தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் செம்பு உருக்கும் வளாகத்தின் விரிவாக்கத்திற்கு எதிராக விரிவாக்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர், 2018 ஆம் ஆண்டு மே 22 –லிருந்து குறைந்தது 11 பேர் இறந்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றம் இந்த கட்டுமானத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. வேதாந்தாவின் துணை நிறுவனமான செம்பு உருக்கு யூனிட் சுற்றுச்சூழல் சட்டங்களை மீறியுள்ளதாகவும், வாயு கசிவு காரணமாக பல சுகாதார பிரச்சினைகள் ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டி எதிர்ப்பாளர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.
பிரிட்டனைச் சேர்ந்த வேதாந்தா மற்றும் அதன் குழும நிறுவனங்களுக்கு இது புதுசு அல்ல. ஆனால் சுற்றுச்சூழல் மீறல்களுக்காக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அவர்களுக்கெதிரான வழக்குகளில் சமீபத்தியதுதான். இதனால், அது சட்டரீதியான தணிக்கையை சந்தித்ததோடு மட்டுமல்லாமல் பங்குதாரர்களால் முதலீடுகளை திரும்பப்பெறுதல் மற்றும் நல்லெண்ண இழப்பு ஆகியவற்றையும் சந்தித்துள்ளது. இது எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளுக்கும் ( காங்கிரஸ் மற்றும் பாஜக) அரசியல் நன்கொடைகள் வழங்கியது குறித்த சர்ச்சையின் மையமாக உள்ளது.
ஒரிஸாவிலிருந்து ஜாம்பியா வரை மற்றும் சத்தீஸ்கரிலிருந்து கோவா வரை வேதாந்தாவும் அதன் துணை நிறுவனங்களும் பல்வேறு சிக்கல்களை சந்தித்துள்ளன.
நியாம்கிரி, ஒதிஷா
ஒடிஷாவில் உள்ள நியாமகிரி மலையிலிருந்து பாக்சைட் வெட்டியெடுக்க ஒடிசா மைனிங் கார்ப்பொரேஷன் லிமிடெட் (OMCL) உடன் 2004 ஆம் ஆண்டில் வேதாந்தா நிறுவனம் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. இது அருகிலுள்ள லஞ்ச்காரில் அமைந்துள்ள அவர்களுடைய அலுமினிய சுத்திகரிப்பு ஆலைக்கு பாக்சைட்டை வழங்கும். இப்பகுதியில் உள்ள கோந்த் பழங்குடி மக்கள் தொடக்கத்திலிருந்தே இத் திட்டத்தை எதிர்த்தனர், ஆனால், சுரங்கத்தை நடத்துவதற்கு இப்பகுதியில் உள்ள காடுகளை அழிக்க உச்ச நீதிமன்றம் 2008ல் அனுமதி வழங்கியது.
எனினும், இது சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் (MoEF) ஒப்புதல் பெற வேண்டியிருந்தது. இந்த அமைச்சகம் தனது முதல் கட்ட அனுமதியை அளித்தது. ஆனால் வனவியல் அனுமதி பெறவேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளுடன் அந்த அனுமதி வழங்கப்பட்டது.
பிரச்சினைகள்
இதன் விளைவாக, நிபுணர் சாக்சேனா குழுவின் அறிக்கையின் அடிப்படையில், சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் (MoEF) இவ்வாறு கண்டறிந்தது:
வேதாந்தா மற்றும் ஓஎம்.சி.எல் ஆகியவற்றின் மூலம் வன உரிமைகள் சட்டத்தின் கீழ் பழங்குடியினரின் உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுளள்ன, மற்றும் அந்த சட்டத்தின் கீழ் தலித்துகளின் உரிமைகள்கூட பாதுகாக்கப்படவில்லை.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன்படி வேதாந்தா நிறுவனம் குறிப்பிடத்தக்க மீறல்களை செய்துள்ளது. சுத்திகரிப்பு ஆலையைப் பொறுத்தவரை, அது சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விரிவாக்கப்பட்டுள்ளது.
வேதாந்தா வேண்டுமென்றே இத்திட்டம் குறித்த தகவலை மறைத்து, 1980ம் ஆண்டின் வனப் பாதுகாப்புச் சட்டத்தை தொடர்ந்து மீறியிருக்கிறது.
இதன் விளைவாக, திட்டத்திற்காக தேவையான இரண்டாம் நிலை வனவியல் அனுமதிக்கு MoEF மறுத்துவிட்டது இதை எதிர்த்து அந்த நிறுவனங்களும், ஒடிஷா அரசாங்கமும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டன. 2006ம் ஆண்டின் வன உரிமைகள் சட்டத்தின் கீழ் தோங்கிரியா கோந்த் பழங்குடியினரின் சமூக மற்றும் மத உரிமைகள் முறையாக மதிப்பீடு செய்யப்படவில்லை. இதை உள்ளூர் மக்களின் கிராம சபாக்கள் செய்ய வேண்டும். ஆனால் இங்கே நடக்கவில்லை என உச்ச நீதிமன்றம் 2013ஆம் ஆண்டு கூறியது.
இந்த விஷயத்தை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட கிராம சபை குழுக்கள், கோந்த் பழங்குடியினரின் சமுதாய உரிமைகள் மற்றும் நியாமகிரி மலைகள் பற்றி அவர்களின் மத உணர்வுகளைக் கருத்தில் கொண்டும், இத்திட்டத்தை 2013லேயே ஒருமனதாக நிராகரி்த்தது. இந்த முடிவுகளை ரத்து செய்ய OMCL முயன்றது, ஆனால் அவர்களின் மனு மே 2016 ல் தள்ளுபடி செய்யப்பட்டது.
வேதாந்தாவின் சிக்கல்
தங்களை செயல்பட அனுமதிக்காதது, வளர்ச்சிக்கு ஒரு இழப்பு என்று வாதிடுவதற்கு வேதாந்தா நிறுவனங்கள் முயன்றன. இது பல சுரங்கத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் திட்டங்களைப் பாதித்ததால் இந்த முடிவுகளால் ஒடிஷா அரசாங்கம் வருத்தமைடைந்தது. பாஜக அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் டோங்கிரியா கொந்த் பழங்குடியின அமைப்பு ஒன்றை ஒரு மாவோயிஸ்ட் முன்னணி எனக்கூறி கறைப்படுத்த முயற்சித்தது.
இவ்வளவுக்குப் பிறகும், இந்த திட்டம் அனுமதிக்கப்படவில்லை. வேதாந்தா சுத்திகரிப்பு ஆலையில் 4,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.. இந்த படுதோல்விக்கு தங்கள் பங்கிற்கு சர்வதேச கண்டனத்தை அது எதிர்கொண்டது, இங்கிலாந்தின் தேவாலயம், நெதர்லாந்திலிருந்து அரசாங்க ஓய்வூதிய நிதிகள், வியாபாரம் மற்றும் திறன் துறை ஆகியவை வேதாந்தா நிறுவனத்திடமிருந்து தங்களது முதலீடுகளை திரும்பப் பெற்றுக்கொண்டன.
கோர்பா சத்தீஸ்கர்
51 % பங்குகளை வைத்திருக்கும் மற்றொரு இந்திய பொதுத் துறை நிறுவனமான பால்கோ (BALCO) சத்தீஸ்கரில் உள்ள கோபாவில் (Korba) ஒரு மின்நிலையத்தை இயக்கி வந்தது.
பிரச்சினைகள்
மின் உற்பத்தி நிலையத்தில் முதல் சிக்கல், 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம். அந்த நிலையத்தில் கட்டப்பட்டுவந்த புகைபோக்கியின் சரிவு ஆகும். இச்சம்வத்தில் 40க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதையடுத்து, பால்கோ அதிகாரிகள், மற்றும் இத்திட்டத்தில் பணிபுரிந்த சீன மற்றும் இந்திய ஒப்பந்தக்காரர்களின் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
2012 ஆம் ஆண்டில், இந்த சம்பவத்தை விசாரிக்க மாநில அரசால் நியமிக்கப்பட்ட நீதித்துறை ஆணையம், ”பால்கோ, ஒப்பந்தக்காரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களின் அலட்சியம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது“ என கண்டுபிடித்தது. இச்சம்பவத்திற்கு அவர்களை ஆணையம் பொறுப்பாளி ஆக்கியதோடு, வேதாந்தாவின் துணை நிறுவனம் உள்ளிட்ட அவர்கள் அனைவரையும் குற்றஞ்சாட்டியது. 2013 ஆம் ஆண்டில், சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தடை விதித்தது, அதன்பின்னர், இவ்வழக்கு தொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லை.
எனினும், இது வேதாந்தாவின் பிரச்சனைகளின் முடிவு அல்ல.
1974 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சத்தீஸ்கர் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியம் (CECB) நீர் பாசனம் (தடுப்பு மற்றும் மாசு கட்டுப்பாட்டு) சட்டத்தை மீறியதற்காக மின் நிலையத்தை மூடுமாறு BALCOவை அறிவுறுத்தியது. அந்த நிலையத்தின் சாம்பல் அணைக்கரை (ash dyke) சேதமடைந்த பிறகு, பால்கோ நிறுவனம் மாசடைந்த தண்ணீரை அருகிலுள்ள கால்வாய்க்குள் வெளியேற்றியுள்ளது. (இது ஹஸ்டோ ஆற்றில் வடிகிறது)
வேதாந்தாவின் சிக்கல்
அதே வளாகத்தில் பால்கோவின் அலுமினியம் உருட்டும் செயல்பாடுகள் மின் ஆலையையே பெரிதும் சார்ந்திருந்தன. மின்சார ஆலை மூடப்பட்டு விட்டால், அது அலுமினியம் உருட்டும் ஆலைக்கு ஒரு குறிப்பிடத்தக்க அடியாகும், அலுமினிய உருட்டு ஆலை, மின்சார செலவுகளின் உயர்வு காரணமாக, 2015-16 ஆம் ஆண்டில் 11 மாதங்கள் மூட வேண்டியிருந்தது.
கோவா
வேதாந்தாவின் பங்கு
கோவாவில் பெரிய அளவிலான இரும்புத் தாது சுரங்க நடவடிக்கைகளை நடத்தி வந்த சேச கோவா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் வேதாந்தாவின் பெரும்பான்மை பங்கு உள்ளது. சேச கோவா இப்போது வேதாந்தா லிமிடெட்..
பிரச்சினைகள்
கோவாவில் அனைத்து சுரங்க உரிமைகளும் 2007 ஆண்டிலேயே காலாவதியாகி விட்டதால், 2007 முதல் 2012 வரை கோவாவில் நடந்த அனைத்து சுரங்கங்களும் சட்டவிரோதமானவை என்று கூறி உச்ச நீதிமன்றம் அவை அனைத்தையும் 2014 ஆம் ஆண்டு ரத்து செய்தது. சேச உள்ளிட்ட சுரங்க நிறுவனங்கள் சுற்றுச்சூழல் சட்ட விதிகளை ஒட்டுமொத்தமாக மீறியிருந்தன என்பதை நீதிபதி ஷா ஆணையம் கண்டுபிடித்தது. நீதிபதி ஷா ஆணையத்தின் அறிக்கையைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் 2012 இல் நிறுத்திவைத்தது. ஒரு தவறாக வழிநடத்தப்பட்ட பாம்பே உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சேச கோவாவின் குத்தகைகள் உள்ளிட்ட சில குத்தகைகள் 2015-ஆம் ஆண்டில் கோவா அரசாங்கத்தால் புதுப்பிக்கப்பட்டன – எந்தவொரு சுரங்க நடவடிக்கைகளுக்கும் சரியான சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படவில்லை.
இந்த குத்தகைகள் அனைத்தும் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரியில் உச்ச நீதிமன்றத்தால் ரத்துச் செய்யப்பட்டன. ஒரு விரிவான கொள்கை மற்றும் தேவையான சுற்றுச்சூழல் அனுமதிகளையும் அடிப்படையில் புதிய குத்தகைகள் வழங்கப்படும் வரை அனைத்து சுரங்க நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த செயல்முறை நடைமுறைக்குவர பல ஆண்டுகள் இல்லையென்றாலும், பல மாதங்கள் எடுத்துக்கொள்ளும்.
வேதாந்தாவின் சிக்கல்
புளும்பெர்க் குவின்ட்டின் (Bloomberg Quint) கூற்றுப்படி, கோவாவில் ஒரு வருடத்திற்கு 20 மில்லியன் டன் இரும்பு தாது மொத்த கொள்ளளவு உள்ளது. இது தடை செய்யப்பட்ட காலத்துக்கான கொள்ளளவு. – வேதாந்தா 5.5 மில்லியன் டன் இரும்புத் தாதை எடுத்திருந்தது. செய்திருந்தது, அது மாநிலத்தில் மிகப்பெரிய இரும்பு தாது செயல்பாடாக அமைந்தது.
வேதாந்தா இயக்குநர் மற்றும் கோவா அமைச்சர்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில், இந்த முடிவின் விளைவாக வேதாந்தா குழுமம் 165 மில்லியன் அமெரிக்க டாலர்களை அல்லது சுமார் 1,000 கோடி ரூபாயை இழந்து நிற்கிறது. 2007 க்கும் 2012 க்கும் இடையே எடுக்கப்பட்ட சுரங்க நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்பதால், சுரங்க நிறுவனங்களால் சம்பாதிக்கப்பட்ட லாபங்கள் நீதிமன்ற உத்தரவின் கீழ் மீட்கப்படக்கூடியவை. எகனாமிக்ஸ் டைம்ஸ் கூற்றுப்படி, வேதாந்தா நிறுவனத்திலிருந்து மீட்கப்பட வேண்டிய தொகையின் மதிப்பு ரூ. 20,924 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
ராஜஸ்தான்
வேதாந்தாவின் பங்கு
ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் மூலம், இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் (HZL) என்ற நிறுவனத்தை வேதாந்தா சொந்தமாக வைத்திருக்கிறது. இதற்கு இராஜஸ்தானில் ராக் பாஸ்பேட் சுரங்கத்திற்கான குத்தகை ஒதுக்கப்பட்டது.
பிரச்சினைகள்
அரசு நிறுவனமான இராஜஸ்தான் மாநில சுரங்கம் மற்றும் தாதுக்கள் நிறுவனம் (RSMML) மூலம் மட்டுமே அம்மாநிலத்தில் ராக் பாஸ்பேட் வெட்டியெடுக்கப்பட முடியும். அரசு நிறுவனமாக இருப்பதால் HZL நிறுவனத்துக்கு இராஜஸ்தான் அரசாங்கம் ஒரு சுரங்க குத்தகை வழங்கியுள்ளது. அது RSMML க்குதான் விற்க வேண்டும் என ஒரு நிபந்தனையை விதித்தது.
ஏப்ரல் 2002இல், குத்தகை பத்து ஆண்டுகளுக்குப் புதுப்பிக்கப்பட்ட பின்னர், HZL நிறுவனத்தை ஸ்டெர்லைட் வாங்கிவிட்டது. அதாவது, HZL இனி அரசுக்கு சொந்தமான நிறுவனம் அல்ல என்பதே இதற்கு பொருள். இராஜஸ்தான் ஊழல் தடுப்பு ஆணையம் (ACB) ஒரு முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தது. முன்னாள் சுரங்கத் துறை செயலாளர் அசோக் சிங்வி, HZL நிறுவனம் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு விற்கப்பட்ட போதிலும், அதன் குத்தகைக்கு தொடர்ந்து அனுமதி அளித்துள்ளார் என்றும், இதன் விளைவாக அரசுக்கு 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த எஃப்.ஐ.ஆர்-ல் இராஜஸ்தான் ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. உரிமையாளர் மாற்றம் காரணமாக சிங்வி, உண்மையில், குத்தகையை திரும்பப் பெற்றார். ஆனால் HZL மற்றும் ஸ்டெர்லைட் ஆகியோரால் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது குத்தகையை மீட்டுத்தர சம்மதித்தார்.
இதையடுத்து, அந்த நிறுவனம் தேவையான சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் சுரங்க நடவடிக்கைகளை நடத்தியதுடன் ராக் பாஸ்பேட்டை RSMML தவிர பிறருக்கும் விற்பனை செய்தது என ஊழல் தடுப்பு ஆணையம் குற்றஞ்சாட்டியது.
வேதாந்தாவின் சிக்கல்
ஊழல் தடுப்பு ஆணையத்தின் இந்த வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக இழுத்துக்கொண்டே இருந்தது. விசாரணை மார்ச் 2018 க்குள் முடிக்கப்பட வேண்டும் என்று இராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பிப்ரவரி மாதம் கோரியது, ஆனால், அப்போதிருந்து, அந்த வழக்கின் தற்போதைய நிலை பற்றி எந்த தகவலும் இல்லை.
ஜாம்பியா
வேதாந்தவின் பங்கு
கொங்கொலா காப்பர் மைன்ஸ் பிஎல்சி (KCM) என்ற ஜாம்பியன் நிறுவனத்தை வேதாந்தா சொந்தமாக வைத்திருக்கிறது. இது Nchanga செப்பு சுரங்கத்தை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறது. ஜாம்பியாவின் சிங்கோலா பகுதியில் சுரங்கம் உள்ளது.
பிரச்சினைகள்
ஜாம்பியா நாட்டு சுற்றுச்சூழல் சட்டங்களை அலட்சியப்படுத்தி, மீறியதாகக் கூறி, வேதாந்தா மற்றும் கே.சி.எம் நிறுவனத்துக்கு எதிராக சிங்கொலாவின் குடியிருப்புவாசிகள் ஆங்கில நீதிமன்றங்களில் சிவில் வழக்குகளைத் தாக்கல் செய்தனர். சுரங்கத்திலிருந்து வெளிவரும் கழிவு உள்ளுர் நீர்வழிகளை மாசுப்படுத்துவதோடு சொத்து சேதத்தை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இது ஜாம்பியா நாட்டில் உள்ள கூற்றுகள் தொடர்பானதாகையால், இங்கிலாந்து நீதிமன்றங்கள் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என வாதிட வேதாந்தா முயற்சி செய்தது. ஆனால் இங்கிலாந்தின் மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த கூற்றை நிராகரித்தது. மேலும் 1,826 ஜாம்பியன் கிராமவாசிகளின் கூற்றுக்களைத் தொடர அனுமதித்தது.
வேதாந்தாவின் சிக்கல்
மூல வழக்கு இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் இந்த முடிவின் ஒரு சுவாரஸ்யமான விளைவு என்னவென்றால், இந்தியா உட்பட வெளிநாடுகளில் வேதாந்தாவின் துணை நிறுவனங்களால் தீங்கு அனுபவித்துள்ளவர்கள் உண்மையில் அந்நிறுவனத்திற்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றங்களில் வழக்குகளை தாக்கல் செய்யலாம்.
தூத்துக்குடியில் வசிப்பவர்களும் வேதாந்தா நிறுவனத்தின் மீது இங்கிலாந்தில் வழக்குகள் தாக்கல் செய்யலாம் என, மறைமுகமாக, இதற்கு பொருளாகும். இங்கிலாந்தில் அந்த நிறுவனம் உண்மையில் இந்தியாவில் உள்ளதை விட உயர்ந்த கடமைப் பொறுப்பைக் கொண்டிருப்பதைக் காணலாம், மேலும் அந்நிறுவனம் சேதத்திற்காக மிக்பெரிய தொகையை செலுத்த வேண்டியதிருக்கும்.
தூத்துக்குடி
வேதாந்தாவின் பங்கு
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலை நடவடிக்கைகளுக்கு இது நம்மை மீண்டும் வழிநடத்துகிறது. வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டம் முதன்முறையானது அல்ல. இந்த நடவடிக்கையால் வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு சட்ட சிக்கல் உள்ளது.
பிரச்சினைகள்
தேவையான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு இல்லாமல் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படுதல், அந்த ஆலைக்கும் மன்னார் வளைகுடாவிற்கும் இடையே போதுமான இடைவெளி மீறல், ஆலையைச் சுற்றி ஒரு பசுமை வளையத்தை உருவாக்க தவறியது, நிலத்தடி நீர் மாசுபடுதல் மற்றும் வாயு கசிவு போன்றவை உள்ளிட்ட முறைகேடுகளால் 1994-ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டதிலிருந்தே ஏராளமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தது.
ஸ்டெர்லைட் ஆலை எப்படியோ ஒருவழியாக செயல்பட்டுக் கொண்டிருந்தபோதிலும். விரிவாக்கத்திற்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை அந்த ஆலை மீறியதையும், அதை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்டுககொள்ளாததையும் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் புதிய சுற்றுச்சூழல் அனுமதியளித்ததையும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
இருப்பினும், 2010 ஆம் ஆண்டில், சென்னை உயர்நீதிமன்றம் இறுதியாக இது ஆலையை மூட உத்தரவிட்டது. ஆலையை மூடச் சொல்லும் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்த ஆலை சுற்றுச்சூழலுக்கு கடுமையான சேதத்தை உண்டாக்கியிருப்பதை கண்டறிந்த பின்னரும்கூட இறுதியாக 2013இல் அந்த ஆலை தொடர்ந்து செயல்பட அனுதியளித்தது. 100 கோடியை இழப்பீட்டுத் தொகையை நிறுவனம் வழங்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. வேண்டுமென்றே தவறான விளக்கம் மற்றும் ஆவணங்களை மறைத்தல் போன்ற நடவடிக்கைளில் ஸ்டெர்லைட் நிறுவனம் ஈடுபட்டதாக நீதிமன்றம் கூறியது.
வேதாந்தாவின் வீழ்ச்சி
ஸ்டெர்லைட் மீதான உச்ச நீதிமன்றத்தின் குற்றச்சாட்டு மோசமாக இருந்தது. ஆனால், இந்தியாவின் செப்பு உற்பத்திக்கு போதுமான பங்களிப்பை அளித்ததாலும், நிறைய மக்களை வேலைக்கு அமர்த்தியதாலும், அது செயல்பட அனுமதிக்கப்பட்டது. தொடர்ச்சியான செயல்பாடுகள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய நிபந்தகளுக்கு இணங்க அனுமதிக்கப்பட்டன. ஆனால் இது ஒரு கேள்விக்குரிய முடிவு. இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட நேரத்தில், ஸ்டெர்லைட் ஆலையில் வாயு கசிவு ஏற்பட்டு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு காரணமாகியதால் ஆலையை மூட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டிருந்தது.
எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் முந்தைய நிபந்தனைகளை செயல்படுத்துவதில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மந்தமாக இருந்த்து அல்லது தோல்வியடைந்தது. தற்போது ஆர்ப்பாட்டங்கள் நிரூபித்ததுபோல, அவர்கள் நிபந்தனைகளை அமல்படுத்துவது ஒரு பிரச்சினையாகவே இருந்துள்ளது.
– வகாஷா சக்தேவ்
அருமையான கட்டுரை பகிர்வோம்
Super article in depth study prof dr Sankar sir