கர்நாடகா தேர்தல் முடிவுகள் ஊடகங்களில் எதிர்பார்த்த பிரளயத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளன. இவைகளை பாரதீய ஜனதா கட்சிக்கு ஒரு மிகப் பெரிய வெற்றி என்றும், நாட்டில் வடக்கு மற்றும் மேற்கிலிருந்து தெற்கு பகுதிக்கு அக்கட்சியின் தவிர்க்கமுடியாத அணிவகுப்பின் அடையாளமாகும் என்றும் தொலைக்காட்சி சேனல்கள் விவரித்துள்ளன. பாஜகவுக்கு “ஒரு இணையில்லாத மற்றும் முன்னோடியில்லாத வெற்றி“ என இத்தேர்தல் முடிவுகளை பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டியிருக்கிறார். இந்த மகத்தான வாதங்கள் எதுவும் கொஞ்சங்கூட உண்மைக்கு அருகே எங்கும் வரவில்லை.
இதற்கு முன்னர் சுட்டிக்காட்டியபடி அந்த 38%., காங்கிரசின் வாக்குகள் பாஜகவை விட 1.2% அதிகமாக உள்ளது. இரண்டாவதாக, இந்த வெற்றியானது இணையில்லாததும் இல்லை, முன்னோடியில்லாததும் இல்லை. ஏனெனில், கர்நாடக சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 224 இடங்களில் 110 இடங்களில் 10 ஆண்டுகளுக்கு முன்புதான் பாஜக வெற்றி பெற்றுள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர்கள் கூறிவருவதுபோல, நடைபெற்று முடிந்த 2018 சட்டமன்ற தேர்தல் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான வாக்கு அல்ல. ஏனெனில், கட்சியின் வாக்கு பகிர்வு உண்மையில் 2013ம் ஆண்டைவிட 1.4% அதிகரித்துள்ளது.
அப்படியானால், பாஜக 64 இடங்களைப் பெற்றதற்கும் காங்கிரஸ் 44 இடங்களை இழந்ததற்கும் என்ன காரணம்? காங்கிரஸ் மற்றும் 1990 களின் பிற்பகுதியில் முன்னாள் பிரதம மந்திரி தேவே கவுடாவால் நிறுவப்பட்ட பிராந்தியக் கட்சியான ஜனதா தளம் (மதச்சார்பின்மை) ஆகியவற்றுக்கும் இடையே மதச்சார்பற்ற வாக்குகளின் பிளவே காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பிரதான காரணம். இதை பெரும்பாலான ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஜனதா தளம் (மதச்சார்பற்றது) அதன் கூட்டாளியான பகுஜன் சமாஜ் கட்சியுடன் சேர்ந்து 222 தொகுதிகளில் போட்டியிட்டதுடன், 37+1 இடங்களைக் கைப்பற்றியது. இந்த மூன்று வழி பிளவு காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த பட்சம் 40 தொகுதிகள் இழப்பு ஏற்படுத்தியது. இதுவே அக்கட்சியின் வாக்கு பங்கு அதிகரிப்பு விளைவுகளை சமன்படுத்தியது.
இருப்பினும், கடந்த இரண்டு தசாப்தங்களில் நடந்த மூன்று முந்தைய தேர்தல்களில் வாக்களிப்பு முறை பற்றிய ஒரு ஆய்வு இந்த விளக்கம் எளிது என்பதை காட்டுகிறது. 2004 தேர்தல்களிலிருந்தே இந்த மூன்று வழி பிளவு இருந்திருக்கிறது. 2004, 2008 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் ஜனதா தளம் (மதச்சார்பற்றது) அனைத்து இடங்களிலும் அல்லது கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் போட்டியிட்டதுடன், ஒவ்வொரு முறையும் 20% வாக்குகளைப் பெற்றது. காங்கிரஸின் வாக்குகள்கூட நிலையானதாக இல்லை, ஆனால் 2004 ல் 35.3% என்பதிலிருந்து 2018 ல் 38% ஆக அதிகரித்துள்ளது. 2004 ல் 65 ல் இருந்து 2008 ல் 80 ஆகவும், 2013 ல் 122 ஆகவும், 2018 ல் 78 ஆகவும் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கைகளின் ஏற்ற இரக்கங்களை ஒருவர் எப்படி விளக்க முடியும்?
பாஜகவில் உள்ள உறுதியற்ற தன்மையின் பிரதிபலி்ப்பே இந்த “ஏற்ற இரக்கங்கள்“ என்பதே இதற்கான பதில். அக்கட்சியின் இரண்டு தலைவர்கள், பி.எஸ்.எடியூரப்பா மற்றும் பி. ஸ்ரீராமுலு ஆகியோர், 2013ல் பாஜகவிலிருந்து விலகி அவர்களுடைய சொந்த கட்சிகளை உருவாக்க முற்பட்டனர். அதனால் 2008ம் ஆண்டு தேர்தலில் 110 இடங்களிலிருந்து 2013ம் ஆண்டு தேர்தலில் 40 இடங்கள் என பாஜகவின் எண்ணிக்கை சரிந்தது. 2013 ல், இந்த இருவரின் கட்சிகளும் 12.5% வாக்குகளை பெற்றன. அந்த மோசமான சரிவை முழுவதுமாக சரிகட்டியதால் தற்போது பாஜகவின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. அந்த பிளவு ஏற்படாமல் இருந்திருந்தால், 2013 இல் பா.ஜ.க.வின் வாக்குகள் 32.4% ஆக இருந்திருக்கும். 2008ம் ஆண்டு வென்றதைப்போல, அக்கட்சி ஒருவேளை கிட்டத்தட்ட 100 இடங்கள்வரை மீண்டும் வென்றிருக்கும். இந்த கணக்கீடுதான் மோடி மற்றும் ஆகியோரை 2018 தேர்தலுக்குள் பிளவை சரி செய்ய எந்த எல்லைக்கும் போகச் செய்தது.
கர்நாடகாவில் மேலாதிக்கமான கட்சி என்ற அதனுடைய நிலையை காங்கிரஸ் இழந்தது 2018ல் அல்ல. 2004ல் பாஜக 79 இடங்களைப் பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவானது. காங்கிரஸின் 65 இடங்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் 58 இடங்களை விட இது அதிகம். அப்போதே கர்நாடகாவில் மேலாதிக்கமான கட்சி என்ற அந்தஸ்தை காங்கிரஸ் இழந்திருந்த்து. அது முதல், காங்கிரஸின் தலைவிதி அக்கட்சிக்குள் என்ன நடக்கிறது, அதற்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கும் இடையே என்ன நடக்கிறது என்பதை பொருத்து அல்ல. ஆனால் பாஜகவுக்குள் என்ன நடக்கிறது என்பதை பொறுத்த்தே.
இந்த பின்னணியில்தான், காங்கிரஸ் மே 15 அன்று பிற்பகல் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு திடீரென நிபந்தனையற்ற ஆதரவு அளித்ததை மதிப்பீடு செய்ய வேண்டும்.
கூட்டணி அமைப்பதில் ஒரு பாடம்
கோவாவில் மார்ச் 2017ல் தனிப் பெரும் கட்சியாக இருந்தும், பெரும்பான்மை இல்லாமலேயே ஆட்சியை கைப்பற்றிதற்கு காங்கிரஸ் பிஜேபியை பழிவாங்குகிறது என்று ஊடகங்கள் கருதுகின்றன. ஆனால், உண்மையில் அது காங்கிரஸ் தலைமையின் ஞானத்திற்கு ஒரு புகழாரம் ஆகும். இருண்ட காலத்திற்குள் இந்தியாவின் மோசமான இறக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டுமெனில், காங்கிரஸ் மற்ற பிற தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் தொகுதி உடன்படிக்கை செய்ய வேண்டும் என்பது மட்டுமல்ல, தேவைப்பட்டால், அவ்வாறு உருவாகிற கூட்டணியின் தலைமையை விட்டுக் கொடுக்க வேண்டும் என ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் அனேகமாக இறுதியாக உணர்ந்துள்ளனர். வரவுள்ள பதினைந்து நாள் புயலில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை காங்கிரசுடனான கூட்டணிக்கு ஒத்துழைப்பளிக்கும் என்ற நம்பிக்கையே, ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் கூட்டணித் தலைமையை தாமாக முன்வந்து எச்.டி.குமராசாமிக்கு அளித்திருப்பதன் காரணமாகத்தான்.
இந்த முடிவின் முழுத் தாக்கமும் ஜனதா தளத்துக்கு நாளடைவில் புரியும். 2004ம் ஆண்டு, காங்கிரஸ், கட்சி, ஜனதா தளத்தை விட வெறும் 7 இடங்களை மட்டுமே அதிகம் பெற்றிருந்தது. இருந்தபோதும் ஒரு முன்னாள் பிரதமரென்றும் பாராமல், தேவேகவுடாவுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுத் தர மறுத்தது. மிகுந்த தயக்கத்தோடுதான், தேவேகவுடா அதற்கு ஒப்புக் கொண்டார். ஆனால், தனது மகனை தனக்கு எதிராக கிளர்ச்சி செய்யவும், கட்சி முழுவதையும் பாஜகவுடன் கூட்டணிக்கு எடுத்துச் செல்ல அனுமதித்ததன் மூலம் காங்கிரஸுக்கு பதிலடி கொடுத்தார் தேவெ கௌடா. இப்போது மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு முதலமைச்சர் பதவிக்கு காங்கிரஸின் வெளிப்படையான சலுகை இந்த நேரத்தில் பழைய நினைவுகளை அழிக்க உதவும்.
வர இருக்கும் இரு வாரங்களில் பாஜகவின் அழுத்தங்களும், கெஞ்சல்களும் காங்கிரஸ் அல்லது மதச்சார்பற்ற ஜனதா தளத்திலிருந்து போதுமான எம்.எல்.ஏக்களை இழுக்குமா என்பது இன்று மாலை 4 மணிக்கு தெரிந்து விடும். , பாஜகவின் பி.எஸ்.எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்போது, விதான் சௌதாவில் என்ன நடந்தாலும், கர்நாடகாவில் ராகுல் காந்தியின் உபாயம்தான் பின்பற்றுவதற்கு சரியான ஒன்று. கர்நாடகாவில் மட்டுமல்ல. மற்ற ஒவ்வொரு மாநிலத்திலும் – எங்கெல்லாம் மாநில கட்சிகளுக்கு எதிராக தேசிய எதிர்க்கட்சி ஆக காங்கிரஸுக்குப் பதிலாக பாஜக முயற்சி செய்கிறதோ அங்கெல்லாம் பின்பற்றுவதற்கு சரியான வழிமுறை இதுதான்.
ஆனால் இந்த உபாயம் பல காங்கிரஸ் தலைவர்களின் கசப்புணர்வை சம்பாதிக்கும் ஆபத்தைக் கொண்டிருக்கிறது.. அதிகாரத்தின் பலன்கள் அதன் கூட்டணிக் கட்சியின் தொண்டர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதால், அவர்களின் சொந்த கட்சி (காங்கிரஸ்) நலிவடையும் வாய்ப்பு இருக்கிறது. இது பீகாரிலும், உத்தரப் பிரதேசத்திலும் நடந்துள்ளது. மமதா பானர்ஜி காங்கிரஸை பிளவுபடுத்தியிருக்கா விட்டால், அவரால் தனக்கென்று தனி அடையாளத்தை மேற்கு வங்கத்தை உருவாக்கியிருக்க முடியாது.
ஒதிஷாவிலும் இதே போல காங்கிரஸ் கட்சி நெருக்கடியை சந்திக்க்க் கூடும். 2000களின் முற்பகுதியில் கர்நாடகாவில் செய்ததைப்போல, ஒடிஸாவிலும் பாஜக ஊடுருவி வருகிறது. பாஜக எவ்வளவு தூரம் வெற்றி கண்டுள்ளது என்பதை கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் தெளிவாக காட்டுகிறது. மொத்த இடங்களில் கிட்டத்தட்ட ஐந்தில் இரு பங்கு இடங்களை வென்று, காங்கிரஸை முக்கியமில்லாததாக குறைத்தது. மேற்கு வங்கம்தான் பாஜகவின் அடுத்த இலக்கு.
இந்த மாநிலங்களில் அல்லது இதுபோன்ற அச்சுறுத்தலுக்குள்ளான மாநிலங்களில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணிகள் அமைப்பதன் மூலம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இப்பிரச்சினையை முன்கூட்டியே தவிர்க்க முடியும். இது காங்கிரஸ் கட்சியின் மேன்மையை சரணாகதி அடைய வைப்பது போல தோன்றலாம். அது உண்மையில், வேறுபட்ட வடிவத்தில் இருந்தபோதும், சுதந்திரத்துக்கு முந்தைய காங்கிரஸின் அணுகுமுறை மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, நீண்ட கால பயன்பளைத் தரும்.
1947-க்கு முன்பு, நாட்டுக்கு சுதந்திரம் பெறுவதுதான் அப்போதைய பரவலாக்கப்பட்ட காங்கிரஸின் ஒருங்கிணைந்த நோக்கமாக இருந்தது. இன்று அது இந்தியாவின் பொருளாதாரத்தை புத்துயிர் அளிப்பது மற்றும் அரசியல் அமைப்பை தூய்மைப்படுத்துவதோடு ஜனநாயகப்படுத்த வேண்டும். அதற்கான தேவை முன்பெப்போதும் இந்த அளவுக்கு அதிகமாக இல்லை. ஏனெனில், இந்தியா மாறி வருகிறது. அது நல்லது அல்ல.
கிராமப்புறங்களில், கூட்டுக் குடும்ப அமைப்பின் உறவுகளும், அது வழங்கிய பாதுகாப்பும் பலவீனமாகியுள்ளன. வேளாண்மையில் வேலைவாய்ப்பு ஏறக்குறைய நின்று போய் விட்டது. எனவே, வேலை தேடும் கிராமப்புற தொழிலாளர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாகி அடிமட்ட ஊதியங்கள் பெற்று ஆபத்தான, நிச்சயமற்ற வாழ்க்கை வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை.
ஆனால் நகரங்களில், வாழ்க்கை மிகவும் ஆழ்ந்து, பெருகிய முறையில் பாதுகாப்பற்றது. ஏனெனில், அமைப்புச்சாரா துறைகளில் மட்டுமே வேலைகள் கிடைக்கின்றன. அங்கே, விபத்துகள், நோய்கள், மகப்பேறு மற்றும் வயது முதிர்வுக்கு எதிராகவோ அல்லது இறப்புக்கு எதிராகவோ, சொல்லிக்கொள்ளுமளவுக்கு, எந்தவொரு சமூக காப்புறுதித் திட்டமும் இல்லை.
இந்தியாவுக்கு தேவை உண்மையான பொருளாதார வளர்ச்சி. கற்பனையான பொருளாதார வளர்ச்சி அல்ல. குற்றவிலக்குள்ள அரசியல் அமைப்பு மற்றும் அதிகாரவர்க்கத்தை அதன் தவறுகளுக்கு பொறுப்பாளிகளாக்க பொதுமக்களை அனுமதிக்கும் சட்டங்களின் சீர்திருத்தம் தேவை. இந்த சீர்திருத்தங்களுக்காகதான் நாடு அழுது கொண்டிருக்கிறது. இந்த பிரச்சினைகள் இன்று எந்த அரசியல் கட்சியின் செயல் திட்டத்திலும் இல்லை. இவைகளை முன்வைக்கும் கட்சி, அரை நூற்றாண்டுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சி அனுபவித்ததைப்போல, அதன் ஆதிக்கத்தை மீண்டும் நிறுவும்.
I think Rahul is getting agressive! First time I heard him speak, (What he is around 3years now!!) hahahah!! He is maturing to a decent guy!! Winning /losing part of the game! I think he would get a hang of it as time goes!!
Karnataka has thought one lesson, time to work a NON BJP front and drive BJP Out across India!! BJP would play sect cards like they tried by projecting Yeddy as Lingayaat leader and thought CONG JDS Lingayats wd vote for him ditching Kumarasamy a vokaliga!! Such alliences pre poll would consolidate NON BJP collision from such risky ventures!!
Congress must realise too that it is a small player, and should reconsolidate recapture India slowly one state, one election at a time with this front /local alliance!!! Won’t be easy!! Rahul, I sense is giving more freedom /elbow space to local leaders. (Karnataka was entirely DK Shivakumar Show, he beat Amitshah in his own game, kept MLA in a flock and shepereded them like he did for Vilas Rao Deshmukh and Ahmed Patel as well as Rahul let Legal team do the job with SC)
If all plans work, BJP MUKTH INDIA a distinct possibility like 1984 just 4 seats say in 5-6 years !! I am day dreaming but who can stop me!! hahhah!!!!!! But Remember Without MO(SA)DI BJP is like big 0 like JJ and MGR ADMK Is one. I recollect Isari Velan Saying we are all 0s only MGR is 1-9 and with him b4 us we get value else no value if we are before him!! heheh
Great day for democracy!! SC To be congrautlated too!!!