விடுதலைப்புலிகளின் தளபதி ரமேஷ் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் சீருடை அணிந்து சுட்டுக் கொல்லப்பட்ட படம் போர்க்குற்ற ஆதாரப் படங்களில் இடம்பெற்றுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் தெரிவித்துள்ளன.
ரமேஷ் ராணுவத்திடம் சரணடைந்த பின்னர் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படும் வீடியோவும், ராணுவ வாகனம் ஒன்றில் வைத்து விசாரிக்கப்படும் வீடியோவும் முன்னதாக வெளியாகி இருந்தன.
எனினும் ரமேஷ் எங்கே என அவரது குடும்பத்தினர் விசாரித்தபோது அவர் குறித்து எதுவும் தெரியாது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நடேசன், புலித்தேவன் ஆகியோருடன் ரமேஷ் சேர்ந்தே சரணடைந்தார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள போர்க் குற்றப் படங்களில் ரமேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட படம் இடம்பெற்றுள்ளதாக இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் ரமேஷ் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் கொடூரமான முறையில் அவர் கொல்லப்பட்டுள்ளது அந்த புகைப்படம் மூலம் தெரியவருவதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.