குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வதற்கான வரைவை அளித்தனர். அதை முறையாக பரிசீலித்து, ஆராய்ந்த பின்னர் வெங்கையா நாயுடு முடிவெடுத்திருக்க வேண்டும். ஆனால், ஒரே நாளில், அவர் அவசர அவசரமாக அதை தள்ளுபடி செய்தது, பலத்த விமர்சனங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. பல்வேறு சட்ட நிபுணர்கள், வெங்கையா நாயுடுவின் அவசர முடிவு, உச்சநீதிமன்றத்தின் முன் எடுத்துச் செல்லப்பட்டால், ரத்து செய்யப்படும் என்றே கூறுகின்றனர்.
பிஜேபி தலைவர்கள், வெங்கையா நாயுடுவின் முடிவு குறித்து விமர்சனங்கள் வருவதற்கு முன்னதாகவே, அதற்கு முட்டுக் கொடுத்து பல்வேறு கருத்துக்களை வெளியிட்டனர். அவர்களின் அவசரக் குடுக்கைத்தனமான இந்த கருத்துக்கள், இவை அனைத்துமே முன்னதாகவே பேசி வைத்துக் கொண்டு நடப்பவையோ என்ற சந்தேகத்தை எழுப்பவே செய்கின்றனர்.
உச்சநீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதி என்ற அமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்று தீபக் மிஸ்ராவுக்கு ஆதராக களமிறங்கி கச்சை கட்டும், பிஜேபி தலைவர்கள் யாருமே, தீபக் மிஸ்ராவின் செயல்பாடுகளுக்கு எதிராக தொடுக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லவில்லை. மாறாக, தலைமை நீதிபதி எப்படி செயல்பட்டாலும், அது குறித்து பேசாதீர்கள் என்பதே இவர்களது வாதமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவசர அவசரமாக, எதிர்க்கட்சிகளின் மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
வெங்கையா நாயுடு இந்த முடிவில் எந்த அளவுக்கு தவறிழைத்துள்ளார் என்பதை, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிஸ்வஜித் பட்டாச்சார்யா விளக்குகிறார்.
மனுதாரர்கள் தங்கள் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் என துணை ஜனாதிபதி கூறினார். – ஆனால் அரசியலமைப்புச் சட்டம் வேறுவிதமாக கூறுகிறது.
இந்தியாவின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக சில எம்.பி.க்கள் கொண்டுவந்த பதவிநீக்க தீர்மானம் ஏன் தோல்வியடைந்தது என நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஒரு ஆழமான விரிவான கட்டுரை எழுதினார். இதுவரை நமது கவனத்திலிருந்த தப்பிய ஒரு அரசியலமைப்பு விவகாரத்தை நான் விவரிக்க விரும்புகிறேன். தற்போதைய விவகாரம் என்னவெனில் அது அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 124 (5) ன் கீழ் துணை ஜனாதிபதியின் பங்களிப்பு குறித்தது.
இந்த தீர்மானம் ஏன் கொண்டுவரப்பட்டது மற்றும் அதில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அல்லது அவற்றின் உண்மைத்தன்மை குறித்து நான் ஏதும் எழுதுவதிலிருந்து விலகிக் கொள்கிறேன்.
தலைமை நீதிபதி உள்ளிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக கொண்டுவரப்படும் பதவி நீக்க தீர்மானத்தை, ஒரு வகையிலோ அல்லது வேறு வகையிலோ, ஏற்றுக்கொள்ளவோ அல்லது மறுக்கவோ துணை ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் துணை ஜனாதிபதியின் முடிவை உச்ச நீதிமன்றத்திலோ அல்லது அரசியலமைப்பில் எழுதப்பட்ட அதிகார வரம்புக்குட்பட்ட ஒரு உயர் நீதிமன்றத்திலோ சேலஞ்ச் செய்ய பாதிக்கப்பட்டவர்களுக்கு அதே அளவு உரிமை உள்ளது.
அரசியலமைப்பு பிரிவு 124 (5) அடிப்படையிலான 1968ம் ஆண்டின் நீதிபதிகள் (விசாரணை) சட்டம் பிரிவு 3 (1) லிருந்து துணை ஜனாதிபதி தன்னுடைய அதிகாரத்தைப் பெற்றுள்ளார்.
நீதிபதியின் செயலற்ற நிலை அல்லது தவறான நடத்தை குறித்து விசாரணை மேற்கொள்ள, ஆதாரம் சமர்ப்பிக்க அல்லது விவாதிக்க அரசியலமைப்பு சட்ட பிரிவு 124 (4)ன் கீழ் சட்டத்தின் மூலம் நாடாளுமன்றம் ஒழுங்குபடுத்தலாம் என்கிறது அரசியலமைப்பு சட்ட பிரிவு 124 (5).
”ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கையெழுத்திட்ட நோட்டீஸ் கொடுக்கப்பட்டால்….ஒருவேளை அந்த நோட்டீஸ் 50க்கும் குறைவில்லாத உறுப்பினர்களால் நாடாளுமன்ற மாநிலங்களவையில் கொடுக்கப்பட்டால்…. மாநிலங்களவை தலைவர் தன்னிடம் கொடுக்கப்பட்ட அல்லது தனக்கு கிடைக்கப்பெற்ற ஆவணங்களை பரிசீலனை செய்து அதை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது ஏற்றுக்கொள்ள மறுக்கலாம்” என்கிறது நீதிபதிகள் (விசாரணை) சட்ட பிரிவு 3(1).
இங்கே மாநிலங்களவையின் தலைவர் துணை ஜனாதிபதி ஆவார்.
அரசியலமைப்புச் சட்ட பிரிவு 124 (4) கூறுவது யாதெனில்,
தவறான நடத்தை அல்லது திறனற்ற தன்மையின் அடிப்படையில், நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையிலும் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மை உறுப்பினர்கள் அல்லது் மூன்றில் இரண்டு பங்கிற்கு குறையாத உறுப்பினர்கள் அதே அமர்வுகளில் வாக்களித்து தீர்மானம் நிறைவேற்றி அதை ஜனாதிபதிக்கு அனுப்பி, ஜனாதிபதி உத்தரவிட்டாலொழிய ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி நீக்கம் செய்யப்படமாட்டார்.
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 124 (5)க்கு முன்பாக பிரிவு 124 (4)ஐ பரிசீலனைக்கு எடுத்ததன் மூலம் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தவறிழைத்தாரா? ஓரு நீதிபதியின் தவறான நடத்தைக்கான ஆதாரம் கண்டுபிடிக்க மற்றும் விசாரணை மேற்கொள்வதற்கான வழிமுறைகளை சட்டத்தின் மூலம் ஒழுங்குபடுத்த நாடாளுமன்றத்திற்கு அதிகாரமளிக்கும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 124(5)ன் நிலை முடிவுற்ற பின்னரே அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 124 (4)ன் நிலை தொடங்குகிறது.
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 124(5)ல் “விசாரணை“ மற்றும் “ஆதாரம்” ஆகிய வார்த்தைகளைக் குறிக்கவும். “விசாரணை“ நடைபெறாமல் “ஆதாரம்“ என்ற கேள்வியே எழவில்லை. விசாரணை நடத்தப்பட்டால்தான், குற்றஞ்சாட்டப்பட்ட தவறான நடவடிக்கைக்கான ஆதாரத்தை சேகரிப்பதில் அது முடியும். அந்நிலையில்தான் பிரிவு 124(5) முடிவடைந்து பிரிவு 124 (4) செயலுக்கு வரும்.
இந்த கட்டத்தில்தான், நீதிபதியை பதவி நீக்கம் செய்வது குறித்த கேள்வி நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் விவாதிக்கப்படுகிறது. மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மை உறுப்பினர்கள் அல்லது அவையில் கலந்துகொண்ட உறுப்பினர்களில் மூன்றில் இருபங்கிற்கு குறைவில்லாத உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்தி ஆதரித்தால் மட்டுமே அந்த நீதிபதியை பதிவியிலிருந்து ஜனாதிபதி நீக்க முடியும்.
அரசியலமைப்பு சட்டம் பிரிவு 124(5)ன் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதவி நீக்க தீர்மான நோட்டீஸை ஏற்க மறுத்தார். அவர் அரசியலமைப்பு பிரவு 124 (5)ன் படி தனது அதிகாரத்தை பயன்படுத்தவில்லை. பயன்படுத்தியிருக்கவும் முடியாது. பதவி நீக்க இறுதிகட்டத்தில் பயன்படுத்த அந்த அதிகாரம் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.. இந்த இரு பிரிவுகளின் அளவுகோல்கள் வெவ்வேறானவை. மாறுபட்டவை. அரசியலமைப்பு பிரிவு 124 (5)ன் கீழ், பதவிநீக்க தீர்மான நோட்டீஸை ஏற்கவோ அல்லது மறுக்கவோ துணை ஜனாதிபதிக்கு வெறும் எண்ணம் தோன்றினால் மட்டும் போதுமானது. ஆனால் மனுதாரர்கள் குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை எனக்கூறி அந்த மனுவை துணை ஜனாதிபதி ஏற்க மறுத்துள்ளார்.
மனுதாரர்கள் அவர்களுடைய வழக்கு குறித்தே நிச்சயமற்ற நிலையில் உள்ளனர் என துணை ஜனாதிபதி தெரிவித்தார். ஆயினும், சட்டப்பிரவு 124(5)ன் நிலைப்படி மனுதாரரகள் “ஆதாரம்“ குறித்து எதுவும் உறுதியாகக் கூறமுடியாது. கூறக் கூடாது. துணை ஜனாதிபதியால் ஏதாவது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தால் , அது (ஆதாரத்தைக் கண்டுபிடிப்பது) விசாரணைக் குழுவின் வேலை ஆகும். இந்த கட்டத்தில், குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன என மனுதாரர்கள் உறுதியளிக்கத் தேவையில்லை. ஆகையால், வெங்கையா நாயுடுவின் உத்தரவின் – பத்தி 11 – தவறானது மற்றும் சட்டத்துக்கு புறம்பானது.
தகுதியின் அடிப்படையில், துணை ஜனாதிபதியின் உத்தரவு முழுவதும் சரியாக இருக்கலாம். ஆனால் வழக்கின் தகுதியை முதலிலேயே தீர்மானிக்க யாருக்கும் உரிமை இல்லை. குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் உறுதியளித்திருக்க வேண்டும் என்ற வெங்கையா நாயுடுவின் கருத்து இந்த உத்தரவை பலவீனமாக்குகிறது.
கட்டுரையாளர் பிஷ்வஜித் பட்டாச்சார்யா இந்தியாவின் முன்னாள் அடிஷனல் சொலிஸிடர் ஜெனரல் ஆஃப் இந்தியா மற்றும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆவார்.
தம்மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்ட உடனே தலைமை நீதிபதி பதவி விலகி இருக்க வேண்டும். அதுவே தார்மிக
அடிப்படையானது…சோத்துல உப்பு போட்டு தின்பவன் அதை செய்து இருப்பான். இவனுங்க பணம் பதவி தக்கவைக்க என்னவேண்டுமானாலும் செய்வாங்க.
Thunai kudiarasu thalaivar. . First line la thirutham ji