இந்தியாவின் மகத்தான மேடையாக செங்கோட்டை அமைகிறது. மேலும் அது நாட்டின் பிரதமருக்கு மட்டும் உரித்தானதாக இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை ஆகஸ்ட் 15 அன்று, மதிப்பு மற்றும் போற்றுதலுக்கு உரிய வகையில், நாட்டின் அடையாளச் சின்னமாகத் தன்னை உயர்த்திக்கொள்வதற்கு இந்த மேடை வாய்ப்பளிக்கிறது. ஆட்சியில் இருக்கும் பிரதமர், தன்னை சிந்தனைக்குரிய, அறிவார்ந்த, புத்திக்கூர்மை மிக்க, பெருந்தன்மை மிக்க தேசியத் தலைவராக முன்னிறுத்திக்கொள்ள வாய்ப்பளிக்கிறது.
பிரதமராக நான்கு ஆண்டுகளாக நரேந்திர மோடி, இந்த மேடையைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, தேசிய வழிகாட்டியாகத் தனக்கான தோற்றத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். நிச்சயமாக நான்கு ஆண்டுகளாக போராட்டம்தான். இந்த முறை செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து பேசியபோது, தேசியத் தலைவராகத் தனது மதிப்பும் நம்பகத்தன்மையும் குறைந்திருக்கிறது என்பதை ஆழமாக உணர்ந்தவராக இருந்தார். அதன் காரணமாக அவர் கவனமான தேர்வில் ஈடுபட்டு, தீவிர பாரபட்சத்தன்மையைத் தவிர்த்தார். துவேஷமான தாக்குதல்களைத் தவிர்த்தார். அசிங்கமான வாசகங்கள் இல்லை. தேசியத் தலைவர்கள் மீது தாக்குதல் இல்லை. யாரையும் கைநீட்டிக் குறை சொல்லவில்லை. இவ்வாறு செய்ததன் மூலம் அரிதாகிவிட்ட தனது நாகரீக விகிதத்தை மோடி கொஞ்சம் மீட்டுக்கொண்டிருக்கிறார்.
இருப்பினும், சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா அறிந்த ஆகச் சிறந்த மக்கள் நலவாழ்வு அரசின் பிரதமராகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ள அவர் மிகவும் மெனக்கெட்டார். அவரது வார்த்தைகளில், சுகாதாரம், மின்சக்தி, குடிநீர், கல்வி, மருத்துவம், திறன்கள், காப்பீடு, தகவல் தொடர்பு எல்லாவற்றையும் அளிக்கும் அரசராக இருக்கிறார். குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம் எனும் கோஷத்துடன் பிரதமர் பொறுப்பைத் துவங்கியவருக்கு, வாக்குறுதிகளையும் தான் முன்வைத்த கனவுகளையும் நினைவுகூர நேர்ந்தது. புதிய இந்தியாவின் சிந்தாத்தவாதிகளால் கடுமையாக நிந்திக்கப்பட்ட வெகுமக்களுக்கான திட்டங்களுக்கே திரும்பிச் செல்லும் வகையில் அவருடைய அணுகுமுறை அமைந்திருந்தது.
இருப்பினும், அவரது 90 நிமிட உரையில் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்தது, கடைசி பத்து நிமிடங்கள்தான். அப்போது, கேட்பவர்கள் நரேந்திர மோடி எனும் ஆளுமையின் மிகையான தகவல்களுக்கு இலக்கானார்கள். அந்த பத்து நிமிடங்களில் மோடி செய்தது போல, வேறு எந்த பிரதமரும் தேசிய மகத்துவத்தை இந்த அளவுக்குத் தனிப்பட்ட திட்டமாக ஆக்கிக்கொள்ளவில்லை. இதற்கு முன்னர் வேறு எந்த பிரதமரும், இத்தனை வெளிப்படையாக தேசிய நன்மதிப்பைத் தன்னுடையதாக இப்படிக் கையகப்படுத்திக்கொண்டதில்லை. நரேந்திர மோடி இந்திய அரசின் தலைவராக இருக்கும்வரை, நாம் தேசிய மறுமலர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம் என்பதே அவர் முன்வைத்த செய்தியின் சாரம். அதிகாரத்தின் மீதான மிகைத்தன்மைக்கான தெளிவான, கச்சிதமான கொள்கை அறிக்கை இது. ‘என் நாடு’, ’என் நேர்மையான வரி செலுத்துபவர்கள்’, ’என் சிப்பாய்கள்’ என முடிவில்லாமல் நான், என் என அவர் குறிப்பிட்டவிதம் சில்லிட வைத்தது. சர்வாதிகார அலமாரியில் வீற்றிருக்கும் உளவியல் ஏக்கத்திற்கான எச்சரிக்கை நாட்டு மக்களுக்கு இதன் மூலம் விடுக்கப்பட்டுள்ளது.
இப்போது மிகவும் பழகிவிட்ட, தவிர்க்க இயலாத தன்னுடைய தனிப்பட்ட தன்மையைப் பிரதமர் மீண்டும் சுட்டிக்காட்டத் தவறாததில் எந்த வியப்பும் இல்லை: அதே அரசியல் சாசனம், அதே அதிகாரவர்க்கம், அதே வளங்கள், 2014க்கு முன்னர் இருந்தது போல் அதே மக்கள் என அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், தான் வழங்கிய மாற்றத்திற்கு உரிய தலைமையால் மக்கள் அடிப்படையான மாற்றத்தை உணர்ந்திருப்பதாக அவர் வாதிட்டார். எல்லா வகையான எல்லையில்லா சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கும் இது வழக்கமானதுதான்.
ஒரு தலைவராக மோடி இரண்டு அடிப்படை குணங்களை பெற்றிருக்கிறார்- விற்பனையாளரின் கவர்ச்சியான பேச்சு மற்றும் ஒரு தேர்ந்த கதைசொல்லியின் ஆற்றல். புத்திசாலித்தனமாக மற்றும் வலிமையாக, கவனமாகத் தேர்ந்தெடுக்க தகவல்கள், தனக்கு உதவும் வாதங்கள் மூலம் அவர், தன்னுடைய மேற்பார்வையில் “உருவான, நிலையான நல்லிணக்கம் மிக்க” சமூகத்தின் செழுமையான சித்திரத்தை உருவாக்கிக் காட்டினார். பெயரிடப்படாத வெளிநாட்டு ஆட்சியாளர்கள் மற்றும் நல்லாட்சிக்கான அவர்கள் சான்றிதழ்கள் காண்பிக்கப்பட்டு, பொருளாதாரம் மீண்டு வருகிறது என்பது தேசத்திற்கு உணர்த்தப்பட்டது. அடையாளம் காணப்படாத, தேதியிடப்படாத பழைய கால அளவுடன் வசதியாக ஒப்பிடப்பட்டு, அடுத்த 30 ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி அதை உருவாக்கக்கூடிய ஆறாவது பெரிய பொருளாதாரம் பற்றியும் சுட்டிக்காட்டப்படது.
நல்ல காலம் பிறக்கும் என நம்பியுள்ள மக்களுக்கானது இந்தப் பேச்சு. உத்திரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலக் காப்பகங்களில் நடைபெறும் குற்றங்களாகட்டும் அல்லது டாலர் – ரூபாய் நாணயமாற்று விகிதத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத சரிவாகட்டும், அல்லது நாட்டின் பல்வேறு பகுதிகளில் கும்பல் வன்முறை தலைவிரித்தாடுவதாகட்டும், இப்படிப் பல பகுதிகளிலிருந்து கவலை தரும் செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் சந்தேகத்திற்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு, அரசு கட்டுப்பாட்டில் இருக்கிறது எனும் நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த நல்ல செய்தி மட்டும் கொண்ட உரை அமைந்தது. நாட்டை அதன் அவநம்பிக்கையிலிருந்து மீட்டாக வேண்டும் என்பதே இந்த உரையின் நோக்கம்.
பிரதமர் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நேர்மையாளர்கள் உருவாகியிருப்பது பற்றிப் பேச மெனக்கெட்டார். மகிழ்ச்சியாக வரி செலுத்த ஆர்வமுடன் இருக்கும், சட்டத்தை மதித்து நடக்கும், நல்ல குடிமக்களின் வளர்ச்சியாக இதை அவர் முன்வைத்தார். அதிகார வர்க்கத்தின் முடிவில்லாத சுரணையின்மை, மீண்டும் வந்திருக்கும் மிரட்டும் இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியம் பற்றி எல்லாம் கவலைப்படாமல் பிரதமர் தனக்கான சொந்த மண்டலத்தில் இருந்தார். நாடு தனக்குள் அமைதியாக இருப்பதாக அவர் கூறினார். அவர் கூறிவிட்டார் அல்லவா, அப்படித்தான் இருக்க வேண்டும்.
துன்புறுத்தப்பட்ட குடிமக்கள் அதிகாரிகளுடனான தங்கள் சொந்த கசப்பான அனுபவத்தை நம்பாமல் இருக்கவும், அலட்சியம் செய்யவும் தயார்படுத்தப்பட்டனர். எல்லோரும் தங்களை வருத்தும் பிரச்சினைகளைத் தாண்டிப் பெரிய சித்திரத்தைப் பார்க்கும்படி தூண்டப்பட்டனர். நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் நேர்மையான மற்றும் அர்ப்பணிப்பான காப்பாளர் தலைமையில் இருக்கிறார் என்பதுதான் அந்தச் சித்திரம்.
வெளிநாட்டு வரி சொர்க்கங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான டாலர்களை மீட்டு வந்து நாட்டு மக்களுக்கு விநியோகிக்கும் வாக்குறுதி பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. எந்த ஒரு அரசாலும் மேற்கொள்ளப்படாத மோசமான நடவடிக்கையான பணமதிப்பு நீக்க நடவடிக்கை பற்றிய புகழ்பாடலும் இல்லை. நல்ல காலம் இதோ வந்துவிட்டது என்றோ அல்லது இனி வரப்போகிறது என்பது பற்றியோ உறுதிமொழியும் இல்லை.
ஒரு பிரதமராக நரேந்திர மோடி, பிரம்மாண்டமான பாதுகாப்பற்ற தன்மை, மலைக்க வைக்கும் வேலையில்லாத் திண்டாட்டம், ஏற்க முடியாத ஏற்றத்தாழ்வு, எழுச்சி பெறும் பலவீனமான சராசரித்தன்மை, சிக்கலான பொருளாதாரம் ஆகியவற்றிலிருந்தெல்லாம் தன்னைத் துண்டித்துக்கொண்டுவிட்டார் என்று புரிந்துகொள்ளலாம். பிரதமர் தனது கட்சியின் தேர்தல் வெற்றியை நாட்டின் நலத்திற்குச் சமமாகக் கருதுகிறார் என நம்ப வாய்ப்பிருக்கிறது.
இந்த சிக்கலான தேசத்தை சூழந்திருக்கும் அசிங்கங்களையும் அநீதிகளையும் பிரதமர் நன்கு உணர்ந்திருப்பதாகவே கொள்ளலாம். இருந்தாலும், 1.2 பில்லியனுக்கு மேல் மக்கள் கொண்ட இந்தியாவைத் தனது கட்டளைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப, தந்து பேச்சாற்றல் மூலம் நம்பச்செய்துவிடலாம் என அவர் மடத்தனமாக நம்பிக்கொண்டிருக்கிறார். சுவாரஸ்யமான முயற்சிதான் ஆனால் விபரீதமானது.
ஹரீஷ் காரே
(ஹரீஷ் காரே, தில்லியில் வசிக்கும் பத்திரிகையாளர். அண்மைக் காலம் வரை தி டிரிபியூன் தலைமை ஆசிரியராக இருந்தார்.)
நன்றி: தி வயர்
https://thewire.in/politics/narendra-modi-a-dream-merchant-extraordinaire-at-work
Country was in ICU. after 4 years come out from ICU in to NORMAL ward. it will come out from hospital Soon.
Mr Chelladurai,the NDA govt only wanted 60 days time to “rectify”the imagined evils of previous regime.Are you accepting their failure to take any “remedial” steps for the past 4 years.The PM or CM cannot claim credit for “any”good development.The cabinet has collective responsibility to govern.So the article writer is justified .
சங்கர் சார், தாங்கள் கூறியது ஓரளவு உண்மைதான். ஆனால் இதுவரை நாட்டை இந்த நிலைமைக்கு கொண்டு வந்ததை௫ ஆண்டில் சரி செய்துவிட முடியுமா. உதரணமாக ஒரு வீடு இடிக்கப்பட்ட நிலையில் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டால் அதை குறிப்பிட்ட நாட்களில் சரி செய்ய முடியுமா ஒரு பெரிய தேசம் . கல்வி அறிவில் மிக பெரிய அளவில் பின்தங்கி உள்ளது. அவர்களை குஷப்ப்புவது எளிது. நான் நான் என பிரதமர் கூறியதை ஒரு கட்டுரை எழுதும் அளவுக்கு எடுத்து செல்வதும் குறை கூறுவதும் கட்டுரையளுருக்கு ஆஷாகள்ள
Fact Mr.Chlladurai.
India was a very poor and very disorganised country when the British left in 1947. Compare life expectancy, literacy rate, quality of education, agricultural output, etc in 1947 and today. Like all politicians, Congress party certainly indulged in corruption, cheats/loots, scandals, etc., it’s ignorant to say blame everything on them alone. India has largely progressed since 1947 (whether or not Congress played any role in India’s development).
So // உதரணமாக ஒரு வீடு இடிக்கப்பட்ட நிலையில் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டால் அதை குறிப்பிட்ட நாட்களில் சரி செய்ய முடியுமா ஒரு பெரிய தேசம் // is stupid argument.
Asking in a different way, are you saying India would have become heaven if power was handed to RSS/BJP since 1947?