கர்நாடக முதலமைச்சாராக இரண்டு நாட்கள் மட்டுமே நீடித்த, அனேகமாக அவரது கடைசி இன்னிங்ஸான முதல்வர் பதவியை தொடர்ந்து, பாஜகவின் “மார்க்தர்ஷக் மண்டல்“ எனப்படும் முதியோர் இல்லத்தை நோக்கி செல்கிறார்.
எந்தெவொரு ஸ்கிரிப்டோ அல்லது ஆதரவோ இல்லாமல் ஒரு கதாபாத்திரமாக நடிக்க நாடக மேடையில் தள்ளப்பட்ட எடியூரப்பா, உண்மையில், தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் கட்டுப்படுத்தப்படும் நரேந்திர மோடி – அமித் ஷா இரட்டையரின் பகடைக்காய். அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜக தலைவர்கள் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏக்களை லஞ்சம் கொடுத்தும், மிரட்டியும் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்தது ஆடியோ பதிவுகளாக வெளியாகி ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு பகிரங்கமாக தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
மோடி மற்றும் ஷாவின் முகங்களில் பூசப்பட்ட கரியை துடைக்க, காவிகளின் ஊதுகுழலாக உள்ள முக்கிய பத்திரிக்கையாளர்களால் விரிவான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சட்டப்பேரவையில் எடியூரப்பாவின் வெளிப்படையான தியாகச் செயலைக் கண்டு யாரும் ஏமாந்து விடக்கூடாது.
போதுமான எண்ணிக்கை இல்லாதபோதும் சட்டப்பேரவையில் பலத்தை நிரூபிக்கும் சோதனைக்கு அமித் ஷா-தான வற்புறுத்தினார் என “த ஒயர்“ இணைய தளத்துக்கு ஆதாரப்புர்வமான தகவல்கள் தெரிவித்தன. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மூலமாக ஆர்.எஸ்.எஸ் தலையிட்ட பின்னரே, நிச்சயமான தோல்வி என்ற தர்மசங்கடத்திலிருந்து எடியூரப்பா காப்பாற்றப்பட்டார்.
கடந்த சில நாட்களாக ஷாவின் முழு அளவிலான கோபத்தை எடியூரப்பா தாங்க வேண்டியிருந்ததாக பாஜக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சராக தன்னுடைய இன்னிங்ஸ் தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தன்னுடைய பிரியாவிடை(farewell speech) உரையில் மோடி மற்றும் அமித் ஷாவை அடிக்கடி குறிப்பிட்டதன் மூலம் இந்த தோல்விக்கு உண்மையிலேயே யார் காரணம் என்பதை பாஜக தொண்டர்களுக்கு நினைவுபடுத்தியது போல் இருந்தது.
” மோடியும், அமித் ஷாவும் மக்களை அவமானப் படுத்துகின்றனர். அவர்களிடம் எடியூரப்பா வேறு எதை எதிர்பார்த்தார் ?,“ என்கிறார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு மூத்த பாஜக தலைவர். இவர் தற்போது நாம் முன்னர் குறிப்பிட்ட மார்கதர்ஷக் மண்டலில் இருக்கிறார்.
தேர்தல் ஆண்டில் இதன் தாக்கம்
தற்போதைய அரசியல் சூழலில், கர்நாடகாவில் நடைபெற்ற சம்பவங்கள் எதை உணர்த்துகிறது ?
போரில் Take No Prisoners என்று ஒரு பதம் உண்டு. அதாவது போரில் எதிரி நாடு தோல்வியுற்றால், சரணடைபவர்களை போர்க் கைதிகளாக கைது செய்வதற்கு பதிலாக, அனைவரையும் சுட்டுக் கொல்வது. இதே அணுகுமுறையைத்தான் பாஜக கடைபிடிக்கிறது. பாஜகவின் இந்த அணுகுமுறையை, தற்போது ஒன்றுபடவில்லை என்றால் அழியவேண்டியதுதான் என்பதை எதிர்க்கட்சிகள் புரிந்துகொண்டன. இந்த புரிதல்தான் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் என்ற புதிய கூட்டணிக்கு அடிப்படை. மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் தேர்தலுக்கு முன்னரே கூட்டணி வைத்திருந்தால் இந்த கூட்டணி பாஜகவை வீழ்த்தி, மாநிலத்தில் அனைத்து தொகுதிகளிலும் வென்றிருக்கும் என்பதை காங்கிரஸ் நிர்வாகிகள் அறிவர்.
தனது மந்தையை (எம்.எல்.ஏக்களை) பாதுகாக்கவும், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளை ஒன்றுபடுத்தவும் ராகுல் காந்தி மேற்கொண்ட கடுமையான போராட்டம் ஒரு த்ரில்லர் படம்போல் விரிந்தது – உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை நள்ளிரவில் தட்டியதுடன் நிறைவடைந்தது.
குஜராத் அரசியல்வாதிகளில் மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக பொறுப்பேற்றபின்னர் தனது ராஜ்கோட் தொகுதியை அவருக்கு விட்டுக்கொடுத்து ஒதுங்கியவருமான கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா பாஜகவுக்கு தனது பெரும்பான்மையை நிரூபிக்க, காட்ட வியக்கத்தக்க வகையில் 15 நாள் கால அவகாசம் கொடுத்தார். இதை எதிர்த்த காங்கிரஸின் சட்டப் போராட்டம் மிக முக்கியமானது. ஏனெனில், எம்.எல்.ஏக்களை விலை கொடுத்து வாங்குவதற்கு ஷா மற்றும் சுரங்க பிரபுக்களுக்கு போதுமான அவகாசம் இல்லாமல் போகும்படி பெரும்பான்மையை இரண்டு நாட்களில் நிரூபிக்க பாஜகவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட காங்கிரஸின் சட்டப் போராட்டம் காரணமாக இருந்த்து.
தேர்தலில் கர்நாடகாவைத் தக்கவைக்கத் தவறிய பின்னடைவுக்குப் பின்னர், ராகுல் காந்தி தனது அரசியல் சாதுர்யங்களை விரைவாக மீட்டார். ஒரு தீவிரமான போரில், காங்கிரஸ் மந்தையை (எம்.எல்.ஏக்களை) ஒன்றாக பாதுகாக்க நம்பகமான மூத்த தலைவர்கள் அசோக் கெலாட் மற்றும் குலாம் நபி ஆஸாத் ஆகியோரை அனுப்பினார். அதே சமயம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைப்பாளரான சோனியா காந்தி மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் எச்.டி.தேவெ கௌடாவை தொடர்பு கொண்டு பேசினார். காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேல் ராஜ்ய சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது இதேபோன்ற ஷா மற்றும் மோடி –யின் ஆள்பிடிக்கும் முயற்சியை எதிர்த்து முறியடித்த காங்கிரஸின் ட்ரம்ப் கார்டான டி.கே.சிவக்குமாரை இதில் இணைத்தது மற்றொரு சாதுர்யமான நடவடிக்கை.
எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றபோதும், காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏக்கள் எதிரணிக்கு தாவவில்லை என்ற உண்மை அமித் ஷா மற்றும் மோடிக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கும். இது குறித்து பேசிய ஒரு பாஜக தலைவர், “இதர கட்சிகளுக்கு நாங்கள் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் கட்சி போல ஆகி விட்டோம். மற்ற கட்சிகள் எங்களை கண்டு விலகி ஓடுகின்றனர். அமித் ஷா, வரம்பற்ற வகையில் தன் அனைத்து சக்திகளையும் பிரயோகித்தார். மத்திய புலனாய்வு அமைப்புகள், எம்எல்ஏக்களை மிரட்டவும் பயன்படுத்தப்பட்டன. இத்தனைக்கு பின்னரும், ஒரு சிறிய பிராந்திய கட்சி இந்த மிரட்டல்களுக்கு பயப்படவில்லை” என்கிறார்.
பலவீனமான மிரட்டல் உத்தி
2019ம் ஆண்டின் பெரிய போருக்கு, தேர்தல் காலத்துக்கு இன்னும் சுமார் 12 மாதங்களே உள்ள நிலையில் கர்நாடக பின்னடைவு மிகவும் முக்கியமானது. தோழமைக் கட்சிகள் இல்லாததால் பாஜகவுக்கு அனைத்து வகையான சிக்கல்களும் ஏற்படும். கர்நாடகாவுக்கான அவர்களது அவசர முயற்சியில், மோடியும், ஷாவும் தெரியாத்தனமாக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையையும் உறுதி செய்துள்ளனர்.
எச்.டி.குமாரசாமியின் பதிவியேற்புஎதிர்க்கட்சிகளின் வருகைதான் புதிய கூட்டணி அரசியலின் வெளிப்பாடுகளில் ஒன்றாக இருக்கும் என்கிறார் கர்நாடக பேச்சுவார்த்தையில் பங்கேற்ற ஒரு காங்கிரஸ் தலைவர். மாயாவதி, அகிலேஷ் யாதவ், சரத் பவார், சீத்தாராம் யெச்சூரி, ராகுல் காந்தி மமதா பானர்ஜி மற்றும் தேஜாஸ்வி யாதவ ஆகிய அனைவரும் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் அதிகாரத்தை கைப்பற்ற மோடி-ஷா ஆகியோரின் அருவருக்கத்தக்க முயற்சிகள், இதற்கு முன் எதிர்க்கட்சிகளிடையே இருந்த முந்தைய வேறுபாடுகளை களைந்துள்ளது.
மோடியும் அமித் ஷாவும் மனம் திருந்தாத நிலையில், இது 2019ம் ஆண்டு பொதுத் தேர்தலில் என்னவாகும் என மூத்த பாஜக தலைவர்களும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளும் இப்போது கவலையடைந்துள்ளனர். ஊடகங்களில் பாஜக குறித்து நல்ல செய்திகளை வர வைப்பதன் மூலம் இந்த சிக்கலில் இருந்து பாஜகவை காப்பாற்ற முடியும் என்று அவர்கள் நம்புவதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயினும், அமித் ஷா இப்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் சிக்கலில் உள்ளார். அமித் ஷாவுக்கு பதிலாக ராஜ்நாத் சிங்தான் பாஜக தலைவராக வேண்டும் என அக்கட்சியில் பெரும்பாலோர் விரும்பிய நிலையில், கர்நாடகா எப்படி விரிவடைகிறது என்பதை பார்ப்போம் என மூன்று கூட்டங்களில் அமித் ஷாவிடம் ஆர்.எஸ்.எஸ் தெரிவித்திருந்தது. ஷா வெற்றிப் பயணத்தில் இருந்த போது, அவருக்கெதிரான குரல்கள் அமைதியாயின. ஆனால் இப்போது, சனிக்கிழமை தோல்விக்குப் பிறகு, சில கிளர்ச்சிக் குரல்கள் வலுக்கும்.
கர்நாடகவில் 31 பொதுக்கூட்டங்களில் பேசி சாதனை புரிந்த மோடியால், பாஜகவை தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கச் செய்த பெருமை இருந்தாலும், அங்கு “மோடி அலை“யை உருவாக்க முடியவில்லை. ஊழல் தொடர்பாக அக்கட்சி செய்து கொண்ட சமரசம், கறைபடிந்த பல்லாரி சுரங்க பிரபுக்களின் ஆதரவு ஆகியவை ஊழலுக்கு எதிரான கட்சி என்ற அதன் பிம்பத்தை உடைக்கும். இது ஆர்.எஸ்.எஸ் சுட்டிக்காட்டிய ஒன்று. அமித் ஷாவுக்கு பிடித்த பொதுச் செயலாளர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் வழிமொழியப்பட்ட முரளிதர் ராவின் லஞ்ச பேர ஆடியோ பதிவு ஆர்.எஸ்.எஸ்-ல் பேசும் பொருளாகும்.
வளைந்து கொடுக்கும் ஊடகத்தால் பாராட்டப்பட்ட ஷா மற்றும் மோடியின் “சாணக்ய நிதி“ மற்றும் “மாஸ்டர் ஸ்ட்ரோக்ஸ்“, ஆகிய தந்திரங்களே, அனைத்து கட்சிகளும் பாஜகவை அவநம்பிக்கையோடு பார்ப்பதை உறுதி செய்தன.
மோடியின் பிம்பம் அடித்து நொறுக்கப்படுகையில், அதன் ஒரு விளைவாக ராகுல் காந்தியின் செல்வாக்கு உயர்வது தவிர்க்க முடியாதது. எடியூரப்பாவின் ராஜினாமாவுக்குப் பின்னர் பத்திரிகைகளுக்கு தெரிவித்த அவரது கருத்துகளில் பிரதமர் மோடி மீது நேரடியாக குற்றச்சாட்டுகளை சுமத்தினார். நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விதான் சௌதாவுக்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது அவர்களுடன் ராகுல் காந்தி பேசினார் என்ற உண்மையை காங்கிரஸ் மேலாளர்கள் பெருமையாகப் பேசுகின்றனர். ”இறுதியாக அவர் (ராகுல் காந்தி” யதார்த்த நிலைமையை புரிந்து கொண்டே ஆக வேண்டும் என்பதை கர்நாடக தேர்தல் உறுதி செய்துள்ளது,” என்கிறார் ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர்.
தன்னுடைய கட்சி சார்பில் கர்நாடகாவில் ஒரே ஒரு எம்.எல்.ஏவைக் கொண்டுள்ள மாயாவதி தனக்கு நம்பகமான உதவியாரை அனுப்பிவைத்து அந்த ஒரு எம்.எல்.ஏவும் வேட்டையாடப்படவில்லை என்பதை உறுதி செய்ததோடு, அஹமத் படேலுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். தேவெ கௌடா தன்னுடைய மனதை மாற்றிவிடக் கூடாது என்பதை உறுதி செய்ய அவருடனும் தொடர்பு கொண்டு பேசினார்.
எதிர்த் தரப்பு அதன் ஒற்றுமை குறியீட்டைப் பெறுகிறது என்பதையே கர்நாடகாவில் நடக்கும் சம்பவங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. உண்மையில் எதிர்க்கட்சிகளுக்கு வேறு வழியே இல்லை. மோடி மற்றும் ஷா ஆகியோர் வெல்ல முடியாதவர்கள் அல்ல என்றும், 2019ம் ஆண்டின் பொதுத் தேர்தல் மோடியும் அமித் ஷாவும் காட்டியிருந்தபடி அவ்வளவு சுலபமான வெற்றியாக இருக்காது என்றும் கர்நாடகா நிரூபித்துள்ளது.
ஸ்வாதி சதுர்வேதி
Savukku pakka biased towards Congress and DMK, BJP has got public mandate of 104 seats … Did people of Karnataka Chose Congress over BJP? Wake up Savukku…… I thought Savukku is not partial in reporting, but you too savukku?
Makkal theerpe mahesan theerpu…. I agree with Venkat, pinnadivu illai
Dear Shankar, The translation is so good that I realized only when I saw the last line – that is translated. Very well done. I realise that you have taken this from The Wire. What is the process for getting permission from wire for translation of an article? I am starting a website which is dedicated to keep all data and write-ups against NEET. It is called http://www.tn-neet.com. This will start functioning in the next 10 days. Request your help in this. There is an article by Neelakantan with data in the wire
Mr bala ,
Are you the educationalist participating in the TV channels debates !?
104 idankalil vetripetrathai pinnadaivaaka karutha mudiyaathu!