சம்மன். “Whereas the Commission of Inquiry constituted for the purpose of finding out the source and the truth into the allegations against Shri.Singaravelu, formerly Union Minister for Finance, you are hereby directed to appear before the Commission of Inquiry under Section 8-B of the Commission of Inquiry Act, 1958 on…” என்று தொடங்கி அந்த சம்மன் என்னை நேரில் ஆஜராகுமாறு அழைத்திருந்தது. காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறந்து கொண்டிருந்த என்னை தரையில் தள்ளியது அந்த சம்மன். விடியற்காலையில் வரும் சுகமான கனவிலிருந்து உலுக்கி எடுத்தது போலிருந்தது.
‘நான் எப்படி இந்த விசாரணை வளையத்துக்குள் வந்தேன்.. நான் இந்த விவகாரத்தின் பின்னணியில் இருந்தேன் என்பது தெரிந்ததால்தான் என்னை பொய் வழக்கில் சிறையில் தள்ளினார்கள். ஆனால், நேரடியாக என்னை விசாரணை கமிஷனில் விசாரிப்பதென்றால் இது வேறல்லவா ? மோசடி வழக்கோடு சேர்த்து இதையும் எதிர்கொள்ள வேண்டுமா ? சரியாகச் சாப்பிடாமலேயே படுத்தேன். வசந்தியின் நினைவுகள் வந்தாலும், வேலாயுதம் கமிஷன் அந்நினைவுகளை பின்னுக்குத் தள்ளின. ஒரு சில விநாடிகள் கூட தொடர்ந்து, அந்த காபி ஷாப்பின் இனிய நினைவுகள் அளித்த சுகத்தை மீட்டெடுக்க முடியவில்லை.
காலையில் ”குட் மார்னிங்.. ஹேவ் ய லவ்லி டே.. ” என்று வசந்தியிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது. வழக்கமாக அவள் மெசேஜ் ஏற்படுத்தும் உற்சாகத்தை இது ஏற்படுத்தவில்லை. என் கவனம் முழுக்க சம்மன் மீதே இருந்தது. கமிஷன் சம்மன் புதுத் தலைவலியாக இருந்தது.
எடிட்டரைச் சென்று பார்த்தேன். விபரத்தைச் சொன்னேன். “செக்ரட்டரி சொன்னாங்கப்பா… போயி அட்டென்ட் பண்ணிட்டு வந்துடு. அட்வகேட் வேணுமா ?“
“இருந்தா நல்லாருக்கும் சார்.“
“உன்னை அரெஸ்ட் பண்ணப்போ அப்பியர் ஆனாரே ராஜராஜன்.. அவர் அப்பியர் ஆவாரான்னு கேட்டுப் பாரு… அவரு ஓ.கே ன்னா ரொம்ப நல்லது. அவரு எஃபெக்டீவா பண்ணுவாரு. என்ன பீஸ்னு கேட்டுக்கோ.. ஏதாவது ஸ்டோரி பென்டிங் இருக்கா ?“
“முடிச்சுட்டேன் சார். நேத்து நைட்டே உங்களுக்கு மெயில் அனுப்பிட்டேன்.“
“அப்போ நீ கௌம்பு. அந்த வேலையை முடிச்சுட்டு அதுக்கப்புறம் ஆபீஸ் வந்தாப் போதும்.“
‘எடிட்டர் தக்க பின்புலமாக ஆதரவு தந்தது ஆறுதலாக இருந்தது. எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை, இது உன்னுடைய பிரச்சினை என்று சொல்லி விட்டால் ?’
நேராக ராஜராஜன் அலுவலகம் சென்றேன். அவர் நீதிமன்றத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்தார். விபரத்தைச் சொன்னேன். அவரோடு கிளம்பி நீதிமன்றத்துக்கு வந்து அங்கே விவாதித்துக் கொள்ளலாம் என்று கூறியபடி, அவருடனே கிளம்பினேன்.
“கமிஷன் ஆப் என்கொயரி சம்மன்ஸ் படி நீங்க ஆஜராகலாம். ஆஜராகமலும் போகலாம். இட்ஸ் யுவர் டிசஷென். (Its your decision) ஆனா, அப்பியர் ஆகலன்னா அங்க என்ன நடக்குதுன்னு உங்களுக்குத் தெரியாமப் போயிடும். உங்களுக்கு எதிராக் கூட ரெக்கமென்டேஷன் பண்ணலாம். என்ன சொல்றீங்க.. “
“அப்பியர் ஆயிடறேன் சார். நீங்க வந்தீங்கன்னா ஹெல்ப்பா இருக்கும் சார்.“
“நாளன்னைக்கு எனக்கு ஹைகோர்ட்லையும் மேட்டர் இருக்கு. ம்ம்.. சரி.. நான் ஜுனியர்ஸை வைச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன். மார்னிங் நீங்க நேரா கமிஷனுக்கு வந்துடுங்க. அங்க மீட் பண்ணலாம்.“
“சார்.. உங்க பீஸ் எவ்வளவன்னு எடிட்டர் கேட்டுட்டு வரச்சொன்னார் சார். “
“ஓ… நீங்க கதிரொளியில வேலை பாக்கறீங்கள்ல.. நான் மறந்துட்டேன். பீஸ் எதுவும் வேணாம்பா.. நான் பாத்துக்கறேன். ஜஸ்ட் ஒன் டே தானே…“
“தேங்க்யூ சோ மச் சார்.. நான் உங்களுக்கு ரொம்ப கடமைப்பட்ருக்கேன் சார்.. “
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. டிஸ்கரேஜ் ஆகாம கன்ட்டின்யூ யுவர் வொர்க். “
“நான் வர்றேன் சார் என்று சொல்லி விட்டு கிளம்பினேன்.
ராஜராஜன் வர ஒப்புக் கொண்டது பெரிய பலத்தை அளித்தது. கடந்த முறை என்னை கைது செய்தபோது ராஜராஜன் நீதிபதியிடம் கடுமையாக வாதாடியது நினைவுக்கு வந்தது. அவர் பார்த்துக் கொள்வார். மனதில் இருந்த பாரம் குறைந்தது போல இருந்தது. என்னதான் மனதில் எதையும் சந்திக்கலாம் என்ற துணிச்சல் இருந்தாலும், சட்ட நுணுக்கங்களை அறிந்த வழக்கறிஞர்களின் உதவி என்பது, நெருக்கடியான நேரத்தில் அளிக்கும் ஆறுதலை விவரிக்க முடியாது.
ஹை கோர்ட்டில் வேலை எதுவும் இல்லை. எடிட்டரும் வர வேண்டாம் என்று சொல்லி விட்டார். வசந்தி என்ன செய்து கொண்டிருப்பாள். அவள் சீனியர் இருப்பாரோ… சீனியரிடம் பார்க்க வேண்டும் என்று சொல்லி விட்டு அவள் அலுவலகம் போகலாமா ? அவர் இருந்து விட்டால் என்ன காரணம் சொல்வது ? இன்டர்வ்யூ என்று சொல்லலாமா ? எடிட்டரிடம் கேட்காமல் இப்படி ஒரு கமிட்மென்ட்டை எப்படி கொடுப்பது. இப்போதைக்கு பண்ணப் போகும் ஸ்டோரி எதிலும் வழக்கறிஞரின் கருத்து தேவைப்படவில்லை. என்னவென்று சொல்லி விட்டுப் போய்ப் பார்ப்பது ?
மனது ஏதாவது காரணத்தைத் தேடுகிறதே தவிர அவளைப் பார்க்காமல் போகலாம் என்று கொஞ்சம் கூட தோன்றவில்லை. இறுதியாக, என்னை கமிஷன் ஆப் என்கொயரியில் அழைத்திருக்கிறார்கள். அது பற்றி எனக்கு விபரங்கள் தெரியாது. விபரம் கேட்பதற்காக வந்தேன் என்று சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். நேராக பைக்கை வசந்தியின் அலுவலகத்துக்கு விட்டேன். ஒரே நாளில் ஏற்பட்ட மாற்றம் ஆச்சர்யமாக இருந்தது. இத்தனை நாள் வைகறைச் செல்வனின் ஆபீஸாக இருந்தது, இப்போது வசந்தியின் ஆபீஸாக எவ்வளவு விரைவாக மாறி விட்டது ?
இத்தனை நாள் இந்த அலுவலகத்துக்கு வந்ததற்கும் இப்போது வருவதற்கும் ஏராளமான வித்தியாசத்தை உணர்ந்தேன். இத்தனை நாள், அவள் சீனியரைப் பார்க்க வருவதால், வரும்போதே ஏதாவது வேலையோடு வருவேன். அது குறித்த எண்ணங்கள் இருக்கும். அல்லது வேறு எண்ணங்கள் இருக்கும். ஆனால், இன்று மாடிப் படி ஏறும்போதே ஒரு திருட்டுத்தனம் இருப்பதாக உணர்ந்தேன். எவ்வித வேலையும் இல்லாமல், வசந்தியைப் பார்ப்பதற்காகவே போகிறேன் என்பது வேறு யாருக்கும் தெரியாவிட்டாலும் எனக்குத் தெரியும் அல்லவா ? அவளும் அலுவலகத்தில் இல்லாவிட்டால் என்ன செய்வது ? அவள் வக்கீல் ஆயிற்றே. நீதிமன்றத்துக்கு சென்றிருந்தால் ?.. இல்லாமல் இருப்பாளோ என்று சற்று வருத்தமும் ஏற்பட்டது.
அவள் எப்போதும் அமரும் இருக்கையில் அமர்ந்து குனிந்து எதையோ சீரியஸாக படித்துக் கொண்டிருந்தாள். அலுவலகத்தில் வேறு யாரும் இல்லை. அவள் மட்டும்தான் இருந்தாள். நான் வந்ததை அவள் கவனிக்கவில்லை. அருகே சென்றேன். “மேடம்.. சார் இருக்காரா ?” என்றேன்.
நிமிர்ந்தவள் முகத்தில் பளீரென்று புன்னகை. கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. ”உக்காருங்க வெங்கட். வாட் ய சர்ப்ரைஸ் ?.. ” என்றாள். நானும் பதிலுக்கு புன்னகைத்து விட்டு, ”சாரைப் பாக்கணும்.. ” என்றேன்.
”அப்போ என்னைப் பாக்க வரலயா ?” என்று கேட்டு விட்டு பொய்யாகக் கோபித்தாள்.
”அய்யோ இல்லைங்க… சார் கிட்ட ஒரு ஆர்ட்டிக்கிள் சம்பந்தமா பேசணும்.. அதான்….” என்றேன்.
”ப்போ ஜர்னலிஸ்டாத்தான் வந்தீங்க.. என் ஃப்ரென்டா வரலை… சார் டெல்லி போயிருக்கார்… வர்றதுக்கு மூணு நாள் ஆகும். அவர் வந்ததும் போன் பண்ணிட்டு வாங்க” என்று முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு சொன்னாள்.
என்ன சொல்வது என்று புரியவில்லை. இல்லை நான் உன்னைத்தான் பார்க்க வந்தேன் என்று சொல்வதற்கு வெட்கமாக இருந்தது. என்ன சொல்வது என்று தடுமாறினேன்… ”சரிங்க. நான் சார் வந்ததும் வர்றேன்.. ” என்று சொல்லித் தடுமாறினேன்.
”ஓ.கே… பை….” என்றாள். ‘அதற்கு மேல் என்ன காரணத்துக்காக அங்கே இருப்பது. உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கிறது என்று சொல்லாமா… இல்லை எனக்கு வேறு எந்த வேலையும் இல்லை என்று சொல்லலாமா ? உன்னைப் பார்த்தால் என் கவலைகளெல்லாம் பறந்து போகின்றன அதனால், உன் அருகாமையிலேயே நிரந்தரமாக இருந்து விடுகிறேன் என்று சொல்லலாமா ?‘ இதெல்லாம் மனதில் ஓடிக்கொண்டே இருந்தாலும், கால்கள் அவள் அலுவலகத்தை விட்டு வெளியேறி நடந்து கொண்டேயிருந்தன.
படி இறங்கி வண்டியை ஸ்டார்ட் செய்யும் போது, அவளிடமிருந்து மெசேஜ்… ”ஈவ்னிங் காஃபி… ? ”
இவ்வளவு நேரம் அவளோடுதானே இருந்தேன். அப்போது கேட்கக் கூடாதா ? இந்தப் பெண்களுக்கு மெசேஜ் அனுப்புவதில் என்ன அப்படி ஒரு அலாதி இன்பம் ? அதுவும் விரல்களே தேய்ந்து விடும் வேகத்தில் அனுப்புகிறார்கள். நேரில் சந்தித்து ஒரு வார்த்தை பேசுவது போல இந்த மெசேஜ் இருக்குமா ? அவளோடு பேசிக் கொண்டிருக்கும் போது ‘காபி சாப்பிடப் போகலாமா’ என்று அழைத்தால் எப்படி இருந்திருக்கும் ? அவள் கண்களைப் பார்த்து “போகலாம்” என்று சொல்லியிருந்தால் எப்படி இருந்திருக்கும். இந்த உணர்வுகளை மெசேஜ் தருமா ? ஒரு வேளை அதற்குப் பதிலாகத்தான் ஸ்மைலி போட்டு அனுப்புகிறாளோ… இந்த மெசேஜில் கண்ணடிப்பது போல ஒரு ஸ்மைலி. இதற்குப் பதிலாக நேராக கண்ணடித்துக் கேட்டிருந்தால், இந்தியாவின் மொத்தக் கருப்புப்பணத்தையும் அதற்கு ஈடாகக் கொடுக்கலாமே…
“ஷ்யூர். வி வில் கோ.. “ என்று போட்டு விட்டு, நானும் புன்னகைப்பது போன்ற ஒரு ஸ்மைலியை சேர்த்து அனுப்பினேன். அப்போதுதான் பார்த்தால் ஏகப்பட்ட ஸ்மைலிகள் இருக்கின்றனவே..? புன்னகைப்பது போல ஒரு ஸ்மைலி, வாய் விட்டுச் சிரிப்பது போல ஒரு ஸ்மைலி, அழுவது போல, நாக்கைத் துருத்திக் காட்டுவது போல… கோபப்படுவது போல, ஒன்றும் புரியாமல் முழிப்பது போல என்று ஏகப்பட்ட ஸ்மைலிகள். நேராக பேசினால் இந்த உணர்ச்சிகளை என்னால் காட்ட முடியாது என்பதால் இது போல பொம்மைகளைப் போட்டு அனுப்புகிறேன் என்பதை புரிய வைப்பதற்காக இது கண்டுபிடிக்கப் பட்டதா ? இல்லை நான் உனக்கு அனுப்பும் செய்தி எனது இந்த உணர்வை பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக கண்டுபிடிக்கப் பட்டதா…’ என்னவென்று குழப்பமாகத்தான் இருந்தது.
மணி 12.30 ஆனது. இதற்கு மேல் இங்கே வேலையில்லை. நேராக வீட்டுக்குச் சென்று சாப்பிட்டு விட்டு படுத்து நன்றாகத் தூங்கினேன். மாலை 5 மணிக்கு எத்தனை மணிக்கு ஹாஸ்டல் வர வேண்டும் என்று மெசேஜ் அனுப்பினேன். 6.30 என்று பதில் அனுப்பினாள். சரியாக 6.30க்கு ஹாஸ்டல் வாசலில் காத்திருந்தேன். வந்து விட்டேன் என்று தகவல் அனுப்பினேன். எப்போதும் போல “2 மினிட்ஸ்” என்று பதில் வந்தது. அவளின் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 400 வினாடிகள் போல… 20 நிமிடங்கள் கழித்து வந்தாள்.
“அய்யோ சாரி… ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா ? “
நான் எத்தனை மணிக்கு வந்தேன் என்பதுதான் தெரியுமே… எதற்காக இப்படி ஒரு கேள்வி… இல்லை என்று நான் பொய் சொல்ல வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறாளா ?
“இல்லைங்க இப்போதான் வந்தேன்“ என்றேன்.
‘இது பொய் என்பது இருவருக்குமே தெரியும். ஆனாலும் ஏன் இந்தப் போலியான உரையாடல் ? இது போல சின்னச் சின்னதான பொய்கள்தான் வாழ்க்கையை சுவையாக்குகிறதோ… ?‘
இன்று டீ ஷர்ட் இல்லை. உடலோடு தோல் போல ஒட்டியிருக்கும் வெளிர் நிறத்தில் ஒரு பாட்டமும், மெரூன் நிறத்தில் லூசாக ஒரு டாப்சும் அணிந்திருந்தாள். முகத்தில் மெலிதான மேக்கப் இருந்தது.
நான் வண்டியில் உட்காருங்கள் என்று சொல்வதற்கு முன்பாகவே ஏறி அமர்ந்தாள். வண்டியை எடுத்து யு டர்ன் செய்து, மீண்டும் நேற்று காப்பி குடித்த அதே காஃபி டே கடைக்கே சென்றேன். இன்று காஃபிக்கு போகலாம் என்று இவள் முன்னதாகவே சொல்லி விட்டதால், கவனமாக பர்ஸில் ஆயிரம் ரூபாய் எடுத்து வைத்திருந்தேன். வண்டியை விட்டு இறங்கியதும் இந்தக் கடை போர் அடிக்குது. வேற இடத்துக்கு போலாம் என்றாள். வேறு எங்கே போகலாம் என்றதும் எங்காவது என்றாள்.
வண்டியை எடுத்து எங்கே என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அந்த காபி டேவுக்கு நேர் எதிராக மற்றொ காபி ஷாப் இருந்தது. கப் ஓ கேப் என்று பெயர் வைத்திருந்தார்கள். “இங்க போகலாமாங்க என்றேன்…. ?“
“வாங்க ட்ரை பண்ணுவோம். இந்த இடம் நல்லா இல்லன்னா வேற எடம் ட்ரை பண்ணுவோம்“ என்றாள்.
அந்த இடம் ஒரு பழைய காலத்து செட்டிநாட்டு பங்களா. அதை மேல் தளத்தில் காபி ஷாப்புமாக, கீழ் தளத்தில் ஜுஸ் மற்றும் போட்டிக் ஷாப்பாக மாற்றியிருந்தார்கள். கட்டிடத்தின் பழைமை மாறாமல் வைத்திருந்தார்கள். முதல் தளத்திற்கு செல்வதற்கான படி, செங்குத்தாக ஏறியது. படியில் ஏறத் தொடங்கினால், மேலே படி வலதுபுறமாக திரும்பும் இடத்தில் முத்தமிட்டுக் கொண்டிருந்த ஜோடி அவசரமாக விலகியது. அந்தப் பெண் எங்களைப் பார்த்ததும் வாயைத் துடைத்துக் கொண்டு தலையை குனிந்து கொண்டு கீழே இறங்கினாள். வசந்தியைப் பார்த்ததும் சிரித்தாள். சிரித்தபடியே மேலே சென்றோம்.
வரவேற்பறை போல இருந்த இடத்தில் நான்கு பேர் அமரும்படி சோபா போட்டிருந்தார்கள். அதைத் தாண்டி கண்ணாடி அறையில் நுழைந்தால், பெரிய பார்களில் இருப்பது போல பெரிய ஹால். அங்கே குடும்பத்தோடு அமர்ந்து காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். 48 இன்ச்சுக்கு பெரிய எல்சிடி டிவி கிரிக்கெட் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. அந்த ஹால் முடிந்தவுடன், நீளமான காரிடார் இருந்தது. அது கேபின் கேபினாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கேபினிலும், சிமென்டினாலான டேபிள். அதன் மேலே ஒரு பூங்கொத்து. இரண்டு மூலைகளிலும் இருந்த கேபினில், ஜோடியாக அமர்ந்து ஆழ்ந்து முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்.
‘அய்யய்யோ… தப்பான இடத்துக்கு வந்து விட்டோமோ…’ வசந்தி அதில் காலியாக இருந்த ஒரு கேபினைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தாள். அவள் துளியும் சங்கடப்பட்டதாகத் தெரியவில்லை. அமர்ந்து சற்று நேரத்தில் யூனிபார்ம் அணிந்திருந்த ஒருவன் மெனுக் கார்டை வைத்து விட்டு அவசரமாக நகர்ந்தான். இங்கேயும் காபி டேயில் இருந்த அதே வகை காபி மற்றும் டீ இருந்தது. ஆனால் எல்லாவற்றிலும் விலை 20 ரூபாய் குறைவாக இருந்ததைப் பார்த்ததும் இயல்பாக மகிழ்ச்சி வந்தது.
“அதே லெமன் டீயா…?“ என்றாள்.
“நீங்க என்ன சாப்ட்றீங்களோ அதே எனக்கும் சொல்லுங்க“ என்றேன். ‘1000 ரூபாய் இருக்கிறதே…’
சற்று நேரத்தில் ஆர்டர் எடுக்க வந்தவனிடம், “காப்புச்சீனோ வித் க்ரீம்“ என்று ஆர்டர் செய்தாள்.
“சொல்லுங்க….ஹவ் வாஸ் யுவர் டே.. “ என்றாள்.
“ம்ம்.. நல்லாப் போச்சுங்க.. “
“எங்க ஆபீசுக்கு உண்மையிலேயே சீனியரைப் பாக்கத்தான் வந்தீங்களா…. இல்லை என்னைப் பாக்க வந்தீங்களா…?“
‘அந்த விஷயத்தை விட மாட்டேன்கிறாளே… விடாமல் பிடித்துக் கொள்கிறாளே…’
வசந்தி.. என்னைப் பத்தி உங்ககிட்ட சொல்லணும்.
“என்ன சொல்லப்போறீங்க.. நீங்க வல்லவரு.. நல்லவருன்னா… ? அது எனக்கே தெரியும் வெங்கட்..“
“அது இல்லங்க….“
“வேற என்ன ? என்னை லவ் பண்றீங்களா…. ? “
தொடரும்.
இந்த கதையில் வரும் வசந்தி உளவாளி.
really?
Your story is very interesting… Of late a bit too much Romantics . Anyway good job.
Pls consider doing next story on how the politicians move their ill gotten money.. how they actually invest and liquidate when needed? How do they trust their party men in managing money..
Also consider writing about corporaten biggies and relationships with politicians. How about cricket betting and fixing.
All the best
முதலில் சங்கரின் சுயசரிதை போல தோன்றியது…இப்போது ஷபீரின் சம்பவங்களும் இருப்பதாகத் தோன்றுகிறது…மொத்தத்தில் புதினம் என்ற பெயரில் எங்களுக்கு உண்மை சம்பவங்கள் கிடைக்கின்றன…தொடரட்டும்…
iyahoo! why this twist? nalla thane poguthu…
Sir, story is very interesting and engaging. Good job. Aanalum…neenga ungalai rombavae appaaviya portray panreengalae..
உங்க புத்தகத்துல (ஊழல் ,உளவு , அரசியல்) சொல்லாத சொல்லமுடியாத நிறைய விஷயங்களை தெரிய முடிகிறது).
அப்புறம் அந்த எழுத்து நடை மிக மிக அருமை சார்.
சுஜாதா ,ஜெயகாந்தன் வரிசையில் நீங்களும் .
வாழ்த்துக்கள் சார்.
சார் எண்டிங் ல
ட்விஸ்ட் வைக்கிறதுல உங்கள மிஞ்ச முடியாதுங்க சார்
Really Interesting . Read one episode & got impressed ..At a stretch read all 23 episodes in one stretch
Hi Shankar, Wonderful story. Congrats Bro!
We can’t wait for it, Please publish next episode on tomorrow.
going thrill and cool!
I think the most unique quality of women are giving / creating sudden shocks!
Awesome ending!
keep it up sir. waiting for next episode.
The way you write is watching a drama or movie. And it really suits to your present life it express true life of a honest tamizhan. Well done and keep it up. After long years I am enjoying a story (I believe!!!!) that too reading in tamil is great. One can read as sirukathai or thodarkathai. Your write is superb.. Keep going. I’m sure the publications will behind you for publishing..
Hi Shankar Bro, Have you completed the writing of this story or its still in process. can’t wait for it. oru goutham menon movie mathiri irukku, if possible give this script to some nice director. want to see this in big screen. good luck bro.
♥♥♥♥♥♥♥
sir, neega rajesh kumar , PKP, SUBAA ellaruom kalandha oru kalavaiya irukeenga!!!!!! Aganaanooru, purnaanooru rendayume unga kathaiyila katureenga…… Super sir…
ஆரம்பத்தில் இருந்த த்ரில் க்ரைம் இப்போது இல்லை.. தமிழ் கமர்சியல் சினிமா மாதிரி இருக்கு..!!
Nicely ended.
வேற என்ன ? என்னை லவ் பண்றீங்களா…. ? “
தொடரும்…. mega serial la vara madiri, mukkiyamaana kattam Friday evening vechu next episode ah monday veppangaley adha madiri irukku. idhai madiri ezhudum boludhu, savukkarai chellamaaga thitta vendum endru pola thaan ullathu. Yov. manda kayudhu yaa. unaku en indha ora vanjanai.
Btw, Kottaisami is a strong and committed person who thinks before he speaks. It looks like Vasanthi who is far younger person is even more clear and mature in her thoughts with a strong character. its a good read bro.
Pls wait till Monday brother. Thank you.
good write up, Mr.Kottaisamy 🙂
semma intresting story…….. congrats sir
semma intresting story……..
நீங்க அனுபவித்து எழுதுரமாதி இருக்கு சாரே..நடந்த சம்பவமாகவே தெரியுது…இவ்வளவு கலவரத்திலும் ஒரு குதுகுலமா…எங்கயோ சிக்குனாப்பல இருக்கே….அருமை….
Wonderful naration . the strength of the story is the mix of politics and romance. Great work
Story in top gear, I think instead of writing investigation journalism the author can continue in this area. My personal opinion he is very strong in expressing humans sensitive emotions.
I am a journalist and investigative journalism is my forte. This is just an experimental effort. I am very glad and happy that people like it. Who knows, I may write another fiction. And thanks for your opinion sir.
Absolutely thrilling, after long time I see in this story