ஹரியானா மாநிலத்தில் மே 4-ம் தேதி ஜும்மா தொழுகை எனப்படும் வெள்ளிக்கிழமை தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபட்டிருந்தபோது குர்காவ்ன் நகரில் 10 இடங்களில் குண்டர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்து இடையூறு செய்துள்ளனர்.
இடையூறு செய்த குண்டர்களின் செயல்கள் குறித்து அம் மாநில முதல்வர் மனோகர் லால் கத்தார் எதுவும் சொல்லவில்லை. அந்த குண்டர்களைக் கண்டுபிடித்து அவர்கள் மீது வழக்குப் பதியுமாறு போலீஸாரை அவர் கேட்டுக்கொள்ளவில்லை. அந்த குண்டர்களைத் தப்பிக்கவிட்டதற்காக போலீஸாரை அவர் கண்டிக்கவில்லை. வெள்ளிக்கிழமை தொழுகையை தொடர்ந்து இடையூறு செய்வோம் என வெளிப்படையாக மிரட்டல் விடுக்கிற “ஸன்யுக்த் ஹிந்து சங்கார்ஷ் ஸமிதி“ (Sanyukt Hindu Sangharsh Samiti) என்ற புதிய உருவாக்கப்பட்டுள்ள அமைப்பின் உறுப்பினர்களை, சட்டத்தை தங்கள் கையில் எடுக்கக்கூடாது என முதல்வர் கத்தார் எச்சரிக்கவில்லை. இஸ்லாமிய பக்தர்கள் ஜும்மா தொழுகை நடத்தும் இடங்களுக்கு அருகே இடையூறு செய்பவர்களை அனுமதிக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் போலீஸாரை கேட்டுக்கொள்ளவில்லை.
ஆனால், வெள்ளிக்கிழமை தொழுகைகளை மசூதி அல்லது ஈத்கா என்றழைக்கப்படும் மைதானங்களின் நான்கு சுவர்களுக்குள்ளேயே நடத்த வேண்டும் என கர்காவோன் நகர்வாழ் முஸ்லிம்களுக்கு முதல்வர் மனோகர் லால் கத்தார் தனது திருவாய் திறந்து அறிவுரை வழங்கியிருக்கிறார்.
அத்தோடு அவர் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை.
இன்னும் ஒருபடி மேலே சென்று, “திறந்தவெளி இடங்களில் தொழுகைகள் நடத்தும் நிகழ்வுகள் தற்போது அதிகரித்து வருகின்றன. யாரும் ஆட்சேபிக்காதவரை பிரச்சினை எதுவும் இல்லை. மசூதி போன்ற மதவழிபாட்டுத் தலங்களின் வளாகத்துக்குள்ளேயோ அல்லது ஒருவரது வீட்டிற்குள்ளேயோதான் தொழுகைகள் நடத்தப்பட வேண்டும்” என அவர் தெரிவித்திருக்கிறார்.
அவருடைய இந்த அறிக்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸாரால் எவ்வாறு விளக்கம் கொடுக்கப்படும் ? இடையூறு செய்பவர்களை சட்டத்தை உடைப்பவர்களாகக் கருதாமல் அவர்களை “ஆட்சேபம் தெரிவிப்பவர்களாகவே” மாவட்ட நிர்வாகமும் போலீஸாரும் பார்ப்பர். அவர்களுடைய செயல் சட்டப்பூர்வமான எதிர்ப்புச் செயலாகப் பார்க்கப்படும். தொழுகை நடத்தும் இமாம்களையும் இஸ்லாமிய பக்தர்களையும் அவர்கள் தள்ளுகின்றனர். இஸ்லாமிய பக்தர்கள் உடல் ரீதியாக தாக்கப்படுகின்றனர். தொலைபேசிகள் பிடுங்கப்பட்டு உடைக்கப்படுகின்றன. ஆனால் அவர்களுடைய இந்த செயல்கள் ஆட்சேபணைக்குரியதாக அல்லது சட்டத்துக்குப் புறம்பானதாக பார்க்கப்படவில்லை.
இந்த வன்முறை குறித்து நீங்கள் புகார் தெரிவிக்கிறபோது, அதை நீங்கள் “சீரியஸாக”எடுத்துக் கொள்ளக் கூடாது என மாவட்ட நிர்வாகம் விரும்புகிறது. அதையும் மீறி நீங்கள் புகார் தெரிவித்தால், “உங்களுக்குத்தான ரத்தம் வரவில்லையே. சாகவுமில்லை. எதற்காக சின்ன விஷயத்தை பெரிது படுத்துகிறீர்கள்” என்று நிர்வாகம் நிலைபாடு எடுக்க வேண்டும் என்பதுதான் கட்டாரின் நோக்கம்.
“எவரும் ஆட்சேபிக்காதவரை” என்பது முதல்வரின் அறிக்கையின் ஒரு முக்கியமான பகுதியாக உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்துகூட தனக்கு எதுவுமே தெரியாததுபோல அவர் அமைதியாக இருப்பதை நாங்கள் கவனித்திருக்கிறோம். ஆனால் ஆட்சேபனைகளை அவர் எதிர்பார்க்கிறார். அவரது சொந்த மக்கள் தற்போது ஆட்சேபனை தெரிவித்து அவருக்கு உதவியிருக்கிறார்கள். அதைக் கொண்டு அவரும் அவரது அரசாங்கமும் திறந்தவெளியில் தொழுகை நடத்தப்படுவதை சட்டப்விரோதமாக்குவதற்கு ஒரு சாக்காக இது அமையும்.
தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை மிரட்டிய அந்த இளைஞர்கள் உண்மையான ஆட்சேபகர்களா? மைதானத்தில் நுழைந்த அந்த இளைஞர்கள், ஒரு மிகப்பெரிய ஆட்டத்தில் வெறும் சிப்பாய்களே என்பது பஜ்ரங்தள் மற்றும் பிற வலதுசாரி அமைப்புகளின் அறிக்கைகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. திடீரென, ஸன்யுக்த் ஹிந்து சங்கார்ஷ் ஸமிதி என்ற புதிய அமைப்பு தொடங்கப்படுகிறது. அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை, ஒரு காரில், தொழுகை நடக்கும் இடத்துக்கு அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் செல்கிறார்கள். குற்றவியல் (கிரிமினல்) வழக்கு பதியப்பட்டால், இந்த இளைஞர்கள்தான் பிடிபடுவர். இந்த இளைஞர்களைத் தூண்டி விட்டவர்கள் மாட்டிக் கொள்ளாமல் பத்திரமாக வெளியே இருப்பர். அப்படியானால், இந்த “ஆட்சேபணை” எந்த அளவு உண்மையானது ?
நிலத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் ஒரு இடத்தில் தொழுகை நடத்தப்படுவதை அனுமதிக்க முடியாது என அனில் விஜி என்ற ஒரு ஹரியானா அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஆனால் இதுபோன்று தொழுகை நடத்தும் போர்வையில் இடங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதற்கு அவர் ஒரு உதாரணம் கூட சொல்லவில்லை. ஏனெனில், அந்த மாதிரி சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. தொழுகையில் ஈடுபட்டவர்கள் எந்த வசதி வாய்ப்புகளும் இல்லாத ஏழைகள், தங்கள் பணியிடத்திற்கு அருகிலேயே தொழுகை நடத்த ஒன்று சேர்ந்த உழைக்கும் வர்க்கத்தினர்.
நில ஆக்கிரமிப்பு என்ற பயம் என்பதெல்லாம் ஆட்சேபகர்கள் பயன்படுத்தும் வாதங்களில் ஒன்று. மற்றொன்று, “எங்களது சிறுமிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு” என்பது. என்னமோ முஸ்லிம்கள் தங்களது வலிமையைக் காட்ட “அதை” செய்வதுபோல சொல்லப்படுகிறது.
பங்களாதேஷ் மற்றும் ரோஹிங்கியா அகதிகளின் ஊடுருவல் என்பது இன்னொரு காரணம். அவர்களை அடையாளம் கண்டு வெளியேற்றும் பணியில் ஈடுபட்டது போலவே, அத்துமீறி நுழைந்து தொழுகையை இடையூறு செய்துள்ளனர்.
ரம்ஜான் வேகமாக நெருங்கி வருகிறது. ரம்ஜான் மாதத்தில் ஜும்மா தொழுகையின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. எனவே தொழுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் அதிக இடம் தேவைப்படும்.
நிர்வாகத்தின் பதில்களில் ஒன்று, வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமான பிரார்த்தனை செய்யக் கூடிய சொத்துக்களை அடையாளம் கண்டு, அங்கே இமாம்கள் தொழுகை நடத்த வேண்டும் என்பதே. நில மாஃபியாக்களால் ஏற்கெனவே அபகரிக்கப்பட்டுள்ள வக்ஃப் வாரிய சொத்துக்களை அடையாளம் காண்பது ஒரு சிரமமான பெருஞ்சுமையான வேலையாகும். பிரிவினைக்குப் பிறகு, முஸ்லிம்களுக்குச் சொந்தமான அல்லது தொடர்புடைய சொத்துக்கள் அபகரிக்கப்பட்டன அல்லது பயன்படுத்தப்படாமல் உள்ளன என்பது இந்த பிராந்தியத்தின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். பெரும்பாலான மசூதிகள் பூட்டப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமான சொத்துக்களையோ அல்லது அந்த மசூதிகளையோ மீட்பது என்பது ஒரு மிகவும் கடினமான வேலை.
குர்காவ்ன் (இது குருக்ரம் என முட்டாள்தனமாக பெயர் மாற்றப்பட்டு அனைவராலும் அடக்கத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது) ஒரு எதிர்காலத்தின் நகரம் என பெருமையாக அழைக்கப்படுகிறது. இங்கே கார்ப்பொரேட் நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஆனால் இது கிராமங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த இரு மாறுபட்ட உலகங்கள் அரிதாக சந்திக்கின்றன. சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் பிழைப்புக்காக இங்கே வந்தவர்கள், குண்டர்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுப்பதை தவிர்த்து அந்த குண்டர்களுடன் சமாதானமாக போய் விடுவர். குர்காவ்னில் கிராமங்களுக்கிடையே கடந்த காலங்களில் ஒத்திசைவு இருந்ததற்கான எந்தவொரு நினைவுச் சின்னமும் இல்லை. இப்போது இங்கே காணப்படும் முஸ்லிம்கள் பெரும்பாலும் குடியேறியவர்கள். ஆனால் குடியேறிய மற்றவர்களும் இங்கே உள்ளனர். குர்கானின் பொருளாதாரம் இந்த குடியேறியவர்களைச் சார்ந்தது. அவர்களை காலி செய்துவிட்டால், குர்கானின் பொருளாதாரம் சுத்தமாக நின்றுவிடும்.
இந்த பொருளாதார நிர்ப்பந்தங்களை தனியே ஒதுக்கிவிடுங்கள். அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14 (சட்டத்தின் முன் சமத்துவம்), பிரிவு 15 (மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாடு மீதான தடை) மற்றும் பிரிவு 25 ((மனசாட்சியுடன் செயல்பட, ஒருவருக்கு விருப்பமான தொழிலை செய்ய, மற்றும் விருப்பமான மதத்தை பின்பற்ற, அதை பரப்ப சுதந்திரம்) ஆகியவை இன்னும் நடைமுறையில் உள்ளன. இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து அவைகள் அகற்றப்படவில்லை. அவற்றை (இந்த அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளை) செயல்படுத்துவதற்கு நிர்வாகம் அரசியல் தலைமையை கவனிக்கத் தேவையில்லை. இது அவர்களின் கடமை.
ஒரு அமைதியான கூட்டத்தினர் தாக்கப்படும்போது, போலீஸாருக்கு அவர்களுடைய கடமை என்ன என்பதை நாம் சொல்ல வேண்டுமா? அவர்கள் தங்கள் வேலையை செய்ய புதிய வழிகாட்டுதல்கள் வேண்டுமா? சித்தாந்தத்தின் தவறான பக்கத்தில் இருக்கும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் தொந்தரவு செய்யப்படும் போது, போலீஸார் வேறு பக்கம் பார்ப்பார்களா ? அல்லது இந்தியாவின் அரசியலமைப்பின் பெயரில் எடுத்துள்ள உறுதிமொழியை அவர்கள் நினைவு கொள்வார்களா?
இந்த வெள்ளிக்கிழமை மற்றும வரவிருக்கும் வெள்ளிக்கிழமைகள் உண்மையில் குர்காவ்ன் நிர்வாக ஒழுக்கத்திற்கான சோதனை ஆகும். அறநெறி எங்கே தோல்வியடைந்தாலும், அறநெறி தைரியம் எங்கே வெற்றிபெற்றாலும், அவை எல்லாவற்றையும் வரலாறு பதிவுசெய்கிறது. குர்காவ்னில் அது (வரலாறு) தன்னை உறுதிப்படுத்துகிறது என நம்புவோம்.
அபூர்வானந்த்
On fridays when the muslims assemble for prayer, they over flow their masjid and they occupy the roads. This blocks the traffic, this is an unannounced blockage of the traffic. Till they finish their prayer one cannot cross this area. This doesn’t happen in one place , it happens wherever the masjid capacity is less than the crowd. Probably this is what the chief minister meant.
Now a days the media is looking for a chance to instigate people instead of giving concrete and valuable suggestions or peoples opinion in a constructive way.
This is clear from the title given for this article.
மத்திய கிழக்கில் நடப்பது போன்று உள் நாட்டில் மதம் இனம் சார்ந்த கலவரங்களை உருவாக்கி அதன் வழி முஸ்லிம்களை ஒழித்து விடலாம் என்று ஒரு பெரிய கூட்டமே கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது. கலவரம் என்று வந்தால் இழப்பு இருபக்கமும்தான் என்பதும், அதனால் ஏற்படப்போகும் நிம்மதியற்ற, அமைதியற்ற வாழ்க்கை முறையாக மாறப்போவதை இந்த முட்டாள் பக்தர்கள் உணரவேயில்லை. 70 ஆண்டுகளாகக் கட்டிக்காத்து வந்த அமைதியான இந்தியாவைத் துண்டாடிக் கொண்டாட இந்தக் காட்டுமிராண்டிகள் தயாராகி வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள அந்த மாதிரியான எண்ணம் உடைய காட்டு மிராண்டிகளை வட இந்தியாவிற்கு விரட்டிவிட்டு இந்திய யூனியனில் இருந்து தமிழகம் தனியாகப் பிரிவதே இதற்கு தீர்வாக முடியும்.
தேனியில் தலித் மக்களின்
மீது வன்மையாக தாக்கியவர்கள் குறித்து கட்டுரையோ கண்டனமோ எழுது வரா சவுக்கு . மோடி எதிருப்பு கட்டுரை வெளியிடும் வயர் பத்திர்கை செய் தி தேவையாஇந்தியாவில் முஸ்லிம்கள் தங்களது எல்லையை தாண்டி வருகிறார்கள் இது மிகவும் தவறான செயல்
மத தொழுகை என்ற பெயரில் அவர்கள் பொதுமக்கள் கூடுமிடத்தில் தங்களது சிறுபான்மை எல்லையை தாண்டி வருகின்றனர் இதை கண்டிப்பா தடுக்க வேண்டும்
இந்தியாவில் முஸ்லிம்கள் தங்களது எல்லையை தாண்டி வருகிறார்கள் இது மிகவும் தவறான செயல்
மத தொழுகை என்ற பெயரில் அவர்கள் பொதுமக்கள் கூடுமிடத்தில் தங்களது சிறுபான்மை எல்லையை தாண்டி வருகின்றனர் இதை கண்டிப்பா தடுக்க வேண்டும் , முழுவதும் முஸ்லிம்கள் இருக்கும் நாட்டில் கூட இப்படி வன்முறையில் ஈடுபடுவது இல்லை