மோடியை இத்தனை நயமில்லாத மனிதராக்குவது எது? ஆர்எஸ்எஸ் எனும் சேற்றில் மலர்ந்த தாமரை அவர் என்பது வெளிப்படையாகத் தெரியும் பதிலாக இருந்தாலும் இந்த வெளிப்படையான பதிலில் எனக்குத் திருப்தி இல்லை. ஏனெனில், ஆர்எஸ்எஸ் சேவகர்களாக இருந்து அரசியல் தலைவர்களாக மாறியும், நல்லியல்புகளின் முழு உருவமாக இருந்த பலரை எனக்குத் தெரியும். இதற்கு நன்றாகத் தெரிந்த உதாரணங்கள் அடல் பிகாரி வாஜ்பாயி, லால் கிருஷ்ண அத்வானி. இருவருமே, ஆர்எஸ்எஸ்ஸால் வளர்க்கப்பட்டவர்கள், ஆர்எஸ்எஸ் ஷாகாக்களில் பங்கேற்றவர்கள், வீர சாவர்க்கர், எம்.எஸ். கோல்வல்கர் ஆகியோரின் தீவிர அபிமானிகளாக மாறிய பின்னரும்கூட அடிப்படையில் நேர்த்தியான நல்ல மனிதர்களாக இருந்தவர்கள்.
ஜவகர்லால் நேரு பொதுவெளியிலான நடத்தைக்கான தொனியை உருவாக்கிய காலத்தில் இவர்கள் வளர்ந்தது இதற்கான காரணம் என நம்புகிறேன். பாரத ஜன சங்க நிறுவனர் ஷியாம் பிரகாஷ் முகர்ஜியின் தனி உதவியாளர் எனும் விஷேசமான பதவியை வாஜ்பாயி வகித்தார். முகர்ஜி காஷ்மீர் சிறைச்சாலையில் மரணமடைந்த பின், பாரதிய ஜன சங்கத்தின் தலைவரான வாஜ்பாயி நேருவைக் கடுமையாக விமர்சித்தார். எனினும், 1957இல் வாஜ்பாயி தன் 32ஆவது வயதில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, திறமை மிக்க இந்த இளைஞர் மீது நேரு தனி அக்கறை எடுத்துக்கொண்டார். ராகுல் காந்தி எனும் இளைஞரிடம் மோடி நடந்துகொள்வது போல, இளம் வாஜ்பாயியிடம் நேரு நடந்துகொள்ளவில்லை. ஒருநாள் பிரதமர் நாற்காலியில் அமரக்கூடிய அறிகுறியை வாஜ்பாயியிடம் பார்ப்பதாக நேரு தனது சகாக்களிடம் கூறினார். அதன் காரணமாகவே ஐநா சபைக்கான 1958 குழுவில் வாஜ்பாயியை இடம்பெற வைத்தார். அதோடு, அப்போது ஐநாவுக்கான நம் நிரந்தரக் குழுவில் அதிகாரியாக இருந்த (பிற்காலத்தில் வெளியுறவுச் செயலாளராகப் பதவி ஏற்ற) மாகாராஜா கிருஷ்ண ரஸ்கோத்ராவிடம், வாஜ்பாயியை முடிந்த வரை வெளிநாட்டுத் தலைவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்குமாறு தனிப்பட்ட முறையில் கூறினார். நேரு வாஜ்பாயிடம் நடந்துகொண்டதைப் போலத் தன்னைவிட வயதில் இளையவரான ராகுலிடம் மோடி நடந்துகொள்கிறாரா?
பின்னர், 36 வயது மாநிலங்களவை உறுப்பினரான வாஜ்பாயி, தனது நான்கு நாடாளுமன்ற சகாக்களுடன், 1962, அக்டோபர் 26இல் இந்தியா மீதான சீன படையெடுப்பிற்கு மத்தியில் நேருவைச் சந்தித்தார். போர்ச் சூழல் தொடர்பான அரசியல் சூழல் மற்றும் போர்த் தயாரிப்பு குறித்து விவாதிக்க, நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் எனும் வாஜ்பாயி கோரிக்கையை நேரு உடனே ஏற்றுக்கொண்டார். ஆனால் அதே நேரத்தில் தற்போது உள்ள பிரதமரை, (அவர் எப்படியும் தன் அதீதப் பெரும்பான்மையால் வெல்லப்போகிற) நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்க, நாடாளுமன்றத்தில் ஒரு பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதையும் செயலற்றுப் போக வைக்க வேண்டியிருந்தது.
25 ஆண்டுகள் கழித்து 80களின் மத்தியில் மிகவும் இளம் வயது ராஜீவ் காந்தி பிரதமரானார். 1984 தேர்தலில் பெரும்பாலான கட்சி சகாக்களுடன் வாஜ்பாயி புறந்தள்ளப்பட்டிருந்தார். அண்மையில் வெளியான கரண் தாப்பரின் நினைவலைகளைக் கொண்ட புத்தகம், வாஜ்பாயிக்குச் சிறுநீரகப் பிரச்சினை இருப்பதை ராஜீவ் காந்தி தெரிந்துகொண்டதாக வாஜ்பாயி கரணிடம் கூறியதைக் குறிப்பிடுகிறது. வாஜ்பாயியிடம் இருந்து உடனடியாகத் தகவல்களைப் பெற்றவர், அவரது மருத்துவப் பிரச்சினைக்கு உலகின் மிகச் சிறந்த மருத்துவர்களின் சிகிச்சை பெறுவதற்காக அந்த ஆண்டின் ஐநாவுக்கான இந்தியக் குழுவில் இணைந்துகொள்ளுமாறு வாஜ்பாயிக்கு ஆலோசனை கூறியிருக்கிறார். வாஜ்பாயி சிகிச்சை முடிந்து நியூயார்க்கிலிருந்து திரும்பி வந்ததும் ராஜீவின் பிரதமர் பதவி முடிவுக்கு வருவதற்கு முக்கியப் பங்காற்றினார். இன்று வாஜ்பாயி எழுந்து நடமாட முடியாவிட்டாலும், அவர் உயிருடன் இருப்பதற்கு, அவருடைய தீவிர அரசியல் எதிரியாக இருந்த ராஜீவ் நீட்டிய உண்மையான உதவிக்கரமே காரணம்.
மற்றொரு நேரு கால ஆதரவாளரான பி.வி. நரசிம்மராவ் காலத்திலும் இந்தக் கதை தொடர்கிறது. தனக்கு உதவியவருக்கு துரோகம் செய்து பிரதமரான விபி.சிங் (ஓராண்டுக்குள் பதவி இழப்பதற்கு முன்), தனது வாழ்நாள் முழுவதும் தொடர் டயாலிஸ் சிகிச்சைக்காக சிறந்த சர்வதேச சிகிச்சை பெற நரசிம்மராவ் உதவினார். ஐநா மனித உரிமைகள் துணைக் கமிஷனில் மோசமான பாகிஸ்தானை எதிர்கொள்ள, தனது இணை அமைச்சரான சல்மான் குர்ஷீத்துடன் ஜெனிவா சென்று வருமாறு வாஜ்பாயியைக் கேட்டுக்கொண்டார். ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியினர் இப்படித்தான் நடத்தப்படுகின்றனர். அவையில் எவ்வளவுதான் தீவிரமாக பேசியிருந்தாலும், அரசியல் விமர்சனத்தில் தனிப்பட்ட நோக்கம் கிடையாது என்பதை அவர்கள் தெளிவுபடுத்த முற்பட்டபோது அவர்கள் குறைத்து மதிப்பிடப்பட்டதில்லை.
வாஜ்பாயி தொடர்பான என் சொந்த அனுபவம் ஒன்று உள்ளது. ஜனாதிபதி மாளிகையில், யாசர் அராபத்தைக் கவுரவிக்கும் விருந்தில் எனக்கு முன்னதாக அவர் அராபத்துடன் கைகுலுக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு வலது பக்கம் நான் நின்றுகொண்டேன். சங்கடம் தரும் வகையில் அராபத் அசோகா ஹாலின் மறுபக்கத்திற்கு நேராக சென்றுவிட்டதால், நாங்கள் திரும்பி வரிசையாக நின்று சிறப்பு விருந்தினரிடம் சென்று அறிமுகம் செய்துகொள்ள வேண்டியிருந்தது. இதனால் வாஜ்பாயி எனக்குப் பின்னே நிற்க வேண்டியிருந்தது. எனவே நான், விலகிக்கொண்டு எனது சீனியரை வரிசையில் முன்னே வருமாறு கேட்டுக்கொண்டேன். வாஜ்பாயி சிரித்தபடி, அப்போதையை பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி, இந்து ஜின்னா என நான் தெரிவித்த மோசமான கருத்தைக் சுட்டிக்காட்டும்படி, “இல்லை, இல்லை, நீங்கள் அங்கேயே இருக்கவும், நான் யார், இந்து ஜின்னாவைப் பின்பற்றுபவன்தானே” என்று கூறினார். இத்தகைய பணிவும் நகைச்சுவையும் மோடியிடம் உண்டா?
இப்போது அத்வானிக்கு வருவோம். நான் நெருப்பு யாத்திரை என குறிப்பிடும் ரத யாத்திரையை மேற்கொண்டதற்காக, இவரைக் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். 1991இல் மக்களைவைக்கு முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாதங்களில், ஸ்டிராஸ்பர்கில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் தொடர்பாக நடைபெற்ற சர்வதேச மாநாட்டிற்கான இரு நபர் குழுவில் நாங்கள் இடம்பெற்றிருந்தோம். என் மனைவி உடன் வந்திருந்தார். நான் படம் பார்ப்பதற்காக விமானத்தின் பின்பகுதிக்குச் சென்றுவிட்டேன். (இப்போதுள்ளது போல தனி வீடியோ திரைகள் கிடையாது, அந்த நாட்களில் எல்லோரும் பார்க்கவே திரையிடப்படும்). அத்வானி அவர்கள் என் மனைவி அருகே வந்து அமர்ந்துகொண்டு நான் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த பெரும்பகுதி நேரத்தில் அவருடன் பேசிக்கொண்டிருந்தார். திரைப்படம் முடிந்த பிறகு நான் மனைவியிடம் நான் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டேன். “அவர் எத்தனை அருமையான மனிதராக இருக்கிறார். நீங்கள் அவரைப் பற்றி மோசமாகப் பேசுகிறீர்கள். ஒழுங்காக நடந்துகொள்ளுங்கள்” என்றார்.
மனைவியின் பேச்சை மதித்து, நான் அத்வானியிடம் பழகும் விதத்தை மாற்றிக்கொண்டேன். அவருக்கு பிரெஞ்சு மொழி தெரியாது. அதோடு, அவர் தீவிர சைவ உணவுப் பழக்கம் கொண்டவர். எனக்கு பிரெஞ்சு மொழி தெரியும். விமானப் பணிப்பெண்களுக்கு உபநிஷத்துகள் பற்றித் தெரிந்ததை விட சைவ உணவு பற்றிக் குறைவாகவே தெரிந்திருந்தது. அவர்கள் அத்வானியின் சைவ உணவுத் தேர்வுகள் மீது தொடுத்த தாக்குதலிலிருந்து என்னுடைய பிரெஞ்சு மொழி அறிவு எனக்குக் கைகொடுத்தது.
பாபர் மசூதியை இடிப்பதற்கான அவரது தொடர் முயற்சிகளை மீறி, அத்வானி அருமையான மனிதர் என்பதை ஸ்ட்ராஸ்பர்க் பயணத்தின் முடிவில் மனைவியுடம் ஒப்புக்கொண்டேன்.
காட்டுமிராண்டித்தனமான அந்த இடிப்புச் சம்பவம் நடைபெற்றபோது, அவரைக் கடுமையாக விமர்சிப்பதில் சமரசம் காட்டவில்லை என்றாலும், அவர் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரானபோது, கானட் பிளேஸ் இடத்தை ராஜீவ் சவுக் என மாற்றியதை மீண்டும் மாற்ற இருப்பதாக ஒரு வதந்தி உலவியது. அப்போது அவர், இது போன்ற அற்பத்தனமான பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என என்னிடம் கூறி, ராஜீவின் பெயர் மாற்றப்படாது என உறுதி அளித்தார். இன்று ராஜீவ் சவுக் தில்லியின் பரபரப்பான மெட்ரோ மையமாக நீடிக்கிறது என்றால், ஒரு மனிதராகவும், அமைச்சராகவும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியிலிருந்து உயர்ந்து நின்ற அத்வானிக்கே அந்தப் பெருமை உரியது. இளைவர்கள் மற்றும் பெரியவர்கள் உள்பட தனது தலைமுறையினருக்கு நாடாளுமன்ற ஜனநாயகத்தில் கட்சி அரசியலுடன் நாகரிகத்தை எப்படிக் கலக்க வேண்டும் எனக் கற்றுத்தந்த நேருவுக்கும் இந்தப் பெருமை உரியது. ஆனால், மோடிதான் பின்னர் வந்த கரடுமுரடான தலைமுறையைச் சேர்ந்தவராயிற்றே.
எனவே, காங்கிரசின் தீவிர எதிரணியினராக இருந்த வாஜ்பாயி மற்றும் அத்வானியின் நாகரிமான நடத்தையில் இருந்து மோடியின் ஆணவமான போக்கு வேறுபட்டிருப்பதை ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டு விளக்க முடியாது. மோடியின் நடத்தை குறித்து எனக்குக் கிடைக்கும் ஒரே ஒரு விளக்கம் என்னவெனில், சுதந்திரத்திற்குப் பின் பிறந்தவரான அவர் நேரு இறக்கும்போது, 14 வயதானவராகத்தான் இருந்தார். நாம் ஜனநாயகமானபோது உணரப்பட்ட மாயத்தை உணரத் தவறினார். ஜனநாயகத்தின் அமைப்புகள் மற்றும் மாண்புகள் மீது அவருக்கு எந்தக் கவலையும் இல்லை. அவருக்கு முன்னர் பிரதமர்களாக இருந்த லால் பகதூர் சாஸ்திரி முதல் இந்திரா காந்திவரை, மொரார்ஜி தேசாய், சரண்சிங், ராஜீவ், வி.பி. சிங், சந்திரசேகர், தேவே கவுடா, ஐ.கே. குஜ்ரால், வாஜ்பாயி மன்மோகன் சிங் ஆகியோரின் அரசியல் பண்பை உருவாக்கிய நாடாளுமன்ற நெறிமுறைகளின் துடிப்பான சூழலின் அனுபவம் இல்லாதவராக உருவாகியிருக்கிறார். இவர்கள் அனைவருமே, அவர்களை எல்லாம்விடச் சிறந்த பிரதமரான நேருவின் தாக்கத்தில் அரசியல் முதிர்ச்சி மற்றும் அந்தப் பதவிக்கான வளர்ச்சியைப் பெற்றிருந்தனர்.
அதனால்தான், ஜனநாயகத்தில் எதிரணியினர் உண்டே தவிர எதிரிகள் கிடையாது, நாம் உடன்படாதவர்களுடன் இதயத்தில் துவேஷத்தை வளர்த்துக்கொள்ள வேண்டியதில்லை என உணர்த்தும் செயலை அவரால் இழிவுபடுத்த முடிந்திருக்கிறது. மோடி – ஷாவால் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள், கருணை காட்டும் அவசியம் இல்லாத, குரோதம் மற்றும் பழி வாங்கும் சூழலில் செயல்படுகின்றனர். மோடி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பதில் அளித்துப் பேசியபோதும் மறுநாள் பாஜகவின் ஷாஜ்கான்பூர் பேரணியிலும் இது பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. அவரைத் “தரக்குறைவான மனிதர்” என விமர்சனம் செய்ததற்காக நான் எனது கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டேன். இந்தச் சம்பவம் உள்பட எதிலிருந்தும் மோடி எதையுமே கற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவு.
மணி சங்கர் ஐயர்
(மணிசங்கர் ஐயர், மக்களவை மற்றும் மாநிலங்களவை முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர்.)
நன்றி: என்டிடிவி.காம் (https://www.ndtv.com/opinion/why-rahuls-hug-is-lost-on-modi-by-mani-shankar-aiyar-1887899)
this video link is enough for Rahul – https://www.youtube.com/watch?v=c4tE-znr0GA.
so he is not worth.
1. how can you compare with vajpaye and rahul. vajpay never went to pattaya for happy ending massage.
2. how can you compare with vajpay and rahul . vajpay never cought red hand at us customs with huge undeclared money
3. how can you compare wirh vajpay and rahul. vajpay in early stage itself well versed in read write and stage shows with out paper help.
hope you remember jadmailni quote rahul no even qualify for his office pune.
காங்கிரஸுக்கு இவ்வளவு ஜால்ரா கட்டுரையாக இருக்கிறதே என்று பார்த்தால் மணி சங்கர் ஐயர். அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மோடி உதவியதாக ஜாபகம் எனக்கு. அரசியல் நாகரிகம் என்பதெல்லாம் ஒரு oxymoron இன்றைய கால கட்டத்தில். என்னவோ காங்கிரஸ் இதை அப்படியே கடை பிடிப்பதாக நினைப்பு. எதிர் கட்சியை விடுங்கள் தங்களுக்குள்ளேயே கேவலமாக அடித்து கொள்ளும் தமிழக காங்கிரஸை சரி செய்ய என்ன செய்கிறார்?
ivan oru uththama puththiran paru. ivane vetti kesu…eppadiyavathu Rahul Gandhi kitta nalla peru vaanga trai paNNuRaan…
indha ayokiyan tamilnattu yokkiyan patri pesa sollu mudalil.. modi kitta poittan..