சவுக்கில் வெளி வந்த தமிழ்த் திரையுலகை காக்க வந்த விடிவெள்ளி விஷால் என்ற கட்டுரைக்கு, லைக்கா ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் மறுப்பு வெளியிட்டுள்ளது.
லைக்காவின் மறுப்பின் சாரம் இதுதான். Lycamovie.com என்ற இணையதளம் 21 மே 2014 அன்று உருவாக்கப்பட்டது. அது உருவாக்கப்பட்ட அட்மின் பெயர் Tamil Tamilan. 22 ஜுன் 2014ல், lycamovies.com என்ற இணையதளம் அதே அட்மினைக் கொண்டு உருவாக்கப் பட்டது. பின்னர் lycamovies.com இணைய முகவரி, lycamovie.com என்ற இணைய முகவரிக்கு ரீடைரக்ட் செய்யப்பட்டது. 29 ஜுன் 2014 அன்று lycamovies.com மற்றும் lycamovie.com ஆகிய இணையதளங்கள் இரண்டும் நிறுத்தப்பட்டது. லைக்கா குழுமத்துக்கும் lycamovie.com மற்றும் lycamovies.com என்ற முகவரிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இந்த இரண்டு இணையதளங்களும், இதை பதிவு செய்திருந்தவரால் புதுப்பிக்கப்படாமல் போனதால், 5 ஜுலை 2017ல், லைக்கா நிறுவனம் lycamovie.com என்ற இணையதளத்தை உரிமையேற்றது. ஆகால் lycamovies.com என்ற இணையதளத்தை லைக்கா குழுமத்தால் பெற முடியவில்லை. ஏனென்றால் அது புதுப்பிக்கப்பட்டது. தற்போது lycamovie.com என்ற இணைய முகவரி, lycaproductions.in என்ற இணைய முகவரிக்கு ரீடைரக்ட் செய்யப்பட்டுள்ளது. Lycaproductions.in என்ற முகவரிதான், லைக்கா திரைப்பட நிறுவனத்தின் சரியான இணையதளம். 5 ஜுலை 2017க்கு முன், லைக்கா திரைப்பட நிறுவனத்துக்கும், lycmovie.com இணையதளத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதே போல, 5 ஜுலை 2017க்கு பிறகு, lycamovie.com இணையதளத்தில், திருட்டுத் தனமாக படங்கள் பதிவேற்றப் படுவதில்லை. எங்களுக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தால் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறோம்.
இதுவே லைக்கா நிறுவனத்தின் மறுப்பின் சாரம்.
சவுக்கின் விளக்கம் :
Lycamovie.com என்ற இணையதளத்தில் திருட்டுத்தனமாகவும், சட்டவிரோதமாகவும் திரைப்படங்கள் பதிவேற்றப்படுகின்றன என்றும், அந்த இணையதளம் லைக்கா குழுமத்துக்கு சொந்தமானது என்றும் தகவல் கிடைத்ததை அடுத்து, lycamovie.com இணையதளம் தொடர்பான விபரங்கள் ஆராயப்பட்டது. அதில் கிடைத்த விபரங்கள்.
1) lycamovie.com என்ற இணைய முகவரியை, Lex Synergy Limited என்ற நிறுவனம், 4 செப்டம்பர் 2015 முதல் பராமரித்து வருகிறது. இந்த Lex Synergy நிறுவனம், Pettigo Comercio Internacional Lda, Rua das Hortas, 1, Edificio do Carmo, 5, Andar – Sala 500, Madeira, Portugal என்ற போர்ச்சுகலைச் சேர்ந்த நிறுவனம் மற்றும் WWW Holding Company Limited, 3rd Floor Walbrook Building, 195, Marshwall, London என்ற நிறுவனங்களின் அதிகாரம் பெற்ற முகவர். இந்த இரு நிறுவனங்கள்தான், அனைத்து லைக்கா குழும நிறுவனங்களின் உரிமையாளர்.
2) லைக்கா நிறுவனம் தனது மறுப்பில், 5 ஜுலை 2017 முதல்தான், lycamovie.com என்ற இணைய முகவரி, தங்கள் கட்டுப்பாட்டில் வந்ததாக தெரிவிக்கிறது. இது போல ஒரு முழுமையான பொய்யை லைக்கா நிறுவனம், தனது மறுப்பில் தெரிவிப்பதற்கு, உள்நோக்கம் இருக்க வேண்டும். குறிப்பாக, செப்டம்பர் 2015 முதல், ஜுலை 2017 வரை, lycamovie.com என்ற இணைய முகவரி, லைக்கா குழுமத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது என்ற விபரத்தை, லைக்கா திரைப்பட நிறுவனம், திட்டமிட்டே மறைக்கிறது.
3) lycamovie.com என்ற இணைய முகவரி, லைக்கா திரைப்பட நிறுவனம் தங்கள் கட்டுப்பாட்டில் வந்ததாக தெரிவிக்கும் 5 ஜுலை 2017க்கு முன்னதாகவே lycaproductions.in என்று தற்போது அதிகாரபூர்வமாக லைக்கா திரைப்பட நிறுவனத்தின் இணையதளத்துக்கு சில ஆண்டுகள் முன்பே ரீடைரக்ட் செய்யப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன.
4) தங்களது மறுப்பில், லைக்கா நிறுவனம், 29 ஜுலை 2014க்கு பின்னர், lycamovie.com இணையதளம் செயல்படவில்லை என்று தெரிவித்துள்ளது. ஆனால், இவர்கள் செயல்படவில்லை என்று கூறும் 29 ஜுன் 2014க்கு பின்னரும், lycamovie.com இணையதளம், சட்டவிரோதமாக திரைப்படங்களை பதிவேற்றம் செய்து வந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. லைக்கா திரைப்பட நிறுவனத்தின் இந்தக் கூற்று, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு ஒப்பானது.
5) lycamovie.com இணையதளத்தை அதை பதிவு செய்தவர், புதுப்பிக்காமல் விட்டு விட்டதால், அந்த இணையதளம் கிடைத்தது என்று லைக்கா திரைப்பட நிறுவனம் கூறுவதும் முழுமையான பொய். லைக்கா நிறுவனத்தின் உரிமையாளராக Pettigo Comercio Internacional Lda, என்ற நிறுவனம், ஒரு சர்வதேச சமரச மையத்தில் (International Arbitration Forum) வழக்கு நடத்தி, lycamovie.com என்ற இணைய முகவரியை, 2 ஆகஸ்ட் 2015 அன்று பெற்றுள்ளது. இப்படி வழக்காடி பெற்ற ஒரு இணைய முகவரியை, அதன் முந்தைய உரிமையாளர் புதுப்பிக்காமல் விட்டதால், பெற்றோம் என்று ஒரு பச்சைப் பொய்யை லைக்கா திரைப்பட நிறுவனம் ஏன் சொல்கிறது என்பது புரியவில்லை.
6) lycamovie.com என்ற இணைய முகவரியை நிர்வாகம் செய்வதாக கொடுக்கப்பட்டுள்ள domains@lexsynergy.com என்ற அதே மின்னஞ்சல்தான், இன்று வரை, lycamovie.com இணையதளத்தை பராமரித்து வருகிறது. அதாவது, லைக்கா திரைப்பட நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வருவதற்கு முன்பும் பின்பும், ஒரே மின்னஞ்சல் முகவரிதான் இதை நிர்வகிப்பதாக ஆவணங்கள் கூறுகின்றன. சட்டவிரோதமாக திரைப்படங்களை பதிவேற்றுவதும் ஒரே அட்மின், தற்போது, அதிகாரபூர்வ லைக்கா திரைப்பட நிறுவனத்தின் இணையதளத்தை நிர்வகிப்பதும் ஒரே அட்மின் என்று கூறுவது பெரும் முரணாக உள்ளது.
7) 5 ஜுலை 2017க்கு முன்னதாக, lycamovie.com இணையதளத்துக்கும் லைக்கா திரைப்பட நிறுவனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று லைக்கா தனது மறுப்பில் தெரிவித்திருப்பது, வடிகட்டிய பொய்.
8) lycamovie.com மற்றும் lycamovies.com என்ற இரு இணையதளங்களையும் பதிவு செய்து பராமரித்து வந்தது ஒரே நபர்தான். தங்களது மறுப்பில் லைக்கா நிறுவனம், lycamovie.com என்ற இணையதளத்தை அதன் உரிமையாளர் புதுப்பிக்காமல் விட்டதால், அதை பெற முடிந்தது. ஆனால், lycamovies.com இணையதளத்தை அதன் உரிமையாளர் புதுப்பித்த்தால், அது கிடைக்கவில்லை என்று கூறுவதும் பச்சைப் பொய். Lycamovie.com இணையதள முகவரியை, சர்வதேச சமரச மையத்தில், வழக்கு நடத்தி பெற்றது போலவே, lycamovies.com என்ற இணையதள முகவரியையும் எளிதாக லைக்க திரைப்பட நிறுவனத்தால் பெற்றிருக்க முடியும். Lycamovie.com என்ற இணையதள முகவரியைப் பெற, லைக்கா நிறுவனம், சர்வதேச சமரச மையத்தில் எடுத்து வைத்த வாதங்கள் அனைத்தும், lycamovies.comக்கும் பொருந்தும். ஏன் lycamovies.com இணைய முகவரியை, அதே நபர், பதிவு செய்து வைத்திருந்தும், லைக்கா நிறுவனம், அதை பெற முயற்சி செய்யவில்லை என்பது குறித்து மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது.
லைக்கா நிறுவனமே தங்கள் மறுப்பில் கூறியுள்ளது போல, சவுக்கு இணையதளம், உரிய விசாரணை நடத்தாமல், ஆதாரங்கள் இல்லாமல் கட்டுரைகள் வெளியிடுவது கிடையாது. லைக்கா நிறுவனம், இதையும் மறுக்க ஆதாரங்கள் இருந்தால், அதை jayajayakanthan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எப்போதும் அதை அனுப்பி வைக்கலாம். அந்த ஆதாரங்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
சவுக்கு ஆசிரியர் குழு
குறிப்பு : திரைப்படத் துறை குறித்து சவுக்கில் சொல்லிக் கொள்ளும்படி கட்டுரைகள் வந்தது கிடையாது. ஆனால், திரைப்பட உலகில் நிலவும் ஊழல்களையும், முறைகேடுகளையும் ஆராய்ந்து செய்தி வெளியிட எங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த,
நாளைய முதல்வன்,
திரைத்துறையின் தலைமகன்,
திருட்டு வீடியோவை ஒழிக்க வந்த கலைமகன்,
திரைத்துறையின் பாதுகாவலன்,
மதுரை அன்புவையே மிரட்டிய மாவீரன்
திரைத்துறையை காக்க முன்னணியில் நிற்பவன்
எங்கே தேர்தல் என்றாலும் முதலில் நிற்பவன்
சுருக்கமாகச் சொன்னால்,
பச்சைத் தமிழன், திரையுலகின் விடிவெள்ளி
அண்ணன் விஷால் அவர்களுக்கு
சவுக்கின் அன்பான நன்றிகள்.
https://myip.ms/browse/sites_history/1/siteID/4806549/
யோவ் சவுக்கு, ஒரே பொய்ய திருப்பி திருப்பி நீ சொல்வதை நிறுத்து. ஏதாவது இணைய அறிவு உள்ள யாரிடமாவது நன்கு கேட்டு தெரிந்து கொண்டு செய்தியை வெளியிடவும். இந்த ஒரு கட்டுரையை எடுத்துகாட்டாக கொண்டால், மற்ற கட்டுரைகளின் உண்மைத்தன்மை கேள்விக்குறியதாகிறது
சவுக்கா கொக்கா…;-)
Lyca’s claim that they did not control the domain before 2017 is total cover up. Archive org clearly shows that the domain was redirected to the official site in 2016:
https://web.archive.org/web/20161006221808/http://lycamovie.com/
Wonderful. Tit for tat. We should never leave these gullible lumpen elements scott free. Expose them to the public so that we shall know about the cinema hooligans of Vishal, rajini, kamal, vijay, ajit et al.
Great! Hats off to Savukku Team.
The date is wrong in Point #4. It should be 29 Jun 2014, when the site was shutdown. But it is mentioned as 29 Jul 2014
Sethaan pachai telungan vishal
நாளைய முதல்வன்,
திரைத்துறையின் தலைமகன்,
திருட்டு வீடியோவை ஒழிக்க வந்த கலைமகன்,
திரைத்துறையின் பாதுகாவலன்,
மதுரை அன்புவையே மிரட்டிய மாவீரன்
திரைத்துறையை காக்க முன்னணியில் நிற்பவன்
எங்கே தேர்தல் என்றாலும் முதலில் நிற்பவன்
சுருக்கமாகச் சொன்னால்,
பச்சைத் தமிழன், திரையுலகின் விடிவெள்ளி
அண்ணன் விஷால்
naalaiya prime minister enpathai maranthitteenga …
Sabaash seriyaana poti..