2014ம் ஆண்டு பிப்ரவரியில், மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என்ற அறிவிப்பு வெளியானதும், மோடி யார் என்பது குறித்து, விரிவாக ஆராயப்பட்டு, வெளியான சில கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து, புத்தகமாக வெளியிட்டேன். அந்த புத்தகத்தின் பதிப்புரையில் நான் எழுதியது.
“ நரேந்திர மோடி ஒரு வளர்ச்சி மனிதன், இரும்பு மனிதன் என்ற முகமூடிகளுக்குப் பின்னால் இந்தியா இது வரை கண்டிராத ஒரு அபாயகரமான பாசிஸ்ட் இயங்குகிறார். அண்டை நாடான பாகிஸ்தானிலும் சரி, இலங்கையிலும் சரி, மதவெறி தலைவிரித்தாடும் நிலையில், இந்தியாவிலும் இப்படிப்பட்ட நபரின் தலைமையில் அரசு அமைந்தால் அது மக்களாட்சிக்கும், நல்லிணக்கத்திற்கும் பெரும் பின்னடைவாகும்.
மோடி கிட்டத்தட்ட அமைதிப்படை திரைப்படத்தில் வரும் அமாவாசை என்கிற நாகராஜ சோழன் எம்ஏ, என்பதையும், காவி உடையணிந்த ஹிட்லர் என்பதையும் உணர்த்துவதே இந்நூலின் நோக்கம். குஜராத் கலவரங்களுக்காக மட்டும் மோடி எதிர்க்கப்பட வேண்டியவரல்ல. அவர் ஒரு கடைந்தெடுத்த பாசிஸ்ட். இதை அவர்க கட்சியினரே ஒப்புக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு நபரிடம் இந்தியா ஒப்படைக்கப்படுவது எத்தகைய ஆபத்து என்பதை உணர்த்துவதும் இந்நூலின் நோக்கம். “
(இந்த நூல், டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கிறது)
இதுதான் 2014 ஜனவரியில் மோடி குறித்த என் மதிப்பீடு. அப்போது, மோடி பக்தர்களால் நான் கரித்துக் கொட்டப்பட்டேன். கடுமையாக விமர்சிக்கப்பட்டேன். மோடி பக்தர்களைக் கூட ஒரு பக்கம் வைத்துக் கொள்ளலாம். நடுநிலையாளர்களால், தேசவிரோதி என்றே சித்தரிக்கப்பட்டேன். காங்கிரஸின் கைக்கூலி என்றும் அழைக்கப்பட்டேன்.
அன்று சகித்துக் கொள்ளமுடியாத, அருவருப்பை ஏற்படுத்தக் கூடிய அளவில் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் இருந்தது. அன்னா ஹசாரே மற்றும் பிஜேபியின் ஸ்லீப்பர் செல்களால் நடத்தப்பட்ட லோக்பால் கோரிய போராட்டத்துக்கு நாடெங்கும் எழுந்த ஆதரவு, ஊழலுக்கு எதிராக மக்கள் எப்படி கொதித்துப் போயுள்ளனர் என்பதை உணர்த்தியது. அப்படி ஒரு போராட்டத்தை தனி மேடையில் நடத்திய கோமாளி சாமியார் பாபா ராம்தேவ் அப்போது மேடையிலேயே சொன்ன யோசனைதான், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழித்து விட்டால் கருப்புப் பணம் ஒழிந்து விடும் என்பது. அந்த கோமாளி சாமியார் மேடையில் உளறியதை சில ஆண்டுகள் கழித்து செயல்படுத்தும் ஒரு பிரதமர் எப்படிப்பட்டவராக இருப்பார் ? அந்த பணமதிப்பிழக்கத்தால் நாம் அடைந்த வேதனைகளையும், நாட்டின் பொருளாதாரம் அடைந்த, கடுமையான பாதிப்புகளையும் நாம் பார்த்துக் கொண்டுதான் உள்ளோம்.
ஊழல் சகித்துக் கொள்ள முடியாததா என்றால் ஆம். ஊழலை மூடி மறைக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டதா என்றால் ஆம். கூட்டணி கட்சிகளின் ஊழலுக்கு, முட்டுக் கொடுத்து அவர்களை காப்பாற்ற முயற்சி செய்ததா காங்கிரஸ் என்றால் ஆம். அதற்காகத்தான் காங்கிரஸை தூக்கியடித்தோம். காங்கிரஸ் வரலாற்றிலேயே இல்லாத வகையில் வெறும் 44 எம்பிக்களை அளித்தோம்.
ஆனால் பிஜேபி செய்தது என்ன ? இன்று ஊழல் இல்லாமல் இருக்கிறதா ? எந்த 2ஜி ஊழலைப் பற்றி படோடாபமாக பேசி, எந்த 2ஜி ஊழலின் அலையிலேயே சவாரி செய்து ஆட்சியை பிடித்ததோ அந்த பிஜேபியின் ஆட்சியில்தான், 2ஜி வழக்கின் நீதிமன்ற விசாரணையை ஒழுங்காக நடத்தாமல், அத்தனை குற்றவாளிகயையும் தப்பிக்க விட்டு வேடிக்கை பார்த்தது. பலர், திமுகவைச் சேர்ந்த ராசாவையும் கனிமொழியையும் பிஜேபி காப்பாற்றியதோ என்று நினைக்கிறார்கள். நிச்சயம் இல்லை. கனிமொழி ராசாவெல்லாம் வெறும் துரும்புகள். பிஜேபி காப்பாற்றியது, அனில் அம்பானியையும், அவர் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகளையும்.
2ஜி ஊழலின் சூத்திரதாரிகள், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனமும், அதன் மூத்த நிர்வாகிகளுமே. அவர்கள்தான் அந்த ஊழலின் மூளை. அந்த கார்ப்பரேட்டுகள்தான் இந்தியாவை இயக்குகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் ஒரு கார்ப்பரேட் முதலாளி பலத்தோடு இருந்தானென்றால், பிஜேபி ஆட்சியில் வேறொருவன் பலமாக இருப்பான். 2008ம் ஆண்டு, அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து, இடதுசாரிகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்ற பிறகு, நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அரசை கவிழ்க்க அனில் அம்பானி எம்பிக்களுக்கு பணம் கொடுத்தார். அரசைக் காப்பாற்ற முகேஷ் அம்பானி பணம் கொடுத்தார். அப்போதும் சரி, இப்போதும் சரி. அம்பானி சகோதரர்களின் செல்வாக்கு சரியவில்லை.
ஆனால், அவர்களை விட, அதானியின் செல்வாக்கு சற்றே அதிகரித்திருக்கிறது. அவ்வளவே.
காங்கிரஸ் ஊழல் சகித்துக் கொள்ள முடியாமல் இருந்தது என்பதை மறுக்கவில்லை. ஆனால் அதே காங்கிரஸ் அரசில்தான், ஆ.ராசா பதவி விலகினார். சிறை சென்றார். இது போல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பலர் பதவி விலகினர். அவர்கள் மீது அப்போதே வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
ஆனால், கொலைக் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒரு நபர், நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார். உச்சநீதிமன்றத்தின் தெளிவான உத்தரவையும் மீறி, அவ்வழக்கை விசாரித்த நீதிபதி மாற்றப்படுகிறார். அடுத்து விசாரித்த நீதிபதி மர்மமான முறையில் இறந்து போகிறார்.
ஊழலை ஒரு புறம் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டுக்கு 40 ரவுடிகள் தலையில் காவிக் கொடியை கட்டிக் கொண்டு வந்து, உள்ளே நுழைந்து, உங்கள் வீட்டு ப்ரிட்ஜில் உள்ள கறியை எடுத்து, இது மாட்டுக்கறிதான் என்று கூறி, உங்கள் தந்தையை இழுத்துப் போட்டு நடு ரோட்டில் அடித்து கொலை செய்வதை ஏற்றுக் கொள்வீர்களா ?
உங்கள் தட்டில் உள்ள உணவு எது என்பதை இன்னொருவர் தீர்மானம் செய்வதை ஏற்றுக் கொள்வீர்களா ?
உங்கள் காதலியோடு ஒரு பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தால், இருவரையும் இழுத்து அடிப்பதை ஏற்றுக் கொள்வீர்களா ?
ரயிலில் குடும்பத்தோடு வருகையில், நீங்கள் இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்துக்காக, நீங்கள் வாங்கி வந்த கறியை மாட்டுக்கறி என்று கூறி, உங்களை ரயிலிலேயே வைத்து, அடித்து கொலை செய்வதை ஏற்றுக் கொள்வீர்களா ?
தலித் சாதியில் பிறந்து விட்டார்கள் என்ற குற்றத்துக்காக, நான்கு இளைஞர்களை, துணியை அவிழ்த்து நிர்வாணமாக்கி, வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்று, அடித்து துன்புறுத்தி, மூத்திரத்தை குடிக்க வைப்பதை ஏற்றுக் கொள்வீர்களா ?
இஸ்லாமியர் என்பதற்காகவே, குடியரசு தினத்தில், தேசியக் கொடியை ஏற்றும்போது, வந்தே மாதரம் பாடு, ஜெய் ஸ்ரீராம் என்று சொல் என்று கூட்டமாக உங்களை சுற்றி வளைத்து, கலவரம் செய்தால் ஏற்றுக் கொள்வீர்களா ?
பாலியல் வன்முறைகள் எல்லா காலத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அந்த பாலியல் குற்றவாளிகளை காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினால், ஆளும் பிஜேபி அமைச்சர்கள் ரவுடிகளை கூட்டிக் கொண்டு, அந்த குற்றவாளிகளை காப்பாற்ற காவல்துறை அதிகாரிகளை தாக்குவதை ஏற்றுக் கொள்வீர்களா ?
ஒரு எட்டு வயது, பிஞ்சு சிதைக்கப்பட்டு தூக்கி வீசப்படுகிறாள். காவல்துறையின் விரிவான புலனாய்வு, அவளுக்கு நேர்ந்த அவலங்களை விரிவாக குற்றப் பத்திரிக்கையில் பட்டியிலிடுகிறது. அப்படியொரு கோரம் நிகழவேயில்லை என்று மனசாட்சியே இல்லாமல் வாதிடுவதை ஏற்றுக் கொள்வீர்களா ?
தொற்று நோய் ஏற்பட்டோ, அல்லது இயற்கை பேரழிவுகளாலோ, குழந்தைகளின் மரணங்கள் நிகழ்வதை தவிர்க்க இயலாது. ஆனால், ஆக்சிஜன் வழங்கும் ஒரு நிறுவனத்துக்கு அரசு பண பாக்கி வைத்திருந்த காரணத்துக்காக அந்த நிறுவனம் ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்க மறுத்து, அதன் காரணமாக ஒரு வாரத்தில் 270 பச்சிளம் குழந்தைகள் இறந்ததை ஏற்றுக் கொள்வீர்களா ?
அந்த நெருக்கடியான நேரத்தில் சொந்தப் பணத்தை செலவு செய்து கஃபீல் கான் என்ற மருத்துவர், ஒரு இரவு தாக்குப் பிடிக்கும் அளவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை தருவிக்கிறார். அவர் அன்று செய்த காரியத்தால் எத்தனை குழந்தைகளின் உயிர் பிழைத்தது என்பதை நாம் கணக்கிட முடியாது. அவர் இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்துக்காக அவரை கைது செய்து 8 மாதங்கள் சிறையில் வைத்திருப்பதை ஏற்றுக் கொள்வீர்களா ?
நாம் உழைத்து சேர்த்த பணத்தை வங்கியில் போட்டால், அந்த வங்கியிலிருந்து தன் வைர வியாபாரத்துக்காக 20 ஆயிரம் கோடியை கடன் வாங்கி விட்டு, வங்கியையும் நாட்டையும் ஏமாற்றி விட்டு ஒருவன் ஓடுவதை ஏற்றுக் கொள்வீர்களா ?
உங்கள் ரத்தம் கொதிக்கிறதா ? எனக்கும் கொதிக்கிறது.
இப்படி இந்த பட்டியலைத் தொடர்ந்தால், எல்லையில்லாமல் இந்த பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.
ஆனால், இவையெல்லாவற்றையும் விட மிகப்பெரிய ஆபத்தாக நான் கருதுவது, நீதித்துறையின் தலையீட்டை. நீதித்துறை மிகப் பெரிய அச்சுறுத்தலை சந்தித்தது, இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை காலத்தில். உலகப் புகழ் பெற்ற இந்திய நீதித் துறை, மிக மிக அற்புதமான சிறந்த நீதிபதிகளால், உலகத்தையே நம்மை வியந்து பார்க்க வைத்த இந்திய நீதித்துறை, இந்திரா காந்தியின் முன் மண்டியிட்டது. அப்போதும் பல தீபக் மிஸ்ராக்கள் இருந்தனர். நமது அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய விற்பன்னர்கள் மாதக்கணக்கில் விவாதித்து, செதுக்கிய அடிப்படை உரிமைகளை ரத்து செய்தது சரியே என்று தீர்ப்பளித்தனர். அப்போதும் சில எச்.ஆர்.கன்னாக்கள் இருந்தனர். எதிர்த்தனர். தங்கள் கருத்தை பலமாக பதிவு செய்தனர். அப்படி எதிர்த்தவர்களை, தலைமை நீதிபதியாக்க விடாமல் தடுத்தார் இந்திரா காந்தி. அவர்கள் சுயமரியாதை உள்ளவர்கள். மயிர் நீக்கின் உயிர்வாழா கவரிமான்கள். நாயைப் போல பிழைக்கும் சதாசிவங்கள் இல்லை. ஒரு நொடி கூட நீதிபதியாக தொடராமல் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள்.
இது போன்றதொரு நிலை, ஆட்சியாளர்கள், யார் நீதிபதி, யார் நீதிபதி அல்ல என்பதை தீர்மானிக்கக் கூடாது என்பதற்காகத்தான் பல நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வுகள், முழுமையான கட்டுப்பாட்டை அரசுக்கு கொடுக்காமல், நீதித்துறையிடமே வைத்துக் கொள்ளும் வகையில், நீதிபதிகள் தேர்வு முறையை மாற்றின.
ஆனால், சம்பிரதாயமாக, கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்றுக் கொள்ள வேண்டிய அரசு, இன்று, அதையே பயன்படுத்தி, மனசாட்சி மற்றும் முதுகெலும்பு உள்ள நீதிபதிகளை, உயர்நீதிமன்றத்துக்கோ, உச்சநீதிமன்றத்துக்கோ செல்ல விடாமல் தடுக்கிறது. ஒரு மருத்துவக் கல்லூரி ஊழலில் ஆதாரத்தோடு சிக்கிக் கொண்ட ஒரு நீதிபதியை தலைமை நீதிபதியாக்கி, அவரை முழுமையான காவியாக மாற்றி, ஆதார், ராம ஜென்ம பூமி, சிவிசி நியமனம், சிபிஐ கூடுதல் இயக்குநர் நியமனம், என பல்வேறு வழக்குகளில் தாங்கள் விரும்பியதை தீர்ப்பாக வழங்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்திய நீதித்துறையின் வரலாற்றிலேயே இல்லாத வகையில், உச்சபட்ச அதிகாரம் பொருந்திய, மக்களுக்கெல்லாம் நீதி வழங்க வேண்டிய நான்கு மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நீதி வேண்டி மக்களை சந்திக்கிறார்கள். எத்தகைய வேதனையான கேவலம் இது ? இதுவா இந்தியா ? இதுவா நம் ஜனநாயகம். இதற்காகவா, சுதந்திரப் போராளிகள் தடியடி பட்டார்கள் ? இதற்காகாவா பகத்சிங்கும் ராஜகுருவும், சுக்தேவும் தூக்கில் தொங்கினார்கள் ?
ஒரு நாடு என்பது, வெறும் புவியியல் எல்லை கிடையாது. அதன் காடுகளும், நதிகளும், பாலைவனங்களும் கிடையாது. ஒரு நாடு என்பது, அதன் மக்களே. இதர நாடுகளைப் போல அல்லாமல், நம் நாட்டின் சிறப்பு என்பதே, பல இனம், பல சாதி, பல மொழியினர், பல மதத்தினர் ஆகியோக் கொண்டதே. இந்தியா பல மதக் கலவரங்களை சந்தித்துள்ளதுதான் என்றாலும், திட்டமிட்டு மதக் கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் ஆட்சியைப் பிடிக்கும் நீசர்களை சந்தித்தது கிடையாது. இத்தகைய நீசர்களிடம் அதிகாரம் கிடைத்தால் என்ன செய்வார்கள் என்பதை நாம் மே 2014 முதல் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறோம்.
நான் இந்நாட்டின் மக்களை மிகவும் நேசிக்கிறேன். அவர்கள் தன் சக மனிதர்களோடு விரோதமின்றி பழக வேண்டும் என்பதை விரும்புகிறேன். குல்லா போட்டு ரோட்டில் நடமாடுபவனை எதிரியாக பார்க்கும் மனோபாவம் அழிய வேண்டும் என்று நினைக்கிறேன். ஒருவன் என்ன பேசினாலும், எழுதினாலும், அவனின் மதத்தையும் சாதியையும் வைத்து மட்டுமே அவன் கூறுவதை மதிப்பிடும் நோக்கம் அறவே அழிய வேண்டும் என்பதை விரும்புகிறேன்.
இவையெல்லாம் நடக்க வேண்டுமென்றால், 2019ல், மோடியோ, பிஜேபியோ ஆட்சியை கைப்பற்றக் கூடாது. இது சாத்தியமா என்ன ?
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வந்தபோது, தேசிய தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்ற பெரும்பாலானோர், மிகச் சிறந்த பத்திரிக்கையாளரான ராஜ்தீப் சர்தேசாய் போன்றோர் கூட, 2019ல் பிஜேபியின் வெற்றி தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்றனர். ராஜ்தீப் சர்தேசாய் It seems the BJP’s election juggernaut is unstoppable. The opposition have to gear themselves up for the polls after 2019 என்று சொன்னார். ஆனால் நான் அப்போதும் நம்பிக்கை இழக்கவில்லை.
தமிழகத்தில் உள்ள மூத்த பத்திரிக்கையாளர்கள் இதே கருத்தை என்னிடம் பிரதிபலித்தபோது, தயவுசெய்து நம்பிக்கை இழக்காதீர்கள். இந்திய மக்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் என்றே சொன்னேன். எனது நம்பிக்கை அத்தகையது.
இந்திரா காந்தியைப் போன்ற மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரு தலைவரை இந்தியா இது வரை காணவில்லை. அவரோடு ஒப்பிடுகையில் மோடி ஒரு காய்ந்த சிறு புல்.
அப்படிப்பட்ட இந்திரா காந்தியை மண்ணைக் கவ்வ வைத்த நாடு இது. இந்திராவை எதிர்த்து போட்டியிட ஒரு முழுமையான கூட்டணி கூட கிடையாது. ஆங்காங்கே இருந்த உதிரிக் கட்சிகள் காங்கிரஸை எதிர்த்தன.
1977 தேர்தலில், இந்திராவும், காங்கிரசும் தோல்வியடைந்தது குறித்து, இந்தியாவின் தலைச் சிறந்த பத்திரிக்கையாளர் வினோத் மேத்தா, அவரது சஞ்சய் காந்தி வரலாறு நூலில் இவ்வாறு எழுதுகிறார்.
Like many journalists, I had made my way to Delhi around result day accompanied by a vague premonition that something big was about to turn up; that the something would be ‘historic’ or ‘monumental’ or ‘revolutionary’ was inconceivable to me then. A friend asked me before I left what I expected to achieve simply by ‘being there’. ‘You can’, he observed, ‘hear the results in Bombay too.’
He was, of course, right. But during the past 21 months Delhi had become such a horrendous, knock at night, rumour-infested, look-over-your-shoulder-before-you-speak city that, if nothing else, one expected to detect a change of air.
I knew if the Congress lost a few seats (this arithmetical juggling became the parlour game during the campaign season. Ironically, those who supported Janata wanted nothing more than a strong opposition i.e. Janata, so that the 2-party system could be established in India. I found this kind of support both dishonest and cowardly. If one supported Janata then one should, I argued, go the whole hog and vote it into power, not into opposition) the result would be an anti-climax. Even if Mrs Gandhi retained a strength around 240 that too would be an anti-climax. If, however, Congress lost… On such slender hopes did I depart for Delhi.
When the results did come in over the radio, upset piled on upset, one experienced two distinct and disparate emotions.
First, there was a fleeting sense of disbelief. Could it be true? Could a party thought to be politically invincible be vincible? Could All India Radio be playing a cruel joke? And finally: ‘Could the Nehrus lose?’
It didn’t take long for reality to assert itself. One quickly realized that what was majestically unfolding was nothing less, nothing more than a people exercising their sovereign right to choose their government. For thirty years they had chosen one government, this time they were choosing another. It was left to sophisticates like Nirad C. Chaudhuri to conclude that the Congress rejection of the electorate amounted to ‘the most remarkable event in Indian history since independence’.
The second emotion experienced was of release. I don’t particularly like journalistic cliches, but for once ‘a country caged for two years has been set free’ was a fairly accurate reflection of national mood. Walking down Connaught Place, the night a Janata Party victory was assured, I saw scenes of festivity and merriment and celebration which were certainly unique in my lifetime. A paanwala, who was distributing free paans, told me he had seen nothing like this since ‘47.
அன்று சமூக வலைத்தளங்கள் கிடையாது. இணையம் கிடையாது. செல்பேசி கிடையாது. இத்தனை செய்தித் தொலைக்காட்சிகள் கிடையாது. அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கிய, அகில இந்திய வானொலி மற்றும், தூர்தர்ஷன் மட்டுமே. செய்தித்தாள்கள் கூட அரசுத் தணிக்கைக்கு பிறகே வெளி வந்தன. ஆனால் அப்போதும் இந்திராவை மக்கள் வீழ்த்தினார்கள்.
2013ம் ஆண்டு முதல், காங்கிரஸ் ஆட்சி மீது மக்களுக்கு இருந்த வெறுப்பை, மக்களிடம் பரவலாக கொண்டு சேர்த்ததில், சங்பரிவார் இணைய அமைப்புக்கு பெரும் பங்கு உண்டு. ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸப்பை அவர்களைப் போல பயன்படுத்தியவர்கள் எந்த கட்சியும் கிடையாது. அவர்கள்தான், சமூக வலைத்தளங்களின் அரசன் என்றால் சந்தேகமே கிடையாது. ஆனால், அவர்கள் திணித்ததில் பெரும்பாலானவை பொய்யும் புரட்டுமே. மோடியை ஏசுநாதராகவும், மாவீரன் அலெக்சாண்டராகவும், ஏன்… எல்லாம் வல்ல இறைவனாகவுமே சித்தரித்தார்கள்.
எந்த சமூக வலைத்தளங்களால் அவர்கள் ஆட்சியை பிடித்தார்களோ, இன்று அதே சமூக வலைத்தளங்களால் அவர்களின் பொய்களும், பித்தலாட்டங்களும் அம்பலமாகி வருகின்றன. அவர்களின் முகத்திரை கிழிவதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாமல், அவதூறுகளில் இறங்குகிறார்கள். அதுவே அவர்களின் தோல்வியின் முதல் படி.
இந்திய நாட்டு மக்களை நேசிக்கும் ஒவ்வொருவரின் கடமை, 2019 தேர்தலில் மோடியையும், பிஜேபியையும் வீழ்த்துவதே.
இன்று மே பிறந்து விட்டது. இன்று உழைப்பாளர் தினம். அநேகமாக அடுத்த 10 அல்லது 11 மாதங்களில் நாம் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்கப் போகிறோம். இன்று முதல் ஒவ்வொரு நாளும் முக்கியம். நம்மால் வீதிகளில் இறங்கி பிரச்சாரம் செய்ய முடியாது. நம் ஒவ்வொருவருக்கும், பல்வேறு வேலைகள் இருக்கின்றன. ஆனால் நம்மால் செய்ய முடிந்தது, எந்த சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி ஆட்சியை பிடித்தார்களோ, அதே சமூக வலைத்தளங்களை அவர்களை விட வலுவாக பயன்படுத்தி, காவிகளை அம்பலப்படுத்தி, 2019ல் பிஜேபியையும், மோடியையும் வீழ்த்துவது என்று இந்த உலக உழைப்பாளர் தினத்தில் உறுதியேற்போம்.
சவுக்கு ஊடகமும், தன் பங்குக்கு, ஆங்கிலத்தில், காவிகளை அம்பலப்படுத்தி வரும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை, தமிழில் மொழி பெயர்த்துத் தரும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அன்பான மனமொத்த நண்பர்கள், இந்த முயற்சியில் தங்கள் உழைப்பை ஈடுபடுத்த வாக்குறுதி அளித்துள்ளனர். அடுத்த வாரம் முதல், மொழி பெயர்ப்புக் கட்டுரைகள், சவுக்கு தளத்தில் தொடர்ந்து வெளியிடப்படும்.
போர் தொடங்கட்டும்.
good article but for sure dont end up talking like Vaiko saying Secular forces like congress/dmk/mdmk/communists/vck should come together for defeating bjp…. if you do that then your whole fight will become a comedy…. Support new political forces that are ready to fight both bjp and fake secularists with equal weightage but ungaluku thaan Seeman pudikaathe then what is the logic in your fight… You dont have the ability to say who is the new force that one should support…
பி ஜே பி தோற்பதாக வைத்துக்கொண்டால் காங்கிரஸ் ஒரு மட்டமான ஆட்சியை கொடுத்து மோசமான வெளியுறவை ராகுல் தலைமையில் தரும். இந்தியாவை வலிமை இழக்க விரும்புபவர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும்.
எனது நண்பர் ஒருவர் சொன்னார், நீ எந்த கட்சியில் வேண்டுமானாலும் இரு.. எந்த கொள்கையை வேண்டுமானாலும் பின்பற்று ஆனால் ஒருபோதும் பஜக போன்ற கட்சியிலோ, ஆதரவாகவோ இருக்காதே என்று..
மகிழ்ச்சி சங்கர்..
மகிழ்ச்சி ஆரம்பம் ஆகட்டும் நாங்கள் உங்களோடு இருக்கோம்
வெல்வோம் போரில்!!
கெட்டதை விலக்குவோம்!!!!
போருக்கு யார் தலைமை ஏற்றாலும் பங்கு பெறுவோம்!!!
மனிதம் வாழட்டும் !!!
If BJP comes to the power again even God cannot save our Nation
We are waiting 👍
We don’t want BJP and particularly modi
vaazka valamudan…
I wish the very best.
பிஜேபி யை வீழ்த்திவிட்டு யாரை அமர்த்துவது?
PAPPU WILL BE THE PRIME MINISTER
Awesome!! Oh Yes I remember 21st March 1977 as a 13 year old, Tied to BBC radio all night !!! Indhira the Invincible had fallen to Rajnarayan!! Sanjay defeated by unknown Ravindra Pratap Singh!!! Unthinkable had happened….
I am pretty sure, we are in for similar jolt come 2019, If Indians miss this the country would go to dogs!!!!
Super thala
Well done sir 2011 Sankar has come back
கம்யூனிஸ்டுகள் வேண்டுமானால் இந்தக் கட்டுரையால் மகிழ்ந்து போகலாம். பிஜேபியின் மதவெறியை தவிர்த்து நீங்கள் தெரிவிக்கும் காரணங்கள் எல்லாம் ஒப்புக்கு சப்பானவை. சரியாகச் சொல்ல வேண்டுமானால் பிஜேபி ஆட்சியில் இல்லாதபோதுதான் மதப்பிரச்னைகள் தலைதூக்கின. தற்போது அங்கொன்றும் இங்கொன்றுமான மாவோயிஸ்டு பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினையைத் தவிர்த்து பெரிதாக சொல்ல எந்தவித கலவரமோ, குண்டுவெடிப்போ நிகழவில்லை….
Kundu vasavane inda bjp naaikal ipo aatci avanuka kaiyil epadi kundi vetikum
அமைதி மார்க்க ஒத்துழைப்புடன் போரை துவக்குங்கள் !
நாடு உருப்பட்டுவிடும்,
போர் தொடங்கட்டும், நாங்கள் உங்களோடு இருக்கிறோம்
Great job sir we admire and honor you Weldon sir our support always with you
Fraudster can be allowed but not murderers.
அருமையான கட்டுரை
அருதி பெரும்பான்மை தான் எவ்வளவு ஆபத்து என்பதை புரியவைத்துள்ளது இந்த நான்காண்டுகள்
ஒரு வேலை ஜெயலலிதா ஆதரவில் தான் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலை உருவாகி இருந்தால் அந்த அம்மா சிறை சென்று இருக்காது என்பது என் கருத்து
//பிஜேபிஐ எதிர்பதற்கு உறுதியான காரணங்களை சொல்லவில்லை// Please remove the cow dung from your eyes. Try to be a human.
Thambi I was with you when you worked against DMK. I was not with you when you started such war against MOdi in 2014. I’m also not very much thrilled with MODI and his audacity. But I’m still not in favour of any alternative. The alternative is not in sight. On the national front he is said to be doing great job to bring some important changes in administration. At the international front he has made a great in roads and made India a great force. At the corruption front he has two yard sticks one OUR CORRRUPTION vs his ENEMY’s corruption. He is a big disappointment.
On judiciary he uses the same judiciary which was used by congress . You must remember NOT a single court verdict was given against PC or Sonia despite they not been in power. THEY STILL RULE…. DEEPAK a congress family person now finds it convenient to work with MODI as he can enjoy the same benefits if he second fiddles .. So dont try to romantisize as if they were holy cows during congress rule.
Same Prashant and Rtd CJI VN RAy told around 90% of judges were corrupt that too CJIs since independence. ie the entire judiciary was made corrupt with the long rule of congress…..NO contempt petition followed and all are shamelessly roaming free. Modi USES the SAME JUDICIARY for his works.
When comes to tamil/ tamils/ tamilnadu he is a big fraud . He hates tamils because he has seen and used really really honest tamil officers . It is gujarati inferiority complex I think and that makes him to present all the bads of tamils. That thankless guy forgot it was we tamils who wanted him to be the PM. He is eating the hands which fed him.
Anyway if you expose any truth I’m always there with you…..
தொடங்கி விட்டது போர்.
OK 2019 தேர்தலில் மோடியையும், பிஜேபியையும் வீழ்த்துவதே. NEXT NEXT NEXT NEXT RAGUL ?????????????????????????
ok 2019 தேர்தலில் மோடியையும், பிஜேபியையும் வீழ்த்துவதே.. NEXT NEXT NEXT NEXT RAGUL ????????????????????????????????
YES, RAHUL IS OUR PRIME MINISTER
உங்கள் கட்டுரையில் தெளிவான பார்வை இல்லை. காங்கிரஸ்ய் ஆதரிப்பது போல் இருக்கிறது. ஆனால் பிஜேபிஐ எதிர்பதற்கு உறுதியான காரணங்களை சொல்லவில்லை.
ஆம் போர் தொடங்கட்டும், நாங்கள் உங்களோடு இருக்கிறோம் .
போரை தொடங்குவோம்
Well explained..you did such a great job..honor u..