மாஜி : வணக்கம் ஜி வாங்க ஜி
மாமா ஜி : நாளைக்கு அமித் ஜி வரப்போறார் ஊரே ஒரே பரபரப்பா இருக்கு நீங்க சாவகாசமா உக்காந்து இருக்கீங்க
ஆமா ஜி : ஒன்னும் பிரச்னை இல்ல ஜி எல்லாம் பாத்துக்கலாம்
மாமா ஜி : தொண்டர்களை தயார் படுத்த தெருமுனை கூட்டம் போட சொன்னாங்களே ஜி, நான் வேற ஊரில் இல்ல எப்படி போச்சு எதுவும் சொதப்பலையே ?
ஆமா ஜி : என்ன இப்படி கேட்டுடீங்க எல்லா மாவட்டத்துலயும் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்ய சொல்லி தகவல் அனுப்பிட்டேன் ஜி
மாமா ஜி : தகவல் அனுப்பினா மட்டும் போதாது ஜி நீங்க முன்னாடி நின்னு நடத்தணும்
ஆமா ஜி : முதல் கூட்டமே நம்ம கூட்டம் தான் ஜி , இங்க பாருங்க
மாமா ஜி : ஜி தெருமுனைல நடத்த சொன்னா எங்கயோ மூத்திர சந்துல நடத்திருக்கீங்க ? கூட்டம்னு வேற சொன்னீங்க ஒரு நாய் தான் படுத்து கெடக்கு
ஆமா ஜி : டென்ஷன் ஆயிடுவேன் பாத்துக்கோங்க, அக்கா நடத்தும் கூட்டத்துக்கே ஆள் வரமாட்டேனுது chair வாடகை தண்டம்னு போன மாசம் தானே ஜி சொன்னீங்க. அதுனால தான் கொஞ்சம் சிக்கனமா நடத்திருக்கேன்
மாமா ஜி : சரி யா டென்ஷன் ஆவாதீங்க, அதுக்காக மோடி ஜி ப்ளெக்ஸை கக்கூஸ் மேலயா சாச்சு வைப்பீங்க ?
ஆமா ஜி : கட்சிக்கு தான் முட்டு குடுக்க முடியும், ப்ளெக்ஸ்க்கு எல்லாம் குடுக்க முடியாது ஜி
மாமா ஜி :கோவிச்சுக்காதீங்க ஜி, சரி அந்த நாய எப்படி ஜி பிடிச்சீங்க ?
ஆமா ஜி : அதுவா ஜி மயக்க பிஸ்கட் போட்டு படுக்க வச்சுட்டேன், இனி எவனும் நம்மள பாத்து, உங்க கூட்டத்துக்கு ஒரு நாய் வருமான்னு கேக்க முடியுமா சொல்லுங்க
மாமா ஜி :பின்னீட்டீங்க ஜி, அமித் ஜி பேசறதை நம்ம ராஜா ஜி தான் மொழிபெயர்க்க போறாராம் இப்போ தான் தகவல் வந்தது சும்மா பின்னி எடுப்பார் பாருங்களேன்.
ஆமா ஜி : கண்டிப்பா தெரியும் ஜி, கூட்டம் முடிந்ததும் ராஜா ஜி தான் இனி மாநில தலைவர்னு அமித் ஜி அறிவிக்கப்போறார் பாருங்க
மாமா ஜி : சரியா சொன்னீங்க ஜி, நாளைக்கு காலையில் சந்திப்போம். ECR வந்துருங்க ஜி
மறுநாள் காலை , ECR சாலை
ஆமா ஜி : ஜி வாங்க வாங்க ரொம்ப நேரமா வெயிட் பண்றேன்
மாமா ஜி : மோசம் போய்ட்டோம் ஜி , அமித் ஜி பிளைட் ஏற கூட ஏறல அதுக்குள்ள #GoBackAmitShah ட்ரெண்ட் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க ஜி
ஆமா ஜி : நீங்க வேற, நான் பஸ்ஸ புடிச்சு சாலிகிராமம் வழியா வந்துட்டு இருந்தேன் ஒரே கூட்டம். இறங்கி என்னனு பார்த்தேன் அங்க ஒரு ஆளை நாலு பேர் சேர்ந்து தூக்கிட்டு ஓடிட்டானுக. என்னடான்னு கேட்டா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த சந்தான பாரதிய எவனோ அமித் ஜினு நெனச்சு தூக்கிருக்கானுக.
மாமா ஜி : அவ்வளவு வெறியாவா இருக்காங்க ? ஒருவேளை நம்ம நாராயணன் சொன்ன மாதிரி டீவீட்டுக்கு 100 ரூபாய் தராங்களோ ?
ஆமா ஜி : எல்லாம் வதந்தி ஜி, நானே அத பார்த்துட்டு பஸ்சில் வரும் போது ஒரு 1000 ட்வீட் போட்டிருப்பேன் 10 பைசா வரல
மாமா ஜி : யோவ் நீயே 1000 ட்வீட் போட்டா அப்பறம் ஏன் ட்ரெண்ட் ஆகாது ? எதுனாவது அறிவு இருக்கா
ஆமா ஜி : சும்மா கடுப்பேத்தாதீங்க ஜி, இப்படி தான் கர்நாடகாவில் தாமரை மலரும் மச்சானுக்கு கக்கூஸ் காண்ட்ராக்ட் வாங்கி தரேன்னு சொல்லி 5 லட்சம் வாங்குனீங்க. என் நேரம் இந்த குமார சாமி எல்லாத்துலயும் மண்ண வாரி போட்டுட்டார், இப்படி எதுனா சம்பாதிச்சா தான் உண்டு
மாமா ஜி : சரி நேரமாச்சு போயிட்டே பேசுவோம் வண்டியில் ஏறுங்க
ஆமா ஜி : இந்த அமெரிக்கா டாலர் மேட்டரில் நம்மள ரொம்ப கேவல படுத்திட்டானுங்க ஜி ரொம்ப கஷ்டமா இருக்கு
மாமா ஜி : நம்ம பேச்சு அப்படி ஜி, இந்த டபுள் ஸ்ரீ சாமி மோடி வந்தா டாலர் 40 ரூபாய் ஆகும்னு சொன்னார்
மாமா ஜி : புரோக்கர் சாமி இன்னும் ஒரு படி மேல போய் கூவிருக்கார், 2017ல ஒரு ரூபாய் ஆயிடுமாம்
மாமா ஜி : மோடியாவது சும்மா இருந்தாரா, ஊழல் அதிகமானதால் தான் பணம் வீழ்ச்சி அடைஞ்சதுனு வேற சொல்லிருக்கார்
மாமா ஜி : இந்த காண்டம் கம்பெனிகாரன் எல்லாம் நம்மள கண்டம் பண்றான் ஜி , 69ல ரூபாய் வேணும்னா வேலை செய்யாம இருக்கலாம் நீங்க பேஷா செய்யலாம்னு சொல்றான். மானமே போகுது
ஆமா ஜி : பேசாம வேத காலத்துல காமசூத்திரா கத்து கொடுத்ததை மக்கள் கிட்ட கொண்டு போக தான் இப்படி செஞ்சாருன்னு சொல்லிடலாமா ?
மாமா ஜி : செருப்பாலயே அடிப்பாங்க ஜி
ஆமா ஜி : இல்லனா வெளிநாட்டில் வேலை செய்யும் நம்ம ஆளுங்க பயனடைய தான் இப்படினு ஒரு பிட்ட போட்டா ஜி ?
மாமா ஜி : இது நல்ல யோசனையா தான் ஜி இருக்கு ஆனாலும் இன்னும் பெட்டரா யோசிக்கணும் , அவசர பட்டு நம்ம ராஜா ஜி மாதிரி பேசி அசிங்கப்பட கூடாது
ஆமா ஜி : அப்படி என்ன ஜி சொன்னாரு
மாமா ஜி : மன்மோகன் சிங் காலத்துல ரூபாய் 74 அளவுக்கு போனதுனு சொல்லிட்டாரு
ஆமா ஜி : ஜி ஒருவேளை அவரு டாஸ்மாக் பிராந்தி விலையை சொல்லிருப்பாரோ
மாமா ஜி : என்ன கருமமோ தெரியலே ஜி , இவர் அடிச்ச கூத்துல இவருக்கு டாலர் ராஜா, 69 ராஜானு பேரு வச்சிட்டாங்க .
ஆமா ஜி : விடுங்க ஜி இன்னைக்கு கூட்டத்துல அவரு பேச்சை கேட்டு எச்ச ராஜான்னு கூப்பிட்டவன் எல்லாம் சாக்ரடீஸ் ராஜான்னு கூப்பிட போறாங்க பாருங்க ஜி
மாமா ஜி : வாங்க ஜி முதல் வரிசையில் போய் உக்காந்துப்போம்
ஆமா ஜி : நல்ல இடமா கிடைச்சிடுச்சு ஜி, சரி ஜி நம்ம அம்பானி ஏதோ எமி ஜாக்சன் பல்கலைகழகம் ஆரம்பிக்க போறாராம். என்ன மேட்டர் ஜி அது?
மாமா ஜி : ஜி அது எமினென்ட் பல்கலைக்கழகம், இந்தியாவிலேயே மொத்தம் 6 தான் தேர்ந்துஎடுத்திருக்காங்க அதுல அம்பானியிதும் ஒண்ணு
ஆமா ஜி : பிரமாதம் ஜி , எப்படியாவது சிபாரிசு செஞ்சு என் தம்பி பையனுக்கு சீட் வாங்கி குடுங்க ஜி
மாமா ஜி : இன்னும் 10 வருஷம் ஆகும் பரவா இல்லையா ?
ஆமா ஜி : அவ்ளோ டிமாண்ட்டா ஜி ?10 வருசத்துக்கா அட்மிஷன் முடிஞ்சிடுச்சு ?
மாமா ஜி : இல்லை ஜி இனிமேல் தான் கல்லூரியே கட்டணும்
ஆமா ஜி : என்ன ஜி பித்தலாட்டமா இருக்கு ? இன்னும் கட்டாத பல்கலைக்கழகத்தையா தேர்ந்தெடுத்திருக்கானுக ?
மாமா ஜி : அதுக்கு பேரு தான் ஜி க்ரீன் பீல்ட் கேட்டகரி
ஆமா ஜி : என்னமோ ஜி, முன்ன எல்லாம் க்ரீன்னு கேக்கவே நல்லா இருக்கும் இப்போ க்ரீன் காரிடார், க்ரீன் பீல்ட் எல்லாமே பிரச்னை தான்.
மாமா ஜி :ஆனா ஒன்னு ஜி அம்பானி கல்லூரி கட்டுவாரோ இல்லையோ கண்டிப்பா மோடிக்கு டிகிரி ரெடி பண்ணி குடுத்திருவேன்னு சொல்லிருக்கார்
ஆமா ஜி : சரிங்க ஜி இந்த கருப்பு பணத்தை பத்தியும் எல்லாம் நம்மள கழுவுராங்களே ஜி என்ன மேட்டர் ?
மாமா ஜி : அது என்ன விஷயம்னா தேர்தலுக்கு முன்னாடி, ஸ்விஸ் பேங்கில் இருக்க பணத்தை எடுத்துட்டு வந்து ஆளுக்கு 15 லட்சம் தர்றேன், எனக்கு ஓட்டு போடுங்கனு கேட்டோம்
ஆமா ஜி : அத நம்பி தான் ஜி நான் MLMக்கு ஆள் சேக்கர மாதிரி சொந்தக்காரன் எல்லாத்தையும் இழுத்து பிஜேபிக்கு ஓட்டு போட வச்சேன்
மாமா ஜி : ஸ்விஸ் வங்கியில் இருக்க பணம் பூரா என்ன கருப்புப்பணமானு அப்போவே கேடடாங்க, அதுக்கு நம்ம மோடி ஜி, ஒரு சின்ன குழந்தையை கேட்டா கூட ஸ்விஸ் வங்கி பணம் கருப்பு பணம்னு சொல்லும்னு பதில் அறிக்கை விட்டாரு
ஆமா ஜி : சரி ஜி இப்போ என்ன பிரச்னை ?
மாமா ஜி : ஸ்விஸ் வங்கியில் உள்ள கருப்பு பணம் 50% சதவிகிதம் வளர்ந்து இப்போ 7000 கோடி ஆயிடுச்சாம்
ஆமா ஜி : வீர துறவி இருக்கும் போது இது எப்படி ஜி சாத்தியம்
மாமா ஜி : அதுல பாதி பணம் வீர துறவி, அவர் கூட சுத்தும் பூசாரி அவங்களோடது தான் ஜி
ஆமா ஜி : எப்படி ஜி சொல்றீங்க
மாமா ஜி : இப்போ 2014ல ராமர் கோவில் கட்டும் இடம் எப்படி இருந்தது
ஆமா ஜி : இப்படி இருந்துது
மாமா ஜி : இப்போ எப்படி இருக்கு ?
ஆமா ஜி : அப்படியே தான் இருக்கு
மாமா ஜி : 2014ல பாஜக அலுவலகம் எப்படி இருந்தது
ஆமா ஜி : அதை ஏன் ஜி கேக்கறீங்க பார்க்கவே பரிதாபமா இருந்துச்சு
மாமா ஜி : இப்போ ?
ஆமா ஜி : இப்போ தான் இன்ஜினியரிங் காலேஜ் மாதிரி கட்டிருக்கோமே ஜி
மாமா ஜி : அத விடுங்க நம்ம அமித் ஜி தலைவரா இருக்க கூட்டுறவு வங்கியில் demonitization நடந்த 5 நாளில் 500 கோடி பணம் வந்தது, அவரு பையன் ஓடாத கம்பெனி நடத்தி ஒரே வருசத்துல 80 கோடி சம்பாதிக்கல ?
ஆமா ஜி : இப்போ நல்லா புரியுது ஜி, இப்போ என்னனு முட்டு கொடுக்கறது ?
மாமா ஜி : அங்க இருக்க பணம் எல்லாம் கருப்பு பணம் இல்லைனு நம்ம மத்திய மந்திரியே சொல்லிட்டார்
ஆமா ஜி : இத தானே ஜி அவனும் சொன்னான், இதுக்கு போய் தேவை இல்லாம அவனை வம்பிழுத்து, தோக்கடிச்சு இன்னைக்கு நாமும் அதே தான் சொல்றோமா ?
மாமா ஜி : அசிங்கமா தான் ஜி இருக்கு அதுக்கு என்ன பண்ண முடியும் ? தேர்தல் நேரத்துல மோடியை விட்டு ஒரு அறிக்கை விடுவோம், கருப்பு பணத்தை நாங்க மீட்டுட்டோம், fixed deposit போட்டா அதிக வட்டி வரும்னு போட்டு வச்சிருக்கோம். 2019ல ஓட்டு போட்டா கண்டிப்பா வட்டியோட 30 லட்சம் தர்றோம்னு சொல்லுவோம்
ஆமா ஜி : ஜி உண்மையாவே 30 லட்சம் கிடைக்குமா ஜி
மாமா ஜி : இவ்வளவு நேரம் கதை கேட்டுட்டு 30 லட்சமானதும் வாயை தொறக்கறீங்களே ஜி உங்கள மாதிரி பக்தா இருக்கவரை மோடி ஜிய யாராலும் அசைக்க முடியாது ஜி
ஆமா ஜி : உண்மையா இருக்காதான்னு ஒரு நப்பாசை தான் ஜி, அங்க பாருங்க ராஜா ஜி வந்துட்டார், விசில பாருங்க
ராஜா ஜி : இரு கைகளையும் உயர்த்தி டெல்லியில் இருக்கும் மோடி ஜி காதில் கேட்கும் படி உரக்க சொல்லுங்கள்
அமித் ஜி : பாரத் மாத்தா கி
மாமா ஜி, ஆமா ஜி : ஜே ஜே ஜே
ஆமா ஜி : என்ன ஜி பொதுவா பேச்சை மட்டும் தான் மொழி பெயர்ப்பாங்க நம்ம ஜி பாடி லாங்வேஜ் மொதக்கொண்டு மொழி பெயர்க்கறாரே ஜி. அமித் ஜி கைய தூக்கினா இவரும் தூக்கறார், தலையை தொடைச்சா இவரும் தொடைக்கறார்
மாமா ஜி : அது தான் ஜி ராஜா ஜி ஸ்பெசாலிட்டி, கவனிங்க கவனிங்க
அமித் ஜி : டெடிகேடட் மைக்ரோ இரிகேஷன் பண்ட் கே லியே 332 கிரோர் ரூபியா
ராஜா ஜி : அதாவது சிறுநீர் பாசன திட்டத்துக்காக 332 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது
ஆமா ஜி : சொட்டு நீர் பாசனம் தெரியும் இது என்ன ஜி புதுசா சிறுநீர் பாசனம்?
மாமா ஜி : ஏதோ புது திட்டம் போல ஜி, போன வாரம் கூட நம்ம புள்ளி விபர தம்பி ஒரு வீடியோ போட்டிருந்தாரே அது தான் போல
ஆமா ஜி : அந்த தம்பி சொன்னா சரியா தான் இருக்கும், அப்படி என்ன சொன்னாரு ?
மாமா ஜி : காங்கிரஸ் ஆட்சியில் ஒருநாளைக்கு சுமார் 800 ml சிறுநீர் போய்ட்டு இருந்த சராசரி இந்தியன் இன்னைக்கு மோடி ஜி முயற்சியால் 1200 ml வரை போக ஆரம்பிச்சிருக்கானாம்
ஆமா ஜி : இதுல கூடவா மோடி ஜி முயற்சி இருக்கு ?
மாமா ஜி : குறுக்க பேசாதீங்க, சிறுநீரில் இருந்த புரதசத்து 0.3 அளவில் இருந்து 3.0 அளவு உயர்ந்திருக்காம், இதை அப்படியே சேமிச்சு பாசனத்துக்கு பயன்படுத்தினா முப்போகம் விளையும் , மீதி உள்ளதை பாத்தி கட்டி காய வைத்தால் தரமான உப்பு கிடைக்கும்னு சொல்லிருக்கார் ஜி
ஆமா ஜி : மோசம் போய்ட்டோம் ஜி இங்க பாருங்க, மீம் போட ஆரம்பிச்சுட்டாங்க , நம்ம ராஜா ஜி நுண்ணீர் பாசனத்தை தான் சிறுநீர்னு சொல்லிருக்காரு
மாமா ஜி : ஆரம்பிச்சுட்டானுகளா இந்த ஆண்டி இந்தியன்ஸ்
ஆமா ஜி : சாக்ரடிஸ் ராஜான்னு பேரு மாறும்னு பாத்தா சாக்கடை ராஜா, சிறுநீர் ராஜானு வச்சிட்டானுக ஜி. இப்போவே தலையில் துண்டை போட்டுட்டு ஓடிடலாம் வாங்க ஜி
savukku posted the people’s mind, so dont say savukku has cheap mind
Savukku nned not to lower its stand by publishing cheap Memes.
I am not supporter of BJP . As a regular reader of Savukku i feel sad.
பிஜேபி தொழில்நுட்ப பிரிவின் தமிழக பொறுப்பில் உள்ள மதியழகன் ஒரு சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி சிறுசேரி அருகே நிலத்தை மானிய விலைக்கு சட்டத்தை வளைத்து வாங்கியிருக்கிறார். இவர் மலேசியாவில் தனது கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவதற்கு கூட்டு களவாணி அங்கேய் நிறுவனத்தை தேர்ந்து எடுத்து அதில் PARTNERSHIP செய்து கொண்டு இருக்கிறார். இன்னொரு AIRCEL MAXIS ALLIANCE உருவாகி வருகிறது , ஏன் இவர் மேல் வருமானத்துறை ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்க வில்லை . இவர் மதுரையில் பெட்ரோல் பங்க் வைத்து அதை வைத்து கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குவதாக அவரே பெருமையுடன் கூறி கொள்கிறார் தமிழ் நாட்டில் எந்த அளவு பிஜேபி வைத்து சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள் என்று பார்க்க முடிகிறது Can Savukku Sir suggest what can be done for these attrocities.
superji..
Perfect !!