
Indian prime minister-elect Narendra Modi (4th R) performs the “Ganga Puja” religious ritual with Bharatiya Janata Party (BJP) President Rajnath Singh (C) and senior BJP leader Amit Shah (3rd L) at the banks of the River Ganges in Varanasi on May 17, 2014. Indian prime minister-elect Narendra Modi offered prayers by the river Ganges May 17 in a religious ceremony beamed live on television that underlined his Hindu nationalist roots a day after his stunning electoral triumph. AFP PHOTO/ROBERTO SCHMIDT
பாரதீய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷாவின் அறிவிப்பு ஒன்றைக் கேட்டு நான் மயங்கி விழுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் அப்படி ஒரு அறிவிப்பு வந்த்து. ”மத அடிப்படையில் யாரும் அரசியல் ஆதரவை வளர்க்கக்கூடாது, மக்களை ஒருங்கிணைக்க மதத்தை பயன்படுத்தக் கூடாது” என அவர் சொன்னதைக் கேட்டபோது எனக்கு உண்மையில் அதுதான் நடந்தது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கட்சித் தலைவர் அமித் ஷா ஆகியே இருவரது முழுமையான ஆதிக்கம் பாஜகவில் எல்.கே. அத்வானியை முற்றிலும் பொருத்தமற்றவராக ஆக்கியது என்பது ஊரறிந்த உண்மை. வழக்கொழிந்துபோன மகாபாரத காவியத்தில் வரும் பீஷ்ம பிதாமகனின் பிரதிநிதியாக அவர் வந்திருந்தார்., “மதச்சார்பற்றவர் யார்“ மற்றும் “போலி மதச்சராரபற்றவர் யார்“ என்ற அவரது வரையறையும் காலாவதியாகி வழக்கற்றுப் போயிருந்தது என்பது எனக்கு தெரியாது.
அத்வானியின் இந்த விளக்கம் மறந்து போகப்பட்ட நிலையில் தற்போது அது புதிய பரிணாமம் எடுத்துள்ளது. அமித் ஷா சொன்னது போலவே, எல்லோரும் மதச்சார்பற்றவர்களாக மாறிவிட்டனர். எனவே நான் ஒரு வித்தியாசமான அனுபவத்தை அடைந்தேன். வரும் வரும் என்று கூறப்பட்ட அந்த அச்சே தின் (நல்ல நாள்) இறுதியாக வந்து விட்டது என எனக்கு கிட்டத்தட்ட நம்பிக்கை கிடைத்தது.
ஆனால் துரதிருஷ்டவசமாக, நல்ல விஷயங்கள் ஒரு மிகக் குறுகிய வாழ்வைக் கொண்டிருக்கின்றன. அமித் ஷாவின் ஜும்லாவின் பின்னணியை நான் கவனித்தபோது, நான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன். உண்மையில் அவர் என்ன சொன்னார் என்றால், இந்து மதத்தைத் தவிர வேறு எந்த மதமும் அரசியல் ஆதரவை வளர்க்கவும், அரசியல் நோக்கங்களை அடைய மக்களை பிளவுபடுத்தவும் பயன்படுத்தப்படக் கூடாது என்பதே. இவை அனைத்துக்கும் பிறகு, இந்தியா ஒரு இந்து தேசமாக திகழ்கிறது. அங்கே, பெரும்பான்மை மதத்தின் அடிப்படையில்தான் அரசியலை நடத்த வேண்டும் என காலாவதியான அரசியலமைப்பு சட்டம் சொல்லக் கூடும். பிற மதங்களும் அதனுடன் சேர்ந்து வாழ முடியும் என்ற விஷயமே, இந்து மதத்தின் சகிப்புத்தன்மையை காட்டுகிறது. ஆனால் அவர்கள் தங்களது இடம் எது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
டெல்லி கத்தோலிக்க மறைமாவட்டத்திலுள்ள அனைத்து குருமார்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்கும் தில்லி பேராயர் அனில் கோட்டோ எழுதிய ஒரு கடிதத்திற்கான அவருடை எதிர்வினையாக அமித் ஷா இதை கூறினார். இதுதான் அமித் ஷா கூற வந்த்து. பேராயர் கோட்டோ அந்த கடிதத்தில் ஒரு குற்றம் புரிந்திருந்தார். அதாவது, “நமது அரசியலமைப்பிலும், நாட்டின் மதச்சார்பற்ற துணிச்சலான ஜனநாயகக் கொள்கைகளுக்கு அச்சுறுத்தலான மற்றும் கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்., பொதுத் தேர்தலை நாம் அணுகும்போது தேசத்திற்காக நாம் ஜெபிக்க வேண்டும்,” என அவர் அக்கடிதத்தில் கூறியிருந்தார்.
அப்படி என்ன அதில் ஆட்சேபணைக்குரியது இருக்கிறது என்று தெரியவில்லை. பல தொலைக்காட்சி செய்திச் சேனல்கள் “பேராயரின் இந்தக் கடிதம் சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரானது“ என சொல்கின்றன. பாஜக தலைவர் அமித் ஷாவும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-கும் பேராயரின் கடித்ததுக்கு எதிராக கடுமையான எதிர்வினையாற்றினர். மோடி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து, சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்பது உண்மையில்லையா? ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்குமாறு பாமர மக்களை அந்த பேராயர் கேட்டுக்கொண்டுள்ளாரா? ஒரு பிரார்த்தனையின் வரைவுடன் சேர்ந்து எழுதிய கடிதத்தில் மத அடிப்படையில் அரசியல் அணிதிரட்டல் எங்கே இருக்கிறது? பெரும்பான்மை சமூகத்தின் மதத்துடன் தன்னுடைய நெருக்கமான, வெளிப்படையான உறவைப் பேணும் “இந்துத்துவாவை“ அதன் வழிகாட்டு தத்துவமாக கொண்டுள்ள ஒரு கட்சி இதை பேச தகுதியானதா ?
சுதந்திரத்திற்கு பின்னர் இந்துமதத்தின் அடிப்படையில் ஸ்வாமி கரபத்ரி மஹாராஜ் தன்னுடைய ராம்ராஜ்ய பரிஷத்தை உருவாக்கியது உண்மையில்லையா? 1996-ஆம் ஆண்டில் இந்து சாதுக்கள் பசுமாடு பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கினர். அது நாடாளுமன்றத்தைச் சுற்றி நின்று தாக்கியது. இதையடுத்து, சட்டம ஒழுங்கு சிக்கல் உருவானது. காவல்துறையோடு மோதல் ஏற்பட்டது. இது உண்மை இல்லையா? பாஜக மற்றும் வி.எச்.பி எனப்படும் விஸ்வ இந்து பரிஷத் ஆகியவை தர்ம சன்சாத்தை அமைப்பதில் ஒரு முக்கிய பங்கு வகித்தன. இந்து சாதுக்கள் மற்றும் மகான்கள் ஆகியோர் அயோத்தியில் பாபர் மசூதி அமைந்துள்ள இடத்தில் ராமர் கோயில் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினர் என்பது உண்மையா இல்லையா ?
மகான் அவைத்யாநாத், யோகி ஆதித்யநாத், உமா பாரதி மற்றும் சாக்ஷி மஹராஜ் போன்ற பல மதத் தலைவர்கள் பா.ஜ.க வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிட்டனர் என்பது உண்மையில்லையா? அவர்களில் பலர் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சில் ஈடுபட்டனர். மேலும், விஸ்வ இந்து பரிஷத் தலைவர் ஆச்சார்யா தர்மேந்திரா அதற்காக தண்டிக்கப்பட்டார் என்பது உண்மையில்லையா? அவர்களது பேச்சுக்களின் வீடியோக்களை இன்னும் பார்க்க முடியும். அவைகள் பொது களத்தில் (public domain) வினியோகிக்கப்பட்டு வருகின்றன. அத்வானியின் ரத யாத்திரை இந்து வெகுஜனங்களை மத அடிப்படையில் அணிதிரட்டுவதற்கான ஒரு அப்பட்டமான முயற்சி இல்லையா? அயோத்தியா இயக்கம், அரசியல் நோக்கங்களை அடைய மதத்தை பயன்படுத்துவதற்கான ஒரு உதாரணம் இல்லையா ? இத்தகைய இந்து மத அடிப்படையிலான அரசியல் மற்றும் இயக்கங்கள்தான் இன்று பிஜேபிக்கு வெற்றியை பெற்றுத் தந்துள்து என்பது உண்மையா இல்லையா ?
சமீபத்தில், குஜராத் அரசாங்கம் அம் மாநிலத்தில நல்ல மழைபொழிய வேண்டி தெய்வீக தலையீட்டை கேட்டது. மாநிலத்தின் நீர்வழிகளை ஆழமாக தோண்டிய பின், மாநிலத்தில் நல்ல மழைபொழிய வேண்டி இந்திரன் மற்றும் வருண பகவானின் கோபத்தை தணித்து சமாதானப்படுத்த, மாநிலத்தில் 33 மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் மற்றும் எட்டு முக்கிய நகரங்களிலும் மே 31-ஆம் தேதி 41 மழைவேண்டி யாகங்கள் (பர்ஸன்ய யாகங்கள்) நடத்த விஜய் ரூபானி தலைமையிலான பாஜக அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கோரக்பூரில் கோரக்நாத் பீடத்தின் தலைவரான யோகி ஆதித்யநாத், தற்போது உத்தரபிரதேச முதலமைச்சர். இந்து சன்னியாசினியான உமா பாரதி, நரேந்திர மோடி அரசாங்கத்தில் அமைச்சராக உள்ளார். கைரானா மக்களவை இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்தபோது, யோகி ஆதித்யநாத், முஜாஃபர் நகரில் முழுஅளவில் கலவரம் தொடங்குவதற்கு முன்னர் கொல்லப்பட்ட இரண்டு இந்து சிறுவர்களின் பெயர்களை சொல்லி வகுப்புவாத தீயை வெளிப்படையாக தூண்டிவிட்டார். சமீத்திய ஆண்டுகளில், முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ சிறுபான்மையினருக்கு எதிராக வலுவான தந்திரோபாயங்களைப் பயன்படுத்துவதை இலக்காக கொண்டு “லவ் ஜிகாத்“, மற்றும் “கர் வாபஸி“ போன்ற பல பிரச்சாரங்களை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தொடங்கியது.
பத்மாவதி படத்திற்கு எதிரான வன்முறை பிரச்சாரம் இந்துத்துவா சக்திகளின் முழு ஆதரவுடன், இயற்கையாக முஸ்லிம்களுக்கு எதிராக இருந்தது. ஜின்னாவின் உருவப்படத்திற்கு எதிராக அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடக்கும் பிரச்சாரம் முஸ்லீம்களையும் நோக்கமாகக் கொண்டது. ஏனெனில், முஸ்லிம்களின் விசுவாசம் பாக்கிஸ்தானுடனும், அதன் நிறுவனர் எம். ஏ. ஜின்னாவுடனும் இருப்பதாக பொதுவான இந்துக்களின் மனதில் இது பதிய வைக்கப் படுகிறது.
மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு போன்ற அரசியல்-சிந்தனை எதிர்ப்பாளர்களைத் தாக்க போலி தகவல்களையும் புகைப்படச் சின்னங்களையும் பயன்படுத்தி இணையம் மற்றும் சமூக ஊடக தளங்களில் தொடர்ச்சியாக “கறைபடுத்தும் பிரச்சாரங்கள்“ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜவஹர்லால் நேரு முஸ்லிம் தாத்தாவின் வம்சாவழி என்றும், மகாத்மா காந்தி முஸ்லிம்களின் நலன்விரும்பி மற்றும் இந்து நலன்களின் எதிரி என்றும் வர்ணிக்கப்படுகின்றனர். படுகொலையை நியாயப்படுத்த காந்திக்கு எதிராக நாதுராம் கோட்சே பயன்படுத்திய குற்றச்சாட்டு இது.
பா.ஜ.க உள்ளிட்ட அனைத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளும் வகுப்புவாத மற்றும் மத அடிப்படையிலான இந்து மக்களை அணிதிரட்டும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இந்த வகுப்புவாத திட்டத்தில் சாதுக்கள், சன்னயாசிகள், மகான்கள், சாமியார்கள் மற்றும் சாமியாரினிகள் மற்றும் இதர இந்து மத மதத் தலைவர்கள் தீவிரமாக அவர்களுக்கு உதவுகிறார்கள். தேரா சச்சா சௌதா தலைவர் ராம் ரஹீம், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்கும்படி தனது ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்த போது பாஜக தலைவர்கள் எதிர்க்கவில்லை.
“ராம ஜாதே“ மற்றும் “ஹராம் ஜாதே” ஆகியவற்றிற்கிடையே தேர்ந்தெடுக்குமாறு ஒரு பாஜக பெண் தலைவர் ஹிந்து வாக்காளர்களை அழைத்தபோது, அமித் ஷாவின் மதச்சார்பற்ற மனசாட்சி அவரை குத்தவில்லை, ராஜ்நாத் சிங் ஒரு விரலைக்கூட உயர்த்தவில்லை. ஆகையால், அரசியலை மதத்துடன் கலப்பதற்கு எதிரான கோபம் மற்றும் மதச்சார்பின்மையை கோரும் இவர்களது தகுதிகளைப் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது.
எனினும், அவர்கள் தங்கள் வார்த்தைகளை உறுதியாக நின்று பின்பற்றி, அரசியல் ஆதாயங்களுக்காக இந்துமதத்தை பயன்படுத்துவதை நிறுத்துவார்களேயானால், அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோருக்காக நான் மீண்டும் மயக்கமடைய தயாராக இருக்கிறேன்.
குல்தீப் குமார்
Dear Editor, At times you sound to be more hypocrite. Let me be blunt here. Few years ago, when Sonia attended Catholic meet, one and all political crooks maintained silence. No Tamil Day magazines did write on Sonia’s participation. When Hindus or Hindu leaders attempt to sport thilak on their forehead or performing certain rituals, all of you make sarcastic wildass caustic remarks on them. Of course, I am a Hindu, but I respect other faiths/religions as well. If you look at Pakistan or any other Islamic states, they promote only their religion, besides women don’t even have more privileges like men. I have high regards on savukku, but you got to stop attacking a particular religion like others do. Please understand that people’s faith must be regarded by media. Hope you should make a difference.
@Sekar.Still you didn’t understand Savukku. Even I seen his some articles criticizing Islam Religion. I seen he never ever criticize so called Christianity . Because it is his own religion. we Hindus even try to criticize our own Gurus like Nithayananada or Kanchi, Madurai Mutt Seers. But, you these Crypto christian ever criticize Christianity? It never happened. whether he knew or not this religion killed nearly 12 crore Population in American continent in name religion.we are saying continuously without stop.,.
முதலில் நீங்கள் நடுநிலையுடன் பேசுங்கள் , உங்களுடைய பதிவுகள் அனைத்தும் இந்து மதம் , பாரதீய ஜனதா இவர்களை மட்டும் எழுதுகிறீர்கள் , ஏன் மற்ற மதத்தில் உள்ள குறைகளை சுட்டி கட்ட முடியுமா , முஸ்லீம் மட்டும் கிருத்துவ அமைப்புகளையும் அவர்கள் செய்யும் தவறுகளையும் உங்களால் எழுத முடியுமா ???