பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் அதன் வழியை நடைமுறைப்படுத்தினால், ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணிகளுக்கு UPSC எனப்படும் யுனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வை சிறப்பாக எழுதுவது மட்டும் உங்கள் விருப்பப்படி ஒரு அகில இந்திய சேவையில் நுழைய போதுமானதாக இருக்காது.
சேவை மற்றும் கேடரை முடிவுசெய்ய ஒரு கூடுதலான அடுக்கு மதிப்பீடு முறையை செயல்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது, அதன்படி, தகுதிகாண் பருவத்தினர் (புரபேஷனர்ஸ்), கட்டாய அடிப்படை பாடப்பிரிவில் (foundation course) அவர்களின் செயல்திறன் அடிப்படையிலேயே, இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பிரதமர் அலுவலகத்தின் சமீபத்திய முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டால், இந்திய பாதுகாப்பு கணக்கு பணிக்கு (Indian Defence Accounts Service) தேர்ச்சி பெறும் ஒரு மாணவர் லால்பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேசன் (LBSNAA),, முஸோரி, அல்லது சர்தார் வல்லபாய் படேல் நேஷனல் போலீஸ் அகாடமி (SVPNPA), அல்லது அரசு ஊழியர்களுக்கான கல்வி நிலையங்களில் தனது அடிப்பைடை பாட வகுப்பில் எவ்வளவு நன்றாக செயல்பட்டுள்ளார் என்பதன் அடிப்படையில் அவர் எல்லோரும் பேராசைப்படும் இந்திய ஆட்சிப் பணிக்கு (ஐஏஎஸ்) செல்ல முடியும்.
ஓய்வுபெற்ற, தற்போது பணியிலுள்ள பொது ஊழியர்கள் மற்றும் பொது ஊழியராக விரும்புவோர் மத்தியில் பிரதமர் அலுவலக திட்டத்தின் மீதான இந்த பரிந்துரை மற்றும் செயல்பாடு குறித்து பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை (DoPT) கேட்டுள்ளது. இந்த புதிய முறை நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்பட வேண்டும் என DoPT விரும்புகிறது.
நடப்பாண்டிலேயே செயல்படுத்த அதன் மீது பின்வரும் பரிந்துரை மற்றும் தேவையான நடவடிக்கைகளை பிரதமர் அலுவலகம் கருத்தில்கொள்ள விரும்புகிறது என DoPT கடிதம் தெரிவிக்கிறது.
DoPTவின் இந்த கடித தொடர்பு பல அமைச்சகங்களை சென்றடைந்த இரண்டு நாட்களுக்குப் பின்னர், அதிகாரிகளின் வாட்ஸ்ஆப் குரூப்களில் இது விவாதத்திற்கான முக்கிய விஷயமாகிவிட்டது.
முக்கிய மூன்று பிரச்சினைகள்
அவர்களுக்கிடையே எதிர்வினை மூன்று வகையானது. முதலாவதாக, புரபேஷனரின் சேவையை தீர்மானிக்க அடிப்படை பயிற்சியில் அவரது செயல்திறனை பயன்படுத்துவது UPSC தேர்வின் குறிக்கோளை நோக்கத்தை அழித்துவிடும். தேர்வாளர்களின் (examiners) மனவோட்டத்திற்கு ஏற்றார்ப்போல நடந்து கொள்ளும் வகையில் இந்த முறை, புரபேஷனர்களுக்கு அழுத்தம் கொடுக்கும். இரண்டாவதாக, இந்த புதிய திட்டத்தை இந்த ஆண்டிலேயே செயல்படுத்தும் நோக்கம் இருப்பதாக சில அதிகாரிகள் பார்க்கின்றனர். மூன்றாவதாக, தொழில்நுட்ப ரீதியாக பல கேள்விகளை எழுப்பப்படுகிறது. தற்போதைய சேவை ஒதுக்கீடு மற்றும் பயிற்சி முறையைக் கொண்டு, அவைகளை அவ்வளவு எளிதாக தீர்க்க முடியாது.
எல்லாவற்றிற்கும் மேலாக, பிரபலமான பயிற்சி நிலையங்கள், அரசோடு இணக்கமான நிலையங்கள், அரசின் இந்த முயற்சியால் பெரும் அளவில் பயனடைந்து, அவர்களின் மாணவர்களை எளிதாக அதிகாரிகாக்கும் போக்கு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் (ஆர்எஸ்எஸ்) மிக நெருக்கமான தொடர்பைக் கொண்ட சாம்கல்ப் பயிற்சி மையங்கள் (Samkalp Coaching Centres) இந்தியா முழுவதிலும் தோன்றியுள்ளன. மேலும் தற்போது பணியாற்றும் பல அதிகாரிகளும், ஓய்வு பெற்ற அதிகாரிகளும் அங்கே வழக்கமாக விரிவுரையாற்றுகின்றனர்.
புரொபேஷனர்களின் திறனை மதிப்பிடுவதற்கும், அவர்களுக்கான பணியை முடிவுசெய்வதற்கும் இந்த கல்வியாளர்கள் தகுதியானவர்கள்தானா என சில அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர். ”அவர்களுக்கு (கல்வியாளர்களுக்கு) கொடுக்கப்படும் அதிகாரம் வரம்பு மீறியது இல்லையா ? சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தேர்வு முறையை கேள்விக்குள்ளாக்குவதற்கும், மாற்றுவதற்கும் ஒரு ஆழமான காரணம் இருக்க வேண்டும். பாரபட்சங்கள் இப்போது முழு அளவில் விளையாடும்,” என்கிறார் முஸோரி அகாடமியில் ஏற்கெனவே சிறிது காலம் பணியாற்றிய, தற்போது இணைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி்.
LBSNAA-ல் அடிப்படை பாடப்பிரிவுகளின் முடிவுகள் ஒருவருடைய உள் உணர்வு சார்ந்தவை என்கிறார் ஓய்வுபெற்ற செயலாளர் ஒருவர். பயிற்சிக்காக வரும் ப்ரோபேஷனர்களில் பலர் தங்கள் அறிவுத் திறன் குறித்து தம்பட்டம் அடிப்பதுடன் நன்றாக சோபிக்கவும் செய்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில் UPSC முடிவுகள் சீல் வைக்கப்பட்டு, கையொப்பமிடப்படுவதுடன் மோசடி செய்ய முடியாத வகையில் உள்ளது” என்கிறார் அந்த பெண்மணி. பல ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட பெரிய அமைச்சகம் ஒன்றில் தலைமை அதிகாரியாக இருந்த அவர், அடிப்படை பயிற்சியை வைத்து, ஒருவர் ஐஏஎஸ் அதிகாரியா, ஐபிஎஸ் அதிகாரியா என்று முடிவு செய்யும் முறை, நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கான வழக்குகள் தொடுக்கப்படுவதில் கொண்டு விடும். தங்கள் பணியின் தொடக்கத்திலேயே வழக்குகளோடு ஒரு அதிகாரி அரசுப் பணியில் நுழைவது நல்லதல்ல எனக் கருதுகிறார்.
விருப்பம் போல சலுகையளிக்கும் வாய்ப்பு
ஒரு புரொபேஷனருடைய intra-service rank, அடிப்படை பாடப்பிரிவில் அவருடைய செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது. LBSNAA மற்றும் பிற கல்விநிலையங்களில் மதிப்பீடு முழுவதும் பாரபட்சங்கள் நிறைந்துள்ளது என்கிறார் தற்போது இணைச் செயலாளராக பணிபுரிந்து கொண்டிருக்கும் ஒரு அதிகாரி. அகில இந்திய அளவில் முதல் 10 தரவரிசைப் பட்டியிலில் இருந்து ஒரு புரொபேஷனர், முஸோரியில் அடிப்படை பாட வகுப்பிற்கு பின்னர், எப்படி தரவரிசைப் பட்டியலில் மிகவும் கீழ்நிலைக்குச் சென்றார் என அவர் ஒரு உதாரணத்தை காட்டுகிறார். அதற்கு காரணம்: அவர் நிறைய கேள்விகள் கேட்டதுடன், அகாடமியின் ஆசிரியர்கள் மற்றும் இயக்குனருடன் எப்போதும் ஒத்துப்போகவில்லை.
ஒட்டுமொத்த ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் பணிக்கான அதிகாரிகளை, சிவில் சர்வீஸ் அகாடமியில் உள்ள ஆசிரியர்களின் கையில் அளித்தால் என்ன நடக்கும் என்பதை இப்போ கற்பனை செய்து பாருங்கள்,” என்கிறார் அந்த இணைச் செயலாளர்.
முஸோரி அகாடமியில் ஏற்கெனவே சிறிது காலம் பணியாற்றி, தற்போது வேறிடத்தில் பணியாற்றி வரும் ஒரு அதிகாரி ஒரு பெரிய காட்சியை தருகிறார். ”முஸோரி அகாடமியில் பி.எஸ். அப்பு மற்றும் ஏ.என்.சாக்ஸேனா போன்ற புகழ்பெற்ற இயக்குனர்கள் இருந்திருக்கிறார்கள். அரசாங்கத்தை எதிர்ப்பவர்களையும் பேச அழைத்து முஸோரி அகாடமியை ஒரு லிபரலான தளமாக மாற்றினார் சாக்ஸேனா” என்கிறார் அந்த அதிகாரி. அதேபோல, ஹர்ஸ் மந்தர் என்ற துணை இயக்குனர் சில தைரியமான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதற்காக, அவர் இப்போதுகூட நினைவு கூறப்படுகிறார்.
முஸோரி அகாடமி முழுவதும் சராசரியான மற்றும் சொந்தபந்தங்களுக்கு சலுகை காட்டிய கதைகளைக் (stories of mediocrity and nepotism) கொண்டிருக்கிறது, என்கிறார் முஸோரி அகாடமியில் சிறிது காலம் நிர்வாகத்தில் இருந்த அதிகாரி. ”இவர்கள் இப்போது பணிகளை ஒதுக்குவதில் முக்கிய பங்காற்றுவர்,” என்கிறார். ஆபத்தான விளைவுகளை எடுத்துக்காட்ட இந்த ஒருசில நிகழ்வுகளே போதும்.
ஒரு தசாப்தத்திற்கு கொஞ்சம் முன்னர், இரண்டு புரொபேஷனர்கள் எழுதிய கட்டுரைகள் ஒரு மனசாட்சியுள்ள ஆசிரியரின் கவனத்தை ஈர்த்தது. அந்த ஆசிரியர் அவ்விரு கட்டுரைகளையும் கூகுளில் சரிபார்த்தபோது, அவைகளில் ஒன்று லியோ டால்ஸ்டாயின் ”போரும் சமாதானமும்“ என்ற நூலின் ஒரு அத்தியாயத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதும், மற்றொன்று தலாய்லாமா உரையிலிருந்து நேராக எடுக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அவர்களிருவருக்கும் பூஜ்யம் மதிப்பெண் வழங்கப்பட்டது. ஆனால், அப்போது இருந்த அகாடமி இயக்குனர் அவ்விருவருக்கும் ஆதரவாக வந்து, அவர்களிருவருக்கு தேர்ச்சி வழங்குமாறு அந்த ஆசிரயரை கேட்டுக்கொண்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் – ரொம்ப சிம்பிள் : ”நீங்கள் ஜீரோ மதிப்பெண் வழங்க முடியாது. அது பண்டைய இலக்கியத்திலிருந்து எடுக்கப்பட்டிருந்தாலோ அல்லது ஒரு பேச்சிலிருந்து மறு உருவாக்கம் செய்யப்பட்டிருந்தாலோ அதனாலென்ன?.”
மற்றொரு நிகழ்வில், ஒரு அரசு உத்தியோகப்பூர்வ பயணத்தின்போது ஒரு புரொபேஷனர் சிங்கப்பூரில் ஒரு கடையில் திருடி விட்டார். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு பதிலாக, அவரை பாதுகாக்கிற அகாடமி இயக்குனரின் உதவியால் அவர் தப்பினார் உள்துறையில் உள்ள ஒரு மூத்த அதிகாரிக்கு இந்த விவகாரம் தெரிய வரவும், அவர், சிங்கப்பூரில் திருடியவரை, அகாடமியிலேயே பணியாற்ற உத்தரவிட்டார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து அவருக்கு வேறு பணி வழங்கப்பட்டது. மூன்றாவது சம்பவத்தில், ஒரு புரொபேஷனர் நல்ல குடிபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்தில் சிக்கினார். இச்சம்பவத்தில் அவருடைய பேட்ச்மேட் ஒருவர் இறந்து விட்டார். ஆனால் அந்த புரொபேஷனருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அகாடமி இயக்குனர் பார்த்துக்கொண்டார்.
கேள்வி கேட்கும், விவாதம் செய்யும் கலாச்சாரம் அழியும்
மத்திய அரசின் ஓய்வு பெற்ற செயலாளர் மற்றும் பிரசார் பாரதியின் தலைவராக இருந்தவருமான ஜவ்கர் சர்கார், பிரதமர் அலுவலகத்தின் புதிய திட்டத்தை மிகக் கடுமையாக தாக்கி விமரிசிக்கிறார். இந்த நடவடிக்கை புதிய தலைமுறை அதிகாரிகளை அடக்கி வைக்கும். அவர்கள் விரும்பாத பணியையும் மிக மோசமான மதிப்பீட்டையும் பெற்று விடக்கூடாது என்ற பயத்தில், எந்தவொரு புரொபேஷனரும் அடிப்படை பாட வகுப்பின் போது கேள்வி எதுவும் கேட்க மாட்டார்கள் என ஜவ்கர் சர்கார் அஞ்சுகிறார்.
முன்மொழியப்பட்ட புதிய முறை நல்ல யோசனையாகக் கருதுபவர்களிடமிருந்தும் கூட, அது நிறைய முன்தயாரிப்புகளுடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்பது ஒருமித்த கருத்து இருக்கிறது. அவர்களில் முன்னாள் DoPT செயலாளர் சத்யானந்த் மிஸ்ராவும் ஒருவர். இத்திட்டம் “ஒரு பெரிய முயற்சி, ஒரு நல்ல முயற்சி” என்று கூறும் அவர், லால்பகதூர் சாஸ்திரி அகாடமெயில் தற்போது உள்ள மதிப்பீட்டு முறையை மாற்ற வேண்டும் என விரும்புகிறார்.
வஜாஹத் ஹபிபுல்லா என்ற முன்னாள் செயலாளரும் இந்த கருத்தை ஆதரிக்கிறார். ஆனால் தற்போது அகாடமெயில் உள்ள அமைப்பு முறையும், ஆசிரியர்களும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என அவர் விரும்புகிறார். அகாடமியின் இயக்குனர்கள் எந்த வித பாரபட்சமும் இல்லாமல் கவனமாகத் தேர்ந்தெடுக்கபட்ட வேண்டும், தலை சிறந்தவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார் அவர். ஆயினும், இந்த கருத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த முயலாமல் அதை மேலும் வளர்த்தெடுக்க அதிக நேரத்தை செலவிட வேண்டும் என அரசாங்கத்துக்கு அவர் ஆலோசனை கூறுகிறார்.
LBSNAA ஆசிரியர்களுக்கு, ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கு ஒருவரை தேர்ந்தெடுக்கவும், மதிப்பீடுகள் செய்யவும், போதிய அனுபவம் இல்லை என்கிறார் ஓய்வுபெற்ற நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் கேசவ் தேவிராஜு. UPSC சிறந்த முறையில் தற்போது தேர்வை நடத்தி வருவதாகவும் அவர் கருதுகிறார். வெற்றிபெற்ற அனைத்து தேர்வர்களும் உளவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
சட்ட சிக்கல்கள்
இந்த முன்மொழிவு குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றனர் அதிகாரிகள் (Bureaucrats). முதலாவது கேள்வி என்னவெனில், இந்த அடிப்படை பயிற்சி என்ன பாடத் திட்டத்தை கொண்டிருக்கும் என்பதே. இப்போது உள்ள முறையில், அனைத்து பணிகளையும் சேர்ந்த புரொபேஷனர்கள் முதல் மூன்று-நான்கு மாதங்கள் ஒன்றாக பயிற்சி பெறுகின்றனர். பின்னர், அவரவர் பணிக்கான அடுத்தகட்ட பயிற்சி பெறுவதற்காக பயிற்சி நிறுவனங்களுக்குச் செல்கின்றனர். உதாரணத்திற்கு, ஐ.ஏ.எஸ் புரொபேஷனர்கள் முஸோரியில் தங்குகின்றனர். ஐபிஎஸ் அதிகாரிகள் ஐதராபாத் போலீஸ் அகாடமிக்கு செல்கின்றனர். முதலாமாண்டு பயிற்சி முடிவடைவதற்கு முன்னதாக அவர்களது கேடர் முடிவு செய்யப்படுகிறது. அவர்கள் அந்த கேடர் மாநில மொழியை கற்க தொடங்குகின்றனர். தகுதிகாண் பருவத்தின் இரண்டாமாண்டில், அனைத்து அதிகாரிகளும் அவரவர் கேடர்களுக்கு களப்பயிற்சிக்காக செல்கின்றனர்.
பணி மற்றும் கேடர் முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒதுக்கீடு செய்யப்படுமா அல்லது இரண்டு ஆண்டுகளின் முடிவில் ஒதுக்கீடு செய்யப்படுமா என புதிய திட்டத்தில் தெளிவாக இல்லை என்று சர்க்கார் சுட்டிக்காட்டுகிறார். ”பயிற்சிக் காலமான நான்கு மாதத்திற்குள் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டால், அது நியாயமான அடிப்படையில் இருக்குமா? அது முடிவு செய்வதற்கு மிகக் குறைவான காலம் அல்லவா?” என அவர் கேட்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறது பணி மற்றும் கேடர் ஒதுக்கீடு செய்யப்படுமானால், கள மற்றும் மொழிப் பயிற்சி என்னாகும் ? புரொபேஷனர் ஒருவர் கள பயிற்சிற்காக ஒரு மாநிலத்திற்கு சென்றுவிட்டு வேறொரு மாநிலத்திற்கு கேடர் ஒதுக்கீடு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.
தற்போதுள்ள முறைமையில், அவர்களது கேடர் ஒதுக்கீடு செய்யப்பட்ட தருணமே, அந்த மாநிலத்திற்கு விசுவாசத்தை வளர்க்க தொடங்குகின்றனர். அந்த மாநிலத்தின் மொழி, வரலாறு ஆகியவற்றை கற்றுக்கொள்ள தொடங்குவதுடன், அந்த மாநில மக்களுடன் உரையாட தொடங்குகின்றனர். இவை அனைத்தும் இப்போது முற்றுபெறும் என்கிறார் சர்க்கார்.
முன்மொழியப்பட்ட இந்த நடவடிக்கை மோடி அரசாங்கத்தின் மற்ற எல்லாவற்றையும் போலவே – அரைவேக்காட்டுத்தனமானது மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடடியது என்கிறார் மற்றொரு ஒரு ஓய்வுபெற்ற செயலாளர்.
அக்சயா முகுல்
BJP think they are sole owners if India.But the fact is just for five years,that too on false stands.Jai hind..@
RSS intruded in education system too. Refer their recent order to make a compulsory period for Physical education all days for 9-12 classes shows RSS involvement in CBSE