கத்திரி வெயிலில் மாமா ஜி மிகவும் களைத்து போய் நடந்து வந்தார்
ஆமா ஜி : என்ன ஜி நடந்து வரீங்க? வண்டி என்ன ஆச்சு?
மாமா ஜி : அத ஏன் கேக்கறீங்க? காலையில் வண்டியை எடுத்துட்டு ஒரு கிலோமீட்டர் தான் வந்திருப்பேன் பெட்ரோல் தீந்துடுச்சு, சரினு பெட்ரோல் பங்க்கு போய் டேங்க் புல் பண்ணுடா அம்பினேன். கேஷா, கார்டானு கேட்டான். பக்தாள் எல்லாம் என்னைக்கு டா கேஷ்ல டீல் பண்ணினோம், டிஜிட்டல் இந்தியா டா, மோடி டானு ஒரு அப்பு அப்பினேன்.
ஆமா ஜி : அப்பறம்?
மாமா ஜி : பில்லு போட்டுட்டு வந்து நீட்டுனான் வந்தது பாருங்க கோவம்… யாரடா ஏமாத்த பாக்கறே, எப்பவும் டேங்க் ஃபுல் பண்ணினா 700 ரூபாய் தாண்டா ஆகும் இன்னைக்கு என்ன 850 ரூபாய் சொல்லறேன்னு இன்னொரு அப்பு
ஆமா ஜி : அய்யய்யோ
மாமா ஜி : அப்பறம் தான் தெரிஞ்சுது மோடி ஜி தேர்தல் முடிஞ்சதும் ஜிவுன்னு பெட்ரோல் விலையை ஏத்திட்டாருனு. மன்னிச்சு கோடா அம்பினு கார்டா தேச்சா என் நேரம் அது வேலை செய்யல, கேஷ் 10 பைசா இல்ல. 5 அப்பு அப்பி புது புல்லட்ட புடிங்கி வச்சுட்டானுக. பங்க் வாசலில் பெரிய பேனர்ல மோடி ஜி என்னை பார்த்தபடி இருந்தார் , அந்த பார்வைக்கு என்ன அர்த்தம்னு யோசிச்சுகிட்டே நடந்து வந்துட்டேன்.
ஆமா ஜி : அட பாவமே, சரி ஜி நம்ம பக்கத்து நாட்டுக்காரன் எல்லாம் பெட்ரோல் கம்மி விலைக்கு தான் விக்கறான். நாம மட்டும் ஏன் ஜி 80 ரூபாய்க்கு மேல வித்துகிட்டு இருக்கோம் ?
மாமா ஜி : எல்லாமே தேஷ பாதுகாப்புக்கு தான் ஜி செலவு பண்றோம், இப்போ பாருங்க அதுல வர காசை வைச்சுதான் தான் சிவாஜிக்கு, பட்டேலுக்கு எல்லாம் சிலை செஞ்சிருக்கோம். ஒவ்வொரு செலையும் ஆயிரக்கணக்கான கோடி. நம்ப தேஷத் தலைவர்களுக்கு நாமளே மரியாதை செய்யலன்னா எப்படி ? பாதுகாப்பு என்ன ஆகறது ?
ஆமா ஜி : என்ன ஜி, துப்பாக்கி வாங்கி போட்டா அது பாதுகாப்பு. சிலை செய்யறது எப்படி ஜி தேச பாதுகாப்பாகும்?
மாமா ஜி : ஜி எல்லா சிலையும் வாஸ்து பாத்து வச்சிருக்கோம், இதே மாதிரி சிலை இனி நாடு பூரா வைக்க போறோம். அணு குண்டையே தூக்கி, நம்ம அமித் ஜி மண்டையில் போட்டாலும் வெடிக்காது, வழுக்கிட்டு போயிரும்.
ஆமா ஜி : பாத்து ஜி தமிழசை அக்கா மண்டைல போட்டுடாதீங்க, புதருக்குள்ள மாட்டிடும், தேடி எடுக்கறது கஷ்டம்.
நம்ப நாட்டுக்காக இவ்வளவு நல்லது பண்ணும். அப்போ கூட எதிர்க் கட்சிங்க ஏன் ஜி நம்பளை திட்டிட்டே இருக்காங்க ?
மாமா ஜி : ஏன்னா நம்ம வாய் அப்படி, 2014க்கு முன்னாடி பாத்ரூம்ல தண்ணி வரலைனாலும் காங்கிரஸ் தான் காரணம்னு ட்வீட் போட்டுட்டு இருந்தோம். அதான் இப்போ நம்மல பிரிச்சு மேயரானுக ஜி
ஆமா ஜி : கொஞ்சம் ஓவர தான் ஜி பேசிருக்கோம் , பேசாம போட்ட ட்வீட் பூரா டெலீட் செஞ்சுட்டா?
மாமா ஜி : ம்க்கும் அதுக்கு நம்மாளுங்க அத்தனை பேரு அக்கௌன்ட் பூட்டி மூடிட்டு புதுசா ஒரு அக்கௌன்ட் தான் ஆரம்பிக்கணும், கொஞ்ச நஞ்சமா பேசிருக்கோம்.
ஆமா ஜி : சரி ஜி, நம்ம அமித் ஜி பேட்டி பாத்தீங்களா, பின்னிட்டார். நம்மல எதிர் கேள்வி கேட்டவன் வாய எல்லாம் அடைச்சுட்டார்
மாமா ஜி : நல்ல அடைச்சார், ஏற்கனவே நம்மால திருட்டு பசங்கனு கூப்பிட்றவன் வாயிக்கு அவல் போட்ட மாதிரி பண்ணிட்டாரு. காங்கிரஸ்காரன் மட்டும் MLA வ அடைச்சு வைக்காட்டி நாங்க தான் பெரும்பான்மை நிரூபிச்சிருப்போம்னு சொல்லறாரு .
ஆமா ஜி : இப்படியா ஜி சொன்னாரு? பக்கத்துக்கு வீட்டு காரன் கதவை சாத்தாம வெளியூர் போயிருந்தா நான் இன்னேரம் பணக்காரன் ஆயிருப்பேன்ற கதையா இருக்கே.
மாமா ஜி : பாருங்க இப்படி தான் உளறி வச்சிருக்காரு ஜி, நாக்பூர் இவர் மேல செம காண்டா இருகாங்க ஜி
ஆமா ஜி : இவரை இப்படி சொல்ரீங்க, நம்ம மோடி ஜி உருதுல ட்வீட் போட்டு ரம்ஜான் வாழ்த்தெலாம் சொல்றரே ஜி. அதுவும் முஹம்மது நபியோட சமத்துவ கோட்பாடு நம்ம நாட்டை முன்னேற்றி செல்லும்னு வேற சொல்லறாரு. இங்க நம்ம தன்மான சிங்கம் ராஜா ஜி, நான் ஒரு விராட் ஹிந்து அதுனால நோம்பு கஞ்சி குடிக்க மாட்டேன்னு சொல்றரே அவரோட மூஞ்சில கரிய பூசின மாதிரி ஆகாதா?
மாமா ஜி : ஆமா இவருக்கு தான் நோம்பு கஞ்சி குடுக்கறோம்னு லைனில் நிக்கறாங்க, நீங்க வேற ஏன் ஜி. உண்மையாவே குடுத்து பாருங்க முக்காடு போட்டுட்டு மொத ஆளா வாங்கி குடிப்பாரு ஜி. மோடி ஜிக்கு இப்போ என்ன பண்றதுனு தெரியல, முஸ்லிமை பக்கத்துல சேத்துக்கறதா இல்ல பழைய படி ராமர் கோவில் கட்ட போறேன்னு உதார் விடறதான்னு கொழப்பத்துல இந்த மாதிரி வேலை பண்றாரு.
ஆமா ஜி : அது இருக்கட்டும் ஜி ட்ரெயின்ல காந்தி ஜெயந்தி அன்னைக்கு அசைவ சாப்பாடு பரிமாற மாட்டோம்னு சொல்லிருக்காங்க பாத்தீங்களா ?
மாமா ஜி : ஒரேடியா நிறுத்திட்டா பிரச்னை பண்ணுவாங்க ஜி, அடுத்து மஹாவீர் ஜெயந்தி, புத்த பூர்ணிமா, அம்மாவாசை, கிறிஸ்துமஸ் அப்படினு படி படியா கொண்டு போய்டலாம் ஜி
ஆமா ஜி :கிறிஸ்துமஸ்க்கு பிரயாணில ஜி சாப்பிடுவாங்க
மாமா ஜி : என்ன ஜி நீங்க, கிறிஸ்துவே கிருஷ்ணரோட அவதாரம்னு வாட்சப் வந்துச்சே பாக்கலயா ?
ஆமா ஜி : அது சரி.
நம்ம மோடி ஜி ஏதோ Fitness Challengeல் கலந்துக்க போறாராமே. அப்படினா என்ன ஜி?
மாமா ஜி : அது ஒன்னும் இல்ல ஜி உடற்பயிற்சி செய்யற மாதிரி வீடியோ எடுத்து போடணும்
ஆமா ஜி : போட்டோனா பிரச்னை இல்ல ஜி போட்டோஷொப் பண்ணிரலாம் வீடியோ கஷ்டமாச்சே, ஆனா தேவை இருக்காதுன்னு நினைக்கறேன். மோடி ஜி தான் நல்லா யோகா பண்ணுவாரே
மாமா ஜி : நல்லா பண்ணுனாரு
ஆமா ஜி : என்ன ஜி இது ஒரு டைப்பான யோகவா இருக்கு, கை முட்டிக்கு கீழ போக மாட்டேனுதே ஜி? இதுக்கு முன்னாடி ஒரு ஆப் விட்டாங்க, அதுல மோடி ஜி நல்லா செஞ்சாரே ஜி. இந்த போட்டோவை பாருங்க
மாமா ஜி : இப்படி தான் ஊர ஏமாத்தறோம், நம்ம மோடி ஜி உடம்புல வேலை செய்யற ஒரே பார்ட் வாய் மட்டும் தான், ஓயாம பேசும். வேணும்னா அத ரெகார்ட் பண்ணி எதுனாவது ஒரு பேரு வச்சு வித்யசமான உடற்பயிற்சின்னு சொல்லி தப்பிச்சிட வேண்டியது தான்.
ஆமா ஜி : சரி. மோடி இதுக்கு சேலஞ்சை ஒத்துக்கிட்டாரு. இதே மாதிரி டிகிரி சர்ட்டிப்பிகேட்டை போடுங்க பாப்போம்னு ஒருத்தன் கேட்ருக்கானே ஜி. அவனோட டிகிரி சர்டிபிகேட்டை போட்ருக்கானே ஜி.
மாமா ஜி : இருந்தா போட மாட்டாரா ஜி.
ஆமா ஜி : அப்போ எதுக்கு ஜி பொய் சொன்னாரு ?
மாமா ஜி : என்ன ஜி இப்படி கேட்டுட்டீங்க ?
ஆமா ஜி : சாரி ஜி. ஏதாவது தப்பா கேட்டுட்டேனா.
மாமா ஜி : தப்பாத்தான் கேட்டீங்க. மோடி ஜி என்னைக்கு உண்மையை பேசியிருக்காரு ? வாயைத் தொறந்தாலே பொய்தானே ? உண்மை அவருக்கு சுத்தமா புடிக்காத வார்த்தை ஜி. ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடி இருந்து அவரு பேசுனதையெல்லாம் கொஞ்சம் பின்னோக்கி யோசிச்சு பாருங்க.
ஆமா ஜி : ஆமா மாமா ஜி. வெறும் பொய்யா புளுகியிருக்காரு.
மாமா ஜி. அப்புறம் டிகிரி படிச்சதை மட்டும் எப்படி உண்மையின்னு நம்பறீங்க. அதுவும் பொய்தான்.
ஆமா ஜி : இப்போ சேலஞ்ச் பண்ணி மாட்டிக்கிட்டாரே. என்ன பண்றது ?
மாமா ஜி : 50 நாள் டைம் குடுங்க. சொன்னது நடக்கலன்னா என்னை உயிரோட கொளுத்துங்கன்னு சொன்னாரே ஞாபகம் இருக்கா.
ஆமா ஜி : அவர் சொன்னது எதுவுமே நடக்கலை. இப்போ 500 நாளு ஆயிடுச்சி. எதையாவது கண்டுக்கிறாரா. மித்ரோன் னு கூசாம புளுகிட்டு திரியலையா. அதே மாதிரிதான் இதுவும்.
ஆமா ஜி : அதுவும் சரி தான்.
ஜி இந்த தினமலர் பத்திரிகைகாரன பார்த்தீங்களா, இப்படி காசு வாங்கிட்டு நமக்கு ஆதரவா செய்தி வெளியிடுவோம்னு சொல்லி மாட்டிகிட்டாரு
மாமா ஜி : பார்த்தேன் ஜி, மனசுக்கு ரொம்ப வேதனையா இருந்துச்சு
ஆமா ஜி : சமுதாயத்தின் நான்காம் தூண் இப்படி காசு வாங்கி செய்தி போடறாங்கனு கவலைப்படறீங்களா ஜி?
மாமா ஜி : அது இல்ல ஜி, நம்ம கிட்டயே அவன் காசு எதிர்பார்க்காரன் பாருங்களேன். இது தான் செய்தி போடுன்னா போடவேண்டியது தானே. நம்பளை மாதிரியே அவனும் பொய்யைத்தான் புளுகிட்டு திரியிறான். நம்ப சொல்ற பொய்யை போட்றதுக்கு எதுக்கு பேமென்ட் கேக்கறானுங்க. ? ரொம்ப ஓவரா போறானுக ஜி. ஒரு ரெய்டு விட்ட சரியா போய்டும்
ஆமா ஜி : பாவம் ஜி நம்ம ஆளு, தெரியாம காசு எதிர்பார்த்துட்டார். பேசிக்கலாம் ஜி
மாமா ஜி : நீங்க சொல்றதுக்காக பாக்கறேன் ஜி இல்லனா அவ்ளோ தான்.
ஆமா ஜி : ஜி மோடி ஜி ரோடு ஷோ எல்லாம் போய் ஒரு ரோடு திறந்து வைத்தாரே. பயங்கரமான ரோடா இருக்குமோ?
மாமா ஜி : 6 km ஓபன் பன்னிருக்கோம் ஜி
ஆமா ஜி : என்னது 6km தானா? அதெல்லாம் ஓபன் பண்ண நம்ம ஊரில் MLA கூட வரமாட்டாரே ஜி, மக்களே கடுப்பாகி நைட் ஓட நைட்டா ஓபன் பன்னிருவங்களே
மாமா ஜி : ஜி உத்தரபிரேதசத்தில் இடைத்தேர்தல், பிரச்சாரம் பண்ணும் தேதியும் முடிஞ்சது . அதுனால ரோட துறக்கற மாதிரி ஒரு ஸ்டண்ட் அடிச்சு ஊரையே பேச வச்சாச்சு. இனி அடுத்த பொது தேர்தல் வரைக்கும் ஸ்பீட் பிரேக்கரல இருந்து போஸ்ட் பாக்ஸ் வரைக்கும் மோடி ஜி கையால தான் திறப்பு விழாவே
ஆமா ஜி : இப்படி ஓபன் ஜீப்ல போறாரே, பாதுகாப்பு பிரச்சனை எதுவும் வந்திடாது? எவனோ ஒரு களவாணி பய அவ்வளவு பாதுகாப்பையும் மீறி மோடி ஜி காலை தொட்டு கும்பிட்டானாமே ஜி
மாமா ஜி : அது வேற ஒன்னும் இல்ல ஜி, இந்த தோனி காலுல மட்டும் மேட்ச் நடக்கும் போது எவனாவது போய் விழுந்திடறான், என் காலில் ஏன் யாரும் விழமாட்டேங்கறாங்க அமித் ஜினு மோடி ஜி கேட்டு இருக்கார்
ஆமா ஜி : அப்பறம்
மாமா ஜி : நான் வேணும்னா தமிழ்நாட்டுக்கு போன் போட்டு எடப்பாடி, ஓபிஸ் யாரையாவது விழ சொல்லவா? நீங்க இருக்க திசையை பாத்து விழுந்து வீடியோ எடுத்து அனுப்ப சொல்றேன் ஜினு அமித் ஜி சொல்லிருக்கார்.
ஆமா ஜி : அதுக்கு மோடி ஜி என்ன சொன்னார்?
மாமா ஜி : அவங்க நம்ம பயலுக தான், எப்ப வேணும்னாலும் விழ சொல்லலாம். தவிர அவனுக விழுந்தே பழக்க பட்டவங்க அதுல ஒரு த்ரில் இருக்காதுன்னு சொல்லிட்டு எந்திருச்சு போய்ட்டார்
ஆமா ஜி : ஓஹோ
மாமா ஜி : அதுக்கு அப்பறம் தான் இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்னு அமித் ஜி இந்த செட்டப் செஞ்சாரு
ஆமா ஜி :என்னது செட்டப்பா?
மாமா ஜி : செட்டப் இல்லாம? ஜி அங்க போட்டோவை பாருங்க பிளாக் கேட் கைல துப்பாக்கி வச்சுட்டு ஆடாம நிக்கறாரு. நீங்க இத மாதிரி பண்ணி பேர் எடுக்கலாம்னு ட்ரை பண்ணிராதீங்க வாயிலேயே சுட்டு கொன்னுட்டு 20 லட்சம் நிவாரண நிதி குடுப்பானுக
ஆமா ஜி : அய்யயோ 20 லட்சம் எல்லாம் வேண்டாம் ஜி, மோடி குடுக்கற 15 லட்சமே போதும் ஜி. எடியூரப்பா கதை அவ்வளவுதானா ஜி ? குமாரசாமி சிஎம் ஆயிட்டாரே.
மாமா ஜி : அது நாமளே பெருந்தன்மையா விட்டுக் கொடுத்தது ஜி. அடிச்சி புடுங்கி ஆட்சியை புடிக்கிறது நமக்கு பிடிக்காத ஒரு விஷயம். ஆட்சி இன்னைக்கு வரும் நாளைக்கு போகும் தேஷத்தோட நலன்தான் நமக்கு முக்கியம்.
ஆமா ஜி : என்ன ஜி நீங்க. தேஷத்தோட நலன்னு சொல்றீங்க. ஆனா நம்ப ஆளுங்க எம்எல்வை வெலைக்கு வாங்க ட்ரை பண்ணி முடியாம அவமானப்பட்டு மாட்டிக்கிட்டதை பாத்து ஊரே சிரிக்கிதே ஜி. ‘
மாமா ஜி : அது ராஜ தந்திரம் ஜி. பகவத் கீதையில என்ன சொல்லிருக்குன்னா.
ஆமா ஜி : நிப்பாட்டுங்க ஜி. இது மாதிரி பல கதையை கேட்டுட்டேன். அமித் ஷா இருந்தும் இந்த மாதிரி தோல்வியை நாம சந்திக்கிறது அவமானமா இருக்கு ஜி. ரெண்டு கொலையாவது பண்ணி நாம எப்படியாவது ஆட்சியை புடிச்சிருக்க வேண்டாமா ?
மாமா ஜி : புடிப்போம் ஜி. புடிப்போம். எங்க போகப் போறானுங்க. காங்கிரஸ் ஜனதா தள் ஆட்சியை கவுத்துட்டு, ஆட்சியை புடிக்கிறோம்.
அடுத்ததா நம்ப டார்கெட், தமிழ்நாட்டுல தாமரையை மலர வைக்கிறதுதான்.
ஆமா ஜி முறைக்கிறார்.
மாமா ஜி : என்ன ஜி முறைக்கிறீங்க ? தமிழகத்தில் தாமரை மலராதா ?
ஆமா ஜி : மயிரத்தான் மலரும் என்று கூறி விட்டு, வேகமாக சென்று விடுகிறார்.
மாமா ஜியும் நகர்கிறார்.
Nice keep it up
nice plesae keep it up
Nice one …. after long time in this series!!!!!
😂😂😂😂 sema kalai 👌👌