நீண்டதொரு ஆன்மீகப் பயணத்தை முடித்த களைப்பில் மாமா ஜி அமர்ந்திருந்தார். அவரின் பிடதி ஆசிரம பயண விபரங்களை கேட்கலாம் என்று ஆமா ஜி வந்தார்.
ஆமா ஜி : ஜி, ஆன்மீக பயணம் எல்லாம் எப்படி ஜி போச்சு ?
மாமா ஜி : ஆன்மீக பயணமா ஜி அது, சொர்க்கம் ஜி
ஆமா ஜி : என்ன ஆச்சு ஜி ?
மாமா ஜி : மன நிம்மதி அடைய தான் ஜி நானே அங்க போனேன், ஆசிரமம் மாதிரியே இல்ல ஜி அது. டீச்சரில் இருந்து சினிமா நடிகை வரை, வெளிநாட்டில் இருந்து சுதேசி வரை எங்க பாத்தாலும் பல பிட்டுங்க ஜி.
ஆமா ஜி : அந்நிய நேரடி முதலீடுன்னு சொல்லுங்க ஜி. 2013ல மோடி ஜி சொன்னாரு, நான் ஆட்சிக்கு வந்தா வெளிநாட்டுகாரங்க எல்லாம் நம்ம நாட்டுக்கு வேலை தேடி வருவாங்கனு அது நிஜம் தானா ஜி?
மாமா ஜி : கடுப்பேத்தாதீங்க ஜி, அந்த சாமியார் கதவை திற காத்து வரட்டும்னு அடிக்கடி சொன்னாரு. அதே மாதிரி ஜாலிதான்னு நெனைச்சிக்கிட்டு போனேன்.
ஆமா ஜி : அப்புறம் ?
மாமா ஜி : போனதும், நல்லா ஸ்பஷ்டமா திறுநீரெல்லாம் வச்சிக்கிட்டு ஒரு ஐயர் வரவேற்றாரு. வாங்கோண்ணா. வாங்கோன்னு சொல்லி, பாரதியார் கவிதை படிச்சாரு.
ஆமா ஜி : அப்புறம்.. ?
மாமா ஜி : நான் எங்க தங்கறது… ? ஃபேஸ்புக் வீடியோவுல, பாப்பாங்கள்ளாம் பாட்டு பாடுமே. அவங்க கூடவா ன்னு கேட்டேன். அவ்வளவுதான். என்ன கோவத்துல இருந்தானோ தெரியல. திட்டுனான் பாருங்க…. அய்யய்யோ. நம்ப பக்தா கூட அவ்வளவு கேவலமா பேச மாட்டா. அப்படி பேசறான் ஜி.
ஆமா ஜி : சரி விடுங்க ஜி. பக்தா வாழ்க்கையில இப்படியெல்லாம் மானக்கேடு நடக்கறது சகஜம்தானே ? நீங்க இல்லாத நேரத்துல என்ன என்னமோ ஆயிடுச்சு ஜி
மாமா ஜி : கட்சி ஆபிஸ் போயிட்டு தான் ஜி வரேன். சேகர் வாய் உள்ள பிள்ளை எப்படியாவது தப்பிச்சிடுவார், நம்ம ராஜா ஜி தான் பாவம் வெகுளி என்ன பண்றாரோ?
ஆமா ஜி : ஜி அவர் அடிவாங்காம தப்பிச்சிட்டார் அப்பறம் நம்ம கிட்ட பிரச்சாரத்துக்கு போறேன்னு தானே ஜி சொல்லிட்டு போனார், கடைசில பூத் ஏஜென்ட்டா போயிருக்கார்.
ஆமா ஜி : என்ன ஜி சொல்றீங்க. மோடி ஜியே என்னை பிரச்சாரத்துக்கு கூப்புட்டாரு. அதான் போறேன்னு சொன்னாரு ?
மாமா ஜி : என்ன ஜி நீங்க. இத்தனை வருஷமா அமைப்புல இருக்கீங்க. நம்ப ஆளுங்க என்னைக்கு உண்மை பேசியிருக்காங்க ? அது மட்டும் இல்லாம, ராஜா ஜி கிட்ட மைக்க நீட்டுனாலே ரெண்டு ஊருக்கு வெட்டு குத்து ஆய்டும், பிரச்சாரத்துல எல்லாம் பேச விட்டா அவ்வளவு தான்
ஆமா ஜி : அதுவும் சரி தான் ஜி, முன்ன எல்லாம் மத்த கட்சிக்காரங்க தான் ராஜா ஜிய கிண்டல் பண்ணுவாங்க, இப்போ நம்ம ஆளு குருமூர்த்தி அவரோட பத்திரிகைலேயே ராஜா ஜிய திட்டுறாங்களே ஜி
மாமா ஜி : நானும் படிச்சேன் ஜி, பாஜகவை பிடிச்ச சனி அப்படினு தலைப்பு வேற வச்சிருக்கானுக. ராஜா ஜிய பாத்தா மெண்டல்னு வேணும்னா சொல்லலாம் ஆனா சனியன்னு சொல்றது தான் தாங்க முடியல ஜி. இதோ குருமூர்த்தி ஜியே வந்துட்டாரே. அவர் கிட்டயே கேப்போம்.
(குருமூர்த்தி போனில் யாரிடமோ பேசியவாறே வருகிறார். )
மாமா ஜி : என்ன ஜி. பலமா பேசிக்கிட்டு வர்றேள். யாருகிட்ட ?
குருமூர்த்தி : நம்ப மோடி ஜி கிட்டதான்.
மாமா ஜி : என்ன கேட்டாரு. நீங்க என்ன சொன்னீங்க.
குருமூர்த்தி : தாமரையை எப்படி மலர வைக்கிறதுன்னு கேட்டாரு. கால் கிலோ, பொட்டாசியமும், 100 கிராம் யூரியாவும் போடுங்கன்னு சொன்னேன்.
மாமா ஜி : என்ன ஜி இப்படி சொல்றீங்க. ?
குருமூர்த்தி : பின்ன என்ன ஓய்… மோடி ஜி பல ரகசியங்களை என் கிட்ட பேசுவாரு. அதையெல்லாம் நான் வெளியில சொல்ல முடியுமா ? முந்தா நாளு கூட, சீனாவுக்கு போயி, சீனாவோட ராணுவ பலவீனங்களையெல்லாம், கண்டு பிடிச்சிட்டு வந்து, எப்போ சீனா மேல போர் தொடுக்கலாம்னு கேட்டாரு. நாந்தான், இப்போ அஷ்டம சனி நடக்குது. இப்போ வேணாம். ரெண்டு மாசம் போகட்டும். அப்புறம் ஆரம்பிக்கலாம்னு சொன்னேன்.
ஆமா ஜி : மோடி ஜி சீனாவோட ராணுவ ரகசியங்களை எப்படி கண்டுபிடிச்சாரு.
குருமூர்த்தி : மோடி ஜி சீனா போயிருந்தப்போ, அவருக்கு சிக்கன் ப்ரைட் ரைஸும், ஜாஸ்மின் டீயும் சமைச்சு வைச்சிருக்காங்க. மோடி ஜியோட பாதுகாப்புக்கு இருந்த ராணுவ அதிகாரிகள் அத்தனை பேரும், அந்த ப்ரைட் ரைஸையே பாத்து எச்சு ஊறுனதை மோடி கண்டு பிடிச்சிட்டாரு. நம்ப மேல போர் தொடுத்து வந்தாங்கன்னா, எல்லையில, நம்ப பக்தாவை விட்டு, அண்டா அண்டாவா சிக்கன் ஃப்ரைட் ரைஸ் சமைச்சு வச்சா அந்த வாசனையிலயே கிறங்கி போயி துப்பாக்கியை தூக்கி ஓரமா வச்சிட்டு சாப்பிட வந்துடுவா. எல்லையில இருக்குற நம்ப ராணுவ வீரர்கள், ஈசியா சீனாவை கைப்பத்திடுவா. இதை மோடி ஜியே கண்டுபிடிச்சாருன்னா பாத்துக்கங்களேன்.
ஆமா ஜி : ஏங்க. என்னங்க இது. சீனாக்காரன், டெக்னாலஜியில உலகத்தையே தூக்கி சாப்பிட்டுக்கிட்டு இருக்கான். இந்த ஆளு அவனுங்களை வெறும் சோத்தமுக்கின்னு சொல்றாரு.
மாமா ஜி : சும்மா இருங்க ஜி. அவர் இந்தியாவின் மிகப் பெரிய அறிவுஜிவி. அவரு சொன்னாருன்னாக கரெக்டாதான் இருக்கும். இருங்க அவரை பேச விடுங்க.
குருமூர்த்தி : போன வாரம் கூட, தென் கொரிய அதிபர் போன் பண்ணாரு. பாருங்க குருமூர்த்தி ஜி. இந்த வட கொரிய அதிபர் ரொம்ப தொல்லை பண்றாரு. எப்போ போர் வரும்னே தெரியலை. என்ன பண்றதுன்னு கேட்டாரு. உங்களுக்கு என்ன வேணும். சண்டையா சமாதானமான்னு கேட்டேன். இல்ல சமாதானமாவே போறோம்னு சொன்னாரு. டக்குன்னு கிம் ஜாங் உன் க்கு போனை போட்டேன். அவர் கொரிய நாட்டை சேர்ந்த ப்யூர் ஆரியர். நம்பவா. நீங்களே சொல்லிட்டீங்கள்ள. உடனே போறேன் ஜின்னு எல்லையை தாண்டி போயிட்டாரு.
மாமா ஜி : மேல சொல்லுங்க ஜி.
குருமூர்த்தி : அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு ட்விட்டரை சொல்லிக் கொடுத்ததே நான்தான். அதை வைச்சுதான் அவர் தேர்தல்லயே ஜெயிச்சாரு.
மாமா ஜி : ஆனா அவரு ட்விட்டர்ல லூசு மாதிரி உளறுரான்னு அமெரிக்க பத்திரிக்கைகள் எழுதுறாங்களே.
குருமூர்த்தி : இதுதான் பத்திரிக்கைகள் கிட்ட பிரச்சினையே. இந்தியா மட்டும் இல்ல. உலகம் பூரா பல பத்திரிக்கைகள் இப்படித்தான் மக்கள் விரோதமாவே இருக்கு. தமிழ்நாட்டுல கூட சவுக்குன்னு ஒரு பய இருக்கான். நம்பவாக்கு எதிரா ரொம்ப மோசமா எழுதிக்கிட்டு இருக்கான். நம்ப கிரிஜாக்கிட்ட சொல்லி, ரெண்டு வருசத்துக்கு வெளியில வராம உள்ள தள்ளணும்.
ஆமா ஜி : யாரு ஜி கிரிஜா ?
குருமூர்த்தி : நம்ப தலைமைச் செயலாளர்.
ஆமா ஜி : அவங்க தலைமைச் செயலாளர் ஜி. உங்காத்து மாட்டுப் பொண்ணு மாதிரி பேசறீங்க.
குருமூர்த்தி : கிரிஜா நம்பப் பொண்ணு ஓய். என்ன சொன்னாலும் கேப்பா. இப்போ கூட பாருங்கோ. தஞ்சாவூர்ல சாஸ்த்ரா பல்கலைக்கழகம் 40 ஏக்கர் கவர்மென்ட் லேண்டை வளைச்சு போட்ருக்காங்க. ஜஸ்ட் 40 ஏக்கர்தான். அதை அவாளுக்கே குடுத்துடுங்கோன்னு கேக்கறா. கிரிஜாக்கிட்ட சொன்னேன். உடனே சரின்னுட்டா.
ஆனா, நில ஆணையரா யாரோ ஜெயக்கொடின்னு ஒருத்தன் இருக்கானாம். கண்டிப்பா ஷுத்ராவாத்தான் இருப்பான். அவன் என்னடான்னா சட்டம் பேசறானாம். இதுக்கு விதிகள்ல இடம் இல்லன்னு சொல்றானாம். விதிகளைப் பாத்து நடவடிக்கை எடுக்கறதுக்கு எதுக்கு நம்ப கவர்மென்ட். கிரிஜாக்கிட்ட போனை போட்டேன். குரு ஜி. உடனே ஜெயக்கொடியை மாத்திட்டு, நம்பவாளை போட்டுட்றேன்னு சொல்லிட்டா.
ஆமா ஜி : சரி. இந்த சவுக்கு பயலை ஜெயில்ல போட்டா அடங்கிடுவானா ஜி. அவன் ஏற்கனவே ரெண்டு தடவை ஜெயிலுக்கு போயிட்டு வந்தவனாமே.
குருமூர்த்தி : அப்படித்தான் சொல்றாங்க. ஜெயிலுக்கு போயிட்டு வந்தா வெளியில வந்து இன்னும் வேகமா எழுதுவான்னு சொல்றாங்க. ராஸ்கல் முஸ்லீமா இருந்தான்னா, ஈசியா அல் கொய்தான்னு நிரந்தரமா உள்ள போட்டுடலாம். டெலிகேட் பொசிசன்.
ஆமா ஜி : என்கவுன்டர்ல போட்டுட வேண்டியதுதானே ஜி.
குருமூர்த்தி : அதுலயும் ஒரு பிரச்சினை இருக்கு. நெறய்ய நான் பிராமின் ஆபீசர்ஸ் அவனுக்கு ப்ரெண்டா இருக்கா. அதுக்காகத்தான் சிபி.சிஐடிக்கு நம்பவா அம்ரேஷ் பூஜாரியை கொண்டு வந்துருக்கேன். அவனை காலி பண்றதுக்கு எனக்கு ஒரு செகன்ட் ஆகாது. சிஐஏகிட்டயோ மொஸ்ஸாட் கிட்யோ சொன்னா, ரெண்டு நிமிசத்துல காலி பண்ணிடுவா. பட், இந்தியாவோட உள் விவகாரங்கள்ல அந்நிய சக்திகள் தலையிட்றது எனக்கு பிடிக்காது.
குரு ஜி. இதெல்லாம் நம்பற மாதிரியே இல்லையே ஜி.
குருமூர்த்தி : நம்பறீங்களா. இல்ல கட்சியை விட்டு தூக்கவா.
ஆமா ஜி : நம்பறேன் ஜி. முழுசா நம்பறேன்.
குருமூர்த்தி : ரெண்டு வாரம் முன்னாடி இஸ்ரேல் பிரதமர் போன் பண்ணியிருந்தாரு.
ஆமா ஜி : குரு ஜி. போதும் ஜி. ப்ளீஸ். ஒரே ஒரு சந்தேகம் ஜி.
குருமூர்த்தி : இந்தியன் எகானமி பத்தியா. பேஷா சொல்றேன்.
ஆமா ஜி : அது இல்ல ஜி. துக்ளக் ஓனர் சோ வோட பையன் ரமேஷ், மரியாதையா துக்ளக்கை ஒப்படைச்சிட்டு ஆபீஸை காலி பண்ணுன்னு சொல்றாராமே. உலக பிரச்சினையெல்லாம் தீத்து வைக்கிறீங்க. உங்களயே ஒருத்தன் விரட்றானே.
குருமூர்த்தி : மாமா ஜி. ஹு ஈஸ் திஸ் ஃபெல்லோ. ஆளு கருப்பா இருக்கான். கண்டிப்பா ஷுத்ராவாத்தான் இருப்பான். இவன் கூடவெல்லாம் உங்களுக்கு என்ன பேச்சு ?
மாமா ஜி : கோச்சுக்காதீங்க ஜி. நம்ப பையன். கொஞ்சம் வாய் துடுக்கு. நீங்க கோச்சுக்காதேள். நீங்க போயிட்டு வாங்கோ. அப்புறமா பேசுவோம்.
(குருமூர்த்தி மீண்டும் தனது ஐபோனை எடுத்து, உலக பிரச்சினைகளை தீர்த்து வைக்கத் தொடங்குகிறார்)
ஆமா ஜி : அது சரி ஜி, நம்ம மோடி ஜி பிரச்சாரத்துக்கு போகாம சீனா போய்ட்டாரே?
மாமா ஜி : எல்லாம் காரணமா தான் ஜி, எப்படி பாத்தாலும் நாம ஜெயிக்க முடியாதுனு தலைமைக்கு தெரிஞ்சிருச்சு, அதனால் மோடி ஜி பேரு கெடக்கூடாதுனு எங்கயாவது போங்கன்னு நாக்பூர்ல இருந்து உத்தரவு ஜி
ஆமா ஜி : விஷயமே இல்லாம எப்படி ஜி சீனா போறது ?
மாமா ஜி : அங்க தான் ஜி பிரச்சனையே, சீனா அதிபர் மோடிஜிய மானங்கண்ணியா திட்டிட்டாராம் ஜி
ஆமா ஜி : என்ன ஜி சொன்னாராம் ?
மாமா ஜி : என்ன மேன், பொண்ண கட்டி குடுத்த சம்பந்தியாட்டம் பொசுக்கு பொசுக்குன்னு வந்து நிக்கற, ஒழுங்கு மரியாதையா ஊரை சுத்தி பாத்துட்டு போய்டுங்கனு சொல்லிட்டாராம்.
ஆமா ஜி: அப்போ சீனா விஜயம் தோல்வியா?
மாமா ஜி : என்ன ஜி நாமளே இங்க தோல்விக்கு பயந்து தான் அங்க
போயிருக்கோம், அப்பறம் விஜயம் தோல்வியானு கேக்கறீங்க. முன்ன எல்லாம் ஏதாவது ஒப்பந்தத்துல கையெழுத்து போட்டு பீலாவாவது விடுவோம், இந்தவாட்டி எதுவுமே இல்ல பாத்தீங்களா.
ஆமா ஜி : உண்மைதான் ஜி, அவர் போனதே நெறய பேருக்கு தெரியல. அவர் சீனா போய்ட்டேனு ஒரு ட்வீட் போட்டார் அப்போ தான் எனக்கே தெரிஞ்சுது
மாமா ஜி : போனதே ஒளியறதுக்கு அங்க போய் இவரை ட்வீட் போட சொல்லுதா ? அந்த டீவீட்டுக்கு ஒரு பக்கி ரிப்ளை பண்ணி வரும்போது ஐபோன் கேபிள் வாங்கிட்டு வாங்க , நீங்க குடுக்கப்போற 15 லட்சத்தில் அந்த காச கழிச்சிட்டு மீதிய குடுங்கன்னு கேக்கறான்
ஆமா ஜி : இப்படி எங்க போனாலும் கேட்ட போட ஆன்டி இந்தியன்ஸ் இருக்கானுக ஜி
மாமா ஜி : உண்மை தான் ஜி, இதுக்கு மேல ஒழிய முடியாதுனு தெரிஞ்சு மோடி ஜி பிரச்சாரத்துக்கு போய்ட்டார்.
ஆமா ஜி : சரி ஜி அங்க போய் தேவகௌடாவை ஏன் சம்பந்தம் இல்லாம புகழ்ந்து பேசறாரு ? 2014 தேர்தலுக்கு முன்னாடி மோடி ஜி பேசின போது, தேவகௌடாவுக்கு வயசு ஆயிடுச்சு அரசியல் எல்லாம் மூட்டை கட்டிவச்சுட்டு டெல்லில முதியோர் இல்லத்தில் சேர்ந்தா நான் பத்துக்கறேனு பேசினாரே ஜி
மாமா ஜி : ஜி பெத்த தாயவே பண மதிப்பிழப்பின் போது ATM வாசல்ல நிக்க வச்சிட்டு அத போட்டோ எடுத்து அரசியல் செஞ்சவரு ஜி நம்ம மோடி, அவராவது தேவகௌடாவை பாத்துக்கறதாவது. வேணும்னா அத்வானிக்கு பக்கத்துல ரூம் போட்டு கொடுப்பார் அவ்ளோதான்.
ஆமா ஜி : பின்ன எதுக்கு ஜி இந்த திடீர் பாசம் ?
மாமா ஜி : வேற எதுக்கு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காட்டி அப்போ போய் காலில் விழ முடியாதுல அதான் ஜி .
ஆமா ஜி : சரி ஜி, மோடி ராகுல் காந்தி மாதிரி என்னால எல்லாம் உடை அணிய முடியாதுனு அநியாயத்துக்கு அடிச்சு விடறாரே ஜி ? கர்நாடகா காரனுக அவ்ளோ ஏமாளிகளா ஜி
மாமா ஜி : ஏமாளிகளா? நீங்க வேற, அவர் எதோ ரோலிங்ல என்ன என்னமோ பேசறாரு. பேசின பத்தாவது நிமிஷம் அவர் வெளிநாடு போன போது போட்ருந்த சட்டை விலை 17000 யூரோனு கண்டுபிடிச்சிட்டாங்க
ஆமா ஜி : 17000 யூரோனா எவ்வளவு ஜி
மாமா ஜி : 13 லட்சம் தான் ஜி இதைப்போய் எதோ பெரிசு பண்ணிட்டு
ஆமா ஜி : அது சரி ஜி இந்த திரிபுரா முதல்வர் யாரோ பிம்பிலிகா பிளாப்பியாமே, அவர் தான் ஒரே நியூஸ்
மாமா ஜி: ஜி அது பிப்லாப் தெப்.
ஆமா ஜி : அவர் என்ன ஜி, மகாபாரத காலத்துலயே இணையம் இருந்தது, சிவில் படிச்சவன் தான் சிவில் சர்வீஸ் எழுதணும்னு வாய்க்கு வந்ததெல்லாம் பேசறாரு?
மாமா ஜி : விஷயம் இருக்கு ஜி. நம்ம மோடி ஜி, உலகத்துலயே முதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விநாயகருக்கு யானை தலை வச்சது தான்னு ஒரு தடவ பேசிட்டார். ஊரே காரி துப்புச்சு, இப்படி அவர் பலதடவை உதிர்த்த முத்தை எல்லாம் நோண்டி எடுத்து தேர்தல் சமயம் வெளியிட போறாங்கன்னு உளவு துறை சொல்லுது
ஆமா ஜி : அய்யயோ, என்ன ஜி பண்றது?
மாமா ஜி : வெரி சிம்பிள் ஜி, ஒரு பெரிய கோட்டுக்கு பக்கத்துல அத விட பெரிய கோடு போட்டா என்ன ஆகும் ?
ஆமா ஜி : முதல்ல இருந்த பெரிய கோடு சின்ன கோடு ஆய்டும் ஜி
மாமா ஜி : அத தான் ஜி இங்கயும் பண்றோம். இப்போ போகஸ் பூரா பிப்லாப் தம்பி மேல.
ஆமா ஜி : பிரமாதம் ஜி. ஆனா எனக்கு என்ன பயம்னா பக்தாள் எல்லாம் பிப்லாப் மேல மயங்கி அவர் தான் பிரதமர் ஆகணும்னு கேட்டா என்ன பண்றது ?
மாமா ஜி : வாய்ப்பு இருக்கு ஜி, அந்நேரம் பாத்து மோடி ஜி கைல இருக்க ஸ்கிரிப்ட உருவி மேடை ஏத்தினா போதும், பிப்லாப்பே பிச்சை எடுக்கற மாதிரி நம்ம தல பேசுவார். அப்பறம் பக்தாள் எல்லாம் மோடி ஜி கிட்ட வந்து தானே ஆகணும்
ஆமா ஜி : சரியா சொன்னீங்க ஜி. அப்பறம் இந்தியாவில் எல்லா கிராமத்துக்கும் கரண்ட் குடுத்துட்டமாம், நாசா கூட ஏதோ போட்டோ வெளியிட்டுருக்காம் ஜி
மாமா ஜி : அந்த போட்டோவை பாத்தீங்களா ஜி
ஆமா ஜி : இல்லையே ஜி, ஏன் ஜி ?
மாமா ஜி : பாத்தா அப்படி பேச மாட்டீங்க, இந்தா பாருங்க
ஆமா ஜி : ஜி இந்த போட்டோவை எல்லா தீபாவளிக்கும் வாட்ஸாப்பில் அனுப்புவானுகளே ஜி. அந்த போட்டோவையா ஆதாரமா சொல்றோம் ? என் பையன் கூட நம்ப மாட்டானே ஜி
மாமா ஜி : உங்களுக்கு தெரியுது, மத்திய மந்திரி அவருக்கு தெரியலையே. அவர் பையன், சம்சாரம் நடத்தும் கம்பெனி விஷயம் வேற வெளிய வந்துடுச்சா அதான் எதையாவது பண்ணனும்னு இப்படி பண்ணி மாட்டிட்டார்
ஆமா ஜி : சரி ஜி அப்போ நம்ம கரண்ட் குடுத்துட்டோமா இல்லையா ?
மாமா ஜி : கரண்ட் எல்லா கிராமத்துக்கும் போயிடிச்சு ஜி, இன்னும் கொசுறு வேலை தான் பாக்கி. ட்ரான்ஸ்பார்மர் போடறது, கரண்ட் கம்பம் நடறது, EB ஆபீஸ் கட்டுறது இதெல்லாம் பண்ணிட்டா முடிஞ்சிடும் ஜி
ஆமா ஜி : அது சரி, இப்போ தான் கரண்ட் கம்பமே வாங்க போறோமா.
மாமா ஜி : ஜி, 2005-2014 வரை 1 லட்சம் கிராமத்துக்கு கரண்ட் கொடுத்தாச்சு , நம்ம வந்ததுக்கு அப்பறம் 18 ஆயிரம் கிராமத்துக்கு தான் கொடுத்தோம். இதெல்லாம் வெளிய செல்ல முடியுமா ?
ஆமா ஜி : ஜி. இன்னும் 11 மாசத்துல தேர்தல் வந்துடும்.
முன்னாடில்லாம் நாம என்ன பொய் சொன்னாலும் மக்கள் நம்புனாங்க. இப்போ, நாம பேசி முடிக்கிறதுக்குள்ளயே ட்விட்டர்லயும் ஃபேஸ் புக்குலயும் போட்டு கிழிக்குறானுங்க ஜி.
மாமா ஜி : இந்த இடத்துலதான் நாம மோடி ஜியை பாத்து கத்துக்கணும். வியாழக்கிழமை ஒரு பிரச்சாரக் கூட்டத்துல பேசுனாரு. கர்நாடகாவைச் சேர்ந்த ராணுவ தளபதி திம்மையாவை 1948ம் ஆண்டுல நேருவும், அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் கிருஷ்ணமேனனும் அவமானப்படுத்துனாங்கன்னு சொன்னாரு. 1957லதான் கிருஷ்ணமேனன் பாதுகாப்புத் துறை அமைச்சரானாரு. திம்மையாவும் அப்போதான் ராணுவ தளபதியானாரு. மோடி ஜி மேடையை விட்டு இறங்கறதுக்குள்ள, ட்விட்டர்ல போட்டு கிழி கிழின்னு கிழிச்சாங்க.
இதுக்கெல்லாம் மோடி ஜி அசர்ற ஆளா ? அடுத்த மீட்டிங்குல, இதை விட பெரிய பொய்யை மாடுலேசனோட சொல்லுவாரு பாருங்க.
பக்தாளா இருந்தா இப்படி பல மூத்திர சந்துகள்ல அடி வாங்கறதுக்கு பழகிக்கணும் ஜி. வெசனப்படக் கூடாது. இன்னும் நாடு முழுக்க நமக்கு பல வரவேற்புகள் காத்திருக்கு. அடுத்து மத்தியப் பிரதேசம் இருக்கு. ராஜஸ்தான் இருக்கு. பல பெசல் ஐட்டங்களை மக்கள் அங்கங்க வச்சிக்கிட்டு காத்து இருக்காங்க. நீங்க என்ன இதுக்கே மலைச்சு போறீங்க.
போங்க ஜி. போயி தாமரையை மலர வைக்கிற வேலையை பாருங்க.
(இருவரும் கிளம்புகின்றனர்)
super
No satire at the expense of our defence forces please!