பாத்திரம், பலகாரம், கேமரா மேன், பத்து அல்லக்கை சகிதம் மாமா ஜி மிகுந்த பதட்டத்துடன் வருகிறார்
ஆமா ஜி : குட் மார்னிங் ஜி, யாருக்கும் வளைகாப்பா ? பண்டம் பாத்திரம் எல்லாம் எடுத்துட்டு கிளம்பிடீங்க?
மாமா ஜி : பேச நேரம் இல்ல ஜி. என்றவாறே ஃபோனை நோண்டி கொண்டிருந்தார்
ஆமா ஜி : நீங்களும் பிரச்சாரத்துக்கு போறீங்களா ?
மாமா ஜி : இல்ல ஜி, என் பிரச்னை புரியாம கேள்வி கேக்காதீங்க ஜி
ஆமா ஜி : என்னனு சொன்னா நான் ஏதாவது ஹெல்ப் பன்னுவேன்ல ஜி ?
மாமா ஜி : ஜி போய் அந்த வீட்டு கதவை தட்டுங்க
ஆமா ஜி : இது ஒரு விஷயமா ஜி. நம்ம கட்சிக்காரர் வீடா ? என்றவாறே கதவை வேகமாக தட்டுகிறார் ஆமா ஜி.
உள்ளிருந்து ஒரு வயதான பெரியவர் வருகிறார்.
பெரியவர் : யாரு சார் நீங்க? என்ன வேணும் உங்களுக்கு?
மாமா ஜி : வணக்கம் சார். டேய் எல்லா சாமானையும் வீட்டுக்குள்ள இறக்கி ரெடி பண்ணுங்க, கேமரா மேன் நீ போய் எல்லாத்தையும் வீடியோ பண்ணு
பெரியவர் : சார் சார், இருங்க நீங்க பாட்டுக்கு வீட்டுக்குள்ள போறீங்க. அட்ரஸ் மாறி வந்துடீங்களா?
மாமா ஜி : ஜி கோவிச்சுக்காதீங்க, நாங்க தேசிய கட்சியில் இருந்து வந்திருக்கோம். ஒரு அரை மணி நேரம் பொறுத்துக்கோங்க கிளம்பிடுவோம்
பெரியவர் : என்ன செய்ய போறீங்க? பாருங்க ஒருத்தன் ஹால்ல பெநாயில் போட்டு கழுவறான், ஒருத்தன் வாழை இலை ரெடி பண்றான் என்ன நடக்குது ?
ஆமா ஜி : சத்தம் போடாதீங்க ஜி, மாமா ஜி பெரிய ஆளு. அவர் சொல்றத கேட்டு அப்படியே செய்யுங்க. எனக்கும் என்னனு தெரியல, அவரை டென்ஷன் பண்ணினா அப்பறம் மோடி ஜி குடுக்க போற 15லட்சத்தில் 10 பைசா கூட கெடைக்காது
பெரியவர் : அய்யையோ அப்படி எல்லாம் செஞ்சிடாதீங்க ஜி, நான் பாட்டுக்கு ஒரு ஓரமா நிக்கறேன்
அனைவரும் சிட்டாக பறந்து வேலை செய்வதை பெரியவரும், ஆமா ஜியும் செய்வதறியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் போலீஸ் எஸ்கார்ட் வாகனம், சைரன் வைத்த கார்கள் வந்து வாசலில் நின்றவுடன் அனைவருக்குள்ளும் ஒரு பரபரப்பு தொற்றி கொண்டது. அந்த வாகனத்தில் இருந்து ஒரு பெண்மணி இறங்கி வந்தார்
மாமா ஜி : வாங்க பெரியவரே வந்து அவங்களை உள்ள வர சொல்லுங்க
பெரியவர் : யாருங்க அவங்க? நட்டு வச்ச வேல் கம்புல ஊருகா சொருகுனா மாதிரி?
ஆமா ஜி : யோவ் வாய வச்சிட்டு சும்மா இருயா, நம்ம நாட்டோட பாதுகாப்பு அமைச்சர்
பெரியவர் : வாங்க அம்மா.
நிம்மி ஜி : உங்க வீட்டுக்கு நான் வருவது என் பாக்கியம்
மாமா ஜி : மேடம் அங்க பாய் மேல உக்காருங்க, உங்க வாழை இலையில் கருப்பு புள்ளி இருக்கும் அதுல தான் நீங்க சாப்பிடணும். நல்லா கோமியத்தை வச்சு கழுவியாச்சு. பெரியவரே நீங்க ஒரு 2 அடி தள்ளி அப்படி உக்காருங்க
பெரியவர்: ஜி, நான் இப்பபோ தான் சாப்பிட்டு முடிச்சேன், எனக்கு பசிக்கல
மாமா ஜி : சாப்பிட எல்லாம் வேண்டாம் ஜி, சும்மா ரெண்டு போட்டோ அவ்வளவு தான்
(இலை நிறைய பரிமாறி சாப்பிடுவது போல் சில போட்டோக்கள் எடுத்து முடித்து நிம்மி ஜி கிளம்பி விட்டார்)
மாமா ஜி : சரி ஜி நாங்க கெளம்பறோம். ரொம்ப நன்றி, நல்லா கோஆபரேட் செஞ்சீங்க. அந்த 15 லட்சம் உங்களுக்கு தான்
பெரியவர் : ரொம்ப நன்றி ஜி
மாமா ஜி : போட்டோக்ராபர் அந்த போட்டோவை எல்லாம் உடனே எனக்கு அனுப்பு
ஆமா ஜி : இப்பவாவது சொல்லுங்க ஜி என்ன நடக்குது
மாமா ஜி : திடிர்னு ஒரு போன் வந்துச்சு ஜி, நிர்மலா ஜி வரப் போறாங்க யாராவது தலித் வீட்டில் அவங்கள சாப்பிட வச்சு போட்டோ எடுத்து நமோ ஆப்ல மோடி ஜீக்கு அனுப்பணும்னு.
ஆமா ஜி : சரி
மாமா ஜி : செத்தா தானே சுடுகாடு தெரியும். நமக்கு எந்த தலித் வீடு தெரியும்? அதான் எதோ ஒரு வீட்டுக்குள்ள போய் சமாளிச்சாச்சு
ஆமா ஜி : நல்லா சமாளிச்சீங்க ஜி
மாமா ஜி : ஏன் ஜி
ஆமா ஜி : ஜி நாம இப்போ இருக்கறது அக்ராஹாரத்துல, நீங்க போனது ஒரு அய்யர் வீட்டுக்குள்ள. அவர் பூணூல் போட்டத கூடவா பாக்கல ?
மாமா ஜி : அப்படியா செஞ்சிட்டோம், சரி விடுங்க ஜி போட்டோஷொப் பண்ணி பூணுலை மறைச்சிருவோம்
ஆமா ஜி : இந்த கூத்து எல்லாம் இப்படி தான் நடக்குதா ?
மாமா ஜி : பின்ன என்ன ஜி நாம போய் அங்க எல்லாம் சாப்பிடுவோமா? எல்லாம் ஒரு சீன் தான். உங்களுக்கு நான் சொல்றது சரியா புரியலதானே ? இருங்க. அதோ நிம்மி இன்னும் கௌம்பல. அவங்க்கிட்டயே கேட்டுடுவோம்.
நிம்மி ஜி. உங்ககிட்ட ஆமா ஜி ஏதோ கேக்கணுமாம்.
ஆமா ஜி : இந்தாம்மா நிம்மி. எதுக்கு தலித் வூட்டுல பலகாரம் துன்ற மாதிரி ஆக்டிங் குடுக்குற ? இன்னா பிரச்சினை உனக்கு ? ஊறுகா வியாபாரத்தை வுட்டுட்டு உனக்கு எதுக்கு இந்த வேலை ? பொட்டச்சியா லச்சணமா வூட்டுல இருக்க மாட்டியா ?
நிம்மி : வாட் நான்சென்ஸ். ஹு இஸ் திஸ் இடியட். என்ன மரியாதை இல்லாம பேசறான். நான் டிபென்ஸ் மினிஸ்டராக்கும். நெக்ஸ்ட் டமில்நாட் சிஎம் கேன்டிடேட்.
மாமா ஜி : நம்ப பயதான் மேடம்.
ஆமா ஜி : நீங்க சும்மா இருங்க மாமா ஜி. நான் பேசிக்கறேன். ஏம்மா நிம்மி. மத்த கட்சி பெண்களையும், மற்ற அரசியல் கட்சி பெண் தலைவர்களையும் நாம மதிக்கிறோமா ?
நிம்மி : இல்ல.
ஆமா ஜி : கேவலமா கெட்ட வார்த்தையில பேசறோமா இல்லையா ?
நிம்மி : ஆமா.
ஆமா ஜி : காங்கிரஸ் எம்.பி ரேணுகா சவுத்ரி , லோக்சபாவுல சிரிச்சப்போ, அவங்களை சூர்ப்பனகைன்னு மோடி சொன்னப்போ, பாராளுமன்றமே சிரிச்சது. அப்போ நீ பக்கத்துலதானே இருந்த ?
நிம்மி : ஆமா.
ஆமா ஜி : எதுத்து கேள்வி கேட்டியா ?
நிம்மி : இல்ல.
ஆமா ஜி : பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானப்போ, நம்ப கட்சிக்காரங்க அந்த பெண்களை கேவலமாக பேசுனாங்களால் இல்லையா ?
நிம்மி : ஆமா பேசுனாங்க.
ஆமா ஜி : அப்போ எதுத்து குரல் கொடுத்தியா ?
நிம்மி : இல்ல.
ஆமா ஜி : அப்புறம் உனக்கு மட்டும் எப்படி மரியாதை குடுப்பாங்க. நீயும் பொம்பளைதானே ? போயி வூட்டுல உளுந்து வடை சுட்டு, ஆஞ்சநேயருக்கு வாயில ஊட்டு. இந்த அரசியல் வேலையெல்லாம் ஆம்பளைங்க நாங்க பாத்துக்கறோம்.
நிம்மி அமைதியாக கிளம்புகிறார்.
ஆமா ஜி : சரி ஜி, நாம தான் கர்நாடகா தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஜெயிக்கபோறோம்னு பிபிசி சர்வே சொல்லுதாம்? பாத்தீங்களா
மாமா ஜி : பாத்தேன் ஜி, 135 சீட்டானு அப்படியே ஒரு நிமிஷம் தல சுத்திடுச்சு. அப்பறம் தான் தெரிஞ்சுது அது நம்ம ஆளுக தயார் பண்ணின fake நியூஸ்ன்னு.
ஆமா ஜி : என்ன ஜி சொல்றீங்க, நான் இத நம்பி 2 லட்சம் பெட் வேற கட்டிருக்கேன் ஜி
மாமா ஜி : அறிவு இருக்கா ஜி உங்களுக்கு? கர்நாடகாவில் உள்ள மொத்த தொகுதியே 224 தான், இவனுக குடுத்த சீட்ட எண்ணி பாருங்க 234 வரும்
ஆமா ஜி : அறிவு இருந்தா நான் ஏன் ஜி இந்த கட்சியில் இருக்க போறேன் ?அப்போ நான் போட்ட காசு அவ்வளவு தானா. சரி ஜி நம்ம கட்சி ஆளுங்களுக்கு போட்டோஷாப்போட சேர்த்து கணக்கும் சொல்லி தரணும் போல
மாமா ஜி : நீங்க வேற ஜி, இவனுங்களுக்கு போட்டோஷாப்பே திரும்ப சொல்லி தரணும் போல
ஆமா ஜி : என்ன ஜி பண்ணினானுக?
மாமா ஜி : நம்ம மோடி ஜி அம்மா ஆட்டோல போற மாதிரி ஒரு போட்டோ ரெடி பண்ணுங்க டானு தலைமை சொல்லுச்சு. இந்த அப்பரசண்டிக போன வருஷம் மோடி அம்மா ஆட்டோல போற போட்டோவை எடுத்து எடிட் பண்றோம்னு சொல்லி கொதறி வச்சுட்டானுக
ஆமா ஜி : என்ன ஜி இது? நமக்கு நல்லா தெரிஞ்ச வேலை இது மட்டும் தான். அதுவே சொதப்பலா?
மாமா ஜி : என்ன பண்றது, நாம அவனுகள கலாய்க்கலாம்னு பாத்தா ஊரே நம்மள துப்புது. ஒரு போட்டோஷாப் கூட பண்ண தெரியலையே அப்படி என்னத்த அந்த RSS கேம்பில் ட்ரைனிங் குடுத்தாங்கனு கேக்கறானுக.
ஆமா ஜி : சரி ஜி, நம்ம மோடி ஜி ராகுல் காந்திகிட்ட பதினைந்து நிமிஷம் பேப்பர் பாக்காம சித்தராமையா செய்த சாதனைகளை பேச முடியுமான்னு என்ன கெத்தா சவால் விட்ருக்காரு பாத்தீங்களா?
மாமா ஜி : பதிலுக்கு , பேப்பர் கூட பாத்து படிங்க ஆனா எடியூரப்பா போன முறை செய்த சாதனையை மட்டும் 15 நிமிஷம் பேசுங்கன்னு மோடி ஜிக்கு சித்தாரமாயையா பதில் சவால் விட்டுட்டாரு ஜி
ஆமா ஜி : 15 நிமிஷம் தானே ஜி அதெல்லாம் மோடி பிரமாதமா பேசிடுவாரே ஜி
மாமா ஜி : இது என்ன குஜராத்னு நெனச்சுடீங்களா ஜி? அடிச்சு விடறதுக்கு, பெங்களூரு ஜி. 15 செகண்ட் கூட பேச முடியாது அவ்வளவு அயோக்கிய தனம் பண்ணியிருக்காரு இந்த எடியூரப்பா.
ஆமா ஜி : அது சரி ஜி, நம்ம தேர்தல் அறிக்கையை பத்தி ஒன்னுமே சொல்ல மாட்டேங்கறீங்களே ஜி
மாமா ஜி : என்னத்த ஜி சொல்றது. தேர்தல் அறிக்கை எல்லாம் வேண்டாம் அப்பறம் அத நிறைவேத்தலையா இதை நிறைவேத்தலையான்னு நாலு பேரு நாலு விதமா கேப்பாங்கனு மோடி ஜி வேண்டமானு முடிவு பண்ணினார். இந்த எடியுரப்பா தான் ஏன் ஜி கவலை படறீங்க அதெல்லாம் ஜெயிக்கறவன் யோசிக்கணும் நமக்கு என்ன அப்படினு கேட்டாரு
ஆமா ஜி : அப்பறம்
மாமா ஜி : மோடி ஜியும் சரி இவரு பேசறதும் நியாயமாதானே இருக்கு அதுனால நீங்களே ஏதாவது ரெடி பண்ணுங்கன்னு சொல்லிட்டாரு
ஆமா ஜி : நல்லபடியா செஞ்சர வேண்டியது தானே ஜி
மாமா ஜி : எங்க ? யாரு கடைசி நேரத்துல உக்காந்து யோசிக்கறது, அதுனால காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பட்டி டிங்கரிங் பண்ணி ரெடி பண்ணினா, காப்பி அடிச்சத கண்டுபிடிச்சுட்டாங்க
ஆமா ஜி : என்ன ஜி அப்படி காப்பி அடிச்சோம்?
மாமா ஜி :
அவங்க 3gm தாலிக்கு தங்கம் குடுக்கறதா சொன்னாங்களா, நாம அதோட சேத்து 25 ஆயிரம் பணம் தரோம்னு சொன்னோம்.
பாசனத்துக்கு 1.25 லட்சம் செலவு செய்வோம்னு சொன்னாங்களா, நாம 1.5 லட்சம்னு சொன்னோம்
காலேஜ் பசங்களுக்கு செல்போன் குடுக்கறதா சொன்னாங்களா, நாம வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவங்களுக்கு கொடுப்போம்னு சொன்னோம்.
மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் இலவசமா தரோம்னு சொன்னாங்களா, நாம வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொடுப்போம்னு சொன்னோம்.
பத்தாவது பசங்களுக்கு லேப்டாப் குடுக்கறதா சொன்னாங்களா, நாம கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு கொடுப்போம்னு சொன்னோம்.
ஆமா ஜி : இவ்வளவு டீப்பாவா ஆராய்ஞ்சு கண்டுபிடிச்சிருக்கானுக ?
மாமா ஜி : வெட்டி பசங்க ஜி, நம்மள குத்தம் சொல்றதுக்குனே ஒரு கூட்டம்
ஆமா ஜி : சரி ஜி, இந்த ரெட்டி காரு வேற கடைசி நிமிசத்துல இப்படி சொதப்பிட்டாரே ஜி. ஜட்ஜ்க்கு 160 கோடி ரூபாய் லஞ்சம் குடுத்ததா ஸ்ரீராமுலு உளறி மாட்டிடாரே ஜி ?
மாமா ஜி : இவனுக எல்லாம் கட்சிக்கு பிடிச்ச கேடு ஜி, எவனாவது ஜட்ஜுக்கு காசு குடுப்பானுகளா? அதுவம் 160 கோடி? நம்ம அமித் ஜிக்கு ஒரு 10 கோடி தள்ளி விட்ருந்தா, இன்னேரம் ஜட்ஜுக்கு நெஞ்சு வலி வந்திருக்கும்
ஆமா ஜி : அதுவும் சரி தான் ஜி. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புல ஆளாளுக்கு ஒன்னு ஒன்னு சொல்றாங்களே ஜி. எதை நம்பறது ?
மாமா ஜி : என்னப்பா நீ. இத்தனை வருசமா கட்சியில இருக்க. இதைக் கூடவா சொல்லித் தரணும். ரிப்பப்ளிக் டைமஸ் நவ்னு ஒரு சேனல் இங்கிலீஷ்ல வச்சிருக்கோம். இந்தி, கன்னடா, தெலுங்குல பல சேனல் வச்சிருக்கோம்.
ஆமா ஜி : ஏன் தமிழ்ல கூட தந்தி டிவி வச்சிருக்கோமே.
மாமா ஜி : ஆமா. ஆமா. ரங்கராஜ் பாண்டேதான், நம்பளோட ஏஜென்ட். நம்பளோட சேனல்கள்ல எப்பயாச்சும், நமக்கு எதிரா செய்தி போடுவானா ? போட மாட்டான். வழக்கம் போல, ஜெயிச்சா, மோடியின் வெற்றி. தோத்தா, எடியூரப்பாவால் தோற்றோம்னு சொல்லிட்டு போயிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.
ஆமா ஜி : மாமா ஜி. ஒரு வேளை நாம ஜெயிச்சுட்டா காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லி இங்க தமிழ்நாட்டுல இருக்குற அப்பரசண்டிக தொல்லை பண்ணுவாங்களே ஜி.
மாமா ஜி :ஆவற கதையா பேசறீங்களா ஜி. சரி. உங்க ஆசையை ஏன் கெடுப்பானேன். ஒரு வேளை ஆட்சி அமைஞ்சுட்டா, மேலாண்மை வாரியம் அமைக்காததுக்கு நேருதான் காரணம்னு சொல்லிடுவோம்.
ஆமா ஜி : ஜி. நேருதான் இப்போ இல்லையே ஜி.
மாமா ஜி : நேரு இருக்கும்போது காவிரி இருந்துச்சா ?
ஆமா ஜி : இருந்துச்சு ஜி.
மாமா ஜி : இப்போ நேரு இல்ல. ஆனா காவிரி இருக்கா ?
ஆமா ஜி : இருக்கு ஜி.
மாமா ஜி : அப்போ நேருதானே காரணம் ? அவரு இருக்கும்போது இந்த பிரச்சினையை தீத்துருந்தா இப்போ இந்த பிரச்சினை இருக்குமா ? அப்போ நேருதானே காரணம் ?
ஆமா ஜி : கரெக்டு ஜி. சரி. இப்போவே நம்ம நெலமை இப்படி மோசமா இருக்கே. 2019 தேர்தலுக்கு என்ன பண்றது ஜி ?
மாமா ஜி : கவலைப்படாதீங்க ஜி. தீபக் மிஸ்ரா இருக்குற வரைக்கும் ஏன் கவலைப்படறீங்க. ராமஜன்ம பூமி இந்துக்களுக்கே. முஸ்லீம்களுக்கு அதுல எந்த உரிமையும் கிடையாதுன்னு ஒரு தீர்ப்பு குடுப்பாரு. நாடு முழுக்க கலவரம் உருவாகும். வழக்கம் போலவே பிணத்தை வைச்சு வியாபாரம் பாக்க வேண்டியதுதான். ஆட்டோமேடிக்கா ஓட்டு நம்பளுக்குத்தான். இதுக்கு போயி கவலைப்பட்டுக்கிட்டு இருக்கீங்க. இதெல்லாம் புதுசா நமக்கு.
ஆமா ஜி : எனக்கு ஒரு வாரம் முன்னாடியே சொல்லிடுங்க ஜி. வெப்பன்ஸ் எல்லாம் ரெடி பண்ணணும்.
மாமா ஜி : கவலைப்படாம போங்க ஜி. ஜமாய்ச்சிடலாம். அடுத்த வாரம் மீட் பண்ணலாம் ஜி. என்று கூறி விட்டு மாமா ஜியும் ஆமா ஜியும் பிரிந்தனர்.
அன்புள்ள சவுக்கு,
தொடர்ந்து உங்களை வாசித்து வரும் வாசகன் நான். ஆனால் இந்த மாமாஜி தொடர் மிக தரம் தாழ்ந்து இருக்கிறது. தரமான உங்கள் விமர்சனங்களே என்றும் நிற்கும். உருவத்தை, சாதியை, நிறத்தை நக்கல் செய்து நீங்கள் எழுதும் எழுத்தின் வழியே இதுவரை நீங்கள் உருவாக்கி வைத்திருந்த உங்கள் நாகரிகத்தை நீங்களே வீசி எறிகிறீர்கள். இது உங்களை இன்னுமொரு தராசு ஷ்யாம் போல் ஆக்கிவிடும் அபாயம் என தோன்றுகிறது. சற்று யோசிக்கவும்
அன்புடன்,
ராஜகோபாலன் ஜா,
super . athalayum Mishra g kalachathu . jothi kooda help pannuvaar .
One more day..!!