ஆளும் கட்சியை மீண்டும் அரியணைக்கு தேர்ந்தெடுப்பவர்கள் அல்ல என்ற “புகழை“ கர்நாடக வாக்காளர்கள் தக்க வைத்துள்ளனர். 1985-லிருந்து எந்த அரசாங்கமும் இந்த தென்னக மாநிலத்தில் மீண்டும் பதவிக்கு வந்திருக்கவில்லை. சித்தராமையா அரசாங்கத்திற்கு எதிராக “ஆட்சி-எதிர்ப்பு அலை“ இல்லை என்றாலும், 2018 சட்டமன்ற தேர்தலில் அதற்கு இரண்டாவது வாய்ப்பளிக்க வாக்காளர்கள் மறுத்துள்ளனர். அதே நேரத்தில், பாஜகவை ஒரு மாற்றாக வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கவில்லை. 104 இடங்களுடன், பெரும்பான்மையைப் பெறமுடியாமல் அது எட்டு இடங்களை குறைவாக பெற்றுள்ளது.
கர்நாடகாவில் பாஜகவின் இதற்கு முந்தைய சிறந்த செயல்பாடு 2008-ல் 108 இடங்களைப் பெற்றதாகும். அப்போது, முதன் முதலாக தென்னிந்தியாவில் தனது சொந்த பலத்தில் அரசமைத்தது. அவர்களுக்கிடையேயான அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டின்படி காவி கட்சியை ஆதரிக்க மறுத்து கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் துரோகம் செய்ததன் விளைவாக, அப்போது ஏற்பட்ட அனுதாப அலையில் பாஜக வெற்றி பெற்றது. இப்போது, அதன் மாநிலத் தலைமையிடமிருந்து பலம் பெற முடியாத நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோரின் பிம்பத்தை மட்டுமே முழுமையாக நம்பியிருந்தது.
2018ல் கடுமையான தேர்தல் களத்தில் பல்வேறு தந்திரங்களை மோடி-ஷா கூட்டணி பயன்படுத்தியபோதும், 112 என்ற அந்த மேஜிக் எண்ணை அந்த கட்சி எட்டவில்லை., ஒரு தசாப்தத்திற்கு முன்பு மோடியும் ஷாவும் அக்கட்சியில் முக்கியத்துவம் பெறுவதற்கு முன்னர் கடந்த தேர்தலில் அக்கட்சி என்ன சாதித்திருந்ததோ அதை தற்போது ஈடுசெய்ய முடியவில்லை. எனவே, இதுவரை ஒரே ஒரு தென்னக மாநிலத்தில் ஒரு தளத்தை உருவாக்க முடிந்த அக்கட்சியின் வலிமை, அந்த வலிமையின் எல்லை ஆகியவற்றை இத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இத்தேர்தல் முடிவுகளிலிருந்து வெளிப்படும் பளிச்சிடும் செய்தி என்னவெனில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின் நலத்திட்ட அரசியலின் வரம்புகள். எந்தவொரு பெரிய பிரச்சனையும் இல்லாத இத்தேர்தலில், பல்வேறு பிரிவினர் மற்றும் பகுதிகளை கவரும் வகையில் பாஜக பல தந்திரங்களைக் கையாண்டது. காங்கிரஸ், அதன் நலத் திட்டங்கள் பின்தங்கிய மக்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அதீத மதிப்பிட்டு விட்டது. அந்த அளவுக்கு இத்திட்டங்களின் தேர்தல் பலன்களில் முதலமைச்சருக்கு நம்பிக்கை இருந்தது,
அதனால், சிக்கலான சமூக வேறுபாடுகளைக் கொண்ட கர்நாடகாவில், தேர்தல் முடிவை நிர்ணயிக்கும ஒரு மிகவும் முக்கியமானதான சமூக கூட்டணியை நிர்வகிப்பதில் அவர் போதுமான அக்கறை எடுக்கவில்லை. இறுதியில், வெற்றிபெற முடியும் என தோன்றிய தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்திருக்கிறது. ஏனென்றால், முதலமைச்சர் சித்தராமையா, தெரிந்தோ தெரியாமலோ, தெற்கு பகுதியில் மக்கள் தொகையில் 11 சதவீதம் கொண்ட ஒக்கலிகாக்கள் மற்றும் வடக்கு மற்றும் தென்மேற்கு மாவட்டங்களில் மக்கள் தொகையில் 14 சதவீதம் கொண்ட லிங்காயத்துகள் ஆகியோரிடமிருந்து விலகி விட்டார்.
அதோடு சேர்த்து, கடலோர மாவட்டங்களில் தொடர் வகுப்புவாத கொலைகளுக்குப் பின்னர், சித்தராமையாவை “இந்துக்களின் எதிரி“ என ஒரு பிரச்சாரத்தை அப்பகுதிகளில் பாஜக நடத்தியது. இக்குற்றச்சாட்டை போதுமான அளவு எதிர்க்க காங்கிரஸ் எதுவும் செய்யாததால், இந்து வாக்காளர்களில் கணிசமான பகுதியினர் தங்களது சாதி வேறுபாடுகளைக் கடந்து காங்கிரஸுக்கு எதிராக திரும்பினர். கடலோரப் பகுதியில் 2013 தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் இந்தமுறை முழுவதுமாக இழந்தது. “தனி மதம் “ என்ற லிங்காயத்துகளின் சர்ச்சைக்குரிய கோரிக்கைக்கு சித்தராமையாவின் ஆதரவு முழுவதுமாக தோல்வியடைந்ததோடு, எதிர்முகமாக திரும்பி விட்டதாக தோன்றியுள்ளது. ஒருங்கிணைந்த ஜனதா தளம் 1999ல் சிதைந்து போனதிலிருந்து, லிங்காயத்துகள் பாஜகவைச் சுற்றி அணிவகுத்து வருகின்றனர். பாஜகவிலிருந்து லிங்காயத்துகளைப் பிரித்தெடுக்கும் நோக்கத்துடன், இந்து மதத்திலிருந்து விடுபடும் அவர்களது நீண்டகால கோரிக்கைக்கு முதலமைச்சர் தனது முழு ஆதரவையும் அளித்தார். இச் சூதாட்டம் பலனளிக்கவில்லை. கர்நாடகாவின் கிராமப்புறங்களில் உள்ள சாதாரண லிங்காயத்துகள், இந்துக்களிடமிருந்து பிரிந்து செல்ல வேண்டும் என ஒரு கோரிக்கை விடுத்த அச்சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு சிறிய, படித்த பிரிவினரின் தத்துவ மற்றும் வரலாற்று நியாயங்களைப் புரிந்து கொள்ளவில்லை. கிராமப்புற லிங்காயத்துகள் இதை ஒரு தேவையற்ற அரசியல் விளையாட்டாகப் பார்த்தனர்.
லிங்காயத்துகளின் வாக்குகளை தீர்மானிக்கும் ஹைதராபாத் கர்நாடகா மற்றும் பாம்பே கர்நாடகாவில் காங்கிரஸ் மிக அதிகமாக இழந்தது. சித்தராமையா அமைச்சரவையில் முக்கிய அமைச்சரான, இந்த இயக்கத்தை முன்னின்று நடத்திய வினய் குல்கர்னி, லிங்காயத்துகள் ஆதிக்கமுள்ள தார்வார்ட் தொகுதியில் தோற்றார். மேலும், இந்து ஒற்றுமையை முறிக்கும் ஒரு கட்சியாக காங்கிரஸை சித்தரித்துக் காட்ட இந்த விவகாரம் பிஜேபிக்கு பயன்பட்டது. ஒக்கலிகாக்கள் விஷயத்தில், முன்னாள் பிரதமர் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் எச்.டி.தேவெ கௌடாவோடு சித்தராமையாவுக்கு இருந்த பகை, காங்கிரஸிடமிருந்து அந்த சமூகத்தை பிரித்தது. சித்தராமையா முதலமைச்சராக இருந்தபோது, இரு தலைவர்களுக்கு மிடையேயான கருத்து வேறுபாடுகள் கூர்மையாயின. அது ஒட்டுமொத்த ஒக்கலிகா சமூகத்தினரை காங்கிரஸுக்கு எதிராக திருப்பியது. இவ் விஷயங்களை இன்னும் மோசமாக்கும் வகையில், முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்த தேவெ கௌடாவின் உருவப்படத்தை சித்தராமையா அகற்றச் செய்தார். இது மிகப்பெரிய, பழைய ஒக்fலிகா தலைவர் மீதான தாக்குதலாக சித்தரிக்கப்பட்டது. காங்கிரஸ் அரசாங்கத்தில் ஒக்கலிகா சமூக அதிகாரிகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படாதது, ஒக்கலிகா இளைஞர்களின் அடையாள சின்னமாக அறியப்பட்ட, நடிகராக இருந்து காங்கிரஸ் தலைவராக மாறிய அம்பரீஷை அமைச்சரவையிலிருந்து நீக்கியது மற்றும் மற்ற தவறான நிகழ்வுகள் சித்தராமையாவுக்கு எதிரான ஒக்கலிகா சமூகத்தினரின் மனவருத்தத்திற்கு காரணமாயின.
ஒரு அரசியல் வாய்ப்பை உணர்ந்து, ஒக்கலிகாக்களை மேலும் காங்கிரஸிருந்து பிரிக்கும் நோக்கத்துடன், தேவெ கௌடா சித்தராமையாவால் அசிங்கப்படுத்தப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். ஒக்கலிகா சமூகத்தினரின் காங்கிரஸ் மீதான கோபம் வெளிப்படையாகவே தெரிந்த்து. ஒக்கலிகாக்கள் அதிகமுள்ள பழைய மைசூர் பகுதியில், காங்கிரஸ் செல்வாக்கு எப்போதுமில்லாத அளவுக்கு மிகவும் குறைந்துவிட்டது. ஒக்கலிகா அரசியல் மையமான மாண்டியா மாவட்டத்தில், காங்கிரஸ் ஒரு தொகுதியைக்கூட வெல்ல முடியவில்லை. சித்தராமையாவின் ஆட்சியில் AHINDA என அழைக்கப் படுபவர்களுமான சிறுபான்மையினர், ஓ.பி.சி. மற்றும் எஸ்.சி., எஸ்.டி.க்கள் ஆகியோரை காங்கிரஸ் பெரிதும் நம்பியிருந்தது. இந்த குழுக்கள் காங்கிரஸுக்குப் பின்னால் முழுமையாக ஒருங்கிணைக்கப்படவில்லை அல்லது கர்நாடக சமூகதளத்தில் AHINDA ஆதரவு ஒரு தேர்தலில் வெற்றிபெறும் அளவுக்கு போதுமானதாக இல்லை.
-நாராயணா
Savukku.. Cry hard.. 😀
Nalla samalikireenga savukku
BJP lost deposit in 29 places.
டேய் சிலாக்கி பிலாக்கி சவுக்கு உன் நெத்திய காட்ற அதில மோடி சார்பா உனக்கு நெத்தி அடி கொடுக்கனும்,
எப்படி நீ கட்டுரை எழுதினா பிஜெபி தோத்துருமா ???
நீ வயர்ன்னா நாங்க ப்யாருடா.
எங்கே,
உன் பங்காளி சைக்கோ நடிகன் பிராடு ராஜ் நன்றி மறந்த நாய் ,பணம் வந்த உடனே கஷ்டத்தில் உதவின
முத பொண்டாட்டிய கழத்திவுட்ட விபச்சாரி மவன் அவன் மோடியே கேள்வி கேட்கிரானா ???
இப்ப அவன் சொன்ன மாதிரி தற்கொலை செய்ய சொல்லுடா.
போய் ஆபகானிஸ்தான்ல இல்ல பாக்கிஸ்தான்ல உட்காந்து இன்னும் காரசாரம கட்டுரை எழுது
பாய் பேமண்ட்ட ஏத்திக்கொடுப்பாரு.
டிமோனட்டைஷன் பத்தி நீ எழுதுறியா
மோடி ஆட்சிக்கு வரும் பொழுது பூண்டு கிலோ200=250 ருபா
இப்ப என்ன ரேட்டு தெரியுமா நல்ல தரமான் பூண்டு கிலோ 80 ருபா.
உலக வங்கியே டிமொனைட்டைஷேன் செய்தனால் இந்தியா பொருளாதரம் உயரும் என்று
அறிக்கை கொடுக்குது.
இது வரைக்கும் இந்தியால வந்த தலைவன் எவானாவது கக்கூஸ்ல போங்க சொன்னாடா???
இதனால ஏற்படு நன்மை என்ன தெரியுமா??
அய்யா சொரியார் பூமியில் தெரிந்தொ தெரியாமலோ செக் டேம்களை கட்டி கொண்டிருக்கிறார்கள்
அதனால் ஆறுகளில் நீர்மட்டம் உயரும்
அப்பொழுது ஆற்றுக்குள்ளும் ஆற்றின் கரையோரமாக் அசிங்கம் செய்து கொண்டிருக்கும் தமிழன் எங்கடா போவான்?????
@Anonymus
Current Savuku is differed from savukku in year 2011. Even 2011, He is attacking HIndusiam,but He is neutral . I read many articles of him criticizing Missionary religions. It is seems he bought by Missionaries. now,he totally against Modi even for trivial issues.
Parakash raj and his congress with khushboo and their muslim and chritan groups could not win in Kanatakka why . cause 60 years of congress ruling india and giving ,more rights to chritans and muslims and against hindus has taught these idiots a good lesson
the best one https://amzn.to/2GlD5IP