ஒரு வழக்கில் மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்பளித்ததற்காக உச்ச நீதிமன்றத்தின் மூன்று மூத்த நீதிபதிகள் 1973-ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுவே நீதித்துறையின் சுதந்திரத்திற்கு விழுந்த முதல் அடி.
இரண்டாண்டுகள் கழித்து, அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றது செல்லாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் அவசரநிலை (எமர்ஜென்ஸி) பிரகடனம் செய்யப்பட்டு ஏராளமான எதிர்க்கட்சியினர் (அரசியல் எதிரிகள்) மிஸா சட்டம் என்றழைக்கப்படும் உள்நாட்டு பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம் 1975ன் கீழ் கைது செய்யப்பட்டு எந்தவித விசாரணையும் இன்றி சிறையிலடைக்கப்பட்டனர்.
பல உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்த தடுப்புக்காவலை ரத்துச் செய்து கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தனர். இதனால் கோபமான மத்திய அரசு, இன்னும் 40 நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளதாகக் கூறி அவர்களின் பெயர்ப் பட்டியலை கசிய விட்டது. அதாவது, அரசுக்கு எதிராக தீர்ப்பளித்தால் அவற்றை அரசு பொறுத்துக் கொள்ளாது என மறைமுகமாக நீதித்துறையை அச்சுறுத்துவதற்காக இவ்வாறு நீதிபதிகளின் பெயர்ப் பட்டியல் கசியவிடப்பட்டது.
ஏப்ரல் 28, 1976 இல், ADM ஜபல்பூர் வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அவசர காலத்தின்போது எவரேனும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டால் அது தவறானதாகவும், சட்ட விரோதமாகவும் இருந்தாலும்கூட அதை எதிர்த்து எந்த உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியது. உச்ச நீதிமன்ற பெரும்பான்மை நீதிபதிகளின் இந்த மக்கள் விரோத, கடும் விமரிசனத்துக்குள்ளான உத்தரவுக்கு நீதிபதி எச்.எம் கண்ணா எதிர்ப்பு தெரிவித்தார். இதற்காக அவர் பெரும் விலை கொடுக்க நேரிட்டது. ஆம், பின்னாளில் அவர் உச்ச நீதிமன்ற தலைமை நீபதியாக ஆகும் வாய்ப்பு மறுக்கப்பட்டார். மேலும் அவர் அப்போதை நீதிபதி எம்.எச் பெய்க் என்பரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இவ்வாறு தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர்க்கு நீதிமன்ற நிவாரணத்திற்கான கதவுகள் மூடப்பட்டன. அவர்கள் அனைவரும் 1977ல் எமர்ஜென்ஸி விலக்கப்பட்டவரை எந்தவித விசாரணையும் இன்றி சிறையில் இருந்தனர்.
எமர்ஜென்ஸி விலக்கப்பட்டதற்கு பின்னர் பின்னாளில் இதுபற்றி கருத்து கூறிய நீதிபதி என்.எல். உந்வாலியா, ” நீதிபதிகளின் இந்த திடீர் பணியிட மாற்றங்கள் ஒரு சுதந்திரமான நீதித்துறையின் அஸ்திவாரத்தையும் உள்கட்டமைப்பையும் நாடு முழுவதம் அசைத்துவிட்டன” என்றார்.
நீதித்துறைக்கு பாதிப்பு ஏற்படுத்தியதோடு மட்டுமன்றி, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் “அதிகாரம்“ 42வது திருத்தம் மூலம் கடுமையாகக் குறைக்கப்பட்டது. இந்த திருத்தத்தை “கொடுமையானது“ என்றார் நீதிபதி எச்.எம்.சீர்வை. நல்லவேளையாக, யாருடைய கருணையாலோ, பிரதமர் இந்திரா காந்தி 1977ல் ஆட்சியை இழந்தார். அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி அரசு முந்தைய அரசால் அரசியலைமைப்புக்கு ஏற்படுத்தப்பட்டிருந்த பெரும்பான்மையான சேதங்களைக் களைந்தது.
1977 முதல் 1980 வரை, உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புளை தொடர்ந்து வழங்கியதன் மூலம் ஏற்கெனவே இழந்த தனது கௌரவத்தை ஓரளவு மீட்டது. ஆனால் மீண்டும் இந்திரா காந்தி 1980 ஆட்சிக்கு வந்தார். இதையடுத்து, நீதித்துறையின் சுதந்திரம் மீதான தாக்குதலை அரசு ஒரு சர்ச்சைக்குரிய கடிதம் மூலம் துவங்கியது. அதாவது, புதிதாக நியமிக்கப்படும் நீதிபதி பிற உயர் நீதிமன்றங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்படுதற்கு சம்மதம் தெரிவித்து கடிதம் தர வேண்டும் என நீதிபதிகளின் நியமனத்திற்கு “நிபந்தனையாக“ குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பரிவர்த்தனை கொள்கை துரதிர்ஷ்டவசமாக, முதல் நீதிபதிகள் என்றழைக்கப்படும் எஸ்.பீ.குப்தா v. யூனியன் ஆஃப் இந்தியா வழக்கில் உறுதிபடுத்தப்பட்டது. அதன்படி, நீதிபதி நியமனங்களில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் எக்ஸிக்யுடிவ் எனப்படும் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது. இந்த அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, இந்திரா காந்தி 1983 ஆம் ஆண்டு மட்டும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பரிந்துரைகளை ஐந்து முறைக்கு குறைவில்லாமல் நிராகரித்தார். 1984ல் அவர் எதிர்பாராவிதமாக இறந்த பிறகு, 1985 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இரண்டு முறை மட்டுமே பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
நிர்வாக தலையீட்டால் எச்சரிக்கையடைந்த உச்ச நீதிமன்றம், திட்டமிட்டு “கொலிஜியம்“ என்ற அமைப்பை 1983ல் உருவாக்கி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வதில் முதல் மற்றும் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரத்தை தனக்கே வழங்கிக் கொண்டது. நீதிபதி நியமனத்துக்கு பரிந்துரைக்கப்படும் நபர்கள் குறித்த முன்நிகழ்வுகள் மற்றும் தகவல்களை நன்கு தெரிந்து வைத்திருப்பர் என்பதால் அதனடிப்படையில் குறிப்பிட்ட பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருப்பதால் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்கும் பொறுப்பு தரப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியது.
இந்த செயல்முறையானது நிர்வாகம் தங்கள் ஆட்சேபணையைத் தெரிவிக்க உதவியதுடன், குறிப்பிட்ட கேன்டிடேட்டின் பெயரை மறுபரிசீலனை செய்ய கொலிஜியத்துக்கு தேவைப்பட்டது. எனினும், கொலிஜியம் அதன் பரிந்துரையை மீண்டும் வலியுறுத்தினால் அந்த கேன்டிடேட் எந்தவித மறுப்புமின்றி நியமிக்கப்பட வேண்டும். கொலிஜியத்துக்கு மாற்றாக தேசிய நீதித்துறை நியமனங்கள் ஆணையம் (NJAC) உருவாகுவதற்கு வழிவகுத்த 99வது அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படும்வரை இந்த வழிமுறை தொடர்ந்தது.
துரதிருஷ்டவசமாக, முன்மொழியப்பட்ட திருத்தத்தில் பல வரைவு குறைபாடுகள் இருந்தன, இது NJAC அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறப்பட்டு கொலிஜியம் அமைப்புமுறை மீண்டும் உருவாக வழிவகுத்தது.
கடந்த காலங்களில், அரசால் முன்மொழியப்பட்ட கொள்கை மற்றும் சீர்திருத்தங்களை செல்லாததாக்கிய தீர்ப்புகள் உரிய திருத்தங்கள் மூலம் செல்லத்தக்கவையாக்கப்ட்டன. இந்த வழிமுறை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் சரியாக பின்பற்றப்பட்டது. பாதகமான நீதிமன்ற தீர்ப்பைச் சமாளிக்கவும், ஜமீன்தார் ஒழிப்பு மற்றும் விவசாய சீர்திருத்தங்களைக் கொண்ட முக்கிய சட்டத்தை அமல்படுத்தவும் 1950-1965 வரையிலான 15 ஆண்டுகளில் 17 முறை அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தியமைத்தார். இந்த திருத்தங்கள் பெரும்பாலும் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டன. இந்திரா காந்தியின் பதில் நடவடிக்கையானது நீதிமன்ற தீர்ப்புகளை புறக்கணிப்பது மட்டுமின்றி சுதந்திரமான நீதிபதிகளை தாக்குவதாக அமைந்தது.
2014 ல், பா.ஜ.க தலைமையிலான கூட்டணியின் தெளிவான பெரும்பான்மை கடந்த கால சேதத்தை சரிசெய்ய பொன்னான வாய்ப்பை வழங்கியது, ஏனெனில் அது கூட்டணி அரசியலின் கட்டாயத்தால் பாதிக்கப்படவில்லை. நீதித்துறைக்கு மரியாதை செலுத்துவது அரசாங்கத்தின் கௌரவத்தை அதிகரித்திருக்கும். துரதிர்ஷ்டவசமாக, வேண்டுமென்றே செயலற்றிருப்பது அல்லது சில சந்தர்ப்பங்களில் அரசியலமைப்பு நெறிமுறைகளை மீறுதல் ஆகியவையே (பாஜகவின்) புதிய தந்திரங்களாக உள்ளன. கடந்த சில ஆண்டுகளில், உயர் நீதிமன்றங்களில் 40 சதவீத அளவுக்கு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் விரைவில் அதிக எண்ணிக்கையிலான காலிப்பணியிடங்களைக் காண நேரிடும். அதற்கு காரணம், கொலிஜியத்தால் அங்கீகரிக்கப்பட்ட 140க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் இன்னும் அரசாங்கத்திடம் நிலுவையில் உள்ளனர்.
செயலற்ற தன்மையைத் தவிர, கொலிஜியத்தின் முடிவுகளை அமல்படுத்தை வேண்டுமென்றே மறுப்பது மிகவும் கவலைக்குரியது. ஒரு கூடுதல் நீதிபதியை பணி நிரந்தரம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்தத. ஆனால் அரசாங்கம் அதற்கு தந்த அதிர்ச்சிகரமான பதில், அவரை மறுபடியும் ஒரு கூடுதல் நீதிபதியாக மாற்றுவதே. ஒரு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் பெயர் உச்சநீதிமன்றத்திற்கு பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கப்படும்போது, ஆறு காலிப்பணியிடங்கள் இருந்தபோதும், குறிப்பாக அவரை நியமனம் செய்யாததற்கு தகுதியற்ற காரணங்கள் வழங்கப்படுகின்றன. ஆச்சரியமாக, பிராந்திய பிரதிநிதித்துவம் மற்றும் மற்றும் SC / ST வேட்பாளர்கள் பற்றாக்குறை போன்ற பிரச்சினை ஒரு கேன்டிடேட்டை அனுமதிக்க பார்-ஆல் ஒரு ஆட்சேபணையாக பார்க்கப்படுவதில்லை.
கொலிஜியத்தால் ஏற்கெனவே தகுதியற்றதாகக் கண்டறியப்பட்ட ஒரு புகாரை, கர்நாடக உயர்நீதி மன்றம் தலைமை நீதிபதியை நேரடியாக தொடர்புகொண்டு மறுவிசாரணை செய்ய சொல்வது அரசியலமைப்பு உரிமையின் கடுமையான மீறல் ஆகும். நீதிபதி கே.எம்.ஜோஸப்-ன் அனைத்து பொருத்தம் பற்றி ஏற்கெனவே கொலிஜியம் முடிவெடுத்திருந்தும், ஏப்ரல் 2-ம் தேதி நடந்த கூட்டத்தில் அவரது நியமனம் குறித்து முடிவெடுக்காமல் ஒத்திவைத்தது துரதிர்ஷ்டவசமானது.
வரலாற்றின் படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள மறுக்கிற ஒரு அரசாங்கம் துன்பப்பட நேரிடும். 1973-1984 வரை நீதித்துறை மீதான தாக்குதல் உண்மையில் நாட்டிற்கு மிகவும் தீங்கு விளைவித்தது. முடிவில், கொலிஜியம் மதிக்கப்படாவிட்டால் அதன் முடிவுகள் எவ்வித தாமதமுமின்றி நிறைவேற்றப்படாவிட்டால் நாம் ஒரு சுதந்திர நீதித்துறையை பெறமுடியாது. கொலிஜியம் முறையை ஆளும் கட்சி முறையற்றதாக கருதினால், இன்னொரு அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றி கொலிஜியத்திற்குப் பதிலாக நீதிபதிகள் நியமன ஆணைக்குழுவை கொண்டுவர வேண்டும். கொலிஜியத்திற்கு மாற்றாக, வெங்கடாச்சலம் கமிஷனால் பரிந்துரைக்கப்பட்ட மாதிரியை (மாடல்-ஐ) நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால், அரசியலமைப்பை திருத்தாமல் ஒரே நேரத்தில் தொடர்ந்து கொலிஜியத்துடன் மோதல் மனப்பான்மை கொள்வதை அனுமதிக்கமுடியாது. தற்போதைக்கு, மீண்டும் மீண்டும் செயல்படாத மற்றும் திட்டமிட்ட மீறல்களால் அழிக்கப்படுவதற்கு முன்னர், கொலிஜியம் தனது சுயாதீனத்தை உறுதிப்படுத்த வேண்டும். நீதி வழங்கப்படுவது மட்டுமல்லாமல், நீதி வழங்கப்பட்டது வெளிப்படையாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் தெரிய வேண்டும் என்றார் லார்ட் ஹெவார்ட். நமது அரசியலமைப்பின் கீழ், நீதித்துறை சுயாதீனமாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல் அது சுயாதீனமாக செயல்படுவது வெளிப்படையாகவும் சந்தேகத்திற்கிடமின்றியும் தெரிய வேண்டும்.
அதன் பொறுப்பு முதன்மையாக கொலிஜியத்திடமே உள்ளது.
அர்விந்த் தத்தார்
உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்
நன்றி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
the same collegium nominated Karnan as Judge in Madras HC and we all know how funny Karnan behaved as a judge especially in Calcutta HC issuing summons to SC judges and above all judges dont even have the honestly to publish their Asset details in public domain before becoming a judge… so end point is judiciary is equally corrupt like executive, media and government, as simple as that..
தமிழ் போராளிகள் கதவை ஆட்டவேண்டாம் ………… nethipathi karnan vishayaththirkkum itharkkum enna thodarbu … aana oonana udane tamil poraligal … neengal thaan da kidaikkum neethiyai kooda tamilagaththirkku kidaikka vidamal seyyum tamil fascistgal …
நீதித்துறை பற்றிய கட்டுரையில் நீதி அரசர் அய்யா கர்ணன் அவர்கள் பற்றிய குறிப்பு இல்லாதது வருத்த த்துக்குரியது.
சம கால நீதி அரசர், அஞ்சா நெஞ்சன், தலைமை நீதி அரசர்களை கிடு கிடுவென நடு நடுங்க வைத்த அசல் 56″ மார்பின் சொந்தக்காரர் அய்யா கர்ணன் பற்றிய குறிப்புகளை பதிவு செய்யாமல் விட்டது மாபெரும் தவறு. இதற்கு என் கடுமையான கண்டனங்கள்.
இந்த தவறை பற்றி கண்டுகொள்ளாத சங்கர் அவர்கள் தனது முகப்புத்தகத்தில் பகீரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்.
இனி வரும் சந்ததிகளுக்கு அய்யா கர்ணனின் பதிவுகளை கொண்டு சேர்ப்பது நம் அனைவரின் கடமையாகும்.
மையம் எப்படி மய்யம் ஆனதோ, அதுபோல ஐயா அய்யா ஆனது.. தமிழ் போராளிகள் கதவை ஆட்டவேண்டாம்.
நன்றி.
yethu Karnan oru honest judgea??? pls read the earlier articles about Karnan by Shankar in this site…
super-session என்றால் பணியிடை நீக்கம் அல்ல. seniority மீறி junior க்கு பதவி தருவது