கிறுக்குத்தனங்களிலும் ஒரு நேர்த்தியான செயல்பாடு வேண்டும். இல்லை என்றால், நான்காண்டுகளுக்கு முன் மத்தியில் பதவியேற்ற மோடி அரசின் பல நடவடிக்கைகளுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். நடவடிக்கைகளின் சில உதாரணங்கள் அரசு மூன்று இணைகோடுகளில் பயணிப்பதை நமக்கு உணர்த்துகின்றன. சதுரங்க ஆட்டத்துக்கு நிகரான குழப்பம் மிகுந்த செயல்பாடுகளைக் கணிப்பது கடினமென்றாலும் இதில் ஆடுபவர் தெளிவான திட்டத்துடன் இருப்பது மட்டுமின்றி எதிராளியை விட மிகவும் முன்னேறிச் செல்பவர் போலவும் தெரிகிறது.
முதலாக, முறையற்ற அடிப்படை ஆதரவினால் பயம், வன்முறை கலந்த சூழலை உருவாக்கிய அரசு புகைமூட்டத்தின் வழியே பல தலைமுறைகளாகக் குடிமக்கள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்ட அவர்களது அன்றாட வாழ்வின் பல்வேறு அம்சங்களைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளது.
இரண்டாவதாக, அரசுக்கும் கட்சிக்குமான வேறுபாட்டை அடியோடு மறைத்து குறிப்பான அரசியல் நோக்கத்தை நிர்வாகத்திற்கு மாற்றாகக் கொண்டுவர முனைப்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மூன்றாவதாக, கூட்டாட்சி அமைப்பிலிருந்து ஏகாதிபத்திய அரசாக இந்தியாவை மாற்ற ஏதுவாக நமது அரசியலமைப்புச்சட்டத்தில் சில பிரிவுகளை மாற்றியமைக்க கடும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
அந்தரங்கத் தேர்வுகளின் மீது சமூகத் தடைகளை விதிக்க ஆரம்பித்தது முதல், புதுதில்லியில் புதிய அரசு பதவியேற்ற ஓராண்டுக்குள்ளேயே வேலைகள் தொடங்கி விட்டன, விட்டுக்கொடுக்க முடியாத உரிமைகளால் பெறப்பட்ட இச்சுதந்திரங்களை சட்டத்திற்கு அப்பாற்பட்ட முறையில் குடிமக்களிடமிருந்து பிடுங்கத் தேவையானவை செய்யப்பட்டு வருகின்றன. தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலையில் இல்லாத சிறுபான்மையினர் (அ) தலித்துகளை அடித்தே கொல்லும் பல சம்பவங்களை வட இந்தியாவில் மே, 2015 முதல் நாம் பார்த்துக்கொண்டு வருகிறோம்.
2018ஆம் ஆண்டுக்குள் இத்தகைய தேர்ந்தெடுத்து ‘அடித்துக் கொல்லும்’ நிகழ்வுகள், நலிந்த பிரிவுகளைச் சேர்ந்தவர்களையும் “வெளியாட்க”ளையும் கும்பலாகச் சேர்ந்து தாக்கும் சம்பவங்களாக மாற்றப்பட்டு விட்டன. இவ்வெண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில் பசுவதைக்கெதிரான குரல்களும் அதிகமாகிவிட்டன. இதில் காவல் துறையின் பாராமுகத்தைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. தில்லியின் திஸ்ஹஸாரி நீதிமன்ற வளாகத்தில் 2016 பிப்ரவரியில் நிகழ்ந்தது போல காவல் துறை அதிகாரத்தை யோசனையற்ற சிலரிடம் ஒப்படைத்த நிகழ்வானது அசாதாரணமான ஒரு குழப்ப நிலையை உருவாக்கிவிட்டது. அல்வாரில் நிகழ்ந்த கொடூர நிகழ்வும் சட்டப் பாதுகாவலர்களின் மனிதாபிமானமற்ற நடத்தையை உறுதிசெய்கிறது. இன்னும் மோசமான நிகழ்வுகளும் உள்ளன. மென்மையானவராகவும், புத்திசாலியாகவும் கருதப்பட்ட மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா இத்தகைய நிகழ்வில் ஈடுபட்ட ஒருவரை நேரே சென்று பாராட்டியுளார்; மக்களின் கருத்தை அவர் எதிரொலித்ததாக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார். சட்டம் மறும் ஜனநாயகத்தின் ஆணிவேரான சட்டத்தின் ஆட்சி ஆகியவை கண்டுகொள்ளாமல் விடப்பட்டுவிட்டன.
நாம் பார்க்கும் மாற்றத்தின் இரண்டாவது காரணி இன்னொரு நிச்சயமற்ற நிலையாகும்: மக்கள் நிர்வாகத்தை விட கட்சி ஆட்சி செய்வது என்பது மிக முக்கியமாகப் போய்விட்டது. எதிர்பாராத, தேவையற்ற பணமதிப்பு நீக்கத் திட்டமானது கறுப்புப் பணமே இல்லை என்ற (தவறான) தோற்றத்தைக் காட்டியதுடன் பலரின் இன்னுயிரையும் மாய்த்துவிட்டது. தேசப் பொருளாதாரத்துக்கு ஏற்படுத்திய நன்மையைவிட ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கும் அதன் உறுப்பினர்களுக்கும்தான் அதிக லாபத்தை இத்திட்டம் தந்துள்ளது. ஊழலை ஒழிக்க வேறு வழியில்லை என நம்புமாறு மக்கள் கோரப்பட்டதால் இது நிச்சயமாகக் குயுக்தியான அரசியல் காய் நகர்த்தல்தான்.
நாட்டின் பொருளாதாரச் செழுமை எத்திசையில் சென்றுகொண்டிருக்கிறது? நாட்டின் மாபெரும் செல்வந்தர்களான 1 சதவீதம் பேர் 2010ஆம் ஆண்டில் நாட்டின் மொத்தச் செல்வ வளத்தில் 40.3 சதவீதத்தைக் கொண்டிருந்தார்கள். அது இரண்டு ஆண்டுகளில் 58 சதவீதமாக வளர்ந்திருக்கிறது. அதாவது, தேசத்தின் செல்வ வளம் பரவலாகவில்லை. மாறாக, நாட்டின் செல்வம் மிகச் சிலரது கைகளில் சேரும் போக்கு அதிகரித்துவருகிறது. ‘த கார்டியன்’ பத்திரிகை குறிப்பிட்டதுபோல் நாட்டின் ‘உயர் பணக்காரர்களின் இந்த அபரிமிதமான வளர்ச்சி’யானது பொருளாதார முன்னேற்றத்தில் ஏழைகளை அடியோடு புறக்கணிக்கிறது. அது மட்டுமல்ல. இது ஒரு வகையில் ‘சுத்தமாக்கும்’ செயல். அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி தரும் சட்டங்களில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களினால் ஒளிவுமறைவு அதிகமாகியுள்ளது. நமது கட்சிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கக்கூடிய நிதியுதவிக்கும் (கடந்த காலங்களில் பெற்ற நிதி உள்பட) சட்டரீதியான அங்கீகாரம் தரப்பட்டுவிட்டது; இதனால் ஏற்படக்கூடிய அரசியல் நிகழ்முறையின் மீதான அந்நியத் தாக்கம் பற்றிக் குடிமக்களுக்குத் தெரியவராது என்பதால் இது மிகவும் கவலைதரும் நிலைமை என்றுதான் சொல்ல வேண்டும்.
அரசியல் கட்டமைப்பைக் கட்டுக்குள் கொண்டுவரும் தனது முயற்சியில் ஒவ்வொரு தேர்தலாக வென்று வரும் பாஜக, ஒவ்வொரு மாநிலமாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் (தேர்தலில் பெரும்பான்மை பலம் பெறாவிட்டாலும்) கொண்டுவந்துள்ளது.
குடிமக்களின் அந்தரங்கத் தகவல்களைக் காப்பாற்றுதல் பற்றிய அரசியலமைப்பு பெஞ்ச்சின் தீர்ப்பை மீறி நமது அந்தரங்கங்களை ஆக்கிரமித்த பாஜக அதை வெட்ட வெளியில் கொண்டுவந்து விட்டது. பிரதமரின் கருத்துகள் இணையம், மொபைல்போன் வழியாக வீடுகளுக்கும் பள்ளிகளுக்கும் சென்று சேருகின்றன. தேவையற்ற விதமாக ஆதார் கார்டானது நமது அந்தரங்க விஷயங்களைக் ‘கட்டுப்படுத்த’ப் பயன்படுத்தப்பட்டுள்ளது; இதற்குச் சொல்லப்பட்ட காரணம் என்னவென்றால், அனைத்து விவரங்களும் சேவை தரும் அனைவருக்கும் தரப்பட்டால் அரசின் நிர்வாகம் இன்னும் ‘சிறப்பாக’ இருக்கும் என்பதுதான். சமூக ஊடகத்தைக் கண்காணிக்க அரசுக்கு ஒரு கட்டமைப்பு தேவைப்படுகிறது; உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கில் ‘சமூக ஊடகத்தைக் கண்காணிக்க அரசு விரும்பினால், இந்தியா ஒரு கண்காணிப்பு நாடாக ஆகிவிடும்’ என்றார் ஒரு நீதிபதி. இதையனைத்திற்கும் மேலாக இதைக் கண்டிக்கும் எவரையும் பயமுறுத்த ஒரு கூட்டமே இணையத்தில் தயாராக இருக்கிறது!
அரசியலமைப்புக் கட்டமைப்புகளை சட்ட விரோதமாக மாற்றியமைக்கு முயற்சியானது ‘சீர்திருத்தத்தின்’ மூன்றாவது அலகாகும். அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 109, 110-ஐ மீறி ‘ஆதார் மசோதாவை’ ஒரு ‘நிதி மசோதா’வாகக் காட்டி, மாநிலங்களவை ஒப்புதல் தேவையில்லை (அங்கு பெரும்பான்மை பாஜகவுக்கு இல்லை) என அம்மசோதாவைச் சட்டமாக்கி விட்டனர். UPSC உட்பட பல காலங்காலமாக இருக்கும் பல அரசியலமைப்பு நிர்வாக, அதிகாரக் கட்டமைப்புகளை மாற்றக்கோரும் தேவையற்ற பல ஆலோசனைகளும் வரத் தொடங்கிவிட்டன. தில்லியிருந்து பயிற்சி பெற்ற 800 அதிகாரிகளை வளர்ச்சிப் பணிகளை அடிமட்ட நிலையில் முடுக்கிவிட அனுப்பியுள்ளது அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற எடுக்கப்பட்டுள்ள தெளிவான முயற்சியாகும்.
நாட்டின் கூட்டாட்சி முறையை மாற்றி, மத்திய யதேச்சாதிகாரக் கட்டுப்பாட்டு முறைகளை வலுப்படுத்த நினைப்பது மிகவும் தீவிரமான பிரச்சினையாகும். தில்லி நிர்வாகத்தில் உச்சநீதிமன்ற ஆணைகளை அலட்சியம் செய்து இதற்கான ஒரு உதாரணம். ‘ஒரு தேசம், ஒரு தேர்தல்’ கோஷமானது இதற்கான மிக அநியாயமான உதாரணம். இதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் குறுக்கபப்டுவதுடன் இடைத்தேர்தல் மூலமாக ஆட்சியை மாற்றியமைக்கும் மக்களின் உரிமையும் நிரந்தரமாகப் பறிக்கப்பட்டுவிடும். இத்தகைய தேர்தல்களின் ஆரம்பநிலைக்குப் பின்னர், சில மாநிலங்களில் அரசுகள் மக்களின் ஆதரவை இழந்தால் அவைகளை மத்திய அரசு எப்படி மாற்றியமைக்கும்? அந்தந்த மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி பல ஆண்டுகள் நடக்கும் என்பதுதான் இதற்கான ஒரே பதில். அதாவது, மத்திய அரசின் ஆட்சி மறைமுகமாக அரங்கேறும்.
மத்திய, மாநிலத் தேர்தல்களைச் சேர்த்து நடத்துவதால் செயல்திறன் கூடும், செலவு குறையும் என்பவையெல்லாம் தவறான வாதங்கள். தனித்தனியாக நடத்துவதைச் சேர்த்து நடத்தினால் மட்டும் எப்படிக் குறையும்? மத்திய அரசுக்கான தேர்தலைச் சாராமல் ஒவ்வொரு மாநிலமும் தனக்கான தேர்தலை நடத்திக்கொள்ளும் நடைமுறையை விடப் புனிதமான விஷயம் எதுவுமில்லை. தேர்தல் பற்றிய அறிவிப்பு வந்தவுடன் அரசின் எல்லாச் செயல்பாடுகளும் முடங்கிவிடுவதால் அடிக்கடி / தனித்தனியாக நடக்கும் தேர்தல்களால் நிர்வாகம் முடங்கிவிடும் என்பது சரியான பார்வையல்ல; இது உண்மையும் அல்ல. தேர்தல் விதிகளில் அவ்வாறு சொல்லப்படவும் இல்லை.
அரசு, கட்சி இரண்டுக்குமிடையிலான வேறுபாட்டை ஒழிக்க நினைப்பது மிகவும் ஆபத்தான போக்காகும். இந்த அரசு அப்படித்தான் செய்கிறது. தேர்தல் சமயங்களில் பிரதமர் நிர்வாகத்தைப் புறந்தள்ளிவிட்டுத்தான் பல நாட்கள் தனது பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். அரசின் நான்காண்டு முன்னேற்ற அறிக்கையைக் கட்சித் தலைவர் வாசிக்கிறர். எண்ணெய் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர பெட்ரோலியம் அமைச்சர் வெகு விரைவில் அனைவரையும் சந்திப்பார் என்ற தகவலைத் தருவதே இவர்தான்!
கிறுக்குத்தனங்களுக்குப் பின்னால் துல்லியமான திட்டம் உள்ளதா? இந்தச் செயல்களுக்குப் பின்னால் ‘புதிய உலகை உருவாக்குதல்’, நமது கூட்டாட்சி அமைப்பை ஒரு கட்சியின் ஆதிக்கம் கொண்ட ஒற்றை அதிகார அமைப்பாக மாற்றுதல் முதலான திட்டங்கள் இருக்கும் என்றே தோன்றுகிறது. ஜனநாயக இந்தியாவானது மகத்தான பன்மைத்துவத்தால் ஒன்றுபட்டுள்ளது. பாஜக தன் திட்டங்களில் வெற்றி பெற்றால் இந்த நாடு, பெரும்பான்மைவாதம் கோலோச்சும் ஒற்றப் பரிமாணம் கொண்ட கறாரான நாடாகக் கூடிய சீக்கிரம் மாறிவிடக்கூடும் !
அப்ஜித் சென்குப்தா
(அபிஜித் சென்குப்தா முன்னள் இந்திய அரசுத்துறைச் செயலாளராவார்.)
நன்றி: தி வயர்
https://thewire.in/politics/narendra-modi-bjp-amit-shah-elections
Totally vicious & unfounded allegations. Wire is a big danger to India. Those who believe in them could lead the country to disaster.
wire is the ant bjp magazine …do not repeat this kind of opinion
ஜூனுன்தமிழில்மாற்றம்வந்தால்இந்தவகைக்கட்டுரைகள்படிப்பதற்கு நன்றாக இருக்கும்