நம் அனைவருக்குமே தனிப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. ஒவ்வொருவர் வாழ்விலும் பல்வேறு சிக்கல்கள். யாருக்குத்தான் சிக்கல்கள் இல்லை. எனக்கு இல்லையா ? உங்களுக்கு இல்லையா ? யாருக்குத்தான் இல்லை. அதை சமாளித்து, வெற்றிகரமாக, நமது சிரமம், நமது கவலை அடுத்தவருக்கு தெரியாமல் வாழ்வதுதானே வாழ்வின் தாத்பர்யம் ?
நாம் அனைவருமே முதுமையடைவோம். முதுமையடைகையில் நம் அனைவருக்குமே தளர்ச்சி வரும். வெறுமை வரும். அந்த வெறுமையை சரியான திசையில் செலுத்துபவர்கள், மாமனிதர்கள் ஆகிறார்கள். அந்த வெறுமையை, கழிவிறக்கமாக மாற்றி, தன்னையும் துன்பப்படுத்தி, அடுத்தவர் துன்பத்தில் மகிழ்ச்சி கொள்பவர்கள் சாடிஸ்டாக மாறுவார்கள். அப்படி சாடிஸ்டாக மாறாமல், உயிர் மூச்சு உள்ளவரை அடுத்தவர் நலனுக்காக வாழ்பவர்கள் தலைவராகிறார்கள்.
அப்படி சாடிஸ்டாக மாறிய ஒரு நபர், ராமானுஜம்.
ராமானுஜம் என்றவுடன் கணிதமேதை ராமானுஜம் என்று நினைத்து விடாதீர்கள். இவர் கணித மேதை அல்ல. ஆனால் மேதைதான். நான் உயர்ந்து வணங்கும் இடத்தில் இருந்தவர். இவரைப் போன்ற உளவுத் துறை அதிகாரியை தமிழக காவல்துறை கண்டதேயில்லை. அப்படிப்பட்ட சிறப்பான ஒரு அதிகாரிதான் ராமானுஜம்.
தமிழக உளவுத் துறையில் கண்ணப்பன் என்று ஒரு அதிகாரி பணியாற்றினார். மிகச் சிறந்த காவல்துறை அதிகாரிகள் பட்டியலை எடுத்தால் அதில் அவர் பெயர் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும். அவர் ஓய்வு பெறும்போது, அவருக்கு ஒரு ஆண்டு பணி நீட்டிப்பு வழங்கலாம் என்று அவரிடம் அப்போதைய டிஜிபி கேட்டார். அவர் மறுத்தார். ஜெயலலிதாவே உங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கச் சொன்னார் என்று சொன்னபோதும் மறுத்தார். ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவே அவரை நேரில் அழைத்து பணி நீட்டிப்பு பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியபோது, ஜெயலலிதாவிடமே முடியாது என்றவர் கண்ணப்பன்.
மிக மிக உயர்ந்த பீடத்தில் இருந்த ராமானுஜம்தான், இந்தியாவிலேயே முதன் முதலாக,
ஓய்வு பெறும் நாளில் பணி நீட்டிப்பு பெற்றது. ஓய்வு பெற்ற பிறகு இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு பெற்ற பிறகும் அவரது பதவி வெறி தணியவில்லை. அதன் பிறகு அட்வைஸர் பதவி. சம்பிராதயத்துக்காக முதல்வரோடு நடக்கும் சந்திப்புகளின்போது, அவர் அட்வைஸர் என்ற பதவியில் நாற்காலியில் அமர்ந்திருந்ததை பார்க்க பரிதாபமாக இருந்தது.
அதன் பிறகு தலைமை தகவல் ஆணையர் பதவி. அதுவும் ஜெயலலிதா போட்ட பிச்சை. இத்தனை பதவிகளை வகித்த பிறகாவது ஓய்வு எடுக்க வேண்டாமா ?
ஆனால் இவர் ஓய்வு எடுக்கவில்லை. திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.
சந்தியா ரவிசங்கர். இவர் ஒரு மூத்த பத்திரிக்கையாளர். வைகுண்டராஜனின் கனிம ஊழல்களை வெளிப்படுத்தியதால் பிரபலமடைந்தவர். சமீபத்தில் கலைஞரைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டார்.
வைகுண்டராஜன் மீது உள்ள முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டு, அவரை முன்ஜாமீன் கோர வைத்தது நான்தான். அவர் சிபிஐ அலுவலகத்தில் கையெழுத்திட சென்றபோது, அங்கே பத்திரிக்கையாளர்களை அனுப்பியதும் நான்தான். ஆனால் வைகுண்டராஜன், என்னை இழிவுபடுத்த எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. ஏனென்றால், எனது நோக்கம் பழுதற்றது என்பதை அவர் தெரிந்து கொண்டார். இன்னொருவர் சொல்லிக் கொடுத்து, அவர்களுக்காக வைகுண்டராஜன் பற்றி நான் கட்டுரை எழுதவில்லை என்பதையும் அவர் புரிந்து கொண்டார்.
என்னால் வைகுண்டராஜன் இழந்தது ஏராளம். பல கோடிகள் என்று கூறலாம். ஆனால் அவர் என்க்கு துன்பத்தை உண்டாக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஆனால் சந்தியா ரவிசங்கர், வைகுண்டராஜனின் கனிம ஊழல்கள் பற்றி கட்டுரை வெளியிட்டபோது அவரை வைகுண்டராஜன் விரட்டினார். சமூக வலைத்தளங்களில் சந்தியா குறித்து அவதூறாக செய்திகளை வெளியிட அனைத்து முயற்சிகளையும் செய்தார்.
ஏன் தெரியுமா ?
சந்தியா ரவிசங்கரின் கணவர் பெயர் ப்ரேம். அவர் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். பின்னர் அவர், அந்த பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு, செய்தி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை அவர் மனைவி சந்தியாவோடு சேர்த்து துவங்கினார்.
அப்போது நியூஸ் 7 தொலைக்காட்சி தொடங்கும் தருணம். ப்ரேம், வைகுண்டராஜனை அணுகி, தனது செய்தி தயாரிப்பு நிறுவனத்துக்கு, ஆர்டர் தருமாறு கேட்கிறார். ஆனால் நியூஸ் 7 தரப்பில் வேலைக்கு வேண்டுமானால் சேர்ந்து கொள்ளுங்கள். தயாரிப்பு நிறுவனத்துக்கு ஆர்டர் தர இயலாது என்று கூறுகிறார்கள். அந்த பேச்சுவார்த்தை அப்படியே முறிந்தது.
இதற்கு சில வாரங்கள் கழித்து, வைகுண்டராஜனின் கனிமக் கொள்ளை குறித்து, சந்தியா டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் ஒரு செய்தித் தொகுப்பை வெளியிடுகிறார்.
இவை இரண்டும் தனித் தனி சம்பவங்களாக இருக்கலாம். ஆனால் வைகுண்டராஜன் இதை எப்படி அணுகுவார் ? கடும் கோபம் கொண்டார். அந்த காரணத்தினால்தான், சந்தியா, அதன் பிறகு வெளியிட்ட கனிம கொள்ளை குறித்த எந்த செய்திகளும் உரிய முக்கியத்துவம் பெறாமல் போயின.
அதன் பின் சந்தியா, தி லீட் என்ற செய்தி ஏஜென்சியை நடத்தினார். அந்த ஏஜென்சியின் வேலை, முக்கியமான செய்திகளை எடுத்து, பிரத்யேகமாக எடுத்து, வெளிநாட்டு செய்தி ஊடகங்களுக்கு விற்பனை செய்வது. அதில் மிக மிக திறமையான செய்தியாளர்கள் பணியாற்றினார்கள். பின்னாளில் அது கடுமையான நஷ்டத்தை சந்தித்த காரணத்தால் அதை மூடினார் சந்தியா.
போக்கிடம் இல்லாமல், சந்தியா கடைசியாக புகுந்த இடம், சித்தரஞ்சன் சாலை.
சித்தரஞ்சன் சாலையில் புகுந்து, சபரீசனை தன் சொல்படி ஆடும் அளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார் சந்தியா.
சபரீசன் சந்தியா கட்டுப்பாட்டில் இருக்கிறார், சந்தியாவை ராமானுஜம் ஆப்பரேட் செய்கிறார் என்பதை சபரீசனுக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி விட்டேன். ஆனால் அவர்கள் சபரீசனிடம் இதை சொல்ல தயங்குகிறார்கள்.
இந்த வீடியோவை பார்த்து, ஸ்டாலினாவது சந்தியா யாரென்று புரிந்து கொள்ளட்டும்.
முதல் பத்தியில் சொல்லிய விவகாரங்களை நான் விவரிக்க மாட்டேன். நான் இன்னும் ராமானுஜத்தை மதிக்கிறேன்.
Savukku has been compromised long ago using foreign girls and money in Delhi … I don’t trust his words now…
Attaching videos like this is against privacy…. sorry to say that he has become an agent now…
Sandhiya, semma dhumm party pola 😉
Tamil Naatin Bharka Dutt 🙂
இதை ஒரு கடிதமாக, ஈ-மெயிலாக திமுக தலைமைக்கு அனுப்பி இருக்கலாம். ஆனால் கட்டுரையாக பின்புலம், மனிதர்களின் அறிமுகம், அதன் முக்கியத்துவம் எதுவும் குறிப்பிடப்படாமல் இருக்கிறது. இது கட்டுரைக்கு தகுதியானது அல்ல. பேக் அப் மோடி சீரிஸ்-ல் செலுத்துவதில் கொஞ்சமாவது தமிழக கட்டுரைகளை காட்டினால் நல்லது.
“சபரீசன் சந்தியா கட்டுப்பாட்டில் இருக்கிறார், சந்தியாவை ராமானுஜம் ஆப்பரேட் செய்கிறார் என்பதை சபரீசனுக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி விட்டேன்” – சவுக்கு எப்ப திமுக உளவுத்துறையா பொருப்பேற்றது?
சபரீசன் என்பவர் யார்?
சபரீசன்?
சபரீசன்
வீடியோ பற்றி எந்த தகவலும் இல்லை,என்ன பேசுகிறார்கள்,யார் வீடியோவில் இருப்பது போன்ற தகவல் இல்லை,3நிமிடம் வரை பார்த்து விட்டேன், ஒரு தகவலும் இல்லை. சந்தியா அழகாக இருக்கிறார்.