பல்லாரியில் உங்களை வாழ்த்தி சுழன்றடிக்கும் புழுதி மற்றும் சுட்டெரிக்கும் வெப்பம் ஆகியவை சட்டவிரோத கனிமக் கொள்ளையாலும், அதன் விளைவாக ஏற்பட்ட சுற்றுச் சூழல் சேதத்தாலா என்று உங்களை யோசிக்க வைக்கும். இந்த சிறிய வடமேற்கு கர்நாடக நகரில் உள்ள சட்டவிரோத சுரங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதி மன்றத்தால் நிறுத்தப்பட்டது. ஆனால் இங்கே பூமி அழிந்து போன காலத்தின் நினைவுகள் மக்களின் மனங்களில் இன்னும் பசுமையாக உள்ளன. இந்த நினைவுகள் அவசியம் எதிர்மறையானவை அல்ல. இப்போது தூசி அடங்கிவிட்டது.. நகரத்தின் நடுவில் இருந்து தாது ஏற்றிச் செல்லும் லாரிகளை நீங்கள் பார்க்க முடியாது. கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டுவரை, இங்கு சுரங்கங்கள் செழித்திருந்தபோது, பெரும்பாலான மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் நாங்களும் மிகவும் சிறப்பாக வேலை செய்தோம்,” என்கிறார் ரவி நாயக்க. பழ வியாபாரியான இவர், தங்களது பிரச்சாரங்களில் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து போதுமான அளவில் பேசவில்லை என தேர்தல் களத்தில் உள்ள அனைத்து வேட்பாளர்கள் மீதும் கோபமடைந்துள்ளார்.
பற்றாக்குறையான குடிநீர், வேலை வாய்ப்பின்மை மற்றும் கடுமையான மின்சார பற்றாக்குறை மற்றும் வீட்டுவசதி பற்றாக்குறை போன்ற அடிப்படை பிரச்சினைகள் பல தசாப்தங்களாக பல்லாரி மக்களின் பெரும் கவலைகளாக இருக்கின்றன. தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இந்த வெளிப்படையான பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை. 2011ல் எடியுரப்பா தலைமையிலான அப்போதைய பாஜக அரசை அசைத்த ஜி.ஜனார்த்தன ரெட்டி மற்றும அவரது சகோரர்கள் ஆகியோரின் ரூ 16,000 கோடி சட்டவிரோத சுரங்க ஊழல் காரணமாக பெல்லாரி நகரம் வெளிச்சத்துக்கு வந்தாலும், நகர வளர்ச்சி, மேம்பாடு இன்னும் விளிம்பு நிலையிலேயே உள்ளது.
தேர்தல் போட்டி இந்த மாவட்டத்திலும் அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கவனத்தை ஈர்த்திருக்கிறது. அது மக்களைப் பற்றிய பிரச்சினைகளுக்கு அல்ல. பல்லாரி மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து ரெட்டி சகோதர்ர்களின் எட்டு கூட்டாளிகளுக்கு பாஜக டிக்கெட்டை வாங்கிக் கொடுத்துள்ள ரெட்டி சகோதர்ர்கள் மீதே இந்த கவனம்.
ஊழல் குறித்து பாஜகவின் இரட்டை வேடம்
ஊழலற்ற ஆட்சியை கொடுப்பதே அதன் முதன்மையான தேர்தல் திட்டம் என அறிவித்து, அதே காரணத்திற்காக சித்தராமையா அரசாங்கத்தை கடுமையாகத் தாக்கிய பாஜகவை ரெட்டி சகோதர்கள் விவகாரம் மிகவும் சங்கடமான நிலைக்கு தள்ளியுள்ளது. தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதிலிருந்தே, தங்களது கட்சிக்கும் ரெட்டி சகோதரர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை பாஜக தலைவர் கூறியிருந்தார். ஆனால் (ரெட்டி சகோதரர்களின் கூட்டாளிகளுக்கு) பாஜக டிக்கெட் கொடுக்கப்பட்டபோது அவை அனைத்தும் மாறிவிட்டன.
ஜனார்த்தன ரெட்டியின் சகோதரர்கள் ஜி. சோமசேகர் ரெட்டி மற்றும் ஜி. கருணாகர ரெட்டி ஆகியோருக்கு பல்லாரி நகர் மற்றும் அருகிலுள்ள தாவனகிரே மாவட்டத்தில் ஹரப்பன்னஹல்லியில் தேர்தலில் போட்டியிட பாஜக டிக்கெட் கொடுத்தது மட்டுமல்லாமல், அவர்களது கூட்டாளியும், நாயக்க எனப்படும் மாநிலத்தில் மிகப் பெரிய அட்டணை பழங்குடி இனத்தைச் சேர்ந்தவருமான ஸ்ரீராமுலு-வை பாஜகவின் “ஆதிவாசி முகமாக“ காட்டியுள்ளது. தற்போது பல்லாரியிலிருந்து மக்களவை உறுப்பினராக உள்ள ஸ்ரீராமுலு – சித்ரதுர்கா மாவட்டத்தில் மொலக்கல்முரு மற்றும் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக பகல்கோட்டிலுள்ள பாதமி ஆகிய – இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளரான எடியுரப்பாவைத் தவிர்த்து, பிரச்சாரம் செய்வதற்கு ஹெலிகாப்டர் வழங்கப்பட்டுள்ள ஒரே தலைவர் ஸ்ரீராமுலு மட்டுமே.
ஸ்ரீராமுலுவின் மாமா, சன்னா ஃபக்கிரப்பா மற்றும் அவரது மருமகன் டி.ஹெச். சுரேஷ் பாபு ஆகியோர் முறையே பல்லாரி ரூரல் மற்றும் காம்ப்ளி தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
முன்னாள் சுரங்க பிரபுக்களின் மற்றொரு உறவினரான லல்லேஷ் ரெட்டி பெங்களுரு BTM லே-அவுட்-டில் உள்துறை அமைச்சர் ஆர். ராமலிங்க ரெட்டியை எதிர்த்துப் போட்டியிடுகிறார். இந்த வேட்பாளர்களுடன், வடமேற்கு மற்றும் மத்திய கர்நாடகாவில் குறைந்தபட்சம் 15 தொகுதிகளில் போட்டியிட தனது ஆட்களுக்கு பாஜக டிக்கெட் பெற்றுத் தந்துள்ளார் என கூறப்படுகிறது.
ஊழல் குறித்து பாஜகவின் இரட்டை நிலைப்பாட்டை காங்கிரஸ் வெளிப்படுத்தியபோதும், காவி கட்சி அதுதொடர்பான கேள்விகளைத் தவிர்க்க மிகச் சிறப்பாக செயல்பட்டது. ஏப்ரல் 28-ம் தேதி, ரெட்டி சகோதரர்களிடமிருந்து “விலகி இருக்குமாறு“ பாஜக மாநில அளவிலான தலைவர்களை அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளதாக பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனால், அதே நாளில், கட்சி 10-15 இடங்களைக் கைப்பற்றுவதற்கு ரெட்டி சகோதரர்கள் உதவுவார்கள் என கூறியதாக எடியூரப்பாவை அதே பத்திரிகைகள் உள்பக்கங்களில் மேற்கோள் காட்டியிருந்தன.
இது அமித்ஷா-விற்கும் எடியயூரப்பாவிற்கும் இடையேயான ஒருவகையான மோதல் என வதந்திகள் பரவின. ஆனால், பாஜக தலைவர் ஒப்புதல் அளித்ததற்கு பின்னரே ரெட்டி சகோதரர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கு பாஜக டிக்கெட் வழங்கப்பட்டது என லிங்காயத் தலைவர் விரைவிலேயே தெளிவுபடுத்தினார். அது சந்தேகத்தை தீர்த்திருக்க வேண்டும். ஆனால் அமித்ஷா இதுகுறித்து வாய் திறக்கவில்லை. இதற்கிடையே, மோசமான வேட்பாளர்களை களமிறக்கியதன் மூலம் கட்சி “சமரசம் செய்து கொண்டுள்ளது“ என பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் விவேக் ரெட்டி தெரிவித்தார். இந்த அசௌகரியமான சூழ்நிலையிலும், பிரதமர் மோடி சமீபத்தில் ஒரு தேர்தல் கூட்டத்தில் சோம்சேகருடன் கலந்து கொண்டார்.
”சந்தேகமே இல்லை. தங்களது சுரங்கத் தொழில் சாம்ராஜ்யம் சரிந்ததற்கு பின்னர் அடக்கி வாசித்துவந்த ரெட்டி சகோதரர்களுக்கு பாஜக ஒரு புதிய வாழ்க்கை கொடுத்திருக்கிறது. பல்லாரிக்குள் நுழைய ஜனார்த்தன ரெட்டிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததிலிருந்து, பொதுமக்களிடையே அவர்களுடைய “செல்வாக்கு“ அமுங்கியிருந்தது. ஆனால், தான் விரும்பியபடியே தேர்தலில் பாஜகவில் டிக்கெட் பெற்றதைத் தொடர்ந்து, அவர் சாம்பலிலிருந்து மீண்டும் உயிர்பெற்று எழுந்துள்ளார்” என்கிறார் பல்லாரியைச் சேர்ந்த ஒரு மூத்த பத்திரிகையாளர்.
பல்லாரி எல்லைக்கு வெளியே உள்ள மொலக்கல்முருவில் (இங்குதான் ஸ்ரீராமுலு போட்டியிடுகிறார்) உள்ள தனது பண்ணை வீட்டில்தான் ஜனார்த்தனா முகாமிட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரா உத்தி முதல் பாஜகவுடன் பேரம் பேசுவது வரை அனைத்து அரசியல் சரங்களையும் ஜனாரத்தன ரெட்டி இழுத்து வருகிறார். ”ஜனார்த்தன தேர்தல்களை நிர்வகித்து வருகிறார். மொல்கல்முருவில் ஸ்ரீராமுலு போட்டியிட வேண்டும் என அவர்தான் வலியுறுத்தினார். அந்த வழியில், பல்லாரியின் வெளியே கூட தேர்தல்களை நாங்கள் இன்ஃப்லூயன்ஸ் பண்ண முடியும்” என சோமசேகர், “தி ஒயர்“ இணையதளத்திடம், தெரிவித்துள்ளார்.
பல்லாரியில் ஊழல் ஒரு பிரச்சினை அல்ல
ரெட்டி சகோதரர்களின் திடீர் எழுச்சி தேசிய கவனத்தை இழுத்துள்ள நிலையில், ஊழல் அன்றாட பொது விவாதத்தில் அதிகம் இடம்பெறவில்லை. ”இதற்கு நம்பத்தகுந்த காரணம் என்னவெனில், எதிர்க்கட்சியும் கறைபடிந்த வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் ரெட்டி சகோதரர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முன் சிறியவையாக இருக்கலாம்”, என்கிறார் தனது பெயரை கூற விரும்பாத அந்த பத்திரிகையாளர்.
பல்லாரியில் ஒன்பது சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அவைகளில் ஐந்து தொகுதிகள் பழங்குடியினர்க்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சோமசேகரை எதிர்த்து போட்டியிடுபர் அனில் லாட் என்ற தற்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ. இவரும் ஒரு சுரங்க பிரபு. இவரும் சட்டவிரோமாக சுரங்கம் நடத்தியதற்காக ஒரு வழக்கை எதிர்கொண்டு வருகிறார். சோமசேகர் போட்டியிடாதபோது அனில் லாட் இந்த நகர தொகுதியை 18,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். 2008ல், ரெட்டி அனில் லாடுவை 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ”அவர் பாஜகவுக்குள் நிலவும் முரண்பாட்டை கூறியுள்ளார்” என லாட் சுட்டிக்காட்டினார்.
”ரெட்டியுடன் தொடர்பு கொண்டிருப்பதைப் பொறுத்தவரை அமித்ஷாவும் எடியுரப்பாவும் ஒரே கருத்தில்தான் இருக்கிறார்களா என்பதை பாஜக தெளிவுபடுத்த வேண்டும். ஜனார்த்தன ரெட்டியின் குடும்பத்திலிருந்து மட்டும் ஏழு பேர் போட்டியிடுகின்றனர். அவர் 3.5 வருடம் சிறையில் இருந்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெரும் பணத் தட்டுப்பாட்டில் சிக்கி தவித்துக்கொண்டிருந்தபோது ஜனார்த்தன ரெட்டி தனது மகளுக்கு ரூ 500 கோடி செலவுசெய்து திருமணம் நடத்தினார். அதில் பாஜகவின் மேல்மட்ட தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மோடிஜியை கேட்க விரும்புகிறேன். நீங்கள் (மோடி) அவர்கள் (ரெட்டி சகோதரர்கள்) மீது நடவடிக்கை எடுத்தீர்களா?. (அவர்களுக்கு) பணம் எங்கிருந்து வந்தது?” என்கிறார் அனில் லாட்
அவர் மீதான ஊழல் வழக்கு குறித்து கேட்டபோது, ”நானும் ஒரு வழக்கில் சிபிஐ-ஆல் சேர்க்கப்பட்டுள்ளேன்.. ஆனால், அது ரெட்டி சகோதரர்கள் மீதான வழக்கைப் போன்றதல்ல. அவ்வழக்கில் கூறப்பட்டுள்ள மொத்தம் 45 குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் நான் 15வது நபர். ஆறு நாட்களுக்குள் நான் ஜாமீன் பெற்றுவிட்டேன். என்னிடமிருந்து இரும்புத் தாது பெற்றவர் எனக்கு ரூ 2 கோடி ரொக்கமாக வழங்கியதாக என் மீதான குற்றச்சாட்டு கூறுகிறது.
ஜனார்த்தன ரெட்டி மீது ஊழல் மற்றும கடுமையான குற்றங்களுக்கான 63 வழக்குகள் உள்ளன. ஜாமீனுக்கு பணம், எல்லை மாற்றியது, கோயிலை அழத்தது போன்ற கடுமையான குற்றங்களும் இதில் அடங்கும்” என்கிறார் அனில் லாட்
அதேபோல், பி. நாகேந்திரா என்பவரை பல்லாரி ரூரல் தொகுதியில் வேட்பாளராக காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. அவரது ஈகிள் டிரேடர்ஸ் என்ற நிறுவனம் இரும்பு தாதுவை சட்டவிரோதமாக எடுத்துச்சென்றதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது. அவரும் ஒரு சிறை தண்டனை அனுபவித்துள்ளார். நாகேந்திராவின் மருமகன் முரளி கிருஷ்ணா என்பவர் சிருகுப்பு என்ற தனித் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சீட்டை பெற்றுள்ளார்.
காங்கிரஸ், பாஜகவிலிருந்து கட்சிமாறிய முன்னாள் எம்.எல்.ஏ ஆனந்த் சிங் என்பவரை விஜயநகரம் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. சிங்கும் சட்டவிரோதமாக இரும்புத் தாதை எடுத்துச் சென்றது மற்றும் சட்டவிரோத கனிமக் கொள்ளை தொடர்பாக 20 வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார். இதில் வேடிக்கை என்னவெனில், ஆனந்த் சிங்கை எதிர்த்து காங்கிரஸின் முன்னாள் எம்.எல்.ஏ கவியப்பா-வை வேட்பாளராக நிறுத்தியுள்ளது பாஜக. ஜனதா தளம் (மதச்சார்பற்றது) போன்ற பிற கட்சிகளும் சுரங்க ஊழல் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
இந்த பின்னணியில்தான், தங்கள் வாக்காளர்களை தேர்வு செய்ய பல்லாரி மக்கள் போராடிவருகின்றனர். அனைத்து கட்சிகளுமே தங்களது வேட்பாளர்களின் நேர்மை மற்றும் ஒழுக்கத்தைவிட அவர்களது “வின்னபிலிட்டி“ எனப்படும் “ஜெயிக்கும் தகுதியை“ மட்டுமே கருத்தில் கொண்டுள்ளன. சித்தராமையா முதலமைச்சர் ஆவதற்கு முன்பு, சட்டவிரோத சுரங்கத்திற்கு எதிராக அவர் 2010ல் மேற்கொண்ட பாதயாத்திரையை மக்கள் இன்னும் நினைவில் வைத்துள்ளனர். ஆனால், காங்கிரஸும் களங்கம் ஏற்பட்ட வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது அவர்களது “சுத்தமான ஆட்சி“ பற்றிய நம்பிக்கையை ஆட்டங்காணச் செய்துள்ளது.
”எல்லோரது கைகளும் கறைபடிந்துள்ளன. எந்த அளவுக்கு என்பதுதான் கேள்வி” என்கிறார் சுரங்க ஊழலை வெளி உலகுக்கு கொண்டுவந்த டபல் கணேஷ். அனில் லாட் மற்றும் சோமசேகரை எதிர்த்து ஜனதா தளம் (மதச்சார்ப்பற்றது) சார்பில் இவர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
பல்லாரிக்கு என்ன காத்திருக்கிறது?
2013ல், பல்லாரியில் மொத்தம் உள்ள ஒன்பது தொகுதிகளில் காங்கிரஸ் நான்கு தொகுதிகளில் வென்றது. இப்போது அனைத்து பெரிய ஆட்களும் போட்டியிடுகிற நிலையில், சமன்பாடு கடுமையாக மாறலாம். தேர்தலில் தனியாக போட்டியிட ஸ்ரீராமுலுவின் கீழ் BSR காங்கிரஸை ரெட்டி சகோதரர்கள் தோற்றுவித்தனர். இதன் விளைவாக, பாஜக பெரும் இழப்பை சந்திக்க நேர்ந்தது. இப்போது ரெட்டி சகோதரர்கள் மீண்டும் கட்சியில் இருப்பதால், பல்லாரியில் வெற்றிபெற பாஜக நம்புகிறது.
சட்டடவிரோத சுரங்கத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்ததையடுத்து ஏராளமான மக்கள் வேலை இழந்துவிட்டனர் என பல்லாரியில் நிறைய பேர் கூறினர். ”சுரங்கங்கள் பெரும்பாலும் முறைப்படுத்தப் பட்டுவிட்டதால், இப்போது பத்து சுரங்கங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. 200க்கு மேற்பட்ட சுரங்கங்கள் செயல்பட்டன. கடந்த தசாப்தத்தில் சீனாவின் தேவைகளால் அவைகளில் பல பயனடைந்தன. ஆனால், சுரங்கம் பெருமளவிற்கு நிறுத்தப்பட்டதால், பெரும்பான்மையான மக்கள் வேலை தேடி வெவ்வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். இப்பகுதியில் போதுமான வேலைவாய்ப்பை உருவாக்க அரசாங்கம் தவறிவிட்டது” என்கிறார் அந்த பத்திரிகையாளர்.
”இன்று, உலகின் ஆறாவது மிகப் பெரிய எஃகு ஆலையான JSW Steel என்ற நிறுவனம் பல்லாரி நகரிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவிலுள்ள டொரநகல்லு என்ற இடத்தில் அமைந்துள்ளது. ஜின்டாலுக்கு சொந்தமான இந்த நிறுவனம் சுரங்கத்திற்கு விண்ணப்பித்துள்ளதால், உள்ளுரிலேயே வேலை வாய்ப்பை உருவாக்கிய சிறிய மற்றும் நடுத்தர அளவிலான சுரங்கங்கள் அனைத்தும் இங்கிருந்து காணாமல் போய்விடும் என பல்லாரி மக்கள் பயப்படுகின்றனர். மற்ற மாநிலங்களில் செய்ததுபோல, ஜின்டால் நிறுவனம் வெளியிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டுவரும். சட்ட விரோத சுரங்கத்தின் முடிவு ஏகபோக சுரங்கத்தை கொண்டு வரலாம். அது இன்னும் பேரழிவு தரக்கூடியது” என்றார் அவர்.
ரெட்டி சகோதரர்களின் சட்டவிரோத சுரங்கங்கள் பற்றிய தன்னுடைய கடுமையான 2010ம் ஆண்டு அறிக்யைில், லோக்ஆயுக்தாவின் சந்தோஷ் ஹெக்டே, பல்லாரியை “இந்திய விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு மிகச் சிறிய அளவே மதிப்பு தரும் ஒரு குடியரசு“ என்றார். 2018 ஆம் ஆண்டில், ரெட்டி சகோதரர்கள் மீண்டும் பா.ஜ.க.வின் அரசியல் ஆதரவைக் கொண்டு மிகுந்த உற்சாகத்துடன் வந்திருக்கிறார்கள்.
ரூ 12,000 கோடி தாதுக்களை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்த வழக்கை விசாரித்துவரும சிபிஐ, ரெட்டி-க்கு சொந்தமான ஓபுலாபுரம் சுரங்க நிறுவனத்துக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மெதுவாக கைவிட்டு வருகிறது. அவர்களை மன்னித்து விடுவதற்கு பெரும்பாலும் சாதாரண, டெக்னிக்கல் காரணங்களையே காட்டியிருக்கிறது. சிபிஐ அவ்வாறு இன்னும் அறிவித்திருக்காத போதும், அண்மையில் பேசிய ஜனார்த்தன ரெட்டி, அவருக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் சிபிஐ கைவிட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.அந்த அளவுக்கு அவர்களது நம்பிக்கை அதிகமாக உள்ளது.
பாஜக தனது வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதற்கு முன்பே, தனிப்பட்ட கூட்டங்களில், ஆறு மாவட்டங்களில் சுமார் 45 தொகுதிகளை தன்னுடைய பொறுப்பில் பாஜக ஒப்படைத்துள்ளதாக ஜனார்த்தன ரெட்டி பேசிவந்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் ஸ்ரீராமுலுவை அவர்கள் துணை முதல்வராக ஆக்க விரும்புவதாக அவர் கட்சிக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி கேட்டபோது, ”நாங்கள் அனைவரும் ஸ்ரீராமுலுவின் தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். அவர் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய ஆதிவாசி தலைவர். கட்சி அவருக்கு பொறுப்பு கொடுத்தால், நாங்கள் அனைவரும் மிக்க மகிழ்ச்சியடைவோம்” என சோமசேகர், “த ஒயர்“ இணையதளத்திடம், கூறியுள்ளார்.
வெற்றி அடைவதற்கான சூழ்நிலை ரெட்டி சகோதரர்கள் கையில் உள்ளது என லாடு கருதுகிறார். ”அவர்கள் வெற்றிபெற்றால், தங்களது முழு பலத்தையும் காட்டுவார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் தங்களது பணம் மற்றும் ஆற்றலை பாஜகவின் பிரச்சாரத்தில் போட்டுள்ளனர். தோல்வியுற்றால், தங்களை முக்கிய பதவிகளில் வைக்க மத்திய அரசிடம் அவர்கள் பேரம் பேசுவார்கள்”, என்கிறார் லாடு.
1999-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் சோனியா காந்திக்கு எதிராக பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் இங்கே போட்டியிட்டபோது பல்லாரி முதன்முறையாக வெளிச்சத்துக்கு வந்தது. அத்தேர்தலில் தங்களது முழு பலத்தையும் சுஷ்மா ஸ்வராஜுக்கு ஆதரவாக பயன்படுத்தியதால், பாஜகவின் வருங்கால திட்டங்களில் ரெட்டி சகோதரர்கள் முக்கியத்துவம் பெற்றனர். இறுதியில், சுஷ்மா ஸ்வராஜ் வெற்றி பெறவில்லை. ஆனால், பாஜகவின் தலைவர்களிடம் ரெட்டி சகோதரர்கள் செல்வாக்கு பிடித்தனர். முந்தைய எடியூரப்பா அரசில், அவர்கள் அனைவரும் பகட்டான அமைச்சரவைகளையும் பதவிகளையும் பெற்றனர். மீண்டும் அவர்களை தேர்தலுக்கு பயன்படுத்துவதற்கு முன்பு, அவர்களைச் சுற்றி எழுப்பப்படும் கூச்சல் சத்தம் மறைய வேண்டும் என பாஜக காத்திருந்ததாக தெரிகிறது.
இன்றைய தேர்தல் முடிவுகள் ரெட்டி சகோதரர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
அஜோய் ஆஷிர்வாத் மகாபிரஷாஷ்தா
Sir there is a news that the cash for vote was implemented in Karnataka by BJP please post a article regarding this
andaimaanilaththil nadakkum kanima kollai kuriththu neettimuzhakkum neevir immaanilaththil yukam yukamaaka nadakkum kollaikalai kandu kollaamal iruppathu arasiyale!