கர்நாடக சட்டசபை தேர்தலில் கன்னட மரபுகள் இதற்கு முன்பு அரிதாகவே செயல்படுத்தப்பட்டன., இந்த தேர்தலின்போது அது மாறுபட்டது. 12-ம் நூற்றாண்டில் லிங்காயத் தர்ம நிறுவனர் பசவன்னாவின் “உங்கள் செயல்கள் உங்கள் வார்த்தைகளுடன் பொருந்தட்டும்“ ”இவர் யார் எனக் கேட்காதீர்கள். இவர் நம்மில் ஒருவர்” என்ற கோட்பாடுகளை (maxims), பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் உச்சரிக்க போராடினர். அமித் ஷாவின் தேர்தல் சுற்றுப் பயணமானது, மிகப் பெரிய கன்னட எழுத்தாளர் குவெம்பு-வின் நினைவு இல்லத்திற்கு அமித்ஷாவை அழைத்துச் சென்றது. அந்த விஜயம் மிகவும் விளம்பரப்படுத்தப்பட்டது. தனி நபர்கள் தங்களது சமூக அடையாளங்களை வென்று உலகளாவிய மனிதனாக வேண்டும் என குவெம்பு சொல்லியிருந்தார்.
இந்த குறியீட்டு ரீதியான நகர்வுகள் இத் தேர்தலில் காணப்பட்டன. உதாரணமாக, மாநிலத்தில் இதுவரை காணப்பட்ட மிகவும் அதிக செலவிலான தேர்தல் பிரச்சாரத்தை கவிஞர் டி ஆர் பென்டிரேவின் சொந்த ஊரான தார்வாட்-டில் தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, “இவ் உலகில் குருட்டு தங்கத்தின் நடனத்திற்கான அவமதிப்பு“ என்ற அந்த கவிஞரின் கவிதையிலிருந்து மேற்கோள் காட்டினார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யனாத்தின் வகுப்புவாதம் நிறைந்த பேச்சுக்கள், ஹனுமனுக்குப் பதிலாக திப்பு சுல்தானை வணங்குவதற்காக மாநில காங்கிரஸ் அரசாங்கத்தை விமரிசித்தன.
தேர்தல் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டதால், காங்கிரஸ், பாஜக மற்றும் ஜனதா தளம் (மதச்சார்பற்றது) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஒரு டஜன் வேட்பாளர்கள் மாறினர். வெல்லும் வாய்ப்பை அரசியல் கட்சிகள் அடிப்படையாகக் கொண்டு வேட்பாளர்கள் தேர்வில் கவனம் செலுத்தியதால், “எல்லா அரசியல்வாதிகளும் ஒன்றுதான்“ என்ற ஒரு வாக்காளர் வெறுப்புணர்வை தூண்டிவிட்டன. உண்மையில், வெற்றியின் தேடல் பாஜகவை “ஒரு தூய்மையான கட்சி“ என்ற அதன் கூற்றுக்களை கைவிடச் செய்ததோடு, பெல்லாரியிலிருந்து பெயர்போன சுரங்க பிரபுக்களை தேர்தலுக்கு கொண்டுவரச் செய்தது. மேலும், வம்ச அரசியலுக்கு எதிரான அதனுடைய உரத்த சொல்லாடல்களை மறந்து, ரெட்டி சகோதரர்கள் மூவரில் இரண்டு பேரையும், அவர்களுடைய ஆறு உறவினர்களையும் தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தியது.
அரசியல் நேர்மையின் பலவீனமான தன்மை வாக்கு எண்ணிக்கை நாளன்று வெளிப்படையாகவே தெரிந்தது. தேர்தல் முடிவுகள் வந்த உடனேயே, 104 இடங்களை வென்று மாநிலத்தில் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவை அரசாங்கம் அமைக்க ஆளுநர் நிச்சயமாக அழைப்பார் என தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் யூகிக்க ஆரம்பித்து விட்டனர். இந்த யூகம் அச்சுறுத்தலாக இருந்தது. 224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பாதியளவை கடக்க இன்னும் கூடுதலாக தேவைப்படும் எம்.எல்.ஏக்களை பாஜக எங்கே கண்டுபிடிக்கும்? இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே இந்த முறை வெற்றி பெற்றிருந்தனர். மீதமுள்ள 115 வேட்பாளர்கள் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளில் இருந்தனர். இவ்விரு கட்சிளும் இணைந்து அரசாங்கம் அமைக்க ஏற்கெனவே கோரியிருந்தன.
குதிரைப் பேரம் மற்றும் ரிசார்ட் அரசியல் போன்ற பரிச்சயமான சொற்றொடர்கள் விரைவில் வர்ணனைகளில் வெளிப்பட்டன. ஒரு எம்.எல்.ஏ-வுக்கு நூறு கோடி ரூபாய் மற்றும் அமைச்சர் பதவி என கவர்ச்சிப்பொருள்கள் நீட்டப்பட்டாலும், அந்த எம்.எல்.ஏக்களின் விலைபோகாத தன்மையால் குதிரை பேரம் என்ற சொற்றொடர் எடுபடவில்லை. தேர்தல் பிரதிநிதித்துவத்தின் ஒருமைப்பாடு மீறலை “ரிசார்ட் அரசியல்“ என்ற சொற்றொடர் அற்பத்தனமாக்குகிறது. எம்.எல்.ஏக்களின் விசுவாசம் குறித்து நிச்சயமற்ற நிலை இருந்ததால், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளும் தங்களது எம்.எல்..ஏக்களை ஹைதராபத்துக்கு கொண்டு சென்றன. எம்.எல்.ஏக்கள் ஒன்றாக வைக்கப்படும் காட்சிகள் தேர்தல் நடைமுறைக்கு சிறப்பான காட்சி மற்றும் சஸ்பென்ஸை சேர்த்தது. சந்தேகமில்லை. ஆனால், பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை நிர்வகிக்கும் ஒருவழியாக, தேர்தலில் வாக்காளரின் நம்பிக்கையை அவர்கள் அவமானப்படுத்துறார்கள்.
உச்சநீதிமன்றத்தின் தலையீடுகள் – பெரும்பான்மையை நிரூபிக்க பாஜகவுக்கு ஆளுநர் அனுமதித்திருந்த காலத்தை குறைத்தது,, சட்டப்பேரவையில் வெளிப்படையான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் மற்றும் அந்த நடவடிக்கைகள் பகிரங்கமாக ஒளிபரப்பப்பட வேண்டும் என்ற உத்தரவுகள் – நாட்டின் உயர்ந்த நீதித்துறை மீதான நம்பிக்கையை மீட்டன. ஒரு கட்சி என்ன விலை கொடுத்தாவது வெல்ல வேண்டும் என தீர்மானித்தால், சட்டப்பேரவையில் ஒரு மெஜாரிட்டியை எப்படி பெறுவது என்பது ஒரு டெக்னிக்கல் விஷயம் மட்டுமே என அது காட்டியது.
மதச்சார்பற்ற கொள்கைகள் காரணமாகவே இணைந்தோம் என்று தங்களது கூட்டணியை காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் நியாயப்படுத்தியுள்ளன. தனது கூட்டணி பங்காளியுடன் ஒரு நல்ல மனசாட்சியுடன் இணைந்து செயல்பட அனுமதிக்கும் ஒரு நெறிமுறையின் அடையாளமாக, பாஜகவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி மறைமுக கூட்டணி வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டியதற்காக அக்கட்சி தலைவர் தேவெ கௌடாவிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டார். மத்தியில் விதியாக, ஒரு கூட்டணி அரசாங்கம் அமைந்திருந்தாலும், மாநில அளவில் அடிக்கடி கூட்டணி உடையும் சம்வங்கள் காரணமாக, அதன் திறமையான செயல்பாடு மற்றும் நிலைத்தன்மை குறித்த சந்தேகங்கள் இருக்கின்றன.
காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி நிலையாக இருக்குமா? இரண்டு கட்சிகளுக்குமிடையே அமைச்சர்களின் நியமனம், உத்தியோகப்புர்வமான நியமனங்கள் மற்றும் சாதி மற்றும் மத காரணிகளை சமநிலைப்படுத்துதல் ஆகிய ஒரு திருப்திகரமான பகிர்வுக்கான சவால்கள் தவிர, கூட்டணி ஏற்பாட்டிற்கு அரசியல் கட்சிகளின் ஒட்டுமொத்த அர்ப்பணிப்பு பெரிதும் தேவைப்படும். இருகட்சிகளின் தொண்டர்களும் பரஸ்பரம் தொடர்பு கொள்ள வழிவகுக்கும் ஒத்துழைப்புக்கான நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். இந்த நிலையில் ஒரு முரண்பாடு, கொள்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதை இடையூறு செய்கிறது.. கூட்டணியின் நிலைப்புத்தன்மை எதிர்க்கட்சியின் செயல்பாட்டைப் பொறுத்தது என்பதை நிச்சயமாக மறக்கக் கூடாது். ஆக்கப்பூர்வமான உதவியை பாஜக அளிக்குமா? அல்லது கூட்டணியை வீழ்த்த தன் உழைப்பை செலவிடுமா ?
காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணியின் ஒரு அனேக விளைவு, கர்நாடகாவில் வகுப்புவாத மற்றும் மதச்சார்பற்ற பிரிவு வழியே அரசியலின் தீவிர முனைவாக்கம்.(polarization) தங்களுக்கிடையே கணிசமான வேறுபாடுகளைக் கொண்டுள்ள காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி, அவர்கள் மதச்சார்பற்ற பலகையில் ஒன்றாக வருவதால், பிரிக்க முடியாதவையாக தோன்றலாம். இத்தகைய ஒரு விளைவு பாஜக Vs மற்றவர்கள் என்ற பெரிய இந்திய அரசியலின் தற்போதைய முனைவாக்கத்தை எதிரொலிக்கும்.
காங்கிரஸ் கட்சியின் மறுகண்டுபிடிப்புக்கான அறிகுறிகளாக எவை தோன்றுகின்றனவென்றால், மதச்சார்பற்ற ஜனதா தளம் போன்ற ஒரு பிராந்திய கட்சியுடன் இணைந்து வேலை செய்வது பற்றி அதன் தேசியத் தலைவரகளின் பதில்கள் அதிக அளவிலான மரியாதை மற்றும் புரிதலைக் காட்டுகின்றன. ஒன்றாக இணைந்து அரசாங்கத்தை அமைக்கும் அவ்விரு கட்சிகளின் தீர்மானமான தேர்தலுக்குப் பிந்தைய முயற்சிகள் பாஜகவின் “வெல்லமுடியாதது“ என்ற உணர்வு மற்றும் அதன் தேர்தல் நிர்வாக வழிமுறைகளை அசைத்திருக்கின்றன.
இறுதியாக, தேர்தல் பிரச்சாரத்தின்போது கோயில்கள், தர்காக்கள் மற்றும் தேவாலயங்களுக்கு ராகுல் காந்தி விஜயம் மேற்கொண்டது பொதுவாழ்வில் மதம் என்ற கேள்வியை அக்கட்சி மறுபரிசீலனை செய்துள்ளதை வெளிப்படுத்தியது.
காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளும் இணைந்து நன்றாக பணியாற்றினால், மக்களவைக்கு 28 எம்.பி-க்களை அனுப்புகிற 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் நல்ல செயல்திறனைக் காட்டுவார்கள். காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கு BSP, CPM, NCP, RJD, SP, TRS, TDP மற்றும் TMC ஆகியவற்றின் தலைவர்களின் ஆதரவு ஏற்கனவே இந்த விஷயத்தில் விவாதங்களை உற்சாகப்படுத்தியுள்ளன. கர்நாடக தேர்தல் இந்திய அரசியலில் ஒரு புதிய கட்டத்தை (new phase) தொடங்கி வைத்திருக்கலாம்.
– சந்தன் கவுடா