“உலகம் முழுவதும், நவீன ஜனநாயக அரசியல் உரைவீச்சு என்பது இரண்டு நேரெதிரான பாணிகளைக் கொண்டுள்ளது. முதல் வகை, பொருளாதார வளம், சமூக அமைதி ஆகியவை தொடர்பான வெகுமக்கள் விருப்பத்தை ஈர்க்கிறது. இரண்டாவது வகை அச்சம், மோசமாகிவரும் சமூகக் கவலை அல்லது வரலாற்று எதிரியின் ஆதிக்கம் குறித்த எச்சரிக்கை ஆகியவற்றை ஈர்க்கிறது” என 2007இல் நான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
ஜவகர்லால் நேரு தலைமையில் காங்கிரஸ் பொதுவாக நம்பிக்கையை முன்வைத்துப் பேசுகிறது. நேருவும் அவரது கட்சியும் பொருளாதார வளர்ச்சி, சமூக அமைதி மற்றும் உலக அரங்கில் இந்தியாவுக்கு உயர்ந்த இடம் ஆகியவற்றை வாக்காளர்களுக்கு உறுதியளித்தனர். இவற்றைக் கொண்டுதான் அவர் முதல் மூன்று தேர்தல்களைச் சந்தித்தார். நிச்சயம் அவரும் கட்சியும் இவை அனைத்தையும் சாதித்துவிடவில்லை. ஆனால், தேர்தலில் வெற்றி பெற்ற நேரு ஒருபோதும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை அல்லது இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்களை அல்லது உயர் ஜாதியினருக்கு எதிராகத் தாழ்ந்த சாதியினரை, அல்லது இந்தி மையப் பகுதிக்கு எதிராக மற்ற பகுதிகளை முன்னிறுத்தியதில்லை என்பதைப் பாராட்டியாக வேண்டும்.
மறு பக்கத்தில், பால்தாக்ரே தலைமையில் சிவசேனா, அச்சம் எனும் அரங்கில் தன் செயல்பாட்டை அமைத்துக்கொண்டது. கட்சி 1966இல் நிறுவப்பட்டது. முதல் 20 ஆண்டுகளுக்கு, மும்பை நகரம், மராத்தி மொழி பேசுபவர்களுக்கானதாக மட்டுமே இருந்தது. சிவசேனைத் தொண்டர்கள் முதலில், தென்னிந்தியாவிலிருந்து மும்பை நகருக்குப் பிழைக்க வந்தவர்களைக் குறி வைத்தனர். அதன் பிறகு நாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் மீது அவர்கள் கவனம் திரும்பியது. மும்பையைத் தாண்டி மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் பரவ முற்பட்டபோது, சிவசேனை புதிய பலியாடுகளைத் தேடியது. இப்போது அது, மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா ஆகியவற்றின் முதல் எதிரியாக முஸ்லிம்களைச் சித்தரிக்கத் துவங்கியது.
நீங்கள் பயத்தைப் பரப்புகிறீர்களா அல்லது நம்பிக்கையை விதைக்கிறீர்களா என்பது உங்கள் குணாதிசயத்தையும் நம்பிக்கைகளையும் பொறுத்தது. நேருவுக்கு முஸ்லிம்களைத் தீயவர்களாகப் பார்ப்பது சாத்தியமேயில்லை என்றால், தாக்ரேவுக்கு முஸ்லிம்களை முழு குடிமக்கள் மற்றும் சம உரிமை பெற்றவர்களாகப் பார்ப்பது சாத்தியம் இல்லை.
மோடியின் இரட்டை அஸ்திரம்
பெரும்பாலான அரசியல்வாதிகள் அச்சம் அல்லது நம்பிக்கையைத் தங்கள் அரசியல் வாழ்க்கை மேம்பாட்டிற்காகத் தொடர்ச்சியாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். நரேந்திர மோடி இதில் விதிவிலக்கு. அவர் இந்த இரண்டு வகைப் பிரச்சாரங்களையும் மாற்றி மாற்றிப் பயன்படுத்தி வந்திருக்கிறார். குஜராத் முதல்வராக அவர் இருந்த முதல் சில ஆண்டுகளில் அவர் அச்சம் எனும் புள்ளியிலிருந்து மக்களை நோக்கிப் பேசி ஆட்சி செய்திருக்கிறார். “மியான் முஷாரப்”பால் தனது மாநிலத்துக்கும் நாட்டிற்கும் வரக்கூடிய ஆபத்துக்கள் பற்றிப் பேசினார். சோனியா காந்தியின் வெளிநாட்டு வேர்கள் பற்றிப் பேசினார். காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு அடிபணிந்தது பற்றிப் பேசினார். முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாவதால் இந்தியச் சமூகத்தில் ஏற்படும் தாக்கம் பற்றிய கவலையை வெளியிட்டார். முஸ்லிம்கள் தொடர்பான இந்துக்களின் அச்சம் பற்றிப் பேசினார். பொதுவாக குஜராத்திற்கும், குறிப்பாக குஜராத் இந்துக்களுக்கும் “அச்சுறுத்தலாக இருக்கும் சக்திகளை”ப் பற்றியெல்லாம் பேசிய அவர் அவற்றுக்கு எதிரான தடுப்புச் சுவராகத் தன்னை முன்வைத்துக்கொண்டார். தன்னால் மட்டுமே மாநிலத்தை அழிவில் இருந்து காக்க முடியும் எனச் சித்தரித்தார்.
இரண்டாவது முறை முதல்வராக இருந்த காலத்தில், ஒரு கட்டத்தில் அவர் தன்னை மாநில மக்களுக்கு வளர்ச்சியையும் வளத்தையும் கொண்டுவரக்கூடிய வளர்ச்சி நாயகனாகத் (விகாஸ் புருஷ்) தன்னை முன்னிறுத்திக்கொண்டார். தொழிலதிபர்கள் ஆயிரக்கணக்கான கோடி முதலீடுகளுக்கு வாக்குறுதி அளித்த வைப்ரண்ட் குஜராத் மாநாட்டை நடத்தினார். எரிசக்தி, உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத்தில் தனது மாநில வளர்ச்சி பற்றி பெருமைப்பட்டுக்கொண்டார். இந்த முதலீடுகள் பெரும்பாலும் நிகழவில்லை. சாதனைகள் மிகைப்படுத்தப்பட்டன. இருப்பினும், 2010 முதல் மோடி அச்சம் எனும் மேடையிலிருந்து நம்பிக்கை எனும் மையத்துக்கு நகரத் துவங்கினார் என்பது தெளிவு.
இந்த நகர்தல் முழுமையடையவில்லை. அப்போதும் முஸ்லிம்கள் குறித்த அவரது ஐயங்கள் தீரவில்லை (2011இல் தனக்கு அளிக்கப்பட்ட இஸ்லாமியத் தொப்பியை அணிய மறுத்தார்). ஆனால், வாக்காளர்கள் மத்தியில் இந்துத்துவம் என்னும் வட்டத்தைத் தாண்டி அவரை ஈர்ப்புடையவராக்குவதற்கான பிராண்ட் மாற்றத்திற்கான முயற்சியாக வளர்ச்சி நாயகன் என்னும் பாத்திரம் அமைந்தது.
2014 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர், பொருளாதார விஷயங்களை அதிகம் முன்வைத்தார். மதவாதப் பிரச்சனையைப் பேசுவதை மேலும் குறைத்துக்கொண்டார். எல்லோருக்குமான நல்ல நாள் பிறக்கும் என உறுதியளித்தார். இளம் வாக்காளர்களுக்குக் கோடிக்கணக்கில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்றார். தனது ஆட்சி கொண்டுவரக்கூடிய பொருளாதார வளர்ச்சியால் சிறுபான்மையினரும் பயன் பெறுவார்கள் என்று கூறினார்.
மோடி வெற்றிபெற்றுப் பிரதமரான பிறகு ஒரு சிலர் அவர் தனது தீவிரத்தன்மையைக் கைவிட்டுவிட்டதாக நினைத்தனர். மோதலில் ஈடுபட்டிருக்கும் குழுக்களிடையே இணக்கம் உருவாக்கி, நம்முடைய பொருளாதாரத்தையும் சமூகத்தையும் பின்னோக்கி இழுக்கும் காலாவதியான சட்டங்களை மாற்றி உலக அரங்கில் இந்தியாவை மேம்படுத்துவார் என நினைத்தனர். அவருடைய ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற புதிய கோஷங்களால் அவர்கள் மேலும் கவரப்பட்டனர்.
மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியர்கள் புதிய தொழில்களில் ஈடுபடத் துவங்கியுள்ளனர். ஆனால், இவை ஏற்றுமதிக்கான உற்பத்திப் பொருட்கள் அல்ல. மாறாக, அப்பாவிகளைக் கூட்டமாகச் சேர்ந்து அடித்துக் கொல்வது. அவரது வெற்றிக்கு ஆரவாரம் செய்தவர்கள் இப்போது இந்த உதிரி சக்திகளைக் கட்டுப்படுத்துமாறு கோருகின்றனர். அதைச் செய்ய அவருக்கு விருப்பம் இல்லை. அதே நேரத்தில் அவரது கட்சித் தலைவர், குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரான இந்தப் பாரபட்சம் வளர்வதில் மகிழ்ச்சி கொள்கிறார். முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷமான அறிக்கைகள் எம்பிக்கள், குறிப்பாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எம்பிக்களால், தேர்தலில் போட்டியிட அமித் ஷாவால் தேர்வு செய்யப்பட்டவர்களால், வெளியிடப்படுகின்றன.
2017 மார்ச்சில், இந்த எம்பிக்களில் ஒருவர் அவரது மாநில முதல்வராகிறார். அவர் சிறுபான்மைக்கு எதிராகச் செயல்படுபவராக அறியப்படுகிறார். அவர் வளர்ச்சியை முன்வைப்பவரும் அல்ல. அவர் ஐந்து முறை எம்பியாக இருந்த அவரது தொகுதி பொருளாதாரம், சமூகம், கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் பரிதாப நிலையில் உள்ளது. ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அவர், சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்களைக் கூறிவருகிறார். இருப்பினும் அவர் ஆட்சியில் தொடர்கிறார். துவேஷமும் பிரிவினை எண்ணமும் நிறைந்த தனது கருத்துக்களைப் பரப்புவதற்காக அவர் மற்ற மாநிலங்களுக்குக் கட்சியால் அனுப்பிவைக்கப்படுகிறார்.
இந்துக்கள் அல்லாதவர்கள் மீது சந்தேகம் கொள்வது என்பது சங்கப் பரிவாரின் அமைப்பு மற்றும் கொள்கையின் அடிப்படையிலேயே இருக்கிறது. மோடி இதை ஆரம்ப காலத்திலேயே தழுவிக்கொண்டிருக்கிறார். எம்.எஸ்.கோல்வால்கர் பற்றி அவர் எழுதிய கட்டுரையின் மூலம் இதைத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், 2014 தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி தனது சொந்த நலனுக்காக, முஸ்லிம்களை விரோதியாகச் சித்தரிப்பதைத் தவிர்த்தார். இதன் மூலம், பொதுவான தலைவராகத் தன்னைக் காட்டிக்கொண்டார். அவர் வாக்குறுதி அளித்த நல்ல காலம் வராததால், கட்சி அடுத்த தேர்தலுக்கு இந்துத்துவ ஆயுதத்தை புதுப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்தப் பின்னணியில்தான் அசாமில் தேசியக் குடிமக்கள் பதிவேடு தொடர்பான விவாதத்தைப் பார்க்க வேண்டும். முதல் வரைவு வெளியானபோது உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இது முதல் கட்டப் பட்டியல்தான் என்றும், விடுப்பட்டவர்கள் அனைவரும் மீண்டும் விண்ணப்பிக்கவும் விடுபட்டதற்கு எதிராக முறையிடவும் அனுமதி அளிக்கப்படும் என்று கூறினார். இது மிகவும் அவசியமானது. ஏனெனில் இந்திய அதிகாரவர்க்கம் திறனின்மைக்குப் பேர்போனது. அசாமின் புகழ்பெற்ற ஆளுமைகள் உள்ளிட்ட பலர் பட்டியலிலிருந்து விடுபட்டிருப்பது விரைவில் தெரிய வந்தது. முன்னாள் குடியரசுத் தலைவரின் குடும்பம், பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் ஆகியோரும் விடுபட்டோர் பட்டியலில் அடக்கம்.
ஆனால், பாஜக தலைவரோ, முதல் பட்டியலில் விடுபட்டவர்கள் எல்லாம் ஊடுருவியவர்கள், அவர்கள் நாடு கடத்தப்பட வேண்டும் என்கிறார். அவரது கருத்துக்கள் மற்ற மாநிலங்களில் உள்ள அவரது ஆதரவாளர்களால் இன்னும் பெரிதாக முழங்கப்படுகிறது. ராஜஸ்தான், தில்லி, மும்பை, வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் உள்ள பாஜக தலைவர்கள் தங்கள் மாநிலம் அல்லது நகரில் உள்ள வெளிநாட்டவர் கண்டறியப்பட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். இவர்களை உதிரிகள் என அலட்சியம் செய்ய முடியாது. ஜார்கண்டில் ஹார்வர்டில் படித்த, மெக்கின்சியில் பணியாற்றிய மத்திய அமைச்சர் ஒருவர் இதே போன்ற வெளியேற்றத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
‘வெளிநாட்டவர்’ என்பது இங்கே முஸ்லிம்களுக்கான குறியீடாகும். விவசாயிகள் சிக்கலில் இருக்கிறார்கள். தலித்கள் கோபத்தில் இருக்கிறார்கள். லட்சக்கணக்கான இளைஞர்கள் இன்னமும் வேலைவாய்ப்பைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலில் பாஜக அடுத்த பொதுத் தேர்தலை அச்சம் எனும் மேடையில் சந்திக்க தீர்மானித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் மாநிலங்களிலும் உள்ளவர்கள் அசாமை உதாரணமாகக் காட்டி எச்சரிக்கப்படுவார்கள். மாற்று மதத்தவரும் வெளிநாட்டு மதத்தினரும் உள்ளூர் மக்களுக்கு எதிராக இருப்பதால் அவர்கள் வேலைவாய்ப்புக்கு ஆபத்து என உள்ளூர் மக்களிடம் சொல்லப்படும்.
பிரதமர் தனது உரைகளில் மதவாத மொழியை வெளிப்படையாகக் கையாள மாட்டார் அல்லது அதிகமாகப் பேச மாட்டார் என்றேனும் எதிர்பார்க்கப்படுகிறது. மாறாக அவர் வேறு விதமான அச்சத்தைத் தூண்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு இரண்டாம் முறை வாக்களிக்காவிட்டால், சுயநலம் கொண்ட அல்லது ஊழலில் ஊறித் திளைக்கும் பிராந்தியக் கட்சிகள் கொண்ட கிச்சடிக் கூட்டணி, ஆட்சிக்கு வந்து, அவர் நாட்டுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும், ஏன் தேசத்தையே பாழாக்கிவிடும் எனும் அச்சத்தை ஏற்படுத்த முயற்சி செய்யப்படும். தொண்டர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் மீது அச்சம் கொள்ளுங்கள் எனச் சொல்வார்கள். தலைவரோ மற்ற தலைவர்கள் மீது அச்சம் கொள்ளுங்கள் எனச் சொல்வார்.
2014இல் நல்ல காலத்தைக் கொண்டுவருவேன் என வாக்காளர்களிடம் பொய்யாகக் கூறிய மோடி, இந்த முறை, தன்னால் மட்டுமே நாளைய தினத்தை கொண்டுவர முடியும் எனச் சொல்லக்கூடும்.
ராமச்சந்திர குஹா
ராமசந்திர குஹா பெங்களூருவைச் சேர்ந்த வரலாற்றாசிரியர், எழுத்தாளர்
நன்றி: தி வயர்
.கருணாநிதியின் பகுதி சொத்துக்களை பட்டியல் இட்டுள்ளேன்.. இதே போல மோடியின் உறவினர் மற்றும் திருமதி நிர்மலா சீதாராமன் குடும்பத்தினர் குவித்துள்ள சொத்துக்களை நீங்கள் பட்டியல் இடலாம்.! அப்படி பட்டியல் இட்டால்தான் . உங்களுக்கு மோடியின் மீது உள்ளது கொள்கை யலா? அல்லது தனி மனித காழ்புணர்ச்சியா? என்று புரியும்! எங்கே பட்டியல் இடுங்கள் பார்க்கலாம். ………………………………………………….. தமிழகத்தை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கொள்ளையடித்தனர் கருணாநிதி குடும்பத்தினர் .கருணாநிதி குடும்பத்தாரின் சொத்து மதிப்புகள் இதோ .இதை வைத்துதான் நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்கள், தன்னுடைய இணையதளத்தில், கருணாநிதியின் சொத்துக்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார் .ஆனால் கருணாநிதி பதில் அளிக்கவில்லை .தமிழக மக்கள் பதில் சொல்லட்டும் கருணாநிதி குடும்பம் பணக்கார குடும்பமா இல்லையா என்று கருணாநிதி குடும்பத்தாரின் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, ஊழல் சொத்துகளின் உண்மைப் பட்டியலை டெல்லியிலிருந்து வெளிவரும் “The other side” எனும் பிரபல ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னான்டஸால் தொடங்கப்பட்ட இந்த ஆங்கில நாளேடு அம்பலப்படுத்தியுள்ள ஊழல் சொத்துகளின் பட்டியல், கருணாநிதியின் முகத்திரையை கிழிப்பதாக அமைந்துள்ளது. கருணாநிதியின் குடும்பச் சொத்துகள் குறித்த பட்டியல் இதோ… 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீட்டின் மதிப்பு 5 கோடி ரூபாய் முரசொலிமாறனின் கோபாலபுரத்து வீட்டின் மதிப்பு 5 கோடி ரூபாய் 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீட்டின் மதிப்பு 2 கோடி ரூபாய் கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீட்டின் மதிப்பு 4 கோடி ரூபாய் கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீட்டின் மதிப்பு 2 கோடி ரூபாய் கோபாலபுரம் அமிர்தத்தின் வீட்டின் மதிப்பு 5 கோடி ரூபாய் மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீட்டின் மதிப்பு 2 கோடி ரூபாய் சி.ஐ.டி. காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவு கொண்ட இடத்தில், 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு 12 கோடி ரூபாய் மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 45 கோடி ரூபாய் ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு 10 கோடி ரூபாய் 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு 2 கோடி ரூபாய் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு 2 கோடி ரூபாய் சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு 100 கோடி ரூபாய் கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு 10 கோடி ரூபாய் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம்.இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு 2 கோடி ரூபாய் 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் முரசொலி அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு 20 கோடி ரூபாய் மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு 5 கோடி ரூபாய் சன்.டி.வி.க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு 100 கோடி ரூபாய் கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவீத பங்குகளின் மதிப்பு 50 கோடி ரூபாய் பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு 4 கோடி ரூபாய் பெங்களூரு – மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு 80 கோடி ரூபாய் மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு 120 கோடி ரூபாய் பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு 108 கோடி ரூபாய் சென்னை பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் ‘ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்” மதிப்பு – 48 கோடி ரூபாய் அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம் ரூபாய் புதுடெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு – 50 கோடி ரூபாய் ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் ‘வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்” மூலமாக வாங்கப்பட்டது. இதனை 13,384 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக கலாநிதி மாறனே ஒப்புக்கொண்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் கருணாநிதி மனைவி தயாளுவுக்கு சொந்தமான 3.84 ஏக்கரின் மதிப்பு 1 கோடி ரூபாய் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவுக்கு சொந்தமாக திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு 60 லட்சம் ரூபாய் மதுரை வடக்கு தாலுக்கா – உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் மு.க. அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி ரூபாய் மதுரை வடக்கு தாலுக்கா கள்ளந்திரி கிராமத்தில், மு.க. அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி ரூபாய் மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 5 கோடி ரூபாய் மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 40 லட்சம் ரூபாய் மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு 50 லட்சம் ரூபாய் மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு 1 கோடி ரூபாய் மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு 2 கோடி ரூபாய் மதுரை சத்தியசாய் நகரில் 21 சென்ட் நிலப்பரப்பில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு 2 கோடி ரூபாய் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் மு.க. அழகிரியின் மனைவி காந்தி அழகிரிக்குச் சொந்தமான 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு 60 லட்சம் ரூபாய் மதுரை மாவட்டம் நாகமலைப் புதுக்கோட்டை உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 20 லட்சம் ரூபாய் மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 50 லட்சம் ரூபாய் மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 50 லட்சம் ரூபாய் கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு 5 கோடி ரூபாய் மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு 50 லட்சம் ரூபாய் சென்னைக்கு அருகில் சோழிங்கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடி நிலத்தின் மதிப்பு 2.5 கோடி ரூபாய் சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு ரூ 3 கோடி ரூபாய் மதுரை சத்யசாய் நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு 3 கோடி ரூபாய் சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு 1 கோடி ரூபாய் சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு 2 கோடி ரூபாய் மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் ‘தயா டெக்னாலஜிஸ்” என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு 1 கோடி ரூபாய் சென்னை அண்ணா சாலையில் இருக்கும் கருணாநிதி மகள் கனிமொழிக்கு சொந்தமான வணிக வளாகம் கதவு இலக்க எண்: 271-ஏ மதிப்பு 5 கோடி ரூபாய் ‘வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்” என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு 20 கோடி ரூபாய் கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு 30 கோடி ரூபாய் ஊட்டியில், கருணாநிதி குடும்பத்துக்கு சொந்தமான வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு 50 கோடி ரூபாய் கலைஞர் டி.வி-யில் கருணாநிதி மனைவி தயாளுவுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு 90 கோடி ரூபாய் மேலும், கருணாநிதி குடும்பத்திற்கு எக்ஸ்பிரஸ் எஸ்டேட், தினகரன் பப்ளிகேஷன்ஸ், சுமங்கலி பப்ளிகேஷன்ஸ், முரசொலி அறக்கட்டளை, மதுரை மாடக்குளம் கிராமத்தில் உள்ள தயாளு அறக்கட்டளை, மதுரை சிவரக்கோட்டையில் மு.க. அழகிரிக்கு சொந்தமாக உள்ள தயா பொறியியல் கல்லூரி, தயா சைபர் பார்க் மற்றும் மாறனின் மகள் அன்புக்கரசிக்குச் சொந்தமான சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை ஆகியவற்றின் மதிப்புகள் கணக்கிடப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள பிரபல ஆங்கில நாளேடான “The other side”, கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும் என அம்பலப்படுத்தியுள்ளது.மேலும் இதில் ஸ்டாலின் மகன் நடத்தும் /அழகிரி மகன் நடத்தும் ரெட்ஜயண்ட் மூவிஸ் மற்றும் சன் டிவி குழுமங்களின் FM சேனல்கள் இல்லை அதையும் சேர்த்தால் தொகை கூடும் .திமுக தொண்டர்கள் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய உண்மை இது .மேலும் இந்த பட்டியல் நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய பட்டியல் ஆகும் .தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டிய கட்சி திமுக திமுக திமுக .
கருணாநிதியின் பகுதி சொத்துக்களை பட்டியல் இட்டுள்ளேன்.. இதே போல மோடியின் உறவினர் மற்றும் திருமதி நிர்மலா சீதாராமன் குடும்பத்தினர் குவித்துள்ள சொத்துக்களை நீங்கள் பட்டியல் இடலாம்.! அப்படி பட்டியல் இட்டால்தான் . உங்களுக்கு மோடியின் மீது உள்ளது கொள்கை யலா? அல்லது தனி மனித காழ்புணர்ச்சியா? என்று புரியும்! எங்கே பட்டியல் இடுங்கள் பார்க்கலாம்.
தி.மு.க., தலைவராக போட்டியின்றி தேர்வான ஸ்டாலின், ‘பா.ஜ., – அ.தி.மு.க., அரசுகளை ஒழிப்போம்’ என, சூளுரைத்தார்.முதலில் ஸ்டாலின் எனது தந்தை கருணாநிதி ஆட்சி போன்றதொரு பொற்கால ஆட்சியை நானும் தருவேன் என சூளுரைக்க முடியுமா? ஆம் அவரின் தந்தை ஐந்து தடவை முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் என்ன தேனாறும் ,பாலாறும் ஓடியதா ?இல்லையே அரசியல் அநாகரிக பேச்சுக்கள் ,ஜாதி அரசியல், ஊழல், அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஈழ தமிழர் இனப் படுகொலை, ரவுடி கலாச்சாரம், நீர் நிலை ஆக்கிரமிப்பு, நில அபகரிப்பு, கோவில் சொத்துக்கள் சூறையாடியது, இலவசங்களை வழங்கி மக்களை சோம்பேறியாக்கியது, கள்ளுக்கடை திறந்து மக்களை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கியது, ஹிந்தி எதிர்ப்பு எனும் பெயரில் எதிர்கால சந்ததிகளையே குட்டிசுவராக்கியது, கல்வியை வியாபாரமாக்கியது, தனது ஊழல் வழக்கிலிருந்து தப்புவதற்காக காவிரி நீர் உரிமையை இழந்தது, கச்ச தீவை இழந்தது, என கருணாநிதியின் ஆட்சியின் அவலங்களை இன்னும் எவ்வளோவோ அடுக்கி கொண்டே போகலாம்.பொற்கால ஆட்சி என்றால் அது காமராஜர் ஆட்சி தான் .ஏழை பங்காளன் கர்மவீரர் பெருந்தலைவர் பாரத ரத்னா காமராஜரின் ஒன்பது ஆண்டு பொற்கால ஆட்சியின் போது தான் தமிழகம் வரலாறு காணாத முன்னேற்றம் கண்டது .நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம் ரூ. 86 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது. இதன்மூலம் மின் உற்பத்தியில் மகத்தான சாதனைகள் நிகழ்ந்தன. இன்று ரூ.1,500 கோடிக்கும்மேல் லாபம் ஈட்டித்தரும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக வளர்ந்துள்ளது. . காமராஜர் 14 ஆயிரம் புதிய பள்ளிகளை திறந்தார். படிக்க வரும் குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டம் தீட்டினார். பெரம்பலுார் ரயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சி பாரத் ெஹவி எலக்ட்ரிக்கல்ஸ், ஆவடி கனரக வாகன தொழிற்சாலை, கல்பாக்கம் அணுமின் நிலையம், கிண்டி டெலி பிரின்டர் தொழிற்சாலை, ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை, சங்ககிரி சிமென்ட் தொழிற்சாலை, மேட்டூர் காகித தொழிற்சாலை, கிண்டி அறுவை சிகிச்சை தொழிற்சாலை, துப்பாக்கி தொழிற்சாலை, அரக்கோணம் இலகுரக ஸ்டீல் பிளான்ட், சமயநல்லுார் அனல் மின் நிலையம்.இவை மட்டுமா? மணி முத்தாறு,ஆரணியாறு, சாத்துனுார், அமராவதி, கிருஷ்ணகிரி, வைகை, காவிரி டெல்டா, நெய்யாறு, மேட்டூர், பரம்பிக்குளம், புள்ளம்பாடி, கீழ்பவானி என்று இன்னும் விவசாயிகள் நம்பிக்கொண்டிருக்கும் அணைக்கட்டுகள் பாசன திட்டங்கள் காமராஜர் உருவாக்கியவை. 14 சர்க்கரை தொழிற்சாலைகள், 159 நுாற்பு ஆலைகள், 9 ஆண்டு ஆட்சி காலங்களில் எத்தனை எத்தனை… சொல்லிக் கொண்டே போகலாம். ஐஐடி சென்னை வந்ததுவும் காமராஜரின் முயற்சியால் தான். தமிழகத்தில் கல்வி புரட்சிக்கு வித்திட்டவரும் காமராஜரே . ‘மதராஸ் இண்டஸ்டிரியல் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன், அசோக் லேலண்ட் தொழிற்சாலை, டி.ஐ. சைக்கிள் தொழிற்சாலை, சிம்சன், இந்தியா பிஸ்டன்ஸ், டி.வி.எஸ், லூகாஸ் இவையெல்லாம் அந்தக் காலகட்டத்தில் தொடங்கப்பட்டவை தான். கோவை மாவட்டம் மதுக்கரை, திருச்சி மாவட்டம் டால்மியாபுரம், ராமநாதபுர மாவட்டம் துலுக்கப்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து ,மெட்ராஸ் சிமெண்ட்ஸ் லிமிடெட்’ என்ற ஒரு புதிய சிமெண்ட் ஆலை ராஜபாளையத்தில் என சிமெண்ட் தயாரிக்கும் ஆலைகள் தொடங்கப்பட்டன. காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில் சென்னையில் உள்ள தனது வீட்டில் தன்னுடைய தாயைக்கூட இரண்டு நாட்களுக்கு மேலாகத் தங்க காமராஜர் என்றுமே அனுமதித்ததில்லை. தனது சம்பளத்திலிருந்து மாதம் ரூ.120 கொடுத்து விருதுநகரில்தான் தனது தாயைத் தங்க செய்திருந்தார் . நைசிடிக்க பிரமச்சாரி காமராஜர் ,தன்னைச் சுற்றி தனது குடும்பத்தினர், உறவினர் இருக்கக் கூடாது என்பதில் மிகவும் ஆம் மிகவும் கண்டிப்பாக இருந்தார் என்ற ஒரு செய்தி போதும், கறை படியாத கைகளுக்கு.ஆம் “மூவேந்தர்கள் ஆட்சிக்காலத்தில் நிகழாத அற்புதங்கள் எல்லாம் தமிழகத்தில் நடந்தது காமராஜர் ஆட்சியில்” இப்படிக் கூறியவர் யார் தெரியுமா? தந்தை பெரியார்.. 1961-ல் தேவகோட்டையில் பேசும்போது, மரண வாக்குமூலம் போலத் தமது உள்ளக்கிடக்கையை தந்தை பெரியார் வெளியிட்டார். அதில், ”தோழர்களே எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்து விடலாம். ஆயினும், நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம் போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூறவேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்து வரும் முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது முவேந்தர்கள் ஆட்சிக் காலத்திலாகட்டும், அடுத்து நாயக்கர் மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் ஆகட்டும், எல்லாம் நமது கல்விக்கு வகை செய்யவில்லை. தோழர்களே நீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டுவிடாமல் பிடித்துக் கொள்ளுங்கள். அவரது ஆட்சிமூலம் சுகமடையுங்கள். காமராசரைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது.- என பெரியார் புகழ்ந்தது வரலாற்று உண்மை .”ஆனால் அதன் பின்பு நடந்தது என்ன ? – கர்ம வீரர் காமராஜரின் ஆட்சியை அகற்றிய பின்பு ,திராவிட கட்சிகள் ஆட்சியை பிடித்தன .காமராஜரின் பொற்கால ஆட்சியை வீழ்த்த கருணாநிதி அளவுக்கு அரசியலில் அநாகரீக /நயவஞ்சக பேச்சுக்கள் பேசியவர்கள் எவரும் இல்லை .தமிழகமெங்கும் நடத்திய பொதுக்கூட்டங்களில் இந்த கருணாநிதி, காமராஜர் பற்றி நாக்கில் நரம்பில்லாமல் “ ஐதராபாத் ஸ்டேட் பாங்கிலும், சுவிஸ் வங்கியிலும், பல கோடி ரூபாய், டெபாசிட் போட்டுள்ளார் காமராஜர்’ என, அரசியல், அநாகரித்தோடு பறைசாற்றினார் கருணாநிதி. அதற்கு, “அந்த கணக்கோட செக் புக்கை, கருணாநிதி கொண்டு வந்தால், கையெழுத்து போட்டு தருகிறேன் அவரே எல்லா பணத்தையும் எடுத்துக் கொள்ளட்டும்’ என, நாகரிகத்தோடும், பண்பாட்டோடும் பதிலளித்தார் காமராஜர் , .இதில் வேடிக்கை என்னவென்றால், காமராஜர் கண் மூடிய போது, அவர் ஜிப்பாவில் வெறும், 100 ரூபாயும், தேனாம்பேட்டை ஸ்டேட் பாங்கில், இரு மாத எம்.பி., சம்பளம், 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. இந்த வேதனையிலும், வேடிக்கை என்னவென்றால் பேங்க் பாஸ்புக்கும், செக் புக்கும், சத்தியமூர்த்தி பவனில் தான் இருந்தன… கருணாநிதி குடும்பத்தாரின் தற்போதைய சொத்துக்களை கணக்கில் கொள்ளவும் .உண்மையிலே தமிழகத்தை விட்டு திமுகவை விரட்டுவோம் என தமிழக மக்கள் தான் சூளுரைக்க வேண்டும் . தமிழகத்தை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கொள்ளையடித்தனர் கருணாநிதி குடும்பத்தினர் .கருணாநிதி குடும்பத்தாரின் சொத்து மதிப்புகள் இதோ .இதை வைத்துதான் நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்கள், தன்னுடைய இணையதளத்தில், கருணாநிதியின் சொத்துக்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார் .ஆனால் கருணாநிதி பதில் அளிக்கவில்லை .தமிழக மக்கள் பதில் சொல்லட்டும் கருணாநிதி குடும்பம் பணக்கார குடும்பமா இல்லையா என்று கருணாநிதி குடும்பத்தாரின் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, ஊழல் சொத்துகளின் உண்மைப் பட்டியலை டெல்லியிலிருந்து வெளிவரும் “The other side” எனும் பிரபல ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னான்டஸால் தொடங்கப்பட்ட இந்த ஆங்கில நாளேடு அம்பலப்படுத்தியுள்ள ஊழல் சொத்துகளின் பட்டியல், கருணாநிதியின் முகத்திரையை கிழிப்பதாக அமைந்துள்ளது. கருணாநிதியின் குடும்பச் சொத்துகள் குறித்த பட்டியல் இதோ… 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீட்டின் மதிப்பு 5 கோடி ரூபாய் முரசொலிமாறனின் கோபாலபுரத்து வீட்டின் மதிப்பு 5 கோடி ரூபாய் 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீட்டின் மதிப்பு 2 கோடி ரூபாய் கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீட்டின் மதிப்பு 4 கோடி ரூபாய் கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீட்டின் மதிப்பு 2 கோடி ரூபாய் கோபாலபுரம் அமிர்தத்தின் வீட்டின் மதிப்பு 5 கோடி ரூபாய் மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீட்டின் மதிப்பு 2 கோடி ரூபாய் சி.ஐ.டி. காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவு கொண்ட இடத்தில், 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு 12 கோடி ரூபாய் மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 45 கோடி ரூபாய் ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு 10 கோடி ரூபாய் 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு 2 கோடி ரூபாய் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு 2 கோடி ரூபாய் சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு 100 கோடி ரூபாய் கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு 10 கோடி ரூபாய் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம்.இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு 2 கோடி ரூபாய் 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் முரசொலி அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு 20 கோடி ரூபாய் மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு 5 கோடி ரூபாய் சன்.டி.வி.க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு 100 கோடி ரூபாய் கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவீத பங்குகளின் மதிப்பு 50 கோடி ரூபாய் பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு 4 கோடி ரூபாய் பெங்களூரு – மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு 80 கோடி ரூபாய் மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு 120 கோடி ரூபாய் பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு 108 கோடி ரூபாய் சென்னை பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் ‘ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்” மதிப்பு – 48 கோடி ரூபாய் அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம் ரூபாய் புதுடெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு – 50 கோடி ரூபாய் ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் ‘வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்” மூலமாக வாங்கப்பட்டது. இதனை 13,384 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக கலாநிதி மாறனே ஒப்புக்கொண்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் கருணாநிதி மனைவி தயாளுவுக்கு சொந்தமான 3.84 ஏக்கரின் மதிப்பு 1 கோடி ரூபாய் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவுக்கு சொந்தமாக திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு 60 லட்சம் ரூபாய் மதுரை வடக்கு தாலுக்கா – உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் மு.க. அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி ரூபாய் மதுரை வடக்கு தாலுக்கா கள்ளந்திரி கிராமத்தில், மு.க. அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி ரூபாய் மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 5 கோடி ரூபாய் மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 40 லட்சம் ரூபாய் மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு 50 லட்சம் ரூபாய் மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு 1 கோடி ரூபாய் மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு 2 கோடி ரூபாய் மதுரை சத்தியசாய் நகரில் 21 சென்ட் நிலப்பரப்பில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு 2 கோடி ரூபாய் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் மு.க. அழகிரியின் மனைவி காந்தி அழகிரிக்குச் சொந்தமான 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு 60 லட்சம் ரூபாய் மதுரை மாவட்டம் நாகமலைப் புதுக்கோட்டை உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 20 லட்சம் ரூபாய் மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 50 லட்சம் ரூபாய் மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 50 லட்சம் ரூபாய் கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு 5 கோடி ரூபாய் மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு 50 லட்சம் ரூபாய் சென்னைக்கு அருகில் சோழிங்கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடி நிலத்தின் மதிப்பு 2.5 கோடி ரூபாய் சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு ரூ 3 கோடி ரூபாய் மதுரை சத்யசாய் நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு 3 கோடி ரூபாய் சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு 1 கோடி ரூபாய் சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு 2 கோடி ரூபாய் மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் ‘தயா டெக்னாலஜிஸ்” என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு 1 கோடி ரூபாய் சென்னை அண்ணா சாலையில் இருக்கும் கருணாநிதி மகள் கனிமொழிக்கு சொந்தமான வணிக வளாகம் கதவு இலக்க எண்: 271-ஏ மதிப்பு 5 கோடி ரூபாய் ‘வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்” என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு 20 கோடி ரூபாய் கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு 30 கோடி ரூபாய் ஊட்டியில், கருணாநிதி குடும்பத்துக்கு சொந்தமான வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு 50 கோடி ரூபாய் கலைஞர் டி.வி-யில் கருணாநிதி மனைவி தயாளுவுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு 90 கோடி ரூபாய் மேலும், கருணாநிதி குடும்பத்திற்கு எக்ஸ்பிரஸ் எஸ்டேட், தினகரன் பப்ளிகேஷன்ஸ், சுமங்கலி பப்ளிகேஷன்ஸ், முரசொலி அறக்கட்டளை, மதுரை மாடக்குளம் கிராமத்தில் உள்ள தயாளு அறக்கட்டளை, மதுரை சிவரக்கோட்டையில் மு.க. அழகிரிக்கு சொந்தமாக உள்ள தயா பொறியியல் கல்லூரி, தயா சைபர் பார்க் மற்றும் மாறனின் மகள் அன்புக்கரசிக்குச் சொந்தமான சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை ஆகியவற்றின் மதிப்புகள் கணக்கிடப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள பிரபல ஆங்கில நாளேடான “The other side”, கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும் என அம்பலப்படுத்தியுள்ளது.மேலும் இதில் ஸ்டாலின் மகன் நடத்தும் /அழகிரி மகன் நடத்தும் ரெட்ஜயண்ட் மூவிஸ் மற்றும் சன் டிவி குழுமங்களின் FM சேனல்கள் இல்லை அதையும் சேர்த்தால் தொகை கூடும் .திமுக தொண்டர்கள் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய உண்மை இது .மேலும் இந்த பட்டியல் நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய பட்டியல் ஆகும் .தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டிய கட்சி திமுக திமுக திமுக .