கர்நாடகாவின் சாமுண்டீஸ்வரி தொகுதியில், சித்தாராமைய்யா போட்டியிடுகிறார். சாமுண்டீஸ்வரியில், 108 கிராமங்கள் உள்ளன. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 2017 கணக்கின்படி, 2.17 லட்சம். இதில், 20 முதல் 29 வயது உள்ளவர்கள் 23 சதவிகிதம். 30 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் 30 சதவிகிதம். 40 முதல் 49 வயது வரை உள்ளவர்கள், 20 சதவிகிதம்.
சாமுண்டீஸ்வரி தொகுதியில்தான் சித்தாராமைய்யா முதன் முறையாக 1983ம் ஆண்டு சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அது அவருக்கு செல்வாக்கான தொகுதி. ஆனால், 2004ம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பு சித்தாரமைய்யாவுக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. அவரது ஆதரவாளர்கள் பலர், வருணா தொகுதிக்கு சென்று விட்டனர். ஆனால் 2006ம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில், சித்தாராமைய்யா சொற்ப வாக்குகளில் வெற்றி பெற்றார்.
கடந்த இரண்டு தேர்தல்களிலும், சாமுண்டீஸ்வரியில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஜி.ட்டி.தேவகவுடா வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.
சாமுண்டீஸ்வரி தொகுதி, முழுமையான நகர்ப்புறமாக மாறுவதற்கான தீவிர முயற்சியில் உள்ள ஒரு தொகுதி. இன்னும் அத்தொகுதியில் சொற்ப இடங்களில் விவசாயம் நடைபெற்று வந்தாலும், பெரும்பாலான பகுதிகள், கான்க்ரீட் கட்டிடங்களால் நிரம்பியுள்ளன. மீதம் உள்ள இடங்களில், ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள் கடை பரப்பியிருந்தனர்.
பொதுவாக நகர்ப்புறங்களில் தேர்தலில் சாதியின் தாக்கம் பெரிய அளவுக்கு இருக்காது. ஆனால், சாமுண்டீஸ்வரியைப் பொறுத்தவரை, முழுக்க முழுக்க ஜாதியே அடிப்படையாக இருக்கிறது. சாமுண்டீஸ்வரியில், அதிக அளவில் இருப்பவர்கள், ஒக்கலிகா ஜாதியினர். மொத்த வாக்காளர்களில் இவர்கள், 75 ஆயிரம். அடுத்தபடியாக தலித்துகள் 45 ஆயிரம். லிங்காயத்துகள் 30 ஆயிரம். நாயக் என்கிற பழங்குடியினர் 30 ஆயிரம். தச்சு வேலை செய்யும் விஸ்வகர்மா சாதியினர் 30 ஆயிரம். இஸ்லாமியர்கள் 5 முதல் 6 ஆயிரம் வரை உள்ளனர்.
முதலில் காமனகரே ஹுண்டி என்ற கிராமத்துக்கு சென்றேன். அந்த கிராமத்தில் பெரும்பான்மையினர் ஒக்கலிகா சமூகத்தினர். சங்கர் என்பவர் ஹோட்டல் வைத்திருந்தார். அவரிடம் பேசினேன்.
“எங்க ஓட்டு ஜேடி எஸ் கேண்டிடேட், ஜி.டி.தேவகவுடாவுக்குதான். அவர்தான் இந்தத் தொகுதிக்கு பல நன்மைகளை செய்துள்ளார். அவரைப் போன்ற சிறந்த எம்எல்ஏவை பார்க்க முடியாது. அது இல்லாமல், விவசாயிகளின் நலனை, ஜேடி எஸ் தலைவர், குமாரசாமியைப் போல அக்கறையோடு கவனிப்பவர் ஒருவர் கூட கிடையாது” என்றார்.
முதல்வர் சித்தாராமைய்யாவும், ஒக்கலிகாவாக இருந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்றேன். அவர் குருபா. ஒக்கலிகா இல்லை என்றார். இல்லை. ஒக்கலிகாவாக இருந்தால், யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று மீண்டும் கேட்டதும். யார் மக்களுக்கு நல்லது செய்கின்றனரோ, அவர்களுக்கு வாக்களிப்பேன் என்றார்.
தற்போது சாமுண்டீஸ்வரியின் எம்எல்ஏவாக உள்ள தேவகவுடா மிகவும் எளிமையானவர். எளிதில் அணுகக் கூடியவர் என்றார். அந்த ஊரில் உள்ள அத்தனை ஒக்கலிகாக்களும், ஜேடிஎஸ் கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள் என்றார்.
சிறுவர்கள், காங்கிரஸ் கொடியை எடுத்துக் கொண்டு, உற்சாகமாக காங்கிரஸ் துண்டறிக்கைகளை விநியோகித்தபடி வந்தனர். என்னவென்று விசாரித்ததில், காங்கிரஸ் கட்சி அனைவருக்கும் இலவசமாக தொப்பிகளை விநியோகித்துள்ளது என்றும், பிரச்சாரத்துக்கு வருகையில் வெடிக்க பட்டாசுகளை கொடுத்துள்ளது என்றும், அதனால் சிறுவர்கள் உற்சாகமாக காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்வதாக தெரிவித்தார். அந்த குழந்தைகளுக்கு, ஒக்கலிகா, லிங்காயத்து, கவுடா, குருபர் என்ற எந்த பாகுபாடுகளும் தெரியாமல் மகிழ்ச்சியாக நோட்டீஸ் விநியோகித்துக் கொண்டிருந்தனர்.
குருபா என்ற ஜாதியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். குருபா இனத்தைச் சேர்ந்தவர்கள், செம்மறியாடு மேய்ப்பதை தொழிலாகக் கொண்டவர்கள். மலைகளில் செம்மறியாடு மேய்ப்பதால் அவர்கள் ஊரை விட்டு ஒதுங்கியே இருந்தனர். அவர்களின் கலாச்சாரம், திருமண முறைகள் அனைத்துமே வேறு. தமிழகத்திலும் குருபா இனத்தவர்கள் உள்ளனர். அவர்கள் குரும்பா என்று அழைக்கப்படுகின்றனர். தமிழகத்தில் குரும்பர்கள் பழங்குடியினத்தவர்கள். கர்நாடகாவிலும், குருபாக்களை பழங்குடியினத்தவர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதன் காரணமாக, இதர உயர் சாதியைச் சேர்ந்தவர்கள், குருபா இனத்தவருக்கு பெரிய அளவில் மரியாதை அளிப்பதில்லை.
சாமுண்டீஸ்வரி தொகுதியில் பிஜேபி சார்பாக, கோபால் ராவ் என்ற பார்ப்பனரை நிறுத்தியுள்ளனர். மற்ற இடங்களில் உள்ளது போலவே, முக்கிய தொகுதிகளில், பலவீனமான வேட்பாளர்களை, மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு உதவும் வகையில் நிறுத்தியுள்ளனர். அந்த வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய, கர்நாடக பிஜேபி தலைவர்கள் கூட வருவதில்லை. பிரச்சாரத்துக்கு வந்தார்களா என்றால், இன்றுதான் வந்தார்கள். தமிழ்நாட்டிலிருந்து யாரோ ஒரு தலைவர் வந்தார் என்றேன். அது அண்ணன் எச்.ராஜாவாகத்தான் இருக்க வேண்டும்.
எச்.ராஜாவின் பெயரை நினைவில் வைக்காமல், அவரைப் பற்றி தெரியாமல் இருந்து அவர் பெரிய பாவத்தை செய்துள்ளார் என்பதை அவரிடம் புரிய வைக்க நான் முயற்சி எடுக்கவில்லை.
ஹளே கேசரே என்ற கிராமம். அந்த இடத்தில் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இருவரை சந்தித்தேன். அவர்களிடம் சித்தாராமைய்யா ஜெயித்து விடுவாரா என்று கேட்டதற்கு, 50 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்கள். அவர் முதல்வர். அவரது வெற்றி வாய்ப்பே சந்தேகமா என்று கேட்டேன். ஒக்கலிகாஸ் யாரும் அவருக்கு ஓட்டு போட மாட்டாங்க என்றார்.
அடுத்து ராமனஹள்ளி என்ற கிராமத்துக்கு சென்றேன். அங்கே பெரும்பான்மையானவர்கள் நாயக் என்ற பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் பிரதானமான தொழில், மங்களுர் பகுதியிலிருந்து வரும் மீன்களை மொத்த விலைக்கு வாங்கி, மைசூர் மற்றும், உதயகிரி பகுதி சந்தைகளில் வியாபாரம் செய்வது. அவர்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் ஆதலால், சித்தாராமைய்யா மீது அவர்களுக்கு அபிமானம் இருப்பதை அவர்களோடு பேசுவதில் கண்டு கொள்ள முடிந்தது.
அதே பகுதியில் பிஸ்மில்லா நகர் என்ற குடியிருப்பில், ஜமீலா என்ற பெண்ணிடம் பேசியபோது, அவர் தமிழகத்தின் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தது. யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்டபோது, காங்கரசுக்குத்தான் என்றார். கூடுதலாக, “தமிழ்நாட்டுல அம்மா மாதிரி, கர்நாடகாவுல நல்ல அரசியல்வாதி ஒருத்தர் கூட இல்ல” என்ற வருத்தப்பட்டுக் கொண்டார். தப்பித்தீர்கள் என்று அவரிடம் சொல்லவில்லை.
அடுத்தடுத்து அமைந்திருந்த, காலி சித்தனஹள்ளி, ஹன்ச்சியா, கௌயஹரஹுண்டி, ஆகிய கிராமங்களில் உள்ள தலித்துகள் மற்றும் பழங்குடியினர், காங்கிரஸ் கட்சிக்கும், ஒக்கலிகாக்கள், மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கும் ஆதரவு தெரிவித்தனர்.
திப்பு டவுன் என்ற பகுதியில் இஸ்லாமிய குடியிருப்பு இருக்கிறது என்பதை அறிந்து அங்கே செல்லலாம் என்றால் இருட்டி விட்டது. தெரு விளக்குகள் ஓன்று கூட இல்லை. அந்த பக்கமாக சென்ற ஒரு இளைஞனிடம் வழி கேட்டபோது, அவனே கூட வருவதாக பைக்கில் ஏறிக் கொண்டான்.
அந்த கிராமம் சாலையிலிருந்து 1 கிலோ மீட்டர் உள்ளே இருந்தது. அங்கே செல்வதற்கான சரியான பாதை இல்லை. கிராமப்புரங்களில் இருக்கும் மண் சாலை மட்டுமே இருந்தது.
தூரத்தில் விளக்கு எரிந்தது. அங்கே வீட்டோடு சேர்ந்த ஒரு பெட்டிக் கடை இருந்தது. அப்துல் கஃப்பார் என்ற பெரியவர் இருந்தார். தேர்தல் குறித்து பேச வேண்டும் என்றதும், சற்று தயக்கத்துடன்தான் பேசத் தொடங்கினார். யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று தொடங்கினேன்.
“நான் என் சிறு வயது முதல் காங்கிரஸ் கட்சிக்குத்தான் வாக்களித்து வருகிறேன். இனியும் காங்கிரஸ் கட்சிக்குத்தான் வாக்களிப்பேன். ஹம் பைசா கே லியே வோட் நஹி கர்த்தா. மொகப்பத் சே வோட் கர்த்தா ஹை. (நாங்கள் பணத்துக்காக வாக்களிப்பதில்லை. அன்பினால் வாக்களிக்கிறோம்).
சித்தாராமைய்யா வெல்ல வேண்டும் என்று நினைக்கிறோம். எடியூரப்பா வென்றால், நாங்கள் இப்போது செய்து கொண்டிருக்கும் கூலித் தொழிலுக்கும் ஆபத்து வந்து விடும் என்றே நினைக்கிறோம். “
பிஜேபி கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், ஒரு வேட்பாளரைக் கூட இஸ்லாமியராக நிறுத்தவில்லையே. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டேன்.
“அவர்கள் நிறுத்த மாட்டார்கள். இஸ்லாமியர்களை இரண்டாம் குடிமக்களாக, எவ்வித பிரதிநிதித்துவமும் இல்லாமல் பிச்சைக்காரர்களாக, அவர்களை நாடிப் பிழைக்கும் வகையில் வைத்திருக்க வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” என்று கூறி விட்டு முகத்தை திருப்பிக் கொண்டார்.
சரி. சித்தாராமைய்யா ஆட்சியில் அப்படி என்ன உங்களுக்கு நல்லது செய்து விட்டார்கள் ? என்றேன்.
ஒரு நபருக்கு 7 கிலோ கிலோ அரிசி அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. எங்கள் வீட்டில் 5 பேர் உள்ளோம். மாதந்தோறும் 35 கிலோ அரிசி கிடைக்கிறது. நீங்களே பாருங்கள். இந்த பெட்டிக்கடையில் எனக்கு என்ன வருமானம் கிடைத்து விடும் ?”
இதற்கு முன்னால் இருந்த பிஜேபி ஆட்சியில் இது போன்ற திட்டங்கள் ஏதும் செயல்படுத்தப்படவில்லையா என்றேன்.
“ரெட்டி சகோதரர்களின் நலனைப் பாதுகாக்கவே பிஜேபி அரசுக்கு நேரம் போதவில்லை. எங்களைப் போன்ற ஏழைகளைப் பற்றி அவர் எப்படி கவலைப்படுவார்“ என்றார்.
திடீரென்று ஆவேசம் வந்தது போல பேசத் தொடங்கினார்.
“குறைவான கூலியே பெற்றாலும், நாங்கள் அனைவரும் வரி செலுத்துகிறோம். செலுத்துகிறோமா இல்லையா ? “ என்றார்.
நான் தலையாட்டினேன்.
“நம் வரிப்பணத்தில் மோடி விலை உயர்ந்த ஆடைகளை உடுத்திக் கொண்டு, நாடு நாடாக சுற்றிப் பார்ப்பதற்கா நாம் வரி கட்டுகிறோம். இந்த நான்கு ஆண்டுகளில் அவர் எத்தனை நாடுகளை சுற்றிப் பார்த்துள்ளார் ? “ என்றார்.
அண்டை நாடுகளுடன் உறவை மேம்படுத்துவது ஒரு பிரதமரின் கடமை இல்லையா என்றேன்.
“சார். அதையெல்லாம் கம்ப்யூட்டர்லயே பண்ண முடியாதா ? இவரே நேரா போகணுமா ? இதுக்கு முன்னாடி இருந்த பிரதமர்கள் இவரை மாதிரியா நாடு நாடா சுத்திக்கிட்டு இருந்தாங்க ? “ என்றார்.
நான் அமைதியானேன்.
அவர் தொடர்ந்தார். “நாங்கள் சேர்த்து வைத்த குறைந்த பணத்தை எடுப்பதற்குக் கூட ஏடிஎம் வாசலில் எங்களை வரிசையில் நிற்க வைத்தது என்ன நியாயம் ? நாங்கள் மற்றவர்களைப் போல அடித்து பிடுங்கி சம்பாதிக்கவில்லை. நேர்மையாக சம்பாதிக்கிறோம். (இமாந்தார் ஸே கமாத்தா ஹை)
நீங்கள் பத்திரிக்கையாளர்தானே ? மோடி 50 நாட்களில் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கிறேன் என்று சொன்னாரா இல்லையா ? சொல்லுங்கள் “ என்று கூறி விட்டு என் முகத்தையே பார்த்தார்.
இல்லை என்றேன்.
“பண மதிப்பிழப்பால், என் கடைக்கு பொருட்கள் கூட வாங்க முடியாமல் மாதக்கணக்கில் அவதிப்பட்டேன். “ என்று கூறி விட்டு அமைதியானார்.
நானும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன். அவர் மனைவி, எங்கள் உரையாடலை கவனித்துக் கொண்டே இருந்தார். பிறகு அவரே எழுந்து சென்று, டீ போட்டு எடுத்து வந்தார். அவருக்கு நன்றி கூறி விடை பெற்றேன்.
ஞாயிறன்று மாலையே, பெங்களுர் பத்திரிக்கையாளர் ஒருவரை தொடர்பு கொண்டு, நான் மைசூரில் இருக்கிறேன். உங்களுக்கு தெரிந்த பத்திரிக்கையாளர் மைசூரில் இருந்தால், சொல்லுங்கள், சந்திக்கிறேன் என்றேன். அவர், நானே மைசூர் வருகிறேன். நாளை காலை, சித்தாராமைய்யாவை சந்திக்கிறேன். நீங்களும் வாருங்கள் என்றார்.
அவர் கூறியபடி, காலை 7 மணிக்கே அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றேன். 7.30 மணிக்கு அங்கிருந்து கிளம்பி, மைசூரில் இருந்த சித்தாராமைய்யாவின் வீட்டுக்கு சென்றோம். 8.30 வரை காத்திருந்தோம் சிஎம் காலை 4.30 மணிக்குத்தான் படுத்தார். உறங்கிக் கொண்டிருக்கிறார் என்றார்கள். காத்திருந்தோம். 9.15 மணிக்கு உள்ளே அழைத்தார்கள். வெளியே, நூற்றுக்கணக்கான தொண்டர்கள் காத்திருந்தார்கள். காவல்துறையினர் யாரையும் உள்ளே விடாமல் தடுத்து வைத்திருந்தார்கள்.
தமிழக அரசியல்வாதிகளை சந்திப்பது போலவே, தனியாக அவரோடு சோபாவில் அமர்ந்து உரையாடுவோம் என்று நினைத்து வீட்டுக்குள் சென்ற எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டு வாசலில் 120 ஜோடி செருப்புகள் இருந்தன. இத்தனை பேர் எங்கே இருக்கிறார்கள் என்று யோசித்துக் கொண்டே முதல் மாடிக்கு சென்றால், ஒரு ஹாலில் 100 பேர் இருந்தார்கள். 8 டிவி கேமராக்கள் ரெடியாக காத்திருந்தன. கால் வைக்கக் கூட இடமில்லை. நடுவே இரண்டு ஒரு நபர் சோபாக்கள் இருந்தன. ஒரு சோபாவில், ஒரு டிவி தொகுப்பாளர், 4 இன்ச்சுக்கு மேக்கப் போட்டுக் கொண்டு கையில் மைக்கோடு தயாராக இருந்தார்.
10.15 மணிக்கு பெட்ரூம் கதவு திறந்தது. அந்த கூட்ட நெரிசலில், கசங்கியபடியே சோபாவை நோக்கி வந்தார் சித்தாராமைய்யா. மெட்ரோ ரயியில் கூட செல்பி எடுக்க முயன்ற, இளைஞரை ஸ்டாலின் அறைந்தது நினைவில் வந்து போனது.
படுக்கையறையில் இருந்த ஏசி குளிர் வெளியே வந்ததும் சட்டென்று காணாமல் போய் 100 பேர் இருக்கும் அறைக்குள் இருந்த வெப்பத்தை உணர்ந்தார். “ஏய் ஏசியைப் போடப்பா” என்று கூறி விட்டு தலையை திருப்பி ஏசியை பார்த்தார். ஏசி ஓடிக்கொண்டுதான் இருந்தது.
“ஏய், எல்லாரையும் வெளியில அனுப்புங்கப்பா. எதுக்கு இத்தனை பேரு. வெளியில அனுப்பு“ என்றார். அந்த அறையில் பாதுகாப்புக்காக காவல்துறை அதிகாரிகளும் இருந்தார்கள். ஆனால் ஒருவர் கூட அறையை விட்டு வெளியேற முயற்சி செய்யவில்லை. ஒரு பெண்மணி, சித்தாரமைய்யாவிடம் பல காசோலைகளில் கையெழுத்து பெற்றார். அவர் கையெழுத்து போட்டுக் கொண்டு இருக்கும்போதே, ஒருவர் சித்தாரமைய்யாவின் காதருகே, ஏதோ சொன்னார்.
“ஏய். இதெல்லாம் பேசற நேரமாய்யா இது. எந்த நேரத்துல எதைய்யா பேசற“ என்று அவரை கோபத்தோடு கடிந்து கொண்டார்.
அந்த அறையில் ஒருவரும் வெளியேறுவதாக தெரியவில்லை. சற்று நேரத்தில் பத்திரிக்கையாளர்கள் பக்கத்து அறையில் காத்திருக்கச் சொன்னார்கள்.
பக்கத்து அறை, மிகவும் சிறியது. பத்துக்கு பத்து இருக்கும். அந்த அறையிலும் எந்த ஆடம்பரங்களும் இல்லை. நான்கு ப்ளாஸ்டிக் நாற்காலிகளும் ஒரு டேபிளும் இருந்தன. தொலைக்காட்சி கேமராமேன்கள், பர பரவென்று, லைட்டுகளையும், கேமராக்களையும் செட் செய்தனர். சத்தம் கேட்கும் என்று, ஃபேனையும் அணைத்து விட்டனர்.
20 நிமிடங்கள் கழித்து சித்தாராமைய்யா வந்தார். உள்ளே நுழைந்ததும், “யோவ் யாருய்யா ஃபேனை ஆப் பண்ணது. என்னய்யா இப்படி பண்றீங்க” என்று அலுத்துக் கொண்டார். உடனே அவசர அவசரமாக ஃபேனை போட்டனர். “எதுக்குய்யா இந்த ரூம்ல இத்தனை பேரு. யாரும்மா நீங்க“ என்று என் நண்பரை பார்த்து கேட்டார். அவர் நாங்கள் அடுத்த பேட்டிக்காக காத்திருக்கிறோம் என்றதும், “போங்கம்மா, இது முடிஞ்சதும் கூப்புட்றேன்“ என்றார். என் நண்பர், கேமராமேன் வருவதற்காக கதவருகே காத்திருந்ததைப் பார்த்த சித்தாராமைய்யா, எரிச்சலோடு, என் நண்பரைப் பார்த்து, “அம்மா தாயி, ஹோகம்மா ஒரகடே“ (அம்மா தாயே வெளிய போங்கம்மா) என்றார்.
பின்னர் வெளியே வந்து காத்திருந்தோம். கன்னட சேனல் பேட்டி முடிந்ததும், உள்ளே அழைக்கப்பட்டோம். சித்தாராமைய்யா பேட்டியளிக்கும் மனநிலையிலேயே இல்லை. தூக்கமின்மை. பிரச்சாரத்துக்கு இன்னு மூன்று நாட்களே இருக்கின்றன. 224 தொகுதியிலும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற கவலை. இறுதி நேரத்தில், பிஜேபியினர் என்ன தந்திரத்தை கையாள்வார்கள் என்ற கவலை போன்ற கவலைகளோடு, ஒரே நாளில் ஒரு கேள்விக்கு 35 முறை பதில் சொன்ன அலுப்பு ஆகிய அனைத்தும் அவர் பதில்களில் பிரதிபலித்தன.
பேட்டி நடந்து கொண்டிருந்தபோதே, ராகுல் காந்தி செல்போனில் சித்தாராமைய்யாவை அழைத்தார். 5 நிமிடங்கள் பேசினார். மைசூருக்கு பிரச்சாரத்துக்கு போங்கள் என்று ராகுல் சொன்னார் என்று ஊகிக்க முடிந்தது. சாம்ராஜ் நகருக்குத்தான் போகிறேன் என்று சித்தாராமைய்யா பதில் கூறினார். ஒரு கட்சியின் அகில இந்திய தலைவரிடம் பேசுகிறோம் என்று வழக்கமான அரசியல்வாதிகள் போல, சித்தாராமைய்யா பம்மவில்லை. இயல்பாக ஒரு நண்பரிடம் பேசுவது போல பேசினார்.
பேட்டி தொடங்கியதுமே, அவர் கோபம் அனைத்தும் பறந்து போனது. இயல்பாக புன்னகையோடு பேசினார். பல முறை பதில் சொல்லிய கேள்விகளுக்கே மீண்டும் பதில் சொல்வதில் அவருக்கு எந்த சிரமமும் இல்லை. விரைவாக பத்தே நிமிடங்களில் பேட்டியை முடித்துக் கொண்டு, சாம்ராஜ் நகருக்கு பிரச்சாரத்துக்கு ஹெலிகாப்டரில் செல்ல, விமானநிலையம் விரைந்தார்.
சித்தாராமைய்யா போட்டியிடும் இரு தொகுதிகளில் ஒன்றான, சாமுண்டீஸ்வரியை வலம் வந்ததில் தெரிந்த விஷயம், சித்தாராமைய்யா தோற்பதற்கான சாத்தியக் கூறுகளே அதிகம் உள்ளன.
இத்தொகுதியில் அதிக எண்ணிக்கையில் உள்ள ஒக்கலிகாக்களே வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார்கள். 75 ஆயிரம் எண்ணிக்கையில் இருக்கும் இவர்களில் பெரும் பகுதியில் வாக்களிக்க உள்ளனர். அவர்களின் வாக்குகள் பெரும்பாலும், ஒக்கலிகா சமுதாயத்தைச் சேர்ந்த ஜேடிஎஸ் வேட்பாளர் தேவகவுடாவுக்கே கிடைக்க வாய்ப்பு உள்ளது. மீதம் உள்ள, லிங்காயத்துகள், பழங்குடியின நாயக்குகள், தலித்துகள், இஸ்லாமியர்கள் ஆகியோர் ஒன்றாகச் சேர்ந்தால், 1.40 லட்சம் வருகிறது. ஆனால் இவர்களில் 80 சதவிகிதத்தினர் முழுமையாக சித்தாராமைய்யாவுக்கு வாக்களித்தால்தான் அவர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. தலித்துகளிள் சிலர், காங்கிரஸில் இருந்து விலகிய தலித் தலைவர், சீனிவாச பிரசாத்தின் ஆதரவாளர்களாக உள்ளதால், அந்த வாக்குகளும் முழுமையாக கிடைக்கும் என்று சொல்ல இயலாது.
இத்தனை ரிஸ்குகள் இருந்தும், சித்தாராமைய்யா, ஏன் இத்தொகுதியை
மைசூரில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சித்தராமனஹுண்டி கிராமம்தான் சித்தாராமைய்யாவின் சொந்த ஊர். அந்த கிராமத்தில் உள்ள வழக்கம், குடும்பத்தில் ஒரு மகனை, கோவிலுக்கு வீர மக்களு (வீர மகன்) என்ற பெயரில் நேர்ந்து விடுவது. அதன்படி சித்தாராமைய்யாவை அவர் தந்தை கோவிலுக்கு நேர்ந்து விட்டார். இதனால் சித்தாராமைய்யா, அவர்கள் குல நடனத்தை பயின்று வந்தார். குலத் தொழிலான ஆடு மேய்க்கும் பணியையும் செய்து வந்தார்.
நேரடியாக 5ம் வகுப்பில் சேர்ந்தார். தாமதமாகச் சேர்ந்தாலும், பள்ளிப் படிப்பில் சிறப்பாக தேறினார். சட்டம் படித்த பிறகு, மைசூரின் வித்யவர்தகா சட்டக் கல்லூரியில் ஆசிரியராக சில காலம் பணியாற்றினார். 1983ம் ஆண்டு முதன் முதலாக லோக்தள் கட்சியின் டிக்கெட்டில், எம்எல்ஏவானார்.
சித்தாராமைய்யாவுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. மற்ற அரசியல் தலைவர்களைப் போல, கோவில்களுக்கு சென்று, தன் பக்தியை படோடாபப்படுத்துபவர் கிடையாது. அவரிடம், பிறந்த தேதியையும், நேரத்தையும் கேட்டால், என் பெற்றோர் குறித்து வைக்கவில்லை என்று கூறுவார். அவர் பள்ளியில் உள்ள பதிவுகளை வைத்தே, அவர் பிறந்தநாள் கணக்கிடப்படுகிறது.
வெற்றிக்கான வாய்ப்புகள் குறைவு என்று தெரிந்தும், சித்தாராமைய்யா சாமுண்டீஸ்வரியை தேர்ந்தெடுத்தது, அவரின் பெர்சனாலிட்டியை காட்டுகிறது என்கிறார், பெங்களுரைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் தேஜா.
“மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தற்போதைய சாமுண்டீஸ்வரி எம்எல்ஏவான தேவகவுடா மற்றும் பிஜேபியின் எடியூரப்பா ஆகியோர், தேர்தல் பரபரப்பு தொடங்குவதற்கு முன்னதாகவே, சித்தாராமையாவுக்கு சவால் விட்டு வந்தனர். இந்த சவாலை ஏற்காமல், வெற்றியை மட்டுமே மனதில் வைத்து, வேறு தொகுதியை நோக்கி ஓடும் நபர் சித்தாரமைய்யா அல்ல. அவருக்கு அரசியல் வாழ்வை அளித்த சாமுண்டீஸ்வரியை விட்டு விட்டு வேறு தொகுதியை தேர்ந்தெடுப்பதை அவர் விரும்பவில்லை.
வெற்றியோ, தோல்வியோ, சாமுண்டீஸ்வரி ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேண்டும் என்று சித்தாராமைய்யா விரும்பினார். ஆனால் காங்கிரஸ் மேலிடம்தான் அவரை ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று பதாமி தொகுதியில் மற்றொரு மனுவை தாக்கல் செய்ய வைத்தது.
மேலும், கர்நாடகாவைப் பொறுத்தவரை, காங்கிரஸின் பெரிய தலைவர் சித்தாராமைய்யாதான். அவர் தோல்வி பயத்தில், சாமுண்டீஸ்வரியை விட்டு வேறு தொகுதிக்கு செல்கிறார் என்பது, காங்கிரஸ் தொண்டர்களையும் சோர்வடையச் செய்திருக்கும்.
வெற்றி வாய்ப்பு துளியும் இல்லாத நிலையில் 2006ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில், பிஜேபி மற்றும் ஜனதா தளத்தின் முழு பலத்தையும் எதிர்த்து 257 வாக்குகளில் வெற்றி பெற்றார் சித்தாராமைய்யா. அதே போன்றதொரு மேஜிக்கை மீண்டும் நிகழ்த்திக் காட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார் சித்தாராமைய்யா” என்றார் தேஜா.
சாமுண்டீஸ்வரி தொகுதியின் பல கிராமங்களை சுற்றி வந்ததில், தேஜாவின் கருத்தே பிரதிபலிக்கிறது. சித்தாராமைய்யா வெற்றி பெற, ஒரு பெரும் அதிசயம் அவசியமாகி இருக்கிறது.
இப்போது அனைவரும் எதிர்ப்பார்க்கும் ஒரு கேள்விக்கு வருவோம். ‘
கர்நாடக தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு ?
மக்கள் மனதில் என்ன உள்ளது என்பதை அறிவது அத்தனை எளிதல்ல. இருக்கும் கள நிலைமைகளை வைத்து, ஒரு உத்தேசமான முடிவுக்கு வர முடியுமே தவிர அறுதியிட்டு சொல்ல முடியாது.
பெங்களுரு, மைசூரு, மாண்டியா, மங்களுரு ஆகிய இடங்களில் உள்ள பல பத்திரிக்கையாளர்களிடம் பேசினேன். மைசூர் மாவட்டத்தில் பிஜேபி, காங்கிரஸ் மற்றும் சாதாரண மக்கள் பலரிடம் பேசினேன்.
மைசூரு, பெங்களுரு மற்றும் மங்களுரில் பணியாற்றும் உயர் உயர் அதிகாரிகளிடம் பேசினேன்.
அதிகாரிகள், காங்கிரஸ் 100ஐ தொடும், ஆனால் ஆட்சியமைக்க முடியாது என்றனர். பத்திரிக்கையாளர்கள், பிஜேபி அதிக எண்ணிக்கையை பெறும், ஜனதா தளம் உதவியோடு ஆட்சியமைக்கும் என்றனர். பொதுமக்களின் கருத்து, பல வகையிலும் இருந்தது.
பல தரப்பினரிடம் பேசியதில் தெளிவாக தெரிந்த விஷயம், அவர்களில் யாருமே காங்கிரஸ் கட்சி 90 இடங்களுக்கு கீழே வரும் என்று சொல்லவில்லை. பிஜேபி ஆதரவாளர்கள் பலரிடம் பேசியதில் அவர்கள் கூறியது, தொங்கு சட்டசபை அமையும். ஜனதா தளம் உதவியுடன் ஆட்சியமைப்போம் என்றனர். இந்த கருத்து, பிஜேபியினரிடமே, ஆட்சியமைப்போம் என்ற நம்பிக்கை இல்லை என்பதையே உணர்த்துகிறது.
முந்தைய கட்டுரையில் விளக்கியது போல, எடியூரப்பா ஒரு மோசமான தேர்வு.
குஜராத் தேர்தல், உத்தரப் பிரதேச தேர்தல் ஆகியவற்றில் மோடி பிரச்சாரம் செய்ய வந்தபோது, நாடெங்கும் தலைப்புச் செய்தியாகின மோடியின் உரைகள். ஆனால், மோடியின் முதல் கூட்டம் முதல், இதுபோன்றதொரு அலையை அவரால் உருவாக்க முடியவில்லை. 1948ம் வருடம், கர்நாடகாவைச் சேர்ந்த ராணுவ தளபதி திம்மையாவை அவமதித்தனர் நேருவும், கிருஷ்ண மேனனும் என்று அவர் சொன்ன பச்சைப் பொய் துளியும் எடுபடவில்லை. அப்படியே அவமானப்படுத்தியிருந்தாலும், அதற்கும் 2018 தேர்தலுக்கும் என்ன சம்பந்தம் என்றே கேள்வி எழுப்பினார்கள். இது போல பேசுவது ஒரு பிரதமருக்கு அழகா என்றும் கேள்வி கேட்டார் வருணா தொகுதியில் நான் சந்தித்த ஒருவர்.
சீட்டாட்டத்தில் எதிராளிக்கு நம் கையில் இருக்கும் சீட்டு என்ன என்பது தெரியாமல் ஆடுவது அடிப்படை விதி. இது அரசியலுக்கும் பொருந்தும். ஆனால் தன் கையில் இருக்கும் சீட்டு என்ன என்பதை முதல் பிரச்சாரக் கூட்டத்திலேயே வெளிப்படுத்தி விட்டார் மோடி. தேவகவுடா முதியோர் இல்லத்தில் இருக்க வேண்டியவர் என்று இதற்கு முன்னால் பேசிய மோடி, தேவகவுடா மீது திடீர் கரிசனத்தோடு, அவரைப் போன்ற சிறந்த தலைவரைப் பார்க்க முடியாது என்று பேசியது, பிஜேபி மற்றும் ஜனதா தளம் இடையே ஒரு ரகசிய கூட்டணி இருக்கிறது என்பதை வெளிப்படுத்தி விட்டது. இந்த கருத்தை நான் பேசிய பெரும்பாலான மக்களிடம் உணர முடிந்தது. இப்படியொரு கருத்து பரவினால், ஜனதா தளத்தையும், பிஜேபியையும் ஒரே அணியாகத்தான் மக்கள் கருதுவார்கள். இது பிஜேபியின் முதல் பிழை.
ரெட்டி சகோதரர்களும், எடியூரப்பாவும் கடந்த பிஜேபி ஆட்சியின்போது அடித்த கூத்துக்களும், செய்த ஊழல்களும் இன்னும் மக்கள் மனதில் தெளிவாக உள்ளது. எடியூரப்பாவை முதல்வர் வேட்பாளராக அறிவித்து விட்டு, ரெட்டி சகோதரர்களுக்கும் சீட் கொடுத்து விட்டு, சித்தாராமைய்யாவை ஊழல் அரசியல்வாதி என்று பிஜேபி கூறுவது மக்களிடம் துளியும் எடுபடவில்லை என்பதை என்னால் உணர முடிகிறது.
மத்திய அரசின் சாதனைகளாகவும் எதுவும் சொல்ல முடியவில்லை பிஜேபியால். 2014ல் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றாமல், கர்நாடக சட்டப்பேரவைக்கு வாய்க்கு வந்த வாக்குறுதிகளை அள்ளி வீசுவது நிச்சயமாக எடுபடப்போவதில்லை.
இருப்பினும், ஒக்கலிகா சாதி பலத்தையும், மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் குமாரசாமிக்கு இருக்கும் செல்வாக்கையும் குறைத்து மதிப்பிட முடியாது. இந்த செல்வாக்கு, வாக்குகளை சில தொகுதிகளில் ஜனதா தளத்துக்கு வெற்றியைத் தேடித் தந்தாலும், ஜனதா தளம் செல்வாக்கு இல்லாத தொகுதிகளில், வாக்குகளைப் பிரித்து காங்கிரஸுக்கு சாதகமாக அமைவதற்கான சாத்தியங்களே அதிகம்.
மேலும், Anti Incumbency எனப்படும், ஆட்சிக்கு எதிராக பெரிய அலை, சித்தாரமைய்யாவுக்கு எதிராக வீசவில்லை. ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. இலவச அரிசித் திட்டம், மலிவு விலை உணவு போன்றவை, நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பான்மை சாதிகளான, ஒக்கலிகா, கவுடா, லிங்காயத்து போன்ற ஜாதியைச் சேராமல், வெறும் 6 சதவிகிதமே உள்ள குருபா இனத்தைச் சேர்ந்தவராக சித்தாராமைய்யா இருப்பது, தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் இதர சாதிகளிடம் சித்தாரமைய்யாவுக்கு ஒரு ஏற்புணர்வை உருவாக்கியுள்ளது.
எனது கணிப்பு.
காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க குறைந்தபட்ச தேவையான 112 என்ற எண்ணிக்கையை சொந்த பலத்திலேயே பெறும் என்பதே.
இந்த எனது கணிப்பில் எனது விருப்பமும் அடங்கியிருக்கிறதா என்றால் அடங்கியிருக்கிறது. ஏனெனில், மக்கள் மீது எனக்கிருக்கும் தளராத நம்பிக்கை. மக்களை நான் ஏமாளிகள் என்றோ, முட்டாள்கள் என்றோ ஒருபோதும் சொல்ல மாட்டேன். இந்திய நாடு, இத்தனை சிக்கல்களுக்குப் பிறகும் தழைத்துள்ளது என்றால், அதற்கு இந்நாட்டின் மக்களே காரணம்.
குறிப்பு
1) எனது இந்த தேர்தல் ஊடகப் பணியில், இஸ்லாமியக் குடியிருப்புகளை நான் தேடித் தேடி அம்மக்களை சந்திப்பது ஏன் என்ற கேள்வி எழலாம்.
ஒரு நாட்டில் சிறுபான்மையினர் எத்தனை பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்பதை வைத்தே, அந்நாட்டின் ஜனநாயகத்தின் தன்மையை அறிய முடியும். சிறுபான்மையினர் பாதுகாப்பாக உணராத நாட்டில் இருப்பது ஜனநாயகமே அல்ல.
இஸ்லாமியர்கள் ஏறக்குறைய அனைவருமே இந்தி பேசுவது இன்னொரு முக்கிய காரணம். நான் சென்ற சில கிராமங்களில் இந்தியோ, ஆங்கிலமோ, தமிழோ தெரியாத இடங்கள் இருந்தன. என்னதான் சைகையில் பேசி, அவர்களிடம் உரையாடினாலும், எனக்கு முழுமையான திருப்தி ஏற்படவில்லை.
2) எனது 12 வயதில், இந்தி வகுப்புக்கு போ என்று என் தந்தை சொன்னபோது, கருணாநிதி ரயில் நிலையங்களில், இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தை மீண்டும் நடத்திக் கொண்டிருந்தார். நான் இந்தியை எதிர்க்கிறேன். படிக்க மாட்டேன் என்று சொன்னபோது, என் தந்தை நாலு சாத்து சாத்தி இந்தி வகுப்புக்கு அனுப்பினார்.
அழுது கொண்டே, இந்தி வகுப்புக்கு சென்ற என்னை, அன்போடு, வரவேற்று, என் சேட்டைகளை பொருட்படுத்தாமல், எனக்கு இந்தி சொல்லிக் கொடுத்த என் டீச்சர் ராஜலட்சுமியையும், என் தந்தையையும், இந்த நேரத்தில் நன்றியோடு நினைவு கூர்கிறேன். இந்தி தெரியாமல் இருந்திருந்தால், நான் ஓசூரோடு திரும்பியிருக்க வேண்டும்.
நாயே ,நீ மறுபடியம் சிதாரமைய ஜாதிய சேர்ந்த மக்கள் எங்கு அதிகம் உள்ளனரோ அங்கேதான் சென்று பேட்டி எடுக்கின்றாய் . ஒக்காலிய சமுதாயத்தை சேர்ந்தவரிடம் போய் சீதாராமையர் உங்க ஜாதியா இருந்தா என்ன பண்ணுவ ன்னு கேட்கிற …அடுத்து முஸ்லிம் மக்கள் கிட்ட போய் பேட்டி கேக்குற ..ஏண்டா முஸ்லிம் க்கு பிஜேபி க்கும் ஆகாதுன்னு தெரியும் ..வேணும்னே போய் தூண்டி விட்டுருக்க ..வெட்கம் கெட்ட ஜாதி வெறி நாயே …நீயும் அந்த மாமா விகடனும் ஒன்னு ..போ போ காங்கிரஸ்க்கு விளக்கு புடி …இதுல நியாம புடுங்குராம் …
நீ கண்டிப்பாக வெட்கப்பட வேண்டுமா?
சுவிசு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்ப்பட்டியலை ஏன் கொடுக்க மறுக்கிறார் என்பதை முதலில் பிரணாப் முகர்சியிடம் கேளுங்கள்.
அசன் அலி மீதான விசாரணையை யார் இழுத்தடிக்கிறார்கள் என்று உன் அம்மாவிடம் கேள்?
மேலும் கேள், இரணடாம் அலைக்கற்றை (2G) ஊழலில் 60% பணமூட்டை யாருக்கு கிடைத்தது என்று?
பொதுவாய விளையாட்டுப் போட்டி ஊழலில் (cwg) சில நூறு கோடிகளைத் தான் கல்மாடி களவாடினார். மீதியை யார் அள்ளிக்கொண்டார்கள்?
இந்தியன் ஏர்லைன்சை என்ன செய்தீர்கள்? ஏன் அது வருமானம் வரும் வழித்தடங்களில் பயனிக்கவில்லை? என்று பிரபுல் பட்டேலிடம் கேள்? உன் கட்சியை சேர்ந்த மந்திரிகளின் வேண்டுமென்றே செய்யப்பட்டத் தவறுகளுக்கு ஏன் வருமான வரி செலுத்தும் மக்கள் ஏர் இந்தியாவிற்கு பணம் செலுத்த வேண்டும்?
மேலும் உங்களால் ஒரு வானூர்தி சேவையை ஒழுங்காக நடத்த முடியவில்லை, நீங்கள் நாட்டை வழிநட்த்துவீர்கள் என்று நாங்கள் எப்படி நம்புவது?
எது/ஏன் உங்களை அமைதியாக வைத்துள்ளது என்று மன்(னு)மோகன் சிங்கிடம் கேள்?
கல்மாடியும், அ.ராசாவும் பலியாடுகள் தான், சில பெரியத் தலைகளின் பெயர்களைக் காப்பாற்றுவதற்காக. 1992 ல் நடந்த பங்குச் சந்தை முறைகேட்டில் எப்படி அர்சத் மேத்தாவோ அது போல.
20,000 க்கும் அதிகமான மக்கள் கொள்ளப்பட்ட போபால் நச்சு வாயுக்கசிவு சம்பவத்தின் குற்றவாளியை யார்த் தப்பிக்க விட்டார்கள்?
1984 ல் நடந்த சீக்கியர்களின் படுகொலைக்கு காரணகர்த்தா யார்?
உயர் நீதி மன்றம் இந்திரா காந்தியின் லோக் சபா வெற்றியை செல்லாது என்று அறிவித்த பின்பும், 76-77 ல் எப்படி நாட்டை அவசர நிலைக் கட்ட்த்திற்குத் தள்ளினார் என்பதையும் படித்துப் பார். அவர் எந்த அளவிற்கு மக்களாட்சியையும் நீதியையும் மற்றும் பத்திரிக்கை சுதந்திரத்தையும் ம(மி)தித்தார் என்பதை என்னால் பந்தயம் கட்ட முடியும்.
இவற்றிற்கான விடைகள் உனக்கு ஏற்கனவே தெரியும் என்று என்னால் யூகிக்க முடிகிறது. ஆக என்னுடையக் கேள்வி, மாயாவதி, உன் குடும்பம் மற்றும் உன் கட்சி இவற்றில் ஏன் இரட்டை நிலைப்பாடு அல்லது இரட்டை வேடம் கொண்டிருகிறாய்?….. iduvum savukkula vandadu than pa…. rahuluku oru iit karan ketta kelvinu….
//இந்திய நாடு, இத்தனை சிக்கல்களுக்குப் பிறகும் தழைத்துள்ளது என்றால், அதற்கு இந்நாட்டின் மக்களே காரணம்.//
Shankar sir, why giving Muttu for a Failed Country like India which has not progressed on any 1 front and the greatest achievement of the politicians has been to create a mind set among the people that “Corruption is Part of Life so lets get Involved when there is an Opportunity”
Super.karnataka electiona pathi oru nala thelivu kidachruku
Good Analysis. Congress wd touch 100+ below 113! BJP anti Muslim, Anti Minority stance wd keep common educated man with common sense making them untouchable.
Common people of Karnataka wants BJP out. Once bitten twice shy. 3CM in 5 years is disaster!!! I think Siddhu wd win both seats !! Bangalore city may favor BJP. Let’s see!!!
hosuroda thirumbina enna samy? Tamilae theyima ethana vadanaattan inga vandhu pozhapuu ottaraan? ithan moolam enna solla varreenga?
onnum ille, thaan oru Anti Bjp sombhu nu solla varar… Shankarkum Vaiko kum yenna vithyasam?? Shankar used to blast dmk admk congress till 2014 and now says let them come to power to prevent bjp. Ketta bjp is the worst evil nu solluvar, itha thaane Vaiko vum sollraru?? Both Shankar and Vaiko were cut throat in opposing dmk admk congress in the past, so the only difference between shankar and vaiko is their spelling. Funny thing is Shankar always makes fun of Vaiko failing to realize he too is a Social Media Vaiko 😀 😀
excelent
Super
Pramadham