இன்னும் 60 நிமிடங்களில் முடிவுளின் தன்மை தெரிந்து விடும். இருந்தாலும் இதை எழுதியே ஆக வேண்டும் என்று உள்ளுணர்வு சொல்லுகிறது.
முள்ளும் மலரும் படத்தில், ரஜினிகாந்த் தன்னம்பிக்கையோடு, வேலை போன பிறகும், ஒரு கை போன பிறகும் தன்னம்கிக்கையோடு “கெட்ட பய சார் காளி என்று சொல்லுவார்” இந்த காட்சியைப் பற்றி விரிவாக, “வெளியே போ” என்ற கட்டுரையில் சவுக்கி எழுதியிருக்கிறது. இதையே தான் கருணாநிதியும் சொல்லப் போகிறார்.
“கெட்ட பய சார் கருணாநிதி. வீல் சேர்ல போனா கூட பொழச்சுக்குவான் சார்.” என்று சொல்லுவார். கருணாநிதிக்கு அத்தனை தன்னம்பிக்கை. கருணாநிதியிடம் மிகவும் பாராட்டத்தக்க குணம் ஒன்றே ஒன்று உண்டு என்றால் அது அவரின் தன்னம்பிக்கை தான்.
எத்தனை இன்னல்கள், வந்தாலும், எத்தனை துயர் வந்தாலும், அதை சமாளிக்கக் கூடியவர் கருணாநிதி. வெறும் 30 சீட்டுகளை திமுக பெற்றால் கூட, கருணாநிதி அதை சமாளிப்பார். “வர்ணாசிரம சக்திகளின் காரணமாகவும், பார்ப்பன ஊடகங்களின் ஆதரவோடு, திராவிட இனத்திற்கு தற்காலிகமாக ஏற்பட்டுள்ள பின்னடைவால், திராவிட முன்னேற்றக் கழகம் துவண்டு போகாது. அறிஞர் அண்ணாவும், பெரியாரும் கட்டி வளர்த்த கழகத்தை, யாராலும் அழித்து விட முடியாது.” என்று சொல்லுவார். அதுதான் கருணாநிதி.
இருந்தாலும் பொறுமையாக காத்திருப்போம். நல்லது நடக்குமென்று நம்புவோம்.