மாமா ஜியும் ஆமா ஜியும் டிவி முன் ஆர்வமாக அமர்ந்தார்கள்
ஆமா ஜி : ஜி சீக்கிரம் சேனல் மாத்துங்க விவாதம் ஆரம்பிச்சிடும்
மாமா ஜி : ஏன் ஜி அவசர படறீங்க ? ஒரு மொட்டை, ஒரு ஸ்கூல் பையன் இவங்க பேசறது எல்லாம் ஒரு பேச்சா? மோடி ஜி வாய திறக்கட்டும் அப்பறம் இருக்கு கச்சேரி
ஆமா ஜி : சரியா சொன்னீங்க ஜி இவனுக எல்லாம் என்ன தைரியத்துல மோடி ஜிய பேச கூப்பிடறானுகன்னு தெரியல. சரி ஜி மோடி ஜி எத்தனை மணிக்கு பேச போறார் ?
மாமா ஜி : ஸ்பீக்கர் ஜிக்கு சிக்னல் கொடுத்தாச்சு, இன்னைக்கு வெள்ளி கிழமை எப்படியாவது பேச்சை வளர்த்து 9 மணி பிரைம் டைம் அப்போ மோடி ஜி பேசற மாதிரி செட்டப் செஞ்சாச்சு.
ஆமா ஜி : இது வேறயா அப்போ ஒட்டு மொத்த மீடியா, மக்கள் கவனமும் மோடி ஜி மேல தான் இருக்கும்
மாமா ஜி : என்னைய கேட்டா பேசாம 9 மணி ஸ்லாட்ட பப்புக்கு குடுத்திடனும், பப்பு உளறுவதை நாடே பார்க்கும் நமக்கு நல்லது. தவிர யாரு பேசினாலும் ஒப்புக்கு அரசாங்கத்தை நாலு திட்டு திட்டிட்டு உக்காந்திருவாங்க. மோடி முன்னாடி பேசவே பயப்படுவாங்க ஜி
ஆமா ஜி : ஜி நம்ம அடிமை கட்சி எத்தனை மணிக்கு பேசுவாங்க ?
மாமா ஜி : மொத்தம் 29 நிமிஷம் ஒதுக்கி இருக்காங்க ஜி, அவனவன் எக்ஸாமுக்கு படிக்கற மாதிரி படிச்சுட்டு இருக்கான் இவங்க பழைய பட பாட்டு மனப்பாடம் பண்ணீட்டு இருக்காங்க . நம்ம வண்டு ஒரு படி மேல போய் ஆனந்த் வைத்தியநாதன் வீட்டுக்கு போய் ட்ரைனிங் எடுக்கறாரு .
ஆமா ஜி : அவங்கள விடுங்க ஜி , முதல் ஆளு பேசறாரே யாரு ஜி அவரு ?
மாமா ஜி : இவரு தெலுங்கு தேசம் கட்சி, பேரு ஜெயதேவ் கல்லா, அமர் ராஜா பேட்டரி கம்பெனி CEO.
ஆமா ஜி : என்ன ஜி நம்ம ஆளுங்க எல்லாம் கத்தறாங்க என்ன சொன்னாரு அந்த ஆளு
மாமா ஜி : சிவாஜி சிலைக்கு 3000 கோடி குடுக்க தெரியுதே, புது தலைநகரம் அமைக்க வெறும் 1500 கோடி குடுத்தா என்ன அர்த்தம்னு கேட்டது புரியுது அதுக்கு அப்பறம் “முசக்காடுனு” எதோ சொன்னாரு என்னனு புரியலையே
ஆமா ஜி : 3000 கோடிக்கு ஒத்த சிலை செஞ்சா நம்ம ராஜா ஜி தூக்க எவ்வளவு சிரமப்படுவாரு? இதெல்லாம் யோசிக்கறது இல்லையா ? ஒரு மனுசன் எவ்வளவு வெயிட் தூக்க முடியும் ?
மாமா ஜி : ஜி முசகாடுனா பிராடு பயலாம் ஜி
ஆமா ஜி : என்ன ஜி சொல்றீங்க? மோடி ஜி மூஞ்சி மேலயே இப்படியா சொல்லிட்டாரு
மாமா ஜி : சும்மா இருங்க ஜி அடுத்து பதிலடி கொடுப்போம், ராகேஷ் சிங் பேசறாரு பாருங்க
ஆமா ஜி : என்ன ஜி சொல்லறாரு ?
மாமா ஜி : மொக்க போடறாரு ஜி, இதெல்லாம் நம்ம பிளான் தான். இவங்க எல்லாம் அடக்கி வாசிச்சா தான் மோடி ஜி பேச்சு பின்னும். ஜி அங்க பாருங்க நம்ம பப்பு பேச எந்திருக்குது
ஆமா ஜி : ஜி கையில் பேப்பர் வேற இல்ல, இன்னைக்கு செம காமெடி இருக்கு
ராகுல் : மோடி ஜி ஆளுக்கு 15 லட்சம் போடுறதா சொன்னாரே என்ன ஆச்சு?
ஆமா ஜி : நம்ம மோடி ஜி ஒரு ப்லொவுல அடிச்சு விட்டதை விடாம புடிச்சு தொங்கறானுகளே அய்யோ.
ராகுல் : 2 கோடி வேலை வாய்ப்பு உருவாக்குவேன்னு சொன்னார் ஜெயித்த பின் அவர் பாட்டுக்கு ஊரு சுத்த வெளிய போய்டுறாரு. சீனாக்காரன் 24 மணி நேரத்துக்கு 50 ஆயிரம் பேருக்கு வேலை குடுக்கறான் ஆனா நீங்க 400 பேருக்கு வேலை கொடுக்கறீங்க அதுவும் பகோடா போடறது தான் அந்த வேலைனும் சொல்றீங்க
மாமா ஜி : என்ன ஜி பப்பு ஒரு டைப்பா பேசுது , மோடி ஜி முகமே மாறுது
ஆமா ஜி : பின்ன ஒரு டீ மாஸ்டர் முன்னாடி 400 பேரு பகோடா போடறானுகன்னு பெருமையா பேசுனா கோவம் வருமா வராதா ?
ராகுல் : அமித் ஷா மகன் சொத்து ஒரு வருடத்தில் எப்படி ஒரு வருடத்தில் 16000 மடங்கு அதிகம் ஆச்சு ?
ஆமா ஜி : என்ன ஜி ஒரு தேசிய கட்சியின் தலைவர் பையன் சம்பாதிச்சா இவனுங்களுக்கு ஏன் ஜி வயிறு எரியுது ?
மாமா ஜி : இருங்க ஜி எனக்கே வயிறு கலக்குது. கொஞ்சம் இருங்க ஜி. கக்கூஸ் போயிட்டு வந்துட்றேன்.
ராகுல் : ரஃபேல் விமானம் வாங்கினதுல ஊழல் நடந்திருக்கு அதை மறைக்க நிர்மலா சீதாராமன் பொய் கூறுகிறார், பிரான்ஸ் நாட்டு அதிபரிடம் நான் நேரடியாகவே பேசிவிட்டேன் எந்த ஒரு ரகசிய உடன்படிக்கையும் இரு நாட்டுக்கும் இல்லை அதனால் தேவை படும் விபரங்களை அரசு வெளியிடலாம்னு சொல்லிட்டார்.
ஆமா ஜி : போச்சு போச்சு நிம்மியை வேற வம்பு இழுக்குறாரே, இனி அந்த அம்மா மூஞ்சியில் யோகா பண்ண ஆரம்பிச்சிடுமே. அங்க பாருங்க ஜி நிம்மி ஜியை
மாமா ஜி : எனக்கும் பயமா தான் இருக்கு ஜி பொறுங்க
ராகுல்: அஜெண்டா ஒண்ணுமே இல்லாம நீங்க கிளம்பி சீனால போய் உக்கார்ந்துடீங்க அவன் டோக்லாம்முக்கு மிலிட்ரியை அனுப்பி வச்சிட்டான்
ஆமா ஜி : இவரு சொல்றது எனக்கே கொஞ்சம் கஷ்டமா தான் ஜி இருக்கு, இப்போ தான யா கிளம்பின, குளிச்சிட்டு வரதுக்குள்ள திரும்ப வந்து நிக்கறன்ற மாதிரி சீனா அதிபர் ஒரு லுக் விட்டாரே
ராகுல் : நான் இங்கு பேசும் போது பிரதமர் சிரிக்கிறார் ஆனால் அவரால் என் கண்ணை பார்க்க முடியாது ஏன் என்றால் அவர் கூறுவது அத்தனையும் பொய்
மாமா ஜி : அங்க பாருங்க ஜி, குழந்தை மாதிரி சிரிச்சிட்டு இருந்த மோடி ஜிய இப்படி ஆக்கி விட்டுட்டாங்க
ஆமா ஜி : இருங்க ஜி. எனக்கே கஷ்டமா இருக்கு. மூஞ்சி இஞ்சித் தின்ன கொரங்கு மாதிரி போயிடுச்சே.
ராகுல் : இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எகனாமிஸ்ட் இதழ் பெண்கள் பாதுகாப்பாக வாழ இந்தியா ஏற்ற இடமல்ல என்று கூறியுள்ளது. பெண்கள், சிறுபான்மையினர் தலித்துகள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. நான் பிரதமரை பார்த்து கேட்க விரும்புகிறேன். இவர்கள் இந்தியர்கள் இல்லையா ?
ஆமா ஜி : என்ன ஜி. பொள பொளன்னு பொளக்கறான்.
மாமா ஜி : இருங்க ஜி. நம்ப ஆளுங்க ஏதாவது பண்ணுவாங்க. அதோ பாத்தீங்கள்ல. கத்த ஆரம்பிச்சிட்டாங்க. இப்போ எப்படி ராகுல் பேசறார்னு பாக்கலாம்.
ஆமா ஜி : இது என்ன ஜி அநியாயமா இருக்கு. ஒருத்தர் பேசும்போது, பேச விடாம குறுக்க கத்தி கலாட்டா பண்றது சரியா ?
மாமா ஜி : யோவ் நீ உண்மையிலயே பக்தாவா இல்லையா ? சந்தேகமா இருக்கே. நாம என்னைக்கு நியாயமா விவாதம் பண்ணிருக்கோம் ? கத்தி கூச்சல் போட்டு, கலாட்டா பண்ணி, எதிர இருக்கவனை பேசவே விடாம பண்றதுதானே நம்ப குல வழக்கம். புதுசா கேக்கற ?
ஆமா ஜி : சாரி ஜி. டக்குன்னு ஒரு நிமிசம் மூளையை யூஸ் பண்ணிட்டேன்.
மாமா ஜி : இது என்ன ஜி புது கெட்டப் பழக்கம் ? மூளையை எல்லாம் யூஸ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்க ? பக்தாவா இருக்கணுமா வேணாமா ?
ஆமா ஜி : சாரி ஜி. ஒரு நிமிசம் தடுமாறிட்டேன்.
ராகுல் : தலித்துகள் மீதும், ஏழைகள் மீதும், ஒடுக்கப்பட்டவர்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல் அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்.
ஆமா ஜி : அந்த அரசியல் அமைப்பு சட்டம்தான் இருக்க கூடாதுன்னு நாம போராடுனா என்ன லுச்சாத்தனமா பேசறான் ?
மாமா ஜி : இதைத்தான் நாம ஆரம்பத்துல இருந்தே சொல்லிக்கிட்டு இருக்கோம். இது என்ன அரசியல் அமைப்பு, அடிப்படை உரிமைன்னு…. இடியட்ஸ்.
ஆமா ஜி : இருங்க ஜி. ராகுல் என்னமோ சொல்றாரு.
ராகுல் : இந்த தேசத்தின் விவசாயி கைகூப்பி இந்நாட்டின் பிரதமரைப் பார்த்து கேட்கிறான். நாங்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான். எங்களின் விவசாயக் கடனை எங்களால் சமாளிக்க முடியவில்லை. கட்ட முடியவில்லை. எங்களின் கடன்களையும் ரத்து செய்யுங்கள் என்று கேட்கிறான். அதற்கு இந்நாட்டின் நிதியமைச்சர் சொல்கிறார்.
பேசாதே. நீ கோட் அணியவில்லை. சூட் அணியவில்லை. ஷு அணியவில்லை. உன்னிடம் பேச முடியாது. என்று அந்த விவசாயிக்கு பதில் கூறி விட்டு, இவர்களின் 15 அல்லது 20 பணக்கார நண்பர்கள் உள்ளார்கள். அவர்களின் கடனை இந்த அரசு தள்ளுபடி செய்கிறது.
ஆமா ஜி : என்ன ஜி நெஜம்மாவா சொல்றாரு ?
மாமா ஜி : விவசாயிகளின் ஒரே நண்பன் மோடி ஜிதான். பய புள்ள பொய் சொல்லுது.
ராகுல் : நாட்டில் எத்தனையோ தலைவர்கள் உள்ளனர். ஆனால் அவர்களைப் போல அல்லாமல், மோடியும் அமித் ஷாவும் மாறுபட்டவர்கள். நேற்று நாங்கள் ஆட்சியில் இருந்தோம். இன்று இல்லை. ஜனநாயகத்தில் இது இயல்பானது. ஆனால் மோடி மற்றும் அமித் ஷாவால் தோல்வி என்ற ஒன்றை நினைத்துக் கூட பார்க்க முடியாது. அவர்களால் தோல்வியை தாங்கிக் கொள்ளவே முடியாது. பதவியை இழந்தால் அவர்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் தொடங்கும் என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் அவர்கள் அச்சத்தின் காரணமாக இப்படி நடந்து கொள்கிறார்கள். அவர்களின் கோபம்தான் நாடு முழுவதும் பரவுகிறது.
இன்று உறுதியாக சொல்கிறேன். நாடு முழுவதும் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து, பிஜேபியை வீழ்த்துவோம்.
ஆமா ஜி : என்ன ஜி. பப்பு பப்புன்னு சொன்னீங்க. அப்பு அப்புன்னு அப்பறான்.
மாமா ஜி : இருங்க ஜி. திரும்ப கக்கூஸ் போயிட்டு வந்துட்றேன். வயிறை கலக்குது.
ஆமா ஜி : என்ன ஜி. நம்ப கதை அவ்வளவுதானா ?
மாமா ஜி : மோடி ஜி பேசட்டும். பப்பு பேச்சை துண்டு துண்டா உடைக்க போறாரு பாருங்க.
ராகுல் : நான் சங் பரிவாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சங் பரிவார்தான் எனக்கு இந்தியா என்றால் என்ன. இந்து மதம் என்றால் என்ன. அன்பு என்றால் என்ன என்பதை சொல்லிக் கொடுத்தது. அனைவர் மீதும் அன்பு செலுத்த வேண்டும். வெறுப்பை உமிழக் கூடாது என்பதை எனக்கு கற்றுக் கொடுத்தது. அனைவர் மீதும் அன்பு செலுத்துவதுதான் காங்கிரஸ் கட்சியின் அடிநாதம்.
காங்கிரஸ் இந்தியாவின் மீது நம்பிக்கை வைத்துள்ளது. எதிர்க்கட்சியில் உள்ள உங்களிடமும் உள்ள அன்பை வெளிக் கொணர்வதே எங்கள் பணி. அதை நான் தவறாமல் செய்வேன்.
ஆமா ஜி : போச்சு ஜி. போச்சு. நம்ப கதை முடிஞ்சே போச்சு.
மாமா ஜி : இருங்க ஜி. மோடி ஜி பேசட்டும். அப்புறம் பாருங்க.
ஆமா ஜி : அய்யய்யோ அங்க பாருங்க ஜி
ராகுல் எழுந்து சென்று, மோடியை கட்டி அணைக்கிறார். மோடி எழுந்திராமல் சிரிக்கிறார்.
மாமா ஜி : இது என்ன ஜி பழக்கம். கட்டி புடிக்கிறது. அசிங்கமா இல்ல. நமக்குன்னு ஒரு மரபு இருக்குல்ல.
ஆமா ஜி : உலக நாடுகள் எங்க போனாலும் மோடி ஜி கட்டிப் புடிக்கிறாரே ஜி. அது மட்டும் சரியா ?
மாமா ஜி : அது வேற ஜி. இது வேற.
ஆமா ஜி : என்ன வேற ?
மாமா ஜி : அதாவது, வேதத்துல என்ன சொல்லிருக்குன்னா….
ஆமா ஜி : போதும் ஜி நிப்பாட்டுங்க ஜி.
மாமா ஜி : ஜி. மோடி ஜி பேச ஆரம்பிச்சிட்டாரு. வாங்க வாங்க.
மோடி : மித்ரோன். ப்ரதான் மந்த்ரி வெளிநாடு சுத்திப் பாக்கும் யோஜனா, பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா கூசாம பொய் சொல்லும் யோஜனா, இது போல பல யோஜனாக்கள்.
நாடு இன்று ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது ? எல்லாவற்றுக்கும் காரணம் நேருதான்.
மாமா ஜி : எப்படி பாயின்ட்டை புடிச்சாரு பாத்தீங்களா ஜி
ஆமா ஜி : புடுங்குனாரு. இதைத்தான் 4 வருசமா கேட்டுக்கிட்டு இருக்கோமே.
மோடி : ராகுல் கண்ணை என்னால் பார்க்க முடியாது. ஏன் தெரியுமா ? ஏனென்றால் நான் ஒரு ஏழைத் தாயின் மகன்.
மாமா ஜி : இப்போ பாருங்களேன். அடுத்தது செம்ம மேட்டர் ஒன்று எடுத்து விடுவாரு.
ஆமா ஜி : என்ன மேட்டர்னு நானே சொல்றேன். நான் ப்ளாட்பாரத்தில் டீ வித்தேன். இதானே. போங்கய்யா யோவ். உங்க கூட சேந்து மாட்டு மூத்திரம் குடிச்சதுதான் மிச்சம். மனுசங்களாடா நீங்க.
ஆமா ஜி கோபமாக எழுந்து சென்று விடுகிறார். மாமா ஜி. வேதனையோடு அவரை பார்த்துக் கொண்டே இருக்கிறார்.
ஆம் ஒரு மாதத்திற்கு பல லட்சம் சம்பளம் வாங்கும் மோடி இன்னும் தனது தாயை ஏழையாகவே வைத்திருப்பது யார் குற்றம்? மனைவி குழந்தை குட்டிகள் இல்லா மோடி தனக்கு வரும் அணைத்து வருமானத்தையும் என்ன செய்கிறார்? இதில் ஒரு இருபத்தைந்தாயிரம் ரூபாய் தனது தாய்க்கு கொடுத்தாலே அந்தத்தாய் பணக்காரியாக வாழலாமே! ஜூம்லா மோடிக்கு தெரிந்ததெல்லாம் ஜூம்லா எனும் பொய் பொய்யை தவிர வேறொன்றுமே தெரியாதோ!?
நான் ஒரு ஏழைத் தாயின் மகன் – in tamil film industry whose that person registered this name….oh???? The director and producers try to ask the great actor Mo(sa)di Hall sheet and start the movie after the election 2019.