ஆமா ஜி : வாங்க ஜி என்ன இவ்வளவு லேட்டா வரீங்க
மாமா ஜி : இன்னும் ஓட்டு எண்ண ஆரம்பிக்கலையே ?
ஆமா ஜி : இனி தான் ஜி எண்ணப் போறாங்க, உங்களுக்கு தான் வெயிட்டிங். சரி ஜி, மத்தியில் அமைச்சரவை மாத்துனதுல நம்ம ஸ்ம்ரிதிஜிய இப்படி தூக்கி அடிச்சுட்டாங்களே ஜி
மாமா ஜி : வாய வச்சிட்டு சும்மா இருக்கனும் ஜி , நம்ம தமிழிசை அக்காவ பாருங்க லொட லொடன்னு பேசுவாங்க பட் பச்ச மண்ணு. இந்த அம்மா என்னமோ அவார்ட் எல்லாம் நான் தான் குடுப்பேன்னு தாம் தூம்னு ஒரே அக்கப்போர் பண்ணிருச்சு, அதான் சமயம் பாத்து கழட்டி விட்டுட்டார் மோடி ஜி.
அது மட்டும் இல்லாம அவங்க மோடி ஜி மாதிரியே ஆகணும்னு பாத்தாங்க. அதான் அவருக்கு கோவம் வந்துருச்சு.
ஆமா ஜி : மோடி ஜி மாதிரி ஆக என்ன பண்ணாங்க ?
மாமா ஜி : நெறய்ய விஷயங்களை சொல்ல்லாம் ஜி. மோடி ஜி அரசியலுக்கு வந்து நடிக்க ஆரம்பிச்சாரு. இவங்க வரும்போதே நடிகையாத்தான் வந்தாங்க. மோடி ஜி படிச்சி டிகிரி வாங்காமயே டிகிரி வாங்குனதா ப்ராடுத்தனம் பண்ணாரு. இவங்களும் டெல்லி பல்கலைக்கழகத்துல டிகிரி வாங்குனதா ப்ராடுத்தனம் பண்ணாங்க. அப்புறம் மோடி ஜிக்கு கோவம் வருமா வராதா.
ஆமா ஜி : நியாயமாத்தான் இருக்கு ஜி. அந்த அம்மா எப்படி போனா நமக்கு என்ன ஜி, நாம கௌன்டிங் பாப்போம்
மாமா ஜி : போடுங்க ஜி வெடிய, பாஜக 8 இடத்தில் முன்னிலை காங்கிரஸ் வெறும் 3 தானாம்
ஆமா ஜி : என்ன ஜி அவசரம், போஸ்டல் ஒட்டு தானே எண்ணறாங்க?
மாமா ஜி : போஸ்டல் ஓட்டெல்லாம இப்பவா உக்காந்து எண்ணிட்டு இருப்பாங்க ? அதெல்லாம் நேத்து ராத்திரியே எண்ணியாச்சு. இப்போ மொத ரவுண்டு போய்ட்டு இருக்கு .
ஆமா ஜி : என்ன ஜி சொல்ரீங்க ?
மாமா ஜி : பின்ன நம்ம கிட்டயே சவால் விட்டா, அதான் சித்தராமையா தொகுதி போஸ்டல் ஓட்ட நேத்தே திறந்துட்டோம்.
ஆமா ஜி : எப்படியோ ஜி அப்போ முதல் சுத்துல நாம தான் லீடிங், அதுவரை சந்தோசம் தான்
மாமா ஜி : போக போக பாருங்க ஜி சும்மா எகிறும்.
மணி 10.30. முன்னிலை நிலவரம்
பாஜக 97,
காங்கிரஸ் 51,
ஜனதா தளம் 35
மாமா ஜி : ஐயம் வெரி ஹாப்பி ஜி. என்ன ஆட்டம் ஆடுனாங்க. ஜி உஷாரா இருங்க இந்த JDS ஆளுங்க பக்கத்துல வந்தா உடாதீங்க அப்படியே வந்து ஈஷிக்க பாப்பானுங்க.
ஆமா ஜி : ஜி ஜெயிச்சதும் என் மச்சானுக்கு அந்த கக்கூஸ் காண்ட்ராக்ட் எப்படியாவது ரெடி பண்ணுங்க ஜி
மாமா ஜி : கக்கூஸ் காண்ட்ராக்ட் எல்லாம் ரொம்ப செலவாகும் ஜி, நேத்து நைட் 8 லட்சம் வாங்கிட்டேன், நீங்க ஒரு 5 குடுங்க போதும் நான் உங்களுக்கு பண்ணித்தரேன்
ஆமா ஜி : 5 பண்ணிரலாம் ஜி, இப்போவே அனுப்பறேன் ஜி. வந்திருச்சா பாருங்க. இதுக்குத்தான் மோடி ஜி டிஜிட்டல் பொருளாதாரம் வேணும்னு சொல்றாரு. பாருங்க. டக்குன்னு ட்ரான்ஸ்பர் பண்ணிட்டேன் மொபைல்ல இருந்தே.
மாமா ஜி : வந்திருச்சு, காண்ட்ராக்ட் உங்க மச்சானுக்கு தான். ஜமாய்ங்க
மணி 6.30
முன்னிலை நிலவரம்
பாஜக 100,
காங்கிரஸ் 75,
ஜனதா தளம் 33
ஆமா ஜி : ஜி அங்க பாருங்க நம்ம தர்மயுத்தம் மோடி ஜிக்கு வாழ்த்து அனுப்பிருக்கார். ஆமா அது என்னமோ பெல்வெதர்னு போட்ருக்காரே என்ன ஜி அப்படின்னா ?
மாமா ஜி : வேலுமணி மற்றும் தங்கமணி அமைச்சரவையில இருக்காங்கள்ல ? அவங்க சார்பாவும் வாழ்த்து சொல்றாரு. அதைத்தான் பெல்வெதர்னு சொல்றாரு.
ஆமா ஜி : பெல் ஓகே. வெதர்னு சொல்லிருக்காரே ஜி.
மாமா ஜி : ஓ.. மறந்துட்டேன். உங்ளுக்கு இங்கிலீஷ் தெரியாதுல்ல. வெதர்னா இங்கிலீஷ்ல சந்தேகத்தோட கேள்வி கேக்கற பொருள் வரும். ஒரு வேளை ஜெயிச்சா ன்னு மீனிங் வர்ற மாதிரி வெதர்ன்ற வார்த்தையையும் சேத்துருக்கார். பன்னீரை குறைச்சு மதிப்பிட முடியாது ஜி. அவரும் நம்ப மோடி மாதிரியே வருவாரு.
ஆமா ஜி : எப்படி ஜி மோடி மாதிரியே வருவாரு ?
மாமா ஜி : எல்லாத்தையும் உங்களுக்கு விளக்கணும் ஜி. பன்னீரும் டீக்கடைதான் வச்சிருந்தாரு. மோடியும் டீ வித்தவரு. பன்னீரு அரசியலுக்கு வந்த்தும் பெரிய அமாவாசையா உருவானாரு. மோடி எப்படிப்பட்ட அமாவாசைன்னுதான் நீங்களே பாக்கறீங்களே.
கொஞ்சம் பேசாம இருங்க ஜி, JDS காங்கிரஸ் கூட்டணினு செய்தி வருது
ஆமா ஜி : ஜி என்ன ஜி சொல்றீங்க, அப்போ அவ்வளோ தானா. நான் வேற ஏகத்துக்கு facebookல ஸ்டேட்டஸ் போட்டுட்டனே, இப்போ அவனவுக கூப்பிடுவானுகளே. வச்சு ஒரு வாரத்துக்கு கும்முவானுங்களே.
சரி அத விடுங்க கொஞ்ச நாள் அக்கௌன்ட்ட க்ளோஸ் பண்ணிரலாம். ஜி அந்த 5 திரும்ப அனுப்புங்க
மாமா ஜி : திரும்ப அனுப்பறதா? நான் என்ன பேங்க் நடத்தரனா காலைல போட்டுட்டு சாயந்தரம் எடுக்கறதுக்கு. கட்சி நிதி ஜி அது, அப்போவே எடியூரப்பா ஜிக்கு அனுப்பியாச்சு
ஆமா ஜி : அந்த ஆளே ஒரு ஓரமா உக்காந்து அழுதுட்டு இருக்காரு அவருக்கு எதுக்கு ஜி அனுப்பினீங்க?
மாமா ஜி : பதறாதீங்க ஜி, அமித் ஜி வந்தா 5 நிமிசத்துல பூரா MLA வையும் விலைக்கு வாங்கிருவாரு. நைட்டே பதவி பிரமாணம் முடிஞ்சிடும்
ஆமா ஜி : அமித் ஜி வர வரைக்கும் பாடி தாங்குமா? 75 வயசு ஆச்சு BP பேசேன்ட் வேற ஜி அவரு
மாமா ஜி : பாருங்க பைனல் ரிசல்ட் வந்தாச்சு
பாஜக 104,
காங்கிரஸ் 78,
JDS 37,
மற்றவை 3.
ஆமா ஜி : அய்யையோ அய்யையோ
மாமா ஜி : என்ன ஜி சின்ன புள்ள தனமா அழுதுட்டு, மேகாலயாவில் நாம ஜெய்த்ததே 2 சீட் தான், ஆட்சி அமைக்க தேவை 31 இடம். அங்கயே நாம ஆட்சியை பிடிக்கலையா ? இந்த லிஸ்ட பாத்து மனச தேத்துங்க
ஆமா ஜி : இப்போ தான் ஜி மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு.
மாமா ஜி : நீங்க இன்னைக்கு போய் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க நாளைக்கு பேசிக்கலாம்
ஆமா ஜி : சரி ஜி நான் போய்ட்டு வரேன்
மறுநாள்
மாமா ஜி : வாங்க ஜி, என்ன கண்ணு எல்லாம் செவந்து இருக்கு தூங்கலையா?
ஆமா ஜி : நம்ம நேத்து காலையில் கொஞ்சம் ஓவரா தான் ஆடிட்டோம் போல ஜி, நைட் மட்டும் ஒரு 1200 மீம்ல டேக் பண்ணி விட்டுட்டானுக. அத பாத்தா எப்படி தூக்கம் வரும் ?
மாமா ஜி : அட என்ன ஜி நீங்க? நம்ம கட்சிக்கு வந்ததுக்கு அப்பறம் செருப்படி, சாணி அடி எல்லாம் விழத்தான் செய்யும், தொடச்சு போட்டுட்டு போவீங்களா. இப்போ ரொம்ப சகிக்க முடியாத மாதிரி எவனாவது திட்டிட்டானு வைங்க, உடனே நம்ம ராஜா ஜி போட்ட பதிவுக்கு கமெண்டை போய் பாருங்க. நம்மெல்லாம் எவ்வளவோ பரவாயில்லைனு ஒரு பீல் வரும், அப்படியே இருந்திடனும்.
ஆமா ஜி : நீங்க சொல்றதும் சரி தான் ஜி. எதாவது நல்ல விஷயம் இருக்கா?
மாமா ஜி : இருக்கு ஜி, ஆளுக்கு 100 கோடி குடுத்து 10 MLAவ தூக்கறதுனு தலைமை முடிவு பண்ணியாச்சு ஜி
ஆமா ஜி : ஆளுக்கு 100 கோடினா, 1000 கோடி வேணுமே. என்னோட 5 லட்சத்தை அதுக்கு யூஸ் பண்ணிராதீங்க ஜி.
மாமா ஜி : ஆமாம் உங்க கக்கூஸ் காண்ட்ராக்ட் கமிஷன் பணத்தை வச்சு தான் 4 MLAவ வாங்க போறோம், ஏன் ஜி நீங்க வேற.
ஆமா ஜி : அப்பறம் எப்படி? பணமதிப்பிழப்புக்கு அப்பறம் தான் எல்லா கருப்பு பணமும் ஒழிஞ்சிடுச்சே அப்பறம் காசுக்கு நாம எங்க போறது?
மாமா ஜி : கருப்பு பணம் ஒழிஞ்சிடுச்சு உண்மை தான், யாருகிட்ட? மக்கள் கிட்ட ஒழிஞ்சிடுச்சு. அத எல்லாத்தையும் தான் நாம உருவிட்டோமே. இந்த மக்கள் கிட்ட அது இருந்தா பாரின் போறேன் , கார் வாங்கறேன்னு தண்ட செலவு செய்வானுக ஜி. பாருங்க நம்ம கிட்ட இருந்தா ஒரு அரசாங்கத்தை உருவாக்கலாம்.
ஆமா ஜி : கருப்பு பணம் கூட இருக்கறவன் கிட்ட இருந்தா தான் மதிப்பு.
சரி ஜி நாம கோவா, மணிப்பூர்ல எல்லாம் எவ்வளவு கொடுத்தோம் ?
மாமா ஜி : அங்க 5, 10னு குடுத்தோம்
ஆமா ஜி : அப்போ இங்க 100 குடுத்தா அவங்க சண்டைக்கு வரமாட்டாங்க ?
மாமா ஜி : வரட்டும், வந்து என்ன ஆட்சிய கலைச்சிடுவானுகளா? இப்போ தமிழ்நாட பாருங்க, எடுபுடிக்கு எவ்வளவு MLA சப்போர்ட் இருக்குனு அவருக்கும் தெரியாது, கவர்னருக்கும் தெரியாது. இப்போ ஆட்சி கலஞ்சிடுச்சா என்ன?
ஆமா ஜி : அதுவும் சரி தான். இந்த கவர்னர் வாயே திறக்க மாட்டேன்றாரே ஜி
மாமா ஜி : ராகு காலம் ஜி. ஒன்னும் பேசப்பிடாது
ஆமா ஜி : இந்த காங்கிரஸ் MLA எல்லாம் கூவத்தூர் போயிருவங்களோ ?
மாமா ஜி : அங்க மட்டும் போக மாட்டாங்க. அப்பறம் அலேக்கா அம்புட்டு MLAவையும் தூக்கி தினகரன் ஆட்சி அமைக்க உரிமை கோருவார். அதனால வேற எங்கயாவது தான் போவாங்க, சிபிஐ, IT எல்லாம் நம்ம கிட்ட தானே ஜி இருக்கு. பாத்துக்கலாம்
ஆமா ஜி : ஜி ட்விட்டர் பாருங்க நாளைக்கு காலையில் பதவி ஏற்பாம்
மாமா ஜி : fake நியூஸா இருக்கும் ஜி, நியூஸ்ல கூட வரல
ஆமா ஜி : ஜி நம்ம ஆளுங்க தான் போட்டிருக்காங்க பாருங்க
மாமா ஜி : அட ஆமா, இப்போ பாருங்க ஜி டெலீட் பன்னிட்டாங்க. நம்மாளுங்க அவசரக் குடுக்கைங்க, இப்போ தான் நியூஸ்ல சொல்ராங்க பாருங்க.
ஆமா ஜி : என்ன ஜி நடக்குது?
மாமா ஜி : எல்லாம் நல்ல படியா நடக்குது ஜி, நாம சொல்றது தான் கவர்னர் செய்யறாரு. பாருங்க நம்மளே பெரும்பான்மை நிரூபிக்க 2 நாள் போதும்னு தான் கேட்டோம், அவர் பெருந்தன்மையா 15 நாள் குடுத்துட்டார்.
ஆமா ஜி : ஜி பாருங்க பாருங்க, காங்கிரஸ் சுப்ரீம் கோர்ட்டுக்கு போறாங்களாம்
மாமா ஜி : இந்நேரத்துக்கு மேல வாசல் வரைக்கும் வேனா போகலாம், உள்ள எல்லாம் போக முடியாது ஜி. நம்ப ஆளு இந்நேரம் சீரியல் பாத்துக்கிட்டு இருப்பாரு. அதனால கேட்டை திறக்கக் கூடாதுன்னு சொல்லிடுவாரு.
ஆமா ஜி : யாரு ஜி நம்ப ஆளு ?
மாமா ஜி : என்ன ஜி நீங்க. ஜெயிலுக்கு போறதுல இருந்து காப்பாத்தி ஒருத்த வைச்சிருக்கோம். என்ன சொன்னாலும் கேப்பாரு. அவருதான் நம்ப மிஸ்ரா ஜி.
ஆமா ஜி : அட ஆமாங்க. அவரும் ஜி தான் இல்ல. ஆனா என்ன ஜி, நைட்டோட நைட்டா பெட்டிசனை விசாரிக்கிறேன்னு ஒத்துக்கிட்டாரு ? அதுவும் விசாரிக்கிற ஜட்ஜ் முஸ்லீமா இருப்பாரோன்னு சந்தேகமா இருக்கு ஜி.
மாமா ஜி : இருங்க ஜி எனக்கே வயித்த கலக்குது.
ஆமா ஜி : வயித்த கலக்குதுனு சொல்லும் போது தான் நியாபகம் வருது அந்த 5 குடுத்துடுங்க ஜி
மாமா ஜி : கம்முனு இருங்க ஜி சும்மா நய நயனு. போச்சு போச்சு நாளைக்கு பதவி வேணும்னா ஏத்துகிட்டும் ஆனா பெரும்பான்மை ஒரு நாளில் நிரூபிக்கணும்னு தீர்ப்பு சொல்லிட்டாரே.
ஆமா ஜி : ஜி. நான் நினைச்சது மாதிரியேதான் நடந்துருக்கு. அந்த நீதிபதியில ஒருத்தர் பேரு ஏகே.சிக்ரி. முழு பேரு அப்துல் காதர் சிக்ரி. சந்தேகமே இல்ல. இது பாகிஸ்தான் வேலைதான்.
மாமா ஜி : அவரு உண்மையான பேரு அர்ஜன் குமார் சிக்ரி. பட் உங்க க்ரியேட்டிவிட்டி, ரொம்ப நல்லா இருக்கு. அவரு பேரு அப்துல் காதர் சிக்ரின்னு வாட்ஸப், பேஸ் புக்கு எல்லாத்துலயும் போட்டு விடுங்க. இப்போ என்ன ஜி பண்றது ?
ஆமா ஜி : என்ன ஜி நீங்களே கலங்கரேள்
மாமா ஜி : ஒன்னும் பயம் இல்ல ஜி, ஒருநாள் முதல்வர் மாதிரி அதிரடியா ஏதாவது பண்ணுவார் பாருங்க
மறுநாள் பதவியேற்பு நடந்து முடிகிறது.
ஆமா ஜி : ஜி கோலாகலாமா நடக்க வேண்டிய பதவி ஏற்பு இப்படி 5 நிமிசத்துல முடிஞ்சிடுச்சே
மாமா ஜி : முதல் கையெழுத்து விவசாய கடன் தள்ளுபடி அடிச்சாரு பாருங்க முதல் பாலில் சிக்ஸர்
ஆமா ஜி : நல்ல பாருங்க ஜி அது விவசாய கடனா இல்ல விஜய் மல்லையா கடனான்னு
மாமா ஜி : உங்களுக்கு எல்லாமே சந்தேகம் தான். எப்படியும் ஒரு 8 MLA வ தூக்கிட்டா பிரச்னை இல்லாம ஒட்டிடலாம் பாப்போம் அமித் ஜி என்ன செய்யறாருனு.
ஆமா ஜி : ஜி, இன்னைக்கு வாக்கெடுப்பு என்ன பண்ண போறோம்
மாமா ஜி : மாஸ்டர் பிளான் ஜி, 6 MLAவை தூக்கியாச்சு அதுவும் இல்லாம சபாநாயகர யாரை உக்கார வச்சிருக்கோம் பாருங்க
ஆமா ஜி : யாரு ஜி அவரு போபையா
மாமா ஜி : வெயிட்டு கை ஜி அவரு, போன வாட்டி இதே மாதிரி நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது அசால்ட்டா 15 பேர தகுதி நீக்கம் செஞ்சு சுப்ரீம் கோர்ட் கையால செருப்படி வாங்கினவரு
ஆமா ஜி : ஓ அப்போ பெரிய கை தான்
மாமா ஜி : இன்னைக்கு பாருங்க எதிர்க்கட்சி காரன் வயிறு சரி இல்லனு ஒரு ர்ர் உட்டா கூட சட்டசபை மாண்பை கெடுத்துட்டார்னு சொல்லி அவரையும் , அவர் தான் ர்ர் உட்டார்னு தன்னோட கவனத்துக்கு கொண்டு வர தவறிட்டாங்கனு இன்னும் ஒரு 10 பேர தகுதி நீக்கம் செஞ்சு விட்டுடுவார்
ஆமா ஜி : இப்போ நம்பிக்கை வந்திடுச்சு ஜி , அந்த 5 உங்க கிட்டயே இருக்கட்டும்
மாமா ஜி : எல்லாம் ஓகே தான் இந்த சிவகுமாரை நெனச்சா தான் யோசனையா இருக்கு
ஆமா ஜி : என்ன ஜி அவரெல்லாம் ஒரு மேட்டர்னு பேசிட்டு.
மாமா ஜி : பரவாயில்லையே உங்களுக்கு அவரை பத்தி தெரியுமா ஜி
ஆமா ஜி : என்ன ஜி அவரை தெரியாதா? மூச்சு விடாம மஹாபாரதம் கதை சொல்லுவாரே. நாம கூட நம்ப கட்சியோட கவுண்டர் பிரிவு தலைவராக்கலாம்னு பேசுனோமே. அந்த சிவக்குமார்தானே ஜி.
மாமா ஜி : ஜி நீங்க மக்களை தியேட்டரை விட்டு ஓட விடுறவரை பத்தி சொல்ரீங்க/ நான் நம்ம அமித் பாய ஓட விடறவரை பத்தி பேசறேன். விலாசராவ் தேஷ்முக் , அஹமத் பட்டேல் மொதக் கொண்டு எல்லாரையும் காப்பாத்தி விட்டவாறு
ஆமா ஜி : இது தெரியாது ஜி எனக்கு, நியூசை பாருங்க ஜி நம்ம ஆளுங்க காங்கிரஸ் JDS MLA கூட பேசின ஆடியோவை ரிலீஸ் பண்றாங்க .
மாமா ஜி : என்ன டேப்பு ஜி. ஒழுங்கா கேட்டீங்களா. நம்ப ஆளுங்க மகளிர் அணி கூட போன்ல ஜல்சா பண்ண டேப்பா. அது மாதிரி டேப்பு ஆயிரக்கணக்குல இருக்கே ஜி. வீடியோவை வெளியிட்டா ஒரு மாசத்தக்கு வெளியிடலாமே ஜி.
ஆமா ஜி : இல்ல ஜி. இது எம்எல்ஏவுக்கு பணம் குடுக்கறதா பேசுன ஆடியோ ஜி.
மாமா ஜி : அவனுக எத வேணும்னாலும் ரிலீஸ் பண்ணலாம் ஜி, எல்லாம் அமித் ஜி பாத்துப்பாரு. நீங்க வேணும்னா பாருங்க காங்கிரஸ் கூடவே தான் எல்லா MLAவும் இருப்பாங்க ஆனா சம்பந்தமே இல்லாம பிரச்சனை பண்ணி வெளிய போய்டுவாங்க பாருங்க
ஆமா ஜி : ஜி அங்க பாருங்க எல்லாம் வந்துட்டாங்க இன்னும் 10 நிமிசத்துல வோட்டிங் ஆரம்பிச்சிடும்
மாமா ஜி : அங்க பாருங்க ஜி எடியூரப்பா பேச ஆரம்பிக்கறார், அவர் உரைய கேட்டு எதிர் கட்சிக்காரன் பூரா நமக்கு ஓட்டு போட போறான். இந்த தடவ மோடிஜிக்கு ஸ்கிரிப்ட் எழுதி தர்றவன் தான் இவருக்கும் எழுதி கொடுத்திருக்கான்
ஆமா ஜி : என்ன ஜி அழுகற மாதிரி தெரியுது ?
மாமா ஜி : இருங்க ஜி மோடி ஜியும் எதுவும் வேலைக்கு ஆகலேன்னா அழுது ஓட்டு கேப்பாரு அதே மாதிரி தான் போல. கன்னடத்துல வேற பேசறாரா ஒன்னும் புரிய மாட்டேங்குது
ஆமா ஜி : ஜி அங்க பாருங்க தேசிய கீதம் போடறாங்க எடியூரப்பா ஜி அழுதுட்டே வெளிய போறாரு
மாமா ஜி : ஆமா ஜி ஆமா, மோசம் போய்ட்டோம் ஜி அந்த ஆளு ராஜினாமா பண்ணிட்டாரு.
ஆமா ஜி : இப்போ என்ன ஜி பண்றது ?
மாமா ஜி : எடியூரப்பாவுக்கு தார்மீக வெற்றி. அவர் நேர்மையானவரா இருந்த்தாலதான் ஆட்சியே வேணாம்னு ராஜினாம பண்ணிட்டாரு. ஆனா காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி அமைச்சிருக்குன்னு சொல்லுங்க ஜி.
ஆமா ஜி : இதை நாம சொன்னா நம்ப மாட்டாங்களே ஜி.
மாமா ஜி : நாம மட்டும் சொல்லக் கூடாது. நடுநிலையாளர்கள்னு டிவியில பேசறதுக்குதான் நாம நம்ப சுமந்த் ஜி, பானு கோம்ஸ் ஜியெல்லாம் வச்சிருக்கோமே. அவங்க அடிச்சு பொளந்து கட்டுவாங்க ஜி.
ஆமா ஜி : அப்போ என்னோட கக்கூஸ் காண்ட்ராக்ட்டு ? அமித் ஜி பாத்துப்பாரு அமித் ஜி பாத்துப்பாரு சொன்னீங்களே ஜி. அவரு டிவிதான் பாத்துக்கிட்டு இருக்காரு. வேற எதையும் பாக்கல ஜி. அந்த 5 லட்சத்தை திருப்பிக் கொடுங்க ஜி.
மாமா ஜி : ஜி. அந்த பணத்தை நீங்க எனக்கு குடுக்கல. தேஷத்தோட வளர்ச்சிக்காக குடுத்துருக்கீங்க ஜி. அதுக்காக நீங்க பெருமைப் படணும்.
ஆமா ஜி : யோவ். துட்டை எடுத்து வைய்யா. என்னய்யா என்கிட்டயே கதை விடுற ?
மாமா ஜி : என்ன ஜி மரியாதை இல்லாம பேசறீங்க.
ஆமா ஜி : பின்ன என்னய்யா பணத்தை கேட்டா, தேஷத்தோட வளர்ச்சி, தேசியத்தோட வளர்ச்சின்னு கதை விடுற.
மாமா ஜி : அங்க பாருங்க ஜி. நேத்து நீங்க போட்ட ஃபேஸ்புக்கு போஸ்ட்டெல்லாம் பாத்துட்டு உங்களை அடிக்க கூட்டமா வர்றாங்க. ஓடுங்க ஜி. மத்ததை அப்புறம் பேசிக்கலாம்.
இருவரும் தலை தெறிக்க ஓடுகிறார்கள்.