காங்கிரஸ் கட்சியின் குறைகளை கேலி செய்யத் தவறாத பிரதமர் நரேந்திர மோடி, நாய்களின் தேசபக்தியை ஓவியமாக வரைந்துள்ள ஒரு இளம் ஓவியக் கலைஞரை கர்நாடகாவில் தனது தேர்தல் பிரச்சாரத்தில் பாராட்டியிருக்கிறார். கரண் ஆச்சார்யா என்ற அந்த ஓவியர் “கோபமான ஹனுமன்“ என்ற பிரபலமான உருவத்தை சித்திரமாக உருவாக்கியுள்ளார். அவரது இந்த “அற்புதமான சித்திரத்திற்காக“ அவரை பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார். அந்த உருவத்தை மத ரீதியாக அணுகுவதாக காங்கிரஸ் கட்சியை பிரதமர் விமரிசித்தார். பிரதமர் தனது உரையில், ”அதன் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் அதை ஒரு சர்ச்சையில் மாட்டிவிட காங்கிரஸ் முயன்றது. காங்கிரஸ் உறுப்பினர்களிடையே ஒரு துளி ஜனநாயகம் கூட இல்லை”. என்றார் மோடி. ஒருசில தினங்களுக்குப் பின்னர், பெரிய அளவில் பிரபலமல்லத ஓவியக் கலைஞர் கிஸித்ஜி பாஜ்பாய் (Kshitij Bajpai) என்பவரை ஒரு திறமையான கலைஞர் என்றார் மோடி. அவரது படைப்புகள் பெரும்பாலும் பெண்களை மீது வெறுப்பை உமிழும், வெளிப்படையாக இஸ்லாமிய வெறுப்பை கக்கும், அச்சுறுத்தும் மெசேஜ்களை கொண்டவை.
கலையைப் போற்றுதல் என்பது அகநிலை. இதுபோன்ற படங்கள் மற்றும் கார்ட்டூன்கள் மோடிக்கு “அப்பீலிங்காக“ இருக்கலாம். ஆனால் அவருடைய அரசியல் வாழ்க்கையில், மோடி இதுவரை கலைக்கு எந்த ஆர்வமும் காட்டவில்லை. கலையை விமரிசிப்பதே அக் கலைஞரை நோக்கி வன்முறை செய்வதே என்ற சிந்தனை கொண்ட அவரது சக பக்தர்கள் அல்ல.
இராமனின் மனைவி சீதையை ஹனுமன் காப்பாற்றுவதாக எம்.எஃப் ஹுஸைன் வரைந்த ஓவியம் உண்மையில் அவர்களை கோபமடையச் செய்தது. இந்த ஓவியத்தை வரைந்தமைக்காக, புகழ்பெற்ற ஓவியரான ஹுஸைன் இந்துத்துவாக்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இறுதியாக, தான் பிறந்த நாடான இந்தியாவை வி்ட்டு வெளியேறி 1990களில் அவர் வேறொரு நாட்டின் குடிமகனாக மாற வேண்டியிருந்தது.
பின்னர், 2000 ஆம் ஆண்டில், தேசிய கலைக்கூடத்தின் கேலரியில் ஒரு கண்காட்சி திடீரென மூடப்பட்டது. அதற்கு காரணம், சுரேந்திரன் நாயர் என்வர் வரைந்த “ இகாரஸின் ஒற்றைவசனத்தை ஒத்திகைபார்க்கும் ஒரு நடிகன்“ என்ற தலைப்பிட்ட ஓவியம் அசோகா தூணை சுட்டிக் காட்டியதால் அப்போதைய தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பிடிக்கவில்லை. அதே ஆண்டில், டொரொன்டோவில் நடைபெற்ற “இந்திய ஓவியம்“ என்ற கண்காட்சிக்கு இந்திய இராஜதந்திரிகள் (டிப்ளமேட்ஸ்) எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனவே, பாஜக மற்றும் சங்பரிவாரர்கள் பெரிய கலை ஆர்வலர்களாக இருப்பதாக தெரியவில்லை. எனவே, ஒரு படைப்பை “பிரம்மாண்டமான ஓவியம்“ என பிரதமரே புகழ்ந்துரைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. காவி மற்றும் கருப்பு நிறத்தில் வரையப்பட்ட கேள்விக்குரிய அந்த ஓவியம் ஹனுமன் ஒரு உறைந்த புருவத்துடன் கோபத்துடன் பார்ப்பதுபோல் காட்டுகிறது.
அந்த குரங்கு கடவுள் இந்து புராணங்களின்படி, வேறு குணாதிசயங்களைக் கொண்டது. ஆனால் இந்த ஓவியம் ஹனுமனை இந்துத்வா சார்புடைய ஆண்மையின் சுய உருவத்துடன் பொருந்தக்கூடிய தீவிர இயந்திரமாக காட்டுகிறது. தன்னுடைய ஹனுமன் ”வலியச் சென்று சண்டை புரியும் மனம் கொண்டவரல்ல”, ”சக்தி வாய்ந்தவர். ஆனால் அடக்குமுறை செய்பவர் அல்ல” என்கிறார் ஆச்சார்யா. எனவே அந்த ஓவியத்தை பெருமையுடன் பயன்படுத்துபவர்கள், அதே நோக்கத்துடனா இருப்பார்கள் ?
ஹனுமனின் பாரம்பரிய உருவங்கள் அவர் இந்துக் கடவுளர்களான இராமன் மற்றும் சீதையின் காலடியில் காட்டியுள்ளன அல்லது தனது மார்பை கிழித்து அதற்குள் அவ்விரு கடவுளரின் உருவப்படங்களை காட்டும் விதமாக அமைந்திருக்கின்றன. பல ஓவியங்களில், உயிர்காக்கும் மருத்துவ மூலிகைகள் கொண்ட ஒரு மலைக்குன்றை ஹனுமன் தூக்கிக்கொண்டு பறப்பதுபோல காட்டப்பட்டிருக்கும். (இந்த குறிப்பிட்ட மருந்தை இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை. இதைக் கண்டுபிடிக்க உத்தரகாண்ட் மாநிலம் மேற்கொண்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான மாபெரும் திட்டம் இதுவரை தோல்வியடைந்துள்ளது.) ஹனுமன் சக வானரங்கள் கொண்ட இராணுவத்தை வழிநடத்திச் செல்லும் ஒரு போர் வீரன். ஆனால் கடவுளரான இராமனின் பரிபூரண பக்தன் என்பதைத் தவிர, அவர் வேறு எந்தவிதமாகவும் காட்டப்பட்டதில்லை. ஆச்சார்யாவின் விளக்கமானது மாறுபட்ட சுழற்சியை அளிக்கிறது. இந்த வரைபடத்தின் சக்தி மற்றும் அதன் பிரச்சார மதிப்பைப் பயன்படுத்தும் திறனை மோடி விரைவில் புரிந்து கொண்டார் – ஏனெனில் அயோத்யாவில் கோயில் கட்ட வேண்டுமென்ற பிரச்சாரத்துக்கு இது மிகச் சிறப்பாக பொருந்தும்.
பல தளங்களில் பிஜேபி பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த ஓவியம் உள்ளது. பிஜேபியோடு மோதினால், மோதி அழிப்போம் என்ற ஆவேசத்தை உணர்த்துவதாகவே இந்த ஓவியம் உள்ளது. இந்து என்பவர் சோர்ந்து போனவர் இல்லை. அவர் கோபமாகவோ, வன்முறையாகவோ யாரையும் எதிர்க்கத் தயாராக இருக்கிறார் என்பதையே இந்த ஓவியம் உணர்த்துகிறது.
இந்து அமைப்புகள், ஹனுமனின் தோற்றத்தை தங்களின் நோக்கத்தை வலுப்படுத்துவதற்காகவே பயன்படுத்தி வந்துள்ளன. அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், ஹனுமன் ஜெயந்தியை கொண்டாடிய பஜ்ரங்தள் அமைப்பினர் தெருக்களில் வாள்களை அசைத்துக் கொண்டு, “ஹனுமன் வாழ்க“ மற்றும் “இந்துஸ்தான் எங்களுடையது“ என கோஷமிட்டுக் கொண்டு சென்றனர். இந்த கோஷங்கள், மதத்தையும், தேசியவாதத்தையும் இணைத்த ஒரு கலவை. அந்த ஓவியர் ஆயிரம் விளக்கங்களை கொடுத்தாலும், இந்த ஹனுமன் ஓவியம், இந்து அடிப்படைவாதிகளுக்கு பெரும் வகையில் பயன்படுவதாகவே உள்ளது.
ஆனால் அதனுடைய வெளிப்படையான மத-அரசியல் குறியீடாக இருந்தாலும், அதை மோடி அவ்வாறு பார்க்கவில்லை. அதை ஒரு கலை என அழைத்திருக்கிறார். அதை இராமன் அல்லது உண்மையில் இந்துத்வத்துடன் அவர் இணைக்கவில்லை. இந்த ஓவியத்தை பயன்படுத்தி, காங்கிரஸில் கருத்து சுதந்திரம் இல்லை என்று அக்கட்சியை விமர்சிக்க இதை மோடி பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
இது பாஜகவின் கலை குறித்த தரக் குறியீட்டின் முதல் படியை குறிக்கிறதா? எது சிறந்த கலை, எது மோசமானது என்பதை பிஜேபியினர் அடையாளம் காண்பதற்கான தொடக்கமா இது பிஜேபி தனக்கு விருப்பமான கலைஞர்களை ஊக்குவிப்பதோடு, இந்தியாவில் புழக்கத்திலுள்ள அனைத்தும் இந்தியம் / தேசியம் என்று கூறப்படுவதற்கு எதிர் வாதம் வைப்பவர்களை விமர்சிக்க பயன்படுத்திக் கொள்ளப் போகிறதா ?
இது ஒரு முக்கியமான கேள்வியென்று தோன்றுகிறது. யைப் போல் தெரிகிறது. சமகாலத்திய இந்திய கலைஞர்கள் அன்றாடம் எரியும் பிரச்சினைகளுக்கு கேள்வி எழுப்பும் ஆர்வத்தைக் காட்டுவதில்லை. பெருகி வரும் சகிப்புத்தன்மையின்மை பற்றி அவர்கள் பெரும் அளவில் எதிர்ப்பை தெரிவித்தது இல்லை. ஓவியக் கலைஞர்கள் விருதுகளை திருப்பி அளிக்கும் போராட்டம் நடைபெற்றபோது அதில் பங்கேற்கவில்லை. வகுப்புவாதம் அல்லது சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் போன்ற அன்றாட முக்கிய கேள்விகள் குறித்து கருத்து தெரிவிக்கிற வகையில் எந்த முக்கிய கண்காட்சியும் அவர்கள் நடத்தவில்லை. இந்திய சமகால கலை ஒரு வெற்றிடமாக செயல்படுவதுபோல, சமூக யதார்த்தத்திலிருந்து விடுபட்டு, ஏதோ வெளிநாட்டில் உள்ள காட்சிகளில் காட்டப்படுவதுபோல ஓவியர்களும், ஓவியத் துறையும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
பெருகி வரும், பெரும்பான்மைவாதம், சகிப்புத்தன்மை அற்ற சூழல் போன்றவற்றை விமர்சித்து, ஒரு ஓவியர், ஒரு கண்காட்சியையோ அல்லது ஒரு ஓவியத்தையோ வெளியிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதை பிஜேபி பக்தர்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்று பார்ப்போம்.
கலையின் சக்தியை பரிவார் முழுமையாக அறிந்திருப்பதோடு, இதுபோன்ற கலை என்னவாக இருக்க வேண்டும் என்ற ஒரு உறுதியான யோசனை கொண்டுள்ளது என்பது பிரதமரின் உரையிலிருந்து தெரிகிறது. அந்த கோபமான ஹனுமன் பிஜேபி பக்தர்களின் நோக்கத்துக்கு ஏற்றபடி அமைந்துள்ளது. அதனுடைய பிரதிநிதித்துவத்தில் மிகவும் ஆண்மையோடும் சக்திவாய்ந்ததாகவும் இருப்பதோடல்லாமல், நவீனமானதாக இருக்கிறது. இது கணினியில் செய்யப்பட்ட ஒரு தெளிவான கிராஃபிக் ஓவியம். இளைஞர்களை கவரும் வகையில் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இந்தியா முழுவதும் வீடுகளிலும் கடைகளிலும் காணக்கூடிய மென்மையான மையப்படுத்தப்பட்ட, கலையுணர்ச்சி இல்லாமல் இருக்கும் காலண்டர் படங்களால் கவரப்படாமலிருக்கலாம். சுய மரியாதையுள்ள பிஜேபி பக்தர் ஒருவர் தனது விலை உயர்ந்த வாகனத்தில் ராஜா ரவிவர்மாவின் ஓவியத்தை வரைய விரும்ப மாட்டார். இது பெருமையுடனும் அகங்காரத்துடனும் பயன்படுத்தும் அளவுக்கு தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டதாக தோன்றுகிறது.
கருத்தியல் காரணங்களுக்காக கலை பயன்படுத்தப்படுவது புதியதல்ல. கம்யூனிஸ கோட்பாடுகளுக்கு உதவிய மற்றும் புகழ்ந்த சோஷலிஸ்ட் உலகில் சோவியத்துகள் முக்கியமானவர்களாக இருந்தனர். நாஜிக்கள், தனிப்பட்ட முறையில் அடால்ஃப் ஹிட்லர், பாரம்பரிய கிரேக்க மற்றும் ரோமானிய வடிவங்களைப் பயன்படுத்தி இன ரீதியான இலட்சியத்தை கொண்டாடினர். நாஜிக்களின் சித்தாந்தத்துடன் பொருந்திய ஒரு கடந்த கால ஜெர்மானிய பொற்காலத்தை அடைவதுதான் அதன் நோக்கம்.
நவீன ஓவியர்கள் / கலைஞர்கள் நாசவேலைக்காரர்களாகப் பார்க்கப்பட்டனர். எந்தவொரு கலைக்கும் தனிப்பட்ட முறையில் ஹிட்லர் எதிர்ப்பாளராகவே இருந்தார் 1937ல் 650 நவீன கலைப் படைப்புகளை காட்சிக்கு வைத்த ‘Entartete Kunst (சிதைந்த கலை) என்றழைக்கப்பட்ட கண்காட்சியை நாஜிக்கள் நடத்தினர். எந்த கலை ஏற்றுக்கொள்ள முடியாதது இது ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அக்கண்காட்சி நடத்தப்பட்டது. அதேபோல, கடந்த கால ரொமான்டிக் ஸ்டைலிலிருந்து விலகிச்சென்று, எளிமையான மற்றும் நெறிப்படுத்தப்பட்ட ஒரு புதிய வடிவமைப்பிலான சொற்களஞ்சியத்தை உருவாக்கிய Bauhaus school என்ற பள்ளியை நாஜிக்கள் மூடிவிட்டனர்.
இதுவரை, இந்துத்வா சக்திகள் கலை மீது எந்த நேரத்தையும் செலவிடவில்லை. மாறாக, வரலாறு மற்றும் சினிமா போன்ற வெகுஜன ஊடகங்கள் மீது கவனம் செலுத்தி வருகின்றன. என்ன காண்பிக்க வேண்டும், என்ன காண்பிக்கக் கூடாது என கட்டுப்படுத்தும் முக்கிய பதவிகளில் தங்களுக்கு விருப்பமான ஆதரவான அதிகாரிகளை பிஜேபி பக்தர்கள் நியமித்துள்ளனர். கலை ஆச்சரியத்துக்குரியதாகவும் அறிவுஜீவிகளுக்கானதென்றும் கருதப்படுகிறது. அதே சமயம், இந்திய கலைஞர்கள் இந்தப் போக்கில் உள்ள ஆபத்துகளை அடையாளம் காண இது வரை எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.
ஆனால் அது விரைவில் மாறும். மத உருவத்தை எடுத்துக் கொண்டதற்காக ஒரு கலைஞருக்கு பிரதமர் போன்ற நாட்டின் மிகப் பெரிய பதவியிலிருப்பவரிடமிருந்து பாராட்டு கிடைத்ததைத் தொடர்ந்து, அரசும், அரசு சார்ந்தவர்களும் எதை விரும்புவார்கள், எதை விரும்ப மாட்டார்கள் என்பது விரைவில் நிறுவப்படும். சில நாட்களில் அது வெளிப்படையான அடக்குமுறையாகவே மாறும். விரைவில் நம் நேசத்திற்குரிய கலைஞர்களை / ஓவியர்களை, அரசு அங்கீகரித்த பதுங்குகுழிக்குள் அரசின் ஒப்புதலை எதிர்ப்பார்த்து காத்திருப்பதை நாம் காண முடியும்.
சித்தார்த் பாட்டியா
There is no art at the Hinduism ..!!