“அனைத்து எம்எல்ஏக்களும் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும். ஆனால் எம்எல்ஏக்களை காங்கிரஸ் பயமுறுத்தி வைத்துள்ளார்கள். எம்எல்ஏக்கள் தங்கள் குடும்பத்தினரிடம் தெலைபேசியில் கூட பேச அனுமதிக்கப்பட வில்லை. உங்கள் எம்எல்ஏக்கள் மீது உங்களுக்கு இந்த அளவுக்கு கூட நம்பிக்கை இல்லை.
2019 தேர்தலில் பிஜேபி 28 இடங்களையும் வெல்லும். என் வாழ்வை நான் விவசாயிகளுக்காக அர்ப்பணித்து, என் வாழ்நாளின் இறுதி வரை வாழ விரும்புகிறேன். இந்த வார்த்தைகளோடு நான் என் ராஜினாமாவை சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளேன்.”
இன்று எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பை வாபஸ் பெறும் முன்னர் பேசிய வார்த்தைகள். அவ்வப்போது கண்ணீரும் விட்டார். முதலைக் கண்ணீர் என்பதற்கு சரியான உதாரணம் இதுதான்.
1967ம் ஆண்டில் ஒரு ரைஸ் மில்லில் க்ளர்க்காகத்தான் எடியூரப்பா தன் வாழ்வை தொடங்கினார்.
கர்நாடக சமூக நலத்துறையில் ஒரு சாதாரண க்ளரக்காகத்தான் எடியூரப்பாவின் பயணம் தொடங்கியது. ஷிகாரிபுராவின் ஆர்எஸ்எஸ் செயலாளராக சேர்ந்த எடியூரப்பா, 1972ம் ஆண்டில் ஜன் சங்கத்தில் (பிஜேபியின் முந்தைய அவதாரம்) சேர்ந்தார். 1983ம் ஆண்டு, ஷிகாரிபுரா சட்டப்பேரவை தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எடியூரப்பா 1999ம் ஆண்டைத் தவிர்த்து, தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்து வருகிறார். 2008ம் ஆண்டு நடந்த தேர்தலில், பிஜேபியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் எடியூரப்பா. ஊழல் குற்றச்சாட்டு காரணமாக 2011ல் ராஜினாமா செய்தார். பின்னர் தனிக் கட்சி தொடங்கினார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு சற்று முன்பாக, தனது தனிக் கட்சியை பிஜேபியோடு இணைத்தார்.
விவசாயிகளுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணிக்கப் போவதாக முதலைக் கண்ணீர் வடித்த எடியூரப்பா, பதவிக்கு வந்தது முதல், குடும்பத்தோடு சேர்ந்து ஊழலில் ஈடுபட்டு, 600 கோடிக்கு மேல் சொத்து சேர்த்தார் எடியூரப்பா. பெரும்பாலான சொத்துக்கள், மலிவு விலையில் வாங்கப்பட்டவை. அவ்வாறு மலிவு விலைக்கு வழங்கப்பட்டதற்காக பல்வேறு அரசு நிலங்கள் மடைமாற்றம் செய்தவர்தான் எடியூரப்பா. இன்று அவர் வடித்தது நீலிக்கண்ணீரே அல்லாமல் வேறு அல்ல.
நேற்றைய வாக்கெடுப்புக்கு சற்று முன்னதாக எடியூரப்பா ராஜினாமா செய்த்தை பிஜேபியினர் பெரிய தியாகச் செயலாக சித்தரிக்கின்றனர். அது தியாகமில்லை. எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியுற்ற கையறு நிலை என்பதை தொடர்ந்து வெளியிடப்படும் செய்திகள் சுட்டிக் காட்டுகின்றன.
பெரும்பான்மை இல்லை. தனித்து ஆட்சியமைக்க முடியாது என்பதை அகம்பாவம் பிடித்த பிஜேபி தலைவர்கள் உணரும்போது, காலம் கடந்து விட்டிருந்தது. ஆங்கிலத்தில் Much water had flown under the bridge என்று சொல்லுவார்கள். ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டிருந்த்து. அதிக இடங்கிளில் வென்ற, காங்கிரஸ், 37 இடங்களில் மட்டுமே வென்ற ஜனதா தளத்துக்கு முதலமைச்சர் பதவியை விட்டுத் தரும் என்பதை எப்போதும் தலைக்கனத்தோடு இருக்கும் அமித் ஷா மற்றும் மோடியால் கற்பனை கூட செய்ய முடியவில்லை.
உத்தரப் பிரதேச தேர்தல் வெற்றிக்கு பிறகு, இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், பஞ்சாயத்துகள் முதல் பாராளுமன்றம் வரை, ஒரு இடம் விடாமல் அனைத்து இடங்களிலும் பிஜேபி வெற்றி பெற வேண்டும் என்று ஆணவத்தோடு பேசியவர்தான் அமித் ஷா. அந்த ஆணவத்தில், காங்கிரஸ் தனது தந்திரத்தை மாற்றி, இப்படி ஒரு அணுகுமுறையை கையாளும் என்பதை ஊகிக்கத் தவறினார்கள் பிஜேபி தலைவர்கள்.
காங்கிரஸ் ஜனதா தளக் கூட்டணி உறுதியானதும், அடுத்து பிஜேபி நம்பியது ஆர்எஸ்எஸ் தொண்டரான ஆளுனர் வாஜுபாய் வாலாவை. அவரும் அவர்கள் விரும்பியபடியே, எடியூரப்பாவை பதவியேற்க அழைத்ததோடு, பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் கொடுத்தார். 15 நாட்களில் நிச்சயமாக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, பெரும்பான்மையை நிரூபித்து விடலாம் என்றே அமித் ஷா கூட்டணி கணக்கு போட்டது.
அவர்கள் சற்றும் எதிர்பாராத்து, ஆளுனர் தன் முடிவை அறிவித்த சில மணி நேரங்களில், காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டும் என்பதே. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு அதில் உள்ள சிரமங்கள் என்ன என்பது புரியும். ஆனால் அவசர அவசரமாக வழக்கை தாக்கல் செய்து, இரவு 10 மணிக்கு பதிவாளர் கதவை தட்டியது காங்கிரஸ். பதிவாளர் வழக்கு கட்டுகளை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இல்லத்துக்கு எடுத்துச் செல்கிறார்.
அதை இரவே விசாரிக்க முயாது என்று தீபக் மிஸ்ரா மறுத்திருக்கலாம். ஆனால் நீதிபதி ஏகே.சிக்ரி தலைமையில் ஒரு மூன்று நபர் அமர்வை அமைக்க உத்தரவு பிறப்பித்தார். ஏன் தீபக் மிஸ்ரா நள்ளிரவில் இதை விசாரிக்க ஏற்றுக் கொண்டார் என்பதில்தான் சூட்சுமம் அடங்கியிருக்கிறது. இந்த இடத்தில்தான் காங்கிரஸ் கட்சி, தீபக் மிஸ்ராவுக்கு எதிராக கொண்டு வந்த பதவி நீக்கத் தீர்மானம் முக்கியத்துவம் பெறுகிறது. அப்படியொரு தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி கொண்டு வரவில்லை என்றால் 100 சதவிகிதம் தீபக் மிஸ்ராவே அந்த வழக்கை விசாரித்து தள்ளுபடி செய்திருப்பார்.
தீபக் மிஸ்ரா தலையிடாமல் இருந்ததற்கு மற்றொரு காரணம், 14 மார்ச் 2017 அன்று, கோவா சட்டப்பேரவையில், அதிக எண்ணிக்கையில் இடங்களை பெற்ற காங்கிரஸ் கட்சியை அழைக்காமல், தேர்தலுக்கு பின் கூட்டணி அமைத்து, உதிரிக் கட்சிகளின் உதவியோடு ஆட்சியை பிடித்தது பிஜேபி. இது தொடர்பான வழக்கில், முன்னாள் தலைமை நீதிபதி கேஹர் தலைமயிலான அமர்வு அளித்த தீர்ப்பில், ஒரு கட்சி அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருந்தாலும், தேர்தலுக்கு பின், சில கட்சிகள் இணைந்து கூட்டணி அமைந்து, பெரும்பான்மை எண்ணிக்கையை காட்டினால், ஆளுனர் அவர்களை ஆட்சியமைக்க அழைப்பது சரியே என்று அளித்த தீர்ப்பு. இந்த தீர்ப்பு, கர்நாடக சட்டப்பேரவை நிலைமைக்கு முழுக்க பொருந்தும். இதை தீபக் மிஸ்ராவால் அத்தனை எளிதாக நிராகரித்திருக்க முடியாது. இருந்தாலும், அந்த மூன்று நீதிபதி அமர்வு தீர்ப்பை நிராகரிக்க ஐந்து நீதிபதி அமர்வை அமைத்து, அதை தீபக் மிஸ்ரா ரத்து செய்திருக்கக் கூடியவர்தான். அவரை பயமுறுத்தியது, அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பதவி நீக்கத் தீர்மானம்தான்.
நள்ளிரவில் வழக்கை வாதிடுவதற்காக, காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, களத்தில் இறங்கினார். சரியாக இரவு 1.30 மணிக்கு விசாரணை தொடங்கியது. அரசு சார்பாக மூத்த வழக்கறிஞரும், அரசு தலைமை வழக்கறிஞருமான கேகே.வேணுகோபால், துஷார் மேத்தா, மணீந்தர் சிங் மற்றும் பிஜேபி சார்பாக முகுல் ரோகத்கி.
தனி ஆளாக அவர்கள் அனைவரையும் சமாளித்தார் சிங்வி. முகுல் ரோகத்கி, வாய்க்கு வந்ததையெல்லாம் வாதாடினார். நீதிபதிகள், நம்பிக்கை வாக்கெடுப்பை நாளையே நடத்த வேண்டும் என்று கூறியபோது, அதெல்லாம் முடியாது. சர்க்காரியா ஆணையம் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு 30 நாட்கள் அவகாசம் பரிந்துரைத்துள்ளது. ஏற்கனவே எங்களுக்கு 15 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றார். இது ஜனநாயகப் படுகொலை என்றார். ஆனால் சிங்வி வாதத்துக்கு முன் இது எதுவும் எடுபடவில்லை. உச்சநீதிமன்றம் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு என்று உத்தரவிட்டது.
பிஜேபி தரப்பில் பதற்றம் அதிகரித்தது. பிஜேபியின் அகம்பாவத்துக்கு மற்றொரு உதாரணம், குஜராத்தில் காலியான மாநிலங்களவை இடத்துக்கு நடந்த தேர்தல். சோனியா காந்திக்கு நெருக்கமானவராக அறியப்பட்ட அகமது பட்டேல் அத்தேர்தலில் போட்டியிட்டார். அவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டுமென்று, அமித் ஷா கங்கணம் கட்டி வேலை செய்தார். காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை கடத்தி, மாற்றி வாக்களிக்க வைத்து, படேலை தோற்கடிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டார். அப்போது, காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாதுகாப்பாக வைத்திருந்தவர்தான் டிகே.சிவக்குமார். அரசு புலயாய்வு நிறுவனங்களை, சகட்டு மேனிக்கு துஷ்பிரயோகம் செய்யும் பிஜேபி அரசு, டிகே.சிவக்குமாருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் வருமான வரி சோதனைக்கு உத்தரவிட்டது. மிகுந்த சிரமங்களுக்கு இடையே, அகமது பட்டேல் வெற்றி பெற்றார். இணைப்பு
ஒரே ஒருவர் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினரானால் குடியா முழுகிப் போய் விடும் ? ஆனால் மோடி மற்றும் அமித் ஷாவின் பண்பு அத்தகையது. இருவருமே நீசர்கள். நீச மனது படைத்தவர்கள். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் இழிபிறவிகள்.
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, அவரிடமிருந்து வாஜ்பாய்க்கு அழைப்பு வருகிறது. ஐக்கிய நாடுகளின் நியூயார்க் நகர் அலுவலகத்துக்கு இந்தியாவிலிருந்து ஒரு தூதுக் குழு செல்கிறது. உங்களுக்கு சிறுநீரகம் செயலிழந்து விட்டது என்று தெரியும். இந்தியாவில் தற்போது சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு போதுமான சிகிச்சைகள் இல்லை. நீங்கள் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். வாஜ்பாயும், அமெரிக்கா சென்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார். அந்த விஷயத்தை ராஜீவ் காந்தி இறுதி வரை வெளியே சொல்லவில்லை. அதன் பின்னால், போபர்ஸ் ஊழலில் ராஜீவ் காந்தியை முழுமையாக அம்பலப்படுத்தி 1989 தேர்தலில் அவரை தோற்கடித்த்தில் முன்னணியில் நின்ற வாஜ்பாயை வெகு எளிதாக ராஜீவால் சிறுமைப்படுத்தியிருக்க முடியும். ஆனால் அவர் அதை வெளியே சொல்லவேயில்லை.
இந்த சம்பவத்தை வாஜ்பாய்தான் ராஜிவ் இறந்த பிறகு வெளியுலகுக்கு சொன்னார். இன்று நான் உயிரோடு இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் ராஜீவ்தான் என்றார். இணைப்பு கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்கள்தான்.
அத்தகைய நயத்தகு நாகரீகத்தை மோடியிடமும் அமித் ஷாவிடமும் எதிர்ப்பார்க்க முடியுமா என்ன ?
கர்நாடகாவில் பிஜேபியை பதவியில் அமர வைக்க எத்தகைய இழி செயலிலும் ஈடுபட மோடி அமித் ஷா கூட்டணி தயங்காது என்பதை காங்கிரஸ் கட்சி நன்றாகவே உணர்ந்திருந்தது. அதனால்தான் இம்முறை எந்த சான்ஸையும் எடுக்க காங்கிரஸ் தயாராக இல்லை. உடனடியாக டிகே.சிவக்குமாரை களத்தில் இறக்கியது. சிவக்குமார், உடனடியாக கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் பேசி, தனி விமானத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தள எம்எல்ஏக்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டார். ஆனால் தனி விமானத்துக்கு விமான நிலைய ஆணையத்தை வைத்து அனுமதி மறுக்கப்பட்டது. இதுவும், மோடி அமித் ஷா கூட்டணியின் இழிவான தந்திரங்களின் ஒரு பகுதியே.
உச்சநீதிமன்றம் நாளையே வாக்குப்பதிவு என்று தீர்ப்பளித்த்தும், பிஜேபி தரப்பில் பதற்றம் தொற்றிக் கொண்டது. எப்படியாவது எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியே ஆக வேண்டும் என்று முடிவு செய்தனர். இதற்கு எத்தகைய முயற்சியையும் எடுக்க பிஜேபி தயாராக இருக்கும் என்பதை அறிந்து, காங்கிரஸும் தயாரானது. ஏற்கனவே கட்சி மாறிய, அல்லது வழக்குகளில் சிக்கிய எம்எல்ஏக்களை மொபைல் போனில் ரெக்கார்டிங் வசதியோடு தயாராக இருக்கச் சொன்னது. எதிர்ப்பார்த்தது போலவே, பிஜேபியின் முன்னணி தலைவர்கள், வரிசையாக வலையில் சிக்கினர். எடியூரப்பா, ஸ்ரீராமுலு, ஜனார்த்தன ரெட்டி, முரளீதர் ராவ் என்று பெரும்பாலும் வலையில் சிக்கினர். ஆட்சியமைத்தாக வேண்டுமே, பெரும்பான்மை பெற வேண்டுமே என்ற ஆதங்கத்தில், மறு முறையில் பேசுவதை ஒருவர் பதிவு செய்வாரே என்ற கவலை துளியும் இல்லாமல் வெளிப்படையாக பேரம் பேசினர். ரெட்டி சகோதரர்களுக்கு, நாங்கள் நினைத்தால் எதுவும் செய்ய முடியும் என்று நிரூபித்தாக வேண்டிய கட்டாயம்.
இத்தகைய திரை மறைவு பேரங்கள் ஒரு புறம் இருக்க, மறுபுறம், அரசு இயந்திரத்தையும் கட்டவிழ்த்து விட்டார் எடியூரப்பா. பதவியேற்ற அன்றே எடியூரப்பா பிறப்பித்த உத்தரவு, உளவுத் துறை கூடுதல் டிஜிபியையும், உளவுத் துறை டிஐஜியையும் மாற்றி, தனக்கு வேண்டிய நபராக போட்டு, அவர்கள் மூலமாகவும், எம்எல்ஏக்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
கொச்சி செல்வதற்கான விமானத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதும், சிவக்குமார் உடனடியாக தெலுங்கானா முதல்வரோடு தொடர்பு கொண்டு, ஹயாட் ஹோட்டல் உரிமையாளரையும் தொடர்பு கொண்டு, எம்எல்ஏக்கள் தங்குவதற்கு ஏற்பாடுகளை செய்தார். அனைத்து எம்எல்ஏக்களிடமும் விஷயம் விளக்கப்பட்டு மொபைல் பயன்படுத்தக் கூடாது என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மறு முறையில் பிஜேபி கூடாரம் பதற்றமடைந்தது. காவி ஆளுனர் வாஜுபாய் வாலாவிடம், ஏற்கனவே, பல எடியூரப்பா அரசு கவிழ்ந்தபோது, பல எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்து, அரசை காப்பாற்றிய, அதே போபைய்யாவை தற்காலிக சபாநாயகராக நியமிக்க முடிவெடுக்கப்பட்டு அப்படியே அது நிறைவேற்றப்பட்டது.
இந்த முடிவின் பின்னணியில் இருந்த திட்டம் என்னவென்றால், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியதும் பெரிய அளவில் வன்முறையில் ஈடுபட்டு, தேவையான அளவு காங்கிரஸ் ஜனதா தள எம்எல்ஏக்களை தகுதிநீக்கம்செய்து, எடியூரப்பா அரசை காப்பாற்ற வேண்டும் என்பதே.
காங்கிரஸ் கட்சி இதையும் எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லும் என்பதையும் பிஜேபி எதிர்ப்பார்க்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, காங்கிரஸ் கட்சி சார்பில் அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபல், உள்ளிட்ட பல வழக்கறிஞர்கள் களமிறங்கினர். தற்காலிக சபாநாயகராக போபையாவை நியமித்தது தவறு என்று தொடங்கிய வாதத்தை நீதிபதிகள், அது பற்றி கவலைப்படாதீர்கள். சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடுகிறோம் என்றதும், காங்கிரஸ் கட்சி இதற்கு சம்மதம் தெரிவித்தது.
சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு என்றதும் பிஜேபியின் திட்டங்கள் அனைத்தும் தவிடுபொடியாகின. இறுதி திட்டமாக இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்களை பெங்களுருவில் உள்ள கோல்ட் ஃபின்ச் ஹோட்டலில் பிஜேபி எம்எல்ஏ ஸ்ரீராமுலு தடுத்து வைத்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். காவல்துறை தலையிட்டு அவர்கள் அடைத்து வைக்கப் பட்டிருக்கிறார்களா என்பதை உறுதிப் படுத்தியது. வெளியே வந்த அந்த இரண்டு எம்எல்ஏக்களிடமும் சித்தாராமைய்யா தொலைபேசியில் பேசுகிறார். “என் மீது கொஞ்சமாவது மரியாதை வைத்திருந்தால் சட்டப்பேரவைக்கு வாருங்கள்” என்கிறார். இரு எம்எல்ஏக்களும் சட்டப்பேரவைக்கு வர சம்மதம் தெரிவிக்கின்றனர்.
சட்டடப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்ற விஷயம், மதியம் 2 மணி வாக்கில் பிஜேபிக்கு உரைக்கிறது. இந்த கட்டத்தில்தான், சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதராக அவதாரமெடுக்க எடியூரப்பா முடிவு செய்கிறார்.
அதன் பின்னர் அவரின் கண்ணீர் உரையை நாடே பார்த்தது.
கர்நாடகத்தில் நடந்த இந்த சம்பவங்கள் 2019 தேர்தலை எப்படி பாதிக்கும். இதனால் பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு ஏற்படும் சாதக பாதகங்க என்ன என்று தென்னிந்திய அரசியலை கூர்ந்து கவனித்து வரும் பத்திரிக்கையாளர் டிஎஸ்.சுதிரிடம் பேசியபோது,
“தெரிந்தோ தெரியாமலோ, பிஜேபி, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்துள்ளது. கர்நாடகா அதை உறுதி செய்துள்ளது. காங்கிரசும், தனது செல்வாக்கு எந்த அளவுக்கு உள்ளது என்பதை உணர்ந்துள்ளது. இதனால், இனி ஒரு பெரிய கட்சி என்ற அகந்தையோடு காங்கிரஸ் மாநிலங்களை அணுகாது. இந்த புதிய உத்தி நல்ல பலன் அளித்துள்ளது என்பதையும் காங்கிரஸ் உணர்ந்துள்ளது.
எதிர்த்தரப்பில், மோடி, இந்த தேர்தலை அமெரிக்காவில் உள்ளது போல, இரு தலைவர்களுக்கு இடையே நடக்கும் போட்டியாக, ராகுலுக்கும் அவருக்கும் இடையே நடக்கும் போட்டியாக சித்தரிக்க முயன்று வந்தார். ஆனால் இனி அது நடக்காது. பிராந்திய கட்சிகளின் உதவியோடு, காங்கிரஸ் பிஜேபிக்கு பெரிய சவாலாக இருக்கும்.
கர்நாடக தேர்தல், வெற்றிக்காக பிஜேபி எதையும் செய்யும், எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை மக்களிடையே அம்பலப்படுத்தி உள்ளது. தாங்கள் ஒரு மாறுபட்ட கட்சி என்று பிஜேபி இத்தனை நாளாக முன்னெடுத்த கோஷம் இனி எடுபடாது.
ஆளுனர் மாளிகையை எப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்ய முடியும் என்பதை பிஜேபி வெளிப்படையாக காட்டியுள்ளது. இத்தனை தந்திரங்களை செய்தும், பிஜேபிக்கு தென்னிந்தியா இடம் கொடுக்கவில்லை.
தென்னிந்தியா முழுக்க பிஜேபியால் கால் நுழைக்க முடியாமல் இருப்பது, பிஜேபிக்கு நல்ல செய்தி அல்ல. தென்னிந்தியா கணிசமான நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
காங்கிரஸ் பிஜேபி மோதல் என்றால் மோடி எளிதாக ராகுல் காந்தியை எதிர்கொண்டு வீழ்த்தி விடுவார். ஆனால் மோடி தென்னிந்தியாவில் உள்ள ஒவ்வொரு பிராந்தியத் தலைவரையும் எதிர் கொள்ள வேண்டும்.
வட இந்தியாவில் நான் ஒரு சாதாரண டீ வியாபாரி என்ற நாடகம், தென்னிந்தியாவில் எடுபடவில்லை. கர்நாடகா தேசிய அரசியலில் ஏற்படப்போகும் மாற்றத்துக்கான தொடக்கம்” என்றார் பத்திரிக்கையாளர் டிஎஸ்.சுதிர்.
கர்நாடகா பெரும் மாற்றத்துக்கான தொடக்கமா என்பதை காலம்தான் முடிவு செய்யும். ஆனால், கர்நாடகா, பிஜேபிக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
மேலும், அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையிலும், கோவா, மேகாலயா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில், ஆட்சியை பிடித்த மமதையில் இருந்த பிஜேபிக்கு, வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது பெரும் பாடத்தோடு உணர்த்தப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் முதல் அனைத்து மாநில பஞ்சாயத்துகளிலும் பிஜேபி வெற்றி பெற வேண்டும் என்ற மமதை ஒலி, சுரத்து குறைந்து காணப்படுகிறது.
இது ஒரு நல்ல தொடக்கமே.
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.
ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.
Very biased article from Savukku, do you mean Congress and JDS are not corrupt?
Makkal Theerpe Mahesan Theerpu.
BJP has got public mandate of 104 seats … Did people of Karnataka Chose Congress over BJP?
கர்நாடகா பிஜேபியின் வீழ்ச்சியின் ஆரம்பமாக இருக்கட்டும்.
You’ve outdone yourself….!!!
hahhahah! I recollect a saying, was it Bishen Singh Bedi on Cricket!! “Class is Permanant, Form is Temporary” Congress all said done is Class oozing!! BJP is form comes easy,go easy!!
BJP reminds me of Tamil saying, ” அற்பனுக்கு வாழ்வு வந்தா, அர்த்தராத்ரி கோடை பிடிப்பான்”!!! The arrogance to win at all cost and have no respect for value systems would unmask them sooner!! Karnataka is best thing that could have happened to India in unmasking Bakwas Jumla Party!!!
PS: Yes, I was aware of Rajiv’s favor to Vajpayee! Good you mentioned this on his martyr’s day! Vajpayee no less a crook!!! BJP birds of same feather, flock together!!!