அன்பார்ந்த தோழர்களே,
புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தோழர் புகழேந்தி தங்கராஜ் எடுக்கும் முன் முயற்சியில், ஒரு கையெழுத்து இயக்கம் நடத்த உத்தேசிக்கப் பட்டுள்ளது. இது குறித்து, காவல்துறையிடம் அனுமதி கேட்டு அளித்த கடிதத்திற்கு பதில், திங்கட்கிழமை வரும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பாக சென்னை மெமோரியல் ஹால் அருகே, இதே காரணத்தை வலியுறுத்தி செவ்வாயன்று, ஆர்ப்பாட்டம் நடத்த உத்தேசிக்கப் பட்டு, அதற்கும் அனுமதி கேட்டு அதன் செயலர் புகழேந்தி கடிதம் அளித்துள்ளார்.
உங்களுக்கு அனுமதி ஏன் மறுக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு, வெள்ளியன்று, தமிழக மக்கள் உரிமைக் கழகத்திடம் கொடுக்கப் பட்ட அறிவிக்கைக்கு, சனியன்று மதியம், பதில் வழங்கப் பட்டது. திங்கட் கிழமை தகவல் தெரிவிக்கப் படும் என்று கூறப் பட்டுள்ளது.
இதற்கிடையே, கையெழுத்து இயக்கத்திற்கு அனுமதி மறுக்கப் படும் என்பதை அறிந்த தோழர் தங்கராஜ், செவ்வாயன்று, மாலை, பத்திரிக்கையாளர் மன்றத்தில், கையெழுத்து இயக்கத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். விபரங்கள், தோழர்.புகழேந்தி தங்கராஜின் அறிக்கையில். அன்பார்ந்த உறவுகளே, உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் இத்தகவலை சொல்லுங்கள்.
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.
(புலிகள் இயக்கத்திற்காக குரல் கொடுக்கும் இரண்டு பேரின் பெயரும் எப்படி புகழேந்தி என்று அமைந்தது ?)
16.10.2010
ஈழத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்குவிடுதலைப்புலிகள் எந்தவிதத்திலும் முட்டுக்கட்டையாய்இருந்துவிடக்கூடாது என்கிற எண்ணத்தில்தான், அங்குள்ள அரசும்இங்குள்ள அரசுகளும் திட்டமிட்டு அந்த விடுதலைப் போராட்டவீரர்களை எல்லாவகையிலும் முடக்கிவைத்தன. அந்த தமிழினவிரோத – தமிழினத் துரோக நடவடிக்கையின் ஒரு பகுதிதான்,விடுதலைப் புலிகள் மீதான தடை.தடை செய்யப்படும் அமைப்புகளுக்கு ஆதரவாகக் குரல்கொடுப்பதும், தடையை நீக்கக் கோருவதும் ஜனநாயக உரிமைகள்.
அந்த அடிப்படையில், விடுதலைப் புலிகள் மீதானதடை நீக்கப்படவேண்டும் என்று நாம் வலியுறுத்தி வருகிறோம்.நமது இந்த அடிப்படை உரிமையைக்கூட தடுக்க முயல்கிறார்கள் ஆட்சியாளர்கள்.அதனை அனுமதிக்க முடியாது என்றுசம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரி (துணைஆணையர்,நுண்ணறிவுப் பிரிவு) வாய்மொழியாகத்தெரிவித்துவிட்டார்.
அதுதொடர்பான கடிதம் 18.10.10 திங்கள்கிழமை காலையில் தரப்படும் என்று அவரது அலுவலகத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கையெழுத்து இயக்கம் என்பது, அமைதியான முறையில்நமது எதிர்ப்பைப் பதிவு செய்யும் அகிம்சைப் போராட்டம்.இதற்குக்கூட அனுமதி மறுப்பதென்பது, கடுமையான ஜனநாயகமறுப்பு நடவடிக்கை. இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முறையிட இருக்கிறோம்.நீதிமன்றத்தின் மூலம் நமக்கு நியாயம் கிடைக்கும் என்றுநம்புகிறோம்.இதற்கிடையே, இந்த கையெழுத்து இயக்கத்தை, ஏதாவதொருஅமைப்புக்கு சொந்தமான இடத்தில் நடத்தும் வாய்ப்பு குறித்தும்கலந்து பேசி வருகிறோம்.சைதை பனகல் மாளிகை அருகிலோ, அல்லது வேறுஇடத்திலோஎன்பதை உங்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டே இந்த அவசரக் கடிதத்தை உங்களுக்குஅனுப்புகிறேன்.
50 அடி நீள பேனர் ஒன்றில் அனைவரும்கையெழுத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உங்களுடையகையெழுத்து மட்டுமின்றி, உங்கள் நண்பர்கள் ஒவ்வொருவரின்கையெழுத்தும் அதில் இடம்பெறவேண்டும். ஒட்டுமொத்தத்தமிழகத்தின் உணர்வையும் வெளிப்படுத்துவதாக அந்தக்கையெழுத்துக்கள் அமையவேண்டும். எனவே, உங்கள்ஒவ்வொருவருடைய வருகையும் இன்றியமையாததாகிறது.இந்த முயற்சியில் நம் ஒவ்வொருவரின் பங்களிப்பும்இருந்தாகவேண்டும் என்பதால், அவசியம் வாருங்கள் என்றுஉரிமையுடன் அழைக்கிறேன்.நன்றி !
என்றும் அன்புடன்
புகழேந்தி தங்கராஜ்
தொடர்புக்கு
9841906290