மாமா ஜி தினமலரை புரட்டியவாரு காபி குடிந்துகொண்டிருந்த போது செல்போன் ஒலித்தது
மாமா ஜி : ஹலோ குட் மார்னிங் ஜி, உங்ககிட்ட இருந்து போன் வரும்னு நான் எதிர்பார்களை
ஆடிட்டர் ஜி : எதிர்பார்க்காதது தான் ஜி வாழ்கை, நான் மட்டும் துக்ளக் ஆசிரியர் ஆவேன்னு என்னைக்காவது எதிர்பார்த்தேனா ? இல்லை என்னையெல்லாம் எவனாவது மனுசனா மதிப்பான்னு எதிர்பார்த்தேனா ?
மாமா ஜி : கரெக்ட் ஜி, நீங்க போடற fake news ட்வீட் பாத்துட்டு எனக்கும் அப்படி தான் தோணுச்சு
ஆடிட்டர் ஜி : யோவ் நான் ஒரு பேச்சுக்கு சொன்னா நீ அதுக்கு எச பாட்டு பாடுறயா, சரி அத விடுங்க. நீங்க இப்போ கிளம்பி ரஜினி ஜியை போய் பாருங்க, நீங்க அங்க என்ன பேசணும்ன்ற மேட்டர நான் ஈமெயில் பண்ணிடறேன்.
மாமா ஜி : ஓகே ஜி
ஆடிட்டர் ஜி : யோவ் நீ பாட்டுக்கு போயஸ் தோட்டம் வீட்டுக்கு போய் நான் அனுப்பினதா சொலிடாத, லதா ஜி சுடுதண்ணிய புடிச்சு மூஞ்சில ஊத்திடுவாங்க அதுனால நேரா ராகவேந்திரா மண்டபம் போய்டுங்க.
மாமா ஜி : சரிங்க ஜி
ஆமா ஜியை அழைத்து கொண்டு மண்டபம் விரைந்தார் மாமா ஜி
ஆமா ஜி : யோவ் மேனேஜர். போய் மாமா ஜி வந்திருக்காருனு ரஜினி ஜி கிட்ட சொல்லு
மேனேஜர் : அப்படியே ஒன்னு உட்டென்னா பாரு, ரஜினி சார் என்ன சாதாரணமா ? இல்ல சாதாரணமான்னு கேக்கறேன். எவன் வேணும்னாலும் வந்து பாக்க முடியுமா ?. அதுவும் என் மாமனாரே அவரை நேருல பார்த்தது இல்ல, உன் மாமனாரை கூட்டிட்டு வந்திருக்கியா நீ?
மாமா ஜி : இந்த லூசு பய பேச்சை கேட்டு டென்ஷன் ஆகாதீங்க ஜி, ஆடிட்டர் ஜி அனுப்பி வச்சார்
மேனேஜர் : ஓ அது நீங்க தானா, வெயிட் பண்ணுங்க
ரஜினி ஜி வருகிறார்
வேங்கை ஜி: உங்களுக்கு என்ன வேணும்
ஆமா ஜி : பெரியவரே நீங்க யாரு ?
வேங்கை ஜி: நான் தான் பா ரஜினிகாந்த்
மாமா ஜி : மன்னிச்சிருங்க ஜி, காலையில் இருந்தே இந்த ஆளு ஒரு டைப்பா தான் பேசிட்டு இருக்கான்
வேங்கை ஜி: நீங்க என்ன விஷயமா வந்தீங்க?
மாமா ஜி : ஆடிட்டர் அடுத்த ஷூட்டிங் பத்தி பேசிட்டு வர சொன்னாரு
வேங்கை ஜி: ஓ ஆடிட்டர் படம் எடுக்க போறாரா நல்ல விஷயம் ஆனா பாருங்க காலா ரிலீஸ் இருக்கு அடுத்து 2.0, கார்த்திக் சுப்புராஜ் படமும் புக் ஆயிட்டேன். கால் ஷீட் இல்ல தம்பி
ஆமா ஜி : அட ஜி, அந்த ஷூட்டிங் இல்ல இது “டிஷூம்” துப்பாக்கி சூட்டிங். உங்களை வச்சு இனி எவனாவது படம் எடுக்க முடியுமா இல்ல ரிலீஸ் தான் பண்ண முடியுமா. ஏற்கனவே பல ப்ரொட்யூசர்கள் நடுத் தெருவுக்கு வந்துட்டாங்க.
மாமா ஜி : வாயா மூடுயா, படுத்தறியே. ஜி தூத்துக்குடி பிரச்சனையை வச்சு உங்கள முதல்வர் ஆக்கிடலாம்னு போட்ட பிளான் வேலைக்கு அகல அதுனால அமித் ஜியே நேரடியா இனொரு பிளான் போட்டிருக்கார்
வேங்கை ஜி: அமித் ஜி போட்ட பிளான்னா? மேல சொல்லுங்க
மாமா ஜி : நிர்மலா ஜியை விட்டு, கூடங்களம் அணுமின் நிலையத்தை விரிவு படுத்தி 2 ஆணு உலை நிறுவப்போறோம்னு ஒரு பேட்டி குடுக்க சொல்லுவோம்.
வேங்கை ஜி : ப்ளான் நல்லாத்தான் இருக்கு. பட், நிர்மலா ஜி கிட்ட நான் பேசுனா ஆளுனர் கோச்சிக்க மாட்டாரா ?
மாமா ஜி : நிர்மலா ஜி கிட்ட நீங்க பேசுனா ஆளுனர் ஏன் கோச்சுக்கப் போறாரு.
வேங்கை ஜி :என்ன ஜி பேசறீங்க. நிர்மலா ஜி அவரு ஆளாச்சே. அவருக்காக ஜெயில்ல இருக்காங்கள்ல ?
மாமா ஜி முறைத்துக் கொண்டே ஆமா ஜியை பார்க்கிறார்.
ஆமா ஜி : நான் அப்போவே சொன்னேன்ல. இவன்லாம் ஒரு ஆளுன்னு வந்து பேசறீங்க.
மாமா ஜி : வேங்கை ஜி. அது அந்த நிர்மலா இல்ல. நம்ப பாதுகாப்புத் துறை அமைச்சர்.
வேங்கை ஜி: ஓ அதுவா. கூடங்குளம் ஏற்கனவே பிரச்னை ஆச்சே ஜி
மாமா ஜி : ஆமாம் அது தானே வேணும். அதெல்லாம் கூடாதுனு நாலு பேரு உண்ணாவிரதம் ஆரம்பிப்பாங்க. அணு உலையில் ஏற்கனவே ஓட்டை விழுந்து அணுக்கசிவு ஏற்பட்டிருக்குனு ஒரு பிட் செய்தி வெளியிட சொல்லுவோம். உடனே பிரச்னை பத்திக்கும்
வேங்கை ஜி: அப்பறம் ஜி
மாமா ஜி : அப்பறம் என்ன நம்ம நாராயணனை விட்டு ஒரு விவாத நிகழிச்சி , ராஜா ஜியை விட்டு ஒரு பேட்டி தமிழ்நாடே கொந்தளிச்சிடும். 100ஆவது நாள் வரைக்கும் இழுத்திடுவோம், இந்த வாட்டி நீங்க 95ஆவது நாளிலேயே அங்க போய் கலந்துக்கோங்க. 100ஆவது நாள் ஒரு கலவரத்தை உண்டு பண்ணி அதுல உங்கள போலீஸ் அடிக்கற மாதிரி ஒரு ஸ்டில், வீடியோ ரெடி பண்ணுவோம்.
வேங்கை ஜி: என்னது அடிக்கப் போறீங்களா, அதெல்லாம் முடியாது ஜி
மாமா ஜி : நம்ம ஸ்டண்ட் ஆளுங்கள வச்சு தான் அடிக்க போறோம் ஜி . உங்கள அடிச்சவுடன் இந்த அரசாங்கத்துக்கு எதிரா அடுத்த நாள் ஒரு பேட்டி குடுங்க, மோடி ஜி உடனே ஆட்சியை கலைச்சிட்டு இந்த கூடங்குளம் திட்டத்தையும் கை விட்டிடுவார். உடனடியா தேர்தல் நீங்க CM, எப்படி?
வேங்கை ஜி: இப்படி ஸ்வாரஸ்யமா கதை சொல்லி தான் அந்த குசேலன் படத்துலயும் நடிக்க வச்சானுக, தூத்துகுடிக்கும் போக சொன்னானுக அப்பறம் பாத்தீங்கல்ல என்ன ஆச்சுன்னு
ஆமா ஜி: ஓ குசேலன் கதைய கேட்டுமா நீங்க அதுல நடிச்சீங்க, உங்கள ஈஸியா ஏமாத்திரலாம் போலவே ஜி.
மாமா ஜி : இன்னைக்கு என்னய்யா ஆச்சு உனக்கு ? சும்மா இரு. ஜி எல்லாம் நல்ல படிய நடக்கும் ஆடிட்டர் காரண்டீ.
வேங்கை ஜி: சரி அப்படியே பண்ணிரலாம்
மாமா ஜி : அப்பறம் உங்களுக்கு பத்திரிகை கரங்களை எப்படி எதிர்கொள்வதுன்னு ட்ரைனிங் குடுத்தாங்கலாம். நீங்க எப்படி பண்றீங்கன்னு ஒரு mock செஞ்சுட்டு வர சொல்லிருக்கார் ஆடிட்டர். இப்போ நான் கேள்வி கேப்பேன், நீங்க பதில் சொல்லுங்க.
வேங்கை ஜி: ஹா ஹா ஹா, எனக்கே ஒத்திகையா? ஆரம்பிங்க
மாமா ஜி : பெட்ரோல் விலை கடுமையா ஏறிடிச்சுனு விமர்சனத்துக்கு அப்பறம் 1 பைசா மோடி குறைத்திருக்காரே அதை பத்தி உங்க கருத்து என்ன
வேங்கை ஜி: நீங்க அத 1 பைசாவா பாக்காதீங்க, 100 லிட்டர் பெட்ரோல் வாங்கினா அது 1 ரூபாய் சேமிப்பு. அந்த 1 ரூபாயை ஜன் தன் வங்கியில் போடுங்க உங்க கொள்ளுப்பேரன் காலேஜ் போகும் போது அது 15 லட்சமா மாறிருக்கும். இந்த தலைமுறையை பற்றி சிந்தித்தால் அவன் தலைவன். அதுவே 3 தலைமுறைக்கு அப்பறம் சிந்திக்கறவன் தான் சரித்திர நாயகன்.
ஆமா ஜி : நாயகன்னா அந்த மையமா ஒருத்தர் சுத்துவாரே அவரா ஜி?
வேங்கை ஜி: நோ நோ அவரு என் நண்பன்
மாமா ஜி : இந்த குஜராத்தில் அதானி நடத்தும் மருத்துவமனையில் 5 மாசத்துல 111 குழந்தைகள் இறந்திருப்பதாக செய்தி வந்திருக்கே
வேங்கை ஜி: இறப்பு வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது, இது நாள் வரை நல்ல நடந்துட்டு இருந்த மருத்துவமனையில் ஏன் திடீர்னு இந்த பிரச்னை? சில சமூக விரோதிகள் உள்ள புகுந்ததால் தான் இந்த உயிரிழப்பு. கபில் கான் என்ற அந்நிய சக்திக்கு அங்க என்ன வேலை?
மாமா ஜி : கபில் கான் பிரச்னை உத்தரபிரேதத்தில் ஜி, நான் கேக்கறது குஜராத்தில் நடந்த உயிரிழப்பை பற்றி
வேங்கை ஜி: என்ன சொல்ரீங்க? உத்தரபிரதேசத்தில் இருந்து குஜராத்துக்கு யாரும் போக முடியாதா ?
மாமா ஜி : அப்போ கபில் கான் தான் அங்க போய் மருத்துவம் பார்த்தார்னு சொல்றீங்களா ?
வேங்கை ஜி: காக்கி சட்டையில் மேல் கை வைப்பதை அனுமதிக்கவே முடியாது.
ஆமா ஜி : என்னங்க இந்த ஆளு சம்பந்தம் இல்லாம பேசறாரு ?
மாமா ஜி :அவரு என்னைக்குய்யா சம்பந்தத்தோட பேசிருக்காரு.
மாமா ஜி : நீங்க ரொம்ப குழப்பறீங்க நான் தூத்துக்குடி பிரச்சனைக்கே வரேன். போராட்டம் பண்ணினா உங்களுக்கு என்ன பிரச்சனை ?
வேங்கை ஜி: என்ன பிரச்சனையா? தொழில் முடங்கிடும், தூத்துக்குடியே வறுமையில் வாடும். அது போதாதா ? நடக்காத ஒன்னுக்கு பயந்து நாம ஸ்டெர்லைட்டை மூடணுமா ?
ஆமா ஜி : 2011ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததுல இருந்து தமிழ்நாட்டுல ஒரே ஒரு தொழில் முதலீடு கூட வரலையே. 8 வருசமா ஒரு தொழில் கூட வரலையே. அப்போ என்ன கொழுக்கட்டை சாப்புட்டுக்கிட்டு இருந்தீங்களா ?
வேங்கை ஜி : ஏய். ஏய். வேற கேள்வி இருக்கா ?
மாமா ஜி : யோவ் இருய்யா. வேலையை கெடுத்துறாத. அப்போ சேது சமுத்திரம் திட்டத்தை பத்தி என்ன நினைக்கறீங்க ? அது வந்தா தென் மாநிலங்களில் வர்த்தகம் பெருகுமே
வேங்கை ஜி: நோ நோ நோ அது ஒரு இந்து விரோத திட்டம், ராமர் கட்டின பாலத்தை இடிச்சு தான் நம்ம மாநிலம் வளர்ச்சி அடையனும்னா அப்படி ஒரு வளர்ச்சியே தேவை இல்ல அப்படின்னு ஒரு பெரிய மகான் சொல்லிருக்கார்.
ஆமா ஜி : யாரு ஜி அந்த மகான்.
வேங்கை ஜி : சுப்ரமணிய சுவாமி.
ஆமா ஜி : ஆமா. ஆமா. அவுரு பெரிய மகான்தான்.
மாமா ஜி : அப்பறம் ஜி இந்த இடைத்தேர்தலில் பாஜக படு தோல்வி அடைஞ்சிடுச்சே இது பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவா இருக்குமா ?
வேங்கை ஜி: தேர்தல் கோடை விடுமுறையில் வைத்ததால் பாஜக தொண்டர்கள் குடும்பத்தோடு வெளி ஊருக்கு போய்ட்டதால தான் இந்த பிரச்சினை. அடுத்த முறை என் படம் ரிலீஸ் பண்ணி, அந்த தியேட்டரில் டிக்கெட் கவுண்டர் பக்கம் ஓட்டு மெஷின் வச்சு தேர்தலை நடத்திட்டா இந்த பிரச்னை வராது
ஆமா ஜி : எவனும் படம் பாக்க வரமாட்டானுகன்னு தெரிஞ்சு இப்படியாவது படத்தை ஒட்டிடலாம்னு பாக்கறீங்க அப்படித்தானே ஜி
மாமா ஜி : ஜி உங்களுக்கு என்னமோ ஆச்சு நீங்க கிளம்பி போங்க நான் பேசிட்டு வரேன்.
வேங்கை ஜி: ரொம்ப பேசறாரு ஜி அவரு, எந்த பத்திரிகை அவர் ?
மாமா ஜி : பத்திரிகை எல்லாம் இல்ல ஜி, நம்ம அல்லக்கை தான். சரி உத்தரபிரேதசம் துணை முதல்வர் சீதா இந்தியாவின் முதல் சோதனை குழாய் குழந்தைனு சொல்லிருக்காரே உண்மையா?
வேங்கை ஜி: இதுல என்ன ஜி சந்தேகம், மஹாபாரதத்தில் பாருங்க நாம் கண்டுபிடித்த அத்தனை விஷயங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கு. பீஷ்மர் அம்பு மேல படுக்க வச்சிருப்பாங்க பார்த்திருப்பீங்க அது தான் அக்குபஞ்ச்சர் சிகிச்சை, லாஸ் வேகாஸ் சூதாட்டம் முன்னாடியே காந்தாரத்தில் சகுனி சூதாட்ட விடுதி நடத்தி வந்தார். அதை பாத்துட்டுத்தான் லாஸ் வேகாஸ்ல கேம்ப்ளிங் சென்டர்ஸ் ஆரம்பிச்சாங்க.
மாமா ஜி : அவ்வளவுதானா ஜி ?
வேங்கை ஜி : இன்னும் சொல்லலாம். மகாபாரதத்துல பாஞ்சாலி புடவையை உருவுற சீனை படிச்சிட்டுத்தான், பக்தா ரேப் பண்றதுக்கு அலையறாங்க.
ஆமா ஜி : நான் சொன்னேன்ல. இந்த ஆளு சரிப்பட மாட்டான்னு. பாத்தீங்களா ?
மாமா ஜி : கொஞ்சம் இருங்க ஜி. கோச்சிக்கப் போறார்.
ஆமா ஜி : இருங்க சமாதானம் பண்றேன். வேங்கை ஜி பிண்றீங்க ஜி, நீங்க நல்லா தயார் ஆயிட்டிங்க இனி எந்த பிரெஸ் மீட்டும் சமாளிச்சிடலாம். நான் ஆடிட்டர் ஜி கிட்ட பேசிடறேன் ரெடியா இருங்க.
லாஸ்டா ஒரு கேள்வி ஜி.
கர்நாடகாவுல உங்க காலா படத்தை தடை பண்ணிட்டாங்க. வழக்கமா மன்னிப்பு கேட்டு வீடியோ விடுவீங்களே. இந்த முறை விடலையா ?
வேங்கை ஜி : ஏய் ஏய். கூட்டிட்டுப் போ மேன் இந்த ஆளை.
யோவ் வாய்யா. காண்டாயிட்டாரு.
ஆமா ஜி : சரி ஜி. இந்த ஆளு அந்த ஆடிட்டர் பேச்சை கேட்டுக்கிட்டு நடக்குறாரே. நெஜம்மாவே சிஎம் ஆயிடுவாரா ?
மாமா ஜி : ஆடிட்டர் இதே மாதிரி தீபாவை சிஎம் ஆக்கறேன்னு ஆரம்பிச்சாரு. தீபா கதை தெரியும்ல.
ஆமா ஜி : தேர்தலுக்கு இன்னும் ஒரு வருசம்தான் இருக்கு ஜி. எப்படி ஜி நாம இந்த வாட்டி 542 சீட்டுல 520 சீட்டை ஜெயிக்கிறது ?
மாமா ஜி : மோடி ஜி இருக்காருல்ல. எதுக்கு ஜி பயப்பட்றீங்க ?
ஆமா ஜி : அவரு இருக்கறதாலதான் ஜி பயமே.
மாமா ஜி : எது அந்த சிங்கப்பூர் பேட்டியை சொல்றீங்களா ?
ஆமா ஜி : ஆமாம் ஜி. கேள்வி கேட்டு பதில் சொல்ற மாதிரி பேட்டியை குடுக்க சொன்னா, கன்னா பின்னான்னு உளறி, எல்லாமே செட்டப்புன்னு தெரிஞ்சு போகற அளவுக்கு மாட்டிக்கிட்டாரு. மோடி ஜி 30 செகன்டு பேசறாரு. அதை மொழிபெயர்க்குற அம்மா நாலு நிமிசத்துக்கு அதை மொழி பெயர்த்துச்சு.
மாமா ஜி : மோடி ஜி பேசுற நாலு வரியில, அவ்வளவு அர்த்தம் இருக்கு. அதை விளக்க நாலு மணி நேரம் கூட போதாதுன்னு ஒரு முட்டு குடுத்தோமே. கேட்டுட்டு எல்லாரும் வாயடைச்சு போயிருப்பாங்களே.
ஆமா ஜி : நானும் அதே மாதிரிதான் முட்டுக் குடுத்தேன். வாயடைச்சு போகல. வாயி மேலயே குத்துனாங்க.
மாமா ஜி : சரி விடுங்க. மோடி ஜி 2019க்காக இப்போவே வேலையை ஆரம்பிச்சிட்டாரு.
நம்ப ஸ்லீப்பர் செல்களை எல்லா டிவியிலயும் இறக்கப் போறோம். அவங்க நடுநிலை மாதிரியே பேசிக்கிட்டு மோடி ஜிக்கு சப்போர்ட் பண்ணுவாங்க.
ஆமா ஜி :என்ன ஜி சொல்றீங்க. நம்பளோட ஸ்லீப்பர் செல் எல்லாம்தான் வெளியில தெரிஞ்சு முட்டு சந்துக்கு வந்துட்டாங்களே.
மாமா ஜி : அங்கதான் ஜி நீங்க தப்புப் பண்றீங்க. நம்ப சுமந்த் ராமன் ஜி இருக்காருல்ல. அவரெல்லாம் நடுநிலை ஸ்லீப்பர் செல். ரிபப்ளிக் டிவியில தமிழ்நாட்டுல இருந்து தொடர்ந்து பேசற ஒரே நடுநிலை அவருதான்.
ஆமா ஜி : என்ன ஜி நீங்க. ரிபப்ளிக் டிவியில தொடர்ந்து பேசுனாலே நம்ப ஆளுன்னு தெரிஞ்சுடாதா.
மாமா ஜி : அங்கதான் ஜி தப்புப் பண்றீங்க. அவரு நம்ப ஆளுன்னே தெரியாத மாதிரி பேசுவாரு. அதுதான் டெக்னிக்கே.
ஆமா ஜி : அட போங்க ஜி. நீங்கதான் மெச்சிக்கிக்கணும். முந்தாநாளு, நம்ம நிம்மி ஜி நான்காண்டு மோடி சாதனைகளை பத்தி, இந்தியாவின் மிக முக்கிய அறிவு ஜீவிகளை சந்திச்சாங்க.
டிவிஎஸ் நிறுவனத்தோட இயக்குநர், விஐடி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன், எழுத்தாளர் ஜோ டி குரூஸ், தொழிலதிபர் கரிமுத்து கண்ணன், வைகுண்டராஜன் வக்கீல் ரவீந்திரன் துரைசாமி, அப்பாசாமி ரியல் எஸ்டேட் ஓனர் ரவி அப்பாசாமி, உத்திரப் பிரதேசம் மற்றும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குல சிக்குன குற்றவாளி, தேவநாதன் யாதவ், நம்ப டுமீல் டாக்டர் கிருஷ்ணசாமி, அப்போல்லோ ரெட்டி, வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்த் சலானி, போத்தீஸ் சில்க் முதலாளி ரமேஷ், டிவிஎஸ் எம்டி ஷோபனா, அரசு நிலத்தை ஆட்டையை போட்ட சாஸ்திரா பல்கலைக்கழக டீன் வைத்திய சுப்ரமணி, சங்கர நேத்ராலயா தலைவர் பத்ரினாத் இவங்கள்ளாம் சந்திச்சாங்க.
இந்த லிஸ்டை பாத்தாலே இது மொத்தமும் பக்தா கூட்டம்னு நல்லாவே தெரியுது.
மாமா ஜி : அதுக்கு என்ன இப்போ ?
ஆமா ஜி : இவங்களோட நம்ப சுமந்த் ஜியும் சந்திச்சிருக்காரு. அப்போ அவரு எப்படி ஸ்லீப்பர் செல்லா ஆவாரு ? பக்தான்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சே.
மாமா ஜி : அட ஆமாம் ஜி. இப்படி மாட்டிக்கிட்டாரே நம்ப சுமந்த் ஜி. சரி கவலைப் படாதீங்க. மோடி ஜி இன்னும் சில ஸ்லீப்பர் செல்களை வைச்சிருப்பாரு. அவங்களை யூஸ் பண்ணலாம். அடுத்த வாரம் வாங்க ஜி. இன்னும் டீட்டெயிலா பேசலாம்.
இவரும் கிளம்புகின்றனர்.
நீங்க யாருடைய ஸ்லீப்பர் செல் என்று தெரிஞ்சிக்கொள்ளலாமா , கிறிஸ்டின் அல்லது முஸ்லீம் ஆதரவு ஸ்லீப்பர் செல்லா
ithukkum madhathukkum enna sambandham… mutta payale
NICE KEEP IT UP
Good work