தளபதி முதல் நாள் படம் பார்க்க ஆரம்பித்ததில் தொடங்கியது எனது ரஜினி மோகம். பார்த்தால் முதல் நாள் இல்லாவிட்டால் பார்ப்பதே இல்லை என்ற முடிவுடன் அனைத்து ரஜினி படங்களையும் பார்த்து விடுவேன். ரஜினி படம் என்றாலே திருவிழா கோலம் தான் கட்டவுட், தோரணம் என்று முதல் ஒரு வாரம் டிக்கெட் வாங்குவதே சாதனை தான்.
காலா எனக்கு ஒரு வித்யாசமான அனுபவமாக அமைந்தது. ரஜினி படம் 2 ஆவது நாள் இவ்வளவு எளிதாக டிக்கெட் கிடைப்பதில் தொடங்கி திரையரங்கு நிரம்பாத வரை ஒரு ரசிகனாக நான் இப்படி ஒரு நாளை எதிர்பார்க்கவே இல்லை. ஆரவாரம், விசில் சத்தம், சூப்பர் ஸ்டார் டைட்டில் போடும் போது ஏற்படும் கூஸ் பம்ப் என எதுவும் இல்லாமல் அபியும் நானும் படத்துக்கு வந்த மனநிலையில் திரையரங்கு முழுவதும் ஒரே family crowd
ரஞ்சித் படம்னாலே நீலம், அம்பேத்கர் படம், புத்தர் சிலை, தலித் அரசியல் பேசும் புத்தகம்னு ஏதாவது குறியீடு படம் முழுக்க இருக்கும், காலாவில் ரஜினியே ஒரு குறியீடு தான்.
ரஜினி கிரிக்கெட்டில் கிளீன் போல்ட் ஆவதில் தொடங்குகிறது படம், அடுத்து வரும் காட்சிகளில் அவர் குடும்பம், முன்னாள் காதலி என்று நகரும் போது கபாலியில் வரும் காட்சிகளை நினைவு படுத்தினாலும் அடுத்து சில காட்சிகளிலேயே அசுர வேகம் எடுக்கிறது குறிப்பாக பிரிட்ஜ் சண்டை காட்சி ரஜினி ரசிகர்களுக்கு விருந்து.
காலாவில் மூன்று பெண்கள் கதாபாத்திரம் வரும், அவரின் மனைவி செல்வி, காதலி சரினா, மருமகள் புயல். இந்த மூவரையும் ரஞ்சித் உருவகப்படுத்தி இருப்பதே அலாதி, மூவரும் ஆண்களுக்கு அஞ்சாதவர்கள். ஏன் காலாவிற்கே அஞ்சாதவர்கள். மற்ற ரஜினி படங்களில் வருவதை போல் அவர் பெண்களை அடங்கி இருக்க சொல்வதில்லை, மாறாக அவர்களுக்கான இடத்தை கொடுக்கிறார். மூவரும் அவர்கள் எடுக்கும் எந்த முடிவிற்கும் காலாவின் ஒப்புதலுக்கோ, அனுமதிக்கோ காத்து இருப்பதில்லை சுய மரியாதையோடு இருப்பதாக காட்சிப்படுத்தி இருப்பார். ஒரு கலவரத்தில் புயலின் ஆடைகள் அவிழ்க்கப்படும் போது அவள் ஆடையை எடுத்து அணியாமல், கட்டையை எடுத்து எதிரியை அடிப்பது போல் ஒரு காட்சி வரும். அது அனைத்தும் டைரக்டர் டச். பழைய பாலசந்தர், பாக்யராஜ் படத்தில் இதற்கு ஒத்த காட்சிகள் வரும் .
தூய்மை மும்பை திட்டத்துடன் ராமர் பக்தராக வெள்ளை உடை அணிந்து வரும் வில்லன் யாரை உருவகப்படுத்துகிறது என்று யூகிக்க தேவை இல்லை, நானா படேக்கர் ஹரி தாதாவாக பின்னி பெடல் எடுத்திருக்கிறார். அவரை எதிர்த்து ராவணனாக காலா, இவர்களுக்கு இடையேயான நிலத்தின் உரிமைக்கான போரே படத்தின் கரு.
ஹரி தாதா கருப்பை அசிங்கமாக கருதுகிறார், காலா வீட்டில் தண்ணீர் கூட அருந்த மறுக்கிறார். அவருடைய கட்சி கொடி ஒரு சுவாரசியம். நாம் தமிழர் கட்சியில் உள்ள புலி படத்திற்க்கு பதில் சிங்கம் இடம் பெற்றிருக்கும். பாஜக ஹிந்து முஸ்லீம் பிரிவினை வாதம் பேசுவதையும் , “நாம் தமிழர்” வந்தேறி வாதம் பேசுவதையும் ஒப்பிடுகிறார் ரஞ்சித்
காலாவின் ஒரு மகனின் பெயர் லெனின். இவர்கள் இருவரும் தன் மண்ணை நேசிப்பவர்கள். ஆனால் அந்த உரிமையை இவர்கள் இருவரும் நேரெதிர் பாணியை கையாளுகிறார்கள். லெனின் ஆயுத போராட்டத்தை எதிர்ப்பவராக வருகிறார். என்ன ஒரு முரண். லெனின்னு பேரு வச்சதால் உன்ன திட்ட கூட முடியல என்று காலா ஒரு முறை குறைபட்டு கொள்வார்.
ஒரு வசனம் வரும்
“உனக்கு புடிச்சிருக்கோ இல்லையோ, நல்லா இருக்கோ இல்லையோ நீ போடற ரோட்டில் போய்கிட்டு, குடுக்கற தண்ணிய குடிச்சிகிட்டு, நீ வீசி எறியிர அரிசியை தின்னுகிட்டு இருக்கணும். அரிசி நல்லா இல்லனு சொன்னா, திங்க சோத்துக்கே வழி இல்லாத நாயிங்க என்ன திமிர் பாருனு பேசுவ.”
எவ்வளவு நிதர்சனம் ? இது தான் கதையின் அடிநாதம். படத்தில் உள்ள எல்லா காட்சிகளிலும் இதை ஒத்தே அமைந்திருக்கும். மற்ற படங்கள் போல் இரண்டு பக்கங்களிலும் எதாவது ஒரு நியாயம் இருப்பது போல் அல்லாமல் ஒரு பக்கம் மட்டுமே அநீதி நடப்பதை பிளாக் அண்ட் வைட்டாக கூறுகிறார்.
காலாவில் ரஜினி சட்டத்தை மதிப்போம். அது எங்களை நசுக்கும் போது தூக்கி போட்டு மிதிப்போம் என்கிறார். போராட்டம் தான் தீர்வை தரும் என்கிறார், படம் முழுவதும் ஒடுக்கப்பட்டவரின் அரசியலை பேசுகிறார்.
நிஜத்தில் நாம் காணும் ரஜினிக்கும் இந்த கதாபாத்திரத்திற்கும் எவ்வளவு வேற்றுமை ? சினிமா துறையில் ரஜினி ஒரு தெளிவான ஆள். அவருடைய லிமிட் என்னவென்று அவருக்கு நன்றாக தெரியும். ஏன் நீங்கள் கமலை போல் வித்யாசமான கதைகளில் நடிப்பதில்லை என்று கேட்டால் ரசிகரகள் அதை ஏற்கமாட்டார்கள் என்று ஒளிவு மறைவு இல்லாமல் ஒப்புக்கொள்வார். ஆனால் நிஜத்தில் அவருக்கு அந்த தெளிவு இல்லை என்றே தோன்றுகிறது, காலவில் ரஞ்சித்தின் முகமூடியாக வரும் அவர் நிஜத்தில் குருமூர்த்தியின் முகமூடியாக இருக்கிறார்.
படத்தில் ஒரு அதகளமான விசாரணை காட்சி வரும் அதில் மந்திரியை பார்த்து ரஜினி “ஆமா இவரு யாரு” என்று திரும்ப திரும்ப கேட்டு மந்திரியை கடுப்பேற்றுவார். அந்த காட்சியை காணும் போது “நான் தான்பா ரஜினிகாந்த்” நினைவுக்கு வந்து தொலைக்குது.
சினிமாவில் மட்டுமல்ல. நிஜ வாழ்விலும் மக்கள் காலா போன்ற தலைவர்களைத்தான் விரும்புகிறார்கள். தங்களுக்காக குரல் கொடுக்கும், வீதியில் இறங்கிப் போராடும், போராட்டத்தில் தங்களோடு நிற்கும் தலைவர்களைத்தான் மக்கள் விரும்புவார்கள் விரும்புகிறார்கள்.
போராட்டம் செய்தால் நாடு சுடுகாடாகி விடும் என்று அறிவுரை கூறும் அதிமேதாவிகளை அல்ல.
நண்பரே, தங்களது 18 தேதி பதிவினை தற்போதுதான் பார்த்தேன். மனித உயிர் விலை மதிக்க mudiyaathathu. ஆனால் முதல்நாள் ஆர்பாட்டம் மட்டும் என்று ஒப்புக் கொண்டுவிட்டு மறு நாள் அசுர தாக்குதல் நடத்தி, ஆரம்பித்து வைத்தது யார்? கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு பணியாளர்கள் எப்படி இதில் சம்பந்த படுவர்? அவர்கள் ஏன் தாக்க பட வேண்டும். இப்போதும் சொல்கிறேன். ராணுவம் காவல் இவற்றிற்கு கீழ் படிதல் தான் முதல் தகுதிநம்மை முட்டாளாக்கும் cinema தான் நம்மை தடம் புரள வைக்கிறது. Media அதை தன் சொந்த இலாபத்திற்காக விற்கிறது. மக்களது கல்வி அறிவு மட்டுமே நம்மை காப்பாற்றும்.
Kannamma, what i thought was scripted by you. Excellent… Rajini was portrayed as SIRIPPU DON… He did nothing and still continues to be the King of the slum. Its not a Rajini Movie its purely directors movie. And i dont want to comment on the Director as Iam not in line with his intentions
அன்புள்ள சவுக்கு ஆசியர் அவர்களுக்கு, தொடர்ந்து சவுக்கு மின் இதழை வாசித்து வரும் என்.பகத் சிங் எழுதி கொள்வது,
காலா திரைப்படம் குறித்த காலா ரீலும் – ரியலும் என்ற இந்த பதிவை சிறிது மாற்றி அப்படியே தீக்கதிருக்கு அனுப்பி மிக ப் பெரும் தவறு செய்து விட்டேன். தவறுக்கு மிக மிக வருந்துகிறேன், வெட்கப்படுகிறேன் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.
சவுக்கு இதழில் தாங்கள் மிக துணிச்சலாக, பல உண்மைகளை கட்டுரை வடிவில் தருகிறீர்கள். இது பாராட்டுதலுக்குரியது.
குறிப்பாக மோடி குறித்து தாங்கள் தற்போது தொடங்கியுள்ள புதிய பகுதி மிக தெளிவாகவும், தைரியமாகவும் செய்திகளை எடுத்து வைக்கிறது. மோடி கண்டிப்பாக அகற்றப்பட வேண்டிய பாசிஸ்ட் தான் இந்த விசயத்தில் தங்களோடு சேர்ந்து பயணிக்க விரும்புகிறேன்.
மீண்டும் ஒருமுறை தங்களிடம் வருத்தம் தெரிவிக்கிறேன் காலா குறித்த பதிவு திருட்டு தொடர்பாக .
தோழமையுடன்
என் . பகத்சிங்
விமரசகர் தூத்துக்குடியை மனதில் வைத்து இதை பதிவிட்டுள்ளார். இங்கே உள்ள அரசியல் வாதிகள் யாரும் யோகியர்கர்கள் இல்லை. Police ஐ அடிப்பதை எப்படி ஏற்று கொள்ள முடியும். வேறு சந்தர்ப்பங்களை தூதுகுடியுடன் ஒப்பிடவெண்டாம். அரசுகள் சொல்லி போலீஸ் அடிப் பது சினிமாவில் மட்டுமே சாத்யாம். போலீஸ் என்கிற மனிதன் தக்கபடும்போது இயல்பாக வரும் நிதானம் தவறுதல் தவிர்க்கமுடியாத. ரஜினியை விடுங்கள். ஏன் மற்ற முதலமைச்சர் கனவில் உள்ளவர்கள் போராட்டம் அன்று பாதுகாப்பாக chennaiஎல் இருந்தார்கள். ஏன் போராட்டத்தில் முன் வரிசையில் நின்று போராடவில்லை.
So if you beat a policeman they can shoot and kill people ? Right ? Then why do they take all measurements while recruiting ? why not take old ATM guards and teach them to fire weapons ?
“ஆமா இவரு யாரு” ..kannamma..
amma ivaru yaaru …kannamma..
தமிழ் காமிக்சில் துப்பறியும் சாம்பு என்று ஒரு கதா பாத்திரம் உண்டு. அதாவது ஒரு ஹீரோவுக்கு உரிய எந்த வித குணாதிசயங்களும் இல்லாத ஒரு நபர் சாம்பு! ஆனால் தன்னை பெரிய ஹீரோவாக நினைத்துக் கொள்பவர். காக்கை உட்கார பனம் பழம் விழுந்தது போல .. அவர் அசட்டுத்தனமாக செய்யும் செயல்கள் , ஒரு விஷயத்தை துப்பறிந்து விட , அது பெரிய ஹீரோயிசமாக கொண்டாடப்படும். முதலில் மனதில் அவர் பயந்தாலும் எல்லோரும் கொண்டாடும் போது அசட்டுத்தனமாக .. ஒரு சமாளிப்பு சமாளித்து வீராவேசமாக ஒரு போஸ் கொடுப்பார் பாருங்கள்! அடடா! அப்படியே காலா கரிகாலன்தான்.! கரிகாலன் எனப்படும் தனி நபர்.. அவரை சுற்றியுள்ளவர்கள் மட்டுமே அவர் தாரவிக்கு அரசர் என்றும் இப்படியும் அப்படியும் சொல்லிக் கொள்கிறார்கள். அவர் நினைத்தால் அத்தனையும் தூள் தூள் .. என்பது போல ஒரு பெரிய பில்ட் அப் கொடுக்கிறார்கள்… இப்படி திரும்பி ஒரு போஸ்வ் கொடுக்கிறார். அப்படி திரும்பி ஒரு போஸ் கொடுக்கிறார். நடனத்தின் போது இப்படியும் அப்படியுமாக நடந்து காண்பிக்கிறார். ( ஸ்டைலாம்!) தாடியை / மீசையை அடிக்கடி சொரிந்து கொள்கிறார். ( சுத்தமாக இல்லாததின் விளைவு .. அரித்துக் கொண்டேதான் இருக்கும்.) ஆனால் தாடி வைத்திருப்பதே ஒரு அறிவாளியின் / ஒரு ஆகர்ஷண ஹீரோவின் அடையாளமாக அவரை படைத்தவர் ( கதையின் இயக்குனர்) நினைத்து விட்ட காரணத்தால்.. தாராவியின் கிங்காக .. இருப்பதற்கு அது மட்டுமே செய்தால் போதும் என்று அப்பாவித்தனமாக நினைத்துக் கொள்கிறார். வேகமாக நடப்பது …( அவர் வேகமாக நடப்பதை slow மோஷன் ல் காண்பிப்பது ) இவையெல்லாமே போதும் ஒரு நபர் மக்கள் கொண்டாடப் படும் நபராக .. ஒரு மாஸ் ஹீரோவாக இருப்பதற்கு .. என்று இயக்குனர் நினைத்து விட.. நமது துப்பறியும் சாம்பு வான காலா.. அதகள படுத்துகிறார். .. ஆடுகிறார் ( அவரது மெல்ல நடை .. வேக நடை.. இதுதானே அவரது நடனம்!! ) பாடுகிறார்! .. மீசையை தடவிக் கொள்கிறார்.! ( அறிவு ஜீவியாம்! .. ஆழ்ந்த சிந்தனை உள்ளவராம்! ) .. ம்ம்ம் அப்புறம் வேறு என்ன செய்கிறார்! மனைவிக்கு பயந்தது போல நடிக்கிறார். .. தன்னையும் தன் முன்னாள் காதலியையும் இணைத்து வீட்டில் உள்ள அத்தனை நபர்களும் கேலி கிண்டல் பேசும்போது .. அதை ரசிக்கிறார்.! “” தாராவி முழுவதும் சுத்து சுத்துன்னு சுத்திட்டோமில்ல.! “” என்று தன் அல்லக் கையிடம் பெருமை அடித்துக் கொள்கிறார். ம்ம் வேறு என்ன செய்கிறார்?? .. ஹாங்! .. தேவர் மகன் போல கம்பீரமானவராம்! அதனால் .. வீட்டு வாசலில் ஒரு பெரிய சேர் போட்டு அமர்ந்து கொள்கிறார்! சுற்றிலும் அவரது மகன்கள் மருமகள்கள் .. பேரன் பேத்திகள்! .. நண்பர்கள்! அடடா! அடடா! எல்லாம் சரி! இத்தனை நாட்கள் தாராவியின் அசைக்க முடியாத கிங்காக தன்னை காட்டிக் கொள்பவர் .. மக்களுக்காக என்ன செய்திருக்கிறார் என்று பார்த்தால் … ஓ! ஓ! ஒரு பெரிய பூஜ்யம்! .. அந்த பூஜ்யத்தை அடிக்கடி உயரத்தில் இருந்து அடிக்கடி aeriyal ஷாட்! .. வேறு எடுத்து காண்பிக்கிறார்கள். பாருங்கள்! தாராவி இன்னும் ஒரு despicable slum தான் என்பது போல! குடியரசு அணிவகுப்பை aerial ஷாட் எடுப்பார்கள்! ஏனென்றால் அது அழகு .. கம்பீரம்! .. கூட்டு முயற்சி! நமது ராணுவத்தின் சாதனை! மேலிருந்து aerial ஷாட் வைக்கலாம்.! ஆனால் இவர் சாம்பு போல எதுவுமே செய்யாத ஒரு pseudo hero ! தன்னை சுற்றியுள்ள மக்களுக்கு எதுவுமே செய்யாமல்.. அரசின் மானிய பொதுக் கழிப்பறைத் திட்டத்தை பெற்று ஒரு தனிக் கழிப்பறைக்கு கூட ஏற்பாடுசெய்யாமல் .. மக்கள் வறுமையிலேயே இருக்க ..அங்கேதற்கு ஏரியல் ஷாட்??
I think, Hari Dada is in the inspiration of Siva Sena Leader Bal Thakre , not Naam Tamilar Party
Both pirivinaivatham pesubavarkal enbathe highlight
Kannamma’s review is lot lot lot better than Jeevanand Rajendran’s review
Naam Tamizhar Katchi inna vaatham pesuthu seri, Kala Jaathiya vaatham pesutha illiya??? Then how stupid for rajinith to retweet that tweet that too being a member of VCK who has pledged dalits for decades to dmk and admk
yellam seri padam yenna theatre la ee ottudhu from 11th June (Monday)… ivalo nalla padatha jananga yen purakanichaanga???
கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் சொல்லிக் கொள்கிறான்.. “” நான்காட்டியும் குடிக்காமல் இருந்திருந்தால் என் மனைவியையும் மகனையும் காப்பாற்றியிருப்பேன் என்கிறான்.! “” இப்படி மானாவாரியாக குடித்து விட்டு .. தன்னை எதிரிகள் கூட்டிப் பொய் மிரட்டுகிறார்கள் என்ற உணர்வு கூட இல்லாமல் .. நிதானம் இல்லாமல் நீங்க யாரு? என்று திருப்பி திரும்பிஉளறி.. போலீஸ் கையால் அடி வாங்கி கீழே சரியும் ஒருவனை அந்த பகுதி மக்கள் முழுவதும் .. கிங் ஆக ஏற்றுக் கொள்கிறார்களாம். இப்படி பொது மக்களை முட்டாள்களாக அடிமைகளாக வைத்தாவது ஒரு ஏரியாவிற்கு ஒரு டான் கிங் அவசியமா? ஏன் பொது மக்கள் எல்லோரும் .. படித்து ஒரு நல்ல வேலையில் அமர்ந்து அல்லது பொருளாதார சுய சார்பு உள்ளவர்களாக .. தங்களுடைய நல்லது கெட்டதுகளை அவர்களே தீர்மானிப்பவர்களாக இருக்க கூடாது?? அப்படி இருந்திருந்தால்… தாராவிமக்களை போல ( அதாவது படத்தில் காட்டப்படும் படும் மக்களை போல ) அவர்கள் தலைவன் மட்டும் தனிக் கழிப்பறையுடன் வசதியான வீட்டிலும் மக்கள் எல்லோரும் பொதுக் கழிப்பீடத்தை தேடி ஓடும் அவல நிலையில் இல்லாது… அரசாங்கத்தின் மானியத்துடன் கூடிய கழிப்பறைத் திட்டத்தை பயன் படுத்தி அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி இருப்பார்களே?/? … அப்படி அரசாங்கத்தின் திட்டங்கள் பொது மக்களை அடைந்தால்தானே ஏழைகள் வாழ்க்கை தரம் மேம்படும்? மக்களுக்காக கிள்ளிக் கூட தெறிக்காத கரிகாலன் போன்ற டான்களினால் ஏதாவது பயன் உண்டா?
காலா தாழ்த்தப்பட்ட சாதியாக சித்தரிக்கப் பட்டு இருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் அவர் எந்த சடுதியாக இருந்தாலும் சரி! .. ஏன் ஒரு குறிப்பிட்ட இனத்து மக்கள் .. ஒரு வரை மட்டும் தலைவராகவும் மற்றவர்கள் அவரை சுற்றிக் கொண்டு அடிமைகளாக அவருக்காக உயிரை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்?? இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தாழ்த்தப் பட்டவர்களை , ஏழைகளாக .. ஒரு பெரிய வசதியான டான் கிங் கிற்கு அடிமையாக காட்டிக் கொண்டிருப்பீர்கள். அப்படியானால் ரஞ்சித் கனக்குப் படி ஏழைகள் ஏழைகளாக மட்டுமே இருக்க வேண்டும்! அவர்களின் one and only தலைவன் மட்டும் வசதி உள்ளவனாக .. அவன் மனைவி கழுத்தில் தினப்படிக்கே ஐம்பது அறுபது பவுன் நகைகள் மின்ன காட்சியளிக்க வேண்டும்!??! இது எந்தவிதமான பொதுவுடமைத்தனம் என்று ரஞ்சித்தோ அல்லது அந்த படத்தை சிலாகித்து கருத்து எழுதும் சவுக்கோ சொல்வார்களா? காலா வேலையை விட்டு விட்டு வரச் சொல்கிறார் வாருங்கள் போகலாம்! என்று அப்படியே செய்யும் வேலையை பாதியில் விட்டு வருகிறார்கள்!! ஏன் எதற்கு என்றெல்லாம் யோசிப்பதே இல்லை!! ஆட்டு மந்தை கூட்டம் ! சுய சிந்தனை எதுவும் இல்லாமல் ஒரு தலைவன் என்று சொல்லிக்கொள்பவனிடம் அடிமை போல இருக்கிறார்கள்! ஆனால் அந்த தலைவன்
அறுபதாம் கல்யாணம் என்று பாட்டில் பாட்டில் ஆக ஊற்றிக் கொள்கிறான்! ( அது சரி! கடவுள் பக்தி இருந்தாலாவது கோவிலுக்கு சென்று ஒரு அன்ன தானமோ… ஆடை தானமோ செய்வான்! .. இங்கு அதுவும் இல்லை. பிறகென்ன குடியும் கூத்தும்தானே?? ))
யாரோ ஒரு போலீஸ்கரருக்கு அறிவுரை சொல்கிறார் காலா! நான்தான் படிக்கவில்லை! உன் பிள்ளைகளையாவது நன்றாக படிக்க வை என்று! அவர் தன் மக்களை படிக்க வைத்துள்ளாரா? அவரது மகன் ஸ்டாலினோ அவரது தோழியோ நன்கு துடிப்பாக இருக்கிறார்களே .. அவர்கள் ஏன் படித்து கல்லூரிக்கு செல்லவில்லை?? புரட்சி என்ற பெயரில் குச்சியை தூக்குவதும் எனக்கு தடியெடுக்க மட்டுமல்ல அடிக்கவும் தெரியும் என்று வசனம் பேசுவதும்,, கருப்புதான் எனக்கு பிடித்த கலரு .. என்று சுத்தமில்லாமல் உடுத்திக் கொள்வதும் .. ஸ்டாலின் என்று பெயர் வைத்துக் கொள்வதும் ..வீட்டில் ஒரு மூலையில் அம்பேத்கார் போட்டாவை மாட்டி வைப்பதும் .. இந்து மதத்தை எதிர்க்க .. புத்தர் படத்தை மாட்டி வைப்பதுவும் மட்டுமே.. உங்கள் சமுதாய இளைஞர்களை முன்னேற்றி விடும் என்று நம்புகிறீர்களா? ரஞ்சித்?? அப்படியென்றால் அது தவறான வழி காட்டல்! முக்கியமாக புத்தர் படத்தை மாட்டிக் கொள்வது இன்றைய சூழ்நிலையில் .. எள்ளி நகையாடக் கூடிய செயல்… ( இலங்கையில் இனப் பிரச்சினைக்கும் .. பர்மிய இனப் பிரச்சினைக்கும் .. முக்கிய காரணமே .. அங்குள்ள புத்த மதத்திய துறவிகளின் இன வெறியும் சகிப்புத் தன்மையும் இல்லாததன் காரணத்தால்தான் என்பது நீங்கள் அறிந்ததுதானே!!) .. புத்தரின் கொள்கைகள் உங்களுடன் முற்றிலும் முரண்பட்டவை.! அம்பேத்கர் புத்த மதத்தை தழுவினார் என்றால் அவர் படித்தவர் .. பண்பாளர்.. சாத்வீகமானவர்.. அவர் உங்களை போல சுத்தமில்லாத உடையை உடுத்திக் கொள் .. .. பள்ளி பக்கம் செல்லாமல் புரட்சி என்ற பெயரில் மக்களை தூண்டி விடு.. நடு வீட்டில் பாட்டிலை வைத்துக் குடி என்றெல்லாம் தன் தலை முறைக்கு சொல்லி செல்லவில்லை. .. அவர் அடாவடிக்கு அடிதடிக்கு ( ஸ்டாலின் தோழியை போல ) செல்லாத … சாத்வீகமான .. முக்கியமாக அரசின் சட்ட திட்டங்களுக்கு மரியாதையை அளித்த … CIVIC SENSE .. எனப்படும் நல்ல குடிமகனின் குணாதியசங்களோடு இருந்தவர். அவர்புத்த மதத்தை தழுவியிருக்கலாம். புத்தரை வணங்கி இருக்கலாம். ( அம்பேத்காரின் இறுதி சடங்கு எந்த மதத்தின்படி நடந்தது தெரியுமா? கொஞ்சம் வரலாறும் அறிந்து கொள்ளுங்கள்.) ஆனால் களவில் வீட்டில் புத்தர் எதற்கு? புத்தர் வெறுமனே ஒரு குறியீடு மட்டுமல்ல. அவர் ஒரு வாழும் வகை. வாழ்க்கை வாழ வேண்டிய விதத்தை விளக்கிய ஒரு வழிகாட்டி! .. தயவு செய்து ஸ்டாலின் தோழி போன்று அராஜக கதாபாத்திரங்களை படைக்கும் நீங்கள் .. புத்தர் படத்தை setting props ஆக உங்கள் படத்தில் உபயோகப் படுத்தாதீர்கள்.
கரிகாலன் என்கிற கதா பாத்திரம் கதை முழுவதும் என்னதான் செய்கிறது?/ .. கருப்பு சட்டையுடன் உலவுகிறது. கேட்டால் வெள்ளை சட்டைக்கு காரர்கள் வெளியே வெள்ளையாகவும் உள்ளே கருப்பாகவும் இருப்பவர்கள் ; நாங்கள் வெளியேவும் கருப்பாக உள்ளோம் என்கிறது. மற்றபடி படத்தின் பெரும்பாதி தன் மனைவிக்கு பயந்து அல்லது பயந்த மாதிரி நடிக்கிறது .. மற்றும் தன் முன்னாள் காதலியை பார்த்து மிரட்சி அடைகிறது. வேறு ஏதாவது பொது மக்களுக்கு பலன் வரும் போல எதாவது செய்கிறதா என்றால் இல்லை. காலா என்ற பெயரும் கருப்பு உடையுமே ஆண்மையின் சின்னம் என்பது போல சித்தர்க்கப் படுகிறது. முன்னாள் காதலி காலாவை பார்க்க வரும் ஒவ்வொரு முறையும் .. குடும்பமே சேர்ந்து .. மகன் மருமகள் .. நண்பர்கள் .. மகனின் நண்பர்கள் என அனைவரும் மானாவாரியாக.. அநாகரீகமாக காலாவையும் அந்த பெண்ணையும் ஒப்பிட்டு கேலி கிண்டல் செய்கிறார்கள்.டே ! பேசாம இருங்கட! என்று சொன்னாலும் கரிகாலன் அதை ரசிக்கவே செய்கிறார்.!இது எந்த வகை ஆண்மையில் சேர்த்தி?? முன்னாள் காதலியாக இருந்தாலும் அவர் இப்போது இன்னொருவர் மனைவி அல்லவா? ..ஒருவேளை அவர் யாரையும் மணக்காமல், அவரது மகள் காலனின் வாரிசாக இருந்தால் கூட.. குடும்பத்தில் உள்ள குஞ்சு குழுவின் எல்லாம் அதை அநாகரீகமாக கிண்டல் செய்வது.. இதிலேயே பெரும்பாதி கதை போய் விடுகிறது.! காலா .. ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக காட்டப் படுகிறார். ..வீட்டுக்குள்ளேயே பாட்டில் வைத்து குடிக்கிறார்.. குடும்பத்துடன் குடித்து விட்டு ஆடுகிறார். ..மனைவியின் சகோதரனாக காட்டப் படும் சமுத்திரக் கனியே பாட்டிலை எடுத்து எடுத்து கொடுக்கிறார்.! இது தமிழர் நாகரீகமல்ல! நமது சமூகத்திலும் பல இனங்கள் சாதிகள் உண்டு.. ஆனால் நான்கு பிள்ளைகளை பெற்று பேரன் பேத்தியோடு வாழும் ஒரு வயதான பெரியவர் மிக கண்ணியமான பழக்க வழக்கங்களை உடையவராக இருப்பார். குடியோ புகைத்தலோ .. முக்கியமாக மருமகள் முன்பு பேரன் பேத்திகள் முன்பு இப்படி பாட்டில் பாட்டிலாக குடித்து விட்டு கண்டபடி நடனமாடுவதில்லை. ஒதுக்கு புறமாகவோ தோப்பிலோ அல்லது தன் தனி அறையிலோ குடிப்பார்கள் தவிர… ஒரு நாகரீகமுள்ள தமிழன் தன் மருமகள்கள் முன்னாள் குடித்து விட்டு ஆடுவது .. ( அறுபதாம் கல்யாணமாம்! ) என்பது நடப்பில் இல்லை! இருந்தும் ரஞ்சித் இப்படி ஒரு கதா பாத்திரத்தை சித்தரித்து இருப்பது.. தங்கள் சமூகம் இன்னும் நாகரீகம் அடையவில்லை என்பதை… தானே ஒப்புக் கொள்வது போல இருக்கிறது.!! .. மீசையை முறுக்கி விட்டுக் கொள்வதாலோ.. சுற்றி பேரன் பேத்தி மருமகள்கள் சூழ கம்பீரமாக நாற்காலியில் அமர்ந்து கொள்வதாலோ மட்டுமே ஒரு கதாபாத்திரம் தேவர் மகன் சிவாஜியாகி விடாது! தேவர் மகன் சிவாஜியிடம் உள்ள கம்பீரம் காலாவிடம் துளியும் இல்லை! குடியும் கூத்துமே எங்கள் அடையாளம் .. என்ற குறுகிய கண்ணோட்டத்தில் இருந்து முதலில் நீங்கள் வெளியே வாருங்கள் ரஞ்சித்! உங்கள் இளைஞர்களுக்கு நீங்கள் அல்லவா ரோல் மாடல் ஆக இருக்க வேண்டும்?? தலையை படிய நாகரிகமாக சீவ ..சுத்தமான உடை உடுத்த… மற்றவர்களுடன் கண்ணியமாக பேச.. முக்கியமாக படிக்க .. நல்ல வேளையில் அமர .. தன் இனத்து மக்களை முன்னேற வைக்க .. தன் சுற்றுப் புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள.. இதையெல்லாம் காலவின் நடத்தைகளாக நீங்கள் சித்தரித்தால் மட்டுமே .. உங்கள் சமூகத்து இளைஞர்களும் அதை பின் பற்றுவார்கள்! ?? இன்னுமெத்தனை நாட்களுக்கு ( ஆண்டுகளுக்கு!! ) நடு வீட்டில் குடிப்பது எங்களது ஆண்மைக்கு அழகு என்றும் தலையை பல வருடங்களாக வாராமல் இருப்பதுதான் எங்கள் நாகரீகம் என்றும் காண்பிப்பீர்கள்??
ha ha ha! you used to write the review of the film before watching the movie?? Answer to my doubts. காலா மட்டுமே பெரிய வீட்டில் வசிக்கிறார்! என்ன தொழில் செய்து சம்பாதித்தார் என்றோ அவர் மகன்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்றோ காட்டப் படுவதாக ஞாபகம் இல்லை. ஆனால் அவர் சகல வசதிகளுடன் வாழ்கிறார்! அனால் அவரை சுற்றியுள்ள மக்கள் .. அவருக்காகவே வாழ்ந்து அவருக்காகவே உயிரை விடத் தயாராக இருக்கும் மக்கள் .. பாழும் குடிசையில் இருக்கிறார்கள்.. பஞ்சாப் பராரியாக வாழ்கிறார்கள். பல வீடுகளில் வெறும் சாக்குத் துணியால் மட்டுமே மறைப்பு காட்டப் பட்டுள்ளது! அந்த சேரி மக்களுக்காக என்ன செய்கிறார் காலா? குறைந்த பட்சம் .. அரசு மானியத்தை பயன் படுத்தி கழிப்பறை கட்ட அறிவுறுத்தி இருக்கலாமே!! தன் வீட்டை பலமாக உறுதியாக சகல வசதியுடன் கட்டியிருக்கும் தாராவியின் தலைவர்.. மருமகள் பளீரென நிறைய நகைகள் போட்டு .. என் அவர் மனைவியும் கூட ஏழை பங்காளரின் மனைவியாக இல்லை! ஒவ்வொருவர் கழுத்திலும் குறைந்தது ஐம்பது பவுனாவது போட்டிருப்பதாக சித்தரித்து இருக்கிறார்கள்.! நல்லது! .. ஏன் காலாவை சுற்றிலும் உள்ள மக்கள் படு ஏழையாக .. எந்த வித அடிப்படை வசதியும் இல்லாத ..பொதுக் கழிப்பிடத்துக்கு ஓடுபவர்களாக இருக்கிறார்கள்?? பிறகு இத்தனை வருடங்கள் தாராவியின் அசைக்க முடியாத கிங் ஆக இருந்து அந்த மக்களுக்கு ஒரு தனி கழிப்பறை வசதி கூட செய்து தரவில்லை என்றால் அவர் என்ன பெரும் தலைவர்?? தன் சொந்தக் காசில் வேண்டாம்! அரசாங்கத்திடம் பேசி அரசு மானியம் மூலம் செய்திருக்கலாமே.! உங்கள் கதையில் கதாநாயகன் தன் மக்களுக்காக அவர்கள் அடிப்படை தேவைகளுக் காக ஏதாவது செய்வதாக என் காட்டவில்லை ரஞ்சித்??
General damage of kala charector i also enjoy kannamma. But few words of ur review hint damaging rajini alone is not ur intention. Hints are- repetetive mention of arasu maaniyathudam koodiya kazhipparai, hidden nakkal on dalit symbols, insisting daanam, thamizhar panpaattukkuriyeedu nu few charectors r mentioned….. Accept the diversity of hindu religion, indian diaspora, and tamil culture as well. Brahmanical representation alone not the above said names. I agree and enjoy review on kala charector as i said. But not on the symbols of the movie that were cleverly criticised.
Kaalaa’ s leg has been broken