வீட்டிற்கு வந்த ஆமா ஜிக்கு மாமா ஜி காபி போட்டுக்கொண்டிருந்தார் . அப்பொழுது அங்கே ராஜா ஜி வந்தார்
ஆமா ஜி : ஜி இங்க பாருங்க யாரு வந்திருக்காங்கனு
மாமா ஜி: ராஜா ஜி வாங்க வாங்க, என்ன சமையல் கட்டுக்குள்ளயே வந்துடீங்க? ஹாலில் வெயிட் பண்ணுங்க பில்டர் காபி போட்டு எடுத்துட்டு வரேன்
ராஜா ஜி: என்ன ஜி மாமி இல்லையா? நீங்களே காபி போடறீங்க
மாமா ஜி: எல்லாம் வெளியூர் போயிருங்காங்க ஜி
ராஜா ஜி: ஜி வெயிட் பண்ணுங்க என்றவாறு பாட்டிலில் இருந்த திரவத்தை பாலில் ஊற்றினார்
ஆமா ஜி: ஜி என்ன பாலில் தண்ணி கலந்துட்டீங்க, திக்கா குடிக்கலாம்னு இருந்தேன்
ராஜா ஜி : ஜி தண்ணி இல்ல கோமியம்
மாமா ஜி: என்னது கோமியமா?
ராஜா ஜி : என்னையா கோமியமானு மூஞ்சி கோணலா போகுது, பழசு எல்லாம் மறந்திடுச்சோ.
ஆமா ஜி: தப்பா நெனச்சுக்காதீங்க ஜி, மாமா எப்பவும் ராவா குடிச்சு பழகினவர், பாலில் கலந்து பழக்கம் இல்ல. இப்போ பாலில் ஊத்தற அளவுக்கு என்ன ஜி ஆச்சு
ராஜா ஜி: என்ன ஆச்சா? இந்த ஆவின் காரன் இன்னைக்கு ரம்ஜான் வாழ்த்து போட்டு பச்சை கலர்ல பாக்கெட் போட்ருக்கான், இதுக்கு மேல என்ன நடக்கனும்றேன்?
மாமா ஜி : ஜி ஆவின்ல ப்ளூ ,பச்சை, ஆரஞ்சு பாக்கெட் இருக்கு ஜி
ராஜா ஜி : ஆரஞ்சுனு சொல்லாதீங்க காவீனு சொல்லுங்க ஜி, இனி எல்லா பாலிலும் கோமியத்தை கலக்கணும்னு கோட்டை நோக்கி ஊர்வலம் போக போறேன்
ஆமா ஜி : ஜி நம்ம ஊர்வலத்தை ராயப்பேட்டை வழியா வச்சிப்போம் ஜி
ராஜா ஜி : அங்க நம்மாளுங்க இருக்காங்களா ஜி
ஆமா ஜி : அங்க நிறைய பாய்ங்க பிரியாணி கடை வச்சிருக்காங்க ஜி
ராஜா ஜி : நானே சோத்துக்கு வழி இல்லாம கோவில் கோவிலா ஏறிகிட்டு இருக்கேன் இதுல பிரியாணி வேணுமாம். ஒரு விஷயம் தெரியுமா? நான் ஊத்தினது சாதாரண கோமியம் இல்ல
ஆமா ஜி : மாட்டு கோமியம் இல்லனு மட்டும் சொல்லிடாதீங்க ஜி, இப்போ தான் குடிச்சு முடிச்சேன்
ராஜா ஜி : கங்கை தண்ணியை குடிச்சே வளர்ந்த மாடு ஜி
மாமா ஜி: ஜி நீங்க அதுக்கு வேற எதையாவது குடிக்க சொல்லிருக்கலாம் சரி அதை விடுங்க, இந்த பசுமை ரோட்டுக்கு எதிர்ப்பு ஓவரா இருக்கே ஜி
ராஜா ஜி : நானும் பார்த்தேன் ஜி, நக்ஸல் அமைப்பு இதை கையில் எடுத்துருக்கு. பயண நேரம் கம்மி ஆகறதால எவ்வளவு பெட்ரோல் மிச்சம், அரபு நாடு கிட்ட கையேந்த தேவை இல்ல. தமிழ்நாடு எவ்வளவு வளர்ச்சி அடையும்
மாமா ஜி : ஜி கமிஷன் காசுக்கு ஆசை பட்டு தான் இந்த ரோடே போடறோம்னு பேசிக்கறாங்களே ஜி
ராஜா ஜி : ஆதாரம் இல்லாம எதுவும் பேசக்கூடாது ஜி
ஆமா ஜி: ஜி இதே மாதிரி அந்த சேது சமுத்திர திட்டத்தையும் கொண்டு வந்துட்டா கப்பல் எல்லாம் சுத்திகிட்டு போக தேவை இல்லயே ஜி, தமிழ்நாடு வளர்ச்சி அடையுமே ஜி
ராஜா ஜி : தேவை இல்லைங்கறேன். ராமர் கட்டின பாலத்தை இடிச்சு தான் தமிழ்நாடு வளரணும்னா அப்படி ஒரு வளர்ச்சி தேவையே இல்ல
ஆமா ஜி : ராமர் தான் பாலம் கட்டினார்னு ஆதாரம் கேட்டா எங்க ஜி போறது
ராஜா ஜி :ராமர் பூமி பூஜை போடுற மாதிரி வீடியோ வேணும்னாலும் ரெடி பண்ணிரலாம் ஜி
மாமா ஜி : டென்ஷன் ஆவாதீங்க ஜி, இந்த பாபா ராம்தேவ் என்ன திடீர்னு ராகுல் காந்தியும் அவரும் நண்பர்கள்னு சொல்லறாரு
ராஜா ஜி : உத்தரப்பிரதேசத்தில் 6000 கோடி செலவில் உணவு பூங்கா அமைக்க பாபா ஜி பிளான் போட்டிருந்தார்
ஆமா ஜி : 10% கமிசன் குடுத்துட்டு பேஷா ஆரம்பிக்க வேண்டியது தானே ஜி
ராஜா ஜி : யோகி ஜிக்கும் இவருக்கும் கொஞ்சம் முட்டிகிச்சு, அதுனால யோகி ஜி தேவையான இடத்தை கையகப்படுத்தி கொடுக்கல. அது தான் சாமி மிரட்டி பாக்கறாரு.
மாமா ஜி : யோகி ஜி இடமே அடுத்த தேர்தல் வரைக்கும் இருக்குமான்னு தெரியல அவருக்கு எதுக்கு ஜி பெரிய இடத்து பொல்லாப்பு
ஆமா ஜி : பெட்ரோல் டீசல் மேல உள்ள கலால் வரியை எல்லாம் குறைக்க முடியாதுனு அருண் ஜெட்லீ சொல்லிட்டாரே ஜி
ராஜா ஜி : ஆமா வரி எல்லாம் குறைக்க முடியாது, நாங்க அடுத்ததா மாட்டு வரி விதிக்கலாம்னு பாத்துகிட்டு இருக்கோம் வரியை குறைக்கணுமாம்
மாமா ஜி : இது என்ன ஜி மாட்டு வரி ?
ராஜா ஜி : சரக்கு மேல 10% வரி போட போறோம், அந்த வரியை வச்சு பசுவை காப்பாத்த போறோம்
ஆமா ஜி : இப்படி தான் ஸ்வாட்ச் பாரத் வரி வாங்கி கக்கூஸ் கட்ட போறோம்னு சொன்னோம் அப்பறம் இப்படி கட்டி வச்சிருக்கோம்
ராஜா ஜி : சொன்ன வாக்கை காப்பாத்தினோமா இல்லையா ? ஏன் இதுல போக மாட்டிங்களா ?
மாமா ஜி : வாழை இலையில் போயே பழகிட்டோம் ஜி. அதான் டக்குன்னு கக்கூஸ்ல போகச் சொன்னா ஒரு மாதிரி இருக்கு.
அப்புறம் ஆட்சிக்கு வந்தா தனி நபர் வருமான வரியையே இல்லாமல் செய்யறதை பத்தி சிந்திச்சுட்டு இருக்கோம்னு சொன்னாரே ஜி
ராஜா ஜி : இப்போ மட்டும் சிந்திக்கிறதை நிறுத்திட்டோமா என்ன ? சிந்திச்சிக்கிட்டுதான் இருக்கோம். இதை சொல்லி இன்னும் ஒரு 5 வருஷம் கேப்போம்.
ஆமா ஜி : ஆனா இந்த சுப்ரமணிய சாமி வேற எதுவோ சொல்லி தான் 5 வருஷம் கேக்கறாரு பாத்தீங்களா ஜி ?
ராஜா ஜி : ஏதாவது உருப்படியா செஞ்சிருந்தா சாதனையை சொல்லி ஓட்டு கேட்கலாம் இல்லனா இப்படி ஏதாவது அடிச்சு விட வேண்டியது தான் 1995ல, சுப்ரமணிய சுவாமியை அரெஸ்ட் பண்ணணும்னு ஜெயலலிதா தீவிரமா இருந்தப்போ ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினாரு சுப்ரமணிய சுவாமி. அதுல பத்திரிக்கையாளர்கள்கிட்ட ஜெயலலிதாவோட கேபினெட்ல இருக்குற 28 அமைச்சர்கள்ல 22 பேருக்கு எய்ட்ஸ் இருக்குன்னு அடிச்சி விட்டாரு. அவரு சொல்றதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு.
ஆமா ஜி: இந்த பிரீ செக்ஸ் அப்படின்ற வார்த்தையை ராதா ராஜன் ஜல்லிக்கட்டு போராட்டம் அப்போ சொன்னாங்க, இப்போ சுப்ரமணியன் சாமி சொல்லறாரு. நமக்கு என்ன பிரச்சினை ?
இப்படி அநியாயம் பண்றாங்களேனா இல்ல அவங்களுக்கு மட்டும் பிரீயா கிடைக்குதேன்ற காண்டா?
ராஜா ஜி : தம்பி நீங்க கட்சிக்கு புதுசு, நாம எல்லாம் சுயசேவகர்கள், இதுக்கு எல்லாம் ஆசை பட மாட்டோம்.
மாமா ஜி : சும்மா இருங்க ஜி கண்டதையும் பேசிகிட்டு. ஜி அஸ்ஸாமில் ATM உள்ள எலி புகுந்து 12 லட்சம் பணத்தை கடிச்சு காலி பண்ணிடுச்சாம் ஜி
ராஜா ஜி : எல்லாம் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை ஜி இது கூடவா தெரியல
ஆமா ஜி : என்ன ஜி சொல்றீங்க?
ராஜா ஜி : வருமான வரி துறைக்குனு ஸ்பெஷலா எலியை ட்ரைனிங் குடுத்து தயார் செஞ்சு வச்சிருக்கோம், கருப்பு பணம் இருக்கும் இடத்தை கண்டுபிடிச்சு கடிச்சு வச்சிடும்.
மாமா ஜி : எலிக்கு எல்லாம் ட்ரைனிங் குடுக்க முடியுமா ஜி, நம்பும் படியா ஏதாவது சொல்லுங்க
ராஜா ஜி : 2000 ரூபாய் நோட்டுல சிப் இருக்குனு ஆடிட்டர் சொன்னப்போ கேள்வியே கேட்காம ஒத்துக்கிட்டு இப்போ என்ன கேள்வி கேக்கறயா. ? நாய்க்கு ட்ரைனிங் குடுத்து வெடிகுண்டு கண்டு பிடிக்க முடியும் எலிக்கு கருப்பு பணம் தெரியாதா? அதுவும் நம்ம விநாயகர் வாகனம், பாத்துக்கங்க தெய்வ குத்தம் ஆய்டும்
மாமா ஜி: ஜி நம்பறேன் ஜி சத்தியமா நம்பறேன், நீங்க டென்ஷன் ஆகாதீங்க
ஆமா ஜி : அப்படியே இருந்தாலும் ATM உள்ள கருப்பு பணம் எப்படி ஜி இருக்கும் ?
ராஜா ஜி : கருப்பு பணம்னா என்ன ?
ஆமா ஜி : முறையில்லாமல் சம்பாதிச்ச பணம்
ராஜா ஜி : எந்த ATMல எலி புகுந்தது?
ஆமா ஜி : SBI ATM
ராஜா ஜி : மல்லையா எந்த பேங்க்ல லோன் வாங்கினார் ?
ஆமா ஜி : SBI
ராஜா ஜி: இப்போ விவசாய கடன், கல்வி கடன் வாங்கி திருப்பி தராம இருந்தா SBIல என்ன செய்வாங்க?
ஆமா ஜி : போட்டோ போட்டு அசிங்கப்படுத்தி வசூல் செய்வாங்க
ராஜா ஜி : மல்லையா போட்டோ ஏதாவது கிளையில் ஒட்டி இருக்காங்களா?
ஆமா ஜி : இல்லையே ஜி
ராஜா ஜி : அப்போ இந்த பணம் கருப்பு பணம் தானே
ஆமா ஜி : பிண்றீங்களே ஜி, டிரீட்மென்ட் நல்லா குடுத்திருக்காங்க ஜி. எந்த ஹாஸ்பிடல் ?
ராஜா ஜி : யோவ் நக்சலைட்டா நீ
மாமா ஜி : விடுங்க ஜி அவரு இப்படி தான் அடிக்கடி உங்களை மாதிரி பேசிருவார். காஷ்மீர் பிரச்னைக்கு வருவோம்
ராஜா ஜி : காஷ்மீர்னாவே பிரச்னை தான், நீங்க எந்த பிரச்சினையை சொல்றீங்க ?
ஆமா ஜி : அதான் ஒன்னும் வேலைக்கு ஆகலைனு எஸ் ஆனோமே அதை சொல்றாரு .
ராஜா ஜி : இந்த கத்துவா கற்பழிப்புக்கு அப்பறம் ஒரே பிரச்னை தான் ஜி, மெஹபூபா சும்மா நம்ம ஆளுங்கள தூக்கி உள்ள வச்சிட்டு இருக்காங்க. சரி அதுபோகட்டும் நாம மாட்டாத ரேப்பானு விட்டுடலாம், ரம்ஜானுக்கு போர் நிறுத்தம் அறிவிச்சிட்டு நிம்மதியா பிரியாணி சாப்பிடலாம்னு பார்த்தா அப்போ தான் பாகிஸ்தான் காரன் பார்டர் தாண்டறான்.
மாமா ஜி : பணமதிப்பிழப்புக்கு அப்பறம் தான் சுத்தமா தீவிரவாதம் குறைஞ்சிருச்சே ஜி
ராஜா ஜி : நீங்களுமா அத நம்பறீங்க? பேசாதீங்க ஜி கொலைவெறியாவுது.
ஆமா ஜி : யோகா செய்யுங்க ஜி டென்ஷன் குறையும், இந்த வருஷம் சர்வதேச யோகா தினத்துல ஏதாவது வித்தியாசமா செய்யறோமா ஜி
ராஜா ஜி : ரொம்ப வித்தியாசமா செஞ்சிருக்கோம் ஜி, பாத்தீங்கனா போன முறை மோடி தேசிய கொடியை கழுத்துல சுத்திகிட்டு வந்து அதுலயே முகத்தை தொடச்சு, மூக்கை சிந்தி கந்தரகோலம் பண்ணிட்டார்.
அதுனால இந்த தடவ துண்டை மாத்திட்டோம்
ஆமா ஜி : ஓகே ஜி அப்பறம்
ராஜா ஜி : அப்பறம் என்ன அவ்ளோதான்
மாமா ஜி : என்ன ஜி ரொம்ப வித்தியாசமா செஞ்சிருக்கோம்னு சொன்னீங்க நான் கூட மோடி ஜி எதோ வித்யாசமா யோகா செஞ்சிருப்பார்ன்னு பார்த்தா துண்டை மாத்திருக்கோம்னு சொல்றீங்க
ராஜா ஜி : போன வாரம் தான் உடற்பயிற்சி வீடியோ விட்டார் அதவச்சே இன்னைக்கு வரைக்கும் செய்யறாங்க, இதுல நாமளே போய் கன்டென்ட் கொடுக்கலாமா சொல்லுங்க
மாமா ஜி : அதுவும் சரி தான், AIMS மருத்துவமனை திறக்க மோடி வருவாரா ஜி ? இல்ல திமுக திரும்பவும் பிரச்னை பண்ணுவாங்களா ?
ராஜா ஜி : ஒரு பய டச் பண்ண முடியாது ஜி, இந்த முறை மோடி கூடவே ஒரு துணை வட்டாட்சியர் போவாரு. எதுனா பிரச்சினைன்னா ஷூட்டிங் ஆர்டர் போட்டிருவார். இந்தாங்க என்னோட அக்கௌன்ட் லாகின் செஞ்சு தரேன் நான் சொல்லுற ட்வீட் போடுங்க
ஆமா ஜி : குடுங்க ஜி நான் போடுறேன்
ராஜா ஜி :அனால் மோடி அவர்கள் இவர்கள் கருப்பு பலூன் விட்டதால் பிரதமர் ரோட்டில் செல்ல பயந்து ஆகாயமார்க்கமாய் சென்றார் என்று மார்தட்டுவது சிறுபிள்ளை தனம், பிரதமர் பாஜகவின் பொது கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். முடிந்தால் திமுக தடுத்துப் பார்க்கட்டும்.
அவ்வழியே வந்த நாய் ராஜா ஜியை பார்த்ததும் உச்சா பெய்ய காலை தூக்கியது , சுதாரித்து கொண்ட நகர்ந்த ராஜா ஜி “ஒப்பன் மவனே சிங்கம்டா, உன் வேலை இங்கு வேண்டாம் ” என்றார்
ஆமா ஜி : இந்தாங்க ஜி போஸ்ட் பண்ணிட்டேன், இனி பாருங்க செம கெத்து காட்டலாம்
ராஜா ஜி : யோவ் என்னையா நான் நாய் கிட்ட பேசினது எல்லாத்தையும் ட்வீட்டா போட்டிருக்கே ?
ஆமா ஜி : என்னது நாய் கிட்ட பேசினீங்களா, கவனிக்கல ஜி கெத்தா இருந்ததுன்னு போட்டுட்டேன். நீங்க தான் fake ஐடியோட எல்லாம் பேசறீங்களே அதுனால யாரும் கண்டுக்க மாட்டாங்க ஜி
மாமா ஜி : அதை விடுங்க ஜி அவர் சொல்றதும் உண்மை தான். இப்போ எல்லாம் நீங்க முன்ன மாதிரி இல்ல, இந்த மாதிரி ஏதாவது செஞ்சா தான் நீங்க இருக்கிறதே தெரியும் , நம்ம அக்காவை பாருங்க எப்படி பொளந்து கட்றாங்க
ராஜா ஜி : இப்போ அக்கா பொளந்து கட்டுவாங்க நாளைக்கு அக்காவையே பொளந்துருவானுக. ஏன்யா மருத்துவரே விளம்பரத்துக்காக போற வரவனை எல்லாம் வம்பிழுக்கறார் இவங்க வான்டெட்டா போயா வாயை குடுக்கணும்
மாமா ஜி : நேத்து கூட அக்காவை அடிக்க வந்துட்டாங்களாம் ஜி
ராஜா ஜி : சும்மா இருங்க ஜி அவன் நம்ம கட்சிக்காரன் தான், அக்கா பேசும் போது நைட் நேரம், அதுவும் வயக்காட்டுல மீட்டிங், ஒரே பூச்சி . தூரத்துல இருந்து பார்த்த அவன் அக்கா மண்டையில் தேன் கூடுதான் கட்டிடுச்சுனு நெனைச்சு கலைக்க வந்திருக்கான் . அவனை பிடிச்சு போலீசில் குடுத்திருக்காங்க.
மாமா ஜி : சரி ஜி இந்த சுஷ்மா ஸ்வராஜ் முஸ்லீம் பொண்ணுக்கு பாஸ்போர்ட் வாங்கி குடுத்துட்டாங்கனு ஒரே பிரெச்சனையா இருக்கே ஜி
ராஜா ஜி :மனசுல பாஸ்போர்ட் மதனானு நினைப்பு, எதோ வரம் குடுக்கற மாதிரி கேட்டவனுக்கு எல்லாம் பாஸ்போர்ட் குடுக்க வேண்டியது. அதுவும் ஒரு ஹிந்து பாஸ்போர்ட் ஆபீஸர இடமாற்றம் வேற செஞ்சிருக்காங்க
ஆமா ஜி : அதுக்காக இந்த அடியா ஜி அடிக்கிறது பாவம் ஆயிரம்தான் இருந்தாலும் அவங்க நம்ப கட்சியில்லையா ?
ராஜா ஜி : பாவமா? அத்வானி ஜின்னாவை புகழந்து ஒரு வரி தான் ஜி பேசினார் இன்னைக்கு அவரு நிலைமை என்ன பாத்துக்கோங்க. சுஷ்மாவுக்கு எதிரா எழுதுறவன் பாதி பேரை விஜய் கோயல், நிர்மலா சீதாராமன் ஏன் மோடியே கூட follow பண்றங்க.
மாமா ஜி : நமக்கு எதுக்கு ஜி இந்த பெரிய இடத்து பொல்லாப்பு , ஒரு வாரத்துக்கு இந்த பாமக காரனுக கண்ணுல படமா இருக்கனும் அது தான் நமக்கு முக்கியம். போய்ட்டு வரேன் ஜி.
மாமா ஜி : ஏன் என்ன ஜி ஆச்சி ?
ராஜா ஜி : அதை ஏன் கேக்கறீங்க. பாமக காரங்க ஆர்ப்பாட்டம் பண்ணதும், நம்ப ஆளுங்க பூந்து பிரச்சினை பண்ணலாம்னு ஆரம்பிச்சாங்க. ஏதோ அரவிந்தனாம். சின்ன வயசு அதிகாரி. உள்ள பூந்து ரெண்டு அப்பு அப்புனாரு. அத்தோட நம்ப ஆளுங்க கௌம்பிட்டாங்க. நாம அடி வாங்காத மூத்திர சந்தே இல்லன்னா பாருங்களேன்.
மாமா ஜி : சரி. ராமேஸ்வரத்துல துப்பாக்கி குண்டுகள் கிடைச்சதும், அது கிறித்துவ தீவிரவாதின்னு எப்படி ஜி கரெக்டா சொல்றீங்க ?
ராஜா ஜி : அதை என் ஃபேஸ்புக் பக்கத்துலயே தெளிவா சொல்லியிருக்கேனே. அதை பார்த்தால் பத்து ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்க வாய்ப்பே இல்லைன்னு. கண்டிப்பா நக்சலைட் ஆயுதம்தான் அது.
ஆமா ஜி : நானும் வந்ததுல இருந்து பாக்கறேன். கூசாம பொய் பேசிக்கிட்டே இருக்க. ஏன்டா ராஜா…… தோட்டாக்கள் எல்லாமே துரு பிடிச்சி இத்துப் போயி இருக்கு. .இதை பாத்தாலே எல்டிடிஇ 30 வருசம் முன்னாடி புதைச்சி வைச்ச தோட்டாக்கள்னு நல்லாவே தெரியுது. ஆனா உன் கண்ணுக்கு மட்டும் எப்படி அது 10 வருசத்துக்குள்ள புதைச்சதுன்னு தெரியுது ?
உன்னையெல்லாம் தேசிய செயலாளர்னு வைச்சிருக்கானுங்களே. தாமரை எப்படிடா மலரும் ? மயிரத்தான் மலரும். இனிமே வாயைத் தொறந்த…. என்றவாரே எச்.ராஜாஜியை அடிக்க ஓடுகிறார். அவரிடமிருந்து தப்பி மாமா ஜியும், ராஜாஜியும் தலை தெறிக்க ஓடுகின்றனர்.