”நீங்கள் பதவியில் இருந்தது போதும்…புறப்படுங்கள்”
நீதித்துறையில் விரைவில் ஒலிக்குப்போகும் வார்த்தைகள்
உச்ச நீதிமன்றத்தின் ஐந்து மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் கடந்த மே 2-ம் தேதி மாலை 2 மணிக்கு கூடியபோது, அதன் நிகழ்ச்சி நிரல் மற்றும் விவாதப் பொருள் (அஜென்டா) மிகவும் சிம்பிளானது – உத்தரகண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோஸப்-ஐ உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்துவது என்பதே.
அதைச் செய்திருந்தால், மத்திய அரசு சட்டப்பூர்வமாக கொலிஜியத்தின் நியமனத்தை செயல்படுத்தவும் நீதிபதி ஜோஸப்-ஐ நியமனம் செய்யவும் வேண்டிய கட்டாயம் இருந்திருக்கும். அவ்வாறு கொலிஜியம் தேர்ந்தெடுத்திருந்தால், மறுபரிசீலனை செய்யக்கோரும் மத்திய அரசின் அற்பத்தனமான மற்றும் சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களுக்கும் பதிலளித்திருப்பதோடு, நீதிபதி ஜோஸப்-ஐ உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்துவதற்கான கொலிஜியத்தின் பரிந்துரையை திரும்பப்பெறக் கோரும் மத்திய அரசின் நடவடிக்கைகளின் சட்டப்பூர்வத்தன்மை குறித்த விவாதங்களுக்கு ஒரு உறுதியான முடிவு வந்திருக்கும்..
ஆனால், அந்த கூட்டம் எந்தவித முடிவும் எடுக்காமல் ஒத்திவைக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தால் வெளியிடப்பட்ட அக் கூட்ட தீர்மானத்தில் “ஒத்திவைக்கப்பட்டதற்கு“ எந்தவித காரணங்களும் கூறப்படவில்லை. ஆனால் நீதிபதி ஜோஸப்-ன் பதவி உயர்வை ஏற்றுக்கொள்ளாத மத்திய அரசின் முடிவுக்குப் பின்னர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் மௌனம் அவர் நீதித்துறையின் நலனுக்காக மத்திய அரசுக்கு எதிராக நிற்க விரும்பவில்லை அல்லது முடியவில்லை என்ற விமரிசனத்துக்கு ஆளாகியிருக்கிறது.
அந்த கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் – நீதிபதி ஜோஸப்- ன் பதவி உயர்வுக்கான பரிந்துரையை வலியுறுத்துவது மற்றும் நீதிமன்றத்தில் தற்போதுள்ள மற்றும் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மற்ற சிலரின் பெயர்களையும் பரிசீலனை செய்வது – என்ற இரண்டே இரண்டு விவாதப் பொருள்களைக் கொண்டிருந்தது. நீதிபதி ஜோஸப்-ஐ மத்திய அரசு நியமனம் செய்யாமல் வேறு எந்தவொரு நியமனமும் செய்யக்கூடாது என்ற கருத்தில் நான்கு மூத்த நீதிபதிகள் உறுதியாக இருந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது உண்மையெனில், மற்ற பிற நீதிபதிகளை நியமிப்பதற்கு முன்னர் நீதிபதி ஜோஸப்-ஐ நியமிக்க வேண்டும் எனபதுவே கொலிஜியத்தின் நோக்கமாக இருந்தால் இது சரியான காரியமே. மற்ற பிற நீதிபதிகளுடன் அவரையும் ஒன்றாக சேர்த்து நியமிக்க மத்திய அரசை அனுமதிப்பது அவரது பணிமூப்பை (சீனியாரிட்டியை) பாதிப்பதோடு உச்ச நீதிமன்றத்தின் அடுத்தடுத்த திட்டங்களையும் பாதிக்கும். மேலும் முக்கியமாக, இதை ஏற்றுக்கொள்வது என்பது எதிர்காலத்தில் மத்திய அரசு “மறுபரிசீலனை வழியை“ திறம்பட பயன்படுத்தி இந்தியாவின் தலைமை நீதிபதியாக யார் வரவேண்டும் என முடிவெடுக்க முடியும்.
சட்டம் மற்றும் அரசியலமைப்புப்படி, உச்ச நீதிமன்ற நீதிபதிள் மற்றும் இந்தியாவின் தலைமை நீதிபதியை நியமிப்பதில் எந்த அளவுக்கு பணிமூப்புக்கு (சீனியாரிட்டிக்கு) முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து நியாயமான விவாதங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தாலும், அதுகுறித்து முடிவு செய்ய வேண்டியவர்கள் தலைமை நீதிபதியும் கொலிஜியமும்தான். மத்திய அரசு அல்ல. கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட பின்னர் நீதிபதிகளை எப்போது நியமிக்க வேண்டும் என தீர்மானிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு கொடுப்பது என்பது இரண்டாவது நீதிபதிகள் வழக்கு (1983) மற்றும் மூன்றாவது நீதிபதிகள் வழக்கு (1998) ஆகியவற்றை மறைமுகமாக, வஞ்சகமாக தகர்த்தெறிவதற்கு ஒப்பானது.
அவ்வாறு செய்வதற்கு பதிலாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மிஸ்ரா ஒருவர் மட்டும்தான் மேலும் நியமனத்திற்கான பரிந்துரைகள் நீதிபதி ஜோஸப்-ன் பெயர் நியமனத்திற்கான வலியுறுத்தலுடன் ஒன்றாக செல்ல வேண்டும் என கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலிஜியத்தில் இந்திய தலைமை நீதிபதி கொலிஜியத்தின் முடிவுக்கு எதிராக ’மைனாரிட்டி’யாக – அதுவும் கொலிஜியத்தின் பெரும்பான்மை நீதிபதிகள் அவருக்கு எதிராக உறுதியாக இருக்கிறதால்- எந்தவித அடுத்தகட்ட முன்னேற்றமும் இல்லாமல் ஒரு முடக்கம் ஏற்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட ஒரு மோசமான தருணத்தில் – பொதுவாக நீதித்துறைக்கு, குறிப்பாக உச்ச நீதிமன்றத்துக்கு – இது வந்திருக்கக் கூடாது. ஏற்கெனவே கருத்து வேறுபாடு மற்றும் அவநம்பிக்கை ஆகிய உள்விவகாரங்களால் வலுவிழந்து காணப்படும் நிலையில், கிடைத்துள்ள தகவல்கள் சரியானவையாக இருப்பின், உச்ச நீதிமன்றத்தின் நலன்களை பாதுகாக்க விரும்பாத மற்றும் முடியாத தலைமை நீதிபதியால் அந்த நிறுவனம் மேலும் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள், கடந்த ஜனவரி 12-ம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், நீதித்துறையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்ததிலிருந்து, தலைமை நீதிபதி மிஸ்ரா தம்முடன் பணிபுரிபவர்களின் நம்பிக்கையைப் பெறும்வகையில் எதுவும் செய்யவில்லை என்பது தெளிவாகிறது.
நீதித்துறையின் சுதந்திரத்தன்மை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் மிஸ்ரா எதுவும் செய்யவில்லை. உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் கொண்ட முழு நீதிமன்ற கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்ற தொடர் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன அல்லது கண்டுகொள்ளப்படவில்லை.
தலைமை நீதிபதி மிஸ்ராவின் இந்த நடவடிக்கைகள் எந்த அளவுக்கு நீதித்துறையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என சொல்ல முடியவில்லை. அரசியல் நிர்வாகத்திலிருந்து சுதந்திரம் பெறுவதால் பெருமிதம் கொள்கிற, அதன் சுதந்திரத்தை பாதிக்கும் அரசியலமைப்பு திருத்தத்தை நிராகரித்த ஒரு நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு ஒரு தனி மனிதனின் கோழைத்தனத்தால் அதன் சுதந்திரம் குறைத்து மதிப்பிடப்படுவதைக் காண்கையில் அவர்களது மனம் நொறுங்கிப்போகும். தன்னுடைய செயல்கள் கொள்கையின் அடிப்படையில் அமைந்ததா அல்லது சூழ்நிலை கருதி அமைந்ததா என அவராக முன்வந்து விளக்கமளித்து தன்னுடைய நிலையை தலைமை நீதிபதி மிஸ்ரா தெளிவுபடுத்தாதவரை நீதித்துறையை மேலும் பாதிக்கும்வகையில் மற்றவர்கள் அவரைப்பற்றி தவறான முடிவுக்கு வரக்கூடும்.
தலைமை நீதிபதி மிஸ்ரா ஓய்வுபெற்றவுடனோ அல்லது நீதிபதி ரஞ்சன் கோகாய் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றவுடனோ இந்த பிரச்சினை முற்றுபெறும் என நினைப்பது சுத்த முட்டாள்தனமாகும். நீதித்துறையில் ஏற்கெனவே வெளிப்படுத்தப்பட்டுள்ள வலுவற்ற நிலை மற்றும் கடந்த சில மாதங்களாக அதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சேதம் ஆகியவற்றை இதுபோன்ற சிந்தனை கண்டுகொள்ளாதிருக்கிறது.
வலுவான அரசாங்கம், வலுவிழந்த தலைமை நீதிபதி என்ற விநோத சூழ்நிலை காரணமாக தற்போதைய சூழ்நிலை உருவாகவில்லை எனக் கூறி தற்போதைய சிக்கலை இதே அளவுக்கு பேரழிவை ஏற்படுத்திய தலைமை நீதிபதியாக ஜெ.எஸ்.கெஹர் காலத்துடன் தொடர்புபடுத்த முடியும். ஆனால், சிறந்த கால கட்டத்தில் இருக்கையில், எதிர்காலத்தில் நீதித்துறையின் நம்பகத்தன்மைக்கு கடும் சவால் வரக்கூடும் என உச்ச நீதிமன்றம் எதிர்பார்க்கத் தவறிவிட்டது. அதை உட்புறமாக மேலும் உறுதிபடுத்த முயற்சிக்கவில்லை.
இதற்கு இணையாக வரலாற்று சம்பவங்களை தேடினால், நீதித்துறையின் தற்போதைய நிலையை 1970களுக்கு முந்தைய நெருக்கடியுடன் ஒப்பிடக் கூடாது. மாறாக, நார்வே பிரச்சாரத்தில் நாஜி ஜெர்மனிக்கு எதிராக பேரழிவை ஏற்படுத்திய பின்னர் 1940ல் ஐக்கிய ராஜ்யத்தின் (யுனைடட் கிங்டம்-ன்) அரசியல் நிலைக்கு ஒப்பிடலாம். குறிப்பாக, போர் மற்றும் ராஜதந்திரத்தில் சேம்பர்லின் அரசாங்கத்தின் தோல்விகளை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்திய பிரபலமான “நார்விக் விவாதம்“.
அப்போது லியோ அமரி என்ற நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) சேம்பர்லினுக்கு எதிராக கடுமையான தாக்குதலை மேற்கொண்டார். அவர் தன்னுடைய உரையை இவ்வாறு கூறி முடித்தார் : “ எந்த நன்மையும் செய்யாமல் நீங்கள் (சேம்பர்லின்) இங்கே ரொம்ப காலமாக சும்மா உட்கார்ந்திருக்கிறீர்கள். புறப்படுங்கள். நான் சொல்கிறேன். நீங்கள் பதவியில் இருந்தது போதும். கடவுளின் பெயரால் சொல்கிறேன்… போய்விடுங்கள்”.
அமரியின் வார்த்தைகள் விரைவில் நீதித்துறையில் எதிரொலிக்கும் என்பதை ஒருவர் உணராமல் இருக்க முடியாது.
அலோக் பிரசன்ன குமார்.
This is best written article. Savukkadi ithuthaan.