வழக்கத்துக்கு மாறாக, ஆமா ஜி குஷியாக துள்ளியபடி வந்தார்.
மாமா ஜி : என்ன ஜி ரொம்ப சந்தோஷமா வரீங்க, எதுவும் நல்ல விஷயமா ?
ஆமா ஜி : பிரமாதமான விஷயம் ஜி , போன வாரம் மோடி சென்னை வந்தப்போ ட்விட்டர்ல கலக்கிட்டோமே ஜி, சந்தோஷத்துக்கு அது போதாதா ?
மாமா ஜி : என்னது கலக்குனோமா ? ஊரே துப்பிகிட்டு இருக்கு
ஆமா ஜி : அப்படி எல்லாம் இருக்காது ஜி , நான் பார்த்த வரைக்கும் உலக அளவில் நம்ம ஹாஸ் டேக் தான் முதல் இடத்தில் இருந்தது
மாமா ஜி : ஏதோ தப்பு நடந்திருக்கு ஜி, எங்க உங்க ட்விட்டர் காமிங்க பாப்போம்
ஆமா ஜி : என்ன சந்தேகமா ஜி? முதல் நாள் நைட் IT செல் என்ன மெசேஜ் போடணும்னு வாட்ஸாப்ல தெளிவா சொல்லிட்டாங்க. அடுத்த நாள் காலம்பற 5 மணிக்கு அலாரம் வச்சு எந்திரிச்சு பதிஞ்சேன் ஜி , இங்க பாருங்க இந்த ஹாஸ் டேக் தான்
மாமா ஜி : என்ன ஜி வேலை செஞ்சிருக்கீங்க, #GoBackModi நமக்கு எதிரான ஹாஸ் டேக் , இத போட்டா ட்வீட் பண்ணுனீங்க ?
ஆமா ஜி : ஜி ஆங்கிலத்தில் எனக்கு படிக்க தெரிஞ்ச ஒரே வார்த்தை மோடி மட்டும் தான். காலைல பாக்கும் போது மொத ட்ரெண்ட்ல மோடினு இருந்தது அதான் அத யூஸ் பண்ணினேன்
மாமா ஜி : நல்லா வாயில வந்திருக்கும் பாத்துக்க , இது கூட தெரியாம நீ எல்லாம் ஏன்யா கட்சில இருக்க?
ஆமா ஜி : ஜி இந்த மாதிரி எல்லாம் திட்டுனீங்கனா நான் ரஜினி கட்சியில் சேர்ந்துருவேன் பாத்துக்கோங்க
மாமா ஜி : (அய்யோ இப்படி எல்லாம் மெரட்டறானே, கட்சியில் இருக்கிறதே 5 பேர் தான் அவனும் வேற கட்சிக்கு போய்ட்டா தனியா தான் பேசிட்டு இருக்கனும் ) சாரி ஜி ஒரு கோவத்துல சொல்லிட்டேன். நீங்க பதிஞ்ச ஹாஸ் டேக் “மோடி திரும்பி போ”னு அர்த்தம்
ஆமா ஜி : அய்யையோ அப்படியா பண்ணிட்டேன், இப்போ என்ன ஜி பண்றது
மாமா ஜி : ராஜா ஜி க்கு விஷயம் தெரியாம பாத்துக்கோங்க இல்லாட்டி அவ்வளவு தான் காண்டு ஆய்டுவார்.
ஆமா ஜி : வாங்க ஜி வாங்க உங்கள பத்தி தான் பேசிட்டு இருந்தோம்
ராஜா ஜி : என்னத்த வாங்க, உருப்படியா ஏதாவது நடக்குதா ஒன்னும் விளங்க மாட்டேங்குது
மாமா ஜி : ஏன் ஜி இப்படி விரக்தியா பேசறீங்க? மெண்டல் டெஸ்ட் ரிசல்ட் வந்துடுச்சா ?
ராஜா ஜி: யோவ் என்ன நக்கலா ? மோடி விஜயம் தான், இப்படி பண்ணிடானுகளே படுபாவிக.
ஆமா ஜி : ஏன் ஜி மோடி ஜி கோவிச்சுகிட்டாரா ?
ராஜா ஜி: கோவிக்காம? அவர் வர்றதுக்கு ஒரு வாரம் முன்னாடி பக்காவா ஒரு பிளான் போட்டு குடுத்தேன். சும்மா ராஜ்பவன்ல இருந்து அண்ணா யூனிவர்சிட்டி வரை அவரு நடந்து போற மாதிரி, ரெண்டு சைடும் நம்ம ஆளுங்க நின்னு பூவாலேயே மோடியை குளிப்பாட்ற மாதிரி.
மாமா ஜி : செம பிளான் ஜி, இது மட்டும் ஒர்க்கவுட் ஆயிருந்தா உங்களுக்கு நிச்சயம் ராஜ்யசபா MP பதவி கிடைச்சிருக்குமே
ராஜா ஜி: உங்களுக்கும் அப்படி தானே ஜி தோணுச்சு, அப்போ எனக்கு தோணினது தப்பு இல்லையே ? இந்த பிளானை கேட்டு மோடியே ஆடி போய்ட்டாரு ஜி. உடனே கூப்பிட்டாரு
ஆமா ஜி : யாரை ஜி? ஜனாதிபதியையா?
ராஜா ஜி: இல்ல ஜி, டெய்லர கூப்பிட்டு உடனே 10 லட்சம் செலவுல கோட் தைக்க சொல்லிட்டாரு. கேமரா மேன கூப்பிட்டு, உடனே சென்னை போய் லொகேஷன் பாருனு டிக்கெட் போட்டு குடுத்துட்டாரு.
மாமா ஜி : இத்தனை பிளான் பண்ணி கடைசியா மூத்திர சந்து வழியா ஓடும் படி ஆயிடுச்சே ஜி
ராஜா ஜி : அப்படி ஓடியும் விட்டானுகளா? மூத்திர சந்துல வச்சும் கருப்பு கோடி காமிச்சுட்டாங்களே ஜி அத தான் தாங்கவே முடியலே
ஆமா ஜி : பாத்தோம் ஜி , வேதனையா இருந்துச்சு
மாமா ஜி : ஜி இந்த ட்விட்டர் மேட்டர்
ராஜா ஜி: அத ஏன் ஜி கேக்கறீங்க? இந்த கலவரத்தில் மதியம் தான் ட்விட்டர் பாத்தேன். விட்டா பிரச்னை ஆய்டும் அதனால TNWelcomesPM னு ட்ரெண்ட் பண்ணுங்க டபுள் பேமென்ட்னு சொன்னோம்
மாமா ஜி : அப்போ அது ட்ரெண்ட் ஆயிருக்கணுமே ஜி
ராஜா ஜி: நம்ம பண்ணின செலவுக்கு ஆகியிருக்கும், ஆனா இந்த முட்டா பசங்க ஒரு ட்வீட்டுலயே 20 தடவ TNWelcomesPMனு போட்டு பேமெண்ட் கேக்கறானுக. இவனுக கிறுக்குகளா இல்ல என்ன கிறுக்கன்னு நெனச்சுட்டு இப்படி பண்றானுகளானே தெரியல.
ஆமா ஜி : விடுங்க ஜி கொஞ்சம் விட்டு பிடிப்போம்
ராஜா ஜி: ஆனா மோடி வந்திட்டு போனதுல ஒரு நல்லதும் நடந்திருக்கு
மாமா ஜி : நல்லதா ? என்ன நல்லது ஜி
ராஜா ஜி: இதுக்கு முன்னாடி, மாசத்துக்கு ஒரு முறை டெல்லிக்கு வர சொல்லி, தமிழ்நாட்டில் என்ன தான் நடக்குது? ஒரு MLA சீட்டாவது தேறுமானு நலங்கு வச்சிட்டு இருந்தாங்க ஜி. இப்போ வந்துட்டு போனதுக்கு அப்பறம் தெரிஞ்சிருக்கும்ல, நாம எந்த கூட்டத்தை டீல் பண்றோமுனு. இனி கொஞ்ச நாளைக்கு கேக்க மாட்டாங்க
மாமா ஜி : அதுவும் நல்லதுக்கு தான் ஜி, சரி இதெல்லாம் முடிஞ்சு அவர் கூட்டத்துல பேசும் போது டென்ஷன் ஆகி கெட்ட வார்த்தை பேசிட்டாரமே ஜி?
ராஜா ஜி: நானும் முதல்ல அப்படி தான் நெனச்சு பதறிட்டேன். அப்பறம் தான் தெரிஞ்சுது அவரு திருக்குறள் சொல்லிருக்காருனு
ஆமா ஜி : திருக்குறளை தான் அப்படி சொன்னாரா ?
ராஜா ஜி : அட ஆமாம் ஜி. திருக்குறளை கடிச்சு, குதறி, துப்பிட்டாரு.
ஆமா ஜி : அப்புறம் என்ன பண்ணீங்க ?
ராஜா ஜி : அப்புறம் என்ன பண்றது ? வழக்கம் போல, மோடி ஜியின் தமிழறிவை புகழ்ந்து ட்வீட் போட்டேன்.
மாமா ஜி : சரி. உங்க ட்ரீட்மென்டெல்லாம் எப்படி ஜி இருக்கு ?
ராஜா ஜி : என்ன ட்ரீட்மென்ட் ? எதுக்கு ட்ரீட்மென்ட் ? ட்ரீட்மென்டே இல்லங்குறேன். நீ கள்ளத் தொடர்புல பொறந்தவன். அதான் இப்படிப் பேசற.
மாமா ஜி : என்ன ஆமா ஜி. இன்னும் சரியாகல போலருக்கே….
ஆமா ஜி : இதெல்லாம் சரியாவுற கேஸா ? என்ன ஜி நீங்க ? ஏர்வாடிதான் ஒரே வழி.
ராஜா ஜி : நோ. நெவர். நெவர் இன் மை லைப்.
ஆமா ஜி : என்ன ஜி ? என்ன ஆச்சு ?
ராஜா ஜி : ஏர்வாடி ஒரு முஸ்லீம் தர்கா. அங்கெயெல்லாம் ஒரு விராத் இந்து பைத்தியத்தை கட்டி வைக்கக் கூடாது. நான் ஒத்துக்க மாட்டேன்.
மாமா ஜி : கேகே நகர் அனுமார் கோவில்ல கட்டிடலாமா ஜி.
ராஜா ஜி : இந்து கோவில்னா ஓகே.
ஆமா ஜி : வேணாம் ஜி. அனுமார் கோவில் வேண்டாம்.
மாமா ஜி : ஏன் ஜி. என்ன பிரச்சினை ?
ஆமா ஜி : டக்குன்னு யாரு கொரங்குன்னு வித்தியாசம் தெரியாம போயிடும் ஜி.
மாமா ஜி : ஆமாம் ஜி. அந்த சிக்கல் ஒன்னு இருக்கு.
ஆமா ஜி : என்னதான் பைத்தியமா இருந்தாலும், ராஜா ஜி. நம்ப தலைவர் ஜி. நம்பளே போயி அவரை அனுமார் கோவில்ல கட்டி வைச்சிட்டோம்னா, வர்றவனெல்லாம் ஒரு வாழைப்பழத்தை குடுத்து டைவ் அடிக்க சொல்லுவான். ராஜா ஜி வேற வேட்டி கட்டியிருக்காரு. டைவ் அடிச்சா நல்லாவா இருக்கும் ?
மாமா ஜி: சரி ஜி கர்நாடகா தேர்தல் எப்படி போகுது? எஸ்.எம். கிருஷ்ணா தனக்கு உரிய மரியாதை தரலேன்னு கோவமா இருக்காராம் ?
ராஜா ஜி: மரியாதையா? அதெல்லாம் நம்ம கட்சியில் எதிர் பார்க்கலாமா ஜி சொல்லுங்க? நம்ம அத்வானியை பாருங்க, எவனாவது மதிக்கரானா. அத விடுங்க ஜி ட்விட்டரில் என்னால ஒரு பதிவு போட முடியுதா? என்ன ஜி நாடு இது ?
மாமா ஜி : ரொம்ப நாராசமா திட்டுறாங்க ஜி
ராஜா ஜி: அதான் சொல்றேன், குடும்பத்தையே கிழி கிழின்னு கிழிச்சுட்டு உங்க அட்மினை திட்டினோம்னு சொல்றானுங்க. அதுனால மரியாதை எல்லாம் இங்க ஒரு பயலுக்கும் கெடையாது.
மாமா ஜி : அப்போ கிருஷ்ணா ஜிக்கு என்ன தான் ஜி பிரச்சனை ?
ராஜா ஜி: அவர் பொண்ணுக்கு சீட் கேட்டாரு, இருங்க ஜி யோசிச்சு சொல்றோம்னு சொன்னதுக்கு கோவிச்சிட்டு அவர் காங்கிரஸில் சேரப்போறாருனு அவரே வதந்தியை கிளப்பி விட்டுட்டாரு ஜி
மாமா ஜி : இப்போ என்ன ஜி பண்றது ?
ராஜா ஜி : எதுக்கு ஜி இந்த அரசியில் எல்லாம், பேசாம உங்க பையனை அமித் ஜியோட பையனோட சேர்ந்து கம்பெனி ஆரம்பிங்க முதலீடே இல்லாம நல்லா சம்பாதிக்கலாம்னு சொன்னோம் , மனுஷன் கேக்க மாட்டேங்கறார்
ஆமா ஜி : மோடி ஜி அப்படி எல்லாம் பிடிவாதம் பிடிக்க மாட்டாரே ஜி , சீட் குடுத்துருவாரே
ராஜா ஜி : வேற யாருனாவது கேட்டா குடுத்திருவாரு, இந்த எஸ்.எம். கிருஷ்ணா, ஓபிஸ் இவங்களுக்கு ஒண்ணுனா செய்ய மாட்டாரு ஜி
மாமா ஜி : இது என்ன ஜி புது கதையா இருக்கு
ராஜா ஜி : நல்லா கூர்ந்து கவனிங்க ஜி, இவங்க மூணு பேருக்குள்ள ஒரு ஒற்றுமை இருக்கு
ஆமா ஜி : ஒன்னும் புரியலையே ஜி ?
ராஜா ஜி : மூணு பேருமே டீ கடை சம்பந்தப்பட்டவர்கள். இப்போ ஒரு உதாரணத்துக்கு “செருப்பு தைக்கும் குடும்பத்தில் பிறந்த ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதி ஆனார்” அப்படினு படிக்க எவ்வளவு கெத்தா இருக்கு. அதுக்கு அப்பறம் யாராவது அப்படி ஒருவர் ஜனாதிபதி ஆனாரா?
மாமா ஜி : இல்லையே ஜி
ராஜா ஜி : அதே போல தான் டீ விற்ற மோடி இன்னைக்கு இந்திய பிரதமர், நாளைக்கு வேற யாராவது வந்துட்டா அப்பறம் வரலாறு மாறி போகுமே அதான் மோடி ஜி விடாப்பிடியா இருந்தாரு. அப்பறம் கட்சி இருக்க லட்சணத்தை பாத்துட்டு, போய் தொலையுதுனு சீட் குடுக்கறதா சொல்லிருக்கார் பாப்போம்.
மாமா ஜி : ஜி அப்போ நம்ம கட்சியை வாரிசு அரசியல் கட்சினு சொல்லுவாங்களே ஜி
ராஜா ஜி : நீங்க முதல்ல அப்படி சொல்லாதீங்க ஜி, நாம என்ன இன்னைக்கு புதுசாவா தலைவர்களோடு பசங்களுக்கு சீட் குடுக்கறோம்? அப்படியே எவனாவது சொன்னாலும் ஆன்டி இண்டியனு சொல்லிட்டு போயிட்டே இருக்க வேண்டியது தான் ஜி.
ஆமா ஜி : ராஜா ஜி. உங்களோட கோவில்ல இன்னொருத்தரை சங்கிலி போட்டு கட்ட சொல்லியிருக்காங்க ஜி.
ராஜா ஜி : எனக்கு போட்டியா இன்னொருத்தரா ? சான்ஸே இல்லையே. என்னை மாதிரி ஒரு அரை மென்ட்டலை எங்க தேடுனாலும் பாக்கவே முடியாதே.
ஆமா ஜி : இருக்காரு ஜி. காமெடின்னு சொல்லிக்கிட்டு திரியுவாரே நம்ப எஸ்வி சேகர் ஜி. அவரைத்தான் கோவில்ல சங்கிலியில கட்டிப் போடணும்னு நம்ப ஆளுங்க சொல்றாங்க.
ராஜா ஜி : அட நீங்க வேற. அவரை எனக்கு முன்னாடியே கட்டிப் போட்ருக்கணும். ஆக்ச்சுவல்லி அவரை, மைலாப்பூர் கோவில் குளத்துக்கிட்ட இருக்குற மரத்துலதான் கட்டிப் போட்ருந்தாங்க. எப்படியோ சங்கிலியை அறுத்துக்கிட்டு ஓடி வந்துட்டாரு. இப்போ என்ன பண்ணாரு ?
மாமா ஜி : பெண் பத்திரிக்கையாளர்களை நீங்க பேசற மாதிரியே பேசிட்டாரு ஜி. ரொம்ப மோசமா பேஸ் புக்குல எழுதியிருக்காரு. மானாங்காணியா கழுவி ஊத்தறாங்க.
ராஜா ஜி : இது என்ன அநியாயமா இருக்கே ? இதுக்கெல்லாம் கோவப்பட்டா எப்படி ? பிஜேபியில இருந்தா, சாணியடி, செருப்படி இதெல்லாம் வாங்கறது டெய்லி ஹேபிட்தானே. இதுக்கு போயி ஏன் அவரு வருத்தப்படுறாரு ?
ஆமா ஜி : அவரும் உங்களை மாதிரியே போஸ்டை தூக்கிட்டாரு ஜி.
ராஜா ஜி : அட்மின் போட்டதா சொன்னாரா ?
மாமா ஜி : இல்ல. இவரு இன்னொருத்தர் போட்டதை ஷேர் பண்ணேன். அது என் தப்பு இல்லன்னு சொல்லிட்டாரு.
ராஜா ஜி : அதானே பாத்தேன். செஞ்ச தப்பை ஒத்துக்கிறது நம்ப கட்சி வழக்கத்துலயே இல்லையே. அதானே ஒலக நடைமுறை.
ஆமா ஜி : ஆனா அவரையும் வளைச்சு கும்முறாங்க ஜி. நாளைக்கு அவரை கண்டிச்சு ஆர்ப்பாட்டமெல்லாம் வைச்சிருக்காங்க ஜி.
ராஜா ஜி : அவரை கண்டிச்சா. பண்ண வேண்டியதுதான்.
மாமா ஜி : அவரை மட்டுமில்ல. உங்க ரெண்டு பேரையும் சேத்துதான்.
ராஜா ஜி : ஒரு நிமிசம் டக்குன்னு பயந்துட்டேன். இந்த மாதிரி பொம்பளைங்களை கேவல கேவலமா பேசுனாத்தான் மோடி ஜி கட்சியில போஸ்டிங்கே குடுப்பாரு. அந்த சேகர் பய மட்டும் போஸ்டிங் வாங்கிடுவானோன்னு பயந்துட்டேன்.
ஆமா ஜி : என்ன ஜி. கவர்னரை மாத்தப் போறாங்களா ?
மாமா ஜி : ஏன். அவரை எதுக்கு மாத்தணும் ? என்ன தப்பு பண்ணாரு ?
ஆமா ஜி : இல்ல ஜி. கல்லூரி மாணவிகளை அவரு நிர்மலா தேவின்னு ஒரு லெக்சரரை வைச்சு தப்பான வேலைக்கு கூப்புட்டதாவும், அது வெளியில வந்துடுமோன்னு இவரே விசாரணைக்கு உத்தரவிட்டதாவும் ஒரு பேச்சு இருக்கு.
ராஜா ஜி : இதுல என்ன தப்பு ? இதுல என்ன தப்புண்றேன். நியாயப்படி பாத்தா, அவரு நம்ப கட்சி விதிகளின்படி நடக்கலைன்னு அவர் மேல நடவடிக்கை எடுக்கணும்.
ஆமா ஜி : அது என்ன ஜி கட்சி விதிகள்.
ராஜா ஜி : இங்க பாருங்கோ. நம்ப கட்சி டிசிப்ளினான கட்சி. கட்சியில சேரணும்னா, ப்ளு பிலிம் டெய்லி பாக்கணும். யாரையாவது ரேப் பண்ணணும். அப்படி ரேப் பண்ணி யாராவது மாட்டிக்கிட்டா, அவங்களை காப்பாத்த ஊர்வலம் போகணும். அதையும் மீறி போலீஸ் நடவடிக்கை எடுத்தா அந்த அதிகாரிக்கு எதிரா போராட்டம் பண்ணணும். இதுதான் நம்ப கட்சி விதி. இந்த மாதிரியெல்லாம் பண்ணாம, பன்வாரிலால், லெக்சரரை வைச்சு கூப்புட்டதே தப்பு. நம்ப உரிமையை நாமளே எடுத்துக்கணும் ஜி. நீங்க என்ன சொல்றீங்க மாமா ஜி ?
மாமா ஜி : நான் என்ன சொல்றது. இதோ கவர்னரே வர்றாரே. அவர்கிட்டயே கேளுங்கோ.
அன்னத்தை தொட்ட கைகளினால், அவள் கன்னத்தை இனி நான் தொட மாட்டேன் என்று பாடியவாறே வந்தார் பன்வாரிலால்.
பன்வாரிலால் : இங்க பாத்ரூம் எங்க இருக்கு ?
மாமா ஜி : அங்க பொம்பளைங்க யாரும் குளிக்கலையே ஜி.
பன்வாரிலால் : அப்போ எனக்கு அங்க வேலை இல்ல. என்ன சமாச்சாரம். குஷியா இருக்கீங்க. பாத்ரூமை பத்தி திருவள்ளுவர் என்ன சொல்லிருக்கார்னா….
ஆமா ஜி : உங்க தமிழறிவுல தீயை வைக்க. எதுக்கு அந்த பத்திரிக்கையாளர் கன்னத்தை தட்டிக் கொடுத்தீங்க ?
பன்வாரிலால் : வாட் நான்சென்ஸ். அட்ராஷியஸ்.
ஆமா ஜி : ஜி கன்னத்தை தட்டுனீங்களா இல்லையா ?
பன்வாரிலால் : எனக்கு கொள்ளுப் பேத்தி இருக்கு ?
ஆமா ஜி : அதற்கு இது பதிலல்லவே… ?
பன்வாரிலால் : கேள்வி கேட்டாங்க. அதை பாராட்டுனேன்.
மாமா ஜி : கேள்வி கேட்டா பதில் தானே ஜி சொல்லணும்.
பன்வாரிலால் : நான்தான் தட்டிக் கொடுத்தேனே. அதுவே பதில்தானே ?
ஆமா ஜி : யோவ் எருமை. அந்த பொண்ணு செய்யல. இப்போ நான் செருப்பால அடிப்பேன். எதுக்கு தட்டிக் கொடுத்தன்னு கேட்டா….
பன்வாரிலால் : இட்ஸ் ய ஹேபிட் மேன். தட்டிக் கொடுக்கறது, தடவிக் கொடுக்கறது என் பழக்கம். இது பத்தி திருவள்ளுவர் என்ன சொல்லிருக்காருன்னு யோசிக்சு சொல்றேன். எனக்கு இப்படித்தான் அப்ரிஷியேட் பண்ணத் தெரியும். எனக்கு கொள்ளுப் பேத்தி இருக்கு மேன்.
ஆமா ஜி : இந்த ஆளு அடி வாங்காம தமிழ்நாட்டை விட்டுப் போக மாட்டான் மாமா ஜி.
மாமா ஜி : என்ன ஆமா ஜி நீங்க. ஒரு ஆளுனர் என்றும் பாராமல்.
ஆமா ஜி : அய்யோ சாரி ஜி. அதை நான் பேசல. என் அட்மின் பேசனாரு.
ராஜா ஜி : என்ன ஆமா ஜி நீங்க. உளர்றீங்க. இப்போ நீங்க பேசுனதை நாங்க பாத்தோமே.
ஆமா ஜி : நீங்கதான் ட்வீட் போட்றீங்கன்னு ஊருக்கே தெரியும். ஆனா நீங்க கூசாம என் அட்மின் போட்டதுன்னு சொன்னீங்களா இல்லையா. யாரு உங்க அட்மின் ஆளை காட்டுங்க.
ராஜா ஜி : அது வந்து. அவரு. அட்மின்னு… இந்து கோவில்களை பாதுகாக்கணும். திராவிடக் கட்சிகளை ஒழிக்கணும்.
ஆமா ஜி : மாமா ஜி. எப்படி டைவர்ட் பண்றான் பாத்தீங்கா ஜி.
மாமா ஜி : அட விடுப்பா. எப்போ சிக்கல் வந்தாலும், எதையாவது சொல்லி டைவர்ட் பண்ணி, விஷயத்தை அப்படியே ஊத்தி மூடணும்னு நம்ப மோடி ஜியே சொல்லியிருக்காரு.
ஆமா ஜி : மோடி சொல்லிட்டாருன்னா சரிதான் ஜி. பன்வாரிலால் ஜி. உங்க செக்ரட்டரி ராஜகோபால் அந்த நிர்மலாதேவி கூட, ரொம்ப நெருக்கமாமே. அவரு விருதுநகர் கலெக்டரா இருந்தப்பவே நிர்மலா கூட பழக்கமாமே. அந்த பழக்கத்தை வைச்சுத்தான், வெறும் ஐஏஎஸ் அதிகாரியா இருந்தா சம்பாதிக்க முடியாது. கூடவே மாமா வேலையும் சேத்து பாப்போம்னு ஆரம்பிச்சதா ஒரு பேச்சு இருக்கே…. உண்மையா ஜி ?
பன்வாரிலால் : வாட் நான்சென்ஸ். எனக்கு கொள்ளுப் பேத்தி இருக்கு.
ஆமா ஜி : ஏன் ஜி பதட்டமா ஆகறீங்க. நான் அதை கேக்கல. உங்களின் ஆண்மை பத்தி நல்லாவே தெரியுது. நான் கேட்டது உங்க செக்ரட்டரி ராஜகோபாலும்…
பன்வாரிலால் : எனக்கு 78 வயசு ஆகுது. கொள்ளுப் பேத்தி இருக்கு.
ஆமா ஜி : மாமா ஜி. இவனுங்களை கூட்டிட்டுப் போயிடுங்க. நானே அடிச்சிடுவேன். மீதியை அடுத்த வாரம் பேசிக்குவோம்.
I support Shankar
Superb
என்னஜி .. ஏர்வாடி — அனுமார்கோயில் என்று கூறுகிறீர்களே தவிர முக்கியமா நம்ம ” குணசீலம் ” கோயிலை புறக்கணிக்கலாமா ஜி — அதுதான் சரியான இடம் …!
Mr. Sankar still millions of people believing Anchaneya as god… we can understand your intention . But please don’t write about the god’s in hurting manner…
Super Thozhar. next time u hav to involve modi ji also ….
We are expecting detail article on Nirmala devi women trafficking on Savukku soon!!!
சங்கர் ஜி !! படிக்கும் போதே சிரிப்பதை அடக்க முடியவில்லை, நீங்க எப்பிடி ஜி எழுதினீங்க….
Hilarious !!!
மாமா ஜி : கேகே நகர் அனுமார் கோவில்ல கட்டிடலாமா ஜி.
ராஜா ஜி : இந்து கோவில்னா ஓகே.
ஆமா ஜி : வேணாம் ஜி. அனுமார் கோவில் வேண்டாம்.
மாமா ஜி : ஏன் ஜி. என்ன பிரச்சினை ?
ஆமா ஜி : டக்குன்னு யாரு கொரங்குன்னு வித்தியாசம் தெரியாம போயிடும் #super timing