ரோட்டோர ஷோக்கள் மற்றும் கவர்ச்சியான கோஷங்கள் ஒரு வாக்காளர் சிந்தனையை மாற்றி என்பது உண்மையானால், விவசாயிகளின் புறக்கணிப்பு, நதிநீர் பற்றாக்குறை என்ற பல்வேறு சிக்கல்களின் அடிப்படையில் மோடி சித்தாராமைய்யா அரசுக்கு எதிராக செய்த பிரச்சாரம் பெரிய அளவில் எடுபட்டிருக்க வேண்டும். அதன் பலனை காவி கட்சி அறுவடை செய்திருக்க வேண்டும்.
மே 12-ம் தேதி – கர்நாடக சட்டமன்ற தேர்தல் – தென்னக மாநிலத்தின் வரலாற்றில் ஒரு பெரிய கலக்கத்தை ஏற்படுத்த பாஜகவுக்கு உதவுமா? இந்த காவி கட்சியின் (பாஜகவின்) தாக்குதலை ராகுல் காந்தியும் முதலமைச்சர் சித்தராமையாவும் தடுத்து நிறுத்த முடியுமா?
மக்களின் செல்வாக்கு என்ற விளையாட்டை பொறுத்தவரை, சிறிய தாலுகாக்களிலும், நகர்ப்புறங்களிலும் மோடியின் பேச்சை கேட்க பொதுமக்கள் பெருந்திரளாகக் கூடினர். எதிரிகளைக் கிழித்தெறியும் பிரதமரின் திறமைகளை மட்டுமே கொண்டு பாஜக வெற்றிபெற முடியுமா என்பதுதான் இப்போது கேள்வி. குறிப்பாக, 2008ம் ஆண்டு B.S. எடியூரப்பா அரசாங்கத்தின் முறையற்ற நடத்தை மக்களின் நினைவிலிருந்து இன்னும் முழுமையாக மறைந்துவிடவில்லை.
கறைபடிந்த பல்லாரி சுரங்க பிரபுக்கள் மீண்டும் கட்சிக்கு திரும்பி வந்ததை அடக்கி வாசிக்க வேண்டும். உடுப்பு பகுதியைச் சேர்ந்த பிஜேபி வேட்பாளர் ரகுபதி பட் போன்றவர்களின் சர்ச்சைக்குரிய பின்புலத்தை பெரிதுபடுத்தாமல் இருக்க வேண்டும். இதன் காரணமாகத்தான், பிஜேபி, உள்ளுர் வேட்பாளர்களை விட மோடியின் பெயரையே அதிகமாக பயன்படுத்தியது.
உண்மையில், ஜனரஞ்சக வாக்குறுதிகள் பாஜகவுக்கு ஒரு “முன்னிலை“ கொடுத்தாலும், கர்நாடகாவில் வாக்குறுதிகளை விட “சாதி“ தான் பிரதானமாக இருக்கிறது. அதற்கு கர்நாடக மாநிலத்தின் சாதியக் கூறுகள் ஒரு காரணம். 16 முதல் 17 சதவிகிதம் வரை இருக்கும் லிங்காயத்துகளையே பிஜேபி பெரிதும் நம்பியிருக்கிறது. அதனால்தான் கறை படிந்த கரங்களுக்கு சொந்தக்காரராக இருந்தாலும், லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பாவையே முதல்வர் வேட்பாளராக நிறுத்தியது பிஜேபி. பூக்கநாக்கரேயில் தனது தந்தையின் பண்ணையில் எலுமிச்சை விற்றது முதல் பாஜக பிரச்சாகராக சைக்கிளில் ஷிவமோகாவுக்கு சென்றது வரை எடியூரப்பாவுக்கும், நரேந்திர மோடியின் “சாய் வாலா“ (டீ விற்றவர்) மாதிரி, வெளி உலகுக்கு அவ்வளவாக தெரியாத பின்னணி கதை உண்டு.
இரண்டாவதாக, லிங்காயத்துக்கும், வீரசைவ லிங்காயத்துக்குமிடையே ஒரு பிளவு ஏற்படுத்துவதற்காக லிங்காயத்துகளின் “தனி மதம்“ கோரிக்கையை ஆதரிப்பது என்ற சித்தராமையா அரசாங்கத்தின் முயற்சிகள் எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும்.
தங்களின் இந்த நடவடிக்கை, பாஜக ஆதரவு வாக்கு வங்கியிலிருந்து சுமார் சுமார் 2 சதவீத லிங்காயத் வாக்குகளைப் பிரிக்கும். மேலும், சித்தராமையாவின் புத்திசாலித்தனமாக, மிகக் கவனமாக வடிவமைக்கப்பட்ட AHINDA வாக்கு வங்கியை நம்பியிருக்கும் காங்கிரஸின் செல்வாக்கை உயர்த்தும் என சித்தராமையாவின் லிங்காயத் ஆலோசகர்கள் குழு நம்பியது. இது தனது சொந்த குருபா சமூகம் மற்றும் தலித்துகள், ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி.. மற்றும் காங்கிரஸுக்கு பாரம்பரியமாக கிடைக்கும் சிறுபான்மை வாக்குகள் என்பதன் கன்னட சுருக்கமாகும்.
எனினும், அதுவும் பிரிக்கப்படும் ஆபத்தில் உள்ளது. 13-14 சதவீத வாக்குகளைக் கொண்டுள்ள லிங்காயத்துகள் மற்றும் ஒக்காலிகாக்களுக்குப் பிறகு, மாநிலத்தில் எட்டு சதவீத வாக்குகளைக் கொண்ட, குருபாக்கள் மூன்றாவது பெரிய சாதியாகும். குருபாவின் வாக்குகள் சந்தேகத்திற்கிடமின்றி முதலமைச்சர் சித்தாராமையாவுக்கு ஆதரவாக இருந்தாலும், அவருக்கும் அவருடைய தலித் மற்றும் குருபா தளபதிகளான ஸ்ரீனிவாச பிரசாத் மற்றும் விஸ்வநாத் ஆகியோருக்கு இடையேயான வீழ்ச்சி (மோதல்) அவரது தொகுதியான சாமுண்டீஸ்வரியில் மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் வெற்றியை பாதிக்கும் என தேர்தல் பார்வயைாளர்கள் கருதுகின்றனர். சித்தராமையா அரசாங்கத்திடமிருந்து லிங்காயத்துகள் மிகவும் பயனடைந்தனர் என்றும் ஆனால் தாங்கள் எதுவும் பயனடையவில்லை என்றும் 18 சதவீத SCக்களில் ஒன்பது சதவீதத்தினர் – “தீண்டத்தகாதவர்கள்“ என்றழைக்கப்படுபவர் – மற்றும் 28 சதவீத OBC-க்கள் கருதுகின்றனர்.
ஒக்கலிக்கா சமூகத்தின் ஒரு சிறிய பகுதி காங்கிரஸுக்கு வாக்களிக்கும். அதேவேளையில், இத்தேர்தல் களத்தில் மூன்றாவது அரசியல் கட்சியாக உள்ள ஜனதா தளம் (மதச்சார்பற்றது) கட்சியின் தலைவர்களான அப்பா மற்றும் மகன் எச்.டி. தேவெ கௌட மற்றும் எச்.டி. குமாரசாமி ஆகிய இரட்டையருக்கு பாரம்பரியமாக வாக்களிக்கும். இப்போது, ஜனதா தளம் (எஸ்) தெற்கில் வெற்றி பெறக் கூடிய கட்சியாக உள்ளது. ஒரு காலத்தில் காங்கிரஸை சம பலத்தோடு எதிர்த்த ஜனதா தளம் தற்போது பழைய மைசூரில் 4 இடங்கள், மாண்டியா மற்றும் ஹஸன் மாவட்டங்களில் உள்ள 14 இடங்களில் 12 இடங்கள், தும்கூரில் 11 இடங்களில் இயன்றளவு 6 இடங்கள் வெற்றி பெறுவதோடு, ராமநகரா, விஜயபுரா, பிதர், ரெய்ச்சூர், சித்ரதுர்கா, சிவமோகா, சிக்மகளுர், கோலார், பெங்களுர் கிராமப்புறம் மற்றம் பெங்களுர் நகர் ஆகிய பகுதிகளில் காங்கிரஸுக்கு கணிசமான சேதத்தை உண்டாக்கும் வகையில் ஜனதா தளம் செல்வாக்கு பெற்றுள்ளது.
ஆத்மானந்தா போன்ற உயர்ந்த ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர்க்கு சித்தாரமைய்யா போட்டியிட வாய்ப்பு கொடுத்திருக்கலாம். அப்படி செய்திருந்தால், ஒக்கலிகா சமுதாயத்தை பெரிதும் நம்பியிருக்கும் ஜனதா தளத்துக்கு வலுவான போட்டியாக அமைந்திருக்கும். மாறாக, ஜனதா தளத்திலிருந்து கட்சி தாவி காங்கிரசுக்கு வந்தவர்களுக்கு சித்தாராமைய்யா முக்கியத்துவம் அளித்ததன் மூலம் பெரிய பிழையை செய்துள்ளார்.
குமாரசாமியின் குன்றிவரும் உடல்நிலை மற்றும் முதலமைச்சராக தனக்கு இதுதான் கடைசி வாய்ப்பு என்ற வேண்டுகோள் ஆகியவற்றை பயன்படுத்தி, ஜனதா தளம் தனது 40 இடங்களை 50ஆக உயர்த்தி, பிஜேபி ஆதரவோடு, சிறுபான்மை அரசை அமைக்கும் திட்டதில் உள்ளது. இதை ஒரு துருப்புச் சீட்டாகவே ஜனதா தளம் இத்தேர்தலில் பயன்படுத்தியது.
இதுவரை, தேவெ கௌடவுக்கும் சித்தராமையாவுக்கும் இடையேயான தனிப்பட்ட விரோதப் போக்கு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) ஆகிய இரு கட்சிகளுக்கும் தேர்தலுக்கு பின்னர் உறவு ஏற்படுவதை தடுக்கிறது. இன்னொரு பேச்சும் அடிபடுகிறது. அதாவது, ஜனதா தளம் (எஸ்) கட்சி 50 இடங்களில் வென்று, காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மையை விட சற்று குறைவான இடங்களே கிடைக்கும்பட்சத்தில், ஒன்று சித்தாராமைய்யா இல்லாத ஒரு மைனாரிட்டி அரசை காங்கிரஸ் கட்சி அமைக்க வேண்டும் என்று ஜனதா தளம் எதிர்ப்பார்க்கும். இதுவரை, அதுபோன்ற ஒரு ஏற்பாட்டிற்கு சித்தராமையா இணங்கவில்லை என தெரிகிறது.
2013-ம் ஆண்டில் 224 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 122 இடங்களில் வெற்றி பெற்றதோடு, வாக்குகளையும் 36.6 சதவீதமாக அதிகரித்த காங்கிரஸ், இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளது. 2013 தேர்தலில், BS எடியூரப்பா மற்றும் பல்லாரி ST தலைவர் போயா ஸ்ரீராமுலு ஆகியோர் கட்சியை விட்டு வெளியேறிய பின்னர், பாஜகவின் வாக்கு சதவீதம் 19.9 ஆகக் குறைந்தது. எடியுரப்பாவும், ஸ்ரீராமுலுவும் தற்போது பாஜகவில் உள்ளனர். அவர்களையும் சேர்த்து இப்போது பாஜகவின் வாக்குகளின் பங்கு 32 சதவீதம் மட்டுமே. கடந்த தேர்தலில் BJP+KJP+BSR ஆகியவை மொத்தம் 50 இடங்களைப் பெற்றன. ஆனால் தற்போது நிலவி வரும் கோபம் மற்றும் லிங்காயத் மடங்களின் ஆதரவு ஆகியவை 70-80 இடங்களை பெற்றாலும் சொந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு அது போதுமானதாக இருக்காது.
ஊழலை மையப்படுத்தி எடியுரப்பாவை கடுமையாக விமரிசனம் செய்தார் சித்தாராமைய்யா. தனது கூட்டங்களில், பாஜக முதலமைச்சர்களில் மூன்று பேர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சிறைவாசம் அனுபவித்தவர்கள் என்பதை தொடர்ந்து வலியுறுத்தினார் சித்தாராமைய்யா. இதை தன்னுடைய ஐந்தாண்டு கால அப்பழுக்கற்ற ஆட்சியும் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும் என்று முதலமைச்சர் சித்தராமையா தனது கூட்டங்களில் வலியுறுத்தியதில் வியப்பேதுமில்லை.
இதனால்தான், பாஜக காங்கிரசுக்குள் குழப்பதை ஏற்படுத்த முயன்றது. தலித் காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மற்றொரு தலைவர் பரமேஸ்வர் ஆகியோரை ஏன் முதல்வர் வேட்பாளராக்கவில்லை என்பதை பிஜேபி பிரச்சாரமாக முன்னெடுத்த்து. ஆனால், இதை மழுங்கடிக்கும் விதத்தில் காங்கிரஸ் கட்சி, அனைத்து தலைவர்களும் பங்கேற்ற ஒரு பிரச்சாரக் கூட்டத்தை நடத்திக் காட்டியது. வியாழக்கிழமை தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தபோது நடைபெற்ற பேரணியில் அனைத்து தலைவர்களையும் ஒற்றுமையாக அணிவகுக்கச் செய்தது. காங்கிரஸ் கட்சிக்கு, மாநிலத்தில் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள, ஏறத்தாழ 12-13 சதவீத வாக்குகள் வைத்திருக்கும் தலித்கள், பிற பிற்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் காங்கிரஸை நம்ப வேண்டும்.
ஜனதா தளம் (எஸ்) தலைமையிலான ஒரு சிறுபான்மை அரசாங்கத்தை ஆதரிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. 2019ல் நாடாளுமன்ற தேர்தல் வரும்போது, ஆட்சியை கவிழ்த்து விட்டு, மோடியின் மேஜிக்-கையும் அவர் புகழையும் பயன்படுத்தி கர்நாடகாவை பாஜகவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத்தில் ஆட்சியை தக்க வைக்க முடிந்த பிரதமர் மோடிக்கு, வெற்றி அல்லது தோல்வி மூலம் அவரது எதிர்காலத்தை கட்டியங்கூறும் கர்நாடகா மிக மிக முக்கியமானது.
பாஜக அரசு ஆளும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கரில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், வெல்ல முடியாதவர் என்ற அவரது இமேஜுக்கு முக்கியமாக, விரைவாக குறைந்துவரும் காங்கிரஸின் கால் தடத்தை பாஜக கட்டுப்படுத்த வேண்டும்.
கர்நாடகாவை இழப்பது ஒரு விருப்பம் அல்ல. இரு தரப்புக்குமே.
நீனா கோபால்
One more day..!!