கேரளா, வரலாற்றின் மிக மோசமான வெள்ளத்தில் சிக்கித் தவித்துவருகிறது. மாநிலம் நீளமான கடற்கரையைக் கொண்டிருப்பதாலும், பல நதிகளில் இதுவரை இல்லாத வெள்ளம் பெருக்கெடுத்ததாலும், மொத்த மாநிலத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள், ஆயிரக்கணக்கில் கால்நடைகள் பலியாகியுள்ளனர். வெள்ளக்காடாக இருக்கும் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கின்றனர். மாநிலங்களின் பல பகுதிகளில் வசிக்கும் நண்பர்களிடம் விசாரித்தபோது மத்திய அரசின் உதவி சொற்பமாக இருப்பதாகத் தெரிவித்தனர். அண்டை மாநிலமான கர்நாடகா ரூ.10 கோடி நிதி அளித்துள்ள நிலையில், மத்திய அரசு ஆகஸ்ட் 18ஆம் தேதி ரூ.500 கோடி மட்டும் தருவதாக அறிவித்தது.
இதுவரை மாநிலத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கப் போதுமான ராணுவ மற்றும் துணை ராணுவத்தினர் வந்து சேரவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது. கேரள மாநிலம், இடதுசாரி ஜனநாயக முன்னணியால் ஆளப்படுவதுதான் இதற்குக் காரணமா? ஒரு சில வடதுசாரிகள் ஐயப்பன் கோயில் விவகாரத்தில் மாநில அரசின் நிலைப்பாடு அல்லது தலித் பூசாரி நியமனம் காரணமாகத்தான் வெள்ளம் வந்தது என டிவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். எனில் கடந்த ஆண்டு பாஜக ஆளும் அசாமில் ஏன் வெள்ளம் வந்தது? பிரதமரின் மாநிலமான குஜராத்தில் ஏன் வெள்ளம் வர வேண்டும்? அசாமில் முஸ்லிம் அகதிகளுக்கு எதிரான நிலைப்பாடு அல்லது குஜராத்தில் தலித்களுக்கு எதிரான நிலைப்பாடு காரணமா?
இயற்கைப் பேரிடர் இதே அளவு இல்லாத மாநிலங்களுக்கு மத்திய அரசு தாராளம் காட்டியது ஏன்? கேரளா சுற்றுலா மையம். கடவுளின் சொந்த தேசம் என அழைக்கப்படுகிறது. கேரளாவை நேசிக்கும் மொத்த உலகமும் மத்திய அரசின் பாரபட்சத் தன்மையைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. கேரளாவை நேசிக்கும் சர்வதேச மக்கள், மாநிலம் விரைவில் மீண்டுவர வேண்டும் என விரும்புகின்றனர். கேரளச் சமூகம் துடிப்பானது; பனமுகத் தன்மை கொண்டது என்றாலும், இத்தனை பெரிய பேரிடரிலிருந்து போதிய அளவில் மத்திய அரசு மற்றும் சர்வதேச நிதி உதவி இல்லாமல் எப்படி மீண்டுவர முடியும்?
வலதுசாரி அறிவுஜீவியான குருமூர்த்தி கேரள அரசின் ஆன்மிக அணுகுமுறையே வெள்ளத்திற்குக் காரணம் என கூறியுள்ளார். அவரது குறும்பதிவைப் பாருங்கள்:
“இந்த வழக்குக்கும் (ஐயப்பன் மற்றும் பெண்கள்) மழைக்கும் இடையே ஒரு மில்லியனில் ஒரு பங்கு தொடர்பு இருந்தால்கூட, மக்கள், மீண்டும் சொல்கிறேன் மக்கள், ஐயப்பனுக்கு எதிராக வழக்கு தீர்ப்பளிக்கப்படுவதை விரும்ப மாட்டார்கள். இது மக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டது”.
ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவர் வசிக்கும் சென்னை நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதந்ததை அவர் அறிய வேண்டும். இத்தகைய மூடநம்பிக்கை அரசியலோடு அவர் அந்த நகரில் வசிப்பதுதான் காரணமா? பெரியார் அரசியல் கொள்கையை நம்பாமல், இது போன்ற மூடநம்பிக்கை கொண்டுள்ள சிலரால்தான் கடவுள் சென்னையை தண்டித்தாரா? இயற்கைப் பேரிடர், மரணம், பேரழிவு ஆகிய சந்தர்ப்பங்களில் எப்படி இத்தகைய மலிவான அரசியல் செய்ய முடியும்? இது போன்றவர்களிடமிருந்து இத்தகைய கருத்துக்கள் வருவதால்தான் மத்திய அரசு இப்படி நடந்துகொள்கிறதா? குருமூர்த்தி வெறும் சங்கி மட்டும் அல்ல. அவர் ரிசர்வ் வங்கியின் இயக்குநரும் ஆவார்.
கேரளா அது அமைந்துள்ள இடம் காரணமாக கடவுளின் தேசம் என அழைக்கப்படுகிறது. அதே சமயம், அதன் பூகோள அமைப்பு அதற்குச் சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா அல்லது விதர்பா போன்ற வறட்சிப் பகுதிகளில் வசிப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். நாட்டின் அழகிய நகரங்களில் ஒன்றான விசாகப்பட்டினம் 2014இல் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. எந்த உணர்வுள்ள மனிதரும், இது போன்ற பேரிடர்களை ஆளும்கட்சியின் கொள்கை அல்லது மூட நம்பிக்கை அல்லது மனிதர்களுடன் தொடர்புபடுத்த மாட்டார்கள். இத்தகைய பேரிடர்களை அறிவியல்பூர்வமாக அணுக வேண்டும்.
விசாகப்பட்டினத்தில் வெள்ளம் பாதித்தபோது, பாஜக, அதன் கூட்டணிக் கட்சி ஆட்சி சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. அவர் முதல் எதிரியாகிவிட்டார் என்றாலும் ஆந்திரப் பிரதேசத்தில் எந்த வெள்ளமும் இல்லை.
வறட்சி, பூகம்பம், வெள்ளம் போன்றவை இயற்கைப் பேரிடர்கள் என்பதையும், அவற்றுக்குக் கொள்கை கிடையாது என்பதையும் இந்துத்துவ சக்திகள் அறிய வேண்டும். குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியில் மோசமான பூகம்பம் ஏற்பட்டபோது, எண்ணற்ற மக்கள் எல்லாவற்றையும் இழந்தனர். அவர்களுடைய கடவுள் ஏன் இப்படிச் செய்தார்? இதில் மோசம் என்னவெனில் அப்போது குவித்த சர்வதேச நிதி சங்கப் பரிவாரின் வலைப்பின்னலை வளர்க்கவும் பிரச்சாரத்திற்கும் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது. லண்டன் அமைப்புகள், இப்படி நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டறிந்தன. வெள்ள நிவாரணத்திற்கு வரும் நிதியை இடதுசாரி அரசு தவறாகப் பயன்படுத்தினாலும் நாம் எதிர்க்க வேண்டும். ஆனால் இது போன்ற நேரங்களில் கொள்கை சார்ந்த விரோதத்தைப் பாராட்டுவது தேச விரோதமாகும்.
கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மனிதர்கள், மாடுகள் மற்றும் அமைப்புகள் மற்றும் மாநிலத்திற்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என தேசிய, சர்வதேச அமைப்புகளைக் கேட்டுக்கொள்கிறேன். மத்திய அரசு அரசியல் விளையாட்டை நிறுத்திக்கொண்டு, இது ஒரு தேசியப் பேரிடர் என்பதால் எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும். இதை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும். இந்த மோசமான வேளையில் கேரள மக்களுக்கு உதவ வேண்டும் என சர்வதேச உதவி அமைப்புகளை கேட்டுக்கொள்கிறேன்.
காஞ்ச இல்லய்யா ஷெப்பர்ட்
(பேராசிரியர் காஞ்ச இல்லய்யா ஷெப்பர்ட், இயக்குனர், சென்டர் பார் சோஷியல் எக்ஸ்க்லூஷன் அண்ட் இன்குலுசிவ் பாலிசி, மவுலானா ஆசாத் தேசிய உருதுப் பலகலைக்கழகம்.)
நன்றி: கவுன்டர் கரன்ட்ஸ்.ஆர்க்
(https://countercurrents.org/2018/08/19/while-kerala-is-under-flood-waters-the-right-wing-is-spewing-venom/)
Gurumurthy of Dinamani and now Tughlak has been a leading Professor in Sastra University and part and parcel of the Management. The University by virtue of its close proximity with the then President RV and a very close friend of the Kanchi Mutt is a self proclaimed intelligentia. He has professed that he has been the secret adviser of the then CM Jayalalitha and now in the advisory panel of the PM Modi. (Are these facts?). Also in the news that he is the person to decide the issue of Rajini’s political entry. Sastra University is in serious trouble by illegally occupying 58 acres of prime land of the Government and a High Court Judge reprimanded the University by saying ” teachings and preachings made from encroached soil would soil values and ethics”. Gurumurthy is part of this famous (?) University. Wither these pseudo thinkers(?)
The saddest part of it is that this pseudo thinker is a part time director of RBI and his supporters are saying that his presence in the RBI Board “will be helpful in obtaining loans for MSME sector”.After taking over the directorship,he has indulged in this type of politics.