தேர்தல் களத்தில் நேரடியாக சென்று ரிப்போர்ட்டிங் செய்வதே ஒரு சுவையான அனுபவம். லேப்டாப்பை திறந்து வைத்துக் கொண்டு, கூகுள் மற்றும் சமூக வலைத்தளங்களை மட்டுமே பயன்படுத்தி ஒரு நேர்த்தியான தேர்தல் அலசலைத் தர முடியும்தான் என்றாலும், களத்துக்கு சென்று மக்களை நேரில் சந்திப்பது தரும் அனுபவமே தனிதான்.
நேரடியாக களத்துக்கு சென்று, மக்கள் சந்திக்கு பிரச்சினைகள் அவர்கள் வாயால் கேட்பது, ஒரு பத்திரிக்கையாளர் கையாள வேண்டிய அவசியமானதொரு பணி.
மைசூர் மாவட்டத்தில் இருக்கும், வருணா தொகுதியை தேர்ந்தெடுத்தேன். வருணா தொகுதி ஒரு விஐபி தொகுதியாக, மிக பலமான போட்டி நடக்கும் பகுதியாக இருந்ததுதான் அந்தத் தொகுதியை தேர்ந்தெடுத்ததற்கு காரணம். இந்தத் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ சித்தாராமையா. அவர் மகன், யதீந்திரா இத்தொகுதியில் போட்டியிடுகிறார். கர்நாடக பிஜேபியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவின் இரண்டாவது மகன், பிஒய். விஜயேந்திராவுக்கு வருணா தொகுதி ஒதுக்கப்படுவதாக இருந்தது. விஜயேந்திரா இரண்டு வாரங்களுக்கு மேல் வருணாவில் பிரச்சாரமெல்லாம் செய்து விட்டார். ஆனால் இறுதி நேரத்தில், பிஜேபி தலைமை எடியூரப்பா மகனுக்கு டிக்கெட் இல்லை என்று கூறி விட்டது. இதையொட்டி, வருணா தொகுதியில் விஜயேந்திரா ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
பிஜேபி, எடியூரப்பா மகனுக்கு டிக்கெட் வழங்காமல் மறுத்ததற்கான காரணம், எடியூரப்பா மகனுக்கு டிக்கெட் கொடுக்கவில்லையென்றால், காங்கிரஸை வாரிசு அரசியல் என்று எளிதாக விமர்சிக்கலாம் என்பதே. இதை பிஜேபியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான முரளிதர் ராவே ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் இதே சட்டப்பேரவையில், எடியூரப்பாவின் மூத்த மகனான பிஒய்.ராகவேந்திரா சியாரிப்பூர் தொகுதியின் எம்எல்ஏவாக இப்போது வரை இருந்து வருகிறார் என்பதை முரளிதர் ராவும், இதை ஒரு பெரிய விவகாரமாக பேசிய மோடியும் வசதியாக மறந்து விட்டார்கள்.
யதீந்திரா ஒரு மருத்துவர். அவர் மருத்துவத் தொழிலில்தான் ஈடுபட்டு வந்திருந்தார். சித்தாரமைய்யாவின் மூத்த மகன், ராகேஷ் சித்தாரமைய்யா 2016 ஜுலை மாதத்தில், பெல்ஜியம் நாட்டில் காலமானார். நீண்ட நாட்களாகவே கணைய பிரச்சினை இருந்த அவர், பல்லுறுப்பு செயலிழப்பு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார். ராகேஷ், சித்தாராமையாவின் தொகுதிப் பணிகளை தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு மேலாக கவனித்து வந்தார். அவர் இறந்தது முதல், தன் மருத்துவப் பணிகளை துறந்து, யதீந்திரா, அரசியலில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார்.
வருணா தொகுதி ஒரு ஊரகப் பகுதி . இத்தொகுதியின் கீழ், 122 கிராமங்கள் வருகின்றன. பெரும்பாலும் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. வயல்களில் நெல்லே பிரதான பயிர். நெல் பயிரிடுவதை, தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களைப் போலவே பெருமையாக கருதுகிறார்கள்.
2017ம் ஆண்டு உள்ள கணக்கின்படி 2.20 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 20 முதல் 29 வயது உள்ளவர்கள் 19 சதவிகிதம். 30 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் 23 சதவிகிதம். 40 முதல் 49 வயது வரை உள்ளவர்கள், 22 சதவகிதம். பெரும்பாலானோர் விவசாயத்தையே நம்பி உள்ளனர்.
கிராமங்கள் அருகருகே இல்லாமல் தள்ளித் தள்ளி உள்ளன. முதலில் பிஜேபி ஆதரவாளர் ஒருவரை சந்தித்தேன். அவர் பெயர் சந்திரசேகர். பிஜேபியின் தீவிர ஆதரவாளர். யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்டதற்கு, நோட்டா அல்லது, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் வேட்பாளர் அபிஷேக்குக்கு வாக்களிப்பேன் என்றார். என்ன நீங்களே இப்படிச் சொல்லலாமா என்றதற்கு, எடியூரப்பாவின் மகனுக்கு சீட் அளித்திருந்தால் நான் அவருக்கு வாக்களித்திருப்பேன். இப்போது பிஜேபி சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் பசவராஜை யாரென்றே யாருக்கும் தெரியாது. எதற்காக என் வாக்கை நான் வீணடிக்க வேண்டும் என்றார்.
வருணாவின் வாக்காளர்களில், லிங்காயத் சாதியினர் 50 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளனர். சித்தாராமைய்யாவின் சாதியான குருபர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் உள்ளனர். வொக்கலிகாக்கள் 20 ஆயிரம் பேர் உள்ளனர். தலித்துகள் மற்றும் பழங்குடியினர் 20 ஆயிரம் பேர் உள்ளனர்.
சித்தாரமைய்யாவுக்கும் அவர் மகனுக்கும் இந்தத் தொகுதியில் உள்ள முக்கியமான பலம், அவர்கள் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதே. பெரும்பாலானோர் அவர் எங்கள் ஊரைச் சேர்ந்தவர். அவர் ஜெயிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
பிஜேபி ஆதரவாளர் ராஜசேகரிடம், இந்தத் தொகுதியில் தற்போது எம்எல்ஏவாக இருப்பவர் சித்தாராமைய்யா. அவர் இந்தத் தொகுதிக்கு ஏதாவது செய்துள்ளாரா என்று கேட்டதற்கு, ஒரு பணி கூட இத்தொகுதிக்கு செய்யவேயில்லை என்றார். வெறும் மத்திய அரசுத் திட்டங்களை மட்டுமே செயல்படுத்தினார். மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த வேண்டியது ஒரு மாநில அரசின் கடமை. இவருக்கு அதற்கான எந்த மதிப்பையும் தர இயலாது என்றார். அவரிடம் பேசியபோது அருகில் இருந்த ஒருவருக்கு, அந்த பிஜேபி ஆதரவாளர் கூறியது பொய் என்று தோன்றியதோ என்னமோ. நீங்கள் மற்ற கிராமங்களுக்கு சென்று, எம்எல்ஏ என்ன வேலை செய்துள்ளார் என்பதை விசாரித்துக் கொள்ளுங்கள் என்றார். பிஜேபி ஆதரவாளர்கள் வாயில் உண்மையே வராது என்பது ஊர் முழுக்கத் தெரிந்திருக்கிறது.
மோடியை உங்களுக்கு பிடிக்குமா என்று சந்திரசேகரிடம் கேட்டதற்கு, மிகவும் பிடிக்கும் என்றார்.
மோடிதானே பிஜேபிக்கு வாக்களிக்க சொல்கிறார். அவர் சொல்வதையும் மீறி நோட்டாவுக்கு வாக்களிப்பேன் என்கிறீர்களே என்று கேட்டதற்கு, மோடியை பிடிக்கும்தான். ஆனால், எடியூரப்பா எங்கள் ஊர் தலைவர். அவர் மகனுக்கு சீட் இல்லையென்றதை என்னால் ஏற்க இயலவில்லை என்றார்.
இந்தத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்று கேட்டபோது, சந்திரசேகர், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. தொங்கு சட்டமன்றம் அமையும். மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் உதவியோடு, பிஜேபி ஆட்சியமைக்கும் என்றார்.
அதற்கு அடுத்து கர்கேஸ்வரி என்ற கிராமத்துக்கு சென்றேன். அந்த கிராமம் ஒரு வித்தியாசமான கிராமம். இந்தியா என்ற நாட்டின் சிறப்பு என்ன என்பதை அந்த கிராமம் எனக்கு உணர்த்தியது.
அந்த கிராமத்தில் 6000 முஸ்லீம்கள் வசிக்கிறார்கள். இவர்கள் தஞ்சை மாவட்டத்தில் இருந்து 300 ஆண்டுகளுக்கு முன்னால் மைசூருக்கு குடிபெயர்ந்தவர்கள். ஒரு சிலர் தமிழும் பேசுகிறார்கள். இந்த கிராமத்தில் இருக்கும் 2500 முதல் 2800 இந்துக்கள் சிறுபான்மையினர். இப்பகுதியில் கடந்த 300 ஆண்டுகளாக ஒரே ஒரு மதச் சண்டை கூட வந்தது கிடையாது. முக்கியமான காரணம், இங்கே ஆர்எஸ்எஸ்ஸும் இல்லை. பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவும் இல்லை.
தொண்ணூறுகளில், பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து, இந்த கிராமத்தில் சங் பரிவார் அமைப்பை தொடங்க வெளியூர்களில் இருந்து சில காவிகள் வந்து முயற்சி செய்துள்ளனர். அவர்களை விரட்டியடித்தது அந்த ஊரில் உள்ள இந்துக்களே.
அந்த ஊரில் விவசாயத் தொழில் செய்து வரும், மஸ்ரூர் மற்றும் ஷகீர் அகமது ஆகியோரிடம் பேசினேன். இருவருமே சேர்ந்து பேசினார்கள்.
“சித்தாரமைய்யா, இதற்கு அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர். அவரின் சகோதரர்கள் இன்னும் விவசாயம்தான் செய்து வருகிறார்கள். பெரிய அளவில் அவர் சொத்து சேர்த்ததாக தெரியவில்லை. தொகுதிக்கான பெரும்பாலான அடிப்படை வசதிகளை அவர் செய்துள்ளார். அவர் இந்தத் தொகுதிக்கு வந்து பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் அவரின் மூத்த மகன் ராகேஷ் அவர் இறக்கும் வரை மாதா மாதம் தவறாமல் எங்கள் கிராமத்துக்கு வருவார். நீங்கள் அமர்ந்திருக்கும் இதே இடத்தில்தான் அமர்வார். அமர்ந்து எங்கள் கோரிக்கைகள் என்ன என்பதை கேட்டு, அவற்றை உடனே செய்து தருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார்.
நாங்கள் அனைவருமே காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறோம். பிஜேபி இந்து ஆதரவு கட்சி என்ற வெறுப்பினால் அல்ல. அவர்கள் கடந்த 4 ஆண்டுகளில் எதுவுமே செய்யவில்லை என்பதனால். இதற்கு முன்பு, எடியூரப்பா முதல்வராக இருந்தார். பெல்லாரி பகுதியைச் சேர்ந்த ரெட்டி சகோதரர்கள், பெலகாவி பகுதியின், ஜார்க்கிஹொள்ளி சகோதரர்கள் (இவர்களில் இருவர் காங்கிரஸ் டிக்கெட்டில் போட்டியிடுகிறார்கள்), ஷிமோகாவில், ரேணுகாச்சார்யா, ஈஷ்வரப்பா மற்றும் பெங்களுரில் அஷோக் மற்றும் ஷோபா ஆகியோர், எடியூரப்பாவை எந்தப் பணியையும் செய்ய விடவில்லை. போதாத குறைக்கு அவரது இரு மகன்களும், ஒரு மருமகனும் போட்டி போட்டுக் கொண்டு அரசு நிலங்களை ஏலம் போட்டு விற்றனர். அந்த நிலையை நாங்கள் எப்படி விரும்புவோம் ?”
மோடி வாரிசு அரசியல் என்பதை சுட்டிக் காட்டியுள்ளாரே. சித்தாராமைய்யா தன் மகனை அரசியலில் இறக்கி விட்டு சீட் கொடுத்துள்ளது உண்மைதானே என்று கேட்டதற்கு “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சித்தாராமைய்யாவின் இளைய மகன், தவறாமல் எங்களை சந்திப்பார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எங்கள் கிராமத்துக்கு 3 முறை வந்துள்ளார். இங்கே நடக்கும் அரசு கட்டுமானப் பணிகள் எங்களுக்கு திருப்தியாக உள்ளதா என்று கேட்டு, குறைகளைச் சொன்னால், உடனடியாக சம்பந்தபட்ட அமைச்சரிடம் கூறுவார். அவர் எங்கள் தொகுதியை மேலும் செம்மைப்படுத்துவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு”
மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும், பிஜேபிக்கு ரகசிய கூட்டு உள்ளது என்று கருதுகிறீர்களா என்று கேட்டதற்கு “அதில் சந்தேகமே வேண்டாம். கவுன்சிலல் தேர்தலில் கூட ஜெயிக்க முடியாத ஒரு நபரை, உள்ளுரில் யாரென்றே தெரியாத ஒரு நபரை, பிஜேபி வேட்பாளராக நிறுத்துகிறதென்றால் அதற்கு என்ன பொருள் இருக்க முடியும் ? ” என்று எதிர் கேள்வி கேட்டனர்.
ஒரு வேளை, தொங்கு சட்டப்பேரவை அமைந்து, மதச்சார்பற்ற ஜனதாதளமும், கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தால், சிறுபான்மையினருக்கு ஆபத்து வரும் என்று கருதுகிறீர்களா என்று கேட்டபோது, ஜனதாதளம் அப்படிப்பட்ட நடவடிக்கைகளை அனுமதிக்காது என்று உறுதியாக அவர்கள் கூறியது ஆச்சர்யமாக இருந்தது. பொதுவாகவே, சிறுபான்மையினர், பிஜேபி சம்பந்தப்பட்ட எதுவாக இருந்தாலும் அவநம்பிக்கையோடு பேசுவார்கள் என்று நினைத்திருந்த எனக்கு, அவர்களின் தளராத நம்பிக்கை, எனக்கும் நம்பிக்கையூட்டியது.
இந்துக்களுடனான உறவைப் பற்றி கேட்டபோது, “எங்கள் பண்டிகைகள் அனைத்திலும் அவர்கள் எங்களோடு பங்கேற்பார்கள். அவர்கள் பண்டிகைகளுக்கு எங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைப்போம். அவர்களின் வீட்டு விசேஷங்கள் மற்றும் திருமண காரியங்களில் கூட எங்களை கலந்தாலோசிப்பார்கள். சிறு சலசலப்பு கூட எங்கள் உறவுகளில் இது வரை வந்தது கிடையாது” என்றார் மஸ்ரூர்.
அவரைத் தொடர்ந்து ஷகீர் அகமது, “உள்ளாட்சித் தேர்தல் சமயங்களில், ஒரு வார்டில், முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருப்போம். எங்கள் ஓட்டு 700 இருக்கும். அவர்கள் ஓட்டு 300 இருக்கும். மற்றொரு வார்டில், அவர்கள் பெரும்பான்மையாக இருப்பார்கள். தேர்தலுக்கு முன்னதாகவே, நாங்கள் இருவரும் கூடி, ஒரு வார்டுக்கு இஸ்லாமியரையும், ஒரு வார்டுக்கு இந்துவையும் தேர்ந்தெடுத்து வருகிறோம். காலாகாலமாக இப்படித்தான் நடக்கிறது. இதில் இது வரை எந்த சச்சரவும் வந்தது கிடையாது” என்றார்.
பேச்சு விவசாயத்தைப் பற்றி வந்தது. “இங்கே பெரும்பாலும் விவசாயம்தான். குறிப்பாக நெல்தான் பிரதான பயிர். தஞ்சாவூரிலிருந்து குடிபெயர்ந்ததாலோ என்னவோ, எங்களுக்கு நெல்லின் மீது அப்படி ஒரு விருப்பம். வருடத்துக்கு இரண்டு போகம் விதைக்கிறோம். அது தண்ணீரைப் பொறுத்தது. கடந்த இரண்டு வருடங்களாக மழை சரியாக இல்லாததால், ஒரு போகம்தான் நெல் போட முடிகிறது. இரண்டாவது போகமாக பணப் பயிர்களை விதைக்கிறோம். தண்ணீர்தான் எங்கள் பயிரை தீர்மானிக்கிறது” என்றார்கள்.
தமிழ்நாட்டில் காவிரி நீர் கேட்கிறோம். தர மாட்டேன்கிறீர்களே என்றதும், தற்போது எங்கள் பயிர்களுக்கு தண்ணீர் தேவை. ஆனால் தற்போது இருக்கும் தண்ணீர், குடிப்பதற்குதான் பயன்படும் அளவு இருக்கிறது. எங்கள் பயிருக்கே தண்ணீர் இல்லாதபோது, நாங்கள் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விட வேண்டும் என்று எப்படி எதிர்ப்பார்க்கிறீர்கள். மேலும் நாங்கள் வருடத்துக்கு இரண்டு முறைதான் விதைக்கிறோம். ஆனால் நீங்கள் மூன்று போகம் விதைக்கிறீர்கள். நீங்கள் கேட்பது என்ன நியாயம் ” என்றார். என்னிடம் பதில் இல்லை.
மேலும் ”எங்கள் விவசாய நிலைமையே இப்படி இருக்கும்போது, எந்த கர்நாடக அரசியல்வாதி தமிழகத்துக்கு தண்ணீர் தருவேன் என்று சொல்ல முடியும் ? அப்படி சொல்லி விட்டு இங்கே வாக்கு கேட்டு வர முடியுமா ? உங்கள் ஊரில் யாரோ ஒரு அரசியல்வாதி, கர்நாடகத்தில் பிஜேபி ஜெயித்தால், தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார். இது எப்படி சார் சாத்தியமாகும் ? ” என்று அவர் கூறி முடிக்கும் முன்பே, அவர் பெயர் எச்.ராஜா, அவர் பிஜேபியின் தேசிய செயலாளர். தமிழகத்தில் பிரபல தலைவர். ட்விட்டரில் பரபரப்பாக செய்தி போடுவார் என்றேன்.
“அவரை எனக்கு தெரியாது தம்பி. ஆனா அப்படி பேசுறது நடக்குற காரியமா ? ” என்றார்.
அண்ணன் எச்.ராஜா அவர்களை கர்நாடகாவில் தெரியாமல் இருக்கிறதே, பிறகு கர்நாடகத்தில் தாமரை எப்படி மலரும் என்று என் மனதில் ஏற்பட்ட வேதனையை நான் அவர்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.
அவரே தொடர்ந்து, ”அல்லாவின் கருணையால், இந்த வருடமாவது நல்ல மழை பொழிந்தால், நம் இரு மாநிலத்திலும் விவசாயிகள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்” என்றார்.
அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு, சித்தாரமைய்யாவின் மகன், யதீந்திரா, தத்கிரே என்ற கிராமத்தில், பிரச்சாரம் செய்கிறார் என்ற செய்தி அறிந்து, அவரைப் பிடிக்க விரைந்தேன்.
தத்கிரே கிராமம், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, 4 கிலோ மீட்டர்கள் உள்ளே இருந்தது. கிராமத்துக்கு செல்லும் சாலைகள் கூட தரமான தார்ச்சாலைகளாக இருந்தன. இரு கிலோ மீட்டர்களுக்குப் பிறகு, தார்ச்சாலைகள் போடப்படுவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. தேர்தல் அறிவிப்பு காரணமாக பணிகள் நிறுத்தப் பட்டிருந்தன.
ஒரு இன்னோவாவில், யதீந்திரா பயணித்தார். பாதுகாப்புக்கு சீருடை இல்லாமல் ஒரு காவல்துறை அதிகாரி. பின்னே இரண்டு ஜீப்புகள். அதில் ஒரு ஜீப் தேர்தல் ஆணையத்துடையது. யதீந்திராவோடு, அதிகபட்சமாக 10 பேர் இருந்தார்கள். அவர் கிராமத்தில் நுழைந்ததும், ஆண்களும் பெண்களும் சூழ்ந்து கொண்டார்கள். யுவதிகளும், இளைஞர்களும் செல்பி எடுத்துக் கொண்டார்கள். பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்களோ, ஆடம்பரங்களோ இல்லை.
அவர் நடந்து சென்ற நேரத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரிடம் கேள்விகளைக் கேட்டேன்.
உங்கள் மருத்துவத் தொழிலை விட்டு விட்டு அரசியலுக்கு வந்திருக்கிறீர்கள். இரண்டுக்குமான வேறுபாட்டை எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டதற்கு,
“மருத்துவத் தொழிலும் அரசியலும் முற்றிலும் வேறு வேறானவை. மருத்துவத் தொழிலாவது சிறிது ஓய்வு கிடைக்கும். ஆனால் அரசியலில் தொடர்ந்து 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டும். இரவு நேரத்தில் கூட தங்கள் குறைகளோடு மக்கள் வருவார்கள். அவர்களை எந்த நேரத்திலும் சந்திக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொடக்கத்தில் கடினமாகத்தான் இருந்தது. ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பழகிக் கொண்டேன்” என்றார்.
மோடி தனது அரசியல் பேச்சில், 2 ப்ளஸ் 1 என்று, நீங்கள் தேர்தலில் நிற்பதை வாரிசு அரசியல் என்று விமர்சிக்கிறாரே என்று கேட்டதற்கு, “பிஜேபி மற்றும் மோடிக்கு, இந்தத் தேர்தலில் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை என்பதையே இந்த குற்றச்சாட்டு காட்டுகிறது. என்னை வாரிசு அரசியல் என்று கூறும் மோடியின் முதல்வர் வேட்பாளரின் மகன் ராகவேந்திரா தற்போது எம்எல்ஏவாகத்தானே உள்ளார்.
ராஜஸ்தான் முதல்வர் வசுந்த்ராவின் மகன் துஷ்யந்த் சிங் எம்பியாக உள்ளார். சத்தீஸ்கர் முதல்வர் ரமன் சிங்கின் மகன், அபிஷேக் எம்பியாக உள்ளார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் உத்தரப் பிரதேசத்தின் எம்எல்ஏவாக உள்ளார். பிஜேபிக்கு இந்தக் கேள்வியை எழுப்ப எந்த முகாந்திரமும் இல்லை.
மேலும், என்னை இந்த தொகுதியின் வேட்பாளராக அறிவித்தது, யாருடைய சீட்டையும் பறித்து அல்ல. என் அண்ணன் வேட்பாளராக இருக்க வேண்டியது. அவர் இறந்ததால் நான் வேட்பாளராகியிருக்கிறேன். நானும் இந்தத் தொகுதியில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பணியாற்றியிருக்கிறேன். ஒவ்வொரு கிராமத்துக்கும் குறைந்தது மூன்று முறையாவது சென்றிருக்கிறேன். இந்த மக்களின் பிரச்சினைகள் என்ன என்பது எனக்கு நன்றாகத் தெரியும்” என்றார்.
மூன்றாவது கலைஞர் நினைவில் வந்து போவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.
எடியூரப்பாவின் மகனுக்கு டிக்கெட் வழங்கப்படாததால், உங்கள் வெற்றி எளிதாகியுள்ளது என்று நினைக்கிறீர்களா என்று கேட்டதற்கு, “அவர் போட்டியிட்டிருந்தாலும் நான் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பேன். நான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆற்றிய பணி அத்தகையது. நான் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, இத்தொகுதிக்கு முதல் முறையாக வரவில்லை” என்றார்.
எடியூரப்பா மற்றும் அவர் மகன்கள் வசிப்பது, 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஷிமோகாவில் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் ஆட்சியமைத்தால் நீங்கள் அமைச்சரவையில் இடம் பிடிப்பீர்களா என்று கேட்டதற்கு, “கட்சி மேலிடம் முடிவு செய்யும்” என்று நாசூக்கான பதிலைச் சொன்னார்.
அவர் பேட்டியெடுக்க இன்ட்ரஸ்டிங்கான ஒரு நபராக இருந்தார். கேட்ட கேள்விகளுக்கு பதில்கள் தங்கு தடையின்றி வந்தன. பிரச்சார நெருக்கடியால் அவரிடம் மேலும் பேச முடியவில்லை.
மொத்தமாக கர்நாடகாவில், லிங்காயத்துகள், மற்றும் மதச் சிறுபான்மையினரின் வாக்குகள் காங்கிரசுக்கு விழும் என்று பரவலாக நம்பப்பட்டாலும், தலித்துகளின் வாக்குகள் மொத்தமாக காங்கிரசுக்கு வருமா என்பதை கேள்விக்குள்ளாக்குகிறார்கள் சிலர்.
சித்தாராமைய்யா அமைச்சரவையில், அமைச்சராக இருந்தவர் சீனிவாச பிரசாத். ஒரு அமைச்சரவை மாற்றத்தின்போது, அவர் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதால், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பிஜேபியில் சேர்ந்தார். அதனால், அவர் போட்டியிட்ட ரிசர்வ் தொகுதியான நஞ்சகவுடுவுக்கு 2017ல் இடைத்தேர்தல் நடந்தது. 2013 தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்குகளை விட, அதிக வாக்கு வித்தியாசத்தில், பிஜேபியின் சீனிவாச பிரசாத்தை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கலாலே கேசவமூர்த்தி வெற்றி பெற்றார். ஒரு இடைத் தேர்தல் முடிவுகளை வைத்து, பொதுத் தேர்தலை கணிக்க முடியாது என்றாலும், சீனிவாச பிரசாத்தின் தோல்வி, காங்கிரஸின் தலித் வாக்குகளை பெரிய அளவில் பாதிக்கவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.
இந்த சட்டமன்றத் தேர்தலில், பிஜேபி செய்த மிகப் பெரிய தவறு, எடியூரப்பாவை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததே.
2008ம் ஆண்டு எடியூரப்பா முதல்வரான ஒரு சில மாதங்களிலேயே அவர் குடும்பத்தினரின் ஆதிக்கமும், ஊழலும் தலைவிரித்தாடின. பதவியேற்ற ஐந்தாவது மாதமே, பெங்களுரு நகரத்தின் பிரதானமான இடத்தில் அரசு வசம் இருந்த 1.20 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினர் எடியூரப்பாவின் மகன்களான ராகவேந்திரா மற்றும் விஜயேந்திரா. அந்த 1.20 ஏக்கர் நிலத்தை 2004ம் ஆண்டு கர்நாடக அரசு, 17 லட்ச ரூபாய்க்கு வாங்கியது. அந்த இடத்தை அதன் அசல் உரிமையாளர்களுக்கே, திருப்பித் தரவைத்தனர் எடியூரப்பாவின் மகன்கள். பின்னர் அந்த உரிமையாளரிடமிருந்து அந்த நிலத்தை இவர்கள் வாங்கிக் கொண்டனர். இந்த நில பேரம்தான், எடியூரப்பாவின் பதவியை மூன்று ஆண்டுகள் கழித்து காவு வாங்கியது. இதன் பிறகு, எடியூரப்பாவின் இரு மகன்களும், இதே போல மொத்தம் 12 நில பேரங்களில் ஈடுபட்டனர்.
தந்தை முதல்வரானதும், இரு மகன்களும் ஒரு கல்வி ட்ரஸ்டை துவங்குகின்றனர். அந்த ட்ரஸ்டுக்கு, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனமான சவுத் வெஸ்ட் மைனிங் நிறுவனம் 20 கோடி ரூபாயை நன்கொடையாகத் தருகிறது.
ஆகஸ்ட் 2010ல், இதே சவுத் வெஸ்ட் மைனிங் நிறுவனம் மேலும் 20 கோடிகளை, எடியூரப்பாவின் மகன்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பிய விபரம் வெளியானது. அதே ஆண்டு நவம்பர் 2010ல், எதிர்க்கட்சிகள், சவுத் வெஸ்ட் மைனிங் நிறுவனம், மான்யதா தொழில்நுட்பப் பூங்காவின் அருகே நிலம் வாங்கிய வகையில் செலவு என்று எழுதப்பட்ட அந்நிறுவனத்தின் கணக்கு விபரங்களை வெளியிட்டன. அந்த நிலம்தான், எடியூரப்பா அரசிடமிருந்து தனியாருக்கு மாற்றிய அந்த 1.20 ஏக்கர் நிலம்.
2006ம் ஆண்டு, எடியூரப்பா தேர்தலில் போட்டியிட்டபோது, அவர் பிரமாண பத்திரத்தில் காட்டிய சொத்து மதிப்பு 2 கோடி கடன். இவர் துணை முதல்வரான 2006ம் ஆண்டு முதல், புதிதாக ப்ரேரனா கல்வி ட்ரஸ்ட், பொறியியல் கல்லூரி, செவிலியர் கல்லூரி, பள்ளிகள், பாலிடெக்னிக் என்று இந்தக் குடும்பத்தின் சொத்து மதிப்பு விண்ணை எட்டியதை ஒட்டுமொத்த கர்நாடகமே அறியும். 2009ல் தேர்தலில் போட்டியிட்ட எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவின் சொத்து மதிப்பை 6.5 கோடியாக காட்டினார். பெங்களுருவின் 1 கோடி மதிப்புள்ள 4000 சதுர அடி இடத்தை, எடியூரப்பா முதல்வருக்கான அதிகாரத்தை பயன்படுத்தி, 10 லட்ச ரூபாய்க்கு ஒதுக்கினார்.
எடியூரப்பாவின் மருமகன், சோகன் குமார், தாவலகிரி ப்ராப்பர்டீஸ், பகத் ஹோம்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட், ஃப்ளுயிட் பவர் டெக்னாலஜிஸ், சகாயதரி ஹெல்த்கேர், பெஸ்டோ ஐஸ் க்ரீம் என்று எடியூரப்பா முதல்வரான ஒரே வருடத்தில் பல்வேறு நிறுவனங்களை தொடங்கினார். பெங்களுரை அடுத்து மகள் உமாதேவிக்கு எடியூரப்பா 2 ஏக்கர் நிலத்தை ஒதுக்கினார். அவர் மகள் அந்த இடத்தில் கேன்டார் சொல்யூசன்ஸ் என்ற பிபிஓ நிறுவனத்தை தொடங்கினார்.
ஊழலை ஒழிக்க பிறந்த ஒரே கட்சி, பிஜேபிதான் என்று மார்தட்டிக் கொள்ளும் 56 இன்ச் மார்பைக் கொண்ட மோடிக்கு இதெல்லாம் தெரியாதா என்றால் நிச்சயம் தெரியும். ஆனால், கர்நாடகத்தில் பெரும்பான்மை சமூகமான லிங்காயத்துகளின் வாக்குகளை பெறும் ஒரே நோக்கத்துக்காகவே எடியூரப்பாவை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளார்கள். இது இந்தத் தேர்தலில் பிஜேபி செய்த மிகப்பெரிய பிழையாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில், கர்நாடகத்தில் சொல்லிக் கொள்ளும்படியாக, பிரபலமான வேறு பிஜேபி தலைவரும் இல்லை.
எடியூரப்பாவை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது பிஜேபிக்கு வெற்றியை ஈட்டித் தருமா என்பதை 15ம் தேதி வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
நாளை சித்தாராமைய்யா போட்டியிடும் சாமுணடீஸ்வரி தொகுதி
புதுசு புதுச கட்டுரைகள் போட்டாலும் ,ஆரம்ப காலத்துல ஜெயலலிதா வை சாடி பதிவு போட்ட ,இப்போ பிஜேபி எதிரித்து பதிவு போடுற ..கேட்டா காவி ,பார்பானியம் ..இந்த கட்டுரையில் முக்கால் வாசி பி ஜே பி ய திட்டி திட்டி தான் போட்டுருக்க …போய் உருப்படியா ஏதாவது பதிவு பண்ணு ..
ragesh sitaramaiya patri ennna mairu theriyumnu ezhuthi irukke.. avan oru pombalai porukkki.. belgium overa kudicittu boxer kaiyala adivangi settan ayaokyan avanukku kanaiya pirachanainu vilakku pidicha madiri ezhdure. modi biters neenga… ippadi ezhudi pizhakkanum un thalai vidi
Well written article.
Sankar,TN farmers are not having “MUPPOGAM”for more than 30 years.We are not getting Cauveri water even for one bogam for the past 7 years.
superb sir , is there any language problem, do you know kannadam, excellent article
கர்நாடகாவில் எடியூரப்பாவை விட சித்தராமையா சிறந்த தலைவர். ஆகவே காங்கிரஸே வெற்றி பெறும்.
BJP going to get 115+ seats
Maama biscothu… lol
சங்கர் சார், vote machineக்ககு இ௫க்க, அனைத்தும் சாத்தியமே
punjab la congress winning pannadu vote machinalayada mundam..
Dear Karnataka,
I travel in jet planes,
But my mother travels in an auto rickshaw,
So please vote for me!
I live in a palace,
But my mother lives in a hut,
So please vote for me!
I don’t let my mother live with me,
I don’t let her live like me,
So please vote for me!
I fight for women’s cause,
But desert my wife to lead a lonely life,
So please vote for me!
I can’t give you jobs and development,
But AMU puts Jinnah’s portrait,
So please vote for me!
Bengaluru is a garbage city,
But Varanasi, my constituency, is the dirtiest,
So please vote for me!
I will fight corruption,
By appointing Yedurappa as CM,
And Reddy brothers as Ministers,
So please vote for me!
I am honest,
And I don’t know how friends Adani and Ambanis get all major government contracts,
So please vote for me.
Ram is from UP,
Hanuman is from Karnataka,
So Karnataka should be a Bhakt of UP
I have sent Yogi to you from UP,
So please vote for me!
I can’t bring down price of petrol and diesel,
But Congress glorifies Tipu Sultan,
So please vote for me!
I can’t solve farmers’ problems,
But Sonia is an Italian,
So please vote for me!
I can’t resolve Cauvery dispute despite Supreme Court orders,
Let uncertainty remain and farmers suffer,
But Nehru insulted Cariappa and Thimayya,
So please vote for me!
Rahul has challenged me for a debate,
I won’t debate because he can’t speak without reading a paper,
So please vote for me!
And last but not the least,
If you are a Hindu,
Please vote for me!
Courtesy
Nice one