என்ன செய்து விடுவீர்கள் எடப்பாடி ?

You may also like...

8 Responses

  1. Thilahar says:

    பொதுத் துறை நிறுவனமான சேலம் இரும்பு உருக்காலையை மத்திய அரசு வேண்டுமென்றே தொடர்ந்து நஷ்டத்தில் வைத்துள்ளது. அதன் உற்பத்தி குறைந்துள்ளது. பாஜக ஆட்சிக்கு முன் வரை சைல நிறுவனம் தொடர்ந்து வருமானம் ஈட்டியுள்ளது. இந்த வீணைப் போனவர்களின் ஆட்சியில் வருமானம் குறித்துக் காட்டப்பட்டுள்ளது. என் உறவுக்காரர் ஒருவரிடம் நேரடியாகவே கேட்டு தெரிந்து கொன்டேன். தமிழகத்தை தார் பாலைவனமாக்க துடிக்கும் நாசகார சக்திகள். மீண்டும் ஒரு சாளுக்கியர்களின் மைய மாநில ஆட்சி.

  2. Muthan says:

    சென்னை சேலம் 8 வழிச்சாலை திட்டம் கொஞ்சமும் மக்களுக்கு தேவையே இல்லாத திட்டம் . இந்த பசுமை வழிச்சாலை திட்டம் பல்வேறு மலை , வனம் , நீர் வளங்களை அழிக்க கூடியது . இந்த திட்டத்திற்காக தேவையான ஜல்லிக்கற்களுக்காக பல்வேறு கல்குவாரிகள் முறைகேடாக அமைக்கப்படும் . ஆற்று மணல் சுரண்டப்படும் . மலைகளை குடைந்து கிரானைட் குவாரிகள் அமைத்து சூறையாடப்படும் . கட்டுமானத்தில் பலகட்ட கமிஷன் கைமாறும் . ஏற்கனவே , சென்னை – சேலம் மூன்று சாலைகள் உள்ளன . (1) சென்னை பெங்களூரு 6 வழிச்சாலை வழியாக பயணித்து திருப்பத்தூர் வழியாக வாரணாசி – கன்னியாகுமரி தங்க நாற்கர சாலை வழியாக சேலத்தை அடையலாம் . (2) சென்னை திருச்சி 4 வழிச்சாலை வழியாக பயணித்து விழுப்புரம் , உளுந்தூர்பேட்டை , கள்ளக்குறிச்சி , ஆத்தூர் வழியாக சேலம் அடையலாம் . இது முழுக்க 4 வழிச்சாலை . (3) சென்னை – திண்டிவனம் – திருவண்ணாமலை – கள்ளக்குறிச்சி – சேலம் . இப்படி 3 பாதைகள் உள்ளன . இந்த 3 பாதைகளையும் புறக்கணித்து புதிதாக 8 வழி ச்சாலை யாருடைய பயன்பாட்டிற்காக ? உள்நோக்கத்துடன் கொண்டு வரப்படும் இந்த 8 வழிச்சாலை நமக்கு நாமே குழி பறிப்பதற்கு சமம் .
    8 வழிச்சாலை எதிர்க்கப்படுவதால், வளர்ச்சி தடை படுகிறது, பொருளாதாரம் சரிந்து விடும் என்பவர்கள், மலையை குடைவதால் என்ன கோளாறு என்பவர்கள், ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், “மலை” இல்லையேல் “மழை” இல்லை. கேரளாவிலிருந்து வீசும் தென் மேற்கு பருவக்காற்று மேற்கு தொடர்ச்சி மலையால் தடுக்கப்படுவதால் தான் தமிழகத்திற்க்கு மழையே கிடைக்கிறது. அந்த மலையில் தான் ஏற்காடும் உள்ளது. ராஜஸ்தானில் உள்ள ஆரவல்லி மலை பெரியதாக இருந்தாலும், அது தென் மேற்கு காற்று வீசும் திசையிலே உள்ளதால்தான், மேகங்கள் தடுக்க பட முடியாமல், இந்தியாவின் தார் பாலைவனம் மலையின் அடிவாரத்திலே உள்ளது. ” நீரின்றி அமையாது உலகு எனின் யார் யார்க்கும் வானின்றி அமையாது ஒழுக்கு” என்பது போல், இந்த உலகில் நீரில்லையேல் நாம் யாருமில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள், இயற்கை அழிந்த பின், மக்கள் அனைவரும் பாதிக்கப்படும் போது, நாமும் நமது அன்புக்குரியவர்களும் எங்கு சென்று வாழ்வோம். ஜப்பான் வாழும், தமிழ்நாடு அழிவது உங்களுகெல்லாம் ஏற்புடையதா? ஒரு விஷயம் எல்லாரும் நினைவில் கொள்ளுங்கள், இந்த பூமி 400 கோடி வருடமாக உள்ளது, சுனாமி, விண்கல் தாக்குதல், எரிமலை, வெள்ளம், வறட்சி என்று எத்தனையோ பிரளயங்களை பார்த்து உள்ளது…ஆனால் இன்றும் உயிர்ப்புடன் உள்ளது. இயற்கையை யாரும் அழிக்க முடியாது. மனிதர்கள் நாம்தான் அழிவோம். நமது பாசத்திற்கு உரியவர்கள், நண்பர்கள் அழிவதை கண்ணால் காண்போம். இயற்கை திருப்பி தாக்கும்போது தாக்குப்பிடிக்கும் சக்தி இங்கு யாருக்கும் இல்லை. எதற்கு கொள்ளையடிக்கிறோம், பணத்தை வைத்து என்ன பண்ண போகிறோம் என்ற சிந்தனையே இல்லாமல், பேராசையை மட்டுமே அடித்தளமாக கொண்டு, வேட்டை நடத்தும் மத்திய அரசையும், மாநில அரசையும், சட்டத்தின் வழியிலே அறவழியில் எதிர்த்தால் கைது என்று மிரட்டும் போக்கு ஜனநாயகத்தின் மீது ஏவப்படும் வன்முறை. பியூஷ் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல், அவரை அழிக்க நினைக்கும் போக்கு கேவலமானது. அவரின் குரல் மக்களின் குரலாக மாறவேண்டும். இன்னும் சத்தமாக கேட்கவேண்டும்.

  3. Senthil says:

    Sir
    Please see this article in support of the highway. Is it legitimate?

  4. Positive Karthik says:

    எழுதுவது பேசுவது நமது உரிமை. இந்திய அரசமைப்பு கோட்பாடு 19 (1) நமக்கு இந்த உரிமையை வழங்கியுள்ளது.

  5. nanda says:

    Salem 8 Lane project is your waterloo

  6. Anonymous says:

    Salem 8 Lane project is your waterloo.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress