முகத்தில் மிகுந்த களைப்போடு, அயற்சியாக வந்தார் ஆமா ஜி.
மாமா ஜி : என்ன ஜி. டல்லா இருக்கீங்க ? என்ன ஆச்சி. கர்நாடகத்துல ஆட்சியை பிடிக்கப் போறோம். 2019ல மிஷன் 540ன்னு வைச்சிருக்கோம். அடுத்து பலப் பல திட்டங்களை வைச்சிருக்கோம், நீங்க போயி இப்படி டல்லா இருக்கீங்களே…
ஆமா ஜி : மொத்தமே 543 சீட்டுதானே ஜி. ஏன் 3 சீட்டை விட்டுட்டீங்க.
மாமா ஜி : நமக்கு எப்பவுமே பேராசை கிடையாது ஜி. அந்த 3 சீட்டுல காங்கிரஸை ஜெயிக்க வைச்சி, ஜெயிச்ச பிறகு, அந்த 3 பேரையும் நம்ப கட்சிக்கு மாத்துறதுலதானே த்ரில் இருக்கு ? அப்படி மாறி வந்த 3 பேரையும் வைச்சி, அமித் ஷா ஜிக்கு ஒரு பாராட்டு விழா நடத்த வேணாமா ?
ஆமா ஜி : அருமை ஜி. அருமை. அப்போ தமிழிசை மேடம் சொல்றது கரெக்டுதானா ஜி ?
மாமா ஜி : ஆமாம் ஜி. அதுல என்ன சந்தேகம் ?
ஆமா ஜி : இதைத்தான் ஜி எங்க வீட்டுக்கு பக்கத்துல இருந்த டீக்கடையில டீ குடிச்சிக்கிட்டே சொன்னேன். டீக்கடைக்காரரு, டீயை மூஞ்சில ஊத்திட்டாரு ஜி.
மாமா ஜி : இதோ டாக்டரே வர்றாங்களே. அவங்ககிட்டயே கேப்போமே.
ஆமா ஜி : எந்த டாக்டர் ஜி ?
மாமா ஜி : நம்ப தமிழிசை தான். அவங்க மருத்துவர்னு தெரியாதா உங்களுக்கு ?
ஆமா ஜி : அவங்க மருத்துவரா இருந்தா அவங்களே நம்ப எச்.ராஜா ஜியை குணப்படுத்தியிருக்கலாமே.
மாமா ஜி : அது எப்படி முடியும். அவங்களும் ஒரு பேஷன்டு.
ஆமா ஜி : என்ன ஜி சொல்றீங்க ?
மாமா ஜி : ஆமாம் ஜி. ஒரு மாதிரி வித்தியாசமான வியாதியா இருக்கு. அமெரிக்காவுல உள்ள பிரபல மருத்துவர்களாலயே இது என்ன வியாதின்னு கண்டு பிடிக்க முடியலை.
ஆமா ஜி : என்ன பிரச்சினை ஜி அவங்களுக்கு ?
மாமா ஜி : திடீர் திடீர்னு தாமரை மலர்ந்தே தீரும்னு குதிக்கிறாங்க. புடிச்சி கட்டியெல்லாம் வச்சி பாத்தாச்சி. ஒன்னும் முடியலை. யாராவது திடீர்னு தும்முனாக் கூட, அது அவரோட சொந்த தும்மல்னு சொல்றாங்க. எல்லா விஷயத்துக்கும் கருத்து சொல்லியே ஆவேன்னு தரையில உக்காந்து அழுவுறாங்க. பாத்தா பாவமா இருக்கு. சரி இவங்கதான் இப்படின்னு பாத்தா, அந்த பக்கம் எச்.ராஜா ஜி தனியா பேசிக்கிட்டு இருக்காரு.
என்ன சார் யாரு கூட பேசறீங்கன்னு கேட்டா, நான் என் அட்மின் கூட பேசிட்டிருக்கேன் ஓய். ஏன் டிஸ்டர்ப் பண்றீங்கன்னு அடிக்க வர்றாரு. கட்சிக்கு ஒரு சோதனையான காலம் ஜி இது.
ஆமா ஜி : கேக்கவே மனசு கஷ்டமா இருக்கு ஜி.
மாமா ஜி : இதோ டாக்டரே வந்துட்டாங்களே.
தமிழிசை : தாமரை மலர்ந்தே தீரும். தாமரை மலர்ந்தே தீரும்.
ஆமா ஜி : இப்போ நீங்க சொல்றது நல்லா புரியுது ஜி.
ஆமா ஜி : நம்ம ஸ்ம்ரிதி இரானி, பத்திரிகை காரங்க fake news போட்டா அவங்க உரிமம் ரத்து செய்யப்படும்னு அறிவிச்சாங்க. ஆனா அடுத்த 3 மணி நேரத்துலயே அந்த அறிவிப்பை மோடி ஜி நிராகரிச்சுடரே ஜி?
மாமா ஜி : அப்பறம்? இப்படி ஒரு அறிவுப்பு வந்தா மோடிஜிக்கு பக்குனு இருக்குமா இருக்காதா.
ஆமா ஜி : ஏன் ஜி?
மாமா ஜி : ஜி நம்ம வண்டி ஓடறதே fake newsல தான், அதுலேயே மண் அள்ளி போட்டா? இப்போ போன தேர்தலில் மோடி RSS அலுவலகத்தை கூட்டி பெருக்கிர மாதிரி ஒரு போட்டோவை போட்டு பிரச்சாரம் பண்ணினோம் நியாபகம் இருக்கா ?
ஆமா ஜி : ஆமாம் ஜி அதை பாத்துட்டு எனக்கு புல்லரிச்சிடுச்சு, எத்தனை எளிமையான மனிதர்
மாமா ஜி : பொறுங்க ஜி, அது போட்டோஷாப் பண்ணினது
ஆமா ஜி : என்ன ஜி சொல்ரீங்க?
மாமா ஜி : அத விடுங்க நம்ம மோடி ஜி MA பொலிடிகல் சயின்ஸ் படிச்சிருக்கார் தெரியமா ?
ஆமா ஜி : தெரியும் ஜி, இந்த மாதிரி படிச்சவங்க தான் நாட்டுக்கு பிரதமர் பதவிக்கு வரணும்னு விஷால் சிவப்பதிகாரத்தில் சொன்னாரே ? அதுக்கு தான் மோடி ஜிக்கு நான் ஒட்டு போட்டேன்
மாமா ஜி : இருங்க ஜி, அவர் உண்மையாவே படிச்சாரா இல்லையானு ஒருத்தருக்கும் தெரியாது
ஆமா ஜி : என்ன ஜி , காலேஜ்ல போய் கேட்டா சொல்ல போறாங்க
மாமா ஜி : அவர் முதலில் BA படிச்சாரான்னு RTI கூட போட்டு பாத்துட்டாங்க , தகவல் சொல்ல முடியாது ரகசியம்னு சொல்லிட்டாங்க
ஆமா ஜி : RTI விடுங்க ஜி, கூட படிச்ச பிரெண்ட்ஸ் எவனாவது குரூப் போட்டோவாவது facebookல போடலாம்ல
மாமா ஜி : அடுத்த தேர்தல் வர்றதுக்குள்ள நம்ம ஆளுங்க ரெடி பண்ணிடுவாங்க ஜி. அதுக்குள்ள இந்த அம்மா இப்படி சொதப்பிடுச்சு அதான் விஷயம்.
ஆமா ஜி : இந்த மத்திய பிரேதசத்துல 4 சாமியாரை இணை அமைச்சரா அறிவிச்சிருக்காங்கலாமே ஜி யாரு ஜி அவங்க?
மாமா ஜி : குடைச்சல் பார்ட்டிங்க ஜி அவங்க, எப்ப பாரு நமக்கு எதிரா கொடி பிடிச்சுட்டே இருந்தாங்க. ஏப்ரல் மாசம் 10 ஆம் தேதி முதல் ஊழலுக்கு எதிரா நெடும் பயணம் போக போறத அறிவிச்சாங்க, அதான் பதவியை குடுத்து ஆப் பண்ணிட்டாரு நம்ம எழுச்சி தலைவர் சிவராஜ் ஜி
ஆமா ஜி : சேலத்தில் இருக்கவருக்கு மத்திய பிரேதசத்துல எப்படி பவர் ஜி ?
மாமா ஜி : சேலமா? என்ன ஜி சொல்றீங்க?
ஆமா ஜி : அட டீவில கூட வருவாரே ஜி, பேர பிள்ளைகளா தாத்தா கிட்ட வந்துடுங்க, தப்பு பண்ணாதிங்கனு நைட் 11 மணிக்கு வருவாரே ஜி
மாமா ஜி : ஜீ, அந்த சிவராஜ் இல்ல ஜி, இது சிவராஜ் சவுஹான்
ஆமா ஜி : எழுச்சி தலைவர்னு சொன்னிங்களா அதான் கன்பீஸ் ஆயிட்டேன் ஜி
மாமா ஜி : நல்ல ஆனீங்க. போங்க ஜி
ஆமா ஜி : சரி ஜி அதுல ஒருத்தர் பேரு கம்ப்யூட்டர் பாபாவாம்? கம்ப்யூட்டர் ஜோசியம் தெரியும் இது என்ன ஜி புதுசா இருக்கு
மாமா ஜி : எது செஞ்சாலும் யோசனையா செய்யணும் ஜி, நம்ம மோடி ஜி அடிக்கடி சொல்றது என்ன?
ஆமா ஜி : அடுத்த பிளைட்டுக்கு டிக்கெட்ட போடுனு சொல்லுவார்
மாமா ஜி : அது இல்ல ஜி, டிஜிட்டல் இந்தியா டிஜிட்டல் இந்தியனு தான் சொல்லுவாரு
ஆமா ஜி : என்ன ஜி டிஜிட்டல் இந்தியா? ஒரே நாளில் சட்ட துறை , உள்துறை ஏன் பாதுகாப்பு துறைனு ஒன்னு விடாம எல்லா தளங்களும் முடங்கிடுச்சு, அப்பறம் என்ன டிஜிட்டல் இந்தியா ஜி
மாமா ஜி : அட நீங்க வேற. அப்போ தான் நம்ம நிர்மலா ஜி அணுகுண்டுக்கு ஆரத்தி எடுத்துட்டு, சூரிய பகவானுக்கு பல் இல்ல நான் போய் மெது வடை செஞ்சு எடுத்துட்டு வரேன்னு சமையல் கட்டுக்குள் போனாங்க, அதுக்குள்ள எவனோ இந்த வேலைய பாத்துட்டான் ஜி
ஆமா ஜி : அப்பறம் என்ன தான் ஜி பண்ண போறோம் ?
மாமா ஜி : அதுக்கு தான் ஜி கம்ப்யூட்டர் பாபாவை ஏறகிருக்கோம், இனி அடுத்ததா ரூட்டர் பாபா, firewall பாபா , ஆன்டி வைரஸ் பாபான்னு வரிசையா இறக்கி விட்டுட்டா, நம்மள யாரும் அசைக்க முடியாது ஜி
ஆமா ஜி : அற்புதம் ஜி அற்புதம். சரி ஜி நம்ம தமிழிசை அக்கா காவி மயம் இல்ல கல்வி மையம்னு பஞ்ச் எல்லாம் விடறாங்களே ஜி என்ன மேட்டர்?
மாமா ஜி : இந்த அம்மா வாயை வச்சிட்டு சும்மா இல்லாம ஏதாவது பஞ்ச் பேசிருது பதிலுக்கு அவனுகளும் கல்வி மையமா கலவி மையமானு மீம் போட்டு கேக்கறானுக. அது நம்ம அண்ணா பல்கலை கழகம் மேட்டர். இதே அவங்ககிட்டயே கேளுங்க.
தமிழிசை : அது ஆளுனரின் தனிப்பட்ட கருத்து. அதை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை. இத்தனை ஆண்டு கால திமுக ஆட்சியினால் வந்த கேடு இது.
மாமா ஜி : பேசிக்கிட்டு இருக்கோம்ல. கொஞ்சம் சும்மா இரும்மா.
ஆமா ஜி : ஓ நம்ம அண்ணா யூனிவெர்சிட்டிக்கு செட்டப் செல்லப்பான்னு யாரையோ துணை வேந்தரா இறக்கிருகங்களாமே ஜி அதுவா?
மாமா ஜி : என்னது செட்டப் செல்லப்பாவா ? அவரு பேரு சூரப்பா ஜி
ஆமா ஜி : இப்போ இருக்கர பிரச்னையில் இதெல்லாம் தேவையா ஜி
மாமா ஜி : என்ன ஜி இப்படி சொல்லிடீங்க? போன வாட்டி ஜல்லிக்கட்டு பிரச்னை அப்போ பீப் சாங் போட்டு திசை திருப்பி விட்டோம், இந்த வாட்டி அடிக்கு பயந்து அந்த அனிருத் பய போனை ஸ்விட்ச் ஆப் செஞ்சுட்டான். சரி சிம்புவ புடிச்சு ஏதாவது பாடி குடுன்னு கேட்டா , பாத்ரூமில் உக்காந்து பாடி வாட்சப்ல அனுப்பி விட்ருக்கான் எருமை. கிளாரிட்டியே இல்ல
ஆமா ஜி : ஓஹோ இது தான் விஷயமா
மாமா ஜி : அது மட்டும் இல்ல ஜி, நம்ம சாரணர் தேர்தலில் ராஜா சார் எவ்வளவு ஓட்டு வாங்கினார்
ஆமா ஜி : 52 ஓட்டு தான் ஜி வாங்கினார்
மாமா ஜி : சரி, RK நகர் இடை தேர்தலில் நம்ம ஆளு எவ்வளவு வோட்டு வாங்கினார்?
ஆமா ஜி : அத ஏன் ஜி இப்போ நியாபக படுத்தறீங்க? NOTA வுக்கும் கம்மி தான். அத வச்சு தான் மீம் போட்டு ஒரு மாசத்துக்கு நம்மள செஞ்சானுகளே
மாமா ஜி : இந்த லட்சணத்துல, தலை கீழா நின்னு தண்ணி குடிச்சாலும் தமிழ்நாட்டுல தாமரை மலராது. அப்பறம் நம்ம எப்போ ஆட்சிக்கு வரது, நாம நெனச்ச ஆளை பதவில உட்கார வைக்கறது. அதான் புரோகிதர் மூலமா காரியத்தை பண்ண ஆரம்பிச்சுட்டோம்
ஆமா ஜி : மோடி மோடி தான் ஜி . கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஜி எதோ சொல்ல போய் திரிச்சு விட்டுட்டானுகலாம்
மாமா ஜி : திரிச்சு விடற வேலைய நாம தான் ஜி எப்பவும் பாப்போம். இந்த வாட்டி மிஸ் ஆய்டுச்சு. மோடி ஜி ஒரு கரை புரண்டு ஓடுற வெள்ளம், அவரை பாத்து நாய் நரி எல்லாம் பயந்துடுச்சுனு பேசினார்
ஆமா ஜி : சரியா தானே பேசிருக்கார்
மாமா ஜி :கேளும், இவனுக ஆமா மோடி ஒரு இயற்கை பேரிடர் தான் அவர் வந்தா சர்வநாசம்னு அமித் ஜியே சொல்லிட்டாருனு கிளப்பி விட்டுட்டானுக. இது தெரிஞ்சு மோடி ஜி கொதிச்சு போய்ட்டாரு.
ஆமா ஜி : அப்பறம் என்ன ஆச்சு ஜி
மாமா ஜி : நீ பேசினது வரைக்கும் போதும் கெளம்புன்னு சொல்லிட்டாரு. இப்போ ராம் மாதவ தேர்தல் வேலைய பார்க்க சொல்லிருக்காரு ஜி.
ஆமா ஜி : ஜெயிச்சுருவோமா ஜி ?
மாமா ஜி : ஜெயிச்சே ஆகணும் ஜி. ஜெயிச்சே ஆகணும்.
ஆமா ஜி : திடீர்னு மோடி ஜி உண்ணாவிரதம் அறிவிச்சிருக்காரே. காங்கிரஸை பாத்து காப்பியடிக்கிறதா ஆயிடாதா ஜி ?
மாமா ஜி : ஒரு பக்தா மாதிரி பேசுங்க ஜி. கப்பித்தனமா பேசறீங்க ? நாம இது வரைக்கும் பண்ணிக்கிட்டு இருக்கறது எல்லாமே காங்கிரஸ் அரசை பாத்து காப்பியடிச்சுத்தானே. புதுசா பண்ணலாம்னு நாம 500, 1000த்தை செல்லாததா ஆக்கிட்டு மொத்த ஃபர்னிச்சரையும் ஒரே நாள்ல ஒடைச்சோம். அதனால, கூச்சப்படாம காப்பியடிச்சிட்டு, மோடி டா, அமித் ஷா டான்னு காட்டுக் கத்தல் கத்தணும். அவ்வளவுதான் மேட்டர்.
ஆமா ஜி : சரி. இப்போ திடீர்னு உண்ணாவிரதம் இருக்கணும்னு என்ன ஜி
அவசியம் ? எல்லாம் நல்லாத்தானே போயிக்கிட்டு இருக்கு ?
மாமா ஜி : எங்க நல்லா போயிக்கிட்டு இருக்கு ? நாலா பக்கமும் பிச்சிக்கிட்டு போயிக்கிட்டு இருக்கு. ஏதாவது பண்ணாத்தானே சமாளிக்க முடியும் ? இல்லன்னா மொத்தமா புட்டுக்கிட்டு போயிடும்.
ஆமா ஜி : சரி உண்ணாவிரதம் இருந்து எல்லாத்தையும் மோடி ஜி சரி பண்ணிடுவாரா ஜி ?
மாமா ஜி : அங்கதான் நீங்க மோடி ஜியோட ராஜதந்திரத்தை பாக்கணும். பாராளுமன்றத்தை நடத்துனா, நம்ப கவர்மென்ட் மேல நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவானுங்க. விவாதம் பண்ணணும். அது தேவையில்லாத பிரச்சினை. அதனால பாராளுமன்றத்தையே நடத்த விடாம பண்ணோம்.
ஆமா ஜி : காங்கிரஸ் தானே ஜி நடத்த விடாம போராட்டம் பண்ணாங்க.
மாமா ஜி : காங்கிரஸ் காரங்க ரெண்டு நாளுதானே போராட்டம் பண்ணாங்க. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துடுவாங்கன்னு நாமதானே நம்ப அடிமைகளை வைச்சி நாடாளுமன்றத்தை நடத்த விடாம பண்ணோம். கடைசி ஒரு வாரம்லாம் காங்கிரஸ் காரங்க கெஞ்சுனாங்களே. ஆனா நம்ப அடிமைங்க பின்னிட்டாங்கள்ல. அதுலயும் அந்த தம்பிதுரை அடிமை பிரமாதம்யா பிரமாதம். கொன்னுட்டான்.
ஆமா ஜி : அப்படித்தான் சக்சஸ்புல்லா நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஜெயிச்சோமா ஜி ?
மாமா ஜி : அதை விட ஒரு பெரிய ஆபத்து இருந்துச்சு ஜி.
ஆமா ஜி : என்ன ஜி அது ?
மாமா ஜி : நம்ப நீதித்துறை அடிமை தீபக் மிஸ்ராவுக்கே இந்த காங்கிரஸ் காரனுங்க ஆப்பு வைக்க பாத்தாங்க ஜி. அவர் மேல இம்பீச்மென்ட் கொண்டு வரப் பாத்தாங்க. விடுவோமா நாம. பாராளுமன்றத்தை நடத்த விடுவோமான்னு கேட்டேன். அடிமை தம்பி துரையை கூப்பிட்டு மண்டி போடச் சொன்னேன்.
ஆமா ஜி : என்ன ஜி சொல்றீங்க. மண்டி போட்டு ?
மாமா ஜி : அட இருய்யா. மண்டி போட்டு பணிவா நான் சொல்றதை கேளுன்னு சொன்னேன். அப்படியே கேட்டுக்கிட்டார்.
ஆமாம் ஜி : பிரமாதம் ஜி. பிரமாதம் ஜி. இன்னைக்கு உண்ணாவிரதம் சிறப்பா நடக்குமா ஜி ?
மாமா ஜி : என்ன இப்படி கேட்டுட்டீங்க. பாருங்க. பாராளுமன்றத்துல மொத நாளு உள்ள நுழையும்போது மோடி பாராளுமன்ற படிக்கட்டுல தலையை வைச்சு வணங்குனது ஞாபகம் இருக்கும் உங்களுக்கு. அதுக்கு பிறகு ஒரு நாளாவது பாராளுமன்றத்தை மதிச்சிருக்காரா ? எந்த விவாதத்துக்காவது பதில் சொல்லியிருக்காரா ? இன்னைக்கு, பாராளுமன்றத்தின் முக்கியத்துவம், தலித்துகளை பாஜக எவ்வளவு நேசிக்கிறதுன்னு பொளக்கப் போறாரு பாருங்க.
ஆமா ஜி : உத்தரப் பிரதேசத்துல, என்ன ஜி கொலையும், கொள்ளையுமா நடந்துக்கிட்டு இருக்கு ? எல்லாரும் நம்ப ஆதித்யநாத் ஜியை திட்டுறாங்க ஜி.
மாமா ஜி : நேத்து வரைக்கும் 24 மணி நேரமும் கலவரம் பண்ணிக்கிட்டு இருந்த பயலை சிஎம் ஆக்குனா இப்படித்தான் நடக்கும். வேற எப்படி நடக்கும் ?
ஆமா ஜி : இதை எப்படி ஜி சமாளிக்கிறது ?
மாமா ஜி : ஆதித்யநாத் ஜி கிட்ட மொத்தமே ரெண்டே ரெண்டு ட்ரெஸ்தான் இருக்குன்னு கௌப்பி விட்டோம்ல. அந்த ரெண்டு ட்ரெஸ்ஸை துவைச்சு போட்ற நேரத்துல இந்த மாதிரி குற்றமெல்லாம் நடக்குதுன்னு சொல்லுங்க ஜி. வேற என்ன சொல்றது ?
ஆமா ஜி : என்ன ஜி ? தமிழ்நாட்டுல ஐபிஎல்லை எதுத்து பெரிய போராட்டம் பண்றாங்க ?
மாமா ஜி : ஆமா ஜி. நாம அதை எதுத்து நம்ப ஆதரவை ஐபிஎல்லுக்கு தந்தே ஆகணும். அது நம்ப தேஷத்தோட விளையாட்டு.
ஆமா ஜி : என்ன ஜி. ஹாக்கிதானே நம்ப தேஷத்தோட வெளையாட்டு ?
மாமா ஜி : ஹாக்கில பணம் இருக்கா ஜி ?
ஆமா ஜி : இல்ல ஜி. ஹாக்கி மட்டைதான் இருக்கு.
மாமா ஜி : அப்போ எது நம்ப தேஷத்தோட வெளையாட்டு ?
ஆமா ஜி : அதுல என்ன ஜி சந்தேகம் ? கிரிக்கெட்தான்.
மாமா ஜி : நாம ஐபிஎல்லை ஆதரிக்கிறதுல இன்னொரு சூட்சுமம் இருக்கு. சொல்லுங்க பாப்போம்.
ஆமா ஜி : தெரியலையே ஜி.
மாமா ஜி : இதுனாலதான் நீங்க இன்னும் ரத யாத்திரை வண்டியை தள்ளி விடறீங்க. நான் ரதத்து மேல உக்காந்துக்கிட்டு வர்றேன். ஐபிஎல்லுல இருக்குற முக்கியமான டீம் மும்பை இண்டியன்ஸ். கரெக்டா ?
ஆமா ஜி : கரெக்டு ஜி. அதோட ஓனர் பேரு கூட…..
மாமா ஜி : என்னய்யா நீ. நீத்தா அம்பானிதான் அதோட ஓனர். யாரு அவங்க.
ஆமா ஜி : அவங்க முகேஷ் அம்பானியோட பொண்டாட்டி.
மாமா ஜி :முகேஷ் அம்பானி நமக்கெல்லாம் படியளக்குற பெருமாள் இல்லையா ? பெருமாளுக்கு ஏதாவது ஒன்னுன்னா நாம துடிக்க வேணாமா ?
ஆமா ஜி : கண்டிப்பா ஜி. கண்டிப்பா. வாங்க ஜி நாம எல்லாரும் கௌம்பி உடனே போயி, ஐபிஎல்லுக்கு எதிரா போராட்டம் நடத்துறவங்களை அடிச்சு ஓட விடுவோம்.
மாமா ஜி : நீங்க டாக்டர் தமிழிசையை கூட்டிக்கிட்டு முன்னால போயி போராட்டத்தை தொடங்குங்க. நான் பின்னாலயே வந்து கலந்துக்கறேன் ஜி.
ஆமா ஜி : தமிழிசை ஜி வாங்க. போலாம்.
தமிழிசை : தாமரை மலர்ந்தே தீரும்.
ஆமா ஜி : இங்க நின்னு தனியா கத்துனா மலராது. வாங்க சேப்பாக்கம் ஸ்டேடியத்துக்குப் போயி உரக்க சொல்லுவோம்.
ஆமா ஜி : ஜி.. ஜி… ஓடுங்க ஜி. தமிழர்கள் எல்லாம் ஒன்னு கூட செருப்பை தூக்கிட்டு வர்றாங்க ஜி. சிக்குனா சின்னா பின்னமாயிடுவோம் ஓடுங்க ஜி. மீதியை அடுத்த வாரம் பேசிக்குவோம்.
ஜி : இதைத்தான் ஜி எங்க வீட்டுக்கு பக்கத்துல இருந்த டீக்கடையில டீ குடிச்சிக்கிட்டே சொன்னேன். டீக்கடைக்காரரு, டீயை மூஞ்சில ஊத்திட்டாரு ஜி.ஹாஹா செம ஜி.
“ஆமா ஜி : எழுச்சி தலைவர்னு சொன்னிங்களா அதான் கன்பீஸ் ஆயிட்டேன் ஜி” Not able to control Laugh
Please write how you wrote in the previous style..we don’t like mama ji aamaji questions and answers… please please change into previous style..I have been read savukku for the past 5 years..
Sema ji
hayyooo … சிரிச்சி மாளலை… i saw u now a days in tv shows… Good. keep it up Sankar. Bro.
itha mari pavvadi pathi podalama david savkku.
Kalakkal ji..
Sema..