கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் முடிந்துள்ள உத்தரப் பிதேசம் போலவே கர்நாடகாவிலும் பாஜக இதற்குமுன் எப்போதுமில்லாத அளவுக்கு மகத்தான வெற்றி பெறும் என அக்கட்சியின் ஆதரவாளர்களிடம் ஒரு பெரிய எதிர்பார்ப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. இப்படியான ஒரு நம்பிக்கைக்கு, ஒருவேளை, அடிப்படை ஏதும் உண்டா என ஆராய வேண்டியுள்ளது.
போட்டிகளில் உள்ள ஒற்றுமையே இதுபோன்ற எண்ணங்களுக்கு முதன்மையான அடிப்படை. உ.பி-யில் மும்முனைப் போட்டி இருந்தது. கர்நாடகாவிலும் அதேதான். உத்தரப் பிரதேசத்தில் வெளியேயிருந்து வந்த ஒரு வலிமையான கட்சியாக இருந்தது பாஜக. கர்நாடகாவிலும் தற்போது அதே நிலைதான். உத்தரப்பிரதேச பிரதேசத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜக மிகச் சிறப்பாக வெற்றி பெற்றிருந்தது. கர்நாடகத்திலும் அதே மாதிரிதான் வெற்றி பெற்றது.
2014ல் உத்தரப்பிரதேச வாக்காளர்களிடையே ஒரு பரந்த கூட்டணியை பாஜக ஏற்படுத்தியிருந்தது. தலித்கள் மற்றும் வொக்கலிகாக்கள் ஆதரவுடன், கர்நாடகாவிலும் பாஜக அதேபோல வாக்காளர்களிடையே ஒரு பரந்த கூட்டணியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த இரு மாநிலங்களிலும் மிகவும் பிரபலமானதொரு தலைவர். இறுதியாக, பிரதமர் நரேந்திர மோடி களத்திற்கு வரும் வரை பாஜக பிரச்சாரத்தில் ஒரு எழுச்சி இல்லை. உத்தரப் பிரதேசத்தில் 2017ல் நடைபெற்ற தேர்தலின்போது காணப்பட்டதுபோல, தற்போது கர்நாடகாவிலும் பிரதமர் மோடிக்கு மகத்தான வரவேற்பு (ரெஸ்பான்ஸ்) கிடைத்ததையடுத்து பாஜக மகத்தான வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் உறுதியாகியுள்ளன. ஆகையால், இந்த நம்பிக்கைக்கு வலுவான அடிப்படை இருப்பதுபோல் தோன்றுகிறது.
ஆனால், ஏராளமான ஒற்றுமைகள் உள்ளனவா ? முதலாவதாக, உ.பி-யைப் போலல்லாமல், கர்நாடகாவில் பாஜகவுக்கு முதல் போட்டியாளராக உள்ள காங்கிரஸ் ஒரு வலுவான சாதி-மத கலவையை உருவாக்கியுள்ளது. உ.பி.யில் – யாதவர்கள், முஸ்லிம்கள் மற்றும் ஜாதவ்களை தவிர்த்து – பாஜகவுக்கு 65 சதவீத பிரச்சாரம் செய்யக்கூடிய வாக்காளர்கள் இருந்தனர். கர்நாடகாவில் – முஸ்லிம்கள், குருபர்கள், தலித்கள் மற்றும வொக்கலிகாக்கள் தவிர்த்து – பாஜகவுக்கு பிரச்சாரம் செய்யக்கூடிய வாக்காளர்கள் சுமார் 50 சதவீதம் உள்ளனர். அந்த 15 சதவீதம்தான் மகத்தான வெற்றி மற்றும் வெற்றி ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு.
இரண்டாவதாக, உ.பி.யில் பாஜக தனது இறக்கையை மாநிலம் முழுவதும் விரித்திருந்து. உத்திரப் பிரதேசத்தை போலல்லாமல், கர்நாடகாவில் பாஜக குறிப்பிடத்தக்க பூகோள பலவீனத்துடன் செயல்பட்டு வருகிறது. 160க்கு குறைவான தொகுதிகளிலேயே பாஜகவுக்கு போட்டி உள்ளது. உ.பி.யில் வென்றதுபோல, கர்நாடகாவிலும் 80 சதவீத இடங்களில் வெற்றிபெற வேண்டுமெனில் அதற்கு அக்கட்சி 180 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.
மூன்றாவதாக, ஆரம்பக் கட்டத்தில் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற “பணமதிப்பிழப்பு“ பின்னணியோடு உத்திரப் பிரதேசத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கர்நாடகாவில் மோடி பிரச்சாரம் செய்யுமளவுக்கு அதுபோன்ற எந்த ஒரு பிரபலமான நடவடிக்கையும் தற்போது இல்லை. கலாச்சார சின்னங்களைத் தூண்டுவது, காங்கிரஸின் செயல்திறனை தாக்குவது ஆகியவற்றிற்கு அப்பால், கர்நாடகாவில் பேசுவதற்கு மோடிக்கு வேறெதுவும் இல்லை. இது மோடியின் பிரச்சாரக் கூட்டங்களில் வெளிப்படையாகவே தெரிந்த்து.
அடுத்ததாக, மோடியின் அனைத்து திட்டங்களைப் பார்ப்போம்.
பிரதம மந்திரியின் உஜ்வாலா யோஜனா எனப்படும் “ஏழைகளுக்கு எரிவாயு திட்டம்”. இத்திட்டத்தின் கீழ் கர்நாடகாவிலுள்ள 11 மில்லியன் வீடுகளில் ஒரு மில்லியன் வீடுகளுக்கு மட்டுமே இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது வெறும் 8 சதவீதமே ஆகும். ஆனால், உத்தரப் பிரதேசத்தில் 2017ல் தேர்தல் நடைபெற்றபோது 16 சதவீத வீடுகளுக்கு இத்திட்டத்தின்கீழ் இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. கர்நாடகாவில் 3.6 மில்லியன் வீடுகளில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளன. ( இது 30 சதவீத வீடுகளில் ஆகும்). உத்தரப் பிரதேசத்தில் 2.4 மில்லியன் கழிப்பறைகள்தான கட்டப்பட்டிருந்தன. எனினும், கர்நாடகாவில் தண்ணீர் ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது. முந்தை பாஜக ஆட்சிகூட இப்பிரச்சினை தீர்க்கத் தவறியது. ஜன் தன் யோஜனா எனப்படும் பிரதம மந்திரியின் மக்கள் நிதி திட்டம் அல்லது வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு திட்டம் பிரபலமடைவதற்கு முன்னரேயே கர்நாடகாவில் 60 சதவீத பெண்கள் ஏற்கெனவே வங்கிக் கணக்கு வைத்திருந்தனர். உ.பி-யில் இது 54 சதவீதமாகும்.
அதற்காக, பாஜக அரசுக்கு சாதகமான நேர்மறை தாக்கம் எதுவும் கர்நாடகாவில் இல்லை என்பதல்ல. உத்தரப் பிரதேசத்தை விட கர்நாடகம் மூன்று மடங்கு வசதி படைத்தது என்ற அடிப்படையில் அதன் அளவு மிகவும் குறைவானது. உத்திரப் பிரதேசத்தில் பொருளாதார நிலையை உயர்த்த கடுமையாக போராடிக்கொண்டிருந்த அகிலேஷ் யாதவின் அரசாங்கம் போலல்லாமல், கர்நாடகாவின் பொருளாதாரம் நாட்டிலேயே மிகவும் துடிப்பான பொருளாதாரங்களில் ஒன்றாகும்.
விவசாயத்தைப் பொறுத்தவரை, பாஜகவுக்கு கர்நாடகாவில் நல்ல பெயர் இல்லை. உத்தரப் பிரதேசத்தில் செய்ததைப்போல, கர்நாடகாவிலும் விவசாயிகளுக்குான கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளனர். ஆனால், கர்நாடக அரசு ஏற்கெனவே ஒரு கடன் தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்தியுள்ள நிலையில், பாஜக அறிவித்துள்ள கடன் தள்ளுபடி திட்டம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் பிரதமர் மோடியின் தலைமை குறித்து ஒப்பிட்டு நடத்தப்பட்ட சுதந்திரமான ஆய்வுகள் மூலம் இவை தெளிவாக தெரிகின்றன. உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2014ஐ காட்டிலும் 2017ல் அதிக பிரபலமாக இருந்தார். ஆனால் கர்நாடகாவில் இது தலைகீழ். 2014ல் இருந்ததைவிட மோடியின் புகழ் தற்போது கர்நாடகாவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
மோசமான வேட்பாளர் தேர்வு
நான்காவதாக, உத்தரப் பிரதேசத்தை போலல்லாமல், கர்நாடகாவில் ஒட்டுமொத்த லிங்காயத்துக்களின் வாக்குகளை ஒருங்கிணைத்துப் பெறுவதற்காக பி.எஸ் எடியூரப்பாவை முதலைச்சர் வேட்பாளராக பாஜக அறிவித்தது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக எடியுரப்பாவை பாஜக நேரடியாக களத்தில் இறக்கியுள்ளது. ஏறத்தாழ அனைத்து கருத்துக் கணிப்புகளும், (ஒன்றே ஒன்றைத் தவிர) சித்தராமையாவுக்கு பெரும் முன்னணியை தருகின்றன.
வழக்கமான காங்கிரஸ் தலைவர்களைப் போல அல்லாமல், சித்தாரமைய்யா ஒரு செயல்வீர்ராக பார்க்கப்படுகிறார். அவர் அடிமட்டத் தொண்டர்களுடன் தொடர்பில் இருப்பதுடன், மிகவும் உறுதியானவராக இருக்கிறார். ஆனால் அது பாஜக முதல்வர் வேட்பாளருக்கு அதிகளவில் உதவவில்லை. அவர் முதல் முறையாக முதலமைச்சர் பதவியில் இருந்தபோது பாதியிலேயே பதவி விலக வேண்டியிருந்தது. அவற்றுள் சில ஊழல் விசாரணைகள் இன்னும் இருக்கின்றன. ரெட்டி சகோதரர்கள் தொடர்ந்து பாஜகவுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் அது அந்த அளவுக்கு உதவவில்லை.
ஐந்தாவதாக, 2008 மற்றும் 2013ல் பாஜக அரசின் செயல்பாடுகள் பற்றி எழுதுவதற்கு எதுவுமில்லை. சுரங்க ஊழலாகட்டும், பெருமளவு எண்ணிக்கையிலான மக்களின் இடப்பெயர்வை தடுத்து நிறுத்துவதற்கான பெங்களுரு நகரின் தயாரின்மையாகட்டும் அல்லது மற்ற அளவீடுகளாகட்டும், அதன் செயல்திறன் சாதாரணமானதே.
உ.பி.யைப் போலன்றி, பாஜகவின் ஐந்தாண்டு கால ஆட்சி எப்படி இருக்கும் என்பதை கர்நாடக மக்கள் ஏற்கெனவே பார்த்திருக்கிறார்கள். அந்த நினைவுகள் கட்டாயம் சிறந்த்தாக இல்லை.
இறுதியாக, கன்னடர்களின் பெருமை (Kannada Pride) பாஜகவை பின்னடையச் செய்திருக்கிறது. பல முறை இந்த கன்னடப் பெருமை குறித்து பேசும் வகையில் மோடியை இது நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. பாஜக வாக்காளருக்கு இது ஒரு பெரிய விஷயமாக இல்லாதிருக்கலாம். ஆனால் சராசரியான வாக்காளருக்கு இது மனதின் ஆழத்தில் இருக்கும். காங்கிரஸ் கட்சிக்கு மேலும் 1 அல்லது 2 சதவீதம் சேர்வது பாஜகவுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும்.
யாருக்கு வாக்களிப்பது என வாக்காளர்கள் இன்னும் ஒருசில நாட்களில் முடிவெடுக்கும் நிலையில், உத்திரப்பிரதேசத்தைப் போன்றதொரு வெற்றியை பிஜேபியால் கர்நாடகாவில் அளிக்கவே முடியாது.
இறுதிக் கணம் வரை, ஒவ்வொரு ஓட்டையும் போராடியே பெற வேண்டியிருக்கும்.
சுபாஷ் சந்திரா
BJP Supporter எழுதின கட்டுறை போல இருக்கு.. புள்ளி விவரங்கள் எந்தளவிற்கு உதவும் என்று தெரியாது.., கல்வியில் முன்னேறியுள்ள மாநிலம்.. ஆனால் ஜாதிமதம் ஊரிப்போயுள்ள ஒரு மக்களின் மனநிலையை படிப்பது சற்று கடினமே..!!
IN every election there is factor called as incumbency votes which will favor the opposition only!
vicious or wishful thinking?