பீமா கோரேகான் வன்முறைகளில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களை ”நக்சல்கள்” என முத்திரை குத்திய பிறகு, புனே போலீஸார் மற்றொரு “ தியரியை“ கொண்டு வந்தனர். அதாவது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை போன்ற ஒரு தாக்குதலில் பிரதமர் நரேந்திர மோடியை இலக்கு வைக்க திட்டமிட்டிருந்தனர் என்பதுதான் அந்த தியரி.
ஜனவரி 1 அன்று தலித் சபை புனேவின் புறநகர்ப் பகுதியில் பீமா கோரேகானில் கூடியபோது, அன்று ஏற்பட்ட வன்முறைக்கு பின்னால் ஐந்து பேர் இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.
கைதானவர்களில், நாக்புரைச் சேர்ந்த மூத்த மனித உரிமை ஆர்வலர் சுரேந்திரா காட்லிங், மூத்த தலித் உரிமை ஆர்வலரும் “வித்ரோஹி“ என்ற மாதமிருமுறை பத்திரிகையின் ஆசிரியருமான சுதிர் தவாலே, டாடா சமூக அறிவியல் நிறுவன முன்னாள் மாணவரும், பிரதம மந்திரி கிராமப்புற வேலைப்பாடு முன்னாள் ஆராய்ச்சியாளருமான மகேஷ் ரவுத், தில்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலருமான ரோணா வில்ஷன் மற்றும் நாக்பூர் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரான சோமா சென் ஆகியோர் அடங்குவர்.
அவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு வாதாடிய அரசாங்க வழக்கறிஞர் உஜ்ஜவாலா பவார், ” ராஜீவ் காந்தி படுகொலை போன்ற பெரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்த அவர்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று நாங்கள் கருதுகிறோம்.” என்றார். போலீஸாரின் இந்த கூற்று கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களில் ஒருவரது மடிக்கணினியில் இருந்து மீட்கப்பட்ட ஒரு கடிதத்தை அடிப்படையாக கொண்டது. எனினும், கைது செய்யப்பட்டவர்களுக்காக வாதாட தில்லி, மும்பை மற்றும் நாக்பூரிலிருந்து பயணித்திருந்த பாதுகாப்பு வழக்கறிஞர்களின் குழு போலீஸாரின் தியரியை கடுமையாக எதிர்த்தது, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் Unlawful Activities Prevention Act, கடுமையான பிரிவுகளை போலீஸாரை் இந்த வழக்கில் n சேர்த்திருந்தாலும், கைது செய்யப்பட்ட நபர்கள் தடை செய்யப்பட்ட CPI (மாவோயிஸ்டுகள்) குழுவின் பகுதியாக இருப்பதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் காவல்துறையினர் காட்டவில்லை என அந்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர்..
ஆனால், புனே மாநகர காவல்துறை இணை ஆணையர் ரவீந்திர கடம் கூறுகையில், ”சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) என்ற ஒரு தடை செய்யப்பட்ட பயங்கரவாதக் கட்சியுடன் தொடர்பு வைத்திருந்ததால் இந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீமா கோரோகானுடன் தொடர்புடைய ஒரு வழக்கின் விசாரணையில்போது, மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்த இந்த ஐந்து பேரையும் நாங்கள் கண்டுபிடித்தோம்,” என்றார்.
இந்த ஐந்து பேரும் ஏழு நாட்களுக்கு போலீஸ் காவலில் வைக்கப்படுவார்கள்.
கடுமையான குற்றச்சாட்டுகள்
ஜூன் 6 ம் தேதி, புனே போலீஸார், நாக்பூர், மும்பை மற்றும் தில்லி போலீஸாருடன் இணைந்து ஒரு ஆப்பரேஷனை செய்தபோது, இந்த ஐந்துபேரையும் கைது செய்தனர். அவர்களனைவரும் ஜுன் 7-ம் தேதி புனேவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களில் நால்வர் அன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், காட்லிங் என்பவரை மட்டும் தனியாக காலை 5 மணிக்கு ஏ.எஸ்.பஹிஸாரேவின் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். மற்ற குற்றவாளிகளுடன் அவரை அழைத்துச் செல்வது “ஆபத்தானது” என போலீஸார் கூறினர்.
கைது செய்யப்பட்டவர்களுக்காக வாதாட மும்மைபயிலிருந்து வந்திருந்த வழக்கறிஞர் சுஸன் ஆபிரகாம், காட்லிங் போலீஸாரால் நடத்தப்பட்ட விதத்தைக் கண்டு தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். ”குற்றஞ்சாட்டப்பட்டவரை காலை 5 மணிக்கு போலீஸார் ஆஜர்படுத்துவதை முதன் முதலாக நான் பார்க்கிறேன். போலீஸார் வேண்டுமென்றே தங்களது வழக்கறிஞரை காட்லிங்குக்காக வாதாட நியமித்துள்ளனர்,” என்றார் அந்த பெண் வழக்கறிஞர். பின்னர், நீதிமன்ற காவலில் வைக்கக்கோரும் மற்ற நால்வரின் மனு விசாரணையை மாஜிஸ்திரேட் பஹிஸாரே பிற்பகலில் தொடர்ந்து கேட்டார்.
“தேசத்தின் ஒருமைப்பாட்டை” அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டதுடன், ‘தோழர் எம்’ என்ற ஒருவர் மூலம் அவரை அனுப்பியதாக கூறப்படும் வில்ஸனின் லேப்டாப்பில் ஒரு கடிதம் கிடைத்ததாக அரசு வழக்கறிஞர் பவார் குறிப்பிட்டார். தோழர் எம் என்பவர் தப்பியோடிய நக்சல் தலைவர் தெல்டம்ப்டே. அவரது தலைக்கு ஏற்கெனவே ரூ 50 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது என போலீஸ் வட்டாரங்கள் பின்னர் தெரிவித்தன.
பவாரின் கூற்றுப்படி, இந்த ஆர்வலர்கள் நாட்டிற்கு எதிராக போரை நடத்த திட்டமிட்டுக் கொண்டிருப்பதைக் காட்டும் முக்கிய தகவல் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை போலீஸார் வைத்துள்ளனர். ”2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி நடைபெற இருந்த எல்கர் பரிஷத்தை நடத்துவதற்காக ஏற்பாடு செய்ய தவாலே 2017 ம் ஆண்டு ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் நிதி பெற்றார் என பவார் கூறினார். போலீஸாரின் கூற்றுப்படி, மாங்லு மற்றும் திப்பு என்ற இரண்டு மாவோக்கள் தவாலேயுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
”அவர்கள் இதுபோன்ற பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். புரட்சியைக் கொண்டுவர திட்டமிட்டனர். தங்களது சித்தாந்தங்களைப் பரப்ப அவர்கள் புகழ்பெற்ற நிறுவனங்களின் மாணவர்களை சேர்த்துள்ளனர். இந்த அனைத்து ஆவணங்களையும் பார்க்கும்போது, ராஜீவ் காந்தி படுகொலை போன்ற பெரிய பயங்கரவாத தாக்குதலை அவர்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம்.” என அரசு தரப்பு வழக்கறிஞர் மேலும் தெரிவித்தார்.
விடையில்லா கேள்விகள்
தவாலேவுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் சித்தார்த்த பாட்டீல் இந்த கூற்றுகளை மறுத்தார். ”எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கும் புலனாய்வை தொடங்கியதற்கும் இடையே நீண்ட தாமதம் உள்ளது. இதற்கு எந்த விளக்கமும் இல்லை” என்கிறார் சித்தார்த்த பாட்டீல்.
“இவர்கள் ஆபத்தான நக்சல்களாக இருந்திருந்தால், அவர்களை கைது செய்ய போலீஸார் நீண்ட காலம் எடுத்தது ஏன்? போலீஸாரால் உருவாக்கப்ட்ட மொத்த தியரியும் தீவிர சந்தேகங்களை எழுப்புகிறது “என்று பாட்டில் வாதிட்டார். மும்பை தியோனாரில் தனது இல்லத்தில் இருந்து காலை 7 மணியளவில் தவாலே கைது செய்யப்பட்டிருந்த போதிலும், அவர் நண்பகலில் கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஆவணம் காட்டுகிறது.
ஜனவரி 8 ம் தேதி பதிவு செய்யப்பட்ட முதல் FIR, கபீர் காலா மாஞ்ச் கலாச்சார குழுவின் ஏனைய உறுப்பினர்களுடன் தாவாலேயை மட்டுமே குறிப்பிட்டது. அந்த குழுவிலிருந்து காவல் துறையினர் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை என்றாலும், புதிய பெயர்களை எஃப்.ஐ.ஆரில் சேர்த்துள்ளனர். புனேயில் உள்ள ஷானிவர்வாடா நகரில் 200க்கும் மேற்பட்ட அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ”எல்கர் பரிஷத்” நிகழ்ச்சியில் சென், ராவுட், காடிலிங் மற்றும் வில்சன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. டிசம்பர் 31, 2017 ஆம் ஆண்டில் எல்கர் பரிஷத் ஏற்பாடு செய்யப்பட்டது, மக்கள் பெருமளவில் கூடினார்கள். ஜனவரி 1 ம் தேதி இருந்த பீமா கோரேகானில் திடீரென வன்முறை வெடித்தது. தலித்துகள் இலக்காகினர். பல வாகனங்கள் எரிக்கப்பட்டன. ஒருவர் கொல்லப்பட்டார். மேலம் பலர் காயமடைந்தனர்.
இப்போதுவரை, அத் தாக்குதலை திட்டமிட்டு நடத்தியவர்கள் மனோகர் பிடே மற்றும் மிலிந்த் எக்போடே என்ற இரண்டு இந்து (தீவிரவாதிகள்) வன்முறையாளர்கள் என போலீஸார் கூறிவந்தனர். பிடே மற்றும் எக்போடே ஆகிய இரு பிராமணர்கள் மற்றும் முக்கிய இந்துத்துவா தலைவர்களுக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. பொதுமக்களின் அழுத்தத்திற்கு பின் ஏக்போட் கைது செய்யப்பட்டபோதும், பிடேயின் முன் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட பின்னரும் கூட அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்களுக்கு எதிரான எஃப்ஐஆர் இன்னும் நிலுவையில் உள்ளது.
எல்கர் பரிஷத் நடைபெற்றதற்கு அடுத்த நாள் ஜனவரி 1 ம் தேதி கலவரம் ஏற்பட்டிருந்தபோதும், தவாலே மீதும் மற்றவர்கள் மீதும் ஜனவரி 8-ம் தேதிதான் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது என்பதை சுட்டிக் காட்டுகிறார் பாட்டீல். பின்னர், ஏப்ரல் 17 ம் தேதி தாவலேவின் இல்லத்தில் போலீஸார் தேடுதல் வேட்டைகளை மேற்கொண்டனர். அவ்வளவு “சீரியஸானது“ எனில், அதன்மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு ஏன் இத்தனை மாதங்கள் ஆனது என்ற கேள்வியை பாட்டீல் எழுப்பினார்.
“போலீஸார் ஆதாரங்களை “உருவாக்குவதற்காக“ நீண்ட காலமாக காத்திருந்ததைப் போலவே இது தெரிகிறது,” என்று பாட்டில் வாதிட்டார். UAPA ஐ பயன்படுத்துவது அடிப்படையிலேயே தவறானது என்றும், இந்த கைதுகள் சட்டவிரோதமானவை என்றும் அவர் வாதிட்டார். டாக்டர் பினாயக் சென்னின் கடந்த கால வழக்கை கூறி, பாட்டில் நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது: ஒரு தடைசெய்யப்பட்ட கட்சிக்கு சொந்தமான அல்லது அக்கட்சியைக் குறிப்பிடும் ஆவணங்கள் மற்றும் கடிதங்கள் இருப்பது, அவர்களோடு ஆர்வலர்கள் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதில்லை. கைது செய்யப்பட்டவர்கள் அந்த தடைசெய்யப்பட்ட கட்சியின் தீவிர உறுப்பினர்களாக இருந்தனர் என்பதைக்காட்டும் ஆவணங்கள் எதையும் போலீசார் அளிக்கவில்லை. ஆகையால், ஏன் போலீஸார் UAPA ஐ பயன்படுத்தியிருக்கிறார்கள்?” ஆரம்பத்தில் எஃப்..ஐ.ஆரில்., இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் (IPC) மட்டுமே இருந்தன, பின்னர் யுஏபிஏ சேர்க்கப்பட்டதா?”
”UAPA சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், விசாரணையை நடத்துவதற்கு மாநில காவல்துறைக்கு உரிமை கிடையாது. சட்டப்படி, இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்க வேண்டும். மாநில அரசு மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு இந்த வழக்கு குறித்து தேசிய புலனாய்வு அமைப்புக்கு தெரியப்படுத்த வேண்டும்,” என பாட்டீல் மேலும் கூறினார்.
கைது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சந்தேகங்களை எழுப்புகின்றனர். ”ஒரு தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினராக இருக்கும் ஒருவர் தலைமறைவாக இருக்கையில் எழுதிய கடிதம் இத்தனை தகவல்களையும் கொண்டிருந்தது என்பது நம்பும்படியாக இல்லை. எல்கர் பரிஷத்திற்கான நிதி, கைதுசெய்யப்பட உள்ள அனைவரது பெயர்கள், பிரகாஷ் அம்பேத்கர், ஜிக்னெஷ் மெவானி போன்ற தலைவர்களின் பெயர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நக்சல்களுடன் அவர்களின் தொடர்பு ஆகியவை குறித்து அந்த கடிதம் சொல்கிறது. மேலும் தீவிரமாக, தடை செய்யப்பட்ட கட்சியின் தொடர்பு கொள்ள வேண்டிய தோழர்களின் தொடர்பு எண்கள் அந்த கடிதத்தில் உள்ளன. தடைசெய்யப்பட்ட கட்சிகள் இப்படியா செயல்படும் ? இந்தக் கடிதத்தை எழுதுகையில் காவல்துறை இன்னும் மிகக் கவனமாக இருந்திருக்க வேண்டும்.” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத ஆர்வலர் ஒருவர்.
வர்ஷா டோர்கால்கர்
உண்டியல் குலுக்கிகள் என்றுபாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சொல்கிறார். முதலில் உண்டியல் குலுக்கியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் இல்லை. இந்துக் கடவுள்கள்தான். பூசாரி இல்லாத கோயில்கள் கூட உண்டு. உண்டியல் இல்லாத கோயில் உண்டா. கோயில் என்பதுஇல்லாதவர்களுக்கானது, கஷ்டப்படு வர்களுக்கானது. அந்த கோயிலில் உண்டியல் வசூல் செய்து அந்த கோயிலை நடத்துகிறார்கள். அதே பாணியில்தான் ஏழைகளின் இன்னொரு கோயிலாகிய கம்யூனிஸ்ட் கட்சியும் உண்டியல் ஏந்துகிறது. கம்யூனிஸ்ட்டுகளை இழிவு படுத்துவதாக நினைத்துக்கொண்டு இந்து கோயில் களை இழிவுபடுத்தியுள்ளார் தமிழிசை. அந்த அம்மையார் மீது வழக்குபோடப்பட்டிருக்க வேண்டும் தொலைக் காட்சி நிறுவனத்தின் மீது வழக்கு போட்டு கைது செய்யப்போகிறார்கள் என்றால் தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை நடக்கிறதா, இல்லையா?
Political outfits/media talk nonsense. Let it be CPI/Congress or BJP. It’s very pathetic to see Indians hate Indians and it’s originating only from TamilNadu.
Dubakkoor Modi’kku evlo Bhakthal’s
Dear Nath
Whom do you the best PM for our nation If you considerd Modi being a fake aka Dubakkur?
Given few bitter experiences that we had in the past from Indira Gandhi through Manmohan Singh, can we gauge their performances? Probably you might not like just because he’s trying to promote to unveil the black money from our politicians to whom we oblige, especially in TN. Hope you understand.
Regards
Dear Editor
If I recollect from one of your blogs, you mentioned that you were harassed and manhandled by TN Police Dept. Do your complaints since you were subjected to torture bear any legitimacy of truth? I have the right to ask you since you exercise your right of freedom to talk or write on PM Modi or others.
Dear Editor
My two cents. Get out of the illusion of Dravidian maaya. Hope you are a Hindu and be proud of a savior who’s trying to save our from the onslaught of foreign missionaries. Please think out of the box.
Write some positive article about Prme minister.
Always WRITING negatively
Write what good he did.
Stupid…..want to be against Modi n BJP
SO WRITING some shit.
Ok, agreed.
pls state what good the PM did.. enlighten us.
Dear Mr.Anbu
He did lot of good things that other PMs didnt’t. But, be aware, Kashmir would have been a different country (Pak version 2) ,if Modi we’re not the PM. As you know, Rahul is a pro-paki and it’s known fact.
Regards
Stupid…..want to be against Modi n BJP
SO WRITING some shit.
Waste article..
சவுக்கு மின்னிதழின் வெகுநாள் வாசகர் நான். சவுக்கில் முன்னர் காணப்பட்ட சிறப்பான புலனாய்வுக் கட்டுரைகள் தற்சமயம் வருவதிலை. அதிமுக அரசையும் மோடியையும் எல்லோரையும் போல எதிர்த்து எழுதி தமிழக பத்திரிகை நீரோட்டத்தில் கலந்து தீர்ந்துவிட்டது. மொத்தத்தில் பழைய உயிரோட்டம் இல்லை.