ஆமா ஜி : என்ன ஜி போன வாரம் ஆளையே காணோம் ?
மாமா ஜி : அட நம்ப கலைஞர் இறந்த சமயத்துல நம்பளை பாத்தாலே அடி வெளுத்துடுவாங்க. அதான் வரல.
ஆமா ஜி : சரி என்ன ஆச்சி உங்களுக்கு. ரொம்ப நொந்து போய் இருக்கீங்க ?
மாமா ஜி : என்னத்த சொல்றது ஜி, நான் ஏழைத்தாயின் மகன்னு சொல்லிட்டு மோடி ஜி அடுத்த பிளைட்ட பிடிச்சு கிளம்பிட்டார். அவனவன் போடற மீம் பாக்க முடியல ஜி
ஆமா ஜி : இப்போ தானே ஜி பார்லிமென்ட் கூடுச்சு அதுக்குள்ளவா பிளைட் ஏறிட்டாரு ?
மாமா ஜி : பார்லிமென்ட் அது பாட்டுக்கு நடக்க போகுது ஜி அதுக்காக டூர் எல்லாம் கான்செல் பண்ண முடியுமா ?
ஆமா ஜி : இப்போ மோடி ஜி எங்க ஜி போயிருக்கார் ?
மாமா ஜி : உகாண்டா, ருவாண்டா, சவுத் ஆப்பிரிக்கா
ஆமா ஜி : ருவாண்டானு ஒரு நாடு இருக்குன்றதே சாமி சத்தியமா எனக்கு இன்னைக்கு தான் ஜி தெரியும், இதுக்காகவே மோடி இன்னும் ஒரு 10 வருஷம் ஆட்சி செய்யணும் ஜி
மாமா ஜி : அழுகாதீங்க ஜி. எனக்கு கூட படிக்கும் போது நாட்டோட பேரு எல்லாம் நியாபகம் இருக்காது, நம்ம மோடி ஜி ஒவ்வொரு ஊருக்கு போகும் போதும் நம்மல போட்டு சாத்துவானுங்க பாருங்க இந்த ஆண்ட்டி இந்தியன்ஸ், அப்படியே மனசுல நின்னுடும் .
ஆமா ஜி : சரி தான் ஜி, இனிமேல் எவனாவது மோடி ஜி வெளிநாடு போறதால என்ன நன்மைனு எவனாவது கேக்கட்டும். சரி ஜி இந்த முறை இத பத்தி நம்மளை எதுவும் கலாய்க்கலையா?
மாமா ஜி : என்ன ஜி இப்படி கேட்டுடீங்க தரமா செய்யறாங்க ஜி. மோடி ஜி இந்த வாட்டி ருவான்டா நாட்டுக்கு 200 மாடு அன்பளிப்பா குடுக்க போறாரு
ஆமா ஜி : நல்ல விஷயம் தானே ஜி, ருவான்டா மக்களுக்கும் நம்மளை போலவே மாடுன்னா ரொம்ப இஷ்டமா ஜி
மாமா ஜி : ஆமா ஜி அவனுகளுக்கு மாட்டு கறி சாப்பிடறதுனா அவ்வளவு இஷ்டம் . ருவாண்டா நாட்டில் ஏற்கனவே தரமான மாட்டுக்கறி தட்டுப்பாடாம், இப்போ போய் மாட்டை அவன் கையில் குடுத்தா சும்மா விடுவானா ?
ஆமா ஜி : என்ன ஜி இது நம்ம கோமாதாவுக்கு வந்த சோதனை ?
மாமா ஜி : உள்ளூரில் மாட்டை வாக்கிங் கூட்டிட்டு போனாலே நம்ம ஆளுங்க மாடு கடத்தறான்னு அடிச்சு கொன்னுடுவானுங்க? இவர் 200 மாட்டை பிலைட்டில் ஏத்தறது மட்டும் தெரிஞ்சுது அவ்வளவு தான்.
ஆமா ஜி : சரி ஜி நம்ம தர்ம யுத்தம் நிம்மி ஜியை பார்க்க போய் ரொம்ப அசிங்கமா போச்சே ஜி, மேடம் எவ்வளவு பிஸி இவரு பாட்டுக்கு கிளம்பி போனா எப்படி?
மாமா ஜி : என்ன ஜி பிஸி, ஊறுகா போடறதும் மெது வடை சுடுறதும் ஒரு பிஸியா? அதெல்லாம் சும்மா, ரிக்சா வண்டி வச்சிருக்கவர் எல்லாம் போய் பார்த்துட்டு வந்துட்டாங்க. தர்மாவுக்கு மட்டும் தான் அனுமதி இல்ல
ஆமா ஜி : தர்மா ஒண்ணு சொன்னாரே கவனிச்சீங்களா? அவரோட தம்பிக்கு உடம்பு சரி இல்லாத போது, ராணுவ ஹெலிகாப்டர் வச்சு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனதுக்கு நன்றி சொல்லத்தான் போனேன்னு சொன்னாரே, தர்மாவோட தம்பிக்கு எல்லாமா சலுகை தரமுடியும்
மாமா ஜி : என்ன ஜி சின்னப்புள்ள தனமா கேக்கறீங்க ? இப்போ போலீஸ் ஜீப்பில் பிள்ளைகளை ஸ்கூலில் விடுறது இல்லையா அது மாதிரி தான்.
ஆமா ஜி : அப்போ ஓக்கி புயலுக்கு ஒண்ணுமே பண்ணலையே ஜி ?
மாமா ஜி : ஓக்கி முக்கியமா ஒபிஎஸ் முக்கியமா ஜி ?
ஆமா ஜி : குரங்கணிக்கு கூட பொறுமையா தானே ஜி வந்தாங்க
மாமா ஜி : இருட்டு ஜி, மலை பாதை வேற என்ன பண்ண முடியும் ? இதென்ன விஜயகாந்த் படமா தலையில் டூம் லைட் எல்லாம் மாட்டிட்டு போக ?
ஆமா ஜி : அப்போ தாய்லாந்தில் மாட்டுன மாதிரி இங்க எவனாவது மாட்டுனா அவ்வளவு தான் அப்படி தானே ஜி ?
மாமா ஜி : மனுஷன் மாட்டுனா அவ்வளவு தான் ஜி , மாடு மட்டும் மாட்டட்டும் அப்போ பாப்பீங்க நம்ம முழு பலத்தை
ஆமா ஜி : சரி தான் ஜி, இந்த ரஃபேல் போர் விமானம் வேற வாங்கறாங்களே அதெல்லாம் தேவையா இப்போ ?
மாமா ஜி : தேவை தான் ஜி, புதுசா பேரிக்காய் ஊறுகா செய்யறாங்களாம் சீக்கிரம் கெட்டு போகுதாம். இப்போ நாடு முழுக்க 2 மணி நேரத்துல சப்ளை பண்ணனும்னா இதெல்லாம் வேணும் ஜி .
ஆமா ஜி : ஊறுகா விக்கறதுக்கு எல்லாமா ஜி ராணுவ விமானம் ?
மாமா ஜி : என்ன ஜி இப்படி கேட்டுடீங்க? 10 விமானம் இப்போ தான் ஓலால அட்டாச் பண்ணிருக்கோம். நல்லா கமிஷன் வருது ஜி
ஆமா ஜி : என்ன ஜி சொல்றீங்க ?
மாமா ஜி : இதுக்கே வாயை துறந்தா எப்படி ஜி? பீரங்கியை ஜானவாசத்துக்கு அனுப்பறதா கூட திட்டம் இருக்கு
ஆமா ஜி: இப்படி கண்ட இடத்துக்கு விமானத்தையும், பீரங்கியும் அனுப்பிட்டா எதிரிங்க அந்த நேரம் பார்த்து அடிச்சிருவானுகளே ஜி ?
மாமா ஜி : மோடி ஜி வந்ததுக்கு அப்பறம் நம்ம மேல கைவைக்கற தில்லு யாருக்காவது இருக்கா ஜி ? நாமளாவே கேக்கறதை குடுத்திடுவோம் ஜி
ஆமா ஜி : என்ன ஜி சொல்றீங்க ?
மாமா ஜி : கொஞ்ச நாள் முன்னாடி டோக்லாம் பிரச்னை பெரிசாச்சு, அவன் கைல காலுல விழுந்து கொஞ்ச நாள் சும்மா இரு குருநாதானு நிறுத்தி வச்சோம்
ஆமா ஜி : ஆமாம் ஜி, நம்ம நிம்மி ஜி கூட அவனுகளுக்கு ஹிந்தி சொல்லி குடுத்தாங்களே
மாமா ஜி : அதே தான், இப்போ எல்லாம் அடங்குனதுக்கு அப்பறம் சீனாகாரனுக டோக்லாம ஆட்டைய போட பாக்கறாங்க , நாம கம்முனு தானே இருக்கோம். எவனாவது கேட்டானா ?
ஆமா ஜி : சரி தான் ஜி . இந்த முஸ்லீம் ஜனத்தொகை அதிகம் ஆவதால் தான் அடித்து கொல்லும் சம்பவம் அதிகம் நடக்குதுன்னு நம்ம MP சொல்றாரே உண்மையா?
மாமா ஜி : இல்லையா பின்ன இவங்க கடவுள் கொடுத்ததுனு பெத்து போட்டுட்டு போய்டுவாங்க அப்பறம் வேலை குடுன்னு நம்மள போட்டு உலுக்குவானுக ஜி. நாட்டுக்கே இதெல்லாம் பெரும் சுமை ஜி
ஆமா ஜி : இதை சொன்ன MPக்கு எத்தனை குழந்தைங்க ஜி ?
மாமா ஜி : 4
ஆமா ஜி : நம்ம மோடி ஜி யோட கூட பிறந்தவங்க எத்தனை பேரு ஜி ?
மாமா ஜி : 5
ஆமா ஜி : அப்போ இது எல்லாம் ஜனத்தொகை கணக்குல வருமா ஜி இல்ல தேச வளர்ச்சிக்கான முயற்சில வருமா ஜி ?
மாமா ஜி : நீங்க பாஜக MLA என்ன சொல்லறாருனு பாருங்க, ஒவ்வொரு ஹிந்துவும் 5 பிள்ளையாவது பெத்துக்கணும், 2 ஆணுக்கு 2 பெண்ணுக்கு 1 எக்ஸ்ட்ரா
ஆமா ஜி : வெளியூர் போகும் போது ஜட்டி ஒண்ணு எக்ஸ்ட்ரா எடுத்து வைக்கலாம் அதுல ஒரு நியாயம் இருக்கு, குழந்தையில் எக்ஸ்ட்ரா எதுக்கு ஜி?
மாமா ஜி : ஜி இப்போ எல்லாம் குழந்தையை நம்ம இஷ்டத்துக்கு வளக்கறது ரொம்ப கஷ்டம். ஒண்ணு எவனாவது சாமியார் கூட்டிட்டு போய் மொட்டை அடிச்சு ஆசிரமத்துல உக்காரவச்சிடுவான், இல்ல எவனாவது லவ் ஜிகாத் பண்ணி கூட்டிட்டு ஓடறானுங்க.
ஆமா ஜி : சரியா சொன்னீங்க ஜி. நம்ம மோடி ஜி பேட்டியை பார்த்தீங்களா ஜி?
மாமா ஜி : ஆமா, வறுமையில் வாடியதால் தான் நன்றியோட இருக்கேன்னு சொன்னாரே
ஆமா ஜி : யாருக்கு நன்றியோட இருக்காராம் ஜி ? அதானிக்கா?
மாமா ஜி : ஜி என்ன நக்கலா? அவரு அத்வானிக்கே நன்றியோட இல்ல அதானிக்கா இருப்பாரு? எல்லாம் வரும்படி வரும் வரை தான் ஜி.
ஆமா ஜி : “நான் தொழில் அதிபர்களோடு பழகுவதற்கு தயங்க மாட்டேன்” அப்படினு சொன்னாரு பார்த்தீங்களா ஜி ?
மாமா ஜி : தயங்குனா காது மேலயே அடிப்பானுக ஜி. இப்போ கல்யாணத்துக்கு போய் மொய் வைக்கறீங்க, போட்டோ எடுக்கும் போது மேடையை விட்டு இறக்கி விட்டா இறங்குவீங்களா ?
ஆமா ஜி : வெட்டு குத்து ஆய்டும் ஜி
மாமா ஜி : அது போல தான் இதுவும் ஜி, நிரவ் மோடியை பத்திரமா அனுப்பி வைத்தோம் அப்பறம் போட்டோக்கு கூட நிக்கறதுல என்ன தயக்கம்
ஆமா ஜி : அப்பறம் இந்த மெஹுல் சோக்சினு யாரு அவரு ஜி ?
மாமா ஜி : அவரு நம்ம நிரவ் மோடி சொந்தக்காரன், எங்க போனானே தெரியலேன்னு உதார் விட்டோம். இப்போ அவர் ஆன்டிகுவா நாட்டில் இருக்கார்னு கண்டுபிடிச்சுட்டாங்க ஜி
ஆமா ஜி : அப்படி ஒரு நாடு இருக்கா ஜி ? நம்ம மோடி ஜி போயிருக்காரா ?
மாமா ஜி : உலக வரைபடத்தை விரிச்சு மழையில் வைங்க, எந்த நாடு எல்லாம் நனையாம இருக்கோ அங்க எல்லாம் மோடி ஜி போனது இல்ல
ஆமா ஜி : பிரமாதம் ஜி மேல சொல்லுங்க
மாமா ஜி : ஏப்ரல் 20ஆம் தேதி நம்ம மோடி ஜி ஆன்டிகுவா அதிபரோட டீ குடிச்சார் அடுத்த ஒரே வாரத்துல மெஹுல் ஜீக்கு ஆன்டிகுவா பாஸ்போர்ட் ரெடி பண்ணி அனுப்பியாச்சு
ஆமா ஜி : இப்போ புரியது ஜி நம்ம மோடி ஜி ஏன் ஊர் ஊரா சுத்தறாருனு. சரி ஜி நம்ம ராஜா ஜியை அவமான படுத்திட்டாங்களாம் பார்த்தீங்களா ?
மாமா ஜி : தெரியலையே ஜி என்ன ஆச்சு ?
ஆமா ஜி : நம்ம கலைஞர் வீட்டுக்கு நலம் விசாரிக்க போயிருக்கார்
மாமா ஜி : சரி
ஆமா ஜி : அங்க வாசலில் ஒரு அண்டா இருந்ததை பார்த்ததும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு ஆசையா பக்கத்துல போய் நின்னுட்டார்.உடனே மூணு போலீஸ் ரவுண்டு அப் பண்ணிட்டாங்க
மாமா ஜி : அப்பறம் ?
ஆமா ஜி : அண்டா சைஸ் சின்னதா இருக்கே கொஞ்சம் பெருசா வைக்கக்கூடாதுனு கேட்டார். பேசாம போறியா இல்ல வாயிலேயே சுடவான்னு அந்த போலீஸ் கேக்க . ராஜா ஜி பாவம் ஒரே அப்செட்.
மாமா ஜி : இவனுங்களுக்கு ராஜா ஜியை பத்தி தெரியல. அண்டாக்கு பாதுகாப்புக்கு குடுக்க தெரிஞ்ச இவங்களுக்கு வீட்டுக்குள்ள இருக்கும் கலைஞரோடா அம்மா சிலைக்கு பாதுகாப்பு கொடுக்கணும்னு தோணல பார்த்தீங்களா.
ஆமா ஜி : அட ஆமால என்றவாறே சிலையின் நிலை பற்றி சிந்தித்தவாறே நகர்ந்து சென்றார் ஆமா ஜி
பகுத்தறிவு பஜனை பற்றியும் … பகுத்தறிவு பகலவன் என்பவரின் நினைவேந்தலுக்கு அமித்ஷா வருகை பற்றியும் … முகமூடி பாேட்டுக் காெண்டு நடிக்கப்பாேற எச்.ராஜா , வைரமுத்து , செ.தலைவர் பாேன்றவர்கள் சங்கமிக்க பாேவது பற்றி எப்ப எழுதுவிங்க ஜி …?
ஆமா ஜி : “நான் தொழில் அதிபர்களோடு பழகுவதற்கு தயங்க மாட்டேன்” அப்படினு சொன்னாரு பார்த்தீங்களா ஜி ?
மாமா ஜி : தயங்குனா காது மேலயே அடிப்பானுக ஜி. இப்போ கல்யாணத்துக்கு போய் மொய் வைக்கறீங்க, போட்டோ எடுக்கும் போது மேடையை விட்டு இறக்கி விட்டா இறங்குவீங்களா ?
Where was captured that picture?
இருட்டு ஜி, மலை பாதை வேற என்ன பண்ண முடியும் ? இதென்ன விஜயகாந்த் படமா தலையில் டூம் லைட் எல்லாம் மாட்டிட்டு போக ?
மரண பங்கம்
Arumaiyaga irukiradu. Nalla comedy. Vaara pathirikaiyil veliyidalam.
muttaltrhanamana katturai …udane niruthu
Article romba mokkaiya irukkae