ஆமா ஜி : வாங்க ஜி வாங்க
மாமா ஜி : உங்க கிட்ட பேசவே பயமா இருக்கு ஜி , எடக்கு மடக்கா எதாவது பேசி சிக்க வச்சிருவீங்க ஒய்
ஆமா ஜி : அதெல்லாம் ஒன்னும் பண்ண மாட்டேன் ஜி, போன வாரம் ராஜாவின் வீர உரைகள்னு ஒரு CD வந்துச்சு, அத கேட்டதில் இருந்து அப்படி ஆயிடுச்சு, இப்போ தெளிஞ்சுட்டேன் ஜி .
மாமா ஜி : அது சரி, காலா பாத்தீங்களா ஜி ?
ஆமா ஜி : இன்னும் இல்ல ஜி, நீங்க தமிழிசை ஜி கூட போய் பாத்தீங்க போல
மாமா ஜி : அத ஏன் கேக்கறீங்க ஜி, நம்ம ரஜினி ஜி நடிச்ச படம் தானேனு கூட்டமா போய்ட்டோம். ஏன்டா போனோம்னு ஆயிடுச்சு
ஆமா ஜி : படம் நல்லா இல்லையா ஜி
மாமா ஜி : நம்மல போட்டு படம் முழுக்க தொவைச்சு எடுத்துட்டானுக ஜி. தூய்மை இந்திய திட்டம், ராமர் கதைனு நம்ம இந்துத்துவத்துக்கு எதிரான படம் ஜி அது
ஆமா ஜி : அய்யய்யோ, ரொம்ப சங்கடமா இருந்திருக்குமே ஜி எப்படி உக்காந்து இருந்தீங்க
மாமா ஜி : உச்சா வருது, போன் வருதுன்னு பாதி நேரம் வெளிய தான் ஜி மாத்தி மாத்தி நின்னுட்டு இருந்தோம். நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டானுக ஜி. இதுல ஒரு நல்ல விஷயம், இந்த படத்தை நாம ஆதரிச்சு பேட்டி கொடுத்ததால் கூட்டம் இல்ல
ஆமா ஜி : இது என்ன டிசைன் ஜி, நாம ஒரு படத்தை எதிர்த்தா ஹிட் ஆகுது ஆதரிச்சா ஒரு பைய தியேட்டர் பக்கம் வரமாட்டேன்றான்.
மாமா ஜி : நம்ம கட்டம் அப்படி ஜி
ஆமா ஜி : இப்போ என்ன ஜி பண்றது, படம் நல்லா இருக்குனு சொல்றதா இல்ல எதிர்த்து பிரச்னை பண்ணலாமா, ராஜா ஜி கூட ஒரு அசைன்மென்ட் கூட இல்ல போர் அடிக்குதுனு சொல்லறாரு.
மாமா ஜி : திருடனுக்கு தேள் கொட்டின நிலைமை தான் ஜி நமக்கு
ஆமா ஜி : சரி கெட்ட விஷயத்த பேச வேண்டாம். பிரணாப் முகர்ஜியை நம்ம இடத்துக்கே வரவச்சு காங்கிரஸ் மூஞ்சியில் கரிய பூசினோம் பாத்தீங்களா ஜி?
மாமா ஜி : எதாவது fake வீடியோ பாத்தீங்களா ஜி? நம்மல நம்ம இடத்துக்கே வந்து வச்சு செஞ்சிட்டு போய்டுச்சு பெருசு
ஆமா ஜி : என்ன ஜி சொல்ரீங்க
மாமா ஜி : லேடீஸ் அண்ட் ஜென்டில் மென்னு ஆரம்பிச்சார், நம்ம ஒருத்தன் எங்க லேடீஸ் எங்க லேடீஸ்னு எந்திரிச்சி அலைய ஆரம்பிச்சிட்டான். அவனை அடக்கி உக்கார வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சி.
ஆமா ஜி : வேற என்ன ஜி சொன்னாரு
மாமா ஜி : கான்ஸ்டிடூஷன்னை மதிக்கணும்னு சொல்றாரு
ஆமா ஜி : அது என்ன டியூஷன் ஜி ? நீட் தேர்வுக்கா ?
மாமா ஜி : சரியா கேட்டீங்க. நானும் இதை கேட்டதும் அப்படித்தான் நெனைச்சேன். ஆனா அது நீட் ட்யூஷன் இல்லை. ஏதோ கான்ஸ்டியூஷனாம். அம்பேத்கர் எழுதுனதாம்.
அப்பறம் டிஸ்கவரி ஆப் இந்தியாவை பத்தி பேசறாரு.
ஆமா ஜி : பெருசுக்கு இந்த வயசுல வேலையை பாத்தீங்களா. அனிமல்ஸ் மேட்டர் பண்றதை பாத்துக்கிட்டு இருக்காரு.
மாமா ஜி : அட நீங்க வேற. அது டிஸ்கவரி சேனல் இல்லங்க. டிஸ்கவரி ஆப் இந்தியா. நேரு எழுதுன புக்கு.
ஆமா ஜி : அந்த கருமத்தையெல்லாம் நாம எங்க படிச்சோம். இந்த போட்டோவை பாருங்க ஜி
மாமா ஜி : பாத்தீங்களா கில்லாடி பசங்க நம்ம IT விங். இன்னும் 2 நாளில் பிரணாப் ஜிக்கு அரை டவுசர் போட்டு விட்ருவானுக பாருங்க
ஆமா ஜி : சரி ஜி நம்ம மோடி ஜி காலேஜ் படிக்கும் போது எடுத்த போட்டோ வெளிவந்திருக்காம் பார்த்தீங்களா ? இனி ஒரு பய மோடி ஜி படிச்சாரான்னு கேக்க முடியாது
மாமா ஜி : அதுவும் நம்ம பயலுக பாத்த வேலை தான், எவனோ ஒருத்தன் போட்டோவை எடுத்து நம்ம மோடிஜி தலையை சொருகிட்டானுக அதையும் எதிர் கட்சிக்காரன் கண்டும் பிடிச்சுட்டாங்க
ஆமா ஜி : நேர்த்தியா தான ஜி செஞ்சிருக்கோம் எப்படி ஜி கண்டுபிடிச்சாங்க ?
மாமா ஜி : அந்த ஆர்ம்ஸ்ஸ பாருங்க ஜி அதுல தான் டவுட் ஆகி நோண்டிட்டானுக
ஆமா ஜி : சரி ஜி நம்ம மோடியை கொலை செய்ய மாவோயிஸ்ட் திட்டமாம் என்ன அக்கிரமம் பார்த்தீங்களா ?
மாமா ஜி : மாவோயிஸ்ட் என்னைக்கு ஜி வெளிநாட்டில் போய் கொலையெலாம் செஞ்சிருக்காங்க சொல்லுங்க
ஆமா ஜி : வெளிநாடா ? இங்கயே தான ஜி கொலை பண்ண பிளான் போட்டிருக்காங்க
மாமா ஜி : மாத்து துணி எடுக்க மட்டும் தான் மோடி ஜி இந்தியா வருவாருனு அவனுகளுக்கு மட்டும் தெரியாதா? இதுஎல்லாம் நம்மளே கிளப்பி விடறது ஜி
ஆமா ஜி : என்ன ஜி சொல்றீங்க
மாமா ஜி : தேர்தல் வரப்போகுது, என்ன சொல்லி ஓட்டு கேப்பீங்க சொல்லுங்க? பண மதிப்பிழப்புனு சொல்லி கேக்கமுடியுமா ஜி ?
ஆமா ஜி : பொணமா தான் வருவோம் ஜி
மாமா ஜி : ராமர் கோவில் கட்ட போறோம்னு சொல்லுவீங்களா ?
ஆமா ஜி : நமக்கு சமாதி கட்டிருவாங்க ஜி
மாமா ஜி : கருப்பு பணம் மீட்டு எடுக்க போறோம்னு சொல்லலாமா
ஆமா ஜி : கருமாதி பன்னிருவங்க ஜி பரவாயில்லையா?
மாமா ஜி : ஆளுக்கு 15 லட்சம்?
ஆமா ஜி : நெத்தியில் 1 ரூபாய் வச்சிருவாங்க ஜி
மாமா ஜி : மாடுகளை பாதுகாப்போம்னு சொல்லலாமா ஜி
ஆமா ஜி : மனுசனுக்கே பாதுகாப்பு இல்ல செருப்பை கொண்டு அடிப்பாங்க ஜி
மாமா ஜி : தெரியுதா? ஒரு பய ஓட்டு கேக்க முடியாது
ஆமா ஜி : அது சரி ஜி வழக்கமா நாம பாகிஸ்தான் மேல தான ஜி பழியை போடுவோம் இப்போ என்ன புதுசா மாவோயிஸ்ட் ?
மாமா ஜி : ஒரே கான்செப்ட் போர் அடிக்கும் ஜி, 2010ல லஸ்கர் ஏ தொய்பான்னு சொன்னோம், அப்பறம் இந்தியன் முஜாஹிதீன்னு சொன்னோம், ISI னு சொன்னோம் அப்பறம் ISISனு சொன்னோம். இப்படி ஏதாவது சொல்லிகிட்டே போக வேண்டியது தான்
ஆமா ஜி : பாத்து ஜி பேச்சு வாக்குல RSSனு சொல்லிடாதீங்க.
அது சரி ஆனா உங்க லாஜிக்கில் ஓட்டை இருக்கே ஜி. எவனாவது ஒரு பிரதமரை கொலை செய்யும் திட்டத்தை லெட்டர் எழுதுவானா ?
மாமா ஜி : கதையில் லாஜிக் எல்லாம் எதுக்கு ஜி ? நல்லா சுவாரசியமா சொல்லத் தெரியனும், நீங்க வேணும்னா பாருங்க மோடி ஜி கதறி அழுது ஒரு ட்ராமா பண்ணுவாரு. இந்த தேசத்துக்காகத்தானே என் உடல் பொருள் ஆவியெல்லாம். என் உயிரு போனா போகட்டும். எடுத்துக்கங்கன்னு சொல்லுவாரு. அப்பறம் எல்லா ஓட்டும் நமக்கு தான்
ஆமா ஜி : தமிழ்நாட்டில் நமக்கு ஓட்டு வருமா அத சொல்லுங்க ஜி ?
மாமா ஜி : நாமளும் எப்படியாவது ஓட்டு வாங்கணும்னு தான் பாக்கறோம் ஆனா நம்ம ஆளுங்க எது பேசினாலும் ஆன்டி நேஷனல் காதுக்கு தப்பாவே கேக்குது ஜி
ஆமா ஜி : என்ன ஜி ஆச்சு ?
மாமா ஜி : நிர்மலா சீத்தாராமன் பிரஸ் மீட் பாத்தீங்களா?
ஆமா ஜி : பாக்கல ஜி ஆனா மூஞ்சிக்கு பயிற்சி குடுக்குற மாதிரி ஒரு புது யோகா பண்ணிருக்காங்கன்னு கண்டு புடிச்சிட்டேன். நானே அது நிம்மி யோகான்னு பேரும் வச்சிக்கிட்டேன் இப்போ ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன்.
மாமா ஜி : நீங்க வேற ஜி. இதையெல்லாம் யோகான்னு நெனைச்சி செஞ்சீங்கன்னா, கல்லை எடுத்து அடிப்பாங்க.
ஆமா ஜி : அப்பறம் ஏன் ஜி இப்படி ஒரு லுக் ?
மாமா ஜி : எல்லாம் கடுப்பு தான் ஜி, சும்மா மோடி ஜி ஏன் தூத்துக்குடி பிரச்னை பத்தி எதுவும் பேச மாட்டேங்கறாருனு கேட்டுகிட்டே இருக்கானுங்க
ஆமா ஜி : என்ன ஜி சொன்னாங்க ?
மாமா ஜி : மோடி ஜி கிட்ட கேட்டு சொல்றேன்னு சொல்லிட்டாங்க, அதுக்கு போய் புலம்பறானுக. அவங்களுக்கு புடிச்ச மாதிரி கேள்வி கேட்டா ஏன் கோவப்படப் போறாங்க ?
ஆமா ஜி : புடிச்ச மாதிரி என்ன ஜி கேக்கணும் ?
மாமா ஜி : உளுந்து வடை செய்வது எப்படி ? ஊறுகாயை நீண்ட நாள் கெடாமல் வைத்திருப்பது எப்படி ? ஆஞ்சனேயருக்கு பல் இருக்கா இல்லையா ? அவர் வெறும் உளுந்து வடை சாப்புடுவாரா, இல்லை கெட்டிச் சட்னி வைத்து சாப்பிடுவாரா. இந்த மாதிரி கேள்வி கேட்டா, மலர்ந்த முகத்தோட பதில் சொல்லுவாங்க.
ஆமா ஜி : அதான் கோவப்பட்ருக்காங்க ஜி.
மாமா ஜி : பேட்டி பூரா அவங்க பேசினத்துல குறை கண்டு பிடிக்கறாங்க. இதுக்குத்தான் மோடி ஜி எப்போ பேட்டி குடுத்தாலும் கேள்விகளை செட்டப் பண்ணிட்டுத்தான் பேட்டியே கொடுப்பாரு.
ஆமா ஜி : நீட் விவகாரம் பத்தி எதுவும் சொன்னாங்களா?
மாமா ஜி : மாணவர்கள் இறந்ததற்கு நீட் மட்டும் தான் காரணம்னு சொல்ல முடியாதுனு சொன்னாங்க
ஆமா ஜி : காதல் தோல்வியா கூட இருக்கலாமே ஜி
மாமா ஜி : சரியா சொன்னீங்க ஜி, காந்தி கூட வெயில் சுட்டதால தான் செத்தார். இவனுக தான் நாம சுட்டதால் செத்தாருன்னு கிளப்பி விட்றானுங்க.
ஆமா ஜி : ஏன் ஜி நம்ம பக்கம் இருக்க நியாயத்தை எவனும் கேக்க மாட்டேங்கறான்
மாமா ஜி : நம்பளோட அறிவைப் பாத்தா மத்தவங்களுக்கெல்லாம் ரொம்ப பொறாமை ஜி.
ஆமா ஜி : மோடி ஜி என்ன புதுசா வீடியோ விட்ருக்காரு ?
மாமா ஜி : உடல் நலம், தேக ஆரோக்கியம் இதுலயெல்லாம் மோடி ஜிக்கு எப்பவுமே அதிக அக்கறை உண்டு.
ஆமா ஜி : நெறய்ய எக்சர்சைஸ் பண்ணுவாரோ ஜி ?
மாமா ஜி : என்ன ஜி இப்படி கேட்டுட்டீங்க ? காலையில எந்திரிச்சதும் யோகா. அப்புறம் மூச்சு பயிற்சி. அப்புறம் சிலம்பாட்டம். அப்புறம் கதகளி. அப்புறம் குரங்கு வித்தை.
ஆமா ஜி : அது என்ன ஜி குரங்கு வித்தை. புது ஐட்டமா இருக்கே.
மாமா ஜி : இந்த வீடியோவே குரங்கு வித்தைதானே ஜி. இப்படி குரங்கு வித்தை காட்டித்தானே நாலு வருசமா பொழப்பை ஓட்டிக்கிட்டு இருக்காரு.
ஆமா ஜி : சரி சொல்லுங்க ஜி. எக்சர்சைஸ் எப்போ முடிப்பாரு.
மாமா ஜி : அது முடியவே மதியம் 12 மணி ஆயிடும் ஜி.
ஆமா ஜி : அப்புறம் என்ன பண்ணுவாரு ?
மாமா ஜி : அப்புறம் பாரம்பரிய இந்திய உணவை சாப்புடுவாரு. சாப்புட்டுட்டு இந்திய தேஷத்தை இன்னும் எப்படி முன்னேத்துறதுன்னு சிந்தனையில இறங்கிடுவாரு.
ஆமா ஜி : எப்போ ஜி சிந்திச்சி முடிப்பாரு ?
மாமா ஜி : கோ பிபோ, புக் மை ட்ரிப் இந்த ஆப்லயெல்லாம் அலெர்ட் போட்டு வைச்சிருப்பாரு. ப்ளைட் டிக்கெட் ஆஃபர் போட்டாங்கன்னா அலர்ட் வரும். உடனே ப்ளைட் டிக்கெட் புக் பண்ண ஆரம்பிச்சிடுவாரு.
ஆமா ஜி : எங்க போறதுக்கு டிக்கெட் ?
மாமா ஜி : இது வரைக்கும் உலகத்துல இருக்குற எல்லா நாடுகளையும் மூணு முறை சுத்தி வந்துட்டாரு. இன்னும் ஆறு முறை சுத்தணும்.
ஆமா ஜி : அப்போ இந்த பாராளுமன்றம், அமைச்சரவை கூட்டமெல்லாம்.
மாமா ஜி : 365 நாளும் பைலட்டுங்க வேலை பாத்துக்கிட்டே இருக்க முடியுமா ? அவங்களுக்கும் ரெஸ்ட் குடுக்க வேணாமா. அதனால பைலட் எப்போ லீவ் போட்றாரோ, அப்போ இந்தியாவுலயே இருப்பாரு.
ஆமா ஜி : சென்னை உயர்நீதிமன்றம் என்ன ஜி இப்படி ஒரு தீர்ப்பு குடுத்துருச்சி ?
மாமா ஜி :கரெக்டா தானே குடுத்துருக்காங்க. எந்த நீதிமன்றத்துல என்ன தீர்ப்பு வரணும்ன்றதை மோடி ஜியும், அமித் ஷா ஜியும் முடிவு பண்ணுவாங்க. அதைத்தானே இந்திரா பேனர்ஜி செஞ்சிருக்காங்க ?
ஆமா ஜி : அப்போ அவங்க நம்ப ஆளா ஜி ?
மாமா ஜி : வெவரமே தெரியாம இருக்கீங்க ஜி. நீதித்துறையில நம்ப ஆளா இருந்தா பதவி உயர்வு, ஓய்வுக்குப் பின் பதவி. சொல்ற பேச்சை கேக்கலன்னா கதற வைக்க மாட்டோமா ?
ஆமா ஜி : அப்போ எடப்பாடி அரசை நாமதான் காப்பாத்தறோமா ஜி ?
மாமா ஜி : இந்த மாதிரி அடிமைங்க நமக்கு பிஜேபியில கூட கிடைக்காது ஜி. அவ்வளவு பேரும் விசுவாசமான அடிமைங்க. நாம தலைகீழா நின்னு டக்கரடிச்சாலும் தாமரை இங்க மலராது. அதனால நாம இலையையே தாமரையா மாத்தறோம். அவ்வளவுதான். சிம்பிள் டெக்னிக்.
ஆமா ஜி : சூப்பர் டெக்னிக் ஜி. அடுத்த வாரம் மீட் பண்ணலாம் ஜி. நிம்மி யோகா பண்ணி வாயெல்லாம் வலிக்குது.
அது முடியவே மதியம் 12 மணி ஆயிடும் ஜி.கோ பிபோ, புக் மை ட்ரிப் இந்த ஆப்லயெல்லாம் அலெர்ட் போட்டு வைச்சிருப்பாரு. ப்ளைட் டிக்கெட் ஆஃபர் போட்டாங்கன்னா அலர்ட் வரும். உடனே ப்ளைட் டிக்கெட் புக் பண்ண ஆரம்பிச்சிடுவாரு.”” ***** மாமாஜி இப்படி வெட்டி விண்ணாரம் பண்ணுவதற்க்கு பதிலாக .. ஒரு நாள் முழுவதும் நம் பிரதமருடன் இருந்து பார்க்கலாமே!! ஒரு நாள் பொழுதில் அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்று நேரிடையாகவே பார்த்து விடலாம் அல்லவா? உண்மையை அறிந்து கொள்ளும் அளவுக்கு உங்களுக்கு மன திடம் இருந்தால் போய் இருந்து பாருங்களேன் பிரதருடன்!! நாமெல்லாம் பின்னால் நின்று கொண்டு ஆமாஜி போட தானே லாயக்கு!! நெஞ்சில் உரமுமின்றி நேர்மை திறமும் இன்றி வஞ்சனை செய்வாராடி! கிளியே! அவர் வாய் சொல்லில் வீரரடி! என்று பாரதியார் நம்மை பார்த்துதானே பாடினார்?? ஆனால் நமக்குத்தான் அது உரைக்காதே?? ‘சாதீய’ அடிப்படையில் நாம்தான் அவரை ஒதுக்கி வைத்திருக்கிறோமே?? அதனால் நாம் இப்படி வெட்டியாக ஊர் அக்கப் போர் பேசியே வாழ்க்கையை முடித்துக் கொள்வோம்! அதற்கு மேலே எதாவது ஆக்கப் பூர்வமாக செய்யத்தான் நமக்கு வக்கு இல்லையே!!
காந்தி கூட வெயில் சுட்டதால தான் செத்தார் – Highlight of the article – Awesome Savukku !
super!