ஆகஸ்ட் 2017ல், உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் அரசு மருத்துவமனையில், 290 பச்சிளம் குழந்தைகள் இறந்தன. இணைப்பு கட்டுப்படுத்த முடியாத ஒரு தொற்றுநோயின் காரணமாக இக்குழந்தைகள் இறந்திருந்தால், நாம் மிக எளிதாக கடவுளை திட்டி விட்டு கடந்திருக்கலாம். ஆனால் அந்தக் குழந்தைகள் இறந்தது, ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாத காரணத்தால்.
எல்லா துர்நிகழ்வுகளிலும், கடவுளர்களின் கற்பனை அவதாரங்களைப் போல, சில மனிதர்கள், கடவுள் செய்ய வேண்டும் என்று நாம் விரும்புவதை நம் கண் முன்னே நிகழ்த்துவார்கள். அவர்கள் மனிதர்கள் என்பதை, நாம் வசதியாக மறந்து விட்டு, இது கடவுள் அனுப்பிய அவதாரமே என்று நாமே இல்லாத கடவுளுக்கு முட்டுக் கொடுப்போம்.
அப்படி கடவுளின் அவதாரமாக இருந்தவர்தான் டாக்டர் கஃபீல் கான். ஆகஸ்ட் 10 அன்று இரவு, ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை, வெறும் 2 மணி நேரம்தான் தாக்கு பிடிக்கும் என்பதை உணர்ந்த கஃபீல் கான், தன் காரை எடுத்துக் கொண்டு, இரவு முழுவதும் தனியார் மருத்துவமனைகளை அணுகி, ஆக்சிஜன் சிலிண்டர்களை சேகரித்தார். இரவல் கொடுத்தவர்களிடம் வாங்கிக் கொண்டார். 10,000 வேண்டும் என்று கேட்ட ஒரு மருத்துவமனையில், தன் டெபிட் கார்டிலிருந்து 10 ஆயிரம் ரூபாயை செலவழித்து, அன்று இரவு 12 சிலிண்டர்களை கோரக்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தார். இணைப்பு
மதவெறியைத் தூண்டி, அதன் மூலம் உருவாகும் கலவரத்தில் குளிர்காயும் ஒரு கொடுங்கோலன்தான் காவிப் போர்வையில் வலம் வரும் யோகி ஆதித்யநாத். இத்தகைய காவி ரவுடிகளுக்கு, மனிதம், உயிர் போன்றவற்றின் மதிப்பு ஒரு நாளும் தெரியாது, இனியும் தெரியப்போவதில்லை. எரியும் பிணத்தை உண்ணும் அகோரிளைப் போன்றவரே யோகி ஆதித்யநாத்.
பச்சிளம் குழந்தைகளின் மரணம் குறித்து நாடெங்கும் எழுந்த விமர்சனங்களில் இருந்து தப்பிக்க, யோகி ஆதித்யநாத் எடுத்த நடவடிக்கை, அந்த மருததுவமனையில், பணியாற்றிய டாக்டர் கஃபீல் கான், மற்றும் மேலும் சில மருத்துவர்களை கைது செய்ததே. அதோடு நிற்காமல், அந்த மருத்துவமனையின் 4 க்ளர்குகளையும் கைது செய்தார். அதாவது 290 குழந்தைகளின் மரணத்துக்கு இவர்கள்தான் காரணமாம். கஃபீல் கான் மட்டுமே சிறையிலிருந்து 8 மாதங்கள் கழித்து வெளியே வந்திருக்கிறார். அவரோடு கைது செய்யப்பட்டவர்கள் இன்னும் சிறையில்தான் இருக்கிறார்கள்.
ஜாமீன் கிடைக்காத சிறை வாசத்தில் எட்டு மாதங்கள் கடந்து விட்டன… நான் உண்மையாகவே குற்றவாளியா…?”
சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தாங்கமுடியாத சித்திரவதைகளுக்கும் அவமானங்களுக்கும் பிறகும் கூட ஒவ்வொரு நிமிடமும் கடந்து போன ஒவ்வொரு காட்சியையும் கண் முன்னே நடப்பது போலவே நினைத்துப் பார்க்கிறேன்…!
சிலநேரங்களில் நான் எனக்குள்ளேயே கேள்விகளைக் கேட்டுகொள்கிறேன்… “நான் உண்மையிலேயே குற்றவாளி தானா..? இந்த கேள்வி எனக்குள் எழும்போதெல்லாம் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து அதன் பதில் உயர்ந்து வரும்…”இல்லை” என்று…
2017 ஆகஸ்ட் 10-ம் தேதியின் அந்த துன்பம் நிறைந்த இரவில் எனக்கு ஒரு வாட்சப் தகவல் கிடைத்த அந்த நிமிடத்தில், நான் என்னால் முடிந்ததை, ஒரு மருத்துவர், ஒரு தந்தை, ஒரு பொறுப்புள்ள இந்தியக்குடிமகன் என்ற முறையில் செய்வதை எல்லாம் செய்தேன்…!
திரவ நிலையிலுள்ள ஆக்சிஜன் (Liquid Oxygen) திடீரென்று நிறுத்தப்பட்டதால் அபாயத்திற்குள்ளான ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதற்கு என்னால் முடிந்ததெல்லாம் நான் செய்தேன்…ஆக்சிஜன் இல்லாததால் இறந்து கொண்டிருந்த அந்த குழந்தைகளைக் காப்பாற்ற என்னால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு முயற்சிகள் செய்தேன். நான் பைத்தியக்காரனைப் போல் எல்லோரையும் அழைத்தேன், நான் கெஞ்சினேன், நான் பலருடனும் பேசினேன், ஓடினேன், வண்டியை ஓட்டினேன், உத்தரவிட்டேன், அலறினேன், வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டேன், ஆறுதல் சொன்னேன், அறிவுரை கூறினேன், பணம் செலவழித்தேன், கடன் வாங்கினேன், அழுதேன்…ஒரு மனிதனால் செய்ய முடிந்தது அனைத்தையும் செய்தேன்…
நான் எனது துறைத்தலைவரையும் என் சக ஊழியர்களையும் BRD மருத்துவக்கல்லூரி முதல்வரையும், பொறுப்பு முதல்வரையும், கோரக்பூர் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டையும், கோரக்பூர் சுகாதார கூடுதல் இயக்குனரையும் கோரக்பூர் CMS/SIC யையும், CMS/SIC BRD-யையும் அழைத்து, திடீரென்று ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட பயங்கர நிலையைக் குறித்து தெரிவித்தேன். (என்னிடம் இந்த அழைப்புகள் பற்றிய ஆதாரங்கள் உள்ளன)
நான், வாயு கொடுக்கும் நிறுவனங்களான மோடி கேஸ், பாலாஜி கேஸ், இம்பீரியல் கேஸ், மயூர் கேஸ் ஏஜன்சி ஆகியவற்றையும் BRD மருத்துவக்கல்லூரியின் அருகிலுள்ள மருத்துவமனைகளையும் அழைத்து, அவர்களிடம் நூற்றுக்கணக்கான பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற வாயு சிலிண்டர்களுக்காக மன்றாடினேன்.
நான் அவர்களுக்கு கொஞ்சம் பணம் முன்தொகையாக கொடுத்தேன். மீதிப்பணம் சிலிண்டர் தரும் பொழுது தருவேன் என்று உறுதி கூறினேன். (நாங்கள் திரவ ஆக்சிஜன் கொள்கலன் வரும் வரையில் 250 ஜம்போ சிலிண்டர்களை ஏற்பாடு செய்திருந்தோம். ஒரு ஜம்போ சிலிண்டரின் விலை 216 ரூபாய் ஆகும்)
நான் ஒரு கியுபிகிலிருந்து அடுத்ததற்கு, 10 வது வார்டிலிருந்து 12-வது வார்டுக்கும், ஒரு வாயு பகிர்மான முனையிலிருந்து அடுத்த முனைக்கும் வாயு வருகிறதா என்பதை உறுதி செய்வதற்காக நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தேன்.
வாயு சிலிண்டர்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு நானே காரை ஒட்டிக்கொண்டு சென்றேன். அதுவும் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு இல்லை என்றான போது அருகிலுள்ள ஆயுதம் தாங்கிய எல்லைக்காவல் படையினரிடம் சென்றேன். அப்படையின் DIG-யை சந்தித்து நிலைமையின் அபாயத்தை விளக்கினேன். அவர்கள், எனது வேண்டுகோளை ஏற்று நேர்மறையான உடனடி நடவடிக்கை மூலம் எனக்கு உதவினார்கள். அவர்கள் ஒரு பெரிய கனரக வாகனமும் ஒரு இராணுவ வீர்களின் படையையும் எனக்கு உதவுவதற்காக அனுப்பினார்கள். இராணுவ வீரர்கள் கேஸ் ஏஜன்சிகளிலிருந்து BRD-க்கு வாயு சிலிண்டர்களை கொண்டுவந்து சேர்ப்பதற்கும் காலி சிலிண்டர்களை திருப்பித் தரவும் ஓடிக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் தொடர்ந்து 48 மணிநேரங்கள் எங்களுடன் இருந்தார்கள். அவர்களின் மனதைரியம் எங்களுடைய மனதைரியத்தை அதிகரித்தது. நான் அவர்களுக்கு சல்யூட் செய்கிறேன். அவர்களின் உதவிக்கு என்றென்றும் நன்றி உடையவனாகயிருப்பேன்.
ஜெய் ஹிந்த்!
என்னைவிட மூத்த மற்றும் இளைய மருத்துவர்களிடம் பேசினேன்…என்னுடன் பணிபுரியும் செவிலியர்களுடன் பேசினேன். “யாரும் குழப்பமோ பதற்றமோ அடையாதீர்கள்…நிலைகுலைந்து போயிருக்கும் தாய் தந்தையரிடம் கோபப்படாதீர்கள்…யாரும் ஓய்வெடுக்காதீர்கள்…நாம் ஒன்றுபட்டு ஒரே குழுவாக வேலை செய்தால்தான் எல்லோருக்கும் சிகிச்சையளிக்கவும் எல்லா உயிரையும் பாதுகாக்கவும் இயலும்…” என்று கூறினேன்.
நான் குழந்தைகளை இழந்த கண்ணீருடன் நின்ற தாய்தந்தையாருக்கு ஆறுதல் கூறினேன்…குழந்தைகளை இழந்த, துக்கத்தில் ஆத்திரப்பட்டு, கோபத்துடன் இருந்த தாய்தந்தையருக்கு ஆறுதல் கூற முயன்றேன்…அப்பகுதி எங்கும் மனக்குழப்பம் நிறைந்து காணப்பட்டது…அவர்களிடம் திரவ ஆக்சிஜன் தீர்ந்து விட்டதாகவும் அதற்குப் பதிலாக ஆக்சிஜன் சிலிண்டர்களை பயன்படுத்த முயற்சி செய்வதாகவும் விளக்கினேன்…!
நான் அனைவரிடமும் உயிர்காக்கும் முயற்சிகளில் கவனம் கொள்ளும்படி கேட்டுக்கொண்டேன்…நான் அழுதேன்…என்னுடைய குழுவில் உள்ள அனைவரும் அழுது கொண்டிருந்தார்கள்…குறிப்பிட்ட காலத்தில் வாயு வாங்கியதற்காக பாக்கிப் பணத்தை பட்டுவாடா செய்யாத ஆட்சியாளர்களின் தோல்வியைக் கண்டு…அதனால் ஏற்பட்ட மீளத்துயரதைக் கண்டு…அழுதோம்…!
13-08-2017 அதிகாலை 1:30 க்கு திரவ ஆக்சிஜன் கொள்கலன் வந்துசேருவது வரை நாங்கள் எங்கள் பணிகளை நிறுத்தவேயில்லை..!
ஆனால்… அன்றைய தினம் விடிந்த பிறகு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மகாராஜ் மருத்தவமனைக்கு வந்த பிறகு தான் எனது வாழ்க்கை தலைகீழாக மாறியது…!
அவர் என்னிடம் கேட்டார், ”அப்ப…நீங்க தான் டாக்டர். கஃபீல் இல்லையா…? நீங்கள் தானே வாயு சிலிண்டர்கள் ஏற்பாடு செய்தவர்?”
“ஆமாம் சார்” நான் பதில் சொன்னேன்.
அவர் கோபத்துடன், “அப்படி என்றால், வாயு சிலிண்டர்கள் ஏற்பாடு செய்ததால் நீங்கள் ஒரு ஹீரோ ஆகிவிட்டீர்கள் என்று நினைக்கிறீர்கள் அப்படித்தானே…? நாம் பார்க்கலாம்..”
யோகிஜி கோபப்படுவதற்கு காரணமிருக்கிறது…இந்த செய்தி ஊடகங்களில் வந்துவிட்டது என்பது தான் அந்த காரணம்…நான் அல்லாவின் மேல் ஆணையிட்டு சொல்கிறேன்…நான் அன்றைய தினம் இரவு எந்த ஊடகவியலாளருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. ஊடகவியலாளர்கள் ஏற்கனவே அன்றைய தினம் இரவில் அங்கிருந்தார்கள்..
போலீசார் எனது வீட்டிற்கு வந்தார்கள்…எங்களை வேட்டையாடினார்கள், மிரட்டினார்கள், எனது குடும்பத்தாரை கொடுமைப்படுத்தினார்கள். என்னை ஒரு மோதலின் மூலமாக கொலை செய்துவிடுவதாக எச்சரித்துக் கூறினார்கள்… எனது குடும்பத்தில் அம்மாவும், மனைவியும் குழந்தைகளும் அச்சத்திலாழ்ந்தார்கள்… அவர்களுக்கு ஆறுதல் சொல்ல என் வாயில் வார்த்தைகள் ஏதும் வரவில்லை…
எனது குடும்பத்தை அவமானத்திலிருந்து காப்பாற்ற நான் போலீசில் சரணடைந்தேன்…அப்போதும் நான் தவறேதும் செய்யவில்லை என்றும் அதனால் எனக்கு நீதி கிடைக்கும் என்றும் உறுதியாக நம்பினேன்…!
ஆனால் நாட்கள் கடந்து போய்க்கொண்டிருந்தன…ஆகஸ்ட் 2017 முதல் ஏப்ரல் 2018 வரை….ஹோலி வந்தது, தசரா வந்தது, கிறிஸ்துமஸ் போனது, புத்தாண்டு வந்தது, தீபாவளி வந்தது…ஒவ்வொரு நாளும் ஜாமீன் கிடைக்குமென்ற எதிர்பார்ப்பில் கடந்தது…அப்போது தான் நீதி, சட்ட முறைகளும் கூட அவர்களின் கடும் அழுத்தத்தில் இருக்கிறதென்று எங்களுக்குப் புரிந்தது… (அவர்களும் அவ்வாறு தான் சொன்னார்கள்)
நான் இப்போது…150-க்கு அதிகமான சிறைக்கைதிகளுடன் ஒரு குறுகலான அறையின் கட்டாந்தரையில் தான் தூங்குகிறேன்…இரவில் இலட்சக்கணக்கான கொசுக்களுக்கும் பகலில் ஆயிரக்கணக்கான ஈக்களுக்கும் நடுவில் வாழ்வதற்காக, உணவு உட்கொண்டு, அரைநிர்வாணமாக குளித்து, உடைந்து நொறுங்கிய கதவுகளைக் கொண்ட கழிப்பறைகளைப் பயன்படுத்திக்கொண்டு…எல்லா ஞாயிற்றுக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் வியாழக்கிழமையும் எனது குடும்பத்தாரை எதிர்பார்த்தவாறே சிறையில் காத்துக் கிடக்கிறேன்…
எனக்கு மட்டுமல்ல எனது குடுமபத்திற்கும் வாழ்க்கை நரகமாகவே கழிகிறது…ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அவர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்…காவல் நிலையத்திலிருந்து நீதிமன்றத்திற்கு கோரக்பூரிலிருந்து அலகாபாத்திற்கு…நீதி கிடைப்பதற்காக…ஆனால் அனைத்துமே வீண் முயற்சிகளாகின…
எனது குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட என்னால் முடியவில்லை…அவளுக்கு இப்போது ஒரு வயதும் ஏழு மாதங்களும் ஆகின்றன…குழந்தைகள் மருத்துவர் என்ற முறையில் எனது குழந்தை வருவதைப் பார்க்க முடியாதது மிகவும் வேதனையானது என்பதோடு ஏமாற்றமளிப்பதுமாகும். ஒரு குழந்தை மருத்துவர் என்ற முறையில், குழந்தைகளின் வளர்ச்சிக் காலகட்டங்களின் முக்கியத்துவத்தைப்பற்றி நான் தாய்தந்தையருக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறேன். ஆனால் எனது குழந்தை நடக்கத் துவங்கிவிட்டதா, பேசுகிறதா, ஓடுகிறதா என்பது ஏதும் எனக்குத் தெரியாது…
மீண்டும் ஒரு கேள்வி என்னை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது…நான் உண்மையில் குற்றவாளிதானா…? இல்லை…இல்லவேயில்லை…!
2017 ஆகஸ்ட் 10 –ம் தேதி நான் விடுப்பிலிருந்தேன் (என்னுடைய துறைத்தலைவர் அனுமதியுடன்). என்றபோதும் எனது கடமையை உணர்ந்து ஓடோடிச் சென்றேன். அதுவா நான் செய்த தவறு?
அவர்கள் என்னை துறைத்தலைவராகவும், BRD-யின் துணைவேந்தராகவும் 100 படுக்கைகளைக் கொண்ட அக்யுட் என்கேபலைட்டிஸ் சின்ட்ரோம் வார்டின் பொறுப்பாளராகவும் மாற்றிக்கொண்டார்கள்…நான் அங்கே பணி அடிப்படையில் இளைய மருத்துவர்களில் ஒருவராவேன். 08-08-2016 அன்று தான் எனது பணிநிரந்தர ஆணையைப் பெற்றேன். அங்குள்ள NRHM- பொறுப்பு அதிகாரியும் குழந்தை மருத்துவத்துறையின் விரிவுரையாளருமாவேன்…எனது வேலை மாணவர்களுக்கு பாடம் நடத்துவதும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதுமாகும். திரவ ஆக்சிஜன் கொள்கலன், ஆக்சிஜன் சிலிண்டர் போன்றவை வாங்குவதற்கோ டெண்டர் கொடுப்பதற்கோ, பராமரிப்புப்பணி செய்வதிலோ, பணம் பட்டுவாடா செய்வதிலோ நான் எந்த பணியிலும் ஈடுபட வேண்டியதில்லை.
ஆக்சிஜன் கொடுத்து வந்த புஷ்பா சேல்ஸ் என்னும் நிறுவனம் வாயு கொடுப்பதை நிறுத்தியதற்கு நான் எவ்வாறு பொறுப்பாளியாவேன். மருத்துவத்துறை பற்றி தெரியாதவர்களுக்குக் கூட டாக்டர்கள் சிகிச்சையளிப்பவர்கள் என்றும், ஆக்சிஜன் வாங்கும் பணி செய்பவர்கள் அல்ல என்பதும் தெரியும்.
புஷ்பா சேல்ஸ் நிறுவனத்திற்கு தரவேண்டிய 68 லட்சம் ரூபாய் பாக்கியை பட்டுவாடா செய்யக்கேட்டு அந்நிறுவனம் அனுப்பிய 14 நினைவூட்டல் கடிதங்களுக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த DM, மருத்துவக்கல்வி இயக்குனர், மருத்துவக் கல்வித் துறையின் முதன்மை செயலாளர் ஆகியவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள்.
உயர்மட்ட அளவில் ஆட்சியாளர்களின் முற்றிலுமான தோல்விதான் அது…. அவர்களுக்கு பிரச்சனையின் ஆழம் புரியவில்லை. அவர்கள் எங்களை பலியாடுகளாக்கினார்கள். கோரக்பூரின் சிறைக்கொட்டடியில் உண்மையை பிணைத்து போட முயல்கிறார்கள்..!
புஷ்பா சேல்ஸ் இயக்குனர் மனீஷ் பண்டாரிக்கு ஜாமீன் கிடைத்தபோது. எனக்கும் நீதி கிடைக்குமென்றும் எனது வீட்டருடன் வாழவும் மருத்துவ சேவை செய்யவும் இயலும் என்று நாங்கள் நம்பினோம்.
ஆனால், நம்பிக்கையை இன்னும் இழந்துவிடவில்லை…நாங்கள் இப்போதும் காத்திருக்கிறோம்…
எனக்கு, ஜாமீன் பெறும் உரிமையை தருவதோடு சிறையை தண்டனையைத் தவிர்க்கவேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் கூறுகிறது…எனது வழக்கு நீதிமறுப்பிற்கான சிறந்த உதாரணம் ஆகும்.
நான் விடுதலைபெற்று எனது குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் இருக்கும் காலம் வருமென்று நம்புகிறேன். உண்மை நிச்சயம் வெல்லும்..நீதி கிடைக்கும்…!
நிராதரவாக நிற்கும், இதயம் நொறுங்கிய தந்தை, கணவன், சகோதரன், மகன், நண்பன்.
டாக்டர். கஃபீல் கான்.
18-04-2018
will never vote for bjp in my life and above all imagine the quality of judges we have in this country who have kept this doctor for 8 months in prison without bail….
will never for bjp in my life and above all imagine the quality of judges we have in this country who have kept this doctor for 8 months in prison without bail….
நல்லத்துக்கே இந்த உலகத்துல இடம் இல்லை…😢இவருக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும்….
Having 10s of muslim friends and collegues, and having been to Pakistan dozen times in my business trips, I can say, if a muslim swears on the name of Allah or Holy Qaran, that’s it!! no more arguements!!! நான் அல்லாவின் மேல் ஆணையிட்டு சொல்கிறேன்…நான் அன்றைய தினம் இரவு எந்த ஊடகவியலாளருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. ஊடகவியலாளர்கள் ஏற்கனவே அன்றைய தினம் இரவில் அங்கிருந்தார்கள்..
யோகி ஒரு சரியான காட்டு மிராண்டி.. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாமாண்டின்குதே..
படிக்கும் போது கண்களில் கண்ணிர் வருவதை தடுக்க முடியவில்லை எல்லாவற்றிருக்கும் காரணமnள அந்த குரங்கு யோகி நாசமாய் போகட்டும்.
வக்கீல்களும், நீதிபதிகளும் ஒரே கூட்டத்தினராய் இருப்பது. அதாவது, வக்கீலே நீதிபதியாவதும், நீதிபதி வக்கீலாவதுமான முறை இருப்பது முதல் குற்றமாகும்.வேறுபல நீதிபதிகளின் தீர்ப்புரைகளை மேற்கோள் காட்டி தீர்ப்புரைப்பது இரண்டாவது குற்றம். நியாய உலகம் சீர்பட வேண்டுமானால், அதில் ஒழுக்கத்திற்கும்,நியாயத்திற்கும் சிறிதாவது இடமிருக்க வேண்டுமானால், முக்கியமாக இவ்விரண்டு முறைகளையும் ஒழித்து விட வேண்டும்.
மேலும், வக்கீல்கள் ஏராளமாக உற்பத்தி செய்யப்படுவதையும், கணக்கு வழக்கில்லாமல் வக்கீல்களை தொழில் நடத்த அனுமதி கொடுப்பதையும், நிறுத்திடவேண்டும். வக்கீல்கள் பெருகுவது, இந்த நாட்டின் நியாயத்தையும், ஒழுக்கத்தையும், சாந்தியையும் (அமைதியையும்) கெடுப்பதற்கு ஏற்பட்ட விஷக் கிருமிகளைவளர்ப்பதற்கே ஒப்பாகும்.
ஆதாரம்: 10-05-1931 தேதியிட்ட குடியரசுவார இதழின் தலையங்கத்தில் இருந்து..ஶ்
OBSOLUTELY TRUE.
அரசு ஊழியர்கள், வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள்குறித்து தந்தைப் பெரியார்…
வக்கீல் தொழிலும், அரசு ஊழியமும் ஆங்கிலேய ஆட்சியின் பயனாய், இந்திய மக்களுக்கு ஏற்பட்டுள்ள இரண்டு துன்பங்கள்.இவ்விரண்டும் இந்த நாட்டில் பிரபுத் தன்மையை காப்பாற்ற இருக்கிறதே தவிர, நியாயத்தைச் செய்யவோ, ஏழைகளைக் காப்பாற்றவோ இல்லவேயில்லை.
நாட்டில் இவ்வளவு ஒழுக்கக்குறைவும், நாணயக்குறைவும், தரித்திரமும், மக்களுக்குக் கஷ்டமும், அலைச்சலும், எதிரெதிரான ஏழைத்தன்மையும், பணக்காரத்தன்மையும் இருப்பதற்கு காரணமும் இவ்விரு தொழில்களே. ஏழைகளையும், மத்தியத்தர மக்களையும் தலையெடுக்க விடாமல் செய்து வருவது, இவ்விருதொழில்களுமே தவிர, வேறொன்றுமில்லை.
சாதாரண மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை என்பதோடு, பணக்காரனாய் இருப்பவன் பணத்தின் மகிமையால், 100 க்கு 90 வழக்குகளில், தன் இஷ்டப்படி நியாயம்பெறுகின்றான். நீதிபதிகளும், வக்கீல்களும் ஏழை மக்கள் நீதி பெறுவதற்கு இடையூறாகவும், பணக்காரர்கள் தங்கள் இஷ்டப்படி நீதி பெறுவதற்குஅனுகூலமாகவும் இருக்கின்றார்கள்.
இன்றைய வக்கீல் முறையே, மனித சமூகத்தின் ஒழுக்கத்திற்கும், நாணயத்திற்கும், சாந்திக்கும், ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் நேர் விரோதமானதாகும்.அதுமாத்திரமல்லாமல், தேசத்தின் ஒழுக்கமும், நாணயமும், சுயமரியாதையும் கெட்டுப் போனதற்கு வக்கீல்களே காரணஸ்தர்கள் என்று சொல்வது சிறிதும்மிகைப்பட கூறுவதாகாது.
நமது நாட்டுப் பணக்காரர்கள் அநேகருக்கு அயோக்கியத்தனமும், ஆணவமும், நாணயக் குறைவும், நாட்டின் நலனுக்கு பொறுப்பற்ற தன்மையாய் நடந்துகொள்ளவும் காரணமே வக்கீல்கள்தாம். விவசாயிகள் பெரிதும் கடன்காரர்களாக இருப்பதற்கும் வக்கீல்களே காரணமாவார்கள்.
பிரச்சினைகளில் மக்களுக்கு அதிக நம்பிக்கையும், ஆசையும் ஏற்படுவதற்கு வக்கீல்களே காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
நாளுக்கு நாள் வழக்குகள் அதிகரித்துக் கொண்டே போவதற்கும், நீதிமன்றங்கள் அதிகமாக கூடுவதற்கும் வக்கீல்களே காரணமாவார்கள். உண்மையைஒளிக்காமல் தெளிவாய் சொல்லப் வேண்டுமானால், மக்கள் அயோக்கியர்கள் ஆனதற்கும், நாணயக் குறைவாய் இருப்பதற்கும் கூட, வக்கீல்களே மிகமுக்கியபொறுப்பாளிகள் ஆவார்கள்.
வெள்ளைக்கார வக்கீல்களிடமும், வெள்ளைக்கார அதிகாரிகளிடமும் காணமுடியாத, அநேக ஒழுக்கக் குறைவுகளும், நாணையக் குறைவுகளும்,நடுநிலையற்ற தன்மையும், நம் வக்கீல்களிடமும், அரசு ஊழியர்களிடமும் தாராளமாய் இருந்து வருகின்றன.
இதனால் ஒழுக்கமும், நாணயமும் உள்ளவர்கள் வக்கீல் தொழிலுக்கும், அரசு ஊழியத்துக்கும் அருகதையற்றவர்களாகி விட்டனர்.
சிவில் நீதிமன்றங்களில், அழைப்பானை சார்பு செய்யும் சேவகன் முதல் குமாஸ்தா உள்ளிட்ட ஊழியர்கள் வரை, ஒழுக்கத்திலும், நாணயத்திலும், யோக்கியப்பொறுப்பிலும் மிக மிக மோசமாக நடந்து கொள்ள வெகுகாலமாகவே அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நீதித்துறையில் லஞ்சமும், மாமூலும், மோசமும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், அத்துறையின் தலைவர்கள் என எல்லோருக்கும் தாராளமாய் தெரிந்தும்,வேண்டுமென்றேயும் அனுமதித்துக் கொண்டிருக்கும் அளவு, மனிதனால் சொல்லக் கூட தகுதியுடவை அன்று.
வக்கீல்களின் தொல்லைகளும், நீதிபதிகளின் தொல்லைகளும் ஒருபாகம் என்றால், மற்ற ஊழியர்களின் தொல்லைகள் சகிக்க முடியாதவையாகும். இந்தத்துறைகளில் சீர்திருத்தமோ, ஒழுங்கோ செய்வதற்கு ஒரு அரசியல்வாதியோ, தேசியவாதியோ கிடையவே கிடையாது.
இதனால், வலுத்தவன் இளைத்தவனை நேருக்கு நேராய் உதைத்துத் தொல்லைப்படுத்தி, அவனிடம் உள்ளதைப் பிடுங்குவதை விட, நீதிமன்றம் மூலமும்,வக்கீல்கள் மூலமும் பிடுங்கிக் கொள்வதும், தொல்லைப்படுத்தி அவனை ஒழிப்பதும் மிகவும் சுலபமானதும், சட்டப் பூர்வமானதுமான காரியமாகவே இருந்துவருகிறது.
இம்முறையானது பணக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமாய் போய் விட்டதால், அவர்களும் சந்தோசத்தோடும், முழுப் பலத்தோடும் ஆதரிக்கிறார்கள்.
நடுநிலைமையற்ற அதிகாரிகளும், நாணயமும், ஒழுக்கமும், பொறுப்புமற்ற வக்கீல்களும், நீதிமன்ற ஊழியர்களும் தாங்கள் இந்த காரியங்களை செய்வதற்காகஅடையும் ஊதியத்தையும், வரும்படியையும் பார்த்தால், உலகத்தில் எந்த யோக்கியமான நாணயமான மனிதனும், தொழிலாளியும் அடையும் ஊதியத்தை விட,எத்தனையோ மடங்கு அதிகமாக பெறுகின்றார்கள்.
ஒரு முன்சீப் என்பவர் (கீழ்நிலை சிவில் நிதிபதி) 300 ரூபாயில் ஆரம்பமாகி அக்கிரமங்களைச் செய்வதன் மூலம் படிப்படியாக மாதம் 4500 ரூபாய் வரை பெரும்உயர்நீதிமன்ற நீதிபதி வரை உயர்த்தப்படுகிறார்.
வக்கீல் மாதம் 100 ரூபாய் முதல் அக்கிரமமும், அயோக்கியத்தனமும், நாணயக்குறைவும், பித்தலாட்டமும் செய்யும் அளவிற்குத் தக்கபடி படிப்படியாய்கெட்டிக்காரனாகி மாதம் 10 ஆயிரம், 20 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் வரை பெறும்படியான யோக்கியதை உடையவனாகிறான்.
ஒரு வழக்கு தொடுத்து 20 வருடத்திற்கு மேலாகியும், இன்னமும் முடிவுறாது இருக்கிறதென்றால், விசாரணை முறையில் இருக்கும் யோக்கியதையைச்சொல்ல வேண்டுமா?
உலகத்தார் எல்லோராலுமே ஒழுக்கமற்றதென்றும், நாணயமற்றதென்றும், வெளிப் படையாய் தெரியும் படியாக நடந்து கொள்ளும் இத்தொழில்கள், “ஈனத்தொழில்களே”.
நீதிபதிகள் குறித்து தாத்தா மகாத்மா காந்தி…
வக்கீல்களைப் பற்றி நான் கூறியனயாவும் நீதிபதிகளுக்கும் பொருந்தும். நீதிபதிகள் பெரியப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள். வக்கீல்கள் சிற்றப்பன்பிள்ளைகளைப் போன்றவர்கள். ஒருவருக்கொருவர் பக்க பலமாய் இருப்பவர்கள். இவைகள் முற்றிலும் உண்மை. இவைகளுக்கு எதிரான எந்த கூற்றும்பாசாங்கு (நடிப்பே) ஆகும்.
ஆதாரம்: தாத்தா மகாத்மா காந்தி 1909 – ஆம்ஆண்டு, தனது நாற்பதாவது வயதில் எழுதியமுதல் நூலான இந்திய சுயராஜ்யம் நூலின் 11 – வது கட்டுரையில்இருந்து சுருக்கித் தொகுத்தவர், சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா.
தமிழ் வெளியீடு: காந்திய இலக்கியச் சங்கம், மதுரை – 625020. நிலைப்பேசி எண்04522533957. 2012 ஆம் ஆண்டில் விலை ரூ.15
நவஜீவன் பப்ளிகேசன்ஸ், அகமதாபாத் – 380 041. தொலைபேசி, +91-79-2754132, இணையதளம்:www.navajivantrust.org
நீதிமன்றத்தில் வாதாடுவது அப்பா, அம்மாவிடம் பேசுவது போல்தான்.
நீதிமன்றத்தில் வாதாடி பிணையில் வருவது மட்டுமல்ல; சிறைக்குள் செல்வதும் சாதனைதான்!
வாதாடுவது உங்களின் கடமை; அப்போதே, கிடைக்கும் உங்களின் உரிமை.
நியாயம்தான் சட்டம்; அதற்கு தேவையில்லை வக்கீல் பட்டம்!
வக்கீல் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!!
பொதுவாக ஒரு துறையில் நடக்கும் தவறுகள் ரகசியமாக வெளியில் தெரிகிறது என்றால், அத்துறையில் ஏதோ ஒரு கருப்பு ஆடு இருக்கிறது என்பதை நிஜத்தில்கேள்விப்படவில்லை என்றாலும் கூட, சினிமா வசனத்தில் கேட்டிருப்பீர்கள்.
கூடவே, அந்த கருப்பு ஆடால், சமுதாயத்தில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றங்களின் விளைவு எப்படியிருக்கும் என்பதையும் அச்சினிமாவிலேயேபார்த்திருப்பீர்கள். ஒரு சிலர் நேரடியாகவே பார்த்திருப்பீர்கள் அல்லது அனுபவித்து இருப்பீர்கள்.
அரசு துறையில் இருக்கும் கருப்பு ஆடுகளை களையெடுக்க வேண்டுமானால் நீதித்துறையைதாம் நாம் நாட வேண்டும்.
அப்படி நாடும் நீதித்துறையில் ஒரு கருப்பு ஆடு இருந்தால் கூட, அரசுத்துறையின் அவலம் என்னவோ அதுதானே நீதித்துறைக்கும்? அப்படியானால், நீதியின்நிலைமை என்னவாகும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை அல்லவா?
ஒரு கருப்பு ஆட்டின் விளைவையே கற்பனை செய்து பார்க்க முடியாத போது, நீதித்துறையில் எல்லாமே கருப்பு ஆடுகளாக இருந்தால் நீதியின் நிலைமைஎன்னாகும்? நீதிக்கே அநீதிதானே!
நீதிக்கே அநீதி என்றால், நமக்கெல்லாம் என்ன மீதி இருக்கும் தெரியுமா?
கேட்காமல் கொடுப்பது நீதி.
கேட்டப் பின் கொடுப்பது அநீதி!
கேட்டப் பின்னும் கொடுக்க மறுப்பது நீதிக்குச் சமாதி!!
My eyes in tears sir
அவர் சிறையிலிருந்து எழுகிய 10 பக்க கட்டுரையின் தமிழாக்கம் எது நீங்கள் எழுதியது எது என்பதை குறிப்பிட்டிருந்தீர்கள் என்றால் நன்றாக இருந்திருக்கும்
மதவெறி கொண்டும் அதிகார ஆசைகொண்டும் ஆடும மோடிக்களும், யோகிக்களும் வெறும் பொம்மைகளே ஆட்டுவிப்பவர்கள் நாக்பூரில் இன்னும் திட்டங்கள் தீட்டிக்கொண்டே இருக்கிறார்கள் வலிமைமிக்க இந்தியாவை எப்படிஎல்லாம் பலவீனப்படுதாலம் என~
Very very painful for those working in govt job
enna sir nadakkuthu intha natla………….
Very painful.