அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதாவை பொன்.மாணிக்கவேல் கைது செய்திருப்பது அறநிலையத்துறை உள்வட்டாரங்களை நன்கு அறிந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
‘காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் மூலவர் ஒன்று இருக்கிறது. இதற்கு, ஒரு உற்சவர் இருப்பதுதான் ஆகம விதி. ஆனால், தொன்மையான உற்சவர், 2009-ல் காஞ்சி மடத்தால் செய்து தரப்பட்ட உற்சவர் 2015ம் ஆண்டு முத்தையா ஸ்தபதி, கூடுதல் ஆணையர் கவிதா மற்றும் ஆணையர் ஆகியோரின் மேற்பார்வையில் செய்யப்பட்ட ஒரு உற்சவர் என்று தற்சமயம் 3 உற்சவர் சிலைகள் தற்போது இருக்கின்றன. 93-ம் ஆண்டு இத்திருக்கோயிலில் தொன்மையான சோமாஸ்கந்தர் சிலையிலிருந்த சிறிய கந்தர் சிலை மட்டும் களவாடப்பட்டுள்ளது. சிவகாஞ்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கண்டுபிடிக்க முடியவில்லை என்று வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த கந்தர் சிலை எங்குள்ளது, எந்த வெளிநாட்டு மியூசியத்துக்குக் கடத்தப்பட்டுள்ளது என்பதை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு தற்போது கண்டறிந்துள்ளது. அந்தச் சிலையைத் திருப்பித்தருவதாக சம்பந்தபட்ட மியூஸியத்தினர் கூறியுள்ளனர்.
குறைந்தபட்சம் 100 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மையான சோமாஸ்கந்தர் சிலை பெரிய அங்கங்கள் முகம், நெஞ்சு, தொடை எதுவும் பின்னமாகாமல், கைவிரல் நகம் மற்றும் காது நுனி பகுதிகளில் லேசான சேதத்துடன் வழிபாட்டில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில்தான், 2009ம் ஆண்டு ஒரு சோமாஸ்கந்தர் சிலையும், ஏலவார்குழலி அம்மன் சிலையும் செய்யப்பட்டுள்ளது. அடுத்து, கூடுதல் ஆணையர் கவிதா, முத்தையா ஸ்தபதி மற்றும் ஒரு சில ஸ்தானிகர்கள் எல்லாம் சேர்ந்து தொன்மையான சோமாஸ்கந்தர் சிலை பின்னமாகிவிட்டது என்று ஒரு விஷயத்தைக் கிளப்பியுள்ளனர். இதை முத்தையா ஸ்தபதியிடமே கொடுத்து கருத்துரையும் கேட்டுள்ளனர். சில ஸ்தானிகர்கள் ஒத்துழைக்க மறுக்கவே, பரம்பரையாக செய்துவரும் வேலையை காலி செய்து விடுவோம் என்று மிரட்டி பணியவைத்துள்ளனர். இதையடுத்துதான், புதிதாக சோமாஸ்கந்தர் சிலை செய்வதற்கான பணிகள் நடந்துள்ளன. இதற்காக வசூலிக்கப்பட்ட தங்கத்தில்தான் மோசடி நடந்துள்ளது. புதிதாக செய்யப்பட்ட சிலையில், துளிகூட தங்கம் இல்லை என்பதைத்தான் ஐ.ஐ.டி நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கையாகக் கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் தான் கவிதா கைது நடந்திருக்கிறது” இது தான் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலிசார் கூறும் புகார்.
இதை ஆதாரமாக வைத்து தான் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதாவை கைது செய்திருக்கிறார்கள். சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிதாவின் வீட்டிற்கு வந்த காஞ்சிபுரம் சிவகாஞ்சி காவல்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்கு வரச்சொல்லி அழைத்திருக்கிறார்கள். ‘சம்மன் இருக்கிறதா’ என்று கவிதா கேட்டிருக்கிறார். சம்மன் எதுவும் இல்லாத போலீசார், அவரை தங்களுடன் வரச்சொல்லி கேட்டிருக்கிறார்கள். அப்போது அங்குவந்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், கவிதாவை கைது செய்து கும்பகோணம் கோர்டில் ஆஜர்படுத்தியிருக்கிறார். கவிதா கைதுக்கான வாரண்ட் கூட அவர்களிடம் இல்லை. முறையாக விசாரணைக்குக் கூட அழைக்கப்படாமல் தான் கவிதாவின் கைது அரங்கேறியிருக்கிறது. காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் இந்த வழக்குக்காகப் போடப்பட்ட எப்.ஐ.ஆரில் கூட கவிதாவின் பெயர் இல்லை. இப்படி சம்மனும் அனுப்பாமல், எப்.ஐ.ஆரும் இல்லாமல் தான் பொன்.மாணிக்கவேல் கைது படலத்தை நடத்தியிருக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கவிதாவின் ஜாமின் மனு விசாரணைக்கு வந்தபோது, பொன்.மாணிக்கவேலிடம் நீதிபதிகள் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்டனர். சம்மன் அனுப்பாமல் எதற்கு விசாரணை என்று நீதிபதிகள் கேட்டிருக்கிறார்கள். மேலும், ஒரு வருடத்துக்கு முன் போடப்பட்ட வழக்கு இது, அதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பொன்.மாணிக்கவேல் ஆதாரத்தை சமர்பிக்காமல், கால அவகாசம் கேட்டிருக்கிறார். பொன்.மாணிக்கவேலை எச்சரித்த நீதிபதிகள்’ ஆதாரத்தை வரும் திங்கட்கிழமை சமர்பிக்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றிருக்கிறார்கள்.
அப்படி என்றால் உரிய ஆதாரம் இல்லாமல் தான் கவிதா கைது செய்யப்பட்டிருக்கிறாரா..?
இதுகுறித்து அறநிலையத்துறையினர் கூறும்போது ” அறநிலையத்துறையின் திருப்பணிக்கு கவிதா தான் தலைமை அதிகாரி. 1998ல் அறநிலையத்துறையில் வேலைக்கு சேர்ந்த கவிதாவுக்கு தற்போது கூடுதல் ஆணையர் எனும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுவே அறநிலையத்துறையில் பலருக்கு வயிற்றெரிச்சலை உண்டாக்கியிருக்கிறது. அறநிலையத்துறையில் ஊழல் செய்த சிலரை வெளிச்சம் போட்டுக்காட்டியவர் கவிதா. அதனால் தான் இவரை பழிவாங்க வேண்டும் என்ற காரணத்துக்காக அறநிலையத்துறையில் சில அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் தான் இவர் சம்மந்தப்பட்ட முக்கிய பைல்களை எடுத்து பொன்.மாணிக்கவேலுக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
அறநிலையத்துறையில் சட்ட வழக்குகளைப் பார்க்கவே ஒரு இணை ஆணையர் இருக்கிறார். ஆனால் கவிதா கைதுக்கு எந்தவிதத்திலும் துறை ரீதியாக நீதிமன்றத்தை நாட சிறு துரும்பைக்கூட அவர் அசைக்கவில்லை”.
விஷால் நடித்த ‘இரும்புத்திரை’ படத்தின் இயக்குனர் மித்ரன், கவிதாவின் மகன். இரும்புத்திரை படம் மித்ரனின் 8 வருட உழைப்பு. ஆனால் கவிதா மீது பொறாமை கொண்ட சிலர், மோசடி செய்த பணத்தில் தான் இந்தப்படத்தை எடுத்ததாக வாய் கூசாமல் கூறி வருகிறார்கள். இரும்புத் திரை திரைப்படம் குறித்தும், லைக்கா நிறுவனத்தோடு இரும்புத் திரை தொடர்பாக விஷாலுக்கு ஏற்பட்ட உடன்பாடு குறித்தும் சவுக்கிலேயே கட்டுரை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கவிதாவின் மகள் தற்போது ஆஸ்திரேலியாவில் மேற்படிப்பு படித்து வருகிறார். அதற்காக கவிதா குடும்பம் 30 லட்ச ரூபாய் வங்கியில் கல்விக் கடன் பெற்றிருக்கிறார்கள். இதற்கான ஆவணங்களை வங்கியில் இருந்து எளிதாக எடுக்க முடியும்.
ஆனால் இதையும் சிலை, லஞ்சப்பணத்தில் தான் மகளை வெளிநாட்டில் படிக்க வைக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
காஞ்சிபுரம் சிலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தபோது, நாளிதழ்களில் கவிதாவைப் பற்றி செய்திகள் வரத்துவங்கியது. அதற்காக தன்னிலை விளக்கம் ஒன்றை கமிஷனர் ஜெயாவுக்குக் கடிதமாகக் கொடுத்திருக்கிறார் கவிதா. அதில் காஞ்சிபுரம் சிலை விவகாரம் குறித்து சில தகவல்களையும் கொடுத்திருக்கிறார். ஆனால் கமிஷனரோ அந்தக் கடிதம் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. அவர் மட்டும் சரியான சமயத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் அறநிலையத்துறைக்கு எந்தவிதப் பிரச்சனையும் வந்திருக்காது.
கவிதா கைதானதும் அறநிலையத்துறையில் உள்ள பல அதிகாரிகள் கைதாவர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதில் மிக முக்கியமானவர் மற்றொரு கூடுதல் ஆணையரான திருமகள். இவரோடு சேர்த்து இன்னும் சில அதிகாரிகளும் அதே வாரத்தில் கைதாகலாம் என்றிருந்த நிலையில் தான் சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ.க்கு மாற்றி கொள்கை முடிவு எடுத்தது தமிழக அரசு. கொள்கை முடிவு எடுத்தாலும் பொன்.மாணிக்கவேலின் தலையீட்டை குறைக்கவே மறுநாளே அரசாணைப் பிறப்பித்தது தமிழக அரசு.
இந்த அரசாணைக்கான கருத்துருக்கள் ஒரே நாளில், பொருளாதார குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபி, தமிழக டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் அலுவலகங்களுக்கும், முதல்வர் அலுவலகத்துக்கும், ஆளுனர் மாளிகைக்கும் சென்று, ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் பேசுகையில், “ பொது வெளியில் பேசப்படுவது போல, பொன் மாணிக்கவேல், நேர்மையான அதிகாரியெல்லாம் கிடையாது.
அவர் ராமநாதபுரத்தில் டிஎஸ்பியாக இருந்தபோதுதான் அவருக்கு திருமணமானது. அவர் திருமணத்துக்கு, ராமநாதபுரம் மற்றும் கீழக்கரையை சேர்ந்த பல கடத்தல்காரர்கள் வந்து பல விலை உயர்ந்த பரிசுகளை அளித்தனர். அப்போதைய டிஜிபி, கடத்தல் காரர்கள் காவல்துறை அதிகாரியின் திருமணத்துக்கு வந்தது எதற்காக என்று இவரிடம் விளக்கம் கேட்டு ஒரு நோட்டீஸே அனுப்பினார்.
இவர் செங்கல்பட்டில், உளவுத் துறை டிஎஸ்பியாக இருந்தபோது, ஒரு வீட்டில், ஆதாயத்துக்காக கொலை நடக்கிறது (murder for gain). அந்த இடத்துக்கு சென்ற சம்பந்தப்பட்ட ஆய்வாளர், உளவுத் துறை டிஎஸ்பியான பொன் மாணிக்கவேலிடம் இந்த தகவலை சொல்கிறார். உளவுத் துறை டிஎஸ்பி, இது குறித்து, மேலிடத்துக்கு தகவல் சொல்லி, அறிக்கை அனுப்ப வேண்டும். அதுதான் உளவுத் துறை அதிகாரியின் பணி. ஆனால் பொன் மாணிக்கவேல், சம்பவ இடத்துக்கு நேராக சென்று, அந்த வீட்டில் இருந்த பீரோவை திறந்து, 80 பவுன் நகைகளை எடுத்து, தனது இரு பேன்ட் பாக்கெட்டுகளிலும் போட்டுக் கொண்டார்.
பின்னாளில், ஜாங்கிட், சென்னை புறநகர் ஆணையரானபோது, இந்த விவகாரத்தை தோண்டி எடுத்தார். விரிவான அறிக்கை தயார் செய்து, உள்துறைக்கு அனுப்பினார். அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பின்னர், உயர் அதிகாரிகள் மீதான விசாரணை, காலாவதியாவது போல, இதுவும் காலாவதியானது” என்றார்.
ஓய்வு பெற்ற ஒரு மூத்த காவல் துறை அதிகாரி இது குறித்து பேசுகையில், “உயர்நீதிமன்றம், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் இருந்து பொன் மாணிக்கவேலை ஏன் மாற்றினீர்கள் என்றுதான் கேள்வி எழுப்பியதே தவிர, பொன் மாணிக்கவேல், எந்த அதிகாரிக்கும் கட்டுப்பட்டவர் அல்ல என்று கூறவே இல்லை. ஐஜி அந்தஸ்தில் இருக்கும் பொன் மாணிக்கவேல், தனது உயர் அதிகாரிகளான, கூடுதல் டிஜிபி மற்றும், டிஜிபிக்கு வழக்கு விசாரணை குறித்த விபரங்களை அனுப்பியிருக்க வேண்டும்.
ஆனால் கடந்த ஒரு ஆண்டாக, பொன் மாணிக்கவேல், இவர்தான் தமிழக டிஜிபி போல நடந்து கொள்கிறார். எந்த உயர் அதிகாரியையும் மதிப்பதில்லை. எந்த அறிக்கை கேட்டாலும் அனுப்புவதில்லை. வழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து எந்த உயர் அதிகாரியிடமும் சொல்வதில்லை. எந்த அதிகாரி எதை கேட்டாலும், நான் கோர்ட்டுல பதில் சொல்லிக்கிறேன். உங்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என்று கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ?
இத்தகைய ஒழுங்கின்மையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவனும் புரிந்து கொள்ளாமல், இத்தகைய ஒழுங்கின்மையை ஊக்குவிப்பது வேதனையானது. காவல்துறை என்பது, ஒரு யூனிஃபார்ம்ட் சர்வீஸ். ஒழுக்கமும், உத்தரவுக்கு கீழ்படிதலும், இதன் அடிப்படை.
இத்தகைய ஒழுங்கின்மையை வளர்த்து விட்டால், நாளை, கான்ஸ்டபிள் சப் இன்ஸ்பெக்டர் சொல்வதை கேட்க மாட்டான். சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் சொல்வதை கேட்க மாட்டான். இன்ஸ்பெக்டர் டிஎஸ்பி சொல்வதை கேட்க மாட்டான். இதற்கு எது எல்லை.
இப்படி வாய் கிழிய பேசும் பொன் மாணிக்கவேல், இது வரை, கடந்த ஒரு ஆண்டாக, ஒரே ஒரு வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளாரா ? ஒரு நல்ல காவல்துறை அதிகாரிக்கு அழகு, ஒருவரை கைது செய்வதல்ல. வழக்கின் புலனாய்வை முடித்து, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதுதான் ஒரு நல்ல அதிகாரிக்கு அழகு. ஒருவரை கைது செய்வதை, யார் வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால், புலனாய்வை முடித்து, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து, நீதிமன்றத்தில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தருவதுதான், திறமை. அந்த திறமை துளியும் அற்றவர் பொன் மாணிக்கவேல். வெறும் படோடாபம், விளம்பரம், பகட்டு மட்டுமே பொன் மாணிக்கவேல்.
பொன் மாணிக்கவேல், சீருடையில் உள்ள ஒரு கிரிமினல்” என்று கோபத்தோடு சொன்னார் அந்த அதிகாரி.
இந்த விவகாரத்தில், அறநிலையத் துறை மற்றும் சிலை கடத்தல் பிரிவு ஆகிய இருவருமே, மாற்றி மாற்றி குற்றம் சுமத்துகிறார்கள். உண்மை இதன் நடுவே இருக்கிறது. ஒரு நாள் அந்த உண்மை வெளி வரும் என்று நம்புவோம்.
*சிலை மோசடி வழக்கில் கைது செய்யப் பட்டிருக்கும் இந்து சமய அற நிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவின் பின்னணி:*
*ஜெயலலிதாவையே சிறைக்கு அனுப்பியவர் கவிதா! புதிய தகவல்கள்*
சிலை மோசடி வழக்கில் கைது செய்யப் பட்டிருக்கும் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவின் பின்னணி, ஆச்சர்ய ரகம்!
*ஆம், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டு தரப்பிலுமே நேரடியாக மேலிடங்களுடன் பேசும் அளவுக்கு செல்வாக்கு மிக்கவராக வலம் வந்திருக்கிறார் கவிதா.*
*’சசிகலாவின் உறவினர் என்பதால் தான் கவிதாவை தமிழக அரசு அவரைப் பழிவாங்குகிறது என ஒரு தரப்பினரும், இல்லையில்லை தமிழக அரசு கவிதாவை காப்பாற்ற முயற்சிக்கிறது. அதனால்தான் வழக்கையே சி.பி.ஐ-க்கு மாற்றுகிறது என மற்றொரு தரப்பினரும் சொல்லி வருகிறார்கள்.*
இந்நிலையில், கவிதாவின் உண்மையான பின்னணி என்பது குறித்து விசாரிக்கக் களத்தில் இறங்கினோம். தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தாமல் சிலர் நம்மிடையே பேசினார்கள்.
*யார் இந்த கவிதா?*
திருநெல்வேலியைப் பகுதியை பூர்விகமாகக் கொண்டவர் கவிதா. பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த இவர், சட்டப்படிப்பு முடித்து சென்னையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். *பாரம்பர்ய தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்த இவர்*, தமிழகத்தையே அதிரச் செய்த *கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடியவர்.*
👇👇👇👇👇👇👇
*கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே வழக்கு:!*
ஜெயலலிதா முதன் முறையாக முதல்வரானபோது அவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன. அதில் கொடைக்கானலில் உள்ள பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு மிக முக்கியமானது. 1991-96 ஆட்சிக்காலத்தில் இந்த ஹோட்டலுக்கு விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கியதாக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, உள்ளாட்சித்துறை அமைச்சர் செல்வ கணபதி ஆகியோர் மீது புகார் எழுந்தது. *தி.மு.க தரப்பில் தொடரப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு 2000ல் வழங்கப்பட்டது. அதில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஓராண்டு சிறைத் தண்டனையும் அறிவிக்கப்பட்டது.* இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 2001ம் ஆண்டு மேல்முறையீடு செய்து விடுதலை- யானார் ஜெயலலிதா. *இந்த வழக்கில் சீனியர் வழக்கறிஞர் ஒருவரிடம் ஜூனியராக பணியாற்றியவர் கவிதா. சீனியருக்கு முக்கிய தரவுகளை எடுத்துக் கொடுப்பது, சீனியர் வராதபோது தானே வழக்காடுவது என முக்கிய பங்காற்றி யிருக்கிறார். ஒரு வழக்கறிஞராக இந்த வழக்கில் கவிதா கட்டிய தீவிரமும் அவரது விடா முயற்சியும் அளப்பறியது.*
👇👇👇👇👇👇👇
*குடும்பப் பின்னணி:*
*கவிதாவின் தந்தை, முன்னாள் முதல்வர் அண்ணாதுரைக்கு இந்தி மொழி பெயர்ப்பாளராகவும், உதவியாளராகவும் பணியாற்றியவர்.* *அதனால் தி.மு.கவில் கவிதாவின் குடும்பம் செல்வாக்கோடு இருந்தது.*
*வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில், சரவணன் என்ற வழக்கு அறிஞரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார் கவிதா. சரவணன், சசிகலாவுக்கு உறவினர். அதாவது, சசிகலாவின் அண்ணி இளவரசியின் சம்பந்தியான திருச்சியைச் சேர்ந்த பொறியாளர் கலியபெருமாள், சரவணனின் சித்தப்பா. இதனால் திருமணத்திற்கு பிறகு அ.தி.மு.க விலும் கவிதாவுக்கு செல்வாக்கு ஏற்பட்டது.*
*அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள நெருக்கத்தால் போயஸ் கார்டனில் சர்வ சாதாரணமாகச் சென்றுவரக் கூடியவராக இருந்தார் சரவணன்.*
கவிதாவின் மகன் மித்ரன், விஷால் நடித்த ‘இரும்புத்திரை’ படத்தின் இயக்குநர்.
👇👇👇👇👇👇👇
*தி.மு.க., அ.தி.மு.க உறவு!*
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை மற்றும் தன் தந்தைக்கும் உள்ள நெருக்கத்தின் காரணமாக, தி.மு.க ஆட்சியின்போது அதன் முக்கிய பிரமுகர்களிடம் சர்வசாதாரணமாக பேசக்கூடியவராக இருந்தார் கவிதா. அதேபோல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால், கணவர் சரவணன் மூலமாக, அந்தக் கட்சியினரிடமும் சர்வசாதாரணமாகப் பழகி வந்தார். *தி.மு.கவைச் சேர்ந்த பெரியகருப்பன் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது கவிதாவுக்கு பணிமாறுதல் கொடுக்கப்பட்டது.* *அப்போது முதல்வர் கருணாநிதியே தலையிட்டு அந்த உத்தரவை ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது.* கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் கவிதாவின் தந்தைக்கு தமிழ்நாடு குடியிருப்பு வாரியம் மூலமாக மயிலாப்பூரில் வீடும் வழங்கப்பட்டதாம்.
👇👇👇👇👇👇👇
*அரசுத்துறையில் அசுர வளர்ச்சி!*
கவிதாவின் வளர்ச்சி பற்றி பேசும் அறநிலையத்துறை முன்னாள் ஊழியர்கள் சிலர், *”தனபால் இணை ஆணையராக இருந்தபோது, அவர் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே கவிதாவுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.* *ஆணையராக தனபால் பதவி உயர்வு பெற்றபோது, திருப்பணி இணை ஆணையராக கவிதாவை உயர்த்தினார்.* அதன் பிறகு திருப்பணி கூடுதல் ஆணையராக பதவி உயர்வு பெற்றார் கவிதா. *சென்னையில் உள்ள எல்லா அதிகாரிகளுக்கும் பணிமாறுதல் கிடைக்கும். ஆனால், கவிதாவும், தனபாலும் அதிகார பலத்தால் சென்னை யிலேயே கோலோச்சி வந்தனர்.* *கவிதாவின் அசுர வளர்ச்சி அவருடன் பணியில் சேர்ந்தவர்களை பிரமிப்படைய செய்தது.அவரை எதிர்த்துக் கொண்டு யாரும் அங்கே பணியாற்ற முடியாத சூழல் உருவானது. அதனால், அவருக்கு இணையான அதிகாரிகள் பலரே… கப்சிப் ஆகிவிட்டனர்.*
👇👇👇👇👇👇👇
*கைது செய்தால் காட்டிக் கொடுப்பேன்!*
இந்த விவகாரம் பற்றி ஆரம்பம் முதல் கவனித்துவரும் ஆன்மிக அன்பர்கள் சிலர், *”பழநியில் இருக்கும் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் புதிதாக செய்யப்பட்ட முருகன் உற்சவர் சிலை முறைகேடு வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜரான இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபால் தற்போது வீட்டுச் சிறையில் இருக்கிறார்.*
*காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் உற்சவர் சிலை மோசடி மற்றும் பழனி தண்டாயுதபாணி சிலை மோசடி ஆகிய வழக்குகளில் முத்தையா ஸ்தபதி வீட்டுக் காவலில் இருக்கிறார்.*
*கவிதாவை கைது செய்யத் தகுந்த ஆதாரம் வேண்டும் என்பதற்காக, முத்தையா ஸ்தபதி உள்ளிட்டவர்களுக்குச் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினர் வலை விரித்தார்கள்.*
*முத்தையா ஸ்தபதி கொடுத்த வாக்கு மூலத்தை வைத்தே கவிதாவிடம் விசாரணையைத் தொடங்க நினைத்தார்கள். ஆனால், பலம் பொருந்திய கவிதாவை, அத்தனை எளிதாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினரால் நெருங்க முடிய வில்லை. ‘என்னைக் கைது செய்தால், அனைவரையும் காட்டிக் கொடுத்து விடுவேன்’ என உயர் அதிகாரிகள் பலருக்கும் மிரட்டல் விடுத்ததாகக்கூறப்படுறது.*
*இதனால் முக்கிய அமைச்சர் ஒருவர், பொன். மாணிக்க வேலிடம் பேச்சு வார்த்தை நடத்திப் பார்த்தார். ஆனால், பொன்.மாணிக்கவேல் பின்வாங்குதாக இல்லை.*
கடந்த 7 மாதமாகச் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு ஒத்துழைப்பு தராமல் இருந்துவந்தார் கவிதா. *ஏகாம்பரநாதர் கோயில் உற்சவர் சிலை விஷயத்தில் 50 லட்சம் வாங்கினார் கவிதா என்று அர்ச்சகர் ஒருவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில்தான் கடந்த 31ம் தேதி கவிதாவைக் கைது செய்துள்ளனர்.*
இந்த நிலையில், ‘எல்லாமே கமிஷனர் சொன்னார்… நான் வெறும் கையெழுத்து மட்டுமே போட்டேன்’ எனக் கும்பகோணம் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறாராம் கவிதா.
👇👇👇👇👇👇👇
*கவிதாவை கைது செய்ததும் தமிழக அரசே நிலை குலைந்துவிட்டது. அவர் வாயைத் திறந்தால் தி.மு.க மற்றும் அ.தி.மு.கவில் உள்ள பல முக்கிய புள்ளிகளும், முன்னாள் – இந்நாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் இதில் சிக்குவார்கள்.*
*அது, ஆட்சிக்கே கூட உலை வைக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுக்கும் என்பதால்தான், வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றும் முடிவைத் தமிழக அரசு எடுத்துள்ளது” என அதிர்ச்சி கிளப்பு கிறார்கள்.*
Savukku becomes plastic..😁😁😁
No need to write this post unless support kavitha and her department.ig pon.manickavel is corrupted pointed out here accountable.
Is this written by Savukku? Appears to be supporting the criminals, and degrading the investigator.
ஒரு தலை பட்சமானா பதிவு. முன் காலத்தில் Idol wing என்பது ஒரு பிடிக்காத காவல் அதிகாரியை பழி வாங்க ஏற்படுபட்ட போஸ்ட். இது தமிழ்நாட்டுக்கே தெரியும். ஆனால் பொன். மாணிக்கவேல் போன்றோர் அங்கும் வேலை செய்ய ஆரம்பித்தவுடன் உண்மை கசிக்கிறது. இதுவரை கைப் பற்ற சிலைகள் ஏன் வேறு யாராலும் கண்டுபிடிக்க வில்லை. பொன்.manickavelai விசாரணை செய்யும் அதிகாரிகளின் முன் வரலாறு தெரியுமா. கோவிலை கண்காணிக்க வேண்டிய பொறுப்பில் இருந்த அற நிலைய த்துறை ஏன் ஒவரண்டும் ஆய்வு செய்யவில்லை. ஒரு நபர் குற்றம் செய்திருப்பார் என்பதற்கு முகாந்திரம் இருந்தால் ஒரு ஏட்டு கூட வார்ரன்ட் இல்லாமல் கைது செய்யலாம்.தவறான கைது செய்திருதால் நீதி மன்றம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். மத்திய அரசு குட்கா கேஸ் பற்றிய ரிப்போர்ட் எங்கிருந்து (சசிகலா) எடுக்கப்பட்டது. இதில் அப்படிப்பட்ட அதிகாரிகளிடம் ரிப்போர்ட் வேறு கேட்கிறார்கள். ரிப்போர்ட் அனுப்பி இருந்தால் கூட ரிப்போர்ட் வரவில்லை என்று சொல்ல்வார்கள். பொன். மாணிக்க வேல் கொலை வீட்டில் திருடினார் என்பது கீழ்தரமான குற்றசாட்டு. d.s.p யாக இருந்த போது செய்ததாக சொல்லும் அவர் I.G யாக்கி retire ஆகும் வரை visaraniyaa. மீண்டும் விசாரியுங்கள் சங்கர்
சவுக்கு நடுநிலை பிறழ்கிறார்.
THAMBI, with a heavy heart I announce this. You were a great source of information for the past 8 years. But what you did yesterday is totally against any journalistic ethics. I’m not discussing the qualities of the person for whom you did this. As it is YOUR right, as OWNER, to decide what to do with your website, I have nothing to say on what you did yesterday except that it is UNPROFESSIONAL and UNETHICAL. I guess I have successfully unsubscribed from SAVUKKU for blocking your site yesterday to the visitors. I sincerely thank you for all you have done in helping me to understand and know various things related to Tamilnadu politics and Administration and allowing me to express mine on them.. THANK YOU- Scorpio.
// மயிலாப்பூரில் உள்ள கவிதாவின் வீட்டிற்கு வந்த காஞ்சிபுரம் சிவகாஞ்சி காவல்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்கு வரச்சொல்லி அழைத்திருக்கிறார்கள். ‘சம்மன் இருக்கிறதா’ என்று கவிதா கேட்டிருக்கிறார். சம்மன் எதுவும் இல்லாத போலீசார், அவரை தங்களுடன் வரச்சொல்லி கேட்டிருக்கிறார்கள். அப்போது அங்குவந்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், கவிதாவை கைது செய்து கும்பகோணம் கோர்டில் ஆஜர்படுத்தியிருக்கிறார். //
சிவ காஞ்சி காவல் துறையினரிடம் ” சம்மன் ” இருக்கிறதா என்று கேட்ட கவிதா …பாென் . மாணிக்கவேலிடம் அந்த கேள்வியை கேட்காமல் ஏன் கைதுக்கு இணங்கினார் என்பதை சவுக்கு விளக்குவாரா ..?
fraud savukku……………….
//ஆனால் கடந்த ஒரு ஆண்டாக, பொன் மாணிக்கவேல், இவர்தான் தமிழக டிஜிபி போல நடந்து கொள்கிறார். எந்த உயர் அதிகாரியையும் மதிப்பதில்லை. எந்த அறிக்கை கேட்டாலும் அனுப்புவதில்லை. வழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து எந்த உயர் அதிகாரியிடமும் சொல்வதில்லை. எந்த அதிகாரி எதை கேட்டாலும், நான் கோர்ட்டுல பதில் சொல்லிக்கிறேன். உங்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என்று கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ?//
Yov Savukku yennaya ollara (vazhakam pola). This is a court monitored probe so why the hell should Pon Maanickavel give a status report to DGPs who for sure will pass on the information to their Government and make this case a joke…
//பொன் மாணிக்கவேல், சீருடையில் உள்ள ஒரு கிரிமினல்” என்று கோபத்தோடு சொன்னார் அந்த அதிகாரி.//
Ippadi sonna athigaari yoda sothu vevaram evalavu thalaiva, check panni sollungalen… Neenga thaan periya appa tucker aache why dont you check what all properties Pon Maanickavel has and where his children are studying… Evana oruthan Nallavanu peru edutha pothum odane avana character assassination panna vendiyathu…. Pon Maanickavel was hated by both dmk and admk, this itself is a proof to believe he is lot better than the corrupt police dept.
என்ன சவுக்கு… எங்கியோ இடிக்குது… இதுவே ஒரு சாதரண இந்திய குடி மகனுக்கு நடந்து இருந்தா உங்கள் சவுக்கு பேசுமா ? S V சேகர் கு பிடிவாரென்ட் இருந்து ம் கைது பண்ணல… அப்போ உங்க ஊடகம் எங்க போனது… யாருக்கு தாளம் போடுறீங்க… தப்பு இல்லனா… நிரூபிக்கட்டும்.
H R & C E DEPT. IS TO LOOT TEMPLE AND PUBLIC MONEY IN ONE FORM OR THE OTHER.
SAVUKKU NADUNILAILIERNDHU THADAM MARUKIRAR
சவுக்கு எப்போ திருட்டு முன்னேற்ற கட்சிக்கும், டுபாக்கூர் காங்கிரஸ் கட்சிக்கும் 2 வருடம் முன்னாடி இருந்து சொம்பு அடிக்க ஆரம்பித்ததோ அப்போவே நடுநிலை தவறிவிட்டது.
Coemmentslerundhu theriyarathu ennanna….. proper investigation nadakkalai….. Pradip . V. Philip IPS mancikavelukku munnadi irundhar… I think he was to the core HONEST…..avarum neraiya nalla kariyam panninar. aanalum … thilagavathy periodlirundho or adhukku appuramo IDOL wingle irundha karuppu aadukal …. thirudar kuuttathode serndu SILAI KADATHAL THADUPPU panname adhukku edhira velai parthirukaanga…. oru muslim Inspector kuuda odi odi kadaisiya maatinar….
Kevalamaana vishayam ennanna …. koil bronze statues record edhuvum comprehensiveaa GOVT departments kitte ille…. cinemakaranai koiville padam edukka vidura ASI yum oozhal peruccalinga neranjathuthaan.
#pesina kaadhile ratham vara maathiri uthama vesham poduvanunga……
FOR comprehensive database they depend on ONLY ONE SOURCE…. FRENCH INSTITUTE OF PONDICHERRY…. kittathatta 75- 100 years photo collection irukku ange … of EACH AND EVERY STATUE of TN temples ….meticulous work….
ipo theriyura vishayam ennanna ………andha velaikku aacci nacciyar sarippadamaattaanga…. THAMBI KALATHULE IRANGUNGA….
The complainant,the accused and the non-accused but real THIEVES behind this ARREST have all to be put under LIE-DETECTOR TESTS IMMEDIATELY.NO ONE TO GIVE FALSE STATEMENTS ANYMORE PLEASE.
Because Pon.Manickavel is not christian like Sahayam. If He is christian, Savukku talk in another tome. Hindus
becareful with them. we have to suspect everybody.
Yes, Savukku manytimes support Wrong side only.
savukku enna pirachanai.. IG case detailsa yarukiteyum share panalanua….
சவுக்கு ” கவிதா மவன் , மவ கதைய எல்லாம் தேவை இல்லாமல் எடுக்கிறார் ……..சொம்பு வேற அடிக்கிறார்
Always, it has not been easy to be honest,
If you do good, people will accuse you of selfish ulterior motives,
If you are successful, you will win false friends and true enemies,
The good you do today will be forgotten tomorrow,
Honesty and frankness make you more vulnerable,
But…,
The darker the night, the brighter the stars,
The deeper the grief, the closer is God!!!
Let her come out clean, unscathed of this quagmire SOON.
That is my only prayer.
We thought usually you investigate and put a story. But it doesn’t look like that. Why you didn’t investigate about this yet?
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதாவை கைது செய்திருக்கிறார்கள். சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிதாவின் வீட்டிற்கு வந்த காஞ்சிபுரம் சிவகாஞ்சி காவல்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்கு வரச்சொல்லி அழைத்திருக்கிறார்கள். ‘சம்மன் இருக்கிறதா’ என்று கவிதா கேட்டிருக்கிறார். சம்மன் எதுவும் இல்லாத போலீசார், அவரை தங்களுடன் வரச்சொல்லி கேட்டிருக்கிறார்கள். அப்போது அங்குவந்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், கவிதாவை கைது செய்து கும்பகோணம் கோர்டில் ஆஜர்படுத்தியிருக்கிறார். கவிதா கைதுக்கான வாரண்ட் கூட அவர்களிடம் இல்லை. முறையாக விசாரணைக்குக் கூட அழைக்கப்படாமல் தான் கவிதாவின் கைது அரங்கேறியிருக்கிறது. காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் இந்த வழக்குக்காகப் போடப்பட்ட எப்.ஐ.ஆரில் கூட கவிதாவின் பெயர் இல்லை. இப்படி சம்மனும் அனுப்பாமல், எப்.ஐ.ஆரும் இல்லாமல் தான் பொன்.மாணிக்கவேல் கைது படலத்தை நடத்தியிருக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கவிதாவின் ஜாமின் மனு விசாரணைக்கு வந்தபோது, பொன்.மாணிக்கவேலிடம் நீதிபதிகள் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்டனர். சம்மன் அனுப்பாமல் எதற்கு விசாரணை என்று நீதிபதிகள் கேட்டிருக்கிறார்கள். மேலும், ஒரு வருடத்துக்கு முன் போடப்பட்ட வழக்கு இது, அதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பொன்.மாணிக்கவேல் ஆதாரத்தை சமர்பிக்காமல், கால அவகாசம் கேட்டிருக்கிறார். …>>>>> அதிகார துஸ்பிரயோகம். நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாதது மாணிக்கவேலின் நடத்தையில் சந்தேகத்தை கிளப்புகிறது. உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் கைது செய்வது தனிமனித உரிமைகளை மீறும் செயல் மட்டுமன்றி அதிகாரத்திமிர் என்றே கொள்ளப்படும். நீதிபதிகள் எப்படி இதனை அனுமதிக்கின்றனர்,,,.???. இதுபோன்ற கைதுகள் எதிர்காலத்தில் பல்வேறு வரம்புமீறிய செயல்களுக்கு அடிப்படையாகிவிடும். கைதினை கண்டிப்போம்.
தான்தோன்றிதனமாக நடந்தகொண்டுள்ளார் பொன்.மாணிக்கவேல். உண்மை விரைவில் வெளிவரும்போது மாணிக்கம் பித்தளை என்பதுநிரூபணமாகும்,
This article targeting a honest off pon.manickavel. true come soon. dont propaganda lies.
முற்றிலும் உண்மை
I was wondering why you did nothing on this subject so far and was supposed to ask on that. If pon monickavel has done some wrong on Kavitha’s arrest why the court has not given her relief so far? Which means he did’n and was well within his powers. I agree that obeying the order is must in uniformed services. But when he is directly monitored by HC on this case why he should report his officers whom he might have not had trust with. I agree the basic principle in investigation. MISTRUST THE OBVIOUS. If someone trumpets too much that HE IS HONEST…. HE COULD BE THE OPPOSITE and faking and hiding the TRUE CHARACTER. But let those saying that come out with evidences to expose him and take him to task..NO ONE STOPS them from doing that. Who stopped gutka rajendran from doing so. See…. from the way the govt reacts to pon manickavel and on IDOL cases the public think that he is on the right track and govt on wrong….. Today Individuals with some good character or spine are revered with great respect because the ENTIRE SYSTEM – TOP TO BOTTOM -IS ROTTEN….
you correct 200%. savuku is lie about pon.manickavel
Rk. apdi sola vendam….. avar perile edhum thappu irundhaa veliye kondu varattum…..savukku kuuda uyirai panayam vacci sila kariyam senjirukkar….. samuthayathukkaakathaan….. aanalum…. whne it comes to christian institutions’ lootings avar biased apdinnu oru karuthu irundhukitte irukku romba varushamaa….THAT doesnt mean we should not accept his other great and really really daring hard works….WE RESPECT HIM FOR HIS SPINE..marrathai sakiththu kolkirom….. adhupolethaan….. PON Manickavelum mathikkapadukirar…..
Indha article tries to give alternative view to the popular perception but lacks credibility due to inherent poor coverage….Frist part the newspaper collection , second part kavitha family fed information…. third part on IG and the info fed by his police friends on ..so he simply did a courier boy service which he normally is not .. how this lacks credibility??….. it didnt go into detail on the cases and the truth in them and the back ground and the reason for the public outrage on the happenings of govt reactions to scuttle ….As there is NO serious investigation by him it failed….
ooops…idhu savukku ezhuthaliye…. yaaroooo…. nachiyaaraame!!!!!!!!!!
Super
Sadasivam August 5, 2018 at 9:14 am
சவுக்கு நடுநிலை பிறழ்கிறார்.
இதனை நாட்களாக போன் மாணிக்கவேலை குறை சொல்லாமல் திடீருன்னு இப்ப என்ன அவசரம் அவசரமாக குறை கண்டு விட்டீர்கள் சவுக்கு. நடுநிலை தவற வேண்டாம். நல்ல பெயர் இருக்கு. காப்பாற்றிக்கொள்க.
you correct
Ithuku peruthan pulanaivu. Sabaas Sankar . antha karupu aadai viravil kandupidipeergal enru kaathirukirom. Nanri.
சவுக்கு,அறநிலையத்துறையில் தணிக்கைப் பிரிவு என்று ஒன்று உண்டு..கோடிக்கணக்கான தொகைகள் புரளும் இத்துறையில் தணிக்கை செய்வதற்கு என்று அது ஏற்படுத்தப்பட்ட பிரிவு..
துரதிர்ஷ்டவசமாக இப்பிரிவின் தணிக்கை அறிக்கைகள் வெளியில் தெரிவதில்லை.. பல குளறுபடிகள் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன..
அவை சரி செய்யப்படாமல் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்றன..
ஏனென்றால் இப்பிரிவு துறையின் இன்னொரு பிரிவாக உள்ளது…
யாருக்கு எதிராக தணிக்கை செய்யப்படுமோ அவரே இத்தணிக்கைப் பத்திகளை நீக்கும் அதிகாரம் படைத்தவராக இருக்கிறார்…தணிக்கையின் நோக்கமே இதனால் சிதறடிக்கப்படுகிறது…
உள்ளாட்சி நிதித் தணிக்கை துறைப் போல் தனித்துறையாக இயங்கினால் ஒரளவு இக்குறைபாடுகளுக்கு விடிவு கிடைக்கலாம்..
சவுக்கு இதற்கு வெளிச்சம் கொடுக்க வேண்டும்..
முற்றிலும் உண்மை
சவுக்கு நடுநிலை பிறழ்கிறார்.
unmai
சவுக்கு நடுநிலை பிறழ்கிறார்.