கர்நாடகத்தில் பாஜக பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியது அக்கட்சிக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகலாம். ஆனால், கடந்த மூன்றாண்டுகளில் அமித் ஷா தலைமையின் கீழ் கடந்த பாஜக வெளிப்படுத்தியுள்ள வெல்லமுடியாத ஒளிவட்டத்தை இந்த தலைகீழ் மாற்றம் மங்கச் செய்துள்ளது என கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
வடகிழக்கு போன்ற புதிய பிராந்தியங்களில் வெற்றி, மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் சிறிய ஊடுருவல், இறுதியாக, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் மாபெரும் வெற்றி போன்றவைகளால் தில்லி, பீகார் மாநிலங்களில் 2015ல் பாஜகவின் தோல்விகளை அமித் ஷா சமாளித்தார். ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ் குமார் தனது கூட்டணிக் கட்சிகளிலிருந்து விலகி பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததைத் தொடர்ந்து, பீகாரில் 2017ல் பாஜக ஆட்சிக்கு வந்தது.
கோவா மற்றும் மணிப்பூர் போன்ற இடங்களில் மிக மோசமான சூழ்நிலைகளையும் சாதகமாக்கி, மிகவும் கடுமையான அரசியல் களத்தை வெல்லும் திறன் கொணட நவீன கால சாணக்கியனாக அறியப்பட்டார். கர்நாடக சட்டமன்றத்தில் போதுமான எண்ணிக்கையில் எம்.எல்.ஏக்கள் இல்லாத நிலையில் அம் மாநிலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்று தோல்வியடைந்தது அமித் ஷாவுக்கும், கட்சிக்கும் இரண்டு தாக்கங்களை ஏற்படுத்தும் என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத ஒரு பாஜக தலைவர்.
முதலாவதாக, ஷா மற்றும் பாஜகவின் பயணத்தை நிறுத்த முடியும் என்ற எதிர்க்கட்சிகளின் நம்பிக்கைக்கு அது தைரியமளிக்கிறது. எதிர்க்கட்சிகளிடையே சந்தோஷ மனநிலையை உணர முடிகிறது. அவைகளில் ஒரு சில கட்சிகள் 2019ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒரு கூட்டாட்சி முன்னணியை ஏற்படுத்த முயல்கின்றன.
பாஜகவின் தலைவராக அமித் ஷாவின் பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைகிறது. ஆனால், அவர் குறைந்தபட்சம் அடுத்த பொதுத் தேர்தல் வரையிலும் தலைமை பொறுப்பில் இருப்பார். இதன் பொருள், அவர் கட்சியை தன்னுடைய மொத்த கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்.
”எண்ணிக்கை என்னவாக இருந்தாலும், அது ஒரு பிரச்சினையில்லை. இறுதியில் பாஜகதான் ஆட்சியமைக்கும்” எனக் கூறி அமித் ஷா தன்னுடைய போட்டியாளர்களைக் காட்டிலும் ஒரு உளவியல் அனுகூலம் பெற்றிருந்தார். ஆனால், கர்நாடகா நிகழ்விற்கு பிறகு, அவருக்கு அந்த அனுகூலம் இருக்காது” என்கிறார் அந்த பாஜக தலைவர்.
காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசுக்கு வழிவிட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமல் எடியூரப்பா சனிக்கிழமை ராஜினாமா செய்தபோது, பாஜகவுக்கு எதிரான திட்டமிடப்பட்டுள்ள முன்னணியின் உந்து சக்திகளில் ஒருவாரக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி உடனடியாக கருத்து தெரிவித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும், ”எடியூரப்பாவின் ராஜினாமா பாஜகவுக்கு ஒரு பெருத்த அடி” என்றார். அடுத்த பொதுத் தேர்தலுக்கு அதன் உபாயத்தை பாஜக மாற்ற வேண்டும் என்றும் மாயாவதி வலியுறுத்தினார்.
உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவுடனான தனது கூட்டணியைத் தொடர்ந்து, பிரதமர் பதவிக்கு மாயாவதி ஒரு சாத்தியமான உரிமைகோருபவர் எனக் கருதப்படுகிறார். உத்தரப் பிரதேசத்தில் 80 மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பாஜகவின் இந்த அடாவடிப் போக்கு அதன் கூட்டணிக் கட்சிகளை கவலையடையச் செய்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைவிட்டு வெளியேறிவிட்டது. 2019ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என சிவசேனா கட்சி அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் ஓம் பிரகாஷ் ராஜ்பாரின் சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி போன்ற சிறிய கட்சிகள் தாங்கள் புறக்கணிக்கப் படுவதைக் கண்டு வருத்தத்தில் உள்ளன.
”எங்களுக்கு நிச்சயமாக ஒரு பிரச்சினை இருக்கிறது,” என்கிறார் இன்னொரு பாஜக தலைவர். ”எங்கள் போட்டியாளர்கள் தைரியமடைந்துள்ளனர். எங்கள் கூட்டாளிகள் பிணக்கமாக உள்ளனர். கர்நாடக படுதோல்வி இருவருக்கும் மகிழ்ச்சியடைய ஒரு காரணத்தை வழங்குகிறது” என்கிறார் அந்த பாஜக தலைவர்.
கூட்டாட்சி முன்னணி என்பது ஒரு கற்பனையானது என வாதிடுகிறார் பாஜக ஊடக மைய தலைவர் மற்றும் ராஜ்ய சபா உறுப்பினரான அனில் பல்லுனி. ”கூட்டாட்சி முன்னணி எங்கே இருக்கிறது?” என அவர் கேட்கிறார். ”ஏற்கெனவே வெவ்வேறு மாநிலங்ளில் அந்த கட்சிகளை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம். லாலு பிரசாத் யாதவ் தமிழ்நாட்டிலும், சந்திரபாபு நாயுடு உத்தரப் பிரதேசத்திலும் ஏதாவது வித்தியாசத்தை ஏற்படுத்துவார்களா? இது நகைச்சுவைக்குரியது” என்கிறார் அவர்.
இந்த கர்நாடக தலைகீழ் மாற்றத்தின் இரண்டாவது தாக்கம், அடிமட்ட அளவில் கட்சியை அமித் ஷா எப்படி கையாளுகிறார் என்பதை வெளிச்சமிட்டு காட்டும். கட்சி பதவிகளுக்கு நியமனம் செய்வது முதல், பாஜகவின் பிரச்சார உபாயத்தை தயாரிக்க வேட்பாளர்களை தேர்வு செய்வது மற்றும் வளங்களை நிர்வகிப்பது வரை ஒவ்வொன்றையும் ஷா மேற்பார்வையிட்டு வருகிறார்.
அது பாஜகவுக்கு பல மாநிலங்களை வெல்ல உதவியிருக்கிறது. ஷா ஒரு “மாஸ்டர் ஸ்ட்ரேடஜிஸ்ட்“ என்ற பெயரையும் பெற்றுத் தந்தது. ”அதற்கான பெருமை எல்லாம் அவருக்கே சேரும் என்றால், பழியும் அவரையே சேரும்” என்கிறார் அந்த பாஜக தலைவர்.
கர்நாடகாவில், உடுப்பி சிக்மகளுர் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) ஷோபா கரந்த்லஜே மற்றும் அவரது மகன் பி.ஒய். விஜயேந்திரா போன்ற எடியூரப்பாவின் விசுவாசிகளுக்கு டிக்கெட் வழங்க மறுத்து விட்டதாக பாஜக தலைமை குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த தகவல் எடியூரப்பாவின் ஆதரவாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது” என்கிறார் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு பாஜக தலைவர்.
”இதில் ஆச்சரியப்பட வைத்தது என்னவென்றால், ஆட்சியமைப்பதற்கான இந்த முயற்சியின் பொறுப்பற்றத்தன்மை அல்ல. ஆனால், அவர்கள் எவ்வளவு திமிர்த்தனமாக இருந்தார்கள் என்பதே” என்கிறார் அஷோகா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அரசியல் விஞ்ஞான இணைப் பேராசிரியர் கில்லஸ் வெர்னியர்ஸ். ”இந்த முறையில், நிழல் அரசியலானது பகல் நேரத்தில் காட்டப்படும்போது அதன் சக்தியை இழக்கும் என்பதை அவர்கள் மறந்துவிட்டனர். இந்த விஷயத்தில் அது தெளிவாக திருப்பி சுட்டுள்ளது” என்கிறார் அந்த பேராசிரியர்.
2019 பொதுத் தேர்தலுக்கான போருக்கு தயாராகும் முன், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய இடங்களில் பாஜக தேர்தல் சவால்களை எதிர்கொள்ளும். கர்நாடகாவில் ஒரு வெற்றி இந்த மாநிலங்களில் அமித் ஷாவின் பயணத்தை எளிதாக்கியிருக்கும்.
- குமார் உத்தம்
Savukku pakka jalra to Congress and DMK, BJP has got 104 seats compared to just 78 seats of Congress, wake up savukku…… Don’t be partial to one party
Detailed analysis and thanks for sharing thoughts..