அரசியலமைப்பின் மீதான நம்பிக்கை, நேர்மை, தார்மீகம் போன்றவற்றின் முக்கியத்துவத்தை மீண்டும் கண்டறிய ஒரு வாய்ப்பை நாட்டிற்கு வழங்கியதற்காக கர்நாடக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக, இவையனைத்தும், ஆளும் கட்சியின் வசதிக்காக விருப்பம் போல திரிக்கப்பட்டு வருகின்றன.
அரசியல் கட்சியினர், அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், சமூக ஊடகவியலாளர்கள் மற்றும் சில நேரங்களில் நீதித்துறையின் கருப்பு ஆடை அணிந்த உறுப்பினர்கள் வரை கிட்டத்தட்ட அனைவரும் – வெற்றி பெற்றவன் சொல்வதே வேதம் – என்ற புதிய அரசியல் நெறியை ஏற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். உத்தரகாண்ட், அருணாச்சல பிரதேசம், மணிப்புர் மற்றும் கோவா ஆகியவற்றின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்காக பணபலம் மற்றும் பிஜேபியின் ஆளுநர்கள் உள்ளிட்ட தங்களின் அனைத்து தந்திரங்களையும் பிஜேபியினர் பயன்படுத்தி வெற்றி பெற்றபோது, அந்த செயலை பாராட்டுமாறு நம்மையும் அழைத்தார்கள்.
எம்.எல்.ஏக்களை லஞ்சம் கொடுத்து வசப்படுத்தும் அவர்களின் திறமைக்காகவும், ஆளும்கட்சியின் விருப்பத்திற்கேற்ப அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை வளைக்க அரசாங்கத்தின் அனைத்து கருவிகளையும் பயன்படுத்தும்போது பிஜேபியின் அரசியல் தந்திரமாக அது புகழப்பட்டது.
இதற்கு நேர்மாறாக, காங்கிரஸ் தலைவர்கள் மெதுவாக செயல்பட்டதற்காகவும், சுயேட்சை எம்.எல்.ஏக்களை வளைக்க முடியாத்தற்காகவும் கேலி செய்யப்பட்டனர். அவர்கள், அரசு சாரா நிறுவனங்களைப் போல, உழைத்து களைத்தவர்களாக கருதப்பட்டனர். அவர்கள், பாஜகவின் வளமான செயற்பாட்டாளர்களுக்கு இணை இல்லை என கேலி செய்யப்பட்டனர். நரேந்திர மோடியின் தேர் தன்னுடைய அரசியல் வெற்றிப் பயணத்தை தொடர்ந்தவரை, மரியாதை, நெறிமுறைகள் மற்றும் நேர்மை குறித்து எந்தவொரு கவலையுமில்லை.
தேர்தலில் தனது தோழமைக் கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை உதறிவிட்டு, பாஜகவுக்கு சென்றதற்காக நிதிஷ்குமார் ஆரவாரம் செய்யப்பட்டார்.
பீகார் வாக்காளர்கள் தேர்தலில் அளித்த தீர்ப்பின் சந்தர்ப்பவாதத்தையும், துரோகத்தையும், லாலு யாதவ் குடும்பத்துக்கும் அதன் அரசியல் பங்காளியான காங்கிரஸுக்குமான மூக்கறுப்பு என நாம் அனைவரும் பாராட்டினோம். பாஜக இல்லாத பீகாருக்கு வாக்காளர்கள் வாக்களித்திருந்தாலும், கூட்டணி என்ற பின்வாசல் வழியாக பாஜக வந்தபோது எந்தவித மனத்தடுமாற்றமும் நமக்கு ஏற்படவில்லை. அரசியல் செயல்திட்டம் மற்றும் உயர்ந்த அரசியல் நடத்தைகளைக் கொண்டுள்ளதாக கூறிக் கொண்ட பாஜகவுக்கு உயர்ந்த அறநெறி இருப்பதாக சொல்லப்பட்டது. இத்தகைய விழுமியங்களில் இருந்த பிஜேபி விலகுவது, பிஜேபி தலைமையை கர்நாடகாவில் அவர்களின் தந்திரம் மூலம் கேள்விக்குள்ளாக்குகிறது.
இதற்கு முன்னர், ஒன்றன் பின் ஒன்றாய் ஆளுநர்கள் வாக்காளர்கள் தீர்ப்புக்கு எதிராக, பாஜக தலைமைக்கு உதவியதை நாம் கையறு நிலையில் பார்க்க நேரிட்டது. பி.எஸ்.எடியூரப்பாவுக்கு இப்போது பதவி பிரமாணம் செய்து வைப்பதாகவும், ஆட்சி அமைக்க அவருக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுப்பதாகவும் கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா இப்போது கூறியிருக்கிறார். மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணியின் தலைவர் எச்.டி. குமாரசாமியை ஆட்சி அமைக்க அவர் (ஆளுநர்) கேட்டிருந்தால், வாக்காளர்களின் முடிவை உதறிவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டிருப்பார். ஆனால் எடியுரப்பாவை அழைத்ததன்மூலம், பாஜக அல்லாத சட்டமன்ற உறுப்பினர்களை லஞ்சம் கொடுத்து வசப்படுத்த பாஜகவை அவர் தூண்டியிருக்கிறார். மாநிலத்தில் கட்டவிழ்த்து விடப்படும் பணத்தின் வீச்சு எத்தகையது என்பதை நாம் ஒருபோதும் அறியப்போவதில்லை.
இதை விசாரித்து வெளியிட வேண்டிய முக்கிய பத்திரிக்கையாளர்கள் “காணாமல்போன”, “கண்டுபிடிக்க முடியாத” எம்.எல்.ஏக்கள் பற்றிய செய்திகளை கொண்டு வருவதில் “பிஸியாக“ உள்ளனர். ஜனதா தளம் (மதச்சார்பற்றது) தலைவர் குமாரசாமி, எம்.எல்.ஏக்களுக்கு லஞ்சம் கொடுக்க முயல்வதாக பாஜகவுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.
கர்நாடக வாக்காளர்களின் தீர்ப்பும் சிக்கலானதாவே உள்ளது. புள்ளி விபரங்கள் பெரிய அளவில் அந்தத் தீர்ப்பை புரிந்து கொள்ள உதவவில்லை. இது யாருக்குமான வெற்றி என்று எளிதாக கூறி விட முடியாது. வெளிப்படையாக புரியும் ஒரு விஷயம், இது காங்கிரஸ் கட்சிக்கான தோல்வி என்பதே. இருந்தாலும் பிஜேபிக்கான வெற்றி வாக்குகளா என்றால் அப்படியும் புரிந்து கொள்ள முடியாது. காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் உயர்ந்திருந்தாலும், காங்கிரஸுக்கு எதிரான வாக்காளர்களின் தீர்ப்பு என எளிதில் கருத முடியும். ஆயினும், காங்கிரஸைவிட 1.8% குறைவான வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், மாநிலத்தை ஆட்சி செய்வதற்கான தெளிவான வெற்றியை பாஜக பெற்றுள்ளதாக கூறுவது ஒரு முழு பொய்யாக இருக்கும்.
மறுபுறம், “மதச்சார்பற்ற“ கட்சியாக அடையாளப் படுத்திக் கொள்ளும் வசதி எச்.டி.தேவெ கௌடவுக்கு இருந்தாலும், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இருகட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைமையை கடுமையாகத் தாக்கினர்.
பிஜேபியை பொறுத்தவரை, அக்கட்சியால் ஒரு நேர்மையான, தார்மீகமான பிரச்சாரத்தை செய்து வெல்லவே முடியாது. பணத்தை தாராளமாக இரைத்து, நேர்மையற்ற வழிகளின் மூலம் மட்டுமே அதனால் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பது, அரசியலை கூர்ந்து கவனித்து வருவோருக்கு நன்றாகவே தெரியும்.
இறுதி எண்ணிக்கைகள்தான் முடிவுகளை புரிந்து கொள்ள உதவியாக இல்லை என்றால், இத்தேர்தலில் நடந்த பிரச்சாரமும் மக்கள் முடிவை புரிந்து கொள்ள பெரிய அளவில் உதவவில்லை. கர்நாடகாவுக்கென்று, ஒரு புதிய திட்டத்தை பிஜேபி வகுத்திருந்தது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதன் தலைவர்கள், குறிப்பாக பிரதமர் மோடி, பெரும்பாலும் காங்கிரஸை தாக்குவதற்கு நேரத்தை அர்ப்பணித்து தவறான, எதர்மறையான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் அல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்பதே அவர்களின் பிரதான கோஷமாக இருந்தது.
தேவேகவுடா மற்றும் குமாரசாமி ஆகியோரின் கௌடாக்களின் செயல்திறன் மனதை கவரக்கூடியதாக இருந்ததை இத்தேர்தலில் பார்க்க முடிந்தது. கன்னட பெருமை பற்றி சித்தராமையா ஒரு புறம் பேசினாலும், பிராந்திய அரசியலின் முக்கியத்துவத்தை தேவேகவுடா பிரச்சாரத்தின்போது வலியுறுத்தினார்.
அதற்கு நேர்மாறாக மோடியின் பிரச்சாரம் தேசிய உணர்வினை முக்கியத்துவப்படுத்தியது. இந்தத் தேர்தல் இரண்டு அடையாளங்கள் மற்றும் இரண்டு மனோநிலைகளுக்கு இடையேயான மோதல் ஆகும். இந்தத் தேர்தலின் முடிவுகளை தேசிய அரசியல் பேசும் முகாமுக்கு ஒரு சிறிய வெற்றியாக தீர்மானிக்க முடியும். இதன் விளைவாக, மோடியின் கவர்ச்சி இன்னும் முழுமையாக குறையவில்லை என்ற திருப்தியை மட்டுமே பாஜக ஆறுதலாக கொள்ள முடியும்.
ஆயினும், தேர்தல் ஒரு நிலையான அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். ஆளுநர் என்பவர் அரசியல் ரீதியாக நியாயமானவராகவும் அரசியலமைப்பு ரீதியாக சரியானவராகவும் இருக்க வேண்டும். சித்தராமையாவின் டிராக் ரெக்கார்டுக்கு மக்கள் தங்கள் மறுப்பை தெரிவித்த பின்னரும் கூட, காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் ஆகிய கட்சிகள் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயல்வதாக பிஜேபி ஆதரவாளர்களால் பார்க்கப்படுகிறது. இதற்கு எதிர் முகாமில் உள்ளவர்கள், இதை முழுமையாக நிராகரிக்கின்றனர்.
குமாரசாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்திருந்தால், அவரது முடிவு பாஜக தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கும். அதே நேரத்தில் தங்களை தோற்கடிக்கவே முடியாது என்ற எண்ணத்தை பிஜேபி தலைமை கைவிட வேண்டும்.
மோசமான அரசியல் தந்திரங்களை அறிந்த ஒரே கட்சி பிஜேபி மட்டுமே அல்ல என்பதை பிஜேபியும் புரிந்து கொள்ள வேண்டும். காவிக் கூட்டத்துக்கு, தங்களைப் போலவே மோசமான தந்திரங்களை கையாள, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளத்துக்கும் தெரியும் என்பதையும் பிஜேபி தலைமை உணர வேண்டும்.
இனி நடக்கப்போகும் அனைத்துத் தேர்தல்களிலும் பிஜேபி மட்டுமே வெற்றி பெறும் என்ற மமதை கொண்டுள்ள பிஜேபி தலைமை, வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை உணர வேண்டும்.
நீதி நெறிகளுக்கு புறம்பான வழிமுறைகளை கையாள்வதை விடுத்து, நமது மரியாதைக்குரிய விழுமியைங்களை மீட்டெடுக்க வேண்டும் என்பதை, கர்நாடக மக்கள் தங்கள் வாக்குகள் மூலமாக அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் உணர்த்தியிருப்பதாகவே இம்முடிவுகளை பார்க்க வேண்டும். சமீபமாக மாறியிருக்கும் நம் மதிப்பீடுகளை திருத்திக் கொள்ள நாம் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் மதிப்பீடுகளையும், தார்மீகத்தையும் காற்றில் பறக்கவிட்டு, குறுக்கு வழியையும், நேர்மையற்ற செயல்களையும் நியாயப்படுத்தும் போக்கினை நாம் தொடர்ந்தோமென்றால், நீண்ட காலத்தில், இது நமது நாட்டின் கட்டமைப்பையே சிதைக்கும் அளவுக்கு ஆபத்தை உருவாக்கும்.
-ஹரீஷ் காரே.
Is this scum still alive? He is a sonia boot licking filth. Sworn BJP hater .
Anyway the translation is good.Konjam nerudal irukku…irundhaalum pramatham…..Doing it at a short notice is tedious.
Everyone KNOWS BJP cannot win on its own for 100 yrs as majority has not yet understood them and they are adopting the same congress techniques just to establish themselves. Even if many in BJP or RSS or the very sympathetic public do not like these ways to make inroads faster there is no other way available as time is short. Parpom … 2019le oruvelai EVM thayavaale jeyicci vandhal indha filthai sari panrangalaannu…
Enakku apadi seivangalannu nambikkai kuriyathaan irukku….
Irundhaalum irukkira kevalathile idhuthaan konjam…. konjame konjam paravaillatha KEVALAM….