநாட்டில் விபூதிக்கு என்ன ஜி வேலை
ராஜா ஜி: போகும் போது விபூதியா போகும், அங்க போனதுக்கு அப்பறம் அதை ஊறப்போட்டு உருண்டை ஆக்கி கால்சியம் மாத்திரையா இந்தியாவுக்கே கொண்டுவந்து வித்துருவானுக ஜி.
ஆமா ஜி : என்ன ஜி சொல்றீங்க. நீங்க சொல்றதை வச்சி பாத்தா மிகப் பெரிய சதித் திட்டம் நடந்துருக்கும் போல இருக்கே.
ராஜா ஜி : அட உண்மையாத்தான் ஜி. நம்ப ஆளுங்களும், சோசியல் மீடியாவுல, இதைப் பத்தி கடுமையா முயற்சி பண்ணாங்க. ஆனா இந்த கிறித்துவ கைக்கூலி நீதிமன்றங்கள், இந்து தர்மத்துக்கு எதிராவே செயல்படுறதுனால, நம்ப தரப்பு நியாயம் எடுபடாம போகுது. நடுநிலை பத்திரிக்கையாளர்கள்னு நாம வச்சிருக்குற ஸ்லீப்பர் செல்லுகளை வச்சி, 1590 கொலை பத்தி எவ்வளவோ பேசிப் பாத்தோம். ஆனா எடுபடல.
ஆமா ஜி : கர்நாடகாவுல ஜெயிச்சுடுவோமா மாமா ஜி ?
ராஜா ஜி : இருங்க நான் கருத்து சொல்றேன்.
மாமா ஜி : ராஜா ஜி. மாத்திரை சாப்பிட்டீங்களா ?
ராஜா ஜி : இல்ல ஜி.
மாமா ஜி : போயி ஒழுங்கா மாத்திரை சாப்பிட்டு தூங்குங்க. இல்லைன்னா டாக்டரை கூப்புட்டு ஷாக் வைக்க சொல்லுவேன்.
ராஜா ஜி : வேட்டியை மடிச்சுக் கட்டுனா, நானும்…
மாமா ஜி : சொல்லுங்க. வேட்டியை மடிச்சிக் கட்டுனா ?
ராஜா ஜி : பாத்ரூம் போகப் போறேன்னு சொல்ல வந்தேன்.
மாமா ஜி : போங்க. மாத்திரையை போட்டுட்டு தூங்குங்க.
ஆமா ஜி : என்ன ஜி ? ராஜா ஜியை இப்படி பேசிட்டீங்க ?
மாமா ஜி : பின்ன என்ன ஜி. இந்த பைத்தியக்காரனை வச்சிக்கிட்டு எத்தனை நாளுக்குதான் நாம முட்டுக் குடுக்கறது ? முடியல.
ஆமா ஜி : சரி விடுங்க ஜி. கர்நாடகா தேர்தல் பத்தி சொல்லுங்க.
மாமா ஜி : நமக்கு வலுவான வாக்கு வங்கி லிங்காயத்துகள்தான். அந்த வாக்குகள் அத்தனையையும், சித்தாராமைய்யா ஒரேயடியா காலி பண்ணிட்டாரு. வழக்கம் போல, மங்களுரு பகுதியில மதக் கலவரத்தை தூண்ட வேண்டியதுதான்.
ஆமா ஜி : அது தென்னிந்தியாவுல எடுபடுமா ஜி ?
மாமா ஜி : ஏற்கனவே, கடன் தொல்லையால விசம் குடிச்சு செத்தவன், சொத்துத் தகராறுல செத்துப் போனவன் மொத்தம் 24 பேர் சாவுக்கும், காரணம் ஜிகாதிகள்தான்னு ஒரு கதையை கிளப்பி விட்டோம். ஆனா, பத்திரிக்கைகள் அதை விசாரிச்சு அது அத்தனையும் கட்டுக் கதைன்னு எழுதிட்டானுங்க. இப்போ புதுசா ஏதாவது ஒரு பஞ்சாயத்தை இழுக்கணும். இழுத்தாத்தான் ஜெயிக்க முடியும்.
ஆமா ஜி: ஆதித்யநாத் ஜியை வைச்சு கர்நாடகா முழுக்க பிரச்சாரம் பண்ணா ஜெயிச்சிடலாமா ஜி.
மாமா ஜி : எதுக்கு இருக்கறதும் புடுங்கிட்டு போறதுக்கா. சும்மா இருங்க ஜி. அந்த சாமியாரு கதை உத்தரப் பிரதேசத்துலயே நாறுது. அவரு சரிப்பட மாட்டாரு. நம்ப முத்தாலிக் ஜி மாதிரி வலுவா ஒரு ஆளை வச்சு, பெரிய அளவுல மதக்கலவரத்தை உண்டு பண்றதுதான் ஒரே வழி.
ஆமா ஜி : அது என்ன ஜி நமக்கு புதுசா ?
மாமா ஜி : அமித் ஷா ஜி பெருசா ஐடியா வைச்சிருப்பாரு. வெயிட் பண்ணுங்க ஜி.
ஆமா ஜி : சரி ஜி. தமிழ்நாட்டுல தாமரையை எப்படித்தான் மலர வைக்கிறது ஜி ?
மாமா ஜி : நாம எதுக்கு ஜி தனியா தாமரையை மலர வைக்கணும் ? இப்போ நடக்குறது நம்ப ஆட்சிதானே ?
ஆமா ஜி : இருந்தாலும் ஜி. நமக்குன்னு தனியா ஒரு ஆட்சியை அமைச்சு, நம்ப தமிழிசை மேடமை சிஎம்ஆவும், ராஜா ஜியை சுகாதாரத் துறை அமைச்சராவும் பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு ஜி ?
மாமா ஜி : சரி. 2 ஆச்சு. மீதி 232 தொகுதிக்கு ஆளை எங்க தேடுறது ? நடக்குற கதையா பேசறீங்களா ? இப்போ நடக்கறதே நம்ப ஆட்சிதான் ஜி. அதனால தாமரை தனியா மலரவே வேணாம்.
ஆமா ஜி : ஜி. 18 எம்எல்ஏ வழக்குல தீர்ப்பு வந்தா இந்த கவர்மென்ட் கவுந்துடுமே ஜி. அப்புறம் என்ன பண்றது ?
மாமா ஜி : அந்த வழக்குல தீர்ப்பு ஒத்தி வைச்சி எத்தனை நாளு ஆகுது ஜி ?
ஆமா ஜி : ரெண்டு மாசம் ஆகுது ஜி.
மாமா ஜி : இந்த வழக்கின் தீர்ப்பு தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் தீர்ப்பு. சிறுபான்மை அரசு நடக்கும் ஒவ்வொரு நாளும், அரசியல் அமைப்புச் சட்டம் அவமதிக்கப்படுகிறது. முதல்வரும் அமைச்சர் பெருமக்களும், உச்சகட்ட வசூலை நடத்திக்கிட்டு இருக்காங்கன்றது நீதிபதிக்கு தெரியாதா என்ன ?
ஆமா ஜி : தெரியுமா ஜி ?
மாமா ஜி : நல்லா தெரியும் ஜி. பின்ன ஏன் ரெண்டு மாசமா அமைதியா இருக்காங்க ?
ஆமா ஜி : தெரியலையே ஜி.
மாமா ஜி : அவங்களுக்கு மட்டும் உச்சநீதிமன்றத்துக்கு போறதுக்கு ஆசை இருக்காதா ? பிஜேபிக்கு எதிரா தீர்ப்பு குடுத்த நீதிபதிகளோட கதி என்னன்னு பாத்துக்கிட்டுதானே இருக்காங்க. மோடி ஜிக்கும் அமித் ஷாவுக்கும் என்ன பண்ணணும்னு தெரியும் ஜி. பொறுத்திருந்து பாருங்க. அடுத்த வாரம் மீட் பண்ணலாம்.
ஆமா ஜி : வர்றேன் ஜி.
Shankar G intha echa photovellam ivlo close upla podathinga bayama iruku….
Superji